Jump to content

valavan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1135
 • Joined

 • Days Won

  13

Everything posted by valavan

 1. எதிர்ப்பு அரசியல் செய்யாமல் இணக்க அரசியல் செய்தால் மத்திய அரசிடமிருந்து எமக்கு வேண்டிய உரிமைகளை பெற்றுக்கொள்ளலாம், அதனால்தான் ஆயுத போராட்டத்தை ஒதுக்கி அரசுடன் இணைந்து பயணிக்கிறோம் என்ற உங்கள் கீறல் விழுந்த சிடி வசனத்தை காலம் காலமாக சொல்வீர்கள், முப்பது வருசத்துக்கு மேல சிங்களவர்களுடன் இணக்க அரசியல் செய்தும் கேவலம் பசளையை இறக்குமதி செய்யும் அனுமதி கூட சிங்களவன் உங்க இணக்க அரசியலை மதிச்சு ஒரு உரிமையா தரவில்லையா? இலங்கை என்பது இந்தியா சீனா அமெரிக்கா கனடா ரஷ்யாபோல ஒன்றும் பரந்து விரிந்த நாடு கிடையாது, இலங்கையின் எந்த துறைமுகத்தில் பொருட்களை இறக்கினாலும் நாட்டின் எந்த பகுதிக்கும் ஒரே இரவில் கொண்டு சென்றுவிட முடியும். வங்குரோத்து நிலையிலிருக்கும் இலங்கையின் தற்போதைய பற்றாக்குறை பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்னமோ துறைமுகங்களில் ஏற்றி இறக்கல்தான் என்பதுபோல் பேசிட்டு திரியுறாரே இவரு எப்படித்தான் இத்தனைகாலம் அவனுககூட சேர்ந்து இணக்க அரசியல் பண்றாரோ தெரியவில்ல.
 2. ஒரு கவி அரங்கில் தமிழீழ அரசவை கவி புதுவை அவர்கள் ஓடிபோனவர்கள் பற்றி ஒரு கவி பாடியிருந்தார் ஒரு சிலவரி ஞாபகம்.. ஓடி போனவர்கள் பேடிகள் போன்றவர் நாளை அவர்கள் திரும்பி வந்தால் காறியே துப்புவோம்...என்ற பொருள்பட கவிதை போனது. பின்னாளில் அதே புதுவை ஓடி அதே ஓடி போனவர்களை , எம் சொந்தங்களே உறவுகளே, வேரினை பிரிந்த விழுதுகளே என்றெல்லாம் கவி பாடினார் குறிப்பாக ஜெயசிக்குறு காலத்தில். பின்னாளில் ஐரோப்பாவிற்கு அவர் வந்திருந்தபோது வானொலி செவ்வியில் புலம்பெயர்ந்தவர்களின் உதவி போராட்டத்தை தாங்கி நிற்கிறது என்று கூறினார், வானலையில் வந்த ஒரு நேயர் பழசை ஞாபகம் வைத்து புலம்பெயர்ந்தவர்பற்றி அவர் முன்னர் எழுதிய கவிதை பற்றி கேட்டார், அதற்கு கவிஞர் அது அந்தகால சூழ்நிலையில் எழுதப்பட்டது அதனை தற்காலத்துடன் ஒப்பிடகூடாது என்றார், ஆனால் முன்னாளைய அந்த வரிகளுக்காக அவர் வருத்தம் தெரிவிக்கபோவதில்லை என்பதில் உறுதியாக நின்றார் அதில் தவறில்லை அது கவிஞனுக்கே உரிய செருக்கு. ஓடிபோனவர்களின் பங்களிப்பு இல்லையென்றால் எண்பதுகளின் இறுதியிலோ, தொண்ணூறுகளிலோ அல்லது தொண்ணூறுகளின் கடைசி ஜெயசிக்குறு சமருடனோ எம் தேச போராட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்திருக்கும். இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சக்கைகளுடனும், ஒரு சில எல் எம் ஜி , ஜிபிஎம்ஜி, ஒன்று இரண்டு எப்போது வேண்டுமானாலும் இயக்கத்தை நிறுத்திவிடும் பாதி துருப்பிடிச்ச 50 கலிபர் துப்பாக்கி , அலுமினிய சட்டிகளை உருக்கி செய்த வெறும் வெடி சத்தம் தவிர பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாத ஆறு இஞ்ச் ஷெல்கள், கணக்கு பாத்து பாத்து ஏவிய ஆர்பிஜி எறிகணைகள், இந்த முகாம் ராணுவ முன்னேற்றத்தை தடுத்த அதே சொற்ப ஆயுதங்களை அதிவேகமாக அடுத்த ராணுவ முகாமிலிருந்து முன்னேறியவர்களை தடுக்க மாறி மாறி நகர்த்திய நெருக்கடிகளை இலங்கையில் இரண்டு ராணுவங்கள் என்று சொல்லுமளவிற்கு விஸ்வரூபம் எடுக்க வைத்தது ஓடி வந்தவர்களின் உதவிகளே. இறுதிபோரின் தோல்விக்கு காரணம் கண்டிப்பாக ஆட்பலம் இல்லை, ஒரு குறுகிய நிலப்பரப்பில் போராளிகள், துணைப்படைகள் ஆயுத பயிற்சி பெற்றவர்கள்என்று ஏறக்குறைய முப்பதினாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இருந்தார்கள் அந்த குறுகிய நிலப்பரப்பிற்கு அத்தனை ஆயிரம் ஆயுத பயிற்சி பெற்றவர்கள் எந்த வகையிலும் பற்றாக்குறையில்லை. இறுதி போராட்டத்தை சாய்த்தது எதிரியிடமிருந்த கனரக ஆயுதங்களே, கிழக்கிலும் வன்னியிலும் மடிந்த பல ஆயிரம் போராளிகள் ராணுவத்தை அருகில் நெருங்காமலேயே எங்கோ இருந்து பொழியப்பட்ட எறிகணை மழையில் தொலைந்தவர்களே. லண்டனில் நடந்த மாவீரர்நாள் உரையில் பாலசிங்கம் பேசினார், நேற்றுத்தான் பிரபாகரனுடன் பேசினேன், புலம்பெயர் மக்களுக்கு என்ன சொல்லுறது எதாவது சொல்லு, அதுக்கு தலைவர் சொன்னாராம் நீங்கள் செய்யும் உதவிகளுக்கு நன்றி, அரங்கம் அதிர்ந்தது. அன்று தலைவர் என்ற மந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர் அங்கிருந்து எதிர்பார்த்ததை தமது சக்திக்குட்பட்டும் சக்தியை மீறியும் பங்களிப்பாய் வழங்கிய ஓடி போனவர்கள் எந்த வகையிலும் இகழ்ச்சிக்குரியவர்களல்ல. அவரே அப்படி சொன்னதில்ல ..அப்புறம் எதுக்கு?
 3. எந்த ஒரு தாக்குதலிலும் பொதுமக்கள் கொல்லப்படுவது கண்டிப்பாக வருத்தத்திற்குரியதே, அவர்கள் வலிகள் புறந்தள்ளபட முடியாதவையே. அதேநேரம் அவர்களுக்கு அந்த நிலமை ஏற்படுவதற்கான காரணங்களை ஏற்படுத்தியவர் யார் என்பதையும் பார்த்தே ஆகவேண்டும். விடுதலைபுலிகள்தான் எங்கள் முன்னாள் பிரதமரையும் அவரோடு சேர்த்து தமிழர்களையும் கொன்றார்கள் என்று நீங்கள் சொன்னால், முன்னாள் பிரதமரை அவர்கள் கொல்வதற்கு காரணம் என்ன என்பதை எப்போதும் நீங்கள் பார்க்க மறுப்பதேன்? நீண்டகால இனப்போரை தமக்குள்ள வளங்களை வைத்துக்கொண்டு உயிரை மட்டுமே பெரும் ஆயுதமாக பயன்படுத்தி தற்பாதுகாப்பு போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருநாட்டில் கடல்கடந்து வந்து வல்லரசு திமிரில் லட்சம் படைகள் வளங்களை குவித்து அடிவாங்கி கொண்டிருந்த எம்முடன் எந்த ஒப்பந்தமும் செய்யாமல் மாறாக மிரட்டிக்கொண்டு, அடித்தவனுடன் மட்டும் ராஜீவ் செய்ததற்கு பெயர் அமைதி ஒப்பந்தமா? எந்த வகையிலும் நியாயமற்று சிங்களவன் எமக்கு செய்த கொடூரங்களைவிட பலமடங்கு வேகத்தில் ஓரிரு வருடங்களிற்குள்ளேயே தமிழர் தேசமெங்குமே சுடுகாடாக்கும் அளவிற்கு ஈழ தமிழர்கள்மேல் ராஜீவ் காந்திக்கு வன்மம் என்ன? சிங்களவன் எம்மை கொன்று குவித்ததைகூட ஏதோ ஒரு காரணத்திற்காக சகித்துக்கொள்ளலாம், ஏனென்றால் அவன் எம்மை எதிரியாக பார்த்தான் நாமும் அவனை எதிரியாக பார்த்தே மோதினோம், ஆனால் இந்திய படைகள் எம்ம்மீது கொலைவெறிகொள்ள எந்த வகை நியாயம் இருந்தது? அர்த்தமற்ற ஒரு போரை அந்நிய தேசம் ஒன்றில் நிகழ்த்தி பல ஆயிரம் மக்களை துடிக்க துடிக்க கொன்ற ராஜீவ்தான் அவர்மேல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது கூடவே இருந்த பொதுமக்களுக்கும் பொறுப்பாமவர். கடல் கடந்துபோயப்பாவி ஈழதமிழரை கொன்று குவித்த ராஜீவ்காந்தியின் அட்டூளீயம் பற்றி பேசாமல், கடல்கடந்து வந்து முன்னாள் பிரதமரை கொன்றுவிட்டார்கள் அது மாபெரும் தவறு என்று ஒருசில அரசியல் கட்சிகள் கூவுகிறார்கள், அப்படியென்றால் இந்தியாவில் ஜூலியன் வாலா படுகொலையை செய்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியை இங்கிலாந்துவரை போய் தேடி கொன்றாரே ஒரு இந்தியன் அதுவும் மிக பெரிய தவறுதானே, அதை மட்டும் எப்படி நியாயம் தியாகம் என்று வாதிடுகிறீர்கள்? பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதற்காக இந்திராகாந்தி கொல்லப்பட்டார், இந்திராகாந்தியை கொன்றதற்காக அந்த கொலைக்கு பழிவாங்க அந்த சம்பவத்தில் எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத பலநூறு சீக்கியர்கள் டெல்லியில் கொல்லப்பட்டார்கள் என்கிறார்கள். அப்படி கொல்லப்பட்ட சீக்கியர்களுக்காக நியாயம் கேட்டபோது , ஒரு ஆலமரம் சரியும்போது அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும் என்று சொன்னாராம் இதே ராஜீவ் காந்தி, அவரின் வார்த்தைகளையே அவரின் படுகொலை விஷயத்திலும் எடுத்துக்கொள்ளலாம், அவரின் தாயார் பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதற்காக கொல்லப்பட்டு அதன் தொடர்ச்சியாக சீக்கியர்கள் கொல்லப்பட்டது ஆலமரத்தின் அதிர்வு காரணமாக என்றால், இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பிய முட்டாள்தனத்தினால் ராஜீவ் கொல்லப்பட அதன் தொடர்ச்சியாக ஒரு சில தமிழர்களும் கொல்லப்பட்டது ஆலமரத்தின் அதிர்வுதான். அந்த அப்பாவி மக்களின் இறப்பிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்பேற்கவேண்டியது ராஜீவ் காந்தியேதான். இது விடுதலைபுலிகள்தான் எமது பிரதமரை கொன்றார் என்று நிற்பவர்களுக்கான தற்கரீதியான வாதம் மட்டுமே.
 4. காலங்கள் ஓடிவிட்டால் அனைத்துமே மறந்துபோகும் என்று நினைக்கிறார்கள். எப்படி பிரேமதாச காலத்தில் கிழக்கில் படுகொலைகள் கட்டவிட்டு விடப்பட்டதோ , அதைவிட பலமடங்கு வேகத்தில் சந்திரிக்காவினால் வடக்கில் படுகொலைகள் கொத்துக்கொத்தாக இடம்பெற்றன. அவர் மாமன் ரத்வத்தையுடன் சேர்ந்து ஆடிய கொலைகளங்கள் ஒன்றா இரண்டா,அதுவும் பள்ளிகள் வழிபாட்டு தலங்களையும் தகர்த்து சிறுவர் இளைஞர்களையும் தேடி தேடி கொன்றார் அம்மணி. நாகர்கோயில் பள்ளிமீதான குண்டுவீச்சு படுகொலை, நவாலி தேவாலய குண்டுவீச்சு படுகொலை,மடு தேவாலய படுகொலை, செம்மணி படுகொலை, ஜெயசிக்குறு நடவடிக்கையில் மன்னார்பகுதி மக்கள் படுகொலை, கிளாலி ஃநீரேரி படுகொலை.............. சொல்லிக்கொண்டே அடுக்கிகொண்டே போகலாம், ஆனால் எதுவுமே தன்னால் நடக்காதமாதிரி இறந்தவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செய்யும் இந்த கொடூரத்தை என்னவென்று சொல்ல?
