valavan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  593
 • Joined

 • Days Won

  3

valavan last won the day on May 19 2018

valavan had the most liked content!

Community Reputation

489 ஒளி

About valavan

 • Rank
  உறுப்பினர்

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. ஒரு காலம் மாத வருவாயாக சில ஆயிரங்கள் வருமானம் பெறுவது என்பது மிக பெரும் சமுதாய அந்தஸ்து, புதிதாக சைக்கிள் வைத்திருந்தால் எகத்தாளம் அதிகம். அதிலும் லுமாலா ஹீரோ, பிளைஜிங் பிகன்,ஏசியா ,ரல்லி என்ற வகையறாக்களில் ஏசியா வைத்திருந்தால் அவர் வசதிக்காரர், ரல்லி வைத்திருந்தால் அவர் முன்னாள் வசதிக்காரர். ஆனால் எல்லோரும் உடலை வருத்தி கஷ்டப்பட்டே அந்த நிலையை அடைந்தார்கள் என்பதால் கெளரவமான சூழல் அங்கே நிலவியது. ஆனால் இன்று நிலமை அப்படியா? உடலில் சிறு வலி வந்து வேலை செய்ய பழகாதவர்களிடம்கூட உயர்தர மோட்டார் சைக்கிள்கள், பத்து ரூபாய் பொக்கெற் மணிகூட பெரும் ஆச்சரியமாக இருந்த யாழ்ப்பாண தமிழர்கள் வாழ்வில் இன்று எந்த வேலைக்கும் போகாத மனிதர்களிடம் மணி பேர்ஸ் பிதுங்க பிதுங்க லட்சக்கணக்கில் ரூப்பாய் நோட்டுக்கள்... இதனால் எந்த வேலைக்கும் போகாத ஒரு குழுவிடம் லட்சக்கணக்காய் பணம் புழங்கும்போது, எந்த வேலையும் கிடைக்காத ஒரு குழு வேலைக்கு போகுமா? உலகின் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல சமுதாயம் வறுமையில் வாடியிருக்கு, ஒப்பீட்டளவில் யுத்த பாதிப்பால் தான் சார்ந்த சமூகத்தை அளவுக்கு அதிகமாக பணக்காரர்கள் ஆக்கியது யாழ் சமூகமே. இந்த சமூகம் வெறிகொண்டு வசதியாய் உள்ளவனை பார்த்து தானும் அப்படி வாழ வெறி கொண்டு அலையும், அதுக்கு பலிகடா ஆகபோவது அதே களவாணி சமூகத்தை ஊட்டி வளர்த்த புலம்பெயர் மஸ்தானுகளே.
 2. மறுதலிக்க மாட்டார்கள். தமது இனத்தையே விற்று பிழைக்க அவர்கள் என்ன தமிழர்களா? தமது காரியம் ஆகவேண்டுமென்றால் எதிரிகளைகூட நண்பர்களாய் ஆக்குவதில் உலக அளவில் சிறந்தவர்கள் அமெரிக்காவுக்கு அடுத்தது முஸ்லீம்களும் சிங்களவர்களும்தான். அதேவேளை இந்திய ராணுவத்தை இலங்கைக்கு வரவழைத்த ஜெயவர்த்தன ஒரு தேச துரோகி என்றும் பதிவிட்டிருக்கலாம் நீங்கள். அப்போது தெரிந்திருக்கும் மறுதலிப்புக்கு பதிலாய் எத்தனை ஆயிரம் அசிங்கமான பதிலடிகளை நீங்கள் சிங்களவரிடமிருந்து பரிசாய் பெற்று கொண்டிருப்பீகள் என்று. அவர்கள் தமது இன விஷயத்தில் மானஸ்தர்கள்.
 3. அப்போ புலிகளும் சிங்கள தேசத்திற்காகதான் உயிர் நீத்தார்கள் என்று நீங்கள் நினைச்சு கொள்கிறீர்களா?
 4. நீங்கள் சொன்னது சரிதான் அந்த காலகட்டத்தில், இளம்பருதி,பாப்பா,தமிழினி போன்றவர்களும் குடிவரவு குடியகல்வு திணக்களத்தில் தலையாட்டிகளாக நிறுத்தப்பட்டிருந்தார்கள் , இருந்தபோதும் அவர்கள் யாரையும் காட்டி கொடுக்கவில்லை என்ற ஒரு செய்தி உலாவியது.
