Jump to content

narathar

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    4514
  • Joined

  • Last visited

  • Days Won

    10

Posts posted by narathar

  1. உங்களை பல்துறை விற்பன்னர் என்று நீங்களே நினைத்துக் கொள்வது ஒரு உளவியற் பிரச்சைனையாகவே நான் கருதுகிறேன்.- நாரதர்

     

    நாரதர் நான் எங்கே பல்துறை விற்பனன் என்று சொன்னேன? ஆதாரத்தை வெட்டி ஒட்டுங்கள். இப்படி மற்றவர் நினைப்பதை சொல்லமுடியும் என நினைப்பது ஒரு உளவியல் பிரச்சினையல்லவா நண்பரே.

     

    வீடுவந்து 72 மணிதியாலங்கள்தான் ஆகிறது அதற்குள்ளேயே ஏன் இப்படி?

     

    நாரதர் இராசவன்னியன் உங்கள் ஆலோசனைக்கு நன்றி,

    நீங்கள் களத்தில் வாழும் பல்லாய்ரக்கணக்கான முஸ்லிம் தமிழ் உறவுகளை கேட்டுப்பாருங்கள்.  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் விரும்பும் கோரும் எனது ஆய்வுப் பணிகளிலும் தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்கான  பணிகளிலும் நான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. இலங்கை அரசு தமிழரையும் முஸ்லிம்களையும் சேர்த்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க நான் முயல்வதாக குற்றம் சாட்டுகிறது. சிங்களப் பத்திரிகைகளும் அதனையே சொல்கின்றன. நீங்கள் இப்படி சொல்கிறீங்க. 

     

    அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை

     

    //அர்ஜுணன், ஒருதுறையில் இருக்கும் அதிஸ்ட்டமான வாழ்வு எனக்கு வாய்க்கவில்லை.

    பலதுறையில் இருப்பதாலான என் ஞாபக மறதி எல்லோருக்கும் தெரியும்.//

     

  2. செயபாலன் , நிழலியும் துளசியும் மட்டும் அல்ல உங்களை நன்கு  அறிந்தவர்கள், பொது வெளியில் எழுதுபவர்கள் எல்லோருடமும் உங்களைப் பற்றிய பார்வை இவ்வாறே உள்ளது.

     

    உங்களை பல்துறை விற்பன்னர் என்று நீங்களே நினைத்துக் கொள்வது ஒரு உளவியற் பிரச்சைனையாகவே நான் கருதுகிறேன். ஆகவே உங்களின் தனிப்பட்ட பிரச்சினையை, தமிழர்களைத் துன்பப்படுத்தும் செயற்பாடாக மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். துன்பப்பட்ட துன்பப் படும் மக்களுக்கு நீங்கள் செய்யக் கூடிய பேருபகாராம், கவிதை எழுதுவது படத்தில் நடிப்பது என்னும் துறைகளில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.இது உங்களுக்கும் நல்லது தமிழ் மக்களுக்கும் நல்லது. எனது யோசனையை சீர்தூக்கி நடப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

    நன்றி.

    • Like 1
  3. நிழலி! இன்றைக்கு கவிஞர் நாடுகடத்தப்பட்டிருக்கிறார். அவர் என்றைக்காவது ஒருநாள் மீண்டும் தாயகம் செல்லுவதை நோக்கமாக கொண்டிருப்பார். இதற்கு சிலரை நோகடிக்காமல் இருப்பது அவசியம்தான். வேறு வழியில்லை.

    கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டு திரும்பி வந்தவர்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போன்று இருக்கின்ற காலத்தில், கவிஞரால் அது பற்றி பேசவாவது முடிகிறது.

    எங்கே ஆக்ரோசத்தை வெளிப்படுத்த வேண்டும், எங்கே நிதானத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.

     

    சபேசன் அப்படியாயின் உங்களின் அண்மைய கருத்துக்களும் இவ்வாறான உள் நோக்கம் கொண்டவையோ? உங்களின் தனிப்பட்ட நலங்களுக்காக உண்மைகளைப் பொய்களாக எழுதும் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள்  எமது போராட்ட அரசியலுக்குத்  தேவையா என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது ?

  4. தாம் அதி புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டு மாறி மாறி முதுகு சொரியும் கூட்டத்தின் வண்டவாளாம் தண்டவாளம்  ஏறிக் கன நாளாச்சு என்று தெரியாமால் பூச்சுற்றும் நடிகர்கள் உண்மையில் அதி மடையர்கள்.    

    • Like 1
  5. சிறிலங்காவில் சுதந்திரம் இருக்கு என்று எழுதிய சோபசக்தி முதல் வரை கருணாகரன் வரை வரை இதற்குப் பதில் சொல்ல வேண்டும். மேலும் இவர் அனந்தி உடன் எடுத்துக் கொண்ட படம் முகநூலெங்கும் உலாவியது. முகநூலைப் பார்த்தாலே புலனாய்வாளர்களுக்கு போதிய தகவல் கிடைத்திருக்கும். சிறிலங்காவின் சுதந்திரம் என்ன என்பதை இனிக் கருணாகரன் வந்து சொல்ல வேணும். சோபசக்தியும் இதற்க்கு ஒரு பொழிப்புரை எழுதுவார்.

  6. துளசி,

    நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும்.

    இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்கியம் பிரதிபலிக்கிறது என்றால் , இக் கவிதையில் சொல்லப்பட்டது எதுவுமே ஆபாசம் அல்ல.

    இதில் எது ஆபாசம் என்பதை யார் தீர்மானிக்க முடியும்? முன்னர் நான் டிசே எழுதிய ஒரு கவிதையை இணைத்த போது நிகழந்த்த வாதப் பிரதிவாதங்கள் நாபகம் வருகிறது.அந்தக் கவிதையும் பஸ்ஸில் பெண்களின் மார்பகங்களைப் பார்ப்பவர்கள் பற்றி எழுதப்பட்டதாக இருந்தது.

    ஆனால் அதில் காரசாரமாக எழுதியவர்கள் தற்போது , தங்கள் கருத்துக்களில் முதிர்ச்சி பெற்றுள்ளனர்.அது போல் நீங்களும் முதிர்ச்சி பெறுவீர்கள். கருத்துக் களம் அதற்காகத் தானே இருக்கிறது.பலர் வருவார்கள்,போவார்கள்.அவற்றில் எமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    • Like 3
  7. இதுகாறும் சைவ சாத்திர வரிசையிலே நுழைவதற்கு இடம் பெறாத பஞ்சம நிலையிலே நிற்கும் சித்தர் நூல் அவ்வியாசத்தில் அக்கிரஸ்தானம் பெற்றுவிட்டது.

    "சைவ சமயத்தைத் தாபித்து உபகரித்த சைவ சமய குரவர்கள் கற்பித்த வழியைக் கைப்பிடித்து ஒழுகும் சைவ மக்களும் சித்தர் நூலை நோக்கவும் இசைவாரா? ஒருகாலும் இசையார்."

    மேற்கூட்டிய இரு கூற்றுக்களும் முறையே வி.சிதம்பர ராமலிங்கம் பிள்ளை, திருநெல்வேலி மா. சாம்பசிவ பிள்ளை ஆகியோரால் திருநான்மறை விளக்க ஆராய்ச்சி என்னும் நூலிற் கூறப்பட்டவை.

    தமிழரிடையே நிலவிய சாதியமைப்பின்படி, பஞ்சமர் நால் வருணத்துக்குப் புறம்பான வருணத்தார்; சித்தர்களைப் பஞ்சம நிலையில் உள்ளோர் என்று கூறுவது உற்று நோக்கத்தக்கது. சுருங்கக் கூறின், வைதிக சமய எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்துக் கூறப்படுகிறது. வைதிக சமயிகளின் கோபாவேசத்திற்குக் காரணம் எமக்குத் தெரிந்ததே. இடைக்காலச் சமுதாயம் வேத வாழ்க்கையை மூலாதாரமாய்க் கொண்டு வருணாசிரம தருமத்தின் அடிப்படையிற் கட்டியெழுப்பப்பட்டிருந்தது. வேத வழக்கொடு மாறுபடும் எதுவும் ஆக்குரோசத்துடன்கண்டிக்கப்ப

  8. தமிழ் நாட்டிலே பதிணென் சித்தரைப் பற்றிய வழக்கும் செவிவழிச் செய்திகளும் உள்ளன. சில பொதுப் பண்புகளையே குறிக்கலாம். தமிழ் நாட்டிலே சித்தர்கள் இயற்றினவாக, இரசவாதம், வைத்தியம், மாந்திரிகம், சாமுத்திரிகாலட்சணம், இரேகை சாத்திரம், வான சாத்திரம் முதலிய துறைகளைச் சார்ந்த நூல்கள் காணப்படுகின்றன. இவற்றிற் பல இன்னும் ஓலைச்சுவடிகளாகவே கிடக்கின்றன.

    வேதாந்தச் சார்புள்ள இறைத் தத்துவங்கள் யாவும், "காயமே பொய்; உடலை விடுத்து உயிரின் ஈடேற்றத்திற்காக உழை' என்றே மாயாவாதம் பேசின. இப்போக்கை வன்மையாகக் கண்டித்து மறுத்தனர் சித்தர். தமிழிலே திருமூலர் முதன் முதலாக இவ்வெதிர்க் குரலுக்கு உருவங்கொடுத்தார் எனலாம். திருமந்திரத்திலே பலவிடங்களில் உடம்பின் இன்றியமையாமையை வற்புறுத்துகின்றார் திருமூலர்.

    ".................உடம்பொடு

    செத்திட்டு இருப்பர் சிவயோகிகள்

    "உடம்பார் அழியில் உயிரார் அழிவர்."

    "உறுதுணையாவது உயிரும் உடம்பும்."

    "உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்."

    திருமூலரின் இக்கருத்துக்கள் மாயாவாதத்திற்கு நேர் முரணான மெய்ம்மை வாதத்தை அடி நிலையாகக் கொண்டவை. திருமூலர் ஒரு சித்தர். திருமந்திரத்தை 'தந்திரம்' என்றும் கூறுவதுண்டு. தந்திரம் என்பது இந்தியாவிலே பண்டுதொட்டு வளர்ந்து வந்த ஒரு வழிபாட்டு முறை. இவ்வுடலின் துணைக்கொண்டே இவ்வுடலின் மூலமாகவே-பேரின்பத்தை அடையும் உண்மையைக் காட்டுவன யோகம், தந்திரம் முதலியன. கிரியைகள், சடங்குகள், மந்திர உச்சாடனங்கள், உடற்பயிற்சி, உடல்வலிமை முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டன. யோகமும், தந்திரமும், மனித உடலுக்கு உண்மை- மெய் என்னும் பெயரை மெய்யாகக் கூறியவர்கள் தந்திரவாதிகள். அந்தளவிற்கு அவர்கள் மெய்மை வாதிகள்.

    சித்தர்களின் இப்பண்புகளைப் பற்றி, சாமி சிதம்பரனார் கூறுவது வருமாறு:

    "சித்தர் பாடல்களை ஆழ்ந்து படித்தால், அவர்கள் வைதிக மதத்திற்கு எதிரானவர்களாகவே காணப்படுகின்றனர். வைதிக மதக் கொள்கைகள் பலவற்றைத் தாக்குகின்றனர். ஆனால் அவர்கள் தங்களை நாத்திகர் என்றோ, உலகாயதர்கள் என்றோ வௌிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை. வௌிப்படையாகப் பாடவில்லை. கடவுள் அன்பர்கள் போலவே காட்சியளிக்கின்றனர். ஆயினும் சித்தர்களின் பாடல்களிலே உலகாயதத்தை - நாத்திகத்தைப் பற்றிய கண்டனங்களும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விஞ்ஞானிகளும், ஆன்மா தனித்த ஒரு பொருள் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. ஆன்மா என ஒன்று தனியாக மதவாதிகள் சொல்லுகின்ற படி அழியாத தனிப்பொருளாக இல்லையென்பதே பல விஞ்ஞானிகள் கருத்து. சித்தர்களின் கொள்கை இதற்கு ஒத்திருப்பதைக் காண்கிறோம்."

    சித்தர்களைப் பற்றிக் காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ந்தவர்கள் யாவரும் ஏகோபித்த குரலிற் கூறுவது இதுதான். சித்தர்களைப் பற்றியும் அவர்களது இரசாவாதத்தைப் பற்றியும் எழுதிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையிலே, கும்பகோணம் கே.சி. வீரராகவ ஐயர் இவ்வாறு கூறியுள்ளார்:

    "பெரும்பாலான சித்தர்கள் சங்கரரின் ஒருமைவாதத் தத்துவத்தையும் இந்துக்களின் விக்கிரக வழிபாட்டையும் எதிர்த்து மறுத்தவராகவே காணப்படுகின்றனர்."

    இவ்வாறு சித்தர்கள் வைதிக சமயத்தை எதிர்த்து நிற்கவும், வைதிக நெறியினரும் அவர்களைத் தள்ளி வைத்தனர். மிகச் சமீபகாலம் வரை சைவ சித்தாந்திகளும் சித்தர் நூல்களை விலக்கி வைத்திருந்தனர். தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய கா.சு. பிள்ளை முதலிய சிலரே சித்தர் பாடல்களும் கற்கத் தகுந்தன எனக் கூறுத் தொடங்கினர். மரபு வழி வரும் கருத்துக்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் இரு மேற்கோள்கள் அமையும்.

