Jump to content

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1844
  • Joined

  • Last visited

Posts posted by Eppothum Thamizhan

  1. Just now, Justin said:

    எனக்குப் புரிந்தது வேறு: அகப்பையில் வருவதற்கு சட்டியில் ஒன்றுமில்லை😎!

    அப்படி ஒன்றுமில்லை. நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான் என்று விதண்டாவாதம் செய்பவர்களுடன் ஏன் நேரத்தை விரயம் செய்யவேண்டும்? அதனால்தான்!!

  2. 5 minutes ago, Justin said:

    இது வரை எத்தனை தடவைகள் இப்படி ஆதாரங்கள் இல்லாமல், மேற்கு/அமெரிக்க எதிர்ப்பு வாதம் என்ற உணர்வை மட்டுமே வைத்து சும்மா அலட்டி, கடைசியில் மௌனமாகப் போயிருக்கிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள் - யாருக்கு என்ன தெரியும், தெரியாது என்பது புலப் படலாம்😎

    மௌனமாகப்போவது தெரியாமலில்லை. வைரவர்வாகனத்தின் வாலை நிமிர்த்தமுடியாது என்பதால்தான்!

  3. 1 hour ago, Justin said:

    ஓம், உக்ரைன் படைகள் ரஷ்யாவிற்குள் படையெடுத்து நுழைந்தது எனக்கு மறந்து விட்டது😎 - எப்ப நடந்தது? பெப்ரவரி 2022 இல் அல்லவா?

    ஈரானில் அமெரிக்கா உருவாக்கியது என்ன பிரச்சினையாம்? ஒருக்கா நினைவு படுத்துங்கோ.

    பி.கு: அது ஏன்  "அடிச்சு விட்டது, கதையளப்பது" என்றே வார்த்தைகளைப் பாவிக்கிறீர்கள்? நீங்கள் இவற்றை அடிக்கடி செய்வதாலா😂?

    மன்னிக்கவும் அது ஈராக் என்று வந்திருக்கவேண்டும். உக்ரைன் போரை நடத்துவது அமெரிக்காதான் என்பது பால்குடி பிள்ளைக்கே தெரியும்போது உங்களுக்கு புரியாமல் இருப்பதை விசுவாசம் என்று சொல்லாமல் எப்படி சொல்வது? உங்கள் துறைசாராத விடயங்களை எழுதும்போது மற்றவர்களுக்கும் அதைப்பற்றி தெரியும் என்பதையும் மனதில் வைத்து எழுதப்பழகுங்கள்.  

  4. 15 hours ago, Justin said:

    மேலே சொல்லப் பட்டிருக்கும் விடயத்தில் அமெரிக்கா அடிக்கவில்லை அல்லவா? இது விளங்குகிறதா உங்களுக்கு😎?

    அல்லது இன்னும் மூன்று கருத்துக்கள் தாண்டினால் பிறகு நான் சொன்னதையே எனக்கு திருப்பி ஆதாரமாகக் காட்டும் "சிறு பிள்ளை வேளாண்மை" விளையாட்டைக் காட்ட ரெடியாக வந்திருக்கிறீங்களா😂?

    என்ன உங்களுக்கு செலெக்ட்டிவ் அம்னீசியாவா? ஏதோ கௌத்தி தீவிரவாதிகள் கப்பல்களை தாக்குவதால் மட்டும்தான் உலகில் பொருட்களின் விலைகள் கூடுகின்றன என்று அடித்துவிட்டீர்கள். ஈரான் பிரச்சனை, உக்ரைன் பிரச்சனை இதையெல்லாம் நடத்தியது யார்? இதனால் பொருட்களின் விலைகள் மேற்கில் கூடவில்லையா?

    • Like 2
  5. 20 hours ago, Justin said:

     

    பல சரக்குக் கப்பல்கள் இப்போது செங்கடலை இதனால் தவிர்த்து, ஆபிரிக்காவைச் சுற்றி ஐரோப்பா வருகின்றன. இதனால் வரும் மேலதிக செலவு கப்பல்களில் வரும் சரக்குகளின் விலையில் சேர்க்கப் படுகிறது. எனவே, பொருட்களின் விலைகள் ஏறும். வசதியுள்ளவர்களுக்கு தோற்றாது, வசதியில்லாதவன் வயிற்றையும் வாயையும் கட்டிக் கொள்ள வேண்டும்.

    ஏதோ அமெரிக்கா ஒருத்தற்ற வயித்திலையும் அடிக்காத மாதிரி கதையளக்கிறியள்? விசுவாசம்!! ம்...ம் !!!

  6. On 11/3/2024 at 16:31, valavan said:

    பாலஸ்தீனத்தின் தன்னாட்சியை பலநாடுகள் ஏற்றுகொண்டன இன்றுவரை அமெரிக்காகூட அதை ஏற்றுக்கொள்கிறது.