 5. ரணிலை பிரதமராக்கினதும் ராஜபக்ச குடும்பத்துக்கெதிரான போராட்டமே பிசு பிசுத்து போனது. இன்னும் ஓரிரு மாதங்களில் போராட்டத்தில் முன்னணியில் நின்றவர்களை மஹிந்த குடும்பம் தேடி தேடி வேட்டையாடினாலோ அல்லது சிக்கலுகளுக்குள் மாட்டவைத்து உள்ளே தள்ளினாலோ ஆச்சரியபடுவதற்கில்லை.
 6. என்ன தவம் செய்தோம் நீ எம்மினத்தில் பிறக்க? என்ன பாவம் செய்தோம் நாம் உம்மை இழக்க? காணொலியில் 5:40 இல் இருந்து......
 7. புரூஸ்லீ எனும் ஒப்பற்ற கலைஞனின் இறுதி பயண காணொலி பதிவு இது காப்புரிமை காரணமாக எப்போது வேண்டுமானாலும் இந்த இணைப்பு நீக்க படும் என்கிறார்கள்.. உண்மை பொய் தெரியாது அதுக்கு முதல்...பாக்காதவர்கள் மட்டும் பாத்துவிடலாமே... 6:54 ல் அவர் முகம் தெரிகிறது .
 8. இந்த வருசம் மட்டும் ஆரியகுளம் பகுதியில் வெசாக் கூடு அமைக்கும் பணியினை யாழ்மக்களே ஒருதடவை மேற்கொள்ளலாம், தமது தேசம் முழுவதும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதும் தமிழர்கள்மீதும் அவர்கள் பக்க நியாயங்கள்மீதும் ஏதோ கொஞ்சம் காரணங்கள் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றும் காலிமுகதிடலில் கூடிய சிங்களர்கள் ஓரளவு அனுதாபத்துடன் பார்க்க தொடங்கியிருக்கிறார்கள். பிரபாகரன் செய்தது எல்லாம் ஒட்டுமொத்த தவறல்ல என்று உணரவும் தொடங்கியிருக்கிறார்கள். புலிகள் மே 18ல் தாக்குதல் நடத்த போகிறார்கள் என்று ஒரு செய்தி வந்தபோது, யாழ்பக்கம் போய் பாருங்கள் யாழ் இளைஞர்கள் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள், வேண்டுமென்றே புலி பூச்சாண்டி காட்டி எங்களை ஏமாற்றாதீர்கள் என்று சமூக வலைதளங்களீல் சிங்களவர்கள் சிரிப்பாகவும் சீரியசாகவும் பேச தொடங்கிவிட்டார்கள் என்று செய்தி ஊடகங்கள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. கீழே வரும் இந்த காணொலியில் 5:43 லிருந்து சிங்களவர்களின் கருத்துக்கள் பற்றி செய்தி விளக்குகிறது .... தமக்கு ஒரு பிரச்சனை வந்தால் தமிழர்மீது கரிசனை காட்டுவது ஒரு நடிப்பாக இருந்தால், எமக்கு கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை நாம் உங்களுக்கு எதிர்கள் அல்ல என்று வெசாக் கூடுகளை தமிழர் பகுதியில் இந்த வருசம் மட்டும் தமிழர்களே கட்டி நடிக்கலாம் அதில் தப்பு எதுவுமே இல்லை. தமிழ்கட்சிகள்மீது என்றைக்கும் எம்மில் பலருக்கு உள்ளதுபோல் நம்பிக்கை இருந்ததில்லை ஆனாலும் அவர்கள் செய்த செயலில் ஒன்று மட்டும் ஈர்த்தது, தமிழகத்திலிருந்து உணவுபொருட்கள் இலங்கை தமிழருக்கு மட்டுமே அனுப்புவதாக இருந்தால் அது எமக்கு வேண்டாம் ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்காகவும் அனுப்புவதாயிருந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று சொன்னது வரலாற்று காய் நகர்த்தல். நாம் உங்களுக்கு எதிரிகள் இல்லை என்று பலதடவை நிரூபித்திருக்கிறோம், இன்று ஒருதுளி அளவாவது எமக்கு தமிழர்கள் எதிரி அல்ல, ஆட்சிட்யாளர்கள் மட்டுமே என்று அவர்கள் உணரும் சூழலில் இதுவரைகாலமும் எம்மை எதிரியாகவே பார்த்த அந்த பேரினத்தை அவமானபடுத்தவாவது வெசாக்கூட்டை தமிழர்கள் ஏற்றலாம் தப்பில்லை. இனம் என்ற ரீதியில் பல கொள்கைகள் கோட்பாடுகள் காய்நகர்த்தல்கள் இருந்தாலும், தனிமனிதன் என்ற ரீதியில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கும் அல்லவா, அந்த வகையில் எந்த கால கட்டத்திலும் இலங்கை தமிழரை சரிசமாக அரியணையேற்றவோ அணைத்து செல்லவோ சிங்கள சமூகம் அனுமதிக்காது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எப்போதுமே உண்டு. இன்று தமக்கு வலிக்குது என்றால் அவர்களுக்கும் அப்படித்தானே வலிச்சிருக்கும் என்று மெலிதாய் உணர்கிறார்கள், நாளை தமது பிரச்சனை தீர்ந்துவிட்டால் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று எகத்தாளமாக சிரிப்பார்கள், இதுவே எமது முப்பாட்டன் காலத்திலிருந்து சிங்கள தேசத்தில் உணர்ந்த பாடம். மற்றும்படி நாமும் ராஜதந்திர அரசியல் செய்வோம்.
