Jump to content

தூயவன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  8385
 • Joined

 • Last visited

 • Days Won

  8

Posts posted by தூயவன்

 1. இந்தியா என்ற வெறுப்பு என்பது எம் மீது இருக்கின்றது தான். அதை 87களில் இந்தியாவே ஆரம்பி வைத்தது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகாலத் தமிழர் என்ற தொடர்பினை வெறும் இந்தியக் குடியரசு என்று நூற்றாண்டு தாண்டாத ஒரு அடையாளம் தடுத்து விடும் என்றால் எப்படி ஏற்பது? தமிழகம் வளர்ச்சி உற்றால் அது எங்களுக்கும் பெருமை தானே!

  கொசுறு- சோழர்வழி எனத் தமிழகத்தை விட அதிகமாக எம்மை நம்பிக் கொள்பவர்கள் நாங்கள்.

 2. தமிழகத்தில் தடை செய்யப்பட வேண்டிய முதலாவது விடயம் விளப்படப் ”போஸ்டர்”கள். நகரையே அலங்கோலம் செய்கின்றன. இரண்டாவது முக்கியமாகச் செய்யப்பட வேண்டியது கழிவுநீர் வாய்க்கால்கள். இது இல்லாமல் நிறையப் பிரச்சனைகள். தண்ணீர் தேங்கி நிற்றல், ஆற்றுநீர் மாசுபடுதல்... உற்பட பல. பல உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் கழிவுகளை ஆற்றில் கலக்க இதுவே காரணமும் ஆகும்.
   


  மேற்கு நாடுகளில் இவ்வளவு அநியாயத்துக்குப் புல் வளர்க்கின்றார்கள். அழகுக்காக இப்படிச் செலவளிக்க வேண்டுமா என்று யோசித்ததுண்டு. ஆனால் உண்மையில் கழிவுநீர் வாய்க்கால்களில் சேறு கலக்காமல் இருக்க புல் வளர்ப்பது பெரும்பங்கு வகிக்கின்றது. அத்தோடு புற்கள் நிலத்தடி நீரை உறுஞ்சாமல் இருப்பதும் ஒருவகையான நன்மையானதே. மரங்கள் வளர்ப்பதைக் காட்டிலும் புற்களின் தேவை, நல்லது என்றே நினைக்கின்றேன்.

  தமிழ்நாடு இந்தியாவில் ஒரு தலைசிறந்த மாநிலமாக மாற வேண்டும். பொருளாதாரரீதியாகத் தமிழர்கள் உயர்வடைந்தால் எவனாலும் எங்களை ஏவல் செய்ய முடியாது.

  பெற்றோலியப் பொருட்களின் விலை அதிகரிக்கும்போது, ஒரு காலத்தில் பணம்படைத்தவர்கள் மட்டுமே வாங்கும் நிலை உருவாக்கும். அப்போது உலகத்தின் பொருளாதரம் ஒருசில நாடுகளின் கைகளுக்குச் சென்றுவிடும். அப்போது நம்மவர்கள் தொடர்ச்சியாக இப்படி மானியம், இலவசம் என்ற சொற்களின் அர்த்தங்கள் மறந்துவிடக்கூடும். அதைத் தவிர்க்க எங்களின் வருவாய்களை உயர்த்த வேண்டும்.

   

 3. எப்படி சொல்கிறீர்கள் ? ஜேசு முகமதுவின் இன்னொரு அவதாரம் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்.

   

  அப்படி ஏன் கிறிஸ்தவர்கள் ஏற்கமறுக்கின்றார்கள். இஸ்மயில் ஐ வைப்பாட்டிக்குப் பிறந்தவராக அசிங்கப்படுத்த வேண்டும்?

   

 4. எனக்கா சொல்கின்றீர்கள் மருதங்கேணி? பிரச்சனையில்லை.. இந்தப் பிள்ளைபிடிகாரர்கள் குழந்தைகளை மதம் மாற்றத் தான் வெளிநாட்டில் உதவி பெறுகின்றோம் என்று பணம் பெறுவரகளிடம் சொல்லி வாங்க வேண்டியது தானே...உதவுகின்ற எவருமே சாதி, மதம் பாற்று உதவுவதில்லை. ஆனால் தரகர்கள் தங்களின் புத்தியைக் காட்டி விடுகின்றார்கள்....

 5. இஸ்லாமியத் தமிழருக்கும், எமக்கும் பிரச்சனை என்பது இந்தியப் பார்ப்பானிகள் தானாம் பிரச்சனை எங்கே போய்த் தலையை முட்ட? ஏதாவது வைத்தியசாலையில் இருந்து தப்பிய மாதிரி செய்தி யாராச்சும் படித்தீர்களா?

  சிவசேனை என்பது, சிவனுடைய சேனையல்ல, மராட்டிய அரசன் வீரசிவாஜி சேனை என்பதே அர்த்தமாகும்.

  விளலுக்கு நீர் இறைக்க நேரமில்லை... எனக்கு காலையில் வடிவாகப் போகாததற்கும், இந்து பார்ப்பான, ஆதிக்க, மதவெறி.....க்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்கா என  ஆராய வேண்டும்.

  நன்றி வணக்கம்.

