Jump to content

narathar

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  4514
 • Joined

 • Last visited

 • Days Won

  10

Posts posted by narathar

 1. 8 hours ago, Justin said:

  உங்களுடைய பதில்கள் நேரடியாக இல்லையே நாரதர்? 2012 இல் ஏனைய அமைப்புகள் விலக என்ன காரணமென்று தான் கேட்டேன். இம்மானுவேல் பாதர் தடை வர முதலே போய் விட்டார், இப்போது அவரை வெளியேற்ற காரணங்கள் இல்லையென பேசாமல் விட்டிருக்கலாம். இன்னும் clerical கொலர் அணிந்த படி வேறு இருக்கிறார், எனவே அரசு எதுவும் செய்யத் துணியாது.

  ஆனால், உங்கள் உறுப்பினர் எண்ணிக்கை பற்றிய கேள்வியைத் திருப்பிக் கேட்டால், எத்தனை பேர் அந்த மாற்று அறிக்கை விட்ட 6 அமைப்புகளிலும் இருக்கிறார்கள்? 9 மாதங்கள் முன்பு RGTF இனை ஆரம்பித்து சுரேனை நீக்க வேண்டுமென ஆரம்பித்த கையெழுத்து வேட்டையில் 180 கையெழுத்துகள் சேர்ந்திருக்கின்றன என்றால் RGTF இன் மனித பலம், அல்லது மக்களாதரவு எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்?
   

  https://www.colombotelegraph.com/index.php/gtf-has-lost-their-way-no-transparent-and-no-democratic-governance-british-tamils-breakaway/

  மேற் குறிப்பிட்ட அறிக்கை வெளியிட்டது வந்து பல வருடங்களாகிறது. இதன் பின்னர் அனைத்து அமைப்புக்களும் வெளியேறி விட்டன.  GTF ஒரு கம்பனியாக பதிவு செய்யப்பட்டது. அது ஒரு பொது அமைப்பாக் கூட இல்லை. 

  Despite some initial successes, GTF and its leadership have gradually lost their way – principally because they have turned their back on GTF’s founding values, such as collective decision-making, democratic governance, transparency, inclusiveness and grassroots activism.” says the British Tamils Forum

 2. சிறி லங்கா வுடன் பேசி எதனையும் தமிழர் பெற முடியாது. சுரேன் GTF அறிக்கை கள் சிறிலங்கா வின் ஊடகங்கள் மூலமே வெளியிடப் படுகின்றன. மேலும் தடை செய்யப்பட்ட gtf இன் தலைவர் எவ்வாறு சிறிலங்காவில் வாழ்கிறார். சுரேன் பல சிறிலங்கா அரசியல் வாதிகளை பல முறை சந்தித்து உள்ளார். இவருக்கு இவ் அதிகாரத்தை எந்த அமைப்பு வழங்கியது ? GTF இல் எத்தனை பேர் இருக்கிறார்கள்.

  அமெரிக்க அரசுடனான பேச்சு வார்த்தைகள் தான் நடக்க இருக்கின்றன. அதற்காக ன அடிப்படைகளே வெளியிடப்பட்டது.

 3. Global Tamil Forum (GTF) does not represent the Tamil Diaspora

  https://www.einpresswire.com/article/552174901/global-tamil-forum-gtf-does-not-represent-the-tamil-diaspora

   

  சுரேன் எனும் தனி நபர் நடாத்தும் இந்த அமைப்பு சிறிலங்கா அரசால் தற்போது வழி நடாத்தப் படுகிறது.

  • Like 1
  • Thanks 2
 4.  
   

   

  • விளம்பரம்

  இலங்கைத் தமிழர்களின் பொது கொள்கைகள் பற்றிய விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

  தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் கையொப்பமிடப்பட்ட தமிழர்களின் பொது கொள்கைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

  சர்வதேச அளவில் நடத்தப்பட்ட மற்றும் கண்காணிக்கப்பட்ட வாக்கெடுப்பிற்கு அமைய இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

  அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விடயங்கள் வருமாறு,

  இலங்கையில் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் 1948ஆம் ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மற்றும் அவர்களின் சந்ததியினருக்கு ஒரு ஜனநாயக, அமைதியான, நிரந்தர மற்றும் அரசியல் தீர்வு காண அனுமதிப்பது தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

   

   

  இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிக்கு ஒரு இடைக்கால சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை முன்னெடுத்தல் இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தை இரத்து செய்தல் இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் போன்ற விடயங்களுக்காக இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும், இனப்படுகொலை மற்றும் சித்திரவதைக்கு எதிரான மாநாட்டிலும் பரிந்துரைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

   இதேவேளை, கடந்த காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் அமெரிக்க அரசுடன் பேசுவதற்கான பொதுகொள்கைகளை அமெரிக்காவை தளமாக கொண்ட ஆறு அமைப்புகள் வரையறுத்துள்ளன.