 9. ஆட்சி மாறினால் ஆட்சியமைக்கும் புதிய அரசுக்கு தாவ தயாராகிவிட்டார் என்பதை பூடகமாக சொல்கிறார். சிங்களவர்களுடன் தொடர்ந்து நல்லிணக்கத்தை பேணி தமிழ்மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காகதான் அவர் இந்த தியாகத்தை பண்ணபோகிறார். வேற அவரோட தனிப்பட்ட ஆசைகளூக்காக அல்ல. தற்போது இலங்கையில் அரசுக்கெதிராக நடக்கும் போராட்டம் நிச்சயமாக சரியான முறையில்ஒருங்கிணைக்கப்படவில்லை. அதெப்படி அரசில் அங்கம் வகிக்கும் சிங்கள அமைச்சர்களை மட்டும்தான் அடிப்பீர்களா, வீட்டை கொளுத்துவீர்களா? தமிழ் அமைச்சர்களை ஒன்றுமே பண்ண மாட்டீர்களா? அடிச்சால் பாகுபாடு இன்றி அடிக்கணூம் அதுதான் ஒரு ஜனநாயக போராட்டத்துக்கு அழகு.
 10. அன்று அவர்களால் எங்களுக்கு, இன்று அவர்களால் அவர்களுக்கு அதே தீவில் அதே தெருக்களில். நான்கு தசாப்தங்கள் ஓடி தலைமுறைகள் மாறி நாகரிகமும் விஞ்ஞானமும் வளர்ச்சியடைந்து உலகின் அளவு சுருங்கி உள்ளங்கை அளவிற்குள் வந்த பின்னும் எந்தவித மாற்றமும் இல்லாமல் சிங்களத்தின் கோரபற்கள் இரத்தமும் சதையும் வழிய அப்படியேதான் இருக்கின்றது. இந்த சம்பவங்களை எண்ணி சந்தோஷபடுவதா பயம் கொள்வதா தெரியவில்லை. நாளை சிங்கள வர்க்கத்திற்கு பிடிக்காத தீர்வொன்றை தமிழர்களுக்கு யாரும் கொடுத்தால் இதே தெருக்களில் மறுபடியும் தமிழர்களும் அவர்களுக்கு தீர்வு கொடுக்க முனைந்த சிங்களவர்களுக்கும் இதே நிலமை நேரும். மறுபடியும் அடித்துக்கொள்வார்கள், அடித்து கொல்வார்கள். இது மஹிந்த கூட்டத்திற்கு பரிதாபபட்டு வரும் கவலையல்ல, இன்று ஆற்றுக்குள் இறங்கிநின்று தப்பிக்க முடியாமல் வாழும் மஹிந்த கும்பல்போல் எந்தவித தற்பாதுகாப்பின்றி நிற்கும் எம்மினமும் இதே நிலமையை சந்திக்கும் என்ற ஐயமே தோன்றுகிறது. மறுபடியும் நாம் ஒரு ஜூலைபடுகொலையை எதிர்கொள்ளூம் நிலை எம் காலடியிலேயே படுத்துறங்கிறது என்றொரு பயம் தவிர்க்க முடியாமல் வந்துபோகிறது.
 11. இது ஏற்கனவே ஒரு திரியில் விவாதிக்கப்பட்ட விஷயம்தான், இதுக்கு முதலாளிகளின் மனம் இறங்கி வருதலும்,புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் உதவியுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரமாக அமையும் ஆனால் இது இரண்டுமே சாத்தியமில்லை. இணையதளங்கள் என்னமோ எவருக்குமே தெரியாததை அறியாததை புலனாய்வு செய்து கண்டு பிடித்தமாதிரி கடைகளின் படத்தை போட்டு செய்தி பிரசுரிப்பது , ஒளிச்சு இருப்பவர்கள் இந்த கடைகளில்தான் வேலை செய்கிறார்கள் என்று பொலிசுக்கு போட்டு கொடுக்கும் செயல் மட்டுமே. வேறு எந்த வகையிலும் இது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாது. இனியாவது மனிதாபிமானமற்ற இந்த செயலை அவர்கள் நிறுத்த வேண்டும். சமூக அக்கறை உள்ள நீங்கள் நேரடியாகவே தொழில் வழங்குவோரிடம் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடலாம், ஆனால் அப்படி நீங்கள் வாதாடினாலும் முதலாளி கோவத்தையும் மிரட்டலையும் யாரிடம் காண்பிப்பார் என்பது ஊரறிஞ்ச விஷயமே.
 12. ஐரோப்பாவின் 90 களின் இறுதியில் ஐபிசி வானொலி ஆரம்பித்தார்கள். வானொலி மற்றும் கலை துறையில் பழுத்த அனுபவம் கொண்ட ஏசி தாசீசியஸ் எனும் பெரியவர் தலைமையில் அறிவிப்பு துறையில் அனுபவம் வாய்ந்த விக்னராஜா, எஸ்,கே ராஜன், மற்றும் சுமதி சுரேசன்,ஜி எஸ்.குமார்,ரவி அருணாச்சலம் நாவரசன் ,அருணா கோஷ்டி லோகேஷ்-இவர் லைட்டா 2 ,3 பெக் அடிச்சிட்டுத்தான் ஒலிவாங்கியில் பேசுவார் ஒருகட்டத்தில் அவரையறியாமலே உளறல் ஜாஸ்தி ஆகிவிடும்) போன்றவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு வானொலியை திறம்பட நடத்தினார்கள். ஒருவருடம்தானிருக்கும் அதற்குபின் தமிழருக்கே உரித்தான குழு மோதலில் முதலில் விக்னராஜா பிரிந்து போனார், பின்னர் தாசீசியஸ் எஸ்கே ராஜன் ஜிஎஸ் குமாஎ என்று அனைவருமே பிரிந்துபோனார்கள். ஐபிசியில் ஒன்றாக இயங்கிய காலத்திலேயே தாசீசியசுக்கு திமிர் தலையில் வந்து உக்காந்து கொண்டது, நேயர்களை தனது நகைச்சுவை பேச்சு அறிவாற்றல் மிக்க கேள்விகள் நிகழ்ச்சி தொகுப்பு என்று கவர்ந்த விக்னராஜாபத்தி ஒரு நேயர் எங்க அவர கனநாளா காணவில்லை என்று கேட்டதுக்கு அவர் விலகிட்டார் ..