 6. சாண்டமருதன் வழக்கம் போல புசத்துகின்றார். இந்தியா ஒரு தேசமாக மாற்றம் பெற்றது ஐரோப்பியர் வருகைக்குப் பிற்பாடு என்ற ஒரு அடிப்படை அறிவு இல்லாத ஒருவரோடு விவாதம் செய்வது என்பது ஒரு முட்டாள்தனமான செயலாகவே உணர்கின்றேன். அதற்கு ஆமாம் போடும் கூட்டம் வேறு....

  அதற்கு முதல் பிரிந்திருந்த அரசர்கள் மொழிவாரியான இனமாகப் போராடவில்லை. ஆனால் இந்துக்களாக இருந்ததற்காக ஒரே தேசமாக நினைத்து வாழவில்லை. இஸ்லாமை இவர் பின்பற்றுகின்றார் யாரோ எழுதியிருந்தனர்... பிடித்திருந்தால் சுன்னத் செய்யுங்கள்... இங்கு வந்து சொறியாதீர்கள்...

 7. ஏழைகளுக்கு உதவ என்பது வேறு, ஆள்பிடிக்க என்பது வேறு...  நீங்கள் சுயமாக ஒரு உணர்வோடு முடிவுக்கு வந்து எந்த மதத்தையும் பின்பற்றுங்கள். ஆனால் ஆள்பிடிப்பவர்களின் பணத்துக்காகப் போகாதீர்கள். அவ்வளவு தான்...


  சிலர் தாங்கள் புதுமையானவர்கள் என்று காட்டவும் சில மதம் பின்பற்றுவர்கள் எனவும் அறிந்துள்ளேன்

 8. இதே வேளை இந்து மதத்தில் மீளாய்வு  என்பது அவசியம். ஒரு விடுதலைப் போராட்டமாகட்டும், ஒரு சீர்திருத்தமாகட்டும் மீளாய்வு செய்யாது விடின் அழிந்துவிடும்.  பாதிரிமார்களின் குழந்தைகளோடு பாலியல் வன்முறைகளை வத்திக்கான் கண்டு கொள்ளாது விடுவது போன்றே, சில சாமிகளின் பாலியல் நடவடிக்கைகளை நாங்கள் கண்டு கொள்ளாது விடுவதுமாகும். குறித்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.  குப்பைகளுக்கு மத்தியில் இருந்தால் குப்பைகள் போலவே எல்லாமே தோன்றும்,

  அடுத்தது சாதி... சாதி என்பது  எப்படி நீக்கலாம் என்பதை ப் பெரிய தத்துவஞானிகள் தான் பதில் சொல்ல வேஷ்டும். சாதிப் பிரச்சனை சாதிப் பிரச்சனை என்று சத்தமிடுகின்றார்களே தவிர, அதை நீக்குவதற்கு வழி சொன்னால் நன்றாக இருக்கும்...

  இது வரை என் வாழ்வில் நான் என் நண்பர்கள், பழகியவர்கள் எவரிடமும் சாதி பற்றி அறியவோ, அது பற்றிக் கதைக்கவோ நினைத்ததில்லை. அப்படி நினைத்து யார் கூடவும் பழகியதில்லை. எதிர்வரும் காலத்திலும் அப்படித் தான் இருப்பேன். திருமணம் என்பதிலும் அப்படியே இருக்க முயற்சி செய்வேன். இது தான் ஒரு தனிமனிதனாக என்னால் முடியக்கூடிய ஒரு விடயம்...

  • Like 1
 9. கத்தோலிக்கம் பற்றி வெள்ளையடிக்க முயல்பவர்களுக்கு ஒரு விடயம். கத்தோலிக்கம் எப்படிப் பரப்பப்பட்டது ஈழத்தில் என்பதை வரலாற்றில் மறைக்க முடியாது என நினைக்கின்றேன். ஈழத்தில் உள்ள பெரும்பாலான இந்துக்கோவில்களை இடித்துத் தானே கத்தோலிக்கம் பரப்பப்பட்டது. பலருடைய கிணறுகளில் கோவில் விக்கிரகங்கள் முதல், சைவ அடையாளங்கள் ஒளித்து வைக்கப்பட்டன. அப்படி ஒரு செயலைத் தான் போத்துக்கேயரும், ஒல்லாந்தரும் நடத்தி மதப் பிரச்சாரம் செய்தனர். அப்படியிருக்கும்போது எம்மை ஆதிக்கம் செலுத்த வந்தவர்களின் பின்னால் போய்விட்டு, அதற்கு நன்றாகத் தான் வெள்ளை அடிக்கின்றீர்கள்.


  இதைப் பற்றிக் கதை்ததால் சாத்தான் , மதவாதம் அது இது என்பார்கள். செய்தவர்கள் தப்பில்லை,செய்ததைச் சொன்னால் மட்டும் தப்பு ஆகுமா


  சில வருடங்களுக்கு முன்பு ஒரு விடயம் பற்றி அறிந்து கொண்டேன். அது உண்மையானதா இருக்குமா என்று தெரியவில்லை. கிழக்கில் வற்றாப்பளை அம்மன் போல மேற்கில் இருந்த அம்மன் கோவில்  மீது தான் மடுத் தேவாலயம் கட்டப்பட்டதாக. அதற்கு எந்த ஆதாரமும் சொன்னவரால் சொல்லப்படவில்லை என்பதால்  அதைப் பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை...... யாரிடமாவது அது பற்றி ஏதும் தகவல் உண்டா?