  அமெரிக்க அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அந்நாட்டு வெளியுறவுதுறை அமைச்சுடன் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதோடு இச்சந்திப்பு விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.   

  அத்துடன், இனிவரும் காலங்களில் இலங்கை அரசு மற்றும் சர்வதேச நாடுகளுடன் பேசப்படும் பேச்சுக்களின் போது மேற்குறிப்பிட்டுள்ள கொள்கைகளின் அடிப்படையிலேயே பேச வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

  https://tamilwin.com/article/explanation-of-the-general-policies-of-the-tamils-1632418677

  • Thanks 1
 5. On 2021-9-17 at 11:26, zuma said:

  மற்றைய இனக் குழுமங்கள் எல்லாம் ஆப்பிரிக்கா கண்டத்தில்  தோன்றிய ஹோமோ சேப்பியன்ஸ் இல்  இருந்து வந்தவர்கள்.நாமெல்லாம் லெமூரியா கண்டத்தில் இருந்து, மண் தோன்றா, கல்தோன்றா காலத்தில்  தோன்றிய தூய இனக் குடிகளாகும். தக்கன பிழைக்கும் என்பது கூர்ப்புக்கும் மாத்திரம் அல்ல, இருப்புக்கும் பொருந்தும்

  இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தூய இனம் என்று எதுவும் இல்லை. இவ்வாறன ஆதாரங்கள் அற்ற கதைகளை விடுத்து அறிவியல் துணை கொண்டு தமிழர் வரலாற்றை எழுதுவதே சிறந்தது.

  • Like 1
 6. அடையாளம் பற்றிய ஒரு ஆழமான  பார்வை. அடையாளம் மாறுபடுவதும் அது ஒரு தொடர் ச்சியையும் உடையது. மாறுவதும் மாறிக் கொள்வதும் மானிட வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கிறது. தமிழ் அடையாள அரசியலை இந்தப் புரிதலுடனேயே அணுக வேண்டும். 

  • Like 1
  • Thanks 1
 7. நாம் தமிழர் தேவையற்ற நிலைப்பாடுகளை எடுத்து பலரை இழந்துள்ளது. அரசியல் தெளிவின்மை காரண மாக இருக்கலாம். இவற்றில் இருந்து புதிய சக்திகள் வரலாம். நாம் தமிழரே சுய விமரிசனம் செய்து வளரலாம்.  பெரியார் மீதும் திராவிட இயக்கம் மீதும் வன்மம் பாராட்டாமல் இன்றைய அரசியல் தமிழ்த் தேசியமே என்று சொல்லப் செயற்கை பட்டிருந்தால் பலரை உள்வாங்கி இருக்கலாம்.

  இன்றைய அரசியல் அதிகாரம் அடையாள அரசியலிலேயே பிறக்கிறது. மொழி வழி மாநிலம். இயற்கை யைப் பாதுகாத்து வளர்ச்சி. சமத்துவப் பொருளாதாரம் . சம உரிமை . மதச் சார்பின்மை . இவை எல்லாமுமாக தமிழ்த் தேசிய அரசியல் இருந்தது. சீமான் இவற்றைப் பின் பற்றினாலே விரைவாக வளரலாம்.

 8. இன்றைய செய்திகள் 3500 வருட பழமையான மனிதக் குடியேற்றம் பற்றிக் கூறுகிறது. இவர்கள் ஆபிரிக்கா வில் இருந்து வந்த மூத்த குடிமக்கள் இவர்கள் ஏதாவது ஒரு ஆபிரிக்க மொழி பேசி இருக்கலாம். ஆகவே இவர்கள் தமிழர் என்று சொல்வதோ இல்லை திராவிடர் என்று சொல்வதோ அபத்தமானது. அவர்கள் தங்களை வேறு பெயரில் அழைத்திருக்கலாம். ஆகவே என்ன அடையாளம் என்பதை அன்றைய காலகட்டமே தீர்மானிக்கிறது. இன்றைக்கு தமிழர் என்னும் அரசியல் தான் தேவை ஆகி இருக்கிறது. 