  9. விஞ்ஞானம் என்பது சடப்பொருள்களைப் பரிசோதித்து ஆராய்வதின் மூலம் அவற்றிற்கிடையே சில உறவு முறைகளைக் கண்டறிவதாகும். உறவுகளைக் காண்பதற்குச் சில கோட்பாடுகள் அவசியமாகின்றன. நிரூபிக்கப்பட்ட கோட்பாடுகள் உண்மைகளாகின்றன. அவ்வுண்மைகளைக் கோட்பாடுகளாகக் கொண்டு மேலும் புதிய பரிசீலனைகளைச் செய்யவும் அவற்றினை நிரூபிக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இத்தகைய ஒரு தொடர் நிலையாகவே விஞ்ஞான அறிவு முன்னேறுகிறது. எனவே சடப்பொருள்களை ஏற்றுக்கொள்வதும், அவற்றினை ஆய்வதும் விஞ்ஞான நோக்கின் முதற்படியாகும். ஆனால், இந்தியாவிலே தோன்றி வளர்ந்த பெரும்பாலான தத்துவ தரிசனங்கள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. பொருட்களும் பிரபஞ்சமும் அநித்தியமானவை என்றும், இறைவன் அல்லது பிரமமே முழுமுதற் பொருள் என்றும், அது சடப்பொருள்களுக்கு அப்பாற்பட்டது என்றும் அத்தத்துவங்கள் கூறும். இவ்வாதமானது கருத்துக்களின் பிரதிபலிப்பே பொருள்கள் என்னும் கருத்து முதல் வாதமாகும். இவ்வாதம் விஞ்ஞான நோக்கிற்கும் அதன் அபிவிருத்திக்கும் உகந்தது அன்று என்பது வௌிப்படை. சுருங்கக் கூறின், உலகிலே கருத்து முதல் வாதத்திற்கும் பொருள் முதல் வாதத்திற்குமிடையே நிலவிவரும் முரண்பாட்டினை இங்குத் தௌிவாகக் காணலாம். காண்பனவற்றைக் கணக்கெடுத்துப் பஞ்சபூதங்களின் நுட்பத்தை நுணுகி அறியவைப்பது விஞ்ஞானம் எனில், 'காண்பனவெல்லாம் பொய்: காணாதது ஒன்று உண்டு; அதனை மனத்தின் துணைகொண்டு தேடு' எனக் கூறுவது இலட்சியவாதத் தத்துவம். வேத, உபநிடத காலத்திலேயே இப்போராட்டந் தொடங்கிவிட்டது. இன்றுவரை பல சந்தர்ப்பங்களில் பொருள் முதல் வாதமும் விஞ்ஞான நோக்கும் ஆங்காங்குத் தலை தூக்கின. சான்றோர் இலக்கியங்களிலே இதனைக் காணலாம். நல்வினை, பிறவாநிலை முதுலியவற்றிலே நம்பிக்கை இல்லாதவரை மனத்திற் கொண்டு கோப்பெருஞ்சோழன் ஒரு பாடலைப் பாடியுள்ளான். இது புறநானூற்றிற் காணப்படும். சாங்கியம், சமணம், பௌத்தம், யோகம் முதலிய தத்துவ சமயக் கருத்துக்கள் தமிழ்நாட்டில் பரவிய காலத்தில் விஞ்ஞானச் சாயல் பொருந்திய பல சிந்தனைகள் இலக்கிய நூல்களிலும் தத்துவங்களிலும் எதிரொலிக்கலாயின. எனினும், வைதிக சமயக் கருத்துக்களும் சநாதன தருமமுமே பெருவழக்காக நிலவின. இவற்றின் மத்தியிலே தம்மாலியன்றளவு உணர்ச்சி பூர்வமாகவேனும் விஞ்ஞானப் பண்பினை வளர்க்க முனைந்தவர் சிலரிருந்தனர். அவரைச் சித்தர் என்றழைக்கலாயினர். சித்தர்கள் என்றால் 'அறிவர்' என்பது பொருள்; விளங்கிய அறிவுரையடைவர் எனலாம்.

  10. யூகோசிலாவிய வாய்மொழிப் பாடல்களுக்கிடையே ஆராய்ச்சி செய்துள்ள பேராசிரியர் லோட் இது குறித்துப் பின் வருமாறு கூறியுள்ளார். "அக்கவிஞரைப் பார்த்து சொல் என்பதற்குப் பொருள் யாது என்றால், தெரியாது, என்பர்; அல்லது ஒரு தனிச்சொல்லையோ, சொற்றொடர்களையோ உதாரணங் காட்டுவர். அவை கூற்று எனப்படும். அதாவது கவிக் கூறுகளும், முழுக்கவிதையும் 'கிளவி' அல்லது 'கூற்று' என்றே வழங்கப்படும்.

    வாய்மொழிப் புலவரது கலையை உடனிருந்து அவதானித்து ஆராய்ந்த பேராசிரியரின் கண்டுபிடிப்பு, தொல்காப்பியர் கருத்தை ஒத்ததாகவே உள்ளது. சான்றோர் செய்யுட்கள் வாய்மொழி இலக்கியங்கள் என்பது இதனால் உறுதிப்படுகின்றதன்றோ?

    பன்மொழிகளிலுள்ள வீரயுகப் பாடல்களை நன்கு ஆராய்ந்துள்ள பேராசிரியர் சி.எம்.பௌரா அவற்றிற்குப் பொதுவாகப் பின்வரும் எட்டு அம்சங்கள் இருப்பதைக் காட்டியுள்ளார்.

    1. ஒரு நிகழ்ச்சியை அல்லது கதையை எடுத்துக் கூறுவதாக இருத்தல்.

    2. பெரும்பாலும் வீரயுகத்திலே தோன்றியனவாக இருத்தல்.

    3. சிறிய விஷயங்களையும் நுணுக்கமாக வருணிப்பதாயிருத்தல்; உதாரணமாக வருவோர் போவோரை உபசரிக்கும்முறை ஆடை, அணிகலன்கள், உண்டாட்டு, புரவி, யானை ஆகியன இயற்கையோடமைய வருணிக்கப்படுதல், சுருங்கக் கூறின் பருப்பொருள்கள் நன்கு சித்தரிக்கப்படுதல்.

    4. கவிஞன் தன் கூற்றாகக் கவிதை பாடியிருப்பினும் பெரும்பகுதிப்பாடல்கள் பாத்திரங்களின் கூற்றாக இருத்தல்.

    5. தொடர்கள், கருத்துக்கள் ஒரே தன்மையனவாக மீண்டும் மீண்டும் வருதல். (அவை ஒரேவழி மாறியும் விரவியும் வரும்)

    6. பாடல்கள் அடியுடன் அடிசேரப் பொருள் நிறை பெறுமட்டும் நிமிர்ந்து செல்லுதல்.

    7. பாடலின் தலைமகன் வீரபுருடன், புகழெனின் உயிருங் கொடுக்கம் அவனது ஆண்மையும் புகழுமே பாடலின் விழுமிய பொருளாயிருத்தல்.

    8. உண்மையை உரைப்பதாகவே அமைந்திருத்தல்; செவிவழியாகவோ அன்றிக் கண்ணாற் கண்ட புலக்காட்சியினாலோ நிகழ்ந்தவற்றைக் கூறுவதாகவே அமைந்துகிடப்பன. அதனாலே பிற்காலக் காவியங்களிலும், முற்காலப் பாடல்கள் வரலாற்றுச் செய்திகளை அதிகம் உடையனவாக உள்ளன.

    திரு. பௌரா கூறியுள்ள எட்டு அம்சங்களும் சான்றார் இலக்கியத்திற் சரிவரப் பொருந்தியிருக்கக் காணலாம். மேற்கூறிய அம்சங்கள் எட்டினையும் இருபெரும் பிரிவிற்குள் அடக்கிக் கொள்ளுதல் கூடும்.

    (1) ஒன்று, பாடல்களின் மொழி நடை, யாப்பு, காலம் இலக்கிய நெறி முதலியன சம்பந்தமானது.

    (2) மற்றொன்று, பாட்டுடைத் தலைவர்கள், அவர்தம் வாழ்வியல், குறிக்கோள் உடைமை முதலியன சம்பந்தமானது. சுருங்கக் கூறின் வீரப்பாடல்களின் உருவமும் உள்ளடக்கமும் ஒப்புமையுடையன வாயுள்ளன. கிரேக்க மொழியுட்படப் பிறமொழிகள் பலவற்றில் உள்ள வீரயுகப் பாடல்கள் சில தலையாய நாயகர்களது வீரத்தையும் புகழையும் விதந்து கூறுவனவாயிருப்பதைக் காண்கிறோம். அதுபோலத் தமிழ் வீரப்பாடல்களிலும் கரிகாலன், நெருஞ்செழியன், நெடுஞ்சேரலாதன் முதலிய சிலரே முழுமையான பாத்திரங்களாக வார்க்கப்பட்டுள்ளமை நோக்கத் தக்கது. உதாரணமாக, தமிழ் வீரப் பாடல்களிலும் இடம்பெறும் தலைமக்கள், பெரியோர் ஒழுக்கத்துக்கு மாறானவற்றிற்கு நாணுபவராய், பழியஞ்சுவராய்த் தமக்கென ஓர் அறக் கோட்பாடுடையவராய்க் காணப்படுகின்றனர். நாண், பழி, அறன் ஆகிய சொற்கள் ஈண்டுக் கவனிக்கத்தக்கன. கிரேக்க காவியங்களிற் பயிலும் Aidos Nemesis, Dike ஆகிய சொற்கள் முற்கூறிய தமிழ்ச் சொற்களுக்கு நேரான பொருளுடையன. அது போலவே சான்றோர் செய்யுட்களில் பால்வரை தெய்வம் சிறப்பானதோர் இடத்தைப் பெற்றுள்ளது. கிரேக்கச் சொல்லான Moira எல்லா வகையிலும் இதனை ஒத்துள்ளது. இவற்றை எல்லாம் உற்று நோக்கும் பொழுது உலகின் பல பகுதிகளிலே தோன்றிய வீரயுகப் பாடல்களுக்கு நிகராகத் தமிழிலக்கியத்திற் சிறப்புப் பொருந்திய சான்றோர் செய்யுட்கள் அமைந்துள்ளமை உறுதிப்படும். இறுதியாகக் குறிப்பிட்ட சான்றோர் என்னும் சொல்லையே எடுத்து நோக்கின், அது வீரர், உயர்ந்தோர், சிறந்தவர் என்று பொருள் படுவதைக் காணலாம். பண்டைக் கிரேக்கப் பாடல்களிலும் வழங்கும் Agathos என்ற சொல் இதற்கு நேர்ப் பதமாகும்.

    பிற மொழிகளிலுள்ள வீரயுகப் பாடல்களைப் படிப்பதாலும், அவை பற்றிய ஆராய்ச்சிகளைத் தெரிந்து கொள்வதாலும் ஆரம்ப நிலையிலிருக்கும் தமிழ் வீர யுகம் பற்றிய ஆராய்ச்சி பெரிதும் பயனடையும், அதே சமயத்திற் பிற மொழியாராய்ச்சியாளர்களும் தமிழிலக்கியச் சான்றுகளிற் பயன்பெறுவர் என்று கூறவதில் தவறிருக்காது என்றே எண்ணுகிறேன். ஏனெனில், வீரயுகப் பாடல்களின் ஆராய்ச்சியானது தொடக்கத்திலிருந்தே ஒப்பிலக்கிய ஆய்வாகவே இருந்து வந்துள்ளது.

  11. கிரேக்க ஆதி கவியாம் ஹோமர் தமது இதிகாசத்தை எழுதினார் என்ற நம்பிக்கையே பல காலமாகக் கிரேக்க இலக்கிய அறிஞரிடையே நிலவி வந்தது. அவ்வாறுதான் அது இருக்க வேண்டும் என அவர்கள் விரும்பினார். உயர் தனிக் காவியமாகிய இலியாது, ஒதீசி முதலியன நனிமிகு நாகரிகம் செழித்து வளர்ந்த காலப் பகுதியில் மகாகவியால் எழுதப் பெற்றிருக்க வேண்டும் எனக் கொண்டனர். ஆனால் கிரேக்க உயர் தனிக் காவியங்களை கேவலம் யூகோசிலாவிய வாய்மொழிப் பாடல்களுடன் தற்செயலாக ஒப்பு நோக்கிய ஓர் அமெரிக்க ஆராய்ச்சியாளர் அவ்விரு தொகுதிப் பாடல்களும் பெரிதும் ஒத்திருக்கக்கண்டார். வாய் மொழிப் பாடல்களை அவர் காதாரக் கேட்டு அவற்றைப் பாடிய புலவர்களது உத்திகளைக் காட்சியளவையால் அறிந்திருந்தார். உறுதியாகத் தெரிந்த வாய் மொழி இலக்கியப்பண்புகள் பலவும் எழுதியனவாக நம்பப்பட்டு வந்த செம்மைசான்ற காவியங்களில் காணப்படும் போது என்ன செய்வது? கிரேக்க காவியங்களும் வாய்மொழிப் பாடல்களாக வழங்கி வந்து பிற்காலத்திலே எழுத்தில் பொறிக்கப்பட்டிருத்தல் கூடும் என்ற எண்ணத்தைக் கருதுகோளாகக் கொண்டு, இரு தொகுதி நூல்களையும் மேலும் நுணுக்கமாக ஆராய்ந்தார். ஐயத்துக்கிடமின்றிக் கிரேக்க காவியங்கள் வாய் மொழிப் பாடல்களே என்று தெரிய வந்தது. வரவும் அதைப் புதுக் கொள்கையாக வகுத்தார்.

    நம்பிக்கையில் வாழ்ந்த கிரேக்க இலக்கிய உலகம் நம்ப மறுத்தது. ஆனால் புதிய கொள்கையை வெகுகாலம் எதிர்க்க முடியவில்லை. புதுக் கொள்கையைக் கூறிய மில்மன் பரி விஞ்ஞான முறையை-ஒப்பியல் ஆய்வு முறையைக் கையாண்டமையாலேயே அவரது விளக்கம் உண்மையாயமைந்தது. முதலிலே ஏளனஞ் செய்தவர்கள் பின்னர் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பரிக்குப் பின் வந்தோர் அவரை விஞ்ஞானியாகவே போற்றுகின்றனர். வேட்ஜெரி என்பார் "பரி ஹோமர் ஆராய்ச்சிக்கு வாய்ந்த டார்வின்" என்றார். காப்பென்றர் என்பர், "அவரது கண்டுபிடிப்பின் மெய்ம்மை இயுகிளிட் நிறுவிய மெய்ப்பீடுகளின் உண்மை போன்றது" என்றார். இப்பாராட்டுகளுக்கு விளக்கம் வேண்டாம்.

  12. தமிழ் வீர யுகத்திலே அரசருக்கும் புலவருக்கும் அத்தியந்த உறவு நிலவியது. புலவரைப் போற்றி வாழ்ந்தனர் மன்னர். அவர்களுக்கு வரையாது வழங்கினர். பாணர், விறலியர், புலவர் முதலியோரைப் புரத்தலைப் பாண்டகன் எனக் கொண்டனர். இச் செய்திகள் சான்றோர் செய்யுட்களிலிருந்து பெறப்படுவன. இவற்றைக் கண்ணுற்ற தற்கால எழுத்தாளர் சிலர் புலவரைப் பேணுதலும் கொடையும் கற்றோரைப் போற்றுதலும் பழந்தமிழ் மன்னரது தனிச் சிறப்பியல்புகள் எனக் கூறவராயினர். அம்மட்டில் நில்லாது புலவரைப்போற்றி வாழ்ந்த பண்பு பழந்தமிழ் மன்னரிடத்து மாத்திரம் காணப்படுவது என்றும் தேற்றமாகக் கூறினர். இத்தகைய எண்ணமும் கூற்றும் இனப்பற்றிலிருந்தும் மொழிப்பற்றிலிருந்தும் எழுவன. ஆனால் ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சி வழி நின்று நோக்கும்போது தமிழ் வேந்தர்க்கே உரிய இம்மரபு பிற சமுதாயங்களிலும் காணப்படும்.