 10. ஓ சாண்டமருதன் என்பது பழைய சுகனா? எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கின்றது. 2009 இல், கேபி முகத்தை மறைத்துக் கொண்டு ஒரு தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தார். அதற்கு யாழில் வந்து  அடுத்த தலைவர் அப்படிச் செய்யலாமா, இப்படிச் செய்யலாமா என்று அவர் முகம் மறைத்தது ஒரு தலைமறைவுத் தலைவர் அது இது என்றெல்லாம் விளாசினார். கேபி இதைப் படித்தாரோ தெரியாது. ஆனால் சிலநாட்களில் தன் படத்தை வெளியில் விட்டிருந்தார். சில நாட்களில் சிங்கள அரசு அப்பிக் கொண்டு போய்விட்டது. அந்தளவு வீரியமான கருத்துக்காராக இருந்தார்.

  கேபி யாழ்படித்தாரோ என்பது ஒரு காலத்தில் என் சந்தேகம். அது சுகனின் கருத்தினால் வந்தது மட்டுமல்லாமல், சபேசன் யாழ்களத்தில் முதலில் எழுதிய வெளிநாட்டு அரசு, புலத்தமிழீழம் அப்படி ஏதோ ஒன்றைத் தான், கேபி நாடுகடந்த அரசு என்று தொடங்கியிருக்கக் கூடும் என்பது என் அவதானம்..

 11. ஆமாம் பிள்ளை பிடி காரர் என்று அநாகரீகமாக பேசும் உங்களுடன் ஆன்மீகம் மதம் சம்பந்தமாய் எந்த கருத்தும் எனக்கு கூற விருப்பமில்லை .......................இறைவனை அவரது சாயலாக கொண்ட மனிதன் கொஞ்சம் என்றாலும் அவர் ஜாடை அடிக்கணும் .ஆனால்............உங்கள் கருத்தில் சாத்தானின் சாயல் அடிக்குது போல ....ஆமாம் என்ன அது பிள்ளை ப்டிகாரருக்கு ஏதாவது செய்யவேண்டும் .என்ன செய்யப்போகிறீர்கள் ...............மத வெறி உள்ளவனாக கருத்திடும் ஒருவனாகவே உங்களை பார்க்கிறேன் :D .......நன்றி 

   

  நிச்சயமாக அக்கருத்து உங்களைப் பாதித்திருப்பின் வருந்துகின்றேன். ஆனால் அந்தக் கருத்தில் உண்மைத்தன்மை இல்லையா என்பதை நிச்சயம் மறுக்கவே முடியாது. நான் தத்தெடுக்க கேட்ட குழந்தைகளைத் தரமுடியவில்லை என்பது அதற்கு உதாரணம். ஒவ்வொரு மனிதனுக்கும், கிடைக்கின்ற அனுபவங்கள் தானே செயலைத் தீர்மானிக்க வைக்கின்றன.

  உங்களுக்குக் கருத்துக் கூறத் தோன்றுவதும், தோன்றாததும் உங்களின் பிரச்சனை. சாத்தனின் சாயலுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும். சாத்தான்கள் அதை எதிர்பார்ப்பதுமில்லை.  மற்றும்படி பிள்ளை பிடிக்கவும், ஆட்கள் சேர்க்கவும் தான் அனைத்து கிறிஸ்தவ மத. Inc அல்லது  Ltd கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.அவர்கள் செய்கின்ற எல்லாச் சேவைகளுக்குப் பின்னால் அது ஒளிந்திருக்கின்றன. முடிந்தால் யாராவது மறுத்துப் பாருங்கள்....

 12. யுவன் மதம் மாறியதை யார் இங்கு தப்பு என்றார்கள்?  தவிர யுவன் மதம் மாறியதை ஏன் செய்திக்குச் சொல்ல வேண்டும். மாறினால் பொத்திக் கொண்டு இருக்க வேண்டியது தானே... அதைச் செய்தியாக்க வைத்தது யார்?

  சாண்டமருதன் தான் மதச் சார்பில்லை என்கின்றார். ஆனால் அடித்துச் சொல்கின்றேன். அவர் கிறிஸ்தவ பின்புலம் கொண்டிருக்கின்றார். யாழ்களத்தில் இப்படி முகமூடி போட்ட பலரின் முகத்திரைகள் பிற்பாடு கிழிந்திருக்கின்றன. கடைசியாக நண்பர் ரகுநாதன் உற்பட. எதிர்காலத்தில்  இந்தப் பிள்ளைபிடிகாரர்களுக்கு ஏதாவது செய்யத் தான் வேண்டும்...

 13. உயரமான கட்டுமானங்களுக்கு பிரமிட்கள் ஒப்பீட்டளவில் இலகுவான வடிவம் என்பது உண்மையே.. ஆனால் மாயன்களும், எகிப்தியர்களும் ஒரே அலைவரிசையில் சிந்தித்தார்கள்; அல்லது தொடர்பில் இருந்தார்கள் என்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின்முன் கடல்கடந்து தொழில்நுட்பங்கள் பரவியிருக்கும் வாய்ப்பு மிகக்குறைவானதாக இருந்திருக்கும்.

