Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தூயவன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  8,385
 • Joined

 • Last visited

 • Days Won

  8

Posts posted by தூயவன்

 1. அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  கடந்த 25ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடிய தயா அண்ணாவுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  2007ம் ஆண்டு அவருக்கு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக குரல் வடிவ வாழ்த்தினைத் தெரிவித்திருந்தோம். அதில் பங்கேடுத்த வினித், சாத்திரி,சுண்டல், என்னைத் தவிர மற்றவர்கள் யாழில் எழுதுவதினை நிறுத்தி விட்டார்கள்.

 2. தோழர் தூயவன் ஒரு முற்போக்குவாதி.

  இன்றையகாலகட்டத்தில் நடிகர் அஜித்தே!!!!!!!!!!!!! ஈழத்தமிழரின் அவலத்தால் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும் போது ......?

  நன்றி உங்கள் கருத்துக்கு... அத்தோடு நினைவுபடுத்தலுமாம்...

 3. ஒரு விடயத்தை மீள நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஒப்புக் கொள்கின்றீர்களோ இல்லையோ எமது விடுதலைப் போராட்டத்தை உலகமும், சிங்கள தேசமும் நசுக்கி விட்டது. எனிவரும் காலங்களில் அது ஆரம்பத்தில் இருந்து தான் உதித்து வர வேண்டிய துப்பாக்கிய நிலையில் உள்ளது.

  இந்த இனவழிப்பு என்பதைச் சிங்கள அரசு செய்து தான் தமிழரைத் தோற்கடித்தது. புலிகளின் பகுதியில் வசித்த மக்களைக் கண்டபடி கொன்று குவிக்கின்றபோது, புலிகள் தங்களுடைய சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் மக்களையும் பாதுகாக்க பலத்தை விரயம் செய்ய வேண்டிய நிலைக்கு வர வேண்டி ஏற்பட்டது. அந்த நேரத்தில் அம் மக்களைக் காக்க உலகும் முன்வரவில்லை... நாங்களும் கை கொடுக்கவில்லை.

  கடைசிக் காலத்தில் மக்கள் புண்ணாக்குச் சாப்பிடும் போது எல்லாம், எங்களால் ஆதிகபட்சமாக ஆர்ப்பாட்டம் தானே செய்ய முடியும் என்று காலத்தை வீணாக்கினோம். அந்த அறியாமை தான் இன்றைக்குத் தலைவர் இழப்பை ஏற்க மறுக்கின்றது. தேச விடுதலைப் போரட்டத்தை தோள் கொடுக்கவும் தயங்குகின்றது. தலைவர் தலையில் எல்லாப் பொறுப்பையும் போட்டு விட்டு நாம் சும்மா இருக்கலாம் என்பதற்காகவே தலைவரைத் தேடுகின்றோமே தவிர, உண்மையான பற்றை நாங்கள் கொண்டிருந்தால் அவருக்கு எச் சவால்களுக்கு மத்தியில் நின்று தோள் கொடுத்திருப்போம்.

  கிட்டத்தட்ட ஒண்டரை லட்சம் அளவில் மக்களை இழந்து விட்டு நல்லவர் வேடம் போட வேண்டிய தேவையில்லை. ஆயுதப் போராட்டம் என்பதில் நல்லவர் மாதிரி நாங்கள் இருந்தால் எதுவே கிடைக்காது என்பதைத் தான் கடந்த 32 வருடப் போராட்டக் களம் எமக்குப் பதிலாகத் தந்திருக்கின்றது.

 4. ஒன்று மட்டும் அனைவருக்கும் சொல்ல முடியும். தலைவர் இருக்கின்றாரா, இல்லையா.. யாருக்கு துரோகிப்பட்டம் சூட்டலாம்.. என்ற ஆராட்சிகளை இத்தோடு நிறுத்தி விடுங்கள். தலைவர் இருக்கின்றார் என்று நம்புகின்றவர்கள் நம்புங்கள். இல்லை என்போர் அஞ்சலி செய்யுங்கள்.

  உண்மையில் எமக்குள்ள பிரச்சனை என்னவெனில் தமிழீழப் போராட்டம் இத்தோடு முடிந்து விட்டதா?? அல்லது அதை எப்படித் தொடர்வது என்பது தான்.

  இதற்கான பதிலை எவரிடமிருந்தும் பெற முடியவில்லை... தமிழீழத்திற்கான போராட்டம் என்னவென்று எனித் தொடர முடியும்.