 5. மாத்தையா பிளவின்போது அவருடன் இருந்த போராளிகள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லையென்று உறுதியாக சொல்கிறீர்கள், இதுவும் ஒருவகையான புரளியாக கடந்த காலங்களை அறிந்தவர்கள் பார்வையில் புலப்படலாம்.
 6. 0:18 யோகி பேசுகிறார் மாத்தையா அண்ணனும் பிரபாகரனும் சண்டை பிடித்ததாக ஒரு கதை. பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று ஒரு கதை. நாங்கள் குடும்பம், சாதாரண குடும்பங்கள் வேலிக்காக சண்டை பிடிக்கும் நாங்கள் நாட்டின் எல்லைக்காக சண்டை பிடிப்பவர்கள். இந்த நிகழ்வு நடந்து சில வாரங்களிற்குள்ளாகவே புலிகள் அமைப்பை பிளவு படுத்தவும் தலைவர் பிரபாகரனை இந்திய உளவு அமைப்பின் வழிகாட்டுதலின்படி கொல்ல முனைந்ததாகவும் மாத்தையா கைது செய்யப்பட்டார், அவரின் குழுவை சேர்ந்தவர்கள் என்று சொல்லி 400 வரையான போராளிகளுடன்.. அவரும் சுட்டு கொல்லப்பட்டார், மாத்தையாவின் சதி திட்டங்களில் சம்பந்தப்பட்டிருந்தார் என்ற ஊகத்தில் யோகியும் கைது செய்யப்பட்டு காவலில் இருந்தார். பின்பு அவர்மீதான குற்றம் நிரூபிக்கபடவில்லை என்றபோதும், அன்ரன் பாலசிங்கத்துக்கு அடுத்தபடியாக புலிகளின் அரசியல் பயணத்தில் நீண்ட வரலாற்றை கொண்ட யோகி அவர்கள் ஏறக்குறைய குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவரைபோலவே ஒப்புக்கு ஏதோ ஒரு பதவியுடன் இறுதி யுத்தம் வரை புலிகள் கூடவே இருந்தார், பின்னர் என்னவானார் என்று யாருக்கும் தெரியாது, விடுதலை போராட்டத்துக்கு வெளியில் சந்தித்த புரளிகளைவிட விடுதலை போராட்டத்திற்குள் நாம் சந்தித்த புரளிகள்தான் ஏராளம், அதில் ஒன்றுதான் காசு சேர்த்தவர்கள் தலைவர் இன்னும் இருக்கிறார் என்று அவருக்கு அஞ்சலி செய்யவிடாமல் தடுத்ததும்.
 7. தலைவருக்கான அஞ்சலி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் நான் சொல்ல வந்த கருத்தை நீக்கிவிட்டேன்.
 8. வயோதிப தாய்க்கு அவ்வளவு பணம் அனுப்பினார்களா அவரரோட பிள்ளைகள்? இல்ல , ஊரில் ஒரு வீடு கட்டுவதென்றால் குறைஞ்சது ஒரு கோடியாவது வேண்டுமே, அதனால் கேட்டேன்.
 9. சட்டத்தின் உதவியை நாடாமல் ஈபிடிபி காரர் வீடு தேடிபோய் தனிமனித சண்டித்தனம் காட்டியது ஏற்கமுடியாத ஒன்றுதான், அதேநேரம் குடிமனைகளுக்கு நடுவில் கோழி பண்ணை வைத்திருத்தலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றே. கோழி பேன், கோழி எச்சங்களின் நாற்றம், அதுவும் மழை காலங்களில் கரைந்து ஓடினால் அந்த பகுதியை சூழ உள்ளவர்கள் மூச்சே விடமுடியாது. ஓரிரு கோழிகள் வீட்டு தேவைக்காக வளர்ப்பது வேறு பண்ணை என்பது வேறு. பண்ணை தனியாக ஓரிடத்தில்தான் வைக்க அனுமதியளிக்கப்பட்டிருக்கவேண்டும். இங்கே சின்னதா ஒரு மணம் வீட்டுக்குள் வந்தாலே Fan-ஐ போட்டும் ஜன்னல்களையும் திறந்துவிடும் நாங்கள் இதை எப்படி சரியென்று ஏற்றுக்கொள்கிறோம். சூழ வசிப்பவர்களின் அசெளகரியங்கள்பற்றி கவலையே இல்லையா? ஈபிடிபி காரர் சொல்றமாதிரி அவரை கல்லால் அடிச்ச எந்த சம்பவமும் காணொளியில் இல்லை, அதேநேரம் ஈபிடிபி காரரின் மகனை முதலில் அடிக்கபோனது கோழிபண்ணைக்காரர்தான் என்பது காட்சியில் தெளிவாகவே உள்ளது. அதன்பின்னர்தான் அப்பனும்மகனும் சேர்ந்து தாக்குகிறார்கள். வீடுதேடிபோய் தகராறு பண்ணிய அவர்கள்மேல்தான் முதல் குற்றம், ஆனால் அவர்கள் கருத்தில் நியாயம் இருக்கிறது.
 10. உலகம் முழுவதுமே ஊரடங்கு நிலையினால் உருவான தனிமை படுத்தலையும் வீட்டினுள் முடங்கலையும் ஏற்றுக்கொள்ளமுடியாமல் மன அழுத்ததில் தவிக்கிறது, கொரோனாவால் செத்தாலும் பரவாயில்லை முடக்க நிலை வேண்டாம் என்று உலகின் பல பகுதிகளில் மக்கள் அரசுக்கெதிராக குரல் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் அத்தனைபேரும் ஒருவரையொருவர் குத்தில் கொல்கிறார்களா, அல்லது சுட்டு கொல்கிறார்களா? மன அழுத்ததில் கொடூர காரியங்களை செய்கிறவர்களுக்கு இனம் மதம் மொழி நாடு வட்டாரம் வடமராட்சி என்பதெல்லாம் இல்லை. முற்றிலும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இதுபோன்ற செயலை செய்பவர்களும் அதெல்லாம் பார்ப்பதும் இல்லை. நாம் மட்டும் ஏன் தமிழ் மனைவி கணவன் ,எங்கடையாக்கள் உங்கடயாக்கள் இப்பிடி இருக்கினம் என்ற கோணத்தில் போகிறோம்? மன ழுத்தங்களினால் பல சந்தர்ப்பங்களில்,கொலையை தவிர்ந்த அல்லது கொலைக்கு சமமான லூசு தனமான வேலைகள் நாம் எல்லோருமே பார்க்கிறோம், சட்டத்தின் பிடியில் சிக்காதவரை நாம் எல்லோருமே அடுத்தவருக்கு புத்தி சொல்ல தகுதி வாய்ந்த யோக்கியர்களே.
 11. கொரோனா எல்லாம் தற்காலிக உயிர்கொல்லி நோய்தான், இஸ்லாமும் இஸ்லாமியர்களும் இந்த உலகில் மனித இனம் வாழும்வரைஅனைத்து இனத்தின் நிம்மதியையும் கெடுக்க காத்திருக்கும் நிரந்தர உயிர்கொல்லி நோய்கள். அந்த உயிர்கொல்லி கொரோனாவை சமாளிக்கும் மருந்து சீக்கிரம் கண்டு பிடித்துவிடுவார்கள், இந்த உயிர் கொல்லி இனத்தை சமாளிக்கும் மருந்து ஒருகாலமும் கண்டுபிடிக்கபடமாட்டாது.
 12. அவர்கள் புனிதநீர் தெளிப்பதால் யாருக்கு என்ன பிரச்சனை? ஒருவேளை வடக்கு கிழக்கு வான் பரப்பில் சென்று தெளித்திருந்தால் அவர்கள் மூட நம்பிக்கைகளை எம்மீது திணிக்கிறார்கள் என்று ஆத்திரப்படலாம். புலம்பெயர்ந்த தமிழர்களும் தாயக தமிழர்களும் பலர் வடக்கு கிழக்கு தவிர்ந்த இடங்களை எமது நாடு என்று சொல்லி பெருமை பட்டுக்கொள்வதில்லை, இலங்கையில் உள்ள சிங்களவர்கள் பலர் வடக்கு கிழக்கு மக்களை எமது மக்கள் என்று சொல்லி ஆசை ஆசையாக பார்ப்பதில்லை. இந்த நிலையில் அவனது பிரதேசத்தில் அவனது வழிபாட்டுமுறைகளையும் நம்பிக்கைகளையும் கைகொள்ளும்போது அது தவறென்று விமர்சிக்க நாம் யார்?