    பாலஸ்தீனத்தில் தன்னாட்சி எப்படி நடக்கிறது என்று தெரியுமா? இன்றும் காசாவையும் West bank ஐயும் திறந்தவெளி சிறைச்சாலைகளாக தானே இஸ்ரேல் வைத்திருக்கிறது. அவர்களும் அடிமை வாழ்க்கைதானே வாழ்கிறார்கள்! அதற்காகத்தானே போராட்டமும் தொடங்கியது!! அதைத்தான் எமது போராட்டத்துடன் ஒப்பிட்டு எழுதினேன். 

    நான் எழுதியது விசுகரின் " கூப்பிட்டு பேசினார்கள். பாலஸ்தீனர்கள் ஏற்க மறுத்து அழிகிறார்கள் யாம் என்ன பண்ணும்???" என்ற கருத்துக்கான பதில் மட்டுமே! முழுமையாக வாசித்துவிட்டு பதில் எழுதவும்!!

     

     

    18 hours ago, விசுகு said:

    புலிகள் எல்லாவற்றையும் தட்டி விட்டார்கள் மக்களையும் அழித்து தாமும் அழிந்தார்கள் என்று இங்கே எழுதப்பட்ட போது மயக்கத்தில் இருந்தீர்களா??

    உண்மையை ஒரு நாள் ஏற்றுக்கொண்டே  ஆக வேண்டும். 

    இவர் என்ன சொல்ல வருகிறார் என்றாவது புரிகிறதா??

     

    அவர் சொல்லவருவது நன்றாகவே புரிகிறது! அவர் யார் எப்படிப்பட்ட கருத்துக்களை எழுதுகிறார் என்று யாழில் எல்லோருக்கும் தெரியும் அதனால் அவரின் கருத்துக்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள தேவையுமில்லை!

    இதைவிட எத்தனையோபேர் புலிகளின் போராட்டமே பிழையானது என்று எழுதும்போது பதில் எழுதி நிர்வாகத்திடம் வெட்டு வாங்கியது நானே! அப்போதெல்லாம் நீங்கள் மௌனியாக கோமாவில்தானே இருந்தீர்கள்?

    • Like 3
    • Thanks 1
  7. 1 hour ago, விசுகு said:

    1

    2

    3

    இன்னும் எதிர்பார்க்கிறேன் 

    கேள்விகளுக்கு பதில் இல்லாவிட்டால் இப்படித்தான் எழுதவேண்டியிருக்கும்!
    பாலஸ்தீன மக்கள்மட்டும் அடிமைவாழ்க்கை வாழவேண்டும் ஆனால் நாங்கள்???

    • Like 1
  8. 2 hours ago, குமாரசாமி said:

    இது எப்பிடியிருக்கு?  🤣

    தமிழ் நாட்டில் ஒரு குடி பொறுக்கிகளுமே இல்லை.

    நிறைய இருக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் கேரளாவில் போய் செய்யமுடியாதுதானே!!

  9. 58 minutes ago, விசுகு said:

    அது வந்து அண்ணா பலஸ்தீன தலைவர்களின் முட்டாள்தனம். எவ்வளவோ கொடுத்தார்கள் கூப்பிட்டு பேசினார்கள். பாலஸ்தீனர்கள் ஏற்க மறுத்து அழிகிறார்கள் யாம் என்ன பண்ணும்???😷

    இதையே மற்றவர்கள் புலிகளுக்கு சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள் போல இருக்கே!!

    • Like 1
    • Haha 2
  10. On 29/2/2024 at 16:12, Justin said:

    இதைத் தான் நான் முதலே சுட்டிக் காட்டினேன்.  ஜப்பானிய விமானங்கள் ரேடாரில் வந்திருக்கிறது. கீழ் நிலை படையினன் மேலதிகாரிக்கு தெரியப் படுத்தியிருக்கிறார், மேலதிகாரி தவறான சமிக்ஞை என்று உதாசீனம் செய்திருக்கிறார். இதன் சுருக்கம் தான் மேலே சிவப்பில் இருக்கிறது.


    அப்ப, ஜப்பான் காரன் தாழப்பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினான் என்பது பொய் தானே?

    இப்ப யார் அவியல் வைத்திருப்பதாக புலனாகிறது உங்களுக்கு😂?

    முதலில் ராடேரில் சிக்கியது Reconnaissance aircraft. அது அவர்களின் கவனத்தை திசைதிருப்ப அனுப்பப்பட்டது. பின்னர் வந்த விமானங்கள் அனைத்தும் having evaded American early warning systems என்று சொல்லியிருப்பது உங்களுக்கு புரியவில்லையா?

