Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

narathar

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  4,477
 • Joined

 • Last visited

 • Days Won

  10

narathar last won the day on April 5 2015

narathar had the most liked content!

Contact Methods

 • MSN
  yarlnarathar@hotmail.co.uk

Profile Information

 • Gender
  Not Telling

Recent Profile Visitors

4,356 profile views

narathar's Achievements

Experienced

Experienced (11/14)

 • Very Popular Rare
 • Reacting Well Rare
 • Dedicated Rare
 • Conversation Starter
 • Week One Done

Recent Badges

263

Reputation

 1. இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தூய இனம் என்று எதுவும் இல்லை. இவ்வாறன ஆதாரங்கள் அற்ற கதைகளை விடுத்து அறிவியல் துணை கொண்டு தமிழர் வரலாற்றை எழுதுவதே சிறந்தது.
 2. அடையாளம் பற்றிய ஒரு ஆழமான பார்வை. அடையாளம் மாறுபடுவதும் அது ஒரு தொடர் ச்சியையும் உடையது. மாறுவதும் மாறிக் கொள்வதும் மானிட வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கிறது. தமிழ் அடையாள அரசியலை இந்தப் புரிதலுடனேயே அணுக வேண்டும்.
 3. https://youtu.be/JpZjTDDtLZw திராவிடம் பற்றிய தெளிவான விளக்கம் இந்தக் காணொளி யில் உள்ளது.
 4. நாம் தமிழர் தேவையற்ற நிலைப்பாடுகளை எடுத்து பலரை இழந்துள்ளது. அரசியல் தெளிவின்மை காரண மாக இருக்கலாம். இவற்றில் இருந்து புதிய சக்திகள் வரலாம். நாம் தமிழரே சுய விமரிசனம் செய்து வளரலாம். பெரியார் மீதும் திராவிட இயக்கம் மீதும் வன்மம் பாராட்டாமல் இன்றைய அரசியல் தமிழ்த் தேசியமே என்று சொல்லப் செயற்கை பட்டிருந்தால் பலரை உள்வாங்கி இருக்கலாம். இன்றைய அரசியல் அதிகாரம் அடையாள அரசியலிலேயே பிறக்கிறது. மொழி வழி மாநிலம். இயற்கை யைப் பாதுகாத்து வளர்ச்சி. சமத்துவப் பொருளாதாரம் . சம உரிமை . மதச் சார்பின்மை . இவை எல்லாமுமாக தமிழ்த் தேசிய அரசியல் இருந்தது. சீமான் இவற்றைப் பின் பற்றினாலே விரைவாக வளரலாம்.
 5. இன்றைய செய்திகள் 3500 வருட பழமையான மனிதக் குடியேற்றம் பற்றிக் கூறுகிறது. இவர்கள் ஆபிரிக்கா வில் இருந்து வந்த மூத்த குடிமக்கள் இவர்கள் ஏதாவது ஒரு ஆபிரிக்க மொழி பேசி இருக்கலாம். ஆகவே இவர்கள் தமிழர் என்று சொல்வதோ இல்லை திராவிடர் என்று சொல்வதோ அபத்தமானது. அவர்கள் தங்களை வேறு பெயரில் அழைத்திருக்கலாம். ஆகவே என்ன அடையாளம் என்பதை அன்றைய காலகட்டமே தீர்மானிக்கிறது. இன்றைக்கு தமிழர் என்னும் அரசியல் தான் தேவை ஆகி இருக்கிறது. மொழி வழி மானில உரிமைக்கோ ஈழ விடுதலைக்கோ ஏன் புலம் பெயர் தமிழர் நலனுக்கோ தமிழர் என்னும் அடையாள அரசியலே தேவையாக இருக்கிறது.
 6. தென் திசை வந்த ஆரியரே திராவிட பார்பனர் என அழைக்கப்பட்டனர். திராவிட என்ற சொல்லே வட மொழிச் சோல். பெரியார் தென் மாநிலங்களை இணைத்து தனி நாடு கேட்டார். அந்த கால கட்டத்திற்கு அது சரியான அடையாளம் ஆகும் . மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் தமிழ் என்னும் அடையாளமே அரசியல் தேவையாகிறது. அதன் அடிப்படையிலேயே மானில உரிமை சமத்துவம் எல்லாம் பேசப்படுகிறது.