  அதுபோக, இவற்றைக் கட்டவேண்டிய தேவை என்ன என்பதுதான் முக்கியமான கேள்வி.

   

  எங்கோ படித்த ஞாபகம். மனிதனைப் போல என்னுமொரு இனமும்(பெயர் ஞாபகமில்லை) இருந்ததாகவும்  அவர்கள் மனிதனை விட அறிவிலும் பலத்திலும் மேலானவர்களாக இருந்தார்களாம். அவர் யாரையைக் கூட ஈட்டியால் குத்தி விழுத்தக்கூடிய பலமானவர்கள். ஆனால் அவர்கள் ஏன் அழிந்து போனார்கள் என்றால் அவர்களின் கழுத்து குள்ளமாகவும், கையை ஈட்டி எறியும் வண்ணம் விசுக்க முடியாதவர்கள். அதனால் அவர்களால் மனிதர்களோடு போட்டி போட்டு வாழ முடியவில்லை. அழிந்துவிட்டார்களாம்.  அவர்களை வைத்து அடிமைகளாக மனிதர்கள் உபயோகித்து இவற்றை கட்டுவித்திருக்கலாம்...இது எவ்வளவு துாரம் உண்மை என்று தெரியாது. எங்கோ அறிந்த ஞாபகம்... எனவே நாகரீகமான பலமான சமூதாயம் அப்போது இருந்திருக்காது என்று சொல்ல முடியவில்லை.

  வானத்தை நோக்கிக் கூம்பக வடிவில் கட்ட மழை தான் கரணமாக இருக்கும் என நினைக்கின்றேன். நீர் வழிந்தோடும் வண்ணமே அவ்வாறு கட்டியிருக்கலாம்.

 14. ஜெயமோகன் சில வருடங்களுக்கு முன்னர், அவதர் படம் பற்றி ஒரு கட்டுரையை வரைந்திருந்தார். அதில் உள்ள சில அடிப்படைக் கருத்துக்கள் உண்மையானவை. முதலில் அந்த கிரகத்துக்குப் போகின்ற பூமியில் உள்ளவர்கள் அங்கே அந்த மண்வாசிகளைப் போல சிலரை உருவாக்கி அவர்களைப் பழக வைத்து, அங்குள்ளவர்களின் குணங்கள் செயற்பாடுகளை அறிய வைப்பார்கள். அவர்களோடு அந்தக் அந்தக் கற்கள் பற்றியதான ஒரு உடன்பாட்டுக்கு வர முன்மொழிவார்கள். அங்கே  அவர்கள் சம்மதிக்கவில்லை என்றவுடன் தாக்குதல் நடத்துவார்கள். இது  போன்றதொரு செயற்பாடே கிறிஸ்தவ மதவியாரிகள் செய்வதுமாகும். போத்துக்கேயராகட்டும்,ஒல்லாந்தராகட்டும், ஆங்கிலேயராகட்டும் அனைவருமே அப்படியதொரு செயலையே செய்தனர்.  சோழர்கள் பல்லவர்கள் ஆசியநாடுகளில் அப்படிச் செய்தபோதும், இருவரும் ஒரு கொள்கை என்பதால் பலம் என்பது சிதைந்து போய்விட்டது. ஆனால் மேலே சொன்ன 3 மேற்குலகத்தினரும், கிறிஸ்தவத்தில் தனித்தனிப் பிரிவுகள் கொண்டவர்கள் என்பதால் ஆதிக்கம் என்பது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

  தமிழர்களில் உள்ள கத்தோலிக்க  மதபோதகர்கள் தெரிந்தோ தெரியாமலோ, நமது   மண்ணில் நடக்கின்ற செயல்களை வத்திக்கானுக்கு அனுப்பிக் கொண்டு இருகின்றனர். இரண்டாவு நாட்டு அரசியலில் ஆள்பிடிக்கின்ற வேலை என்பது இதில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது, ஒரு முஸ்லீம் இனத்தவர், இப்போது பாகிஸ்தானோ, வேறு எந்த  முஸ்லீம் நாடோ சிறிலங்கா மீது படையெடுத்தால் குறைந்தபட்சம் பாதிக்கு மேற்பட்டவர்கள்  பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பார். அவர்களுக்கு உதவும் கூடும். இது தான் கிறிஸ்தவம் செய்கின்ற செயலுமாகும். எப்போது அமெரிக்கா பலமானதோ, அதன் பிற்பாடு, அங்கிருந்து பல கிறிஸ்தவ மத அமைப்புக்கள் உருவாகி உலகநாடுகளில் பரவுகின்றன. அதற்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைக்கின்றன என்பதைத் தாண்டி, ஏன் இப்படி அவசரமான ஆள்பிடிப்புச் செய்கின்றார்கள் என்பது பற்றி யாரும் சிந்திப்பதுமில்லை. பல கத்தோலிக்கமில்லாத நாடுகள் அமெரிக்காவில் இருந்து தான் இயங்குகின்றன என்பது கவனிக்கத் தக்கது.