    அதுசரி விழுந்தாலும் மீசையில் மண் படவில்லையென்று மேலதிகாரி மீது பழியைப்போட்டு சமாளிக்க வேண்டிய நிலைமை.

  11. ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

    அதுஎப்படி இவ்வளவுநாளும் ஓரளவுக்காவது நன்றாக இருந்தவர் கடவுச்சீட்டு அனுப்பப்பட்டதும் இறந்திருக்கிறார். அதுவும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில். எங்கோ இடிக்கிறதே??

     

    • Sad 1
  12. On 26/2/2024 at 01:21, Kapithan said:

    What were the two waves of attacks on Pearl Harbor?

    On the morning of December 7th, at 6:10 AM, the first wave of Japanese planes launched. At 6:45 AM, the USS Ward spotted and open fired on a Japanese submarine off the coast of Hawaii. At 6:53 AM, the Ward reported sinking the sub, but decoding the message took time. At 7:02 AM, a radar station on Oahu spotted unidentified aircraft heading towards the island. However, radar systems were less than a month old, and the lieutenant who received the warning thought it was a false alarm. By 7:40 AM, the first wave of Japanese aircraft had reached Oahu, having evaded American early warning systems. Shortly thereafter, the Japanese aerial commander ordered the attack.

    The Japanese aircraft flew in two waves. The first wave attacked airfields and anti-air defenses on the west side of the island, while the second wave, almost an hour later, concentrated on the eastern side. Both waves met over Pearl Harbor. In the harbor, anchored ships made perfect targets for the Japanese bombers.

    https://www.britannica.com › study

     

    https://www.britannica.com/study/timeline-of-the-attack-on-pearl-harbor#:~:text=The Japanese aircraft flew in,targets for the Japanese bombers.

     

    On 25/2/2024 at 16:16, Justin said:

    இதை நீங்கள் உங்களுடைய தகவல் மூலத்தை இணைப்பதன் மூலமே நிரூபீக்கலாமென நினைக்கிறேன்? ஏன் தயக்கம்😎?

    மேலே சிவப்பு எழுத்தில் உள்ளதை வாசிக்கவும்!!

  13. On 20/2/2024 at 16:01, Justin said:

    இது வட்சப் அவியலாக இருக்கலாமென ஊகிக்கிறேன்😂?

    முதல் அலை விமானங்கள், அமெரிக்க றேடாரில் பதிவாகின, அமெரிக்காவின் பி17 தான் வருகிறதென உயர் அதிகாரி உதாசீனம் செய்யச் சொன்னார்.  இரண்டாம் அலை விமானங்கள் வந்த போது றேடார் இருக்கவில்லை.

    மேற்கு எதிர்ப்பு, இஸ்ரேல் எதிர்ப்பு உணர்வுகள் நியாயமாக இருக்கலாம், ஆனால் தகவல்கள் சிறிதாக இருந்தாலும் சும்மா "பொங்கல் வைச்சு" உங்களை நீங்களே முட்டாளாகக் காட்டிக் கொள்ளக் கூடதென்பது என் அபிப்பிராயம்!

    இதில் அவிப்பது  யாரென்று எல்லோருக்கும் புரியும். சும்மா அமெரிக்கனுக்கும் இஸ்ரேலுக்கும் கொடிபிடிப்பதை விட்டுவிட்டு வேறு வேலையிருந்தால் பாருங்கள்.

    100இக்கு மேற்பட்ட விமானங்கள் வருவதை பார்த்துவிட்டும் உயர் அதிகாரி உதாசீனம் செய்ய சொன்னாராம். கேக்கிறவன் கேனையனாயிருந்தால் .......

    • Like 1
  14. 12 hours ago, Justin said:

    தாழப் பறந்து ரேடாரில் இருந்து தப்புவதெல்லாம் இஸ்ரேல் 60 களில் பயன்படுத்திய நுட்பம், அதை புலிகள் பின்பற்றினர், இப்ப உக்ரைன் பின்பற்றுகிறது. இது "தமிழ் தான் உலகின் எல்லா மொழிகளுக்கும் தோற்றுவாய்" என்ற உருட்டல் போல அல்லவா இருக்கிறது?

    உதை ஜப்பான்காரன் 1941இல் பேர்ல் ஹார்பரை அடிக்கும்போதே பயன்படுத்தி விட்டான். சும்மா அமெரிக்காவின் அல்லக்கைகளுக்கு துதிபாடுவதே வேலையாய் கொண்டு அலையினம் கொஞ்சப்பேர்!!