    பண்டைத் தமிழ் மன்னர்கள் புலவரைப் போற்றியதைப் போலவே பழங்கால வெல்ஷ், ஐரிஷ், ஜெர்மானிய, கிரேக்க அரசரும் பிறரும் புலவரைப் பெருமதிப்புடன் நடாத்தினர். எனவே தமிழ் வேந்தரது அருங்குணத்தைப் புகழ்ந்து வீண் பெருமை கொள்ளுவதற்கப் பதிலாகப் புராதன சமுதாயங்களிலே மண்ணாள் வேந்தரும் பிறரும் புலவரைச் சிறப்பித்தமைக்குக் காரணம் காண முற்படுதல் விவேகமான செயலாகும். உலக இலக்கியங்கள் பலவற்றை நுணுகியாராய்ந்த திருமதி. நோரா சாட்விக் கூறுகிறார்: எழுத்துக்கலைப் பயிற்சியற்றுப் பெரும்பாலும் வாய் மொழி இலக்கியத்தையே பயன்படுத்தும் மக்கள் கவிதையையும் சொல் வன்மையையும் மிக உயர்வாக மதித்தல் இயல்பே. அது மட்டுமல்லாது எமது காலத்தில் வழங்கும் வெகுஜன சாதனங்களுக்குப் பதிலாக அச்சமுதாயங்களிற் புலவரே விளங்கினர். இக்கூற்றைக் கருதுகோளாகக் கொண்டு எமது சான்றோர் செய்யுட்களை ஆராய்ந்தால் உண்மையாயிருக்கக் காண்போம். புராதன சமுதாயங்களிலே மனிதனது அறிவு முழுவதும் செய்யுள் வடிவிலேயே இருந்தது. மந்திரம், மாயம், வானநூல், வரலாறு, புராணம், அறிவியல், இயற்கையறிவு முதலிய யாவும் பன்னெடுங்காலமாகச் செய்யுள் வடிவிலேயே வழங்கி வந்தன. புலம் என்ற சொல்லின் பொருளைக் கவனித்தால் இச்செய்தி புலனாகும். புலம் என்றால் இந்திரியம், இந்திரிய உணர்வு, அறிவு, கூர்மதி, துப்பு, நூல், வேதம், இடம் என்றெல்லாம் பொருள்படும். புலமை என்பதற்குக் கல்வி, மெய்ஞ்ஞானம் செய்யுளியற்றும் ஆற்றல் என்ற பொருளுண்டு. புலமையோர் என்றால் கவி, கமகன், வாதி, வாக்கி என்ற நால்வகைக் கல்வியாளரும், கற்றோரும், நிபுணரும் கருதப்படுவர். புலவரை அறிவர் என்றும் அழைத்தனர். அது மட்டுமல்லாது கிரேக்கர் அபோலோவும், தமிழர் முருகனுமே புலமைக் கடவுளர் என நம்பினர். இது காரணம் பற்றியே திருமுருகாற்றுப்படையில், "புரையநர் இல்லாப் புலமையோய்", "நன்மொழிப் புலவரேறே", "அறிந்தோர் சொன் மலை", "நூலறி புலவ" என்றெல்லாம் பெரும் பெயர் முருகன் துதிக்கப்படுகின்றான். புலமைத் தெய்வத்திடம் புலவர் ஆற்றுப் படுத்தப்படுதல் இயல்பே. இவ்வாறு முருகனது பக்தர்களாகவும் வாய்மொழி வல்லவராகவும் கட்டுரையாளராகவும் விளங்கிய புலவரைச் சர்வக்ஞராகக் கருதிப் புராதன சமுதாயம் போற்றியதில் வியப்பெதுவுமில்லை. ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சி இவ்விளக்கம் பிறக்க வழி செய்கிறது. அதை விடுத்துத் தமிழபிமானத்தால் மன்னரின் சிறப்பியல்பு பேசுவது மடமை மட்டு மல்லாது உண்மைக்குப் புறம்பானதுமாகும். பற்று கண்ணை மறைக்காவிடின் பழமைக்கும் புது விளக்கம் காணலாம்.

  13. இவ்வாறு இலக்கிய ஆய்வில் வந்து புகுந்த புது முறைகளில் ஒன்றே ஒப்பியல் ஆய்வு. இலக்கியத்துக்கு முன்னதாக ஒப்பியல் நோக்கு மொழியாராய்ச்சியின் சிறப்புப் பண்பாக இருந்தது. அதற்கும் முன்னதாக அறிவியற்றுறைகளின் தனிச்சிறப்புப் பண்பாகவிருந்தது. ஒப்புநோக்கு மொழியாராய்ச்சியை நெறிப்படுத்திய பின்னரே மொழி ஆய்வு, மொழியியல் ஆயிற்று. மொழியியல் அறிவியலின் (Science) அந்தஸ்தைப் பெற்றது. மொழியியலுக்குப் புதுத்தகைமை அளிக்குமுன் மானிடவியல், சமூகவியல், பொருளியல், புவியியல் முதலியவற்றிற்கு அறிவியல் அந்தஸ்தைக் கொடுத்தது ஒப்பியல் ஆய்வேயாகும். சுருங்கக் கூறின் அது சென்றவிடமெல்லாம் சிறப்புச் செய்துள்ளது என்று கூறலாம். ஒரு வகையிற் பார்த்தால் எமது மொழியில் மட்டுமன்றி வேறு பல மொழிகளிலும் ஒப்பியல் ஆய்வானது இலக்கியத் துறைக்குக் காலங் கடந்தே வந்து சேர்ந்திருக்கிறது. ஒப்பியற் சட்டம், ஒப்பியல் மதம், ஒப்பியற் கல்வி, ஒப்பியல் அரசியல் என்பன ஓரளவு வளர்ச்சிபெற்றவையாகக் காணப்பட ஒப்பியல் இலக்கியம் கடைக் குட்டியாக இருக்கிறது எனலாம். ஆகவே அதனைக் கவனமாக வளர்க்க வேண்டியுள்ளது.

    ஆனால் இவ்வாய்வு தனியொரு மனிதரின் வல்லமையாகவோ, சிலருக்குத் திருப்தி தரும் முயற்சியாகவோ, இராமல் யாவரும் ஏற்றுத் தாமும் மேற்கொள்ளக்கூடிய ஆராய்ச்சியாக இருக்க வேண்டுமாயின், ஆராய்ச்சி முறை மயக்கமின்றியும் அறிவியல் சார்ந்ததாயும் இருத்தல் அவசியம். உதாரணமாக வடமொழிக்கண் வழங்கும் திராவிடச் சொற்களை நிருணயிக்க முனைந்த பறோ சில நடைமுறைகளை மேற்கொண்டார் வடமொழிக்கண் பயிலும் ஒரு சொல், திராவிடச் சொல்லாயிருக்கலாம் என்னும் ஐயமேற்பட்டதும் முதலில் அச்சொல் திராவிட மொழிக் குடும்பத்திலே எவ்வாறு பரந்து காணப்படுகின்றது என்பதனை நோக்கினார். வட திராவிட மொழிகளிலும் அச்சொல் வழக்காறுடையதாயின் அது திராவிடச் சொல்லாக இருத்தல் கூடுமென்று ஓரளவு துணிந்தார். அதன் பின்னர் அச்சொல் இந்தியாவிலுள்ள ஆரிய மொழிகளில் எத்தகைய வழக்காறுடையது என்பதனை நோக்கினார். அதன் பின்னர் பிற இந்தோ-ஆரிய மொழிகளில் எவ்வாறு வழங்குகிறது என்பதை ஆராய்ந்தார். ஆரிய மொழிகளிலும் இந்தியாவிற்கு வௌியேயுள்ள இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலும் அதன் வரலாறு திருப்திகரமாக இல்லா விட்டால் அது திராவிடத்திலிருந்தோ திராவிட மொழியொன்றிலிருந்தோ வட மொழிக்குச் சென்றிருத்தல் வேண்டும் எனத் துணிந்தார். அதன் பின்னரும் வட மொழி நூல்களிலே எக்காலத்திலிருந்து அச் சொல் பயின்று வருகிறது என்பதனை நிச்சயப்படுத்திக் கொண்டார். இவையாவற்றின் இறுதியாகவே அச் சொல் ஏறத்தாழ இன்ன காலத்திலே தமிழிலிருந்தோ அல்லது மூலத் திராவிடத்திலிருந்தோ வட மொழிக்குச் சென்றது என ஒருவாறு துணிந்து கூறினார்.

    மேற்கூறிய ஆராய்ச்சியைக் கவனித்தால் பேராசிரியர் பறோவுக்கு "வடமொழி எனக் கருதப்படும் சில சொற்கள் தமிழ்ச் சொற்களே என நிறுவிக் காட்டும் வல்லமை" அன்றி ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் புடை பெயர்வதைக் கண்டறியும் முறை கைவரப் பெற்றமை புலனாகும். இதை இன்னுஞ் சிறிது விளக்குவோம். தனியொரு மனிதனுடைய தனிச் சிறப்பான ஆற்றலை மாத்திரம் இவ்வாராய்ச்சிக்கு அளவு கோலாகக் கொண்டால் அது பொதுவான நியதிகளுக்குக் கட்டுப்படாத தொன்றாகி விடுகிறது. அவ்வாறன்றிச் சில விதிகளினடிப்படையில் நடை முறைகள் அனுட்டிக்கப் பட்டால் அவ்விதிகளைப் பின்பற்றும் மாணவன் எவனும் அவ்வாராய்ச்சியைச் சிறிய அளவிலேனும் செய்தல் முடியும். முடிந்தால் அது பொதுவான பரிசீலனையாக அமைகிறது. விஞ்ஞானப் பரிசோதனைகளை எத்தனை பேரும் எத்தனை தடவையும் செய்யலாம்; அவ்வடிப்படையிலேயே படிப்படியாக அறிவு விருத்தியடைகின்றது.

    மொழியாராய்ச்சி பற்றிய இவ்வுதாரணம் அறிவியல் முறை எவ்வாறு செயற்படுகின்றது என்பதை ஓரளவு விளக்குகிறது என எண்ணுகிறேன். இலக்கியத்தில் இம்முறை பெருமளவு செயற்படுவது ஒப்பியல் ஆய்வியலாகும் எனினும் அதை விவரிக்குமுன் மேற்கூறிய விஞ்ஞான முறையாது எனச் சுருக்கமாகக் கூற வேண்டும்.

    ஒரு பொருளை அல்லது நிகழ்வை விஞ்ஞானி கூர்ந்து நோக்கிக் குறித்துக் கொள்வனவற்றைத் தரவுகள் என்கிறோம். ஒரு பொருளைப் பற்றிய தரவுகளுடன் பிறிதொருதொகுதித் தரவுகளை ஒப்புநோக்கும் பொழுது இயற்கையான ஒருமைப்பாடுகள் சிலவற்றையும் பொதுக் குணங்களையும் காண்கிறோம். அதாவது பல முறை அவதானித்த தரவுகளின்றும் சில பொது முடிவுகள் அன்றி விதிகள் வகுக்கப்படுகின்றன. சில சமயங்களில் தரவுகளைப் பெற முன்னரே ஏதாவதொரு பொதுமுடிவை அல்லது விதியை ஊகமாகக் கொள்கிறோம். அதனையே கருதுகோள் என்பர். பரிசோதனையின்போது கிடைக்கும் முடிவு முதற்கொண்ட கருதுகோள் சரியா தவறா என்பதைக் காட்டும். ஆயினும் கருதுகோள், ஆய்விற்கு முதற்றேவையாக அமையும். விஞ்ஞானத்துக்கு ஒவ்வும் இவ்வாய்வு முறையை ஒப்பியல் ஆராய்ச்சியின் மூலம் கலை இலக்கியத்துறைக்கும் ஏற்றதாக நாம் அமைத்துக் கொள்ள இயலும். இதனைச் சிறிது விரித்துரைக்கலாம்.

    விஞ்ஞான ஆராய்ச்சியிலே எடுகோள் முக்கிய இடம் வகிக்கிறது. பொதுவாக விஞ்ஞானிகள் இரு அடிப்படை மெய்ம்மைகளைத் தமது ஆராய்ச்சிகளுக்கு முதற்படியாக ஏற்றுக் கொள்வர். நடப்பவைக் கெல்லாம் காரணம் இருக்கிற தென்பதும் ஒரே தன்மையான காரணங்கள் நிலைமைகள் மாறாதிருக்குமானால் ஒரே மாதிரியான பயனையே அளிப்பன என்பதும் அவர்கள் ஏற்கும் இரு எடுகோள்கள். முதலாவது எடுகோள் முடிவற்ற ஆராய்ச்சிக்கு ஏதுவாகவும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கும் சக்தியாகவும் அமைகிறது. இரண்டாவது எடுகோளினடிப்படையில் வெவ்வேறு விஞ்ஞானிகள் குறிப்பிட்ட பரிசோதனைகளைத் திரும்பச்செய்து சரிபார்க்க வழி பிறக்கிறது

    இவ்விரு எடுகோள்களை இலக்கிய ஆராய்ச்சியாளனும் முன்கூட்டியே ஏற்றுக் கொள்வதற்கு தடையெதுவுமில்லை. ஒரு நூல் குறிப்பிட்ட காலப்பகுதியிலே தோன்றுவதற்கு ஏதுக்கள் இருத்தல் வேண்டும். உலகம் உய்ய வேண்டுமென்பதற்காகத் திருவுளங் கொண்ட பெரியார் திடீரென அருளிச் செய்வது இலக்கியம் என்ற ஐதீகத்தை நீக்கி, காரண காரிய நியதிக்குள் இலக்கியத்தை அடக்க இவ்வெடுகோள் உதவுகிறது. அது முதற் பயன். காரணம் இருத்தல் வேண்டும் என்று நம்பினால் அக்காரணத்தைக் கண்டுபிடிக்க அயராது உழைத்தலவசியம். உதாரணமாகத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே சான்றோர் செய்யுள்கள் சித்திரிக்கும் வீரயுகத்தை யடுத்து, அறவியல் நூல்களும் அவற்றுக்கு அடிப்படையான தீமைக் கோட்பாடும் அதன் வௌிப்படையான சிணுங்கித்தனமும் தோன்றக் காண்கிறோம். வீரயுகத்திற் காணப்பட்ட நன்னம்பிக்கைக் கோட்பாடுகள் அதன் வௌிப்படான புலனின்ப வேட்கையும் களிப்பார்வமும் இலக்கியத்தினின்றும் மறைந்து விடுகின்றன. அவை தோன்றுமிடத்தும் இழித்துரைக்கப்படுகின்றன. இத்தகைய ஒழுக்கவியல் உரைக்கும் நூல்கள் தோன்றத்தக்க காரணம் இருத்தல் வேண்டும். அதனை ஒப்புக் கொண்டால் அக்காரணத்தைக் கண்டறிய வாய்ப்பேற்படும். பிரயாசைப் பட்டால் காரணத்தை அறிவது உறுதி. காரணத்தைத் தேட முயலவும் வரலாற்றுப் பார்வை தவிர்க்க முடியாதவாறு வந்தமைந்து கொள்கிறது. அது மட்டுமல்லாது வரலாற்று அடிப்படையிற் காரணகாரிய ஆய்வைப் பயன் படுத்தும்பொழுது குறிப்பிட்ட நூல்களின் தோற்றத்திற்குப் பொருளாதார சமூக அரசியல் நிலைமைகள் காரணிகளாக அமைகின்றன. இக் காரணிகள் புறநிலையில் வைத்து நோக்கியாராயத்தக்கன. இயற்கை அறிவியற்றுறைக்குரிய முறைகளாம் 'சோதித்தறியும் தன்மை,' 'தற்சார்பற்ற நிலை,' 'மயக்கமின்மை' முதலியன இக்காரணிகளுக்குப் பண்பாயமைகின்றன. இவற்றைத் தரவுகளாகக் கொள்ளுவோம். கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அற நூல்கள் தோன்றற்குரிய சூழமைவையும் உந்தல்களையும் நியதிகளாகக் கருதிக் கொள்கிறோம்.