வேற கேள்வி?? அப்படித்தான் ஒரேவரியில் பதில் சொன்னார். வணக்கம் ஐபிசி மாமா என்ற மழலைகளுக்கான நிகழ்ச்சியில் ஒரு குழந்த புலிமாமா வீட்டுக்கு வாங்கோ பாட்டு பாடியதுக்கு , குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்காதீர்கள் என்று அதன் தாயை கண்டித்தார். காலபோக்கில் ஒரே வழிசல் வானொலியானது, பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அம்மா, இல்லடா, சரிடா, செல்லம் ரேஞ்சுக்கு வழிந்தார்கள், ஆண்கள் வந்து கொஞ்சம் பேசினாலும் சுருக்கமாக முடித்து கொள்ளுங்கள் அடுத்த நேயருக்கு வழி விடவேணும் என்று கறார் குரலில் சொல்வார்கள், முக்கியமாக தாசீசியஸ். டக்ளஸ் மகேஸ்வரி சுவிஸ் ரஞ்சன்என்று அந்த காலகட்டத்தில் தமிழ்மக்களின் அதீத வெறுப்பை சம்பாதித்த பிரமுகர்களை தேடி தேடி பேட்டி எடுத்தார்கள். அதுவும் ஒருபக்கத்தால் டக்ளஸ் கோஷ்டியால் உள்ளே அனுப்பபட்டவர்களை மறுபக்கத்தால் மகேஸ்வரி பணம் வாங்கொண்டு மீட்க அவரை கருணை தாயே என்று தாசீசியஸ் புகழ்ந்தார். பின்னர் நேயர்கள் கோபம் கொண்டு தாசீசியசிடம் கண்டனம் தெரிவித்தபோது, அது சும்மா அவரை நக்கலாக சொன்னேன் என்று கஷ்டப்பட்டு சமாளித்தார். மேற் சொன்ன இரண்டு சம்பவத்திலும் தான் தவறு செய்ததை ஒப்புக்கொள்ளவேயில்லை அவர் அவ்வளவு வித்தக திமிர். பின்னாளில் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் இணையவானொலி என்று ஒன்று ஆரம்பித்து அப்படியே காணாமல் போனார் அந்த பெரியவர். அதற்கப்புறம் ஐபிசிபல கைகள்மாறி அதன் போக்கே மாறி எங்கோ தொலைந்து போனது. ஐரோப்பாவில் ஓரிரு வானொலிகள் ஐபிசிக்கு முதலில் ஆரம்பித்தாலும் 24 மணிநேரமும் இலவசமாக அனைவரும் கேட்க இயங்கிய முதல் வானொலி ஐபிசிதான், அந்த தொட்டிலில் பழக்கம் இன்றுவரை அனைவரிடமும் தொடர்கிறது என்று சொல்லி கொள்ளலாம்.
 13. சிறிதரன் சொல்வதில் உண்மையுண்டு அதே நேரம் சிறிதரன் சுட்டிக்காட்டிய தங்கள் பிரச்சனை தீர்ந்தவுடன் தமிழருக்கெதிராக மாறும் சம்பவங்களை சிங்களவர்கள் தமிழர்களுக்கு செய்ததைவிட தமிழ்கட்சிகள் தமிழர்களுக்கு செய்ததே அதிகம்.
 14. 2008 வரை இந்த ஆய்வாளர்களின் ஆய்வுகளை விரும்பி படித்ததும் கேட்டதும் உண்டு, படிப்படியாக அது குறைந்துபோய் இறுதிபோரின் ஓரிரு நாட்கள்முன் வரைகூட, ஏன் புலிகள் ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்று சொன்ன அடுத்தநாளின்போதும்கூட அங்கே ஆயிரக்கணக்கில் மக்கள் போராளிகள் காயங்களுடன் முனகி கொண்டும், பிணகுவியல்கள் மத்தியில் சிக்கி கொண்டும் இருந்தபோது புலிகளின் மிக பெரும் பாய்ச்சல் காத்திருக்கிறது என்று இவர்கள் கொஞ்சம்கூட இரக்கமின்றி தமது ஆய்வை நிறுத்தாது இங்கே தொடர்ந்தபோது இந்த கும்பல்கள்மீது அருவெருப்பை தவிர வேறு எதுவும் மிஞ்சவில்லை. அன்றெல்லாம் அவர்களுக்கு இருந்த பிரச்சனை எம் இனமான போராட்டம் தோற்றுபோய் விட்டதே என்ற கவலையில்லை, தமது ஆய்வுகள் சூடாக இல்லாமல் போய்விட்டதே என்ற மான பிரச்சனை மட்டுமே. அன்றுமுதல் ஆய்வாளர்கள் என்று வானொலியில் வருபவர்கள், கவிதை படிப்பவர்கள், தலைமைபீடத்தில் வேலை பார்த்ததுபோல் கருத்து பகிரும் கருத்தாளர்கள் போன்றவர்களின் ஆய்வுகளை காது கொடுத்தும் கேட்பதில்லை பார்ப்பதும் இல்லை. ஓரிரு காணொலி பதிவுகளில் யதார்த்தம் இருந்து அதனை ஒரு சிலர் பாராட்டிவிட்டால் நாம் எதை சொன்னாலும் அது காவியம் என்ற முடிவுக்கே போய்விடுகிறார்கள். இதுபோன்றுதான் சில வருடங்கள் முன்னர் ஒரு தமிழன் விமானியாக சிரியாவரைபோய் சிரிய அகதிகளை நூற்றுக்கணக்கில் மீட்டு வந்தான் என்று யாரோ ஒருவர் பேஸ்புக்கில் நகைச்சுவைக்காக கிளப்பிவிட்டதை ஊடகங்கள் தொடக்கம் ஒரு சில அரசியல்வாதிகள்வரை அதன் உண்மை தன்மையைகூட ஆராயாமல் அந்த தமிழ் விமானிய புகழ்ந்து கவிதை,கட்டுரை,மேடை பேச்சு ,இயல் இசை நாடகம்வரை போனார்கள். ஆனாலும் ஒரேயொரு பதிவில் நம்ம ஆய்வாளர்களையே களத்தில் குதிக்க வைத்த தமிழ்சிறியின் வீச்சு அளபெரியது, அடுத்த ஏப்ரல் பூலிலும் இந்த தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.