  மொழி வழி மானில உரிமைக்கோ ஈழ விடுதலைக்கோ ஏன் புலம் பெயர் தமிழர் நலனுக்கோ தமிழர் என்னும் அடையாள அரசியலே தேவையாக இருக்கிறது.

 9. தென் திசை வந்த ஆரியரே திராவிட பார்பனர் என அழைக்கப்பட்டனர். திராவிட என்ற சொல்லே வட மொழிச் சோல். பெரியார் தென் மாநிலங்களை இணைத்து தனி நாடு கேட்டார். அந்த கால கட்டத்திற்கு அது சரியான அடையாளம் ஆகும் . மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் தமிழ் என்னும் அடையாளமே அரசியல் தேவையாகிறது. அதன் அடிப்படையிலேயே மானில உரிமை சமத்துவம் எல்லாம் பேசப்படுகிறது. 

 10. ஒரு மக்கள் கூட்டம் தம்மை எவ்வாறு அழைப்பது என்பதை அன்றைய அரசியலே தீர்மானிக்கிறது. ஒரு கால கட்டத்தில் திராவிட அரசியல் தேவையானதாக இருந்திருக்கலாம்.இப்போதும் அது தேவையா என்பதை மக்களே தீர்மானிப்பார். இதில் எது தமிழ் எது திராவிடம் என்பது அர்த்தம் அற்ற தேடல். மொழி மாறும் மக்கள் சமூகம் தொடர்ச்சியான குடிப்பரம்பலையும் கலப்பையும் கொண்டிருக்கும். இன்றைய அரசியல் தமிழ்த் தேசிய அரசியல் தான். ஈழ விடுதலைப் போரும் இனப்படுகொலையும் தமிழ் நாட்டு மக்களை தமிழ்த் தேசிய அரசியலை நோக்கி தள்ளி உள்ளது. யார் யார் தம்மை தமிழராக அடையாளப் படுத்துகிறார்களோ அவர்கள் எல்லோரும் தமிழர்களே.

  சாதிய அடையாளம் ஒழிந்து எல்லோரும் தமிழரே என்னும் நிலை வர வேண்டும். 

  • Like 3
  • Thanks 2
 11. உங்களை பல்துறை விற்பன்னர் என்று நீங்களே நினைத்துக் கொள்வது ஒரு உளவியற் பிரச்சைனையாகவே நான் கருதுகிறேன்.- நாரதர்

   

  நாரதர் நான் எங்கே பல்துறை விற்பனன் என்று சொன்னேன? ஆதாரத்தை வெட்டி ஒட்டுங்கள். இப்படி மற்றவர் நினைப்பதை சொல்லமுடியும் என நினைப்பது ஒரு உளவியல் பிரச்சினையல்லவா நண்பரே.

   

  வீடுவந்து 72 மணிதியாலங்கள்தான் ஆகிறது அதற்குள்ளேயே ஏன் இப்படி?

   

  நாரதர் இராசவன்னியன் உங்கள் ஆலோசனைக்கு நன்றி,

  நீங்கள் களத்தில் வாழும் பல்லாய்ரக்கணக்கான முஸ்லிம் தமிழ் உறவுகளை கேட்டுப்பாருங்கள்.  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் விரும்பும் கோரும் எனது ஆய்வுப் பணிகளிலும் தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்கான  பணிகளிலும் நான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. இலங்கை அரசு தமிழரையும் முஸ்லிம்களையும் சேர்த்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க நான் முயல்வதாக குற்றம் சாட்டுகிறது. சிங்களப் பத்திரிகைகளும் அதனையே சொல்கின்றன. நீங்கள் இப்படி சொல்கிறீங்க. 

   

  அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை

   

  //அர்ஜுணன், ஒருதுறையில் இருக்கும் அதிஸ்ட்டமான வாழ்வு எனக்கு வாய்க்கவில்லை.

  பலதுறையில் இருப்பதாலான என் ஞாபக மறதி எல்லோருக்கும் தெரியும்.//

   

 12. செயபாலன் , நிழலியும் துளசியும் மட்டும் அல்ல உங்களை நன்கு  அறிந்தவர்கள், பொது வெளியில் எழுதுபவர்கள் எல்லோருடமும் உங்களைப் பற்றிய பார்வை இவ்வாறே உள்ளது.