    இனி, மேலே கூறிய இரண்டாவது எடுகோளைக் கவனிப்போம்: ஒரே மாதிரியான காரணங்கள் ஒரே மாதிரியான பயனையே அளிக்கும் என்பது. இது பரிசோதனைக்கு எம்மைத் தூண்டுவது தமிழ் வீரயுகத்தைப் போலவே கிரேக்கரது வீரயுகமும் அமைந்திருந்தது. அவ்வாறாயின் அங்கும் வீரயுகத்தையொட்டி அறநூல்கள் எழுந்தனவா எனப் பார்க்கலாம். அதாவது ஒத்த காரணங்கள் ஒத்த பயனையளித்துள்ளனவா எனச் சரிபார்க்கலாம். அங்கும் அறநூல்கள் தோன்றியிருக்கக் கண்டால் எமது ஊகம் அல்லது கருதுகோள் பிழையற்றது எனக் கொண்டு அதனை இலக்கிய வரலாற்று விதிகளிலொன்றாக்கலாம். உண்மையில் வீரகாவியங்கள் பாடிய சான்றோன் ஹோமரை யடுத்து ஹீசியொட் போன்ற அறநூற்புலவர் கிரேக்கத்திலே தோன்றினர். எமது அறநூலாசிரியரைப் போல அவரும் பெண் வெறுப்பு, புலனடக்கம், இறை பக்தி முதலியவற்றைப் பெரிதும் வற்புறுத்தினர்;புராணக் கதைகள் பெருவழக்குப் பெற்றன. கவிஞர் போதகர்களாக மாறினர். இவற்றையெல்லாம் உற்று நோக்கும் போது தமிழிலும் கிரேக்கமொழியிலும் ஒரே தன்மையான சூழ்நிலைகள் ஒரே மாதிரியான இலக்கிய வகையைத் தோற்றுவித்தமை உறுதிப்படும். இதன் பயனாக இலக்கியத்துக்கு ஓர் உலகப் பொதுமை ஏற்படுகிறது. இவ்வடிப்படையிலேயே ஒப்பியல் இலக்கியம் உலகப் பொதுவான இலக்கியத்தோடு ஒன்றுபடுகின்றது.

    ஒப்பியல் இலக்கிய ஆய்வு முன்னோடிகளில் ஒருவரான தெயின்(Hippolyte Taine, 1828-1893), ஒப்பியல் இலக்கியம் இறுதியில் உலக இலக்கியக் கோட்பாட்டிற்கு எம்மை இட்டுச் செல்லல் வேண்டும் என்றே கருதினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தெயின், ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியாளன் கவனஞ் செலுத்த வேண்டிய பொருள்களைக் குறிப்பிடுமிடத்து, இனம், சூழமைவு, காலம், மனத்திறன் என்பனவற்றை வற்புறுத்தினார். சூழமைவிலே புவியியற் காரணிகள் அடங்கும். இவற்றிற் சில இன்று அத்துணைச் சிறப்புடையவனாகக் கொள்ளப்படுவதில்லை. சில புதிய காரணிகளை நாம் இன்று சேர்த்துக் கொள்ளுதல் கூடும். ஆனால் "இலக்கிய ஆராய்ச்சியை ஒரு விஞ்ஞானப் பரிசோதனை போல நடத்தவும், அதனைச் சரிபார்க்கவும், மேலும் மேலும் திருத்தமுறச் செய்யவும்" முடியும் என்று ஆணித்தரமாகக் கூறியவருள் ஒருவர் தெயின்.

    இக்கூற்றிலும் முறை, அழுத்தம் பெறுவதைக் கவனிக்கலாம். இதன் முக்கியத்தை எவ்வளவு வற்புறுத்தினாலும் தகும். பழைய விஞ்ஞானத்துக்கும் புதிய விஞ்ஞான நோக்குக்குமுள்ள வேறுபாட்டை இங்குக் கூறுதல் பொருத்தம். தொகுத்தறிமுறை முற்காலத்திலிருந்தே வெவ்வேறு வகையில் வழங்கி வருகிறது. எமது பண்டை நூலோர் கூறும் காட்சியளவை தொகுத்தறிமுறையைச் சேர்ந்ததே. ஆனால் பழைய தொகுத்தறிமுறையில் கருதுகோள் முக்கியம் பெறவில்லை. அம்முறையில் இயற்கையில் யாவும் மறைந்து கிடப்பதாகவும், அவற்றைத் தேடிக் கண்டு பிடிப்பதே ஒருவர் செய்யக் கூடியதாகவும் கருதப்பட்டது. இவ்வடிப்படையிலேயே பண்டைய அறிவாராய்ச்சி இயல் (Epistemology) அமைந்தது. இது விஞ்ஞானத்தின் தோற்றத்தைப் பெற்றிருப்பது போலக் காணப்பட்டாலும் உண்மையில் விஞ்ஞானத்துக்கு முற்பட்ட நோக்கேயாம். ஏனெனில் பண்டைய தொகுத்தறிமுறையும் அறிவு ஆராய்ச்சி இயலும் நவீன விஞ்ஞானத்துக்குப் போதிய அடிப்படையும், நெறியும் ஆகா. நவீன விஞ்ஞானத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று இடையறாத பரிசோதனையாகும். இப்பரிசோதனைகளுக்கு அநுசரணையாகத் துணிகரமான கருதுகோள்கள் கைக்கொள்ளப் படுகின்றன. இவற்றின் பயனாகத் தாமாகத் தோன்றும் உண்மைகளேயன்றிப் புதிய உண்மைகளும் நிலை நாட்டப் படுகின்ற தொகுத்தறிமுறையும் அறிவாராய்ச்சி இயலும் மூட நம்பிக்கைகளையும் இறைக் கோட்பாடுகளையும் விமர்சனஞ் செய்ய உதவக் கூடும். ஆனால் புதிய புதிய கருதுகோள்களின் அடிப்படையில் தொடர்ந்து பரிசோதனைகள் நடாத்திப் பொருள்களுக்கிடையே புதிய உறவுகளையும் தொடர்புகளையும் காண்பதற்கு மட்டுமின்றிப் புதிய பொருள்களையே கண்டுபிடிக்க அவை உதவா. இந்நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட விஞ்ஞானப்புரட்சியானது அதற்கு முற்பட நிலவிய விஞ்ஞான முறைகளை வழக்கறச் செய்தது. சார்புக் கொள்கையும், சொட்டுக் கொள்கையும், உளப் பகுப்பாய்வியலும் புதிய ஆராய்ச்சி முறைகளை இன்றியமையாதனவாக்கின.

    http://www.tamilnation.org/literature/eela...code/mp0102.htm

  14. முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன?

    எனக்கு இந்த முற்போக்கு என்ற அடைமொழியே பிடிக்க வில்லை. அது ஒரு திருகப்பட்ட அர்த்தத்தைத்தான் கொடுக்கிறது. மனிதனின் பிரச்சினைகளை மிக அக்கறையோடு அணுகும் கலை நிறைந்த இலக்கியங்கள் எல்லாம் முற்போக்கு இலக்கியங்கள்தான். இலக்கியத்தை முற்போக்கு இலக்கியம் பிற்போக்கும் இலக்கியம் என்று பிரிக்க முடியுமானால் முற்போக்கு இலக்கியத்தையும் அதி முற்போக்கு இலக்கியம் அதி அதி முற்போக்கு இலக்கியம் என்று உலகத்தில் எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்களோ அத்தனை பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டே போகலாமே! எனவே இலக்கியம் என்றாலே முற்போக்கு இலக்கியம்தான் என்பது கருத்து. இலக்கியம் என்றால் முற்போக்கு இலக்கியம், முற்போக்கு இலக்கியம் என்றால் இலக்கியம் - அது தான் நான் நினைப்பது. தரமற்றவற்றை இலக்கியத்துக்கு உயர்த்திப் பின்பு அவற்றை வேறுபடுத்த முயலும்போதுதான் முற்போக்கு இலக்கியம் என்ற பெயர் எழவேண்டிய நிலை ஏற்படுகிறது. இது தரமற்ற இன்றைய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் தரமற்ற தன்மையை மறைப்பதற்காக, தாங்களாகவே ஒதுக்கப்பட்டுக் கீழே விழுந்துவிடும் வேறு தரமற்ற படைப்புகள் உயர்ந்தவை என்று காட்ட முயலும் ஒரு நிலை. உருவத்துக்க முக்கியம் கொடுக்காமல் (கொடுக்க முடியாததால்), உள்ளடக்கத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கம் சில எழுத்தாளர்களும் இந்தப் பணிக்கு மிகவும் உதவுகிறார்கள். அதனால்தான் 'முற்போக்கு இலக்கியம்' என்ற இந்தத் தலைப்பும் குறையை மறைக்க முயலும் ஒரு வகை விளம்பரம் என்று ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டேன்.

    அப்படியென்றால் முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வி, இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியாக மாறிவிடுகிறது. இலக்கியம் என்றால் என்ன? அதைப்பற்றி ஆயிரக்கணக்கானோர் எழுதிவிட்டனர். இனியும் எழுதுவது வாசகர்களின் அறிவை அவமதிக்கும் அனாவசியமாகும். அத்துடன் rigid ஆன constitution எதிலும் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். இலக்கியத்துக்கு உருவமும் வேண்டும், உள்ளடக்கமும் வேண்டும். இலக்கியத்தின் இரு கால்கள் அவை. ஆனால், அந்த உருவமும் உள்ளடக்கமும் ஒவ்வொரு தனிப்பட்ட எழுத்தாளனின் சக்திக்கேற்ப விரியக் கூடியவை. புதுமைப்பித்தன் தம் சிறுகதைகளின் உள்ளடக்கத்துக்கு மட்டும் ஓர் உச்சத்தைக் கொடுக்கவில்லை. அவருடைய எழுத்தின் சத்தியாலும் நடையின் கவர்ச்சியாலும், கலைமிகுந்த கவர்ச்சியாலும், உருவத்துக்குமே ஓர் புது உச்சத்தைக் கொடுத்திருக்கிறார் என்பதுதான் என் எண்ணம். ஆனால், உருவமும் உள்ளடக்கமும் அவனவனின் சக்திக்கும் திறமைக்கும் என்றாலும் ஒவ்வொரு எழுத்தாளனும் எதிர்நோக்க வேண்டிய சில பொதுப்பிரச்சினைகளும் உண்மைகளும் இருக்கின்றன. அவை அவனது சூழலாலும் கால கட்டத்தாலும் அதே சமயம் மனித வர்க்கத்துக்கே சொந்தமான, எல்லாக் காலகட்டத்துக்குமே செல்லுபடியான, பொது மனிதத் தன்மையாலும் நிர்ணயிக்கப்பட்டு எழுகின்றன. அந்தப் பொதுப் பிரச்சினைகளை தன் சக்திக்கும் அறிவுக்கும் ஏற்ப ஓர் எழுத்தாளன் அணுகும்போது அவனுடைய தனித்தன்மையைக் காட்டும் உருவமும் உள்ளடக்கமும் கொண்ட இலக்கியங்கள் வெளிவருகின்றன. நான் ஓர் எழுத்தாளன். என் தனித்தன்மையை விளக்கம் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் கொண்ட இலக்கியத்தைத் தெரிய வேண்டுமானால், இலக்கியத்துக்கு நான் கொடுக்கும் வரைவு இலக்கணத்தைப் புரிய வேண்டுமானால், இனி நான் வெளியிடும் படைப்புகளைத்தான் படிக்க வேண்டும். ஆனால், என்னை இன்று எதிர்நோக்கும் பொதுப் பிரச்சினைகளும் உண்மைகளும் இருக்கின்றன. அவற்றைத்தான் மற்ற எழுத்தாளர்களும் எதிர்நோக்குகிறார்கள். எதிர்நோக்கும்போது அவரவர் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்பத்தான் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். அவற்றை என் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ப நான் எப்படிப் புரிந்துகொள்கின்றேன் என்பதைக் காட்டுவதுதான் இக்கட்டுரை. அதன் மூலம் வரைவு இலக்கணம் கொடுப்பதை விட இலக்கியத்தைப்பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை அதிகமாகத் தெளிவு படுத்தலாம் என்று நான் நினைக்கிறேன்.

    என்னை எதிர்நோக்கும் பொதுப் பிரச்சினைகளும் உண்மைகளும் பல ரகமானவை.

    எல்லாவற்றுக்கும் முதலில் இதை எழுதப் போகும் எனக்கு ஓர் தடை ஏற்படுகிறது. நான் இப்போ சொல்லப்போவது இலங்கையை மையமாக வைத்தா அல்லது உலகத்தையே மையமாக வைத்தா?

    இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதால் ஏற்படும் ஒரு தவிர்க்க முடியாத நிலை அது. உலகத்தை மறந்து இலங்கையை நினைக்க முடிவதில்லை. இலங்கையை மறந்து உலகத்தை நினைக்க முடிவதில்லை. அளவை மீறாத தேசியத்தை அடிப்படையாக வைத்து வளர்ந்துகொண்டிருக்கும் ஒர் சர்வ தேசியப் போக்கு இக்கால அரசியல் நிலை. அது சரிவந்துவிட்டால் பழைய குறுகிய மனப்போக்கு, கொள்கைகள், சட்டதிட்டங்கள் என்பவை உடைபட்டுப் போகும். தளர்ச்சியும் , அதனால் ஏற்படும் பரந்த முற்போக்கும் சுதந்திரமும் கிடைக்கும். அது பிழைத்துவிட்டால் பழைய தேசிய எல்லைகளுக்குள் உட்பட்ட அடிமைத்தனத்துக்குப் பதிலாக சர்வதேசிய அளவில் விரியும் அடிமைத்தனமோ அல்லது அழிவோ நம்மை மூழ்கடித்துவிடும். இந்தியாவின் வடக்கு எல்லையில் இப்போது நான் இதை எழுதும் நேரத்தில் (ஒக்டோபர் மாதம் முப்பத்தியொன்று) முன்னதின் (அடிமைத் தனத்தின்) ஆபத்து பயமுறுத்திக் கொண்டு முன்னேறுகிறது. இங்கே உள்ள கொம்யூனிஸ்ட் கட்சி அதைப் பற்றி அவ்வளவு ஒன்றும் சொல்லாமல் இருப்பது ஐந்தாம் படைப் பயத்தை அதிகரிக்கச் செய்கிறது. (பின்பு ஒர் அறிக்கை விடப்பட்டிருக்கிறது. இந்திய-žன எல்லைப் போர் ஒர் சிறிய விசயம் என்றும், அதை விட்டுவிட்டுக் கியூபாப் பிரச்சினையைப்பற்றிக் கவலைப்பட வேண்டும் என்றும் உபதேசம் செய்யும் பாணியில். žனப் பொதுவுடமை அரசாங்கம் இந்தியா மீதும் நேரு மீதும் வசை மாரி பொழிந்தும், ஏகாதிபத்தியவாதிகள் என்று பிரசாரம் செய்தும் கியூபா சார்பில் பெரும் பிரம்மாண்டமான ஊர்வலங்கள் நடத்தியும் உள்நாட்டு மக்களை ஏமாற்றுவது இங்கே கவனிக்கத்தக்கது. இந்தப் பொதுவுடமை வாதிகளிடம் ஒரு தவறாத consistency இருக்கிறது. ரஷ்யாவில் குலாக்குகளை மறைத்துக்கொண்டு ஜெர்மன் யூதர்களைப்பற்றிப் பேசினர் ஒரு காலத்தில். பின்னர் ஹங்கேரியை மறைத்துக்கொண்டு ஜெர்மன் யூதர்களைப்பற்றிய பேசினர் ஒரு காலத்தில். பின்னர் ஹங்கேரியை மறைத்துக் கொண்டு சுயஸைப்பற்றிக் கத்தினார்கள். இப்போது žனாவை மறைத்துக்கொண்டு கியூபாவைக் காட்ட முயல்கின்றனர். இப்படித் திரித்துக் கூறும் ஒரு கட்சியின் கீழிருந்து இலக்கியம் எழுதும் நிலையை ஒருக்கால் நினைத்துப் பாருங்கள். žனாவில் ஒரு எழுத்தாளன் இப்போ எப்படித் தன்னை ஒரு சரியான உலகநிலையில் நிறுத்திச் சிந்திக்க முடியும்? சோஷலிஸ யதார்த்தம் என்பதும், ஒரு பக்கத்தை மறைத்துக்கொண்டு ஒரு பக்கத்தைக் காட்டும் வித்தைதான். அத்துடன் இந்தோ-žன யூத்தம் வேறு ஒரு உண்மையையும் காட்டுகிறது. இந்தியா, பொருளாதார வளர்ச்சியோடு ஆன்மீக வளர்ச்சிக்கும் ஓர் உதாரணமாக நிற்கிறது. žனா, வெளும் லோகாயத வளர்ச்சியை மட்டும்தான் குறிக்கிறது. லோகாய வளர்ச்சி மனிதனை எந்த வகையிலும் வளர்க்காமல் பழைய கொலோனியவாதியாகவேட்டியிருக்

  15. சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

    பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

    இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.

    இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் இவ்வகையான முறை சார்ந்த கல்வியை வழங்குவதில் அரசாங்கம் முன்னிலை வகித்து வந்துள்ளது. பொதுவுடைமை நாடுகள் தவிர்ந்த ஏனைய வளர்முக நாடுகளில் அரசாங்கத்துறையோடு தனியார் துறை சார்ந்த கல்வி நிறுவனங்களையும் காணமுடியும். உதாரணமாக இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் நடாத்தும் பாடசாலை முறைக்கு அப்பால் கல்வித்துறையில் தனியார் துறையின் பங்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், இலங்கையில் கடந்த ஆறு தசாப்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் விளைவாக, கல்வித்துறையில் அரசாங்கத்தின் பங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு இலங்கை உள்ளடங்கிய வளர்முக நாடுகளில் பாடசாலை மற்றும் உயர்கல்வியில் அரசாங்கத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறக் காரணம்.

    அரசாங்க உதவியும் தலையீடும் இன்றி நலிவடைந்த பிரிவினர் கல்வி வாய்ப்புகளைப் பெற முடியாது என்பதாகும். இலங்கையில் அரசாங்கம் வழங்கும் இலவசக்கல்வி, புலமைப்பரிசில்கள், கிராமப்புறங்களில் விரிவான முறையில் அரசாங்கம் அமைத்துள்ள பாடசாலைகள், இலவச பாடநூல், இலவச சீருடை - இவையாவும் நலிவடைந்த கிராமப்புற, நகர்ப்புறப் பிரிவினருக்கும் தோட்டப்பகுதிப் பிள்ளைகளுக்கும் பெரிய உதவியாக அமைந்துள்ளதை மறுக்க முடியாது.

    இன்று இலங்கையில் கல்வித்துறையில் தனியார் மயமாக்கத்துக்கு எதிராக முன் வைக்கப்படும் முக்கிய வாதம், அந்நடவடிக்கை நலிவடைந்த பிரிவினரின் கல்வி மேம்பாட்டுக்கு எதுவித உதவியையும் வழங்காது என்பது தான். இலங்கையில் வளர்ச்சிபெற்ற சமூகநல அரசு வழங்கிய இலவசக் கல்வி, இலவச சுகாதார வசதிகள் என்பன, நலிவுற்ற பிரிவினரும் மனித வள மேம்பாட்டுக்கான வரப்பிரசாதமாக அமைந்ததை மறுக்க முடியாது.

    தற்போது இச்சமூகநல நோக்குடன் பெருமளவு நிதியை அரசாங்கம் கல்விக்கு ஒதுக்கி வருகின்றது. இது சுதந்திரகாலம் முதல் செய்யப்பட்டு வரும் உதவி. அண்மைக்காலங்களில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, போருக்கான ஆயத்தத்துக்கு ஒதுக்கப்படும் பெரிய அளவிலான நிதி என்பன கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் பல வீழ்ச்சிகள் ஏற்படக்காரணமாக உள்ளன. இது இலங்கைக்கு மட்டுமன்றி ஏனைய வளர்முக நாடுகளும் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாகும்.

    அரசாங்கங்களின் கல்விச் செலவு ஒப்பீட்டு ரீதியில் தேசிய வருமானத்தினதும் அரசாங்கச் செலவினதும் எத்தனை வீதமாக இருக்கின்றது என்று பார்க்கும்போது அதில் பல வீழ்ச்சிகளைக் காணமுடியும்.

    இப்புள்ளி விபரம் இலங்கையில் அரசாங்கத்தின் கல்விச் செலவு குறைந்திருப்பதையே காட்டுகின்றது. தேசிய வருமானம், அரசாங்கச் செலவு என்பவற்றுடன் கல்விச் செலவை ஒப்பிட்டுக் காணும் வீதாசாரமும் 1998 முதல் குறைந்து சென்றுள்ளது. தேசிய வருமானத்தின் வீதாசாரமாகக் கல்விச் செலவு 1998 இல் 3.1 ஆக இருந்து 2002 இல் 2.9 வீதமாகக் குறைந்தது. இதே காலப்பகுதியில் அரசாங்கச் செலவின் வீதாசாரமாக கல்விச் செலவு 8.4 சதவீதத்திலிருந்து 6.8 ஆகக் குறைந்துள்ளது.

    தற்போது பல சிரமங்களுடன் கல்வித் துறைக்கு ஆண்டுக்கு 4000 கோடி ரூபா ஒதுக்கப்படுகின்றது. இவ்வாறு சிரமத்துடன் ஒதுக்கப்படும் அரசாங்க நிதியும் கல்விக்கான வெளிநாட்டு உதவிகளும் எக்கல்வி நிலைக்குப் பிரதானமாகச் செலவிடப்படல் வேண்டும்? பல்வேறு கல்வி நிலைகளில் எந்நிலைக்கு நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்? என்ற முக்கிய வினாக்கள் எழுகின்றன.

    முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய கல்விநிலை இதுதான் என எவ்வாறு முடிவுசெய்ய முடியும்? குறிப்பிட்ட கல்விநிலைக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமாயின் அக்கல்வி நிலை சமூகத்துக்கும் தனி மனிதனுக்கும் அதிக அளவிலான பயனைத் தருவதாக இருத்தல் வேண்டும். இப்பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி சமூகத்துக்கும் தனி மனிதனுக்கும் அதிக பலனை அளிக்கக் கூடிய கல்வி நிலையைத் தெரிவு செய்வது தான். அவ்வாறு தெரிவு செய்யப்படும் கல்விநிலைக்கு நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கினால் இப்பிரச்சினை தீர்கின்றது என்பது கல்வியின் சமூக விளைவுகள் பற்றியும் தனியாள் விளைவுகள் பற்றியும் ஆராய்பவர்களின் கருத்தாகும்.

    இவ்வாறு கல்விமுறையைத் திட்டமிட முனைந்தவர்கள், தாம் எதிர்நோக்கிய இந்த நிதி ஒதுக்கீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளக் கையாண்ட வழிமுறைதான் விளைவு வீத அணுகுமுறையாகும். (Rate of Return Approach)

    இலங்கையில் கல்வியின் மீது இடப்படும் முதலீடு பல நன்மைகளைத் தரும் என பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. அவையாவன:

    - பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்தல்;

    -இரு சமூக தலைமுறையினருக்கிடையில் சமூக நகர்வை ஏற்படுத்துதல்;

    -உழைப்பாளரின் உற்பத்தித் திறனையும் சம்பாத்தியத்தையும் கூட்டுதல்;

    -உடல் ஆரோக்கியமான செல்வம்மிக்க சமூகத்தை உருவாக்குதல்;

    இவற்றோடு ஆய்வாளர்கள் கல்வியின் மீதான முதலீட்டினால் இரு சமூக நன்மைகளையும் (Returns) எதிர்பார்த்தனர்.

    -வினைத்திறன் மற்றும்

    -சமூக நியாயத்தில் ஏற்படும் முன்னேற்றங்களே அவையாகும்.

    இலங்கையில் உலகவங்கி செய்த இவ்விளைவு வீதம் தொடர்பான ஆய்வுகள் பல முக்கிய முடிவுகளைத் தந்துள்ளன. இவை எக்கல்வி நிலைகள் சமூகப்பயனையும் தனியாருக்கான நன்மையையும் வழங்குவன என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

    ஆண்களின்

    (1) பல்கலைக்கழக கல்வியினால் 11 சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மையை விட கட்டாயக் கல்வி நிலையும் 15 சிரேஷ்ட இடைநிலைக் கல்வியும் 20 சமூகத்துக்கு வழங்கும் நன்மை, பயன் அதிகமானது.

    (2)பெண்களும் கட்டாயக் கல்வியினால் பயனடைகின்றனர். (20). பல்கலைக்கழகக் கல்வி, சிரேஷ்ட இடைநிலைக் கல்வி என்பவற்றால் பெண்கள் பெறும் சமூகப் பயன்குறைவு (முறையே 10, 18)

    இவ்விரண்டு ஆய்வு முடிவுகளும் ஒப்பீட்டு ரீதியில் பல்கலைக்கழகங்களின் சமூக நன்மை குறைவானது என்பதையே வலியுறுத்துகின்றன. அத்துடன், பல்கலைக்கழகக் கல்வி நிலையை விட கட்டாயக் கல்வி நிலையே அதிக அளவு சமூகப் பயனுடையது என்பதையே உலக வங்கியின்

    2002 ஆம் ஆண்டின் இலங்கை ஆய்வு எடுத்துக் காட்டுகின்றது.

    இலங்கையில் (2002) செய்யப்பட்ட இந்த ஆய்வு ஏறத்தாழ 1973, 1980 களில் செய்யப்பட்ட பல உலகளாவிய ஆய்வு முடிவுகளை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாண்டுகளில் Psacharopoulos என்ற ஆய்வாளர் இவ்வாய்வை 60 நாடுகளில் செய்து கல்வியின் விளைவு வீதத்தைக் கணித்தார். அவருடைய ஆய்வின்படி வளர்முக நாடுகளில் கல்வியின் விளைவு வீதம் பின்வருமாறு அமைந்தது:

    கல்விநிலை விளைவு%

    ஆரம்பக்கல்வி 27%

    இடைநிலைக்கல்வி 16%

    உயர்கல்வி 11%

    இவ்வாய்வு முடிவுகளை ஏறத்தாழ ஒத்ததாக இலங்கையின் ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன.

    இவ்வாய்வுகளின் பின்புலத்தில், இவ்வாய்வு முடிவுகளை ஆதாரமாகக் கொண்டு நோக்குமிடத்து "கல்வி முதலீட்டைப் பொறுத்தவரையில் ஆரம்பக்கல்விக்கே அதிக முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்;

    அத்தோடு உயர்கல்வியின் சமூகப் பயன்குறைவு என்பதால், அதன் மீது அதிக அளவு மானியங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வு முடிவுகள் உயர்கல்வியின் வளர்ச்சிக்குச் சாதகமாக இல்லை என்பதோடு அக்கல்வி நிலையை ஊக்குவிக்கவில்லை.

    இத்தகைய, ஆய்வுகள் இலங்கை போன்ற நாடுகளில் ஒரு கட்டுப்பாடான, வளர்ச்சி குன்றிய உயர்கல்வி நிலைக்கு இட்டுச் சென்றுள்ளன. ஆரம்பக்கல்வி வயதினரில் சேர்வு வீதம் 100 என்றால் உயர்கல்வி வயதினரின் சேர்வு வீதம் (பல்கலைக்கழகத்தில்) இன்று 3 ஆக மட்டுமே உள்ளது.

    வேலையில்லாதவர்களின் பட்டியலைப் பார்த்தால் அவர்களில் உயர்கல்வி படித்தவர்கள் அதிகம்; ஆரம்பக்கல்வி பயின்றவர்கள் வீதம் குறைவு.

    அண்மைக்காலத்தில் 40,000 பட்டதாரிகள் வேலையற்று இருந்த நிலையில் அவர்களுடைய சமூக விளைவு குறைவாக இருந்திருப்பதில் ஆச்சரியமில்லை. சுதந்திரம் பெற்றது முதல் தொடர்ந்து பதவி ஏற்ற அரசாங்கங்கள் பல்கலைக்கழகக் கல்வியின் விரிவினைக் கட்டுப்படுத்தி வந்துள்ளமைக்கு அக்கல்வி நிலையின் குறைந்த சமூக நன்மை ஒரு காரணமாக இருக்கலாம். ஆண்டுதோறும் வெளியேறும் 9000 பட்டதாரிகள் உடனடியாக வேலையின்மைப் பிரச்சினையைப் பலகாலங்களுக்கு எதிர்நோக்குகின்றனர். தாங்கள் உருவாக்கிய பட்டதாரிகளைத் தாங்களே மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அரசின் மீது உண்டு. அரச பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் பட்டதாரிகளுக்கு அது தெரியாது, இது தெரியாது (ஆங்கில, தகவல் தொழில்நுட்பம்) என்பதால் அவர்கள் வேலைகளில் அமர்த்தப்பட முடியாதவர்கள் (Unemployable) என்ற கருத்தைச் சில அதிகார தரப்பினரே தெரிவித்துள்ளனர்.

    எவ்வாறாயினும், இவ்வாய்வுகள் உயர்கல்வியின் சமூக பயனைக் குறைத்தும் ஆரம்பக்கல்வியின் பயனை அதிகமாகவும் மதிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்கள் உயர்கல்வியின் விரிவுக்கு ஆதரவளிப்பதில்லை. இலங்கை போன்ற வளர்முக நாடுகள் தமது பற்றாக்குறையான நிதியை ஆரம்பக் கல்வியில் செலவிடுவது பயனுடையது என்பது உலக வங்கியின் ஆலோசனைகளின் அடிப்படையானது.