  இது மதம் மாறிய நம்மவர்கள் தெரிந்து கொண்டு செய்கின்றனர் என்பதல்ல. அங்கே அவர்கள் அறியாமலே பகிர்ந்து கொள்ளும் விடயங்கள் பதிவு செய்யப்படலாம் என்பது என் கருத்து.  வடிவாகச் சொல்லப் போனால்  கனடா, அமெரிக்கா, அவுஸ்ரேலியாவில் எனக்கு உறவுகள் இருந்தால் நாளை அங்கே போய்த் தங்கவோ, அந்தநாட்டுச் செய்திகளை அறிந்து கொள்ளவோ வசதியாக இருக்கும் என்பதில் நான் என்பத்றகுப் பதில் நாட்டை வைத்துப் பார்க்கவும்.

   

 15. மதம் என்பது சட்டை போன்றது என்பார்கள். அவனவனுக்கு விரும்பிய சட்டையை அவனவன் அணிந்தகொள்வான். உங்களிடம் சுத்தமான அழகான சட்டை இருந்தால் அதிகமானவர்கள் வாங்கி விரும்பி அணிந்துகொள்வார்கள். அந்தச் சட்டையை போடாதே என்பதற்கும் என்னிடம் நல்ல சட்டை இருக்கின்றது என்பதற்கும் வித்தியாகசம் இருக்கின்றது. எந்த வழி சிறந்தது என்பத நீங்களே தான் தெரிவு செய்யவேணும்.

   

  பந்தியை நிறைவு செய்யவில்லை போலுள்ளது. கடைசியாக இப்படி முடிக்க வேண்டியது தானே... நல்ல சட்டையை யேசுநாதர் பணமாகத் தருவார். வாங்கிப் போட்டுக் கொள்ளுங்கள் என்று. ஏன் இப்படி வேடம் போடுகின்றீர்கள். மதம் என்பது சட்டை போன்றது என்பார்கள் என்று ஏதாவது தத்துவஞானி வந்து சொன்னாராக்கும்... என் பங்கிற்கு நானும் ஒன்று சொல்கின்றேன். உன் கற்பினைத் தா சட்டையைத் தருகின்றேன் என்று சொல்வது போலத் தான் மத ஸ்பானங்களின் நடவடிக்கைகள்.

  இதில் சாண்டமருதன் என்ன சொல்கின்றார் என்றால், நேரடியாக இந்துக்கள் என்பதை எதிர்த்தால் அது நேரடி மதவெறியாகி விடும் என உணர்ந்து, இதை இந்திய அரசோடு சேர்த்துக் கதைப்பதின் ஊடாக மறைமுகமாகத் தாக்க முயல்கின்றார் என்று புரிகின்றது. இந்துக்கள் என்பதற்காக இந்தியாவோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற தேவைகளை இத்தனை  கால வரலாறு சொன்னதே இல்லை. மேலைத்தேயர் இந்தியாவைக் கைப்பற்றும்வரை  பல அரசர்களாக, பல சிற்றரசர்களாகப் பிரிந்து தான் இந்தியா இருந்தது. அங்கே இந்து என்பவன் பல ஆட்சிகளோடு பிரிந்து தான் இருந்தான். தவிர காந்தி ஒப்புதல் அளிக்கவிடில், இன்றைய பாகிஸ்தானும் , பங்களாதேசமும் இந்தியாவோடு தான் இணைந்து இருக்க வேண்டும். எனவே சாண்டமருதன் சொல்கின்ற வாதங்கள் எல்லாமே நேரடியாக குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கமுடியாவிடின் புச்சாண்டி காட்டுவது போல இந்தியா என்பதற்குள் இந்து என்பதை அடக்கி, மதவியாபாராத்தை நியாயப்படுத்துகின்றார்.

  மடுமாதா பற்றிய கதைக்கு ஏற்கனவே நான் முதலில் சொன்ன என் வளர்ப்புக் குழந்தைகள் பற்றிய கதையே உதாரணம். இப்படித் தேவாலயத்தில் கேட்கின்றார் என்பதற்காக யாருமே மதம் என்பதைக் கண்டு கொள்ளாமல் தான் பணம் அனுப்புகின்றார்கள். உதவி செய்கின்றார்கள். ஆனால் இடைத்தரகர்களாகிய சில போதகர்கள் வாங்கிய பணத்தை மதமாற்றத்துக்கு உபயோகம் செய்கின்றார்கள்.

  ஏன் யாழ்பாணத்திலும், இன்று வரை பல கொன்வன்ற் பாடசாலைகளில் திருநீறு, மற்றும் இந்து அடையாளங்கள் அணியத் தடை விதிக்கப்படுகின்றது. வவுனியா கொன்வன்ற் பாடசாலையில் இணைந்த உறவுக்காரச் சிறுமிக்கு சிலவருடங்களுக்கு முன் நடந்த அனுபவம். ஆனால் நீங்கள் தாரளமாக சிலுவை  அடையாளம் போட்ட சங்கிலிகளை அணிந்து கொள்ளலாம்.  மக்களை மதம் மாற்றுகின்றது பெரியளவிலான வியாபாராம். நிச்சயம் அதற்கு நிறையத் திட்டங்கள் ஆண்டுகாலமாகப் போட்டுத் தான் செய்கின்றார்கள்.

