Jump to content

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1258
  • Joined

  • Days Won

    14

Everything posted by valavan

  1. சாமை வரகு தினை என்பதை நேரடியாக நானும் பார்த்ததேயில்லை. அது எப்படி நீங்கள் இருவரும் கெளபியை மறந்திருக்கலாம்?😝 ஆக குறைந்தது ஒவ்வொரு சரஸ்வதி பூசை வரும்போதாவது மனசில் அது நின்றே ஆகுமே.. நானெல்லாம் அப்போ... ரியூசன், பள்ளிக்கூடத்தில் வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்தண்டா மரை.. என்று ஆரம்பித்து கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே... என்று முடிக்கும்வரை .. இதெல்லாம் எப்போ பாடி முடிப்பாங்க என்ற கவலையில் தேங்காய் சொட்டு, சின்ன சீரகம், கருவேப்பிலை போட்டு தாளிச்ச கெளபி மீதுதான் ஒரு கண் இருந்துகிட்டே இருக்கும், ஊரில குறைஞ்ச விலையில் அதி உச்ச புரதம் நிறைந்த உணவு கெளபி என்று சொல்வார்கள்.. ஆனால் ஊரில் இருந்த காலத்தில் பார்த்த கெளபி எல்லாம் ஒரே பூச்சி புழு குடைஞ்சு ஒருபக்கம் ஓட்டையான ’உயிர்சத்து’ நிறைந்த தரமற்ற அந்த அவரை வகைதான். வெளிநாட்டுகளில் மிகவும் தரமானதுதான் கடைகளில் கிடைக்கிறது, ஏற்றுமதியென்றால் எப்போதுமே உயர்தரம்.
  2. ஈழத்து போராட்டத்தை எம் வாழ்நாளில் பதிவாக்கி அதனை காவியமாக்குவோம் என்று அடிக்கடி கூவிய இந்திய திரை பிரபலங்கள் இரண்டுபேர்... ஒன்று பாரதிராஜா.. இரண்டு வைரமுத்து.. மேலே உள்ள இரண்டுபேரும் திரையுலகின் ஜாம்பவான்கள்... ஆனால் சொன்னதை செய்ததே இல்லை... இயக்குனர் கிட்டு திரையுலக ஜாம்பவான் இல்லை,... ஆனால் சொல்லிக்கொண்டிருக்காமல் செய்தேவிட்டார். மேதகு... இப்போது சொல்லி பார்க்கும்போது சக மனிதர்களுக்கு இந்த தலைப்பு சாதாரணமாக தெரியலாம், ஈழ தமிழர் சம்பந்தமான ஒரு படைப்பை தயாரிக்கும்போது இந்த பெயர் தாங்கியவரை எம் இனம் எவ்வளவு தூரம் நேசித்தது என்பதை புரிந்து கொண்டே பெயரிட்டிருக்கிறார் இயக்குனர் கிட்டு. காலம் நமக்கு சதி செய்தது போலவே கொரோனாவும் சதி செய்கிறது, இல்லையென்றால் புலம்பெயர் நாடுகளில் உள்ள திரையரங்கங்களில் வெளியிடப்பட்டு மேதகு இயக்குனர் கிட்டுவிற்கும் தயாரிப்பு குழுவும் இப்போ உள்ளதைவிட மிக பெரும் பொருளாதார பலம் பெற்றிருக்கும்.