    "ஆரம்பக்கல்வியில் மேலும் அதிகளவு நிதியை முதலீடு செய்யுங்கள்; இதற்காக, பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கும் நிதியைக் குறைத்தாலும் ஆட்சேபனையில்லை" என்ற முறையில் உலக வங்கியின் ஆலோசனைகள் அமைகின்றன.

    இன்று சார்பளவில் இலங்கையில் ஆரம்பக்கல்வி அடைந்திருக்கும் வளர்ச்சிக்கும் (சேர்வு வீதம் ஏறத்தாழ 100%) பல்கலைக்கழகக் கல்வி அடைந்திருக்கும் வீழ்ச்சிக்கும் (சேர்வு வீதம் 3% மட்டுமே) இவ்வாறான கல்விநிலைகள் தொடர்பான விளைவு வீத ஆய்வு முடிவுகளின் செல்வாக்கே காரணம் எனலாம். சுருங்கக்கூறின், இந்த ஆய்வு முடிவுகள் பல்கலைக்கழகக் கல்வியை விட கட்டாயக் கல்வி நிலையே சார்பளவில் சமூகப் பயனுடையது என்பதை வலியுறுத்துகின்றன. இந்த ஆய்வுமுறைகள் எப்படிப்பட்டவை? அவை பற்றிய விமர்சனங்கள் எவை? என்னும் விடயங்கள் தனியாக நோக்கப்பட வேண்டியவை.

    http://www.thinakural.com/New%20web%20site...6/Article-1.htm

  16. இந்திய/தமிழ்நாட்டுச் சமுதாய அமைப்பை எவ்வாறு விளங்கிக்கொள்வது எனும் விவாதத்தில் பொதுவுடைமைவாதிகள் மேற்கொண்ட 'வர்க்கக் கருதுகோள்' போதாது என்றும், அந்தக் கருதுகோள் சாதிக்கும் வர்க்கத்துக்குமுள்ள உறவு/உறவின்மைகளைச் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்றும், இந்தியச் சமூக அமைப்பின் பிரதான அலகான சாதி (மத அங்கீகாரமும் மத வலிமையும் கொண்டது) எல்லாப் பொருளாதார உற்பத்தி முறைமைகளுக்கிடையேயும் தொழிற்படக்கூடியது என்றும் வாதிடும் ஒரு புலமைப் போக்கு இந்தியா முழுவதிலும் காணப்பட்டுவந்துள்ளது. சுதந்திரத்தின் பின் அரசியல் மாற்றத்தால், அடிநிலை மக்களின் மீதான ஒடுக்குமுறைகள் குறையவில்லை என்ற அறிக்கை, இப்பிரச்சினையை எவ்வாறு நோக்கல்வேண்டுமென்பது பற்றிய வினாக்களைக் கிளப்பிற்று. அந்த வேளையில் டாக்டர் அம்பேத்கர், பெரியார் ஈவெரா, ராம் மனோகர் லோகியா ஆகியோரின் செயற்பாடுகளும் சிந்தனைப் பின்புலங்களும் முக்கியத்துவப்படுத்தப்பட்ட

  17. இதில் நாம் முக்கியமாக நோக்கவேண்டிய அமிசம் யாதெனில், சாதியமைப்புக்கெதிராகத் தொடங்கிய போராட்டம் அடிப்படைச் சமூக-பொருளாதார அமைப்பு மாறாததனாலும், மாற்றம் ஏற்பட்டச் சிற்சில துறைகளிலுங்கூட நிலவிய 'உறவுகள்' காரணமாகவும் சாதியமைப்பு மீள் வலியுறுத்தப்படுகிறது.

    இது தொலைநோக்கில் ஒட்டுமொத்தச் சனநாயகமயப்பாட்டைச் சிக்கற்படுத்துவதாக இருக்கும். ஆனால், அதே, வேளையில் சனநாயகமயப்பாட்டின் தாக்கத்தினாலேதான் இந்நிலை ஏற்படுகின்றதென்ற உண்மையையும் மறந்துவிடுதல் கூடாது.

    தலித்திய எழுச்சி இந்தச் சமூகச் சிக்கற்பாடுகளின் வெளிப்பாடாக அமைகின்றது. அது பற்றிச் சற்று விரிவாகப் பின்னர் நோக்குவோம்.

    9

    திராவிட இயக்க வரலாறு வழிவந்த சமூக அனுபவங்கள் பற்றிப் பேசும் இந்நிலையில், திராவிட இயக்கம் அது 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதிய துறையில் ஏற்படுத்திய மாற்றங்களை நோக்குதல் வேண்டும். இது மிக முக்கியமான ஓர் அமிசமாகும். ஏனெனில் 1850, 1900,1930,1950களில் 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதப்பட்டனவற்றுக்கும், பின்னர் வரும் காலகட்டங்களிலே 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதப்படுவனவற்றுக்குமிடையி

  18. ** கார்த்திகேசு சிவத்தம்பி**

    நினைவின் சுவடுகள்

    நிறைவேறும் ஓர் ஆசை

    1997 இல், இக்கட்டுரையை எழுதியபொழுது நான் இலங்கைக் கிழக்கப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தநிலைப் பேராசிரியராகக் கடமையாற்றினேன். 1998 செப்டம்பர் வரை அது நீடித்தது.

    யாழ்ப்பாணத்துக்குத் திரும்பமுடியாத உடல் நிலை. பல்கலைக்கழகச் சேவையின் இறுதி வருடங்களைக் கிழக்குப் பல்கலைக்கழகத்திற் செலவிடுதலில் ஒரு தார்மீக நியாயம் இருப்பதாகவே எனக்குப் பட்டது.

    கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு சுவாரசியமான இடம்.

    நான் அங்கு தங்கிய காலத்தில் எனது போக்குவரத்துக்கான ஒழுங்கு, பல்கலைக்கழக ஊழியர் வாகனத்திற் செய்யப்பட்டிருந்தது. காலை போய் மாலை திரும்புவோம்.

    அது ஒரு 'றோசா' பஸ். அதன் சாரதி அம்பலவாணர். அதில் பயணிப்போர் மோகன், சூரி, ஆனந்தராஜன், ஸ்ரீ எனப் பலர். மட்டக்களப்பின் இயல்பான கிண்டற் குறிப்புரைகள் மாறி மாறிப் பறக்கும். அதற்குள் ஓர் உறவுக்குழுமம் இருந்தது.

    எனக்கு அவர்கள் அபரிமிதமான அன்பு காட்டினர். என்னை நேசித்தனர். ஒரு முதுபுலமையாளனை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதை அறிந்திருந்தனர்.

    அவர்களின் அந்தச் செயல்கள் எனக்கு ஒரு 'மானுடத்திடலாக' இருந்தது. நான் அதில் நின்று கொண்டு மட்டக்களப்பின் மனிதாபிமானத்தைச் சுவைத்தேன்.

    அவர்களை நான் என்றும் மறக்கமாட்டேன் என்பதற்கு இச்சிறு அர்ப்பணம் சாட்சி.

    சென்னை 5-10-99

    கா. சிவத்தம்பி

    பதிப்புரை

    ஆங்கில ஆட்சியில் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் சென்று அள்ளிக் கொண்ட பிராமணர்கள் பெற்ற அதே பேறுகளைத் தாங்களும் பெறவேண்டும் என்ற நோக்கில், படித்த பிராமணரல்லாத பிரிவினரால் தொடங்கப்பட்ட 'சென்னை மகாஜன சபை'யின் தோற்றம், அன்றைய காலகட்டத்தில் பிராமணர்களின் செல்வாக்கால் அழுத்தப்பட்டுக்கிடந்த சைவம், தனித்தமிழ் உள்ளிட்ட பல்வேறு போக்குகளை எழுச்சிபெறச் செய்து இதில் கலக்க வைத்தது, பிராம­யத்தின் சமூக-பண்பாட்டுப் பிடிப்பினை எதிர்த்துத் தோற்றம் பெற்று, சமத்துவம்-சமதர்மம் உள்ளிட்ட பொருளாதாரத் தன்மைகளையும் மையப்படுத்தியதாக அமைந்திருந்த பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் அப்போது பிராம­ய எதிர்ப்புச் சக்திகளை ஈர்த்துக்கொண்டிருந்தது.

    இந்த நிலையில், நீதிக்கட்சி ஆட்சியில் இடஓதுக்கீடு, கடன் நிவாரணச் சட்டம் அல்லாத வேறெந்தச் சமூக-பண்பாட்டு மாற்றத்துக்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. சமூக சக்தியாக மாறாமல், நிலவுடைமை மற்றும் வணிக நலன்களையே பேணிவந்த நீதிக்கட்சி செல்வாக்கிழந்து தனது இருப்பையே உறுதி செய்துகொள்ள இயலாத நிலையில், பெரியார் என்ற பேராற்றில் கலக்கவேண்டியதாயிற்று.

    நிலவுடைமை-வணிகர்-படித்தவர் நலன்களை மட்டுமே அடித்தளமாகக் கொண்டிருந்த நீதிக் கட்சி, பிராமணரல்லலாத அடித்தட்டு மக்களின் எழுச்சியை அப்போ‘து உறுதிப்படுத்தியிருந்த சுயமரியாதை இயக்கமெனும் தீயில் விழுந்துவிட்டது. இந்தத் தீயில் உருக்கியெடுக்கப்பட்டதுதான் திராவிட இயக்கக் கருத்துநிலை. இது, அரசியல்-சமூக-பொருளாதார-பண்பாட்டு செயல்திட்டத்துக்கான ஒரு நிலைப்பாடு.

    திராவிட இயக்கத்தின் பெயரால் அமைந்த கட்சிகள் இதிலிருந்து நழுவியிருந்தாலும், மாநிலக் கட்சிகளிலேயே திமுக இன்றும் வேறுபட்டதாகவே பார்க்கப்படுகிறது. ஒரு கட்சி என்ற முறையிலோ ஆட்சி வகைப்பட்டோ, திமுகவின் அரசியல் முடிவுகள்-செயல்பாடுகள்கூட, சமூக-பண்பாட்டுப் பின்னணியிலேயே மதிப்பிடப்படுகின்றன.

    தங்களது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவனவாகவே பிற மாநிலங்களிலுள்ள கட்சிகள் காட்டிக்கொண்டாலும், அவை அரசியல் இயக்கங்களாகக் குறுக்கிடக்கின்றனவேயன்றி, சமூக-பொருளாதார-பண்பாட்டுத் தளத்தில் தங்களை நிறுத்திக்கொள்ளவில்லை. தலித் இயக்கங்களின் இருப்பு சற்று வேறுபட்டது என்றாலும், இவையும் அரசியல் அளவுகோலுக்கு அப்பாற் செல்லவில்லை.

    இத்தகைய பின்னணியில் நாம் புரிந்துதுகொள்ளவேண்டிய-எதிர்நோக்கவேண்டிய தன்மைகளைத் தமக்கேயுரிய நுணுக்கத்தோடு-பார்வையோடு மார்க்žயப் பேரறிஞரும் ஆய்வுப் பேராசிரியருமான கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்நூலில் விளக்கியுள்ளார்கள்.

    11.10.1999 மே.து.ராசு குமார்.

    முன்னுரை

    தமிழ்த் தேசிய உணர்வு வளர்ச்சி பற்றிய எனது ஆய்வுகளில் இது மூன்றாவது, தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி (1979) Understanding the Dravidian Movement - Problems and Perspective (1988-95) என்பனவற்றைத் தொடர்ந்து இது வருகிறது.

    1996-97 இல் தமிழகத்தில் முன்னிலைப்பட்ட தலித் எழுச்சியும் சாதிச் சண்டைகளும் திராவிட இயக்கக் கருத்துநிலையின் பொருத்தப்பாடு' என்பது பற்றி ஒரு கருத்தரங்கத்தை நடத்துவதற்குத் தூண்டின. மதுரை ஆராய்ச்சி வட்டத்தைச் சேர்ந்த திரு.வி.எம்.எஸ். சுபகுணராஜன் முதலியோர், நண்பர் அ.மார்க்சினுடைய உதவியுடன் 1994 மே 24-25இல் 'திராவிட இயக்கமும் கருத்தியலும்: நோக்குகளும் போக்குகளும்' என்ற கருத்தரங்கை நடத்தினர். அதில் திறப்புரையாக எனது இந்தக் கட்டுரை அமைந்தது.

    நான் இவ்வுரையினை எழுதுவதற்குக் காலாக இருந்த நண்பர் அ.மார்க்சுக்கு எனது நட்புக் கலந்த நன்றி.

    திராவிட இயக்கச் செல்வாக்குக் காரணமாகத் தமிழ் நாட்டில் அடிநிலை எழுச்சி திடீரென வந்துவிடாது என மண்டல் கமிஷன் உள்ளிட்ட பலரது முன்னுரைப்புக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் சாதிக் கலவரங்களும் தலித் எழுச்சியும் தோன்றியுள்ளமை வெறும் சாதாரண அரசியல் நிகழ்வு அன்று. 19-20ஆம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டு வளர்ச்சியின் பல அடிப்படை முரண்பாடுகளை அது வெளிக்கொணர்ந்தது. ஒருவகையில் பார்க்கும்பொழுது இந்தக் கிளர்ச்சிகளைத் தமிழ் நாட்டின் சனநாயகமயவாக்க நடைமுறையின் தவிர்க்க முடியாப் பெறுபேறு என்று கொள்ள முடியும் என்றாலும் திராவிட இயக்கம் குறிப்பாகப் பெரியாரியம் வற்புறுத்திய சமூக விடுதலை உணர்வு, பிராமணியத்துடன் நேரடி மோதுதலில் ஈடுபடாதிருந்த ஆழ்அடிநிலை மக்களிடத்துச் செல்லவில்லையோ என்ற ஐயங்கிளம்புவது இயல்பாயிற்று.

    இது பற்றிய நோக்கலுக்கு வருவதற்கு முன்னர் திராவிடக் கருத்துநிலை (Dravidian Ideology) 20ஆம் நூற்றாண்டின் தமிழர் எழுச்சியில் தமிழர் பண்பாட்டில் சில மாற்று நியமங்களையும் குறியீடுகளையும் (alternate norms and symbols) உண்டாக்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது, தமிழை முதன்மைப்படுத்தும் ஒரு சிந்தனைப்போக்குக் காரணமாக, தமிழர்கள் என்கின்ற வகையில் ஒரு பொதுப்படையான எழுச்சி மேற்கிளம்புவதைக் காணலாம். இதற்குள் சாதக அம்சங்களும் உள்ளன; பாதக அம்சங்களும் உள்ளன. அவை பற்றி ஆராயாது இந்தப் பண்பாட்டு முனைப்பு ஏன் ஒரு குறிப்பிட்ட மட்டத்தோடு நின்றுவிட்டது என்பது பற்றி நோக்குவது முக்கியமான ஓர் ஆய்வாகும்.