 7. ஒரு மக்கள் கூட்டம் தம்மை எவ்வாறு அழைப்பது என்பதை அன்றைய அரசியலே தீர்மானிக்கிறது. ஒரு கால கட்டத்தில் திராவிட அரசியல் தேவையானதாக இருந்திருக்கலாம்.இப்போதும் அது தேவையா என்பதை மக்களே தீர்மானிப்பார். இதில் எது தமிழ் எது திராவிடம் என்பது அர்த்தம் அற்ற தேடல். மொழி மாறும் மக்கள் சமூகம் தொடர்ச்சியான குடிப்பரம்பலையும் கலப்பையும் கொண்டிருக்கும். இன்றைய அரசியல் தமிழ்த் தேசிய அரசியல் தான். ஈழ விடுதலைப் போரும் இனப்படுகொலையும் தமிழ் நாட்டு மக்களை தமிழ்த் தேசிய அரசியலை நோக்கி தள்ளி உள்ளது. யார் யார் தம்மை தமிழராக அடையாளப் படுத்துகிறார்களோ அவர்கள் எல்லோரும் தமிழர்களே. சாதிய அடையாளம் ஒழிந்து எல்லோரும் தமிழரே என்னும் நிலை வர வேண்டும்.
 8. சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
 9. //அர்ஜுணன், ஒருதுறையில் இருக்கும் அதிஸ்ட்டமான வாழ்வு எனக்கு வாய்க்கவில்லை. பலதுறையில் இருப்பதாலான என் ஞாபக மறதி எல்லோருக்கும் தெரியும்.//
 10. செயபாலன் , நிழலியும் துளசியும் மட்டும் அல்ல உங்களை நன்கு அறிந்தவர்கள், பொது வெளியில் எழுதுபவர்கள் எல்லோருடமும் உங்களைப் பற்றிய பார்வை இவ்வாறே உள்ளது. உங்களை பல்துறை விற்பன்னர் என்று நீங்களே நினைத்துக் கொள்வது ஒரு உளவியற் பிரச்சைனையாகவே நான் கருதுகிறேன். ஆகவே உங்களின் தனிப்பட்ட பிரச்சினையை, தமிழர்களைத் துன்பப்படுத்தும் செயற்பாடாக மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். துன்பப்பட்ட துன்பப் படும் மக்களுக்கு நீங்கள் செய்யக் கூடிய பேருபகாராம், கவிதை எழுதுவது படத்தில் நடிப்பது என்னும் துறைகளில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.இது உங்களுக்கும் நல்லது தமிழ் மக்களுக்கும் நல்லது. எனது யோசனையை சீர்தூக்கி நடப்பீர்கள் எனக் கருதுகிறேன். நன்றி.
 11. சபேசன் அப்படியாயின் உங்களின் அண்மைய கருத்துக்களும் இவ்வாறான உள் நோக்கம் கொண்டவையோ? உங்களின் தனிப்பட்ட நலங்களுக்காக உண்மைகளைப் பொய்களாக எழுதும் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் எமது போராட்ட அரசியலுக்குத் தேவையா என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது ?
 12. தாம் அதி புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டு மாறி மாறி முதுகு சொரியும் கூட்டத்தின் வண்டவாளாம் தண்டவாளம் ஏறிக் கன நாளாச்சு என்று தெரியாமால் பூச்சுற்றும் நடிகர்கள் உண்மையில் அதி மடையர்கள்.
 13. சிறிலங்காவில் சுதந்திரம் இருக்கு என்று எழுதிய சோபசக்தி முதல் வரை கருணாகரன் வரை வரை இதற்குப் பதில் சொல்ல வேண்டும். மேலும் இவர் அனந்தி உடன் எடுத்துக் கொண்ட படம் முகநூலெங்கும் உலாவியது. முகநூலைப் பார்த்தாலே புலனாய்வாளர்களுக்கு போதிய தகவல் கிடைத்திருக்கும். சிறிலங்காவின் சுதந்திரம் என்ன என்பதை இனிக் கருணாகரன் வந்து சொல்ல வேணும். சோபசக்தியும் இதற்க்கு ஒரு பொழிப்புரை எழுதுவார்.
 14. இங்கிலாந்தில் தமிழர்கள் கடன் அட்டை மோசடிகாரர்கள் இதன் பின்னால் புலிகள் இருக்கிறார்கள் என்னும் பிரச்சாரம் சிறிலங்கா தூதுவராலயத்தால் ஒரு ஆறு ஆண்டுகளின் முன் செய்யப்பட்ட பிரச்சாரம்.அதனை முறையடிப்பதற்காக பிரித்தானிய தமிழர் பேரவை பல விளம்பரங்களை பத்திகைகளில் வெளியிட்டது, பேரவையின் ஆரம்பம் கூட இதனாலெயே ஏற்பட்டது.இந்தப் பிரச்சாரத்தையே நாமும் சொல்வது கவலை தரும் விடயம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.