  3. இதை பதிவிட்ட நயினைமகன் தாயகத்திலா புலம்பெயர்நாட்டிலா இருக்கிறார் என்று தெரியவில்லை. புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்கள் எல்லோரும் கடனாளியாக வாழவில்லை, நிச்சயமாக வசதியுடன் பல லட்சம்பேர் வாழுகிறார்கள். புலம்பெயர்ந்தவர்களில் 95% மேற்பட்டோர் முதுமையடைந்து பல்லு விழும் நிலை வந்தால்கூட தாயகம் திரும்ப தயாராக இல்லை ,திரும்பவும் மாட்டார்கள். அதற்கு பணம் பங்களா கார் மட்டும் காரணம் அல்ல, சொந்தநாட்டிலேயே இனம் மதம் மொழி சாதி பிரதேசம் என்று ஏகப்பட்ட கசப்பான சம்பவங்களை இலங்கை திரும்பி போனால் மறுபடியும் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதும் ஒன்று. புலம்பெயர்ந்த நாட்டிலிருந்தபடி தாயகத்திலிருப்பவர்களை இந்த பக்கம் வராதீர்கள் என்றோ அல்லது தாயகத்தில் எல்லாம் இருக்கு இங்க எதுக்கு வாறீங்கள் என்றோ இங்கிருக்கும் எவரும்சொல்லவும் முடியாது கேட்கவும் முடியாது. நயினைமகன் எங்களை அதை சொல்ல சொல்லி கேட்கவும் கூடாது. அங்கே இருக்கும் மக்களுக்கு எங்காவது போய்விடவேண்டும் என்பதற்கு பொருளாதார நோக்கம் மட்டுமல்ல, சொந்த மக்களுக்கு எந்த வகையிலும் உதவாத உள்ளூர் தமிழ் அரசியல்,வவுனியா தாண்டிவிட்டால் எங்கும் எதிலும் சிங்கள மயம் வடகிழக்கின் குறுகிய நிலப்பரப்புக்குள் மில்லியன் கணக்கில் வாழ்ந்துகொண்டு சிறுநிலையை அடைய வேண்டுமென்றாலும் பெரும் அளவிலான போட்டி , எவ்வளவு படித்திருந்தாலும் சிங்களம் தெரியாவிட்டால் வடக்கு கிழக்கை தாண்டி நல்ல வேலையில் அமர முடியாது என்ற நிலை போன்றன இது எங்கள் நாடு அல்ல என்று ஏற்படுத்திவிட்ட உணர்வும் ஒரு காரணம். புலம்பெயர்ந்தநாடு ஒன்றும் நம்மை கொடுமை படுத்தவில்லை சொந்தநாட்டிலேயே அகதியாக வாழ்ந்த எம்மினத்தை தனதுநாடு பிரஜை ஆக்கி உயிர் பயமின்றி வாழ வாழ்வு தந்த மண்ணில் கஷ்டமான நிலையிலோ அல்லது பொய் வாழ்க்கை வாழ்கிறோம் என்று சொன்னால் நாம் வாழும் மண்ணுக்கு எம்மைவிட நன்றிகெட்டதனமாக யாருமே இருக்க வாய்ப்பில்லை. இங்கு துப்பரவு தொழிலாளியாக இருப்பது ஒன்றும் தரகுறைவில்லை, ஜனாதிபதியானாலும் அந்த தொழிலாளியை ஐயா என்றே அழைப்பார்கள். எந்த தொழில் செய்தாலும் முதலில் நீ மனிதன் அப்புறம்தான் உன் தொழில் என்று மனிதனை மனிதனாக மட்டும் பார்க்கும் இந்த தேசங்கள் சிங்கள தேசம் போன்றதல்ல, புண்ணியபூமி. வாழ்வை திட்டமிடாதவர்கள் கஷ்டபடுகிறார்கள், திட்டமிட்டவர்கள் தமது தகுதி முயற்சிக்கேற்ப நன்றாக வாழ்கிறார்கள். தமது சக்திக்கு உட்பட்டும் சக்தியை மீறியும் தாயகபோராட்டத்துக்கும் மக்களுக்கும் உதவியிருக்கிறார்கள். தாயக மக்கள் தற்போது புலம்பெயர நினைத்தால் அது அவர்கள் விருப்பம், ஆனால் ஒன்றை மட்டும் அவர்களுக்கு சொல்லலாம் பல மில்லியன் ரூபாய்களை செலவிட்டு இங்கே வருபவர்கள் அந்த கடனை கட்டி முடியும் முன்னரே திருப்பி அனுப்பபடும் அபாய நிலையில்தான் தற்போதைய புலம்பெயர் அகதி சட்டங்கள் உள்ளன. ஊரில் வந்து கலர் காட்டுகிறவர்கள் அற்பனுக்கு பவுசு வந்த கேசுகள், அவர்கள் ஊரில் இருந்திருந்தாலும் திடீர் வசதி வந்தால் அப்படிதான் கலர் காட்டியிருப்பார்கள்,
  4. உண்மை, இப்போ பொளந்து கட்டுறது ஏபிடி வில்லியர்ஸ்தான், சுவியண்ணா ஏபிடிக்கு ஒரு கவிதை எழுதுவார் என்று நம்புவோம்.