    இக்கட்டத்தில்தான் மார்க்žய நோக்கு பயனுடையதாகக் காணப்படும். வர்க்கம் என்கின்ற எண்ணக் கரு சாதியத்தை எவ்வாறு பயன்படுத்தியுள்ளது என்பது இந்த ஆய்வுகளினூடாக வெளிவரும். அத்துடன் வரலாற்று அசைவியக்கம் என்பதும் ஒரு முக்கியமான அம்சமாகும். வரலாற்றின் இயக்கியல் தன்மை காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை விரிவாக ஆராய்தல் வேண்டும்.

    காலனித்துவம் பாரம்பரியச் சமூக அமைப்பைச் சற்று வேறுபடுத்தியதே தவிர மாற்றவில்லை. அதனுடைய அடிப்படையான சமூக அடுக்குநிலையையும் (Social Hierarchies) அடுக்கு நிலை உணர்வையும் மாற்றவில்லை. இந்த அடுக்குநிலையோடு காலம்காலமாக ஒரு சமனற்ற பொருளாதார வளர்ச்சிப் போக்கு சம்பந்தப்பட்டிருப்பதனை, உண்மையில் தமிழ்நாட்டின் நானில ஐந்திணை வகுப்புக் காலம் முதலே இருந்து வருவதை ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தச் சமனற்ற பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்திய சமனற்ற வாழ்நிலைப் பண்பாட்டு நிலைமைகள் பற்றி அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை. இந்தப் பொருளாதாரக் குழுமநிலைமையைப் பேணுவதற்கான ஒரு சமூக ஒதுக்கற்பாட்டுணர்வும் சேர்ந்தே வளர்ந்து வந்துள்ளது. சாதி அமைப்பு விதித்த தொழிற்பிரிவினை (division of labour) சமூக ஒதுக்கற்பாட்டினையும் வலியுறுத்தி ஊடாட்டங்களை மிகக் குறைந்த பட்சத்துக்குக் கொண்டு வந்தது. இந்து மதம் இதற்கான இறையியல், சடங்காசார நிலைப்பாடுகளை வழங்கிற்று. இவை யாவும் சமூக அடிநிலை பற்றிய நமது பார்வையைத் தீர்மானித்தன எனலாம்.

    அதே வேளையில் சமூக விடுதலை பெற்ற இடைநிலையினர்களுக்கு வேண்டிய தொடர்ச்சியான அரசியற்கல்வி (Continued Political Education) அளிக்கப்படவில்லை. இதனால் பிராமணித்தியலும் பார்க்க 'நமது' பண்பாடு சிறப்புடையது என்ற ஒரு திருப்திநிலையே ஏற்பட்டது. இந்தத் திருப்திநிலையைச் சகலசாதி மட்டத்திற்கும் கொண்டு செல்ல முடியாததாகிவிட்டது. இதற்குக் காரணம், பிராமணிய எதிர்ப்பு முதலில் சமூக-பொருளாதார உயர்மட்டத்தினராலே மேற்கொள்ளப்பட்டமையேயாகும். அவர்கள் தங்கட்குக் கீழே வந்தவர்களைச் சமமாக நடத்தத்தயாராகவிருக்கவில்லை.

    இவை காரணமாக ஒரு தேக்கம் ஏற்பட்டது உண்மையே. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சாதியொழிப்பிற்கு உதவுவதாக அமையவில்லை. முரணிலையாக அதன் 'இருப்பை', தொடர்ச்சியை அது வலியுறுத்துகிறது.

    இந்த வரலாற்றுப் பொறிக்குள் நாம் சிக்கிக் கொள்கிற பொழுது விடுபடுவது என்பது மிகுந்த நிதானத்துடன் மேற்கொள்ளப்படவேண்டிய ஒன்றாகிறது (Thesis, antithesis ஆக மாறுவதற்கு இது ஒரு நல்ல உதாரணம்). இவ்வாறு நோக்கும் பொழுதுதான் காலனித்துவத்தின் தாக்கம் பற்றி நாம் போதுமான தமிழ்நிலை ஆய்வுகள் மேற்கொண்டு விட்டோமா எனும் வினா மேலெழும்புகின்றது. காலனித்துவம் இந்தச் சமூக முரண்பாட்டைத் தனக்குச் சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக்கொண்டது என்பது பற்றிய ஒரு தெளிவும் அவசியம், இக்கட்டுரை வரலாற்றுப் போக்கினைச் மிகச்சிறிய அளவிற் பார்க்க முனைகிறது. புதிய நூற்றாண்டில் தமிழகத்தின் அரசியல் சமூகச் சிந்தனை உணர்வுகள் எவ்வாறு செல்லும் என்பதற்கான ஓர் இலங்கியல் உதாரணமாக இக்கட்டுரைப் பொருள் அமைகிறது.

    இதனை எழுதுபொழுது எனது ஆள்நிலை (personal) விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாலேயே நிற்பதாக நான் கருதும் வரலாற்றின் தர்க்கத்திற்கு இங்கு முதலிடம் கொடுத்துள்ளேன். இந்தக் கட்டுரையில் கூறப்படுவன விரிவான விவாதங்களுக்கு உட்படுத்தப்படவேண்டியவை என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டை இன்று எதிர்நோக்குகின்ற இந்த, மேற்செலவைத் தடுக்கும், கருத்துநிலைத் தடைப்பாட்டை (ideological impasse) உடைப்பதற்கான ஒரு மனந்திறந்த புலமைக் கருத்தாடல் நடத்தல்வேண்டும். அதைச் செய்வதற்கான புலமை எதுவும் வளமும் தமிழ்நாட்டில் இன்று நிச்சயமாக உண்டு.

    தமிழகத்தின் இன்றைய வரலாற்றுக்கட்டம், அத்தகைய ஒரு கருத்தாடலைக் கோரி நிற்கின்றது.

    சமூக சக்தியாகத் தொடங்கி, அரசியல் சக்தியாக மாறியுள்ள திராவிடக் கருத்துநிலைக்கான வரலாற்றுத் தேவை இன்று உண்டா; உண்டெனின் அது எவ்வாறு பரிணமிக்கின்றது என்பது சுவாரசியமான வினாவாகும்.

    திராவிட இயக்க வளர்ச்சியைத் தமிழ்நாட்டுப் புலமையாளர் மிக நுண்ணிதாக ஆராயத் தொடங்கிவிட்ட இன்றைய காலகட்டத்தில், திராவிடக் கருத்துநிலையின் வகிபாகத்தை (role) மிக ஆழமாக ஆராயவேண்டிய தேவை அவசியமாகிறது, திராவிடக் கருத்துநிலை தனது வரலாற்றுப் பணியை நிறைவேற்றிவிட்டதா என்பது ஒரு முக்கிய வினாவாகும்.

    இந்தக் கருத்தாடலில், மார்க்சியப் பகுப்பாய்வாளர்கள், தமிழகச் சமூக உருவாக்கம் (social formation) பற்றிய தீட்சண்ணியம் நிறைந்த ஆய்வுகளால் இக்கருத்தாடலுக்கு நிறைய உதவலாம்.

    இக்கட்டுரைக்கான நன்றிக் கடப்பாட்டில் இரண்டு நிலைகளுக்குரிய நன்றிக் கடன்கள் உள்ளன. முதலில் இது 1997 இல் எழுதப்பட்டபொழுது ஏற்பட்டவை. திராவிட அரசியற் போக்குகளைச் சில புதிய கண்ணோட்டத்தில் பார்க்குத் தராக்கி டி.சிவராம் இந்தக் கட்டுரைப் பொருள்பற்றி விரிவாக விவாதித்து உதவினார். நண்பர் தெ. மதுசூதனனுடைய உதவி மறக்க முடியாதது. செ.யோகராசா சில முக்கிய நூல்களைத் தந்து உதவினார். மாநாட்டு மட்டத்தில் நண்பர் அ.மார்க்சினுடைய குறிப்புரைகள் பெரிதும் உதவின. சென்னையில் இதுபற்றி அப்பொழுது விவாதித்துதவியவர்கள் தோழர் சி.மகேந்திரன், வீ.அரசு ஆகியோர்.

    இரண்டாவது கட்டம் இப்பொழுதுள்ளதாகும். இது 'ஆராய்ச்சி' சஞ்சிகைக்கான கட்டுரையாகவும் தனிச் சிறு நூலாகவும் வெளிவருகின்ற இந்தக் கட்டமாகும். மாநாட்டுக்கான கட்டுரை வரைவினைத் தமது உன்னிப்பான விமர்சனங்களை வைத்து விளங்க எடுத்துக்கூறி உதவினார் டாக்டர் மே.து. ராசுகுமார்; அவருக்கு எனது நன்றி. இவ்விடயம் தொடர்பான கருத்தாடல் நடத்தியுதவியவர் முனைவர் தெயவசுந்தரம்; இப்பொழுது இதனைத் திருத்துவதற்கான அலுவல்களில் உதவியுள்ளவர் கி.பார்த்திபராஜா; இவர்களுக்கு எனது நன்றி உரித்து.

    பல்கலைக்கழக விருந்தினர் விடுதி

    மெரினா சென்னை 600 005

    17.09.1999 கார்த்திகேசு சிவத்தம்பி

    திராவிட இயக்கக் கருத்துநிலையின்

    இன்றைய பொருத்தப்பாடு

    -ஒரு வரலாற்று நோக்கு

    'கருத்துநிலையின் பிரச்சினை', அது ஒரு பௌதீகக் கொள்கை அமைப்புக்குள் நின்றுகொண்டு, சமூகக் கருத்துக்கள் எவ்வாறு எழுகின்றன என்பது பற்றி ஒரு விளக்கம் தரவேண்டும் என்பதாகும். ஒரு குறிப்பிட்ட சமூக உருவாக்கத்தில் இவற்றின் (சமூகக் கருத்துக்களின்) வகிபாகம் யாது என்பதை நாம் விளங்கிக்கொள்ளல்வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்தை மாற்றுவதற்கு எவ்வாறு போராடவேண்டுமென்பதைத் தெரிவித்து, சமூகத்தின் சமதர்ம மாற்றத்துக்கான பாதைகளைத் திறந்துவிடலாம். 'கருத்துநிலை' (ideology) என்பதன் மூலம் நான் கருதுவது, பல்வேறு வர்க்கங்களும் சமூகக் குழுமங்களும், சமூகமானது எவ்வாறு இயங்குகின்றது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் அந்த இயங்குமுறையின் தன்மையை அறிந்துகொள்வதற்கும், வரைவிலக்கணம், கொடுப்பதற்கும் தெளிவாக விளக்குவதற்கும் பயன்படுத்தும் மனக் கட்டமைப்புக்களையேயாகும்-அதாவது அது பயன்படுத்தும் மொழிகள், எண்ணங்களுக்கான வகைபாடுகள் சிந்தனைப்படிமங்கள், சித்திரிப்பு முறைகள் ஆகியவை கருத்துநிலையாகும்.

    எனவே கருத்துநிலை பற்றிய பிரச்சினை என்பது, பல்வேறு கருத்துக்கள் எவ்வாறு மக்கள் திரள்களின் மனங்களை இறுகப்பற்றி, அதன் காரணமாக, ஒரு 'பிண்டப் பிரமாணமான சக்தியாக' அமைகின்றது என்பதேயாகும். பெரிதும் அரசியல் மயப்படுத்தப்பட்ட இந்தப் பார்வைப்பரப்பில், கருத்துநிலை பற்றிய கொள்கை (theory) என்பது, கிராம்ஸ்சி கொள்வதுபோன்று, எவ்வாறு சில கருத்துத் தொடைகள் (sets of ideas), ஒரு வரலாற்றுக் குழுமத்தின் சிந்தனை மீது மேலாதிக்கம் செலுத்துகின்றன என்பதாகும்; அவ்வாறு செய்யும்பொழுது, அது, அந்தக் குழுமத்தை அதனுள்ளேயே நின்று அதனை ஒற்றுமைப்படுத்தி, முழுச் சமூகத்தின் மீதும் அதற்குள்ள அதன் மேலாண்மையையும் தலைமையையும் பேணுவதற்கு உதவுகின்றது என்பதை அறிந்து கொள்வதாகும். கருத்துநிலை என்பது, ஒரு குறிப்பிட்ட வகை அதிகாரத்தையும் மேலாண்மையையும் பேணுவதற்கான நடைமுறைநிலை, எண்ணக்கருக்கள் அவற்றுக்கான மொழிகள் சம்பந்தப்பட்டதாகும். அல்லது, குறிப்பிட்ட ஒரு சமூக உருவாக்கத்துக்குள், மக்களிற் பெருந்தொகையினரை, அவர்கள் தம் கீழ்நிலையை மன இசைவுடன் ஏற்றுக்கொள்வதற்கும், ஏற்று அதனுள் வாழ்வதற்கும் வேண்டிய எண்ணக்கருக்கள் முதலியன பற்றியதாகும். அது மாத்திரமல்லாது கருத்துநிலை என்பது, நடப்பு நிலையிலுள்ள முறைமைக்கெதிராக வரலாற்று முக்கியத்துவமுள்ள செயற்பாடுகளில் ஈடுபட மக்கள் திரளை ஊக்குவிக்கும், புதிய பிரக்ஞை வடிவங்கள், உலகம் பற்றிய புதிய எண்ணக்கருக்கள் தோன்றுகின்ற நடைமுறைகள் பற்றியதுமாகும். சமூகப் போராட்டத்தின்பொழுது இந்த விடயங்களே விவாதங்களுக்குள்ளானவையாக அமைகின்றன. இவற்றை விளக்குவதற்கு, இவற்றை நன்கு புரிந்துகொள்வதற்கும், இந்தக் கருத்துநிலைப் போராட்டத்தின் களங்களை விளக்கி அவற்றை வசப்படுத்துவதற்கும் எமக்கு ஒரு கொள்கை தேவைப்படுகிறது.

    அது வெறுமனே ஒரு கொள்கையாகவல்லாது, நாம் விளக்கவிருக்கும் சிக்கற்பாடுகள் எல்லாவற்றுக்கும் போதுமானதான ஒரு கொள்கையாக இருத்தல்வேண்டும்.*

    -- ஸ்ருவாற் ஹோல்

    1

    திராவிடக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு பற்றி நோக்க முனையும் நம்முன் உள்ள வினாக்கள் தெட்டத் தெளிவானவை:

    --இக் கருத்துநிலை எவ்வாறு தோன்றுகிறது?

    --அது எவ்வெவ் அமிசங்களைக் கொண்டுள்ளது?

    -------

    * Stuart Hall. 'The Problem of Ideology: Marxism without Guarantees', Critical Dialogues in Cultural Studies, David Morlay Kuang Hsing Chan, London, 1996.

    ....

    --இது எவ்வாறு மக்கள் திரளின் மனங்களைக் கவ்விப் பிடித்து ஒரு பிண்டப் பிரமாணமான (நிஜமான) சக்தியாக அமைகின்றது; அமைந்துள்ளது?

    என்பனவே அவை.