   

 16. எழுந்மானம் என்பதை எழுந்தமானமாகக் கதைக்காமல் எதைப் பற்றிக் கதைக்கின்றீர்கள் என்பதைத் தெளிவிடுவது நல்லது.

   

  எழுந்தமானத்துக்கு கருத்துக்களை வைக்காமல் வரலாற்று ஆதாரங்களை தேடிப்பாருங்கள். உங்கள் ஆதங்கம் 500 வருசம் பழமையானது. விசர்க்கதை என நிருபிக்கக்பட்டுள்ளது.

   

 17. சம்பந்தர் பற்றிய இங்கு பதியப்பட்ட கருத்துக்கு என் பதில் சொல்ல வேண்டும். சம்பந்தர் மங்கயற்கரசின் வேண்டு கோளுக்கு அமைய மதுரை வருகின்றார். அங்கே அவர் தங்கியிருந்த மடத்துக்கு சமணர்கள் நெருப்பு வைக்கின்றனர்.அதில் இருந்து சம்பந்தர் தப்புகின்றார். ஆனால் அது கூன் பாண்டியனுக்கு வெப்புநோய்( பெரும்பாலும் நெருப்புக்காய்ச்சல்) ஆக மாறி பாதிகப்படுகின்றார் பிற்பாடு அனல், புனல் வாதம் நடந்து அதில் சம்பந்தர் வெற்றி பெறுகின்றார். ஆனால் அதில் தோற்றுப் போன சமணர்களைக் கழுமரம் ஏற்றுவித்தார் என்பது பெரியபுராணத்தில் சொல்லப்படுவதாகக் கூறப்படுகின்றது. இது எவ்வளவு துாரம் சரி என்பதற்கு அப்பால், அப்படி ஒரு சம்பவம் சமணத்தில் இருந்து சைவத்துக்கு மாறிய கூன் பாண்டியனே செய்வித்தான் என்கின்றது. ஒரு அரசனுக்குத் தான் அந்த சக்தி இருந்திருக்க முடியும். தவிர இச் சந்தர்ப்பத்தில் சம்பந்தர் தோற்று இருப்பினும் அவரும் கழுமரத்தில் ஏற்றப்பட்டிருப்பார். சமணர்கள் மயில்பீலியால் தடவி நடந்தாலும், அவர்கள் இரக்கமானவர்களாக அன்று இருக்கவில்லை போலுள்ளது. இன்று சிங்களவர்கள் பசுவதை எதிர்த்தபடி மனிதவதையை ஆதரிப்பது போல.

  ஏன் என்றால் இறுதியாகச் சம்பந்தர் திருமணம் முடிகின்றார் அங்கே தீ வளர்ந்து அந்த ஜோதியில் வந்தவர்களோடு ஐக்கியமாகின்றார் என்கின்றது. சம்பந்தர் வரலாறு. ஆனால் ஒரு திருமணத்தை முடித்து ஏன் அந்தச் சோதியில் சம்பந்த் ஐக்கியமாக வேண்டும். அப்படி ஒரு தேவையே இல்லையே. அத்தோடு அவர் தனிய என்றில்லாமல், திருமணத்துக்கு வந்த அனைவரும் அச் சோதியில் ஐக்கியமாவார்களாம். அவருக்கு அப்படிச் செய்ய என்ன மண்டைப் பிழையா? உண்மையில் சமணர்கள் மீண்டும் வழமை போல அவர் மண்டபத்தினைத் தீ மூட்டி அதில் அனைவரையும் கொன்றுவிட்டிருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். திருமண நேரத்தில் சம்பந்தர் அது பற்றிய அஜாக்கிருதையாக இருந்திருக்க கூடும். அப்படி ஒரு மரியாதைக்கு உரியவர் கொல்லப்பட்டார் என்பது சரியாக இருக்காது என்பதால் அவரை ஜோதியில் கலந்தார் என்று முடித்து விட்டிருக்க கூடும். அக்காலத்தில் தலைமறைவு, தப்பித்துப் போதல், மீண்டும் வருவார் என்ற இந்தக் கால கதைகள் தெரியாமல் இருந்திருக்கலாம்.

  சம்பந்தரை பிடிக்கும் ஏனெனில், அவர் ஒரு வடமொழி எதிர்ப்பளராகவே இருந்திருப்பார் என நம்புகின்றேன். தமிழால் இத்தனை சாதிக்க முடியும் என்பதைக் காட்டியவர்களில் அவரின் பங்கும் முக்கியமானது.