 13. சவேந்திர சில்வாவை பிடிக்காது என்றாலும் , கொரோனா தொடர்பில் சவேந்திர சில்வாவின் வடக்கை முடைக்கி வைக்கும் திட்டம் பிடித்திருக்கிறது. கொரோனா பரம்பல் வடக்கில் அதிகரித்தால் ஓரிரு வாரங்கள் என்ன இன்னும் ஓரிரு வாரங்கள் மேலதிகமாக வேண்டுமென்றாலு,ம் எடுத்துக்கொள்ளுங்கள். வடக்கின் மக்கள் அடர்த்திக்கு கொரோனா சகட்டுமேனிக்கு அதிகரிச்சுது என்றால், வடக்கில் உள்ள மருத்துவ வசதிக்கும் பொருளாதார நிலைக்கும் பல ஆயிரம் மக்கள் உயிரிழப்பார்கள். பல ஆயிரம்பேரை ஒரே நேரத்தில் வைத்து சிகிச்சை அளிக்கும் வசதிகள் வடக்கின் சக்திக்கு கற்பனைக்கே அப்பாற்பட்ட விஷயம், ஏற்கனவே யுத்தம், சுனாமியில் பெரும் தொகை மக்களை இழந்துவிட்டோம், கொரோனாவும் வந்து கூட்டியள்ளிக்கொண்டுபோனால் சிங்களவனும் முஸ்லீமும் தெற்கில் இருந்து வந்து வடக்கில் ஆட்சி செய்ய வசதியாக இருக்கும். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் கண்டிப்பாக இந்த தடையால் பாதிக்கப்படுவார்கள்தான், ஆனால் கொடும் யுத்ததை வசதியுள்ளவர்கள்கூட வறுமைகோட்டுக்குகீழ் சென்று மூன்று தசாப்தங்களாக வாழ்ந்து அனுபவம் நிறைய பெற்றவர்கள் நாங்கள், இனத்தின் நன்மை கருதி இந்த பேரிடரையும் ஓரிரு வாரங்கள் சமாளிச்சுதான் ஆகவேண்டும் வேறு வழியே இல்லை, இல்லாவிட்டால் ஒட்டுமொத்தமாக நாங்கள் காலி.
 14. இத்தாலி இன்று கொரோனா வைரஸில் சிக்கிபோய் , கொரோனா ஆரம்பிச்ச சீனாவைவிட அதிக உயிர் இழைப்பை சந்திப்பதற்கு ஒன்றே ஒன்றுதான் காரணம்... பல நாட்டுக்காரர்களுக்கு இலகுவா ஐரோப்பாவுக்குள் நுழையும் வசதியை அவர்கள் ஏற்படுத்தி கொடுத்துவிட்டார்கள். அது எதுவென்றால்..., எவரையும் வரவேற்கும் அவர்கள் இளகிய மனசு.!!! இலங்கை தமிழர்களை பல ஐரோப்பியநாடுகள் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு கை கழுவிவிடும்போதெல்லாம்.. அவர்கள் எஸ்கேப் ஆகி ஓடுவதெல்லாம் இத்தாலிக்குத்தான், வேலை அனுமதி பத்திரம் தந்து இனம், மதம், மொழி, நிறம்... எதுவுமே பார்க்காம எங்கள ஏற்றுக்கொள்வார்வார்கள்... நானும் அங்கேதான் ஒருகாலம் வாழ்ந்திருக்கிறேன் அவர்கள் கருணை மனசு எனக்கும் புரியும். அதேபோல சிரிய துருக்கி, அல்ஜீரிய அகதிகள் எல்லைகள் கடந்து இத்தாலி வரும்போதும் அவர்களை லட்சகணக்கில் ஏற்றுக்கொள்வதும் இத்தாலிதான்... இத்தாலி .... வீட்டு வேலைக்காரர்களாக பல தேசத்தவர்களுக்கு குறுகிய கால அடிப்படையில் வேலை கொடுத்திருக்கிறது ....விசா கொடுத்திருக்கிறது பல தேச காரர்களை வேலைக்கு அமர்த்தியதன்மூலம் அவர்கள் வாழும் தேசத்தில் , சொந்த வீட்டுக்கு சொந்தக்காரர்களாக்கும் வசதியை கொடுத்திருக்கிறது. இத்தனைபேரை கருணை மனசுடன் ஏத்துக்கிட்ட இந்த தேசத்திலிருந்து ... பலதரப்பட்ட மக்கள் அவர்கள் தாயகம் போய் திரும்பி திரும்பி இத்தாலி வருவதால், அவர்கள் மூலமா கொரோனா இத்தாலியை பதம் பார்த்துவிட்டது. இன்று பேரழிவின் வசலில் நிற்கிறது, நல்லது செய்யும் எவருக்குமே கெட்டகாலம்தான் மிஞ்சும் என்ற பழமொழி உண்மையாய் போச்சே!