  5. ’’நினைவிருக்கா?’’ இதை எப்படி மறக்கிறது, மறந்தால் எனது மழலை காலத்தையும் மறந்துவிடவேண்டியதுதான். வண்ண வண்ண ஓவியங்கள் மிக எளிமையான கதைகள், அதிலும் இந்த வேதாளம் விக்கிரமாதித்தன் கதையை படிக்கும்போது மன்னன் கையில் வாள், அந்த பாம்பு எல்லாம் பார்த்து லேசான பயத்துடனேயே படித்த ஞாபகம். என் அம்மாவாங்கி அவ படித்து பின்னாட்களில் அண்ணா படித்து அதற்கப்புறம் நான் படித்து என்று பல அம்புலிமாமாக்கள் உட்பட பல சிறுவர் மலர்கள், நாவல்கள், அந்தகால பத்திரிகைகள் என வாசிப்பு பழக்கமும் தமிழார்வமும் மிக்க என் தாயாரினால் எங்கள் வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன, ஒரு இடப்பெயர்வில் ஒரு மாசம் வேறு இடத்தில் தங்கியிருந்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது அத்தனையையும் கறையான் அரித்து இருந்தது, கூடவே எம் குழந்தை பருவ நினைவுகளையும் சேர்த்து. டிஜிட்டலுக்கு மொத்த உலகமுமே மாறிவிட்டாலும் இந்த வேதாளங்கள் அந்த முருங்கைமரத்தை மறக்காமலிருக்கும். அன்புதம்பியும் யாயினியும் பக்கம் பக்கமாக பகிரும் அம்சங்கள் பல்சுவையானவை... தொடர்க.
  6. ஒரு துரோகத்தின் நாட்காட்டி.. மறதி அதிகமான எமது சமூகத்தில் இரண்டு வருடங்கள் கடந்தாலே அனைத்து வகையான எதிரிகளும் எமக்கு என்னவெல்லாம் செய்தார்கள் என்பது 50% மறந்து போகிறது. அதுவே ஐந்து வருடங்களானால் நடந்த சம்பவங்களை ஒரு குத்து மதிப்பாக, ‘நினைவிருக்கிறது, அப்படி இருக்கும் எண்டு நினைக்கிறேன்’ அப்படித்தான் நடந்திருக்கோணும் எண்டு ஞாபகம்’ என்றே வரலாறுகளை நினைவில் வைக்கிறோம், அதற்கு மேலான காலங்களில் நமக்கு நடந்தவற்றை கூகுளில் தேடி பார்க்கிறோம். ரஞ்சித்தின் இந்த தலைப்பின் கீழான தொடர் பதிவுகள் யாழில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒன்று.
  7. பொறி வைக்கிறியள் வயசு தெரிஞ்சு போயிடும் எண்டு இதுக்கு யாருமே விடை சொல்ல மாட்டாங்கள் எண்டு நினைச்சேன். 😂
  8. இளையராஜா கோலோச்சிய காலங்களில் சங்கர் கணேஷ் இசையில் வந்த இந்த இரண்டு பாடல்களையும் எத்தனை தரம் கேட்டிருப்பேன், இன்னும் எத்தனை தடவை கேட்க போகிறேன் என்பதும் தெரியவில்லை
  9. அவர் அப்படி பேசினதும், எதுவுமே சொல்லாமல் பாலியல் வார்த்தைகள் பேசி மிரட்டுகிறார் என்று பொலிசுக்கு அடிச்சிருக்கலாம். காவல்துறை வந்ததும் மாஸ்க் சரியாக அணிய சொன்னேன் அதற்காகதான் அப்படி மிரட்டும் தொனியில் பாலியல் வார்த்தைகள் பிரயோகித்தார் என்று அவர்களுக்கு சொல்லியிருக்கலாம். இரண்டு குற்றங்கள் அவர்மேல் பதிவாகியிருக்கலாம், அதற்கு பிறகு இனி போகும் இடங்களிலாவது கொஞ்சம் கண்ணியமாக நடக்க பார்ப்பார். நம்மவர்கள் சிலருக்கு வெளிநாடுகள் வந்ததால் பாஸ்போர்ட்தான் மாறியிருக்கு பழக்க வழக்கங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கு.
  10. அதைதான் முதலே சொல்லிவிட்டேனே விசுகு அண்ணா. “””இது நடைமுறை வாழ்வில் கண்டதைதான் பகிர்கிறேன், உங்கள் கருத்தை முற்று முழுதாக மறுதலிப்பதாய் அர்த்தமல்ல.””””