 18. கிறிஸ்தவம் தமிழில் வழிபாடு செய்கின்றார்கள் எனச் சிலர் சொல்கின்றார்கள். இந்துக்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதும் என் அவா. ஆனால் உண்மையில் கிறிஸ்தவம் அப்படி இனம் மொழியில் வழிபாடு செய்ய ஒரு காரணம். மதத்துக்கு ஆள் பிடிக்க வேண்டிய தேவை. அதை விட முக்கியமானது, இயேசுநாதர் ஒரு இஸ்ரேல்காரர். ஒரு யூதர். அவரின் தாய்மொழியான ஹப்றுவை இஸ்ரேல் மீள உருவாக்கப்பட்ட பின்னர் தான் மீளப்பெற்றார்கள். அது அழிந்து போனமொழியாக இருந்தது. இப்போதும் முதியவயதுள்ள யூதர்கள் ஹப்று தெரியாதவர்களாகவும், இளைய தலைமுறையே இனவுணர்வோடு அதைக் கற்கின்றவர்களாகவும் உள்ளனர்

  அத்தோடு யூதர்கள் கிறிஸ்தவத்தை ஏற்கவில்லை. அது வத்திகானுக்கு நகர்ந்தது. அங்கே எல்லாமே மாற்றமடைந்தது. பிற்பாடு பிரித்தானியா தன் சாம்ராச்சியத்தில் என்னுமொரு பிரிவை உருவாக்கியது. இப்படி அலைந்து திரிந்தால் அது ஹப்றுவைத் தொலைத்து எல்லா மொழிகளுக்கும் பரவவித்திட்டது எனலாம். மற்றும்படி இஸ்லாமியர் அரபிலும், பௌத்தர்கள் பாளியிலும் சமணர்கள் பிரகித மொழியிலும் தான் இன்றுவரை வழிபடுகின்றனர்.

  சமஸ்கிருதம் எப்படி எமக்குள் புகுந்தது என்றால் என்னுடைய ஊகம் ஆதிசங்கரர்(கேரளா) அனைத்து மதங்களையும் ஒன்றாக்கியதன் விளைவாகவே இருக்கும் என நினைக்கின்றேன். இன்று ஆங்கிலம் போல ஒரு பொதுமொழியாக அது எமக்குள் ஊடுருவியது. யாருடைய தாய்மொழியாகவும் இருக்கதால் அதுவே பொதுமொழி என அன்று எண்ணியிருக்கலாம். அதனால் சமஸ்கிருதம் தெரிந்தவர்ககளுக்கு கோவில்கள் தாரை வார்க்கப்பட்டார்கள். அதுவும் தமிழும் சேர்ந்து தமிழில் இருந்து பலமொழிகள் உருவாகிச் சிதைய நாங்களே காரணம் ஆனோம். அத்தோடு பல அழிவுகள். எம்மால் தமிழை முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியாத பெரும் அழிவுகள். மற்றும்படி கடவுள் கொடுத்த மொழி சமஸ்கிருதம் என்பதெல்லாம் நல்ல பூச்சுத்தல்கள். ஆனால் அன்று எப்படி நாங்கள் சமஸ்கிருதத்தை உள்ளே வாங்கி எவ்வாறு தமிழைச் சிதைவடைய வைத்தோமோ அதே தப்பினை இன்று ஆங்கிலத்தை உள்வாங்கிச் செய்கின்றோம். சமஸ்கிருதம் ஆவது பரவாயில்லை. ஒரு சில கோவில் பூசாரிகளே மட்டும் கற்றும் மொழியாக இருந்தது. அப்படி இருந்தும் இத்தனை அpவு எமக்கு... ஆனால் இன்று ஆங்கிலம் கொடுக்கப் போகும் அழிவு அப்படியானது அல்ல... அது மிகப்பெரிய அழிவைத் தரப் போகின்றது. என்னமும் 2,3 தலைமுறைகளில் நாம் திரும்பிப் பார்க்கின்றபோது கோடியில் இருந்து வெறும் லட்சக்கணக்கானவர்களே தமிழைப் பேசுகின்ற மொழியாக அது மாறிவிடும்.

  இங்கே எழுதப்பட்டவை சில என் எண்ணதின்பால் வெளிப்பட்டவை. வரலாற்று ஆதாரம் கொண்டிருக்கவில்லை.

 19. இந்த சந்தர்ப்பத்தில் தான் இந்தக் கதையைச் சொல்ல முடியும் என்று நினைக்கின்றேன். நான் இரண்டு குழந்தைகளை 2009ம் ஆண்டு யுத்தத்தின் பிற்பாடு தத்தெடுப்பாக உறுதி செய்து, ஒரு தேவாலயம் ஊடாகச செய்து வந்தேன். இரண்டு குழந்தையில் ஒன்றுக்கு பெற்றோர் உறவினர் இல்லை. மற்றவரின் தாய் போராளி என்பதால் சிங்கள அரசு புனர்வாழ்வு என்ற பெயரில் வைத்திருந்தது. எனக்கு அவர்களின் மீதான அன்பு ஏதோ என் குழந்தைகளாகவோ, சகோதரங்களாக இருந்தால் எப்படி ஒரு உணர்வைத் தருமோ, அது போன்றதொரு பாசத்தை உருவாக்கியது. எனக்குத் திருமணம் ஆகாததால் தத்தெடுக்கமுடியாது, மற்றும் கனடா கொண்டு வரமுடியாது என்பதாலும், குழந்தைப் பாக்கியம் இல்லாத உறவினர் ஊடாக அவர்களிருவரையும் வளர்ப்பதற்காக முயன்றபோது, அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. விசாரித்தபோது இரு குழந்தைகளும் மதம் மாற்றப்பட்டிருந்தனர். எனக்கு உள்ள வருத்தம் என்னவெனில், குழந்தைகளிடம் ஏன் மதமாற்றத்தைத் திணிக்க வேண்டும்? அதற்கான வயதா அவர்கள்? இத்தனைக்கும் என்னிடம் இருந்து உதவி பெறும்போதாகட்டும், அந்தக் குழந்தைளாகட்டும், இடையில் நின்ற தரகர்கள் அவர்கள் அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்கும்போது சுயநலவாதிகளாகவே என் கண்ணில் தெரிந்தார்கள். இப்படி நான் தத்தெடுக்கும் விடயம் பற்றிய சிந்தனையை வெளிப்படுத்தியதுடன், என்னிடமான தொடர்பு தூண்டித்தார்கள்.