 15. நீங்கள் வேற தமிழ்சிறி, இப்போ எல்லாம் எங்களைவிட முஸ்லிம்களை சிங்களவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள், முஸ்லிம்நாடுகள் இலங்கை முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் கட்டவும் இஸ்லாமிய மதவாத கல்லூரிகள் ஆரம்பிக்கவும்,மட்டுமே காசு கொடுப்பார்களாம் , மற்றும்படி பஞ்சம் பட்டினி என்றால் கண்டு கொள்ளவே மாட்டார்களாம், மிஞ்சி மிஞ்சிபோனால் ரமழான் காலத்தில் இலவச பேரீச்சம் பழ பெட்டிகள் அனுப்புவார்களாம், என்று பேசி கொள்வார்கள், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் சிங்களவரும் முஸ்லிம்களும் எங்களுடன் பெரிதாக பேசுவதில்லை, ஈஸ்டர் தாக்குலுக்கு பிறகு முஸ்லிம்கள் என்றாலே அவர்களுக்கு லைட்டா கசக்கிறது, சரியோ பிழையோ தமிழர்கள் நேருக்கு நேரே மோதினார்கள். கூட இருந்தே குழிபறித்து நயவஞ்சகம் பண்ணவில்லையென்ற ஒரு உணர்வு பல சிங்களவர்களுக்குள் இப்போ அரும்பியிருக்கிறது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கீழேஉள்ள படத்திலிருந்துதான் கண்ணுக்கு தெரிந்த எதிரி தமிழர்களைவிட அவர்கள் ஆபத்தானவர்கள் என்றொரு முடிவுக்கு வர ஆரம்பித்தார்கள்.
 16. நான் வேலை பார்க்குமிடத்திலுள்ள சிங்களவர்கள் பேசி கொண்டார்கள் ஆகிலும் பஞ்சம் பட்டினி ஏற்பட்டால் தமிழர்களுக்கு ஓடி போக தமிழகம் இருக்கு, ஆனால் சிங்களவர்களும் முஸ்லிம்களும் இலங்கைக்குள்ளையே கிடந்து சாகவேண்டியதுதன் எண்டு. இப்போதே பல வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் சிங்களவர்கள் வெள்ளை பச்சை அரிசி சோறும் தேங்காய் சம்பலும்தான் சாப்பிட ஆரம்பித்து விட்டார்களாம் அதுவும் ஒருவேளை, இனி அதுவும் கஷ்டம் என்றார்கள். வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் தங்கடை ஆக்களுக்கு ஹெல்ப் பண்ணுவினமாம் ஆனால் தங்கள் இனம் அப்படியில்லை என்று நொந்து கொண்டார்கள். நம்மவர்களுக்கும் வெளிநாட்டில் ஆக்கள் இல்லாத குடும்பங்களின் நிலை அதுதான் என்பதை அவங்களுக்கு சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே பேசாமல் போய்விட்டேன். இப்படியாவது அவர்கள் கதறலை பார்க்க ஒரு சந்தோஷம் , நம்மவர்கள் நிலையை சொன்னால் அட எல்லோருக்கும் உள்ளதுதான் என்று தங்களுடைய இனத்தை நினைத்து மன ஆறுதல் அடையாமல் இருக்கட்டும் என்ற கொடூர சிந்தனைதான். ஒருகாலம் நாடு முழுவதும் நன்றாக சாப்பிட்டுக்கொண்டிருக்க நம்மை மட்டும் பட்டினி போட்டார்கள், இப்போது நாடு முழுவதும் உணவில்லாமல் இருக்கும்போதுதானே அவர்கள் பட்டினியாய் கிடக்கிறார்கள் அதனால் அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் அல்ல என்பது எண்ணம்.
 17. இன்று இணையம் முழுவதும் GIF என்ற அசையும் படத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக கமெண்ட் செய்வதற்கும், ரியாக்ட் செய்வதற்கும் ஜிஃப் படங்கள் அதிகம் பயன்பட்டு வருகின்றன. ஜிஃபை பயன்படுத்தாதவர்கள் என யாருமே இருக்க முடியாது. இந்நிலையில் இந்த ஜிஃப் அசையும் படத்தை கண்டுபிடித்த கணிப்பொறி விஞ்ஞானி ஸ்டீபன் வில்ஹிட் கொரோனா காரணமாக கடந்த வாரம் காலமானார். அவருக்கு வயது 74. இந்த செய்தி தற்போது தான் வெளியே தெரியவந்துள்ளது. வில்ஹிட் ஜிஃப் படத்தை 1987-ம் ஆண்டு கண்டுபிடித்தார். இவரது முதல் ஜிஃப் இமேஜ் பறக்கும் விமானத்தின் படமாகும். அவர் அப்போது கண்டுபிடித்த ஜிஃப் இன்று இணைய உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஜிஃபை கண்டுபிடித்ததற்காக வில்ஹிட்டுக்கு வெப்பி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. https://www.maalaimalar.com/technology/technologynews/2022/03/25112743/3605583/GIF-Inventor-Steve-Wilhite-Dies-at-74-After-Battling.vpf?fbclid=IwAR0cC3zS5XYL_Yg_CPMGfF736nbZKqfQJst_VDvsMWOQpqtSm0QsPG7d9Jk