  11. நான் பத்தாம் வகுப்பு படித்த காலம் வரைகூட அம்மாவுக்கு பக்கத்திலதான் பூனைகுட்டி போல நித்திரை கொண்டிருக்கிறேன். வாசிக்கும் பழக்கும் எனது தாயாருக்கு அதிகமாக இருந்ததினால் பக்கத்தில் படுத்திருக்கும்போது அவ சொன்ன புராண கதைகளை கேட்டே சாதாரணதர பரீட்சையில் மகா பாரதம் கம்ப ராமாயணம் பகுதிகளில் அதிக பெறுபேறுகள் பெற்றிருக்கிறேன். எங்காவது ஊர் விழாக்களுக்கு போனாலும் கிப்ஸ் சாரம் அணியும் வயசிலும் அம்மா பக்கதிலயே போயி குழந்தை போல உக்காந்திருக்கிறேன். ஆக்கினை தாங்காமல் , போய் பொடியளோட விளையாடேன்டா.. எதுக்கு அம்மா அம்மா எண்டு பின்னால திரியுறா? அம்மா செத்து போனால் என்ன செய்வா எண்டு என்ர பாசத்தின் லெவலை அளவிட சும்மா ஒரு கோப கேள்வி பலமுறை கேட்டிருக்கிறா. அப்போ நான் சொன்னதெல்லாம் ’நீ செத்துபோனா நானும் செத்துபோவேன்’. சொன்னபடியே அவ செத்து போயிட்டா... ஆனால் நான் இன்னும் வாழ்கிறேன். வலி தரும் பதிவு குமாரசாமியண்ணா.
  12. நல்ல பொறுப்பான அம்மா அப்பாவாக இருந்து ஆளாக்கிவிட்டும் பொண்டாட்டி/புருஷன் மயக்கத்தில் அம்மா அப்பாவை பேஸ்மண்டில் அடைத்து வாழவிட்ட பிள்ளைகளும் உண்டு. நல்ல பொறுப்பான கணவனாக மனைவியாக வாழ்ந்திருந்தும், வெளி தோற்றத்தில் மயங்கி பெற்ற குழந்தைகளைகூட மறந்து அடுத்தவர்கூட ஓடிபோன மனைவியும் கணவனும் உண்டு. நல்ல சமூக பொறுப்புள்ள பிரஜையாக வாழ்பவர்களைதான் இந்த சமூகம் தமது தேவைக்கு மட்டும் பாவித்துவிட்டு அடிக்கடி ஏமாற்றும். வெட்டி பந்தா காட்டுபவர்களுடன் கூட்டு சேர்ந்து உதவி செய்தவர்களுக்கே வித்தை காட்டும். இது நடைமுறை வாழ்வில் கண்டதைதான் பகிர்கிறேன், உங்கள் கருத்தை முற்று முழுதாக மறுதலிப்பதாய் அர்த்தமல்ல.
  13. சத்தியமா அப்படி ஒன்றும் இல்லை குமாரசாமியண்ணா. பலவிதமான கருத்துக்களின் மீதான பார்வை/ஆதங்கம் அது. கருத்தாளர்களை சாட எனக்கு என்ன உரிமை இருக்கிறது? களவிதிகளே அதுக்கு இடம் கொடுக்காதே. மற்றவர்களை சாடுகிறேன் என்று தோன்றினால், என்னை மற்றவர்கள் சாடுவதற்கும் அவர்களுக்கு முழு உரிமையுண்டு. அதை எதிர்க்க எனக்கு எந்த உரிமைகளும் கிடையாது என்று நினைக்கிறேன்.
  14. தமிழ்சிறியின் நகைச்சுவை உணர்வுக்கு இந்த ஆக்கம் கொஞ்சம் சுமார்தான். யாழ்கள உறவுகளை வைத்து நகைச்சுவையாக ஒரு ஆக்கம் உருவாக்குங்கள் எல்லோராலும் விரும்பபடும். அனைவருடனும் நட்பாக பழகும் உங்களை யாரும் கோவித்து கொள்ள மாட்டார்கள்.