  சிங்கள அரசு ஒன்றிணைந்த இலங்கை என்ற பார்வையில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கி விட்டது. விடுதலைப்புலிகளின் எந்த அடையாளத்தையும் இலங்கையில் அது கொண்டிருக்க விரும்பவில்லை என்பதோடு, அது சார்பான எந்த விடயத்தையும் அது ஏற்க விரும்பவில்லை என்பதைத் தான் வணங்கா மண் கப்பலைத் திருப்பி அனுப்பியதில் இருந்து புலனாகின்றது. அத்தோடு அரசியல் பலமாகக் கூடப் புலிகளை அது ஏற்க மறுக்கின்றது.

  உண்மையில் சொல்லப் போனால், இந்தக் காலப்பகுதியில் வன்னியில் உள்ள புலிகளின் நினைவாலயங்கள், தொடக்கம், மாவீரர் மனை என்று அனைத்து அடையாளங்களையும் அது அழித்துக் கொண்டிருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன். செய்திகள் வரும் வரை நாம் அது பற்றி அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்பதால் அது பற்றிய செய்திகள் எனி வரும் காலங்களில் வரப் போவதில்லை.

  எதிர்வரும் காலங்களில் சிறிலங்கா அரசு எவ்வித அதிகாரத்தையும் தமிழ் மக்களுக்குத் தரப் போவதில்லை என்பதோடு, குடியேற்றங்கள், என்ற போர்வையில் வன்னி தொடக்கம், அனைத்து நிலங்களிலும் கலப்பு இன முறையை உருவாக்கப் போகின்றது. எதிர்வரும் காலங்களில் எந்த இனமும் தனியாக வாழ்கின்ற நிலையை அது விட்டு வைக்காத நிலையாக மாறப் போகின்றது.

  உண்மையில் இந்த வேதனையான விடயங்களுக்கு அப்பால், என்ன செய்வது என்பதற்கு எவ்விதமான சந்தர்ப்பங்களும் எம்மிடம் இல்லை. அது பற்றி நாம் கவலைப்படவுமில்லை... தலைவர் இருக்கின்றார் என்று எப்படி எல்லாப் பாரத்தையும் அவர் தலையில் சுமக்க வைத்து, நாம் இவ்வளவு காலமும் தப்பி எமது போராட்டத்தைத் தோற்கடிக்க ஏதுவாக இருந்தோமோ, அந்த நிலையில் இப்போதாவது அந்தப் பொறுப்புக்களைச் சுமக்கத் தயாராகக் கூட நாம் யாருமே இல்லை.

  எனி வரும் காலஙகளில் தமிழீழம் தேவையா? அது சாத்தியமாகின்ற விடயமா என்பதற்கான பதில் என்ன?

  என்னுடைய முடிவு என்னவெனில், தமிழர் அனுபவித்த வேதனைகளையும், இழப்புக்களையும சிங்கள தேசம் அனுபவிக்காத வரை தமிழீழம் என்பது சாத்தியமற்றது. அல்லால், 2000ம் வருடங்கள் போராடிக் களைத்தே விட்டோம். எனி வரும் காலங்களில் சிங்களம் பேசுகின்ற இனமாக யாரும் இல்லாது போகும் வரை எமக்கான விடுதலை சாத்தியமில்லை

  இப்படியே நாங்கள் சும்மா கதைத்துக் கொண்டிருந்தோம் என்றால், விடுதலைப்புலிகள் என்ற ஒரு அமைப்பை மையமாக வைத்துக்கட்டப்பட்ட அனைத்து தமிழர் அடையாளங்களும் சிதையப் போகின்றது. புலத்தில் உள்ள அடுத்த தலைமுறை அங்குள்ள மொழி படித்து அழியப் போகின்றது. ஈழத்தில் வாழ்பவன் சிங்களம் படித்தே அழிந்து போவான்.

 5. யார் சொன்னது அனி செய்தது மறந்து போச்சு என்று.

  உங்க காணொளி அழகாக இருந்திச்சு. எங்களின் பிறந்தநாள் வந்தாலும் இப்படி மினக்கெடுவீங்களா என்று ஆதங்கத்தில் கேட்டுவிட்டன்பா! எங்களில் அன்பில்லையோ?

 6. (தூயவன் மறந்திட்டன் என்னை திட்டாதீங்கப்பா..)

  திட்டுவதா.... உங்களைப் போய்... சீ சீ அதெல்லாம் கிடையாது....

  ஆனால் நேரே சந்திக்கும் போது இருக்குது... <_<:)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.