  உண்மையில் சொல்கின்றேன். ஒரு காலத்தில் அன்னை திரேசா மீது நான் கொண்டிருந்த மரியாதை இதற்குப் பிற்பாடு உடைந்து போனது. அவர் தொழுநோயாளர்களைக் கவனித்த சேவை பெரிதாயினும், அதன் பின்ணனியில் மதமாற்றம் என்ற ஒரு வியாபாரமும் இல்லாமல் இருந்திருந்தால் உயர்வாகவே இருந்திருப்பார்கள். ஆனால் அவர் கடவுள் என்பதைப் பண்டமாற்றுச் செய்து தானே அவர்களைப் பார்த்துக் கொண்டார்....

  • Like 2
 20. "இந்துக்களின்" இடங்களில் விகாரைகள் கட்டப்படுவது பற்றி இந்தத் துண்டுப்பிரசுரம் ஏன் கேள்வி எழுப்பவில்லை? தங்களின் வீரத்தை அங்கே காட்டலாமே?!

   

  அருமை... அருமை... எங்களிடம் வீரம் இல்லைத் தான். நீங்கள் வீரமானவர் தானே உங்களின் வீரத்தை முசுலீம்களிடம் காட்டுங்களேன். நான்கு விதமாக கதைக்கின்ற நாத்திகத்தை அல்லாவை வைத்து எழுதுங்கள். வீரம் எங்களுக்கு இப்படித் தான் காட்டமுடியும். அதனால் விட்டு விடுங்கள்....

  உண்மையில் இந்துக்கள் ஒற்றுமை மட்டுமல்லாமல் சீர்திருத்தங்கள் என்பதும் தேவையான ஒன்று. உலகம் உறுண்டை என்று சொன்னதற்காக பலரைக் கொலை செய்த கிறித்தவம் பிற்பாடு எல்லாவற்றையும் மதப்பிரச்சாரம் என்பதினூடாக வழியைத் தெரிவு செய்த பிற்பாடு" இப்போதும் மூடநம்பிக்கைகளை ஏந்திக் கொண்டு சில செயற்கைகளூடாக இந்து மதம் இருப்பதை முதலில் மாற்ற வேண்டும். வெறி என்பது அவசியம். அப்படிப்பட்ட வெறிதான் எங்களின் அடையாளங்களை இழக்க வைக்காதிருக்கும். இனவெறி என்பதும் அவ்வகையானதே அதனால் தான் இன்றுவரை என் அடையாளங்களைத் தொலைக்கவில்லை. அந்தவெறியை எப்படிப் பாவிக்கின்றோம் என்பதில் தான் எங்களின் வெற்றி இருக்கின்றது

   

  சகோதரா துளசி சொன்னது ஒரு சம்பவம் .....ஆனால் நான் சொன்னது யதார்த்தம் .................நான் வாழ்வது அவர்கள் சாயலில் ..............அவர்கள் எத்தனை பேர்கள் என்று சொன்னால் இங்கே ....................நான் பேசுவது மனிதர்களைப்பற்றி .............. :)  :icon_idea:

   

  நடிகர் வியய்யின் தந்தை கிறித்தவர். அவர் சோபானாவைத் திருமணம் செய்யும்போது அவர் இந்து. பிற்பாடு அதைத் தழுவினார். யோசப் வியய் பிற்பாடு திருமணம் செய்தது இந்து. அவர் கிறித்தவர் ஆகி இரண்டு பிள்ளைகளும் கிறித்தவர் ஆனார். இது சரி தவறா என்று சொல்லவரவில்லை. பொதுவாகவே நான் அறிந்தது தேவாலயங்களில் மதம் மாறவில்லை எனில் திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் என்பது.

 21. இதை இயக்குவதற்கும் நிறைய மின்சாரம் தேவைப்படப் போகின்றேதே. என்ன செய்யப் போகின்றார்கள்? விமானநிலையம் பற்றி மேலே சொன்னீர்களே. என் நண்பர் ஒருவர் தமிழகம் சென்ற போது மலசலகூடம் சென்னார். அங்கே பழைய வடிவான மலசலகூடம். வேறுவழி இல்லை என்றுபோனனால் வாசலில் அசிங்கம் செய்து வைத்திருந்தார்கள். எந்தப் பணியாளரும் அதைச் சுத்தம் செய்து வைத்திருக்கவில்லை. அவன் விமானத்தில் ஏறித் தான் கடமையை(?) முடித்தான். ஒரு சர்வதேசத் தரம் கொண்ட விமான நிலையத்தின் நிலைமை இது. இதைவிடச் சிறிலங்காவில் உள்ள விமானநிலையம் தரம் வாய்ந்தவை.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.