 18. ரஷ்யாவை விழுங்க நினைக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலத்தை உக்ரேன் ரஷ்யாவின் வாசல்வரை நேட்டோ ஐரோப்பிய யூனியன் பக்கம் சாய்ந்து இழுத்துகொண்டு வந்து விட பார்த்தது ரஷ்ய பாதுகாப்பு விவகாரங்களை பொறுத்தவரை அந்த நாட்டுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்தான். அதே நேரம் ரஷ்யா போர் தொடுத்தால் நேட்டோ படைகளும் ஐரோப்பிய யூனியனும் தம் பக்கம் களமிறங்கும் என்ற நம்பிக்கையில்தான் கடைசிவரை இறுமாப்பாகவே உக்ரேன் அதிபர் ரஷ்யாவின் எச்சரிக்கைகளை காதில் போட்டுக்கொள்ளாது முட்டிமோதிக்கொண்டு நின்றார். ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் போர் ஆரம்பிக்கும்வரை உக்ரேன்மீது கை வைத்தால் ரஷ்யா மீள முடியாத அழிவை சந்திக்கும் என்றெல்லாம் மிரட்டல் விடுத்தார்கள் , போரை ரஷ்யா ஆரம்பித்ததும் நேட்டோ அமைப்பில் உக்ரேன் இல்லை அதனால் நேட்டோ படைகள் உங்களுக்காக களமிறங்காது என்று கழண்டு கொண்டார்கள். ஐரோப்பிய யூனியனோ ஆயுத உதவிகள் மட்டுமே செய்யலாம் படைகள் அனுப்பபடாது என்று ஒதுங்கி கொண்டார்கள், ஐரோப்பிய அமெரிக்க ஆயுத உதவி எத்தனைநாள் உக்ரேன் தாக்குபிடிக்க உதவி செய்யும்? ரஷ்யாவிடம் இல்லாத ஆயுதங்களா? உலகையே அழிக்ககூடிய வல்லமை படைத்த ஆயுதங்களை கொண்ட ரஷ்யா தன் பக்கம் அழிவுகள் அதிகரிக்கும் நிலை வந்தால் ஒரு கட்டத்தில் அந்த ஆயுதங்களையே பயன்படுத்தி உக்ரேனை இன்னொரு ஹிரோசிமா ஆக்கிவிடாதா? ஒருவேளை மேற்குநாடுகளின் ஆயுத உதவியினால் ரஷ்யாவை நீண்டகாலம் உக்ரேன் தாக்குபிடித்தாலும் உக்ரேன் என்றொரு நாட்டில் கற்குவியல்களையும் மனித எலும்புகூடுகளையும் தவிர வேறு ஏதாவது மிஞ்சுமா? உக்ரேன் போரின் ராணுவ இலக்குகளை தேர்ந்தெடுத்து தாக்குவதை காட்டிலும் ஒருபடி மேலாக உக்ரேனின் பொருளாதார இலக்குகளையும் அதன் உள் கட்டுமானங்களையும் துவம்சம் செய்வதிலேயே குறியாக இருக்கிறது ரஷ்யா, அதன் அர்த்தம் யுத்தம் என்ற என்ற ஒன்று முடிவுக்கு வந்தாலும் உக்ரேன் எனும் நாடு இனி எழுந்து நிற்பதற்கு பல தசாப்தங்கள் ஆகவேண்டும் என்பதில் முடிவாக நிற்கிறது. மொத்ததில் உக்ரேனுக்கு ஆசைகாட்டி இன்று அவர்களை நடுத்தெருவில் அம்போ என்றுவிட்டுவிட்டது நேட்டோவும் ஐரோப்பிய யூனியனும் உக்ரேனுக்கு செய்த அப்பட்டமான துரோகம். உக்ரேன் நேட்டோவில் உறுப்பினராக இல்லாமையினால்தான் தாம் நேரடியாக களமிறங்கவில்லை என்று மேற்குலகம் சொல்லுது, அது அப்பட்டமான பொய், அப்படி பார்த்தால் குவைத் நேட்டோ உறுப்பினர் நாடா? எதற்காக வரிந்து கட்டிக்கொண்டு குவைத்தை காப்பாற்ற ஒட்டுமொத்த மேற்குலகமும் களமிறங்கியது? சதாம் ஹுசைன் ஒரு நோஞ்சான் நாடு என்பதால் நொருக்கி தள்ளினார்கள். ஆனால் ரஷ்யா ராட்சத ராணுவ பலமுள்ள நாடு என்பதால் நேட்டோ பணிந்து நிற்கிறது, உக்ரேனில் நேட்டோ படைகளும் விமானங்களும் களமிறங்கினால் கண்டிப்பாக ஐரோப்பாவின் ஒவ்வொரு நகரங்களையும் ரஷ்யாவின் ஹைப்பர் சொனிக் ஏவுகணைகள் தாக்கும், 2 உலக போருக்கு பின்னர் யுத்தம் என்றால் என்னவென்று தெரியாது வாழ்ந்த மேற்குலக மக்கள் ஒரு ஏவுகணை தாக்கி நூறுபேர் இறந்தாலும், நிச்சயமாக அந்தந்த நாட்டு அரசுகளுக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள், தமக்கு மட்டுமல்ல உலகின் மூலைகளிலிருந்து தம் நாட்டில் தஞ்சமடைபவர்களுக்கும் சுகபோகங்களை அறிமுகபடுத்தி வாழ்ந்து பழக்கப்பட்ட அந்த மக்கள் மரணம் தம் வீட்டு வாசல்வரை வருவதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள், மிக பெரும் அரசியல் கொந்தளிப்பு ஏற்படும், பொருளாதாரம் அதல பாதாளத்திற்குள் விழும், அந்த பயத்திலேயே ரஷ்யாவுடன் நேரடியாக மோதாமல் கழண்டு கொண்டார்கள். மேலே கிருபன் சொன்னதுபோல் ஒருநாட்டு மக்களும் அவர்களின் வாழ்விடமும் கொத்துக்கொத்தாய் அழிக்கப்படுவதை அதனை நேரடியாக அனுபவித்தவர்களாகிய நாம் சரியென்று ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றும்படி தமிழர்களாகிய நாம் ரஷ்ய உக்ரேன் போரில் மானசீகமாக இந்த இருவர் பக்கமும் நிற்கவே முடியாது, ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எமது போராட்டத்தின் அழிவுகளில் ரஷ்ய டாங்கிகளும் கொத்து குண்டுகளும், உக்ரேனிய விமானங்களும் உலங்குவானூர்திகளும் விமானிகளும் பங்கெடுத்து கொண்டிருக்கிறார்கள். இறுதியுத்ததிற்கு தேவையான விமான உலங்கு வானூர்திகளையும் கொடுத்து முடித்து வைத்ததில் உக்ரேனும் ஒரு பங்காளியென்றால், இறுதி யுத்தம் முடிந்து ஓரிரு நாளிலேயே முதல் ஆளாக சரத் பொன்சேகாவை சந்தித்து வாழ்த்தும் வாழ்த்தோலையும் வழங்கியது ரஷ்ய பிரதிநிதி என்பது எப்போதும் நினைவிலிருக்கும்.