    2

    இந்த விஷயங்களைப் பற்றிய ஆய்வுக்கு இறக்குவதற்கு முன்னர், தமிழ்நாட்டின் முக்கியமான அண்மைக் காலத்துப் புலமை வளர்ச்சியொன்றினைப் பதிவு செய்தல் அவசியமாகும்.

    திராவிட இயக்கம் பற்றி 1984 இல் நான் எழுதிய ஒரு நீண்ட கட்டுரையில்

    திராவிட இயக்கம் பற்றிய செயற்பாடுகளுக்குத் தளமாக எந்த மொழி அமைகின்றதோ அந்த மொழியில்--தமிழில்--இது சம்பந்தமாக விமர்சனபூர்வமான ஆய்வு எதுவும் இதுவரை வெளிவராதது துரதிர்ஷ்டவசமானது ஆகும்.

    என்று குறிப்பிட்டிருந்தேன்.* ஆனால் இப்பொழுதோ, குறிப்பாக 1990 முதல் ஏற்பட்டுள்ள ஒரு புலமை முன்னேற்றம் காரணமாக இன்று இரண்டு முக்கிய வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன:

    1 திராவிட இயக்கம், கருத்துநிலை தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கங்கள், விளைவுகள் பற்றிய விமர்சனபூர்வமான தமிழ் ஆய்வெழுத்துக்கள்;

    2 திராவிட இயக்கத்தின், நோக்கம், செயற்பாடு, முனைப்பு ஆகியன பற்றிய தமிழ்நிலைநிற்கும் ஒரு நோக்கினை வெளிப்படுத்துகின்ற தமிழர்களாகிய புலமையாளர்களின் ஆங்கில எழுத்துக்கள்.

    முதலில் கூறப்பட்டுள்ள செல்நெறிக்கு உதாரணம் நிறப்பிரிகைக் குழுவினர் ஆற்றியுள்ள பணி. பெரியாரியம் பற்றிய விவாதத்தை ஒரு புதிய தளத்துக்குக் கொண்டு சென்றுள்ளமை முக்கியமான ஒரு விஷயமாகும். ஆய்வாளர்கள், விமர்சகர்கள் எனத் தனிப்பட நோக்கும்பொழுது, நிறப்பிரிகைக் குழுவினரும்

    ----

    * K. Sivathamby, Understanding the Dravidian Movement--Problems and Perspectives, Chennai, 1995.

    .....

    வேறு சிலரும் முக்கியமாகின்றனர். கோ. சேவகன், கருணா மனோகரன், அ. மார்க்ஸ், பொ. வேலுசாமி, ராஜ் கௌதமன் என இந்தப் பட்டியல் நீளும். இவர்கள் எல்லோரும் ஒரே கருத்தினை உடையவர்கள் அல்லர். ஆனால் திராவிடக் கருத்துநிலை பற்றிய கருத்தாடலில் (discourse) இவர்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர். இந்தப் பட்டியலில் எஸ்.வி. ராஜதுரை, வி. கீதா (பெரியார் 1996) ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.

    திராவிடக் கருத்து நிலை, இயக்கம் பற்றிய வரலாறெழுதியலில் தமிழ் நிலைப்பட்ட கண்ணோட்டத்தை நிலை நிறுத்தி, இதுவரை இது பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்கள் சிலவற்றின் கருத்துநிலை எடுகோள்கள் ஆகியனவற்றைக் கேள்விக்குள்ளாக்கி, இந்த விவாதத்திற்கு இது சம்பந்தப்பட்ட சர்வதேச ஆராய்ச்சியாளரிடையே தமது வருகையையும் இருக்கையையும் வன்மையாகப் பதிவு செய்துகொண்டவர்களாக, எம்.எஸ்.எஸ். பாண்டியன், ஆ. இரா. வெங்கடாசலபதி, எஸ். ஆனந்தி ஆகியோரைக் குறிப்பிடல் வேண்டும். எஸ்.வி. இராஜதுரையும் வி. கீதாவும், ஆங்கிலத்தில் இக்காலப் பகுதியில் எழுதியுள்ளனர். இந்த எழுத்துக்கள் காரணமாக, இக்கண்ணோட்டத்தில் தொண்ணூறுகளுக்கு முன்னர் நம்பியாரூரன் மங்கள முருகேசன், ஈ.சா. விஸ்வநாதன் ஆகியோரின் ஆய்வுகள் மீள நினைவுகூரப்படுகின்றன.

    இந்தப் புலமைப் பங்களிப்புக்கள், திராவிட இயக்கம் பற்றியும் பெரியார் ஈவெரா அவர்களின் கொள்கைகள் பற்றியும் செய்யப்படும் ஒரு முக்கியமான சமூக-அரசியல்வாத விவாதத்தினூடேயே வந்துள்ளன. இவ்விவாதம் தமிழகத்தின் இனம், சமூக அறிவியல் ஆய்வாளர்களிடையே ஒரு புதிய முனைப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ் நாட்டினது வரலாற்றின் இதுவரை தெரியப்படாத பகுதிகள் ஆய்வு ஒளிவீச்சுகளுக்கு ஆட்படுகின்றன.

    இந்தக் கருத்தரங்கினைக்கூட இந்தப் புலமையார்வத்தின் ஒரு வெளிப்பாடு ஆகவே கொள்ளவேண்டும்.

    3

    திராவிடக் கருத்துநிலையின் பொருத்தப்பாடு பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் பொழுது, தொடக்கத்தில் திராவிடக் கருத்துநிலை என்பது யாது, அது எதனை அல்லது எவற்றைச் சுட்டி நிற்கின்றது என்பதனைத் தெளிவுபடுத்திக் கொள்ளல் அவசியம்.

    தமிழ்நாட்டில் வாழும் பிராமணரல்லாத சாதிக் குழுமங்களைச் சேர்ந்தவர்கள், தங்களின் சமூக நிலைமையையும் தங்கள் சமூக அசைவியக்கத்தையும் வரையறை செய்த 'பிராமணக் கருத்து நிலை' தம்மீது திணித்ததென அவர்கள் கண்ட, கொண்ட மேலாண்மைக்கெதிராக நடத்திய போராட்டங்களினூடே மேற்கிளம்பியதும், அந்தப் போராட்டங்களை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதுமான சிந்தனை நிலைப்பாடே, 'திராவிடக் கருத்துநிலை'யாகும்; அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் 'தமிழ்ப் பிரக்ஞை' ஏற்படுவதற்கு இது தளமாக அமைந்து வந்துள்ளது. இது, மதம் சமூக நடத்தை முறை பற்றிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தினை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது (அந்தக் கண்ணோட்டத்தின் பிரதான எண்ணக்கருக்கள் 'நாத்திகம், பகுதித்தறிவுவாதம், சுயமரியாதை' என்பனவாகும்; இது 'ஆரிய'த்தைப் 'பிராம­யமாக நோக்குவதுடன், 'திராவிடம்' என்பது 'பிராம­யம்' என்று கொள்ளப்படுவதன் எதிர்நிலையாகக் கொள்ளப்படுவதாகும். இது காலனித்துவ ஆட்சிக் காலத்தில் வடிவம் பெற்றது. அத்துடன், இந்திய வரலாறு, பண்பாடு பற்றிய காலனித்துவ வாசிப்புக்களினால் உந்துதல் பெற்றதும் உண்மையாகும். (சிவத்தம்பி 1979).

    இந்தச் சொற்பிரயோகத்துக்கு, ஆங்கில ஆட்சி, தென்னிந்திய நிர்வாகத்துக்கெனத் தோற்றுவித்த சென்னை மாநிலம் (Madras Presidency) என்ற அலகினது சனத்தொகையமைப்பினுள் ஒரு நியாயப்பாடு இருந்தது. அந்தச் சென்னை மாநிலம் உள்ளடக்கியிருந்த கன்னடப்பிரதேசம், ஆந்திரா (தெலுங்கானா நீங்கலாக), தமிழ்நாடு, (சமஸ்தானங்கள் தவிர்த்த) கேரளம் ஆகிய பிரதேசங்களை இணைப்பதற்கு, அவற்றினூடே ஓர் ஒருமைப்பாட்டைக் காண்பதற்கு, அக்காலத்திற் 'கண்டு பிடிக்கப் பெற்ற', 'திராவிடர்' என்ற மொழி நிலைக் கருதுகோள் உதவிற்று (சிவத்தம்பி 1995). இந்திய வரலாறெழுதியலில் இந்தத் தொடர், தென்னித்தியாவின் பிரிநிலைத் தன்மையையும் தமிழரின் தனித்துவத்தையும் குறிப்பாகக் கொள்ளப்பட்டது. 'திராவிடம்' என்பது 'ஆரிய'த்தின் எதிர்நிலையாகக் கொள்ளப்பட்டது.

    இந்தச் சொற்பிரயோகத்துக்கான ஒரு வன்மையான தேவையுமுள்ளது. தமிழ்நாட்டில் வாழும் சகல சமூகக்குழுமங்களையும் 'தமிழர்' என்ற தொடராலே சுட்டிவிட முடியாது. தெலுங்கு பேசும் சில குழுமங்களும் (ரெட்டியார், நாயுடு முதலியோர்) கன்னடம் பேசும் சில குழுமங்களும் (நாயக்கர் முதலியோர்) இந்தப் பதக்குடையின் கீழ் வரமாட்டார்கள். அத்துடன் 'தமிழர்' என்னும் சொல், தமிழ்ப் பிராமணர்களையும் உள்ளடக்கிவிடும். இதனால் திராவிடர் என்ற பதப்பிரயோகம் அவசியமாகிறது என்று கருதப்படுகிறது.

    மேலும் இந்தச் சொற்பிரயோகம், கடந்த காலத்து வரலாற்று நினைவுகளைத் தரும் ஒன்றாகவும் பயன்படுகிறது. இந்தியாவின் ஆரிய வருகைக்கு முற்பட்ட திராவிட வரலாற்றுப் புகழை மீட்பதற்கும் (சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம் பற்றிய சில கொள்கைகள்) தமிழ்நாட்டில், ஆரியச் செல்வாக்குக்கு முற்பட்டதாகக் கருதப்படும் தமிழ் நாகரிகத்தைச் சுட்டவும் (சங்க காலம்) இந்தப் பதம் வாய்ப்பான ஒன்றாக அமைகின்றது. மாக்ஸ் முல்லர் வழிவந்த இந்தோ-ஆரிய மேன்மைக் கோட்பாட்டின் எதிர்நிலையாக இது வழங்கி வருகின்றது.

    குறிப்பாக மொழியியல் ஆய்வில் இது ஒரு வரலாற்று நிதர்சனமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் வழங்கும் இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து (சமஸ்கிருதம், அதன் வழிவருவன) வேறபட்ட மொழியமைப்பைக் கொண்ட அடுத்த பிரதான மொழிக் குடும்பம் 'திராவிடமே' ஆகும். அண்மைக்கால மொழியியல் ஆராய்ச்சிகளில் திராவிட மொழியியல், இந்திய மொழியியல் துறையில் முக்கிய இடம் பெறுவதாகும்.

    இவற்றைவிட 'திராவிடர்', 'திராவிடக் கருத்து நிலை என்ற இந்தப் பதப்பிரயோகங்கள், இன்று, அதாவது சமகாலத் தமிழ்நாட்டுச் சமூகப் பார்வையில், பெரியார் ஈவெராவினால் நடத்தப்பெற்ற சுயமரியாதை இயக்கத்தினை நினைவுறுத்துவனவாக அமைகின்றன. இந்தச் சுயமரியாதை இயக்கத்தின் மெய்யியல் எடுகோள்கள் ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய பகுத்தறிவுவாதத்தின் (Atheism) அடியாக வந்தனவாகும். இங்கர்சால் என்ற அமெரிக்கச் சிந்தனையாளரின் எண்ணங்கள் இதிற் பெரும்பங்கு வகிக்கின்றன. சென்னையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பாகத்தில் நிறுவப்பட்ட பிரம்மஞான இயக்கம் (Theosophical Movement) சம்பந்தப்பட்டவர்கள் இங்கர்சால் பற்றிச் சிரத்தை கொண்டிருந்தனர் என்பதற்கான சில வரலாற்றாதாரங்கள் உள்ளன (ஹார்வாட் பல்கலைக்கழக இறையியல் துறை நூலகத்திலுள்ள பிரசுரிக்கப்படாத அமெரிக்க மிஷன் ஆவணங்கள்).

    'திராவிடம்' என்ற இத்தொடர் இந்தியச் சுதந்திர காலத்துக்கு முன்னரிருந்து கையளிக்கப்பட்ட ஒரு சிந்தனை மரபின் பெறுபேறாக அமைகின்றது என்பது இதுவரை கூறியவற்றினாலே புலனாகின்றது. சுதந்திர காலம் முதல் இத்தொடர் வன்மையான அரசியல் கட்சிநிலைப் பதமாகவும் தொழிற்படுகிறது. 1949 முதல் இன்று வரையுள்ள சென்னை/தமிழ் நாட்டு மாநில ஆட்சி 'திராவிட' என்ற அடையைக் கொண்ட கட்சிகளால் நடத்தப்படுவதையும், அக்கட்சிகளுக்குள்ளே பிளவுகள் ஏற்படும்பொழுதுங்கூட 'திராவிட' என்ற அடை தொடர்ந்து பேணப்படுவதையும் (திமுக, அதிமுக, மதிமுக முதலியன) நோக்கும்பொழுதும் இப்பதம் ஒரு அரசியற் குறியீடு ஆகியுள்ளது என்பது புலனாகின்றது. அரசியற் பலத்தை நாடாத, ஆனால் தமிழகத்தின் பிரதான அமுக்கக்குழுக்களில் (Pressure groups) ஒன்றாக விளங்கும் திராவிடர் கழகமும் (பெரியாரின் உத்தியோக பூர்வவாரிசாகத் தன்னைச் சுட்டிக் கொள்வது) அந்தப் பிரயோகத்தையே பயன்படுத்துவது நோக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

    4

    'திராவிட' என்னும் அடையின் இன்றைய அர்த்த விகசிப்புக்களை நோக்கிய நாம் அடுத்து , இத்தொடர் சுட்டும் கருத்து நிலையின் இன்றைய (சமகால) பொருத்தப்பாட்டை நோக்கத் தொடங்கல்வேண்டும்.

    அவ்வாறு நோக்க முனையும்பொழுது மூன்று முக்கிய விடயங்கள் ஆராயப்படவேண்டியனவாகின்றன:

    1 திராவிட இயக்கம்/கருத்துநிலை பெற்றிருந்த வரலாற்று வகிபாகம்--அதாவது வரலாற்று நோக்கில் அது ஆற்றியுள்ளவை;

    2 அனைத்திந்திய மட்டத்தில் இன்று காணப்படும் அரசியல் நிலைமை;

    3 ஏக வல்லரசாண்மை கொண்ட பூகோளக் கிராமத்திலும், சர்வதேசியச் சந்தை முதலாளித்துவம் உலக ஆண்மை செலுத்தும் நிலையிலும், தமிழ்ப் பிரக்ஞை/தமிழ்த் தேசியம் பெறும் இடம்.

    இந்த மூன்று அமிசங்களும் மிக விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியனவாகும

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.