  15. TKR ன் தாயகத்தில் இருந்தபடி புலத்தின் உறவுகளுக்கு அங்குள்ள யதார்த்த நிலமையினை உறைக்க சொல்லும் கருத்துக்களில் எப்போதுமே உடன்பாடு உண்டு. ஆனால் திடீர் விடிவெள்ளி அரசியல்வாதிகளின்மீது நீங்கள் காட்டும் பரிவு மட்டுமே சுத்தமா பிடிப்பதேயில்லை. முஸ்லீம் சமூகம் ஆளும் வர்க்கத்துடன் ஒட்டியுறவாடியதால் குப்பை மட்டுமே அள்ள அங்குள்ள தமிழர்களை தள்ளிவிட பட்டார்கள் என்ற உங்கள் தகவல் ஒரு திரியில் பார்த்தேன்... தாயகத்தில் குப்பை அள்ளும் தமிழர் பற்றியும் எழுதுகிறீர்கள், தாயகத்துக்கு குட் பாய் சொல்லிவிட்டு போன தமிழர்கள் பற்றியும் எழுதுகிறீர்கள், எழுத்திலும் உங்கள் பெயர் தனிதான்.
  16. சுதந்திரமாய் வாழ நினைத்ததாலும், சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த முயன்ற ஒரேயொரு குற்றத்தினாலும்தான் எம் தலைமை எம்மைவிட்டு தொலைந்து போனது சுவியண்ணா.
  17. அன்று போருக்கும் போராடியவர்களுக்கும்.. அதற்கு துணை நின்றவர்களுக்கும் கை தடியாய் நின்றது யாழ். இன்று போர் செய்தவர்களும் இல்லை, போராடியவர்களும் இல்லை.. போராட்டுத்துக்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. கைத்தடி மட்டும் தனியே நிற்கிறது. கை தாங்கலாய் போராட்டத்தை தாங்கியவர்கள் எல்லோருமே உடலாலும் மனதாலும் கை கால் இழந்து நிற்கின்றனர், இழந்தது மட்டும் இல்லை அது தரும் வலியைகூட வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தை படுகின்றனர். பலர் நம்பிக்கையிழந்து இந்த மாற்று திறனாளி வாழ்வு இனிமே வேண்டாம் என்று ஓடியே போய்விட்டனர். சிலர் மாற்றங்கள் இனிமேலும் வரும் என்ற ஒற்றை புள்ளி நம்பிக்கையில் இந்த கைதடியை பிடித்தபடி காலம் கழிக்கின்றனர். அன்று நமக்கெதிராய் சிவப்பு புள்ளி உயிர் செலவாய் தெறித்த போரில் கோபம் கொண்டு இக் களத்தில் ஒன்று சேர்ந்தவர்கள், இனிமே எதுவும் ஆகபோவதில்லை என்று ஓடியே போய்விட்டனர். அவர்கள் ஓடி போன பின்பும் பச்சை புள்ளிகளை மட்டும் வரவாய் வைத்துக்கொண்டு சிலர் இந்த தளத்தில் உயிர் நகர்த்துகிறார்கள். எங்களுக்கு வடக்கு அரசியல்வாதிகளை பிடிக்காது, கிழக்கு அரசியல் வாதிகளையும் பிடிக்காது, எங்களுக்கு பிடித்தது எல்லாம் வடக்கு கிழக்கு என்ற வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி வரிபுலி சீருடையில் இருந்த போராளிகள் மட்டுமே. இன்று வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம் என்று போரிட்ட எம் தேச வீரர்களும் எங்கள்கூட இல்லை. ஆனால் அவர்கள் விரும்பியிருக்காத பிரதேச வாதங்கள் மட்டும் வடக்கும் கிழக்கும் சேர்ந்த சிலரிடம் விரும்பபட்டு எங்கள்கூட பயணிக்கிறது. அவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான்.. உதிப்பது கிழக்கு, மறைவது மேற்கு, இதுக்கு சம்பந்தமேயில்லாம வடக்கு கிழக்கு பிணக்கு பற்றி பேசுகிறவர்கள் உருபடாதவர்கள், அவர்கள் கருத்துக்கள் சபையேறாது. யாழ் எனும் கைத்தடி தனிப்பட்ட எவருக்கும் உரித்தானதொன்றல்ல, இனவிடுதலையில் சோர்வானவர்கள் எவர் வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் அவர்கள் பணத்தில் நகரலாம் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும். ஆனால் இனத்துக்கான காலபதிவுகளை ஒரு பணியாக தொடரும் தளங்களுக்கு காலம் செல்ல செல்ல நரம்புகள் இன்னும் முறுக்கேறுமே தவிர முடிவுக்கு வராது., வாழிய உங்கள் இன பணி.