   

  உங்களை பல்துறை விற்பன்னர் என்று நீங்களே நினைத்துக் கொள்வது ஒரு உளவியற் பிரச்சைனையாகவே நான் கருதுகிறேன். ஆகவே உங்களின் தனிப்பட்ட பிரச்சினையை, தமிழர்களைத் துன்பப்படுத்தும் செயற்பாடாக மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். துன்பப்பட்ட துன்பப் படும் மக்களுக்கு நீங்கள் செய்யக் கூடிய பேருபகாராம், கவிதை எழுதுவது படத்தில் நடிப்பது என்னும் துறைகளில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.இது உங்களுக்கும் நல்லது தமிழ் மக்களுக்கும் நல்லது. எனது யோசனையை சீர்தூக்கி நடப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

  நன்றி.

  • Like 1
 13. நிழலி! இன்றைக்கு கவிஞர் நாடுகடத்தப்பட்டிருக்கிறார். அவர் என்றைக்காவது ஒருநாள் மீண்டும் தாயகம் செல்லுவதை நோக்கமாக கொண்டிருப்பார். இதற்கு சிலரை நோகடிக்காமல் இருப்பது அவசியம்தான். வேறு வழியில்லை.

  கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டு திரும்பி வந்தவர்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போன்று இருக்கின்ற காலத்தில், கவிஞரால் அது பற்றி பேசவாவது முடிகிறது.

  எங்கே ஆக்ரோசத்தை வெளிப்படுத்த வேண்டும், எங்கே நிதானத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.

   

  சபேசன் அப்படியாயின் உங்களின் அண்மைய கருத்துக்களும் இவ்வாறான உள் நோக்கம் கொண்டவையோ? உங்களின் தனிப்பட்ட நலங்களுக்காக உண்மைகளைப் பொய்களாக எழுதும் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள்  எமது போராட்ட அரசியலுக்குத்  தேவையா என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது ?

 14. தாம் அதி புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டு மாறி மாறி முதுகு சொரியும் கூட்டத்தின் வண்டவாளாம் தண்டவாளம்  ஏறிக் கன நாளாச்சு என்று தெரியாமால் பூச்சுற்றும் நடிகர்கள் உண்மையில் அதி மடையர்கள்.    

  • Like 1
 15. சிறிலங்காவில் சுதந்திரம் இருக்கு என்று எழுதிய சோபசக்தி முதல் வரை கருணாகரன் வரை வரை இதற்குப் பதில் சொல்ல வேண்டும். மேலும் இவர் அனந்தி உடன் எடுத்துக் கொண்ட படம் முகநூலெங்கும் உலாவியது. முகநூலைப் பார்த்தாலே புலனாய்வாளர்களுக்கு போதிய தகவல் கிடைத்திருக்கும். சிறிலங்காவின் சுதந்திரம் என்ன என்பதை இனிக் கருணாகரன் வந்து சொல்ல வேணும். சோபசக்தியும் இதற்க்கு ஒரு பொழிப்புரை எழுதுவார்.

 16. துளசி,

  நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும்.

  இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்கியம் பிரதிபலிக்கிறது என்றால் , இக் கவிதையில் சொல்லப்பட்டது எதுவுமே ஆபாசம் அல்ல.

  இதில் எது ஆபாசம் என்பதை யார் தீர்மானிக்க முடியும்? முன்னர் நான் டிசே எழுதிய ஒரு கவிதையை இணைத்த போது நிகழந்த்த வாதப் பிரதிவாதங்கள் நாபகம் வருகிறது.அந்தக் கவிதையும் பஸ்ஸில் பெண்களின் மார்பகங்களைப் பார்ப்பவர்கள் பற்றி எழுதப்பட்டதாக இருந்தது.

  ஆனால் அதில் காரசாரமாக எழுதியவர்கள் தற்போது , தங்கள் கருத்துக்களில் முதிர்ச்சி பெற்றுள்ளனர்.அது போல் நீங்களும் முதிர்ச்சி பெறுவீர்கள். கருத்துக் களம் அதற்காகத் தானே இருக்கிறது.பலர் வருவார்கள்,போவார்கள்.அவற்றில் எமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • Like 3
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.