 19. பேரூந்தில் உள்ள முஸ்லிம்கள் பற்றியதான இந்த இனதுவேச வார்த்தைகள் உண்மையானதாக இருந்தால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. ஒரு சிறுபான்மை இனத்தை பெரும்பான்மை இனம் இப்படி பகிரங்கமாகவே எச்சரிப்பதென்பது சிறுபான்மை இனமெனும் வீட்டுக்குள் புகுந்த விஷ பாம்புகள்போல்தான் அது தமிழர் முஸ்லிம்கள் என்று பார்க்காமல் யாரை வேண்டுமானாலும் தீண்டி கொல்லும். எந்த ஒரு அநியாயமும் இன்றைக்கு அவர்களுக்கென்றால் நாளைக்கு எமக்கு என்றே பொதுவாக கூறுவார்கள், ஆனால் எமது இனவரலாற்றில் நேற்றைக்கு எமக்கு நடந்தது இன்றைக்கு இவர்களுக்கு நடக்கிறது. நேற்று எம்மை பார்த்து சிறுபான்மை இனமென்பது பெரும்பான்மையினமெனும் மரத்தின்கீழ் வளரும் செடி கொடிபோல எமக்கு அடிமையாய் இருந்து வாழ்வை கழிப்பதே உங்கள் விதி என்று அந்நாள் ஜனாதிபதி டிபி விஜயதுங்க எகத்தாளமிட்டபோது அன்று அரசில் பங்கு வகித்துக்கொண்டும், தென் தமிழீழத்தில் விசேட அதிரடிப்படையுடன் ஊர்காவல் படை என்ற பேரில் இணைந்து எம் மக்களை கொத்து கொத்தாய் கொன்றும் குவித்து நில ஆக்கிரமிப்பு செய்தும் இதே இனவாத சிங்கள இனத்திற்கு தோளோடு தோள் நின்று உடலாலும் பொருளாலும் ஆதரவு வழங்கி எம் அழிவை சிறுபான்மை இனத்தின் மீதான இனவெறி துவேசத்தை நியாயபடுத்தியவர்கள் முஸ்லிம்கள் எனும் நினைவு தவிர்க்க முடியாமலே வந்து போகுது. சரி அதுதான் கடந்த காலமென்றால் இந்த நிமிடம்வரை தமிழர்களுடன் சேர்ந்து பேரினவாதத்தின் திமிரை அடக்கவேண்டுமென்று மனதாலாவது நினைக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை, அவர்கள் மனதில் உள்ளதெல்லாம் சிங்களவனின் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க வேண்டுமென்ற அதே வக்கிரமே. இனவாதத்தை ஒன்று சேர்ந்து எதிர்க்கவேண்டும், ஆனால் ஒன்றுசேர இஸ்லாமியர்கள் எப்போதுமே தயாரில்லை, தமிழின ஒடுக்கலின்போது சிங்களவனுடன் சேர்ந்து கூடி குலாவிய அதே வேகம் தமிழர்களுடன் காண்பிக்க அவர்கள் ஒருபோதும் தயாராக இல்லை. உங்களின்மீதான இனதுவேசத்தை ஒருபோதும் நாங்கள் நியாயபடுத்தவில்லை, ஆனால் உங்களுக்கு ஆதரவு தர எங்களிடம் எந்த பலமும் இப்போது இல்லை, எங்களிடம் இருந்த பலத்தை அழித்ததில் உங்களின் பங்கும் கணிசமாக உண்டு. யார் கண்டார் நாளைக்கே சிங்களவன் தமிழர்மீதான இன அழிப்பை மீண்டும் ஏதோ ஒரு வடிவத்தில் ஆரம்பித்தால் நீங்கள் கண்டிப்பாக சிங்களவர்கள் பக்கமே நிற்பீர்கள் என்பதில் எந்தவித குழப்பமும் எங்களீடம் இல்லை.
 20. அப்போ வடக்கு கிழக்கு மக்கள் உங்களுடன் சேர்ந்து இருக்க வேண்டுமா இல்லை பிரிந்து போக வேண்டுமா என்று நீங்கள் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு வைத்து கேட்டால், கண்டிப்பாக இருண்ட யுகத்திலிருந்து அவர்களை மீட்டு வெளிச்சத்தை காண்பித்த உங்களுக்கு சார்பாக வேண்டாம் என்றுதான் வாக்களிப்பார்கள் என்று சொல்கிறீர்கள்?
 21. ஓரிரு வருடங்களின் முன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு மஹிந்த சகோதரர்களை அனுப்பி வைக்க தெருவில் இறங்கி அணிவகுத்த சிங்களவர்கள், இப்போது ஜனாதிபதியை அவர் மாளிகையிலிருந்து வெளியே அனுப்ப போராட்டம் நடத்துகிறார்கள். 2009இல் சிங்கள அட்டூழியங்களிற்கெதிரான தமிழர்களின் ஆயுதபோர் மஹிந்த சகோதரர்களால் மிகபெரும் படுகொலை உக்கிர தாண்டவத்துடன் முடித்து வைக்கப்பட்டபோது, இனிமேல் இலங்கையின் நிரந்தர ஆட்சிபீடத்தில் மஹிந்த குடும்பமே இருக்கும் என பெரும்தொகை சிங்களவர்களும் ராஜபக்ச குடும்பத்தினரும் எதிர்பார்த்ததைவிட தமிழர்களே அதிகம் யூகித்திருந்தனர். அடுத்த தேர்தலிலேயே அவர்கள் ஆட்சிபீடத்திலிருந்து அகற்றபட்டபோது தமிழர் உட்பட்ட இலங்கையின் அனைத்து இனங்களிற்கும் நம்ப முடியாத ஒரு நிகழ்வாகவே அது அமைந்திருந்தது. இன்று ஒட்டுமொத்த இலங்கையின் வங்குரோத்து பொருளாதார நிலமைக்கு எதிரான போராட்டத்தில்கூட வடக்குகிழக்கு உட்பட்ட அனைத்து இனங்களையும் ஒன்றுசேருமாறு அறைகூவல் விடுத்ததாக எங்கும் பெரிதாக தகவல்கள் இல்லை, ஒட்டு மொத்த மக்களின் வாழ்வில் புயல்வீசபோகும் இந்த நெருக்கடியில்கூட வேற்று இனங்களையும் சக மனிதர்களாக மதிக்கும் இயல்புகளில் எந்த மாற்றமும் இல்லை. உற்றுநோக்கி கவனித்தால் இலங்கை தீவில் சிங்களவர்கள் தமக்கு சார்பாயில்லாத தலைமைகளை பதவியில் இருத்துவார்கள் அல்லது தூக்கி எறிவார்கள் இப்போது ஆட்சியாளர்களுக்கெதிராக இடம்பெறும் பிரளயங்கள்கூட தமக்கு உள்ள பட்டினிபற்றிய கவலையே ஒழிய பிற இனங்கள் பற்றியதானதல்ல, வெறும் வயிற்றில் இருக்கும்போதும் அவர்கள் இன விசுவாசம் தொடர்கிறது. அந்த இனவாதம் இந்த நெருக்கடி தீர்ந்த பின்பும் இலங்கை தீவில் தொடர்கதையாகவே தொடரும்.
 22. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒப்பீட்டளவில், இலங்கையைவிட வெளிநாடுகளில் கடலுணவு இறைச்சி மிக மிக விலைகள் அதிகம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.