    • Like 1
  15. 8 minutes ago, Kapithan said:

    ஆனால் தாங்கள் யார்? An Anonymous. தாங்கள் இதைக் கூறுவதென்றால் தாங்கள் களத்தில் நிற்க வேண்டும். கொல்லப்படுவது வேறு யாரோ பெற்ற பிள்ளைகள். கொல்வதும் வேறு யாரோ பெற்ற பிள்ளைகள். வெளிநாடுகளில் பாதுகாப்பாக தாங்களும் இருந்துகொண்டு, தங்கள் பிள்ளைகளையும் பாதுகாப்பாக கல்வியறிவூட்டி வளர்த்துக்கொண்டு, களைகள் ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூறுவது சுத்த அயோக்கியத்தனம். 

    வீட்டுக்கொரு போராளி வரவேண்டுமென்று கேட்டபோது எங்கள் குடும்பத்திலிருந்து ஒருவனை கொடுத்தோம். இப்போது பேசலாமல்லவா?

    இத்தனைக்கும் இப்போதும் நான் ஒரு ஸ்ரீலங்கன் பிரஜை!

    • Like 2
    • Thanks 1
  16. On 17/2/2024 at 16:07, நன்னிச் சோழன் said:

    என்னே! நீலனுக்கு இத்தனை கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளா...

     

    நன்னி, இப்போதுதான் முகமூடிகளுக்கு பின்னாலுள்ள முகங்கள் எட்டிப்பார்க்கின்றன! அவர்களுக்கு சிங்குச்சா அடிக்க, முண்டுகொடுக்க எத்தனைபேர்!!

    On 17/2/2024 at 23:01, விசுகு said:

    தவறு.

    விசுகர் இவர் யாரென்று தெரிகிறதா? இப்படியான களைகளை அழிக்காமல் மனிதாபிமானமாக அகன்றுவிடச்சொன்னதால் வந்த விளைவுதான் முள்ளிவாய்க்கால்!

    • Thanks 1
  17. On 17/2/2024 at 00:30, Kapithan said:

    எத்தனை முள்ளிவாய்க்கால் வந்தாலும் உங்களைப் போன்றவர்கள் நாகரீகம் அடைவதும் இல்லை,  திருந்தப்போவதும் இல்லை. உங்களைப் போன்றவர்கள்தான் எங்கள் இனத்தின் நச்சு வேர்கள். சிறிது சிறிதாக முழு மரத்தையும் அழித்துவிடுவீர்கள். 

    😏

    நீங்கள் இதை சொல்கிறீர்களா? உங்கள் வண்டவாளங்கள் தண்டவாளமேறி ரொம்ப நாளாச்சே!

    நெற்கதிர் வளரவேண்டுமென்றால் களைகள் அழிக்கப்பட அல்லது அகற்றப்பட வேண்டியவையே!!

    • Like 1
  18. On 9/2/2024 at 06:40, நிழலி said:

    அந்த தொட்டிலில் தான் நீங்கள் வாழ்கின்றீர்கள். உங்கள் குழந்தைகள் நிம்மதியாக வள்ர்கின்றார்கள்.

    அந்த தொட்டிலை உங்கள் சுயமுயற்சியால் உருவாக்கவேண்டும். காலா காலமாக பாவப்பட்ட ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளை சுரண்டி தொட்டிலை உருவாக்கிவிட்டு இப்போ மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். அதற்கும் செம்புதூக்க ஒரு கூட்டம் . விளங்கீடும் !!

  19. Umpire , match referee எண்டு எல்லாரும் சேர்ந்து அளாப்பி வென்று விட்டார்கள். முதல் சூப்பர் ஓவரில் அவுட்டான ரோஹித்தை இரண்டாவது சூப்பர் ஓவரில் ஆட விட்டிருக்க கூடாது. இந்தியாவில் எதுவும் நடக்கும்!!]

    If the same batter didn't bat or didn't get out or had retired hurt in the first 'Super Over', the said batter is allowed to be listed among the three batters for the second 'Super Over' as well. But if the batter was dismissed in the first 'Super Over', the rules don't allow his inclusion for a second go.

    Rohit walks off retired out. Gamesmanship? Well within the rules. Rinku comes out without a helmet, seemingly to sprint his lungs out to try and complete two. Rohit has a laugh as he goes back into the dug out. Call it excellent game awareness.

    • Like 1
    • Haha 1
  20. 11 minutes ago, விசுகு said:

    எது கொடுமை என்பதை நான் அல்லவா உணரணும்??

    இப்படி பார்த்தால் நானோ நீங்களோ உலகின் எந்த மூலையிலும் வாழமுடியாது. எல்லா நாடுகளுக்கும் எல்லா இன் மக்களுக்கும் இன்னொரு பக்கம் இருக்கு. எல்லோரும் தற்கொலை செய்து கொள்வோமா??

    நீங்கள் உங்கள் நாட்டில் நிம்மதியாக இருக்க விரும்பினால் மற்ற நாடுகளை சொறியாமல் இருக்கவேண்டும்!

    காலனித்துவப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு ஒரே முகம்தான்!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.