  18. ஏற்கனவே இங்கு இணைத்தேனா, அல்லது வேறு யாரும் இணைத்தார்களா தெரியவில்லை, இந்த கருப்பு வெள்ளை பாடல் ஐயா டி எம் எஸ் குரலில் கேட்பது.. எஸ் பிபி குரலில் கேட்பது சுவை. ஏற்கனவே பகிரபட்டிருந்தால் மன்னிக்கவும்.
  19. 74ம் ஆண்டே முழுக்க முழுக்க சிங்கள ஆக்கிரமிப்பினுள் இருந்தபடி தனியொருவனாக சிங்கள அரசபயங்கரவாதத்துக்கு எதிராக போராடி சிங்களவனால் கொல்லப்பட்ட சிவகுமாரன்.. ஒருவேளை 80 பதுகளின் ஆரம்பத்திலும், 83 களின் இயக்கங்களின் எழுச்சி காலத்திலும் உயிரோடு இருந்திருந்தால் இவர் பெயர் எடுப்பதா என்ற காழ்ப்புணர்வில் நம்மில் யார் பெரியவர் என்ற போட்டியில்.. தாமதமாய் கொல்லப்பட்டிருப்பார்... சிங்களவனால் அல்ல தமிழ் இயக்கங்களினால். வரலாறுகள் நாம் விரும்பாவிட்டாலும் சாக்கடை கலந்த பன்னீரை தெளிப்பவை.
  20. தலைவருக்கான அஞ்சலி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் நான் சொல்ல வந்த கருத்தை நீக்கிவிட்டேன்.
  21. பழைய பாடல்கள் என்றால் இந்த மண்ணில் இப்போது உயிரோடு இல்லாத அந்தக்கால பாடகர்கள் மட்டுமா நினைவுக்கு வரும்? இரு வர்ணப்பாடல்கள் எனும்போதும் இப்போதும் நம்மிடையே உள்ள எஸ்பிபியும் நெஞ்சை அள்ளுவார். எப்படி நான்கு சினிமா தலைமுறைக்கும் இனிக்க இனிக்க பாட முடிகிறது இவரால் மட்டும்? : சம்சாரம் என்பதுமட்டும் வீணையல்ல எஸ்பிபியும்தான்: அன்புமேகமே.. எஸ்பிபி பாடினால் தேன் சிந்துமே வானம்.. பூமி அதை தன் செவிகளில் ஏந்தும்.. எனக்கு பிடிக்காத ஜெயலலிதாவின்.. எனக்கு பிடித்த நடனம்..&.ஸ்ரைல்../எஸ்பிபியின் பாடலில் இருப்பதால் இரண்டையும் ரசிக்கலாம்...
  22. யார் தருவார் இந்த அரியாசனம்: எப்படிபா இப்படி நடிக்கமுடியுது என்று சிவாஜியின் முக பாவனைகளை பார்த்து மெய் சிலிர்த்த பாடல்களில் ஒன்று அதிலும், , பாடலின் முடிவில் அந்த பெண்ணின் ருத்ர தாண்டவம்.....வாவ் ரகம்: மாதவி பொன் மயிலாள்.. பாடல்: நடனமா,நடிப்பா, குரலா ஒன்றையொன்று வென்றுபோக துடிக்கிறது என்று ரசித்த பாடல்: இசைகேட்டால்... செளந்தரராஜன் முழு உயிரையும் கொடுத்து பாடி வைக்க,அதனை முக பாவனைகள்,நடையினை வைத்து அவரை ஓவர்ரேக் பண்ணும் கலை, நடிக்கவென்றே பிறந்தவர்களால் மட்டுமே முடியும்: சிந்துநதியின்மிசை... 2:30 லிருந்து 2:50 வரை , இருந்த இடத்திலிருந்துகொண்டே முகபாவனையில் கதை சொல்லி முடிக்கும் வித்தை, எத்தனை தடவை யுரியூப்பில் இந்த கட்டத்தை மட்டும் சிரித்துக்கொண்டே பார்த்திருப்பேன் என்பது நிலைவில் இல்லை.
  23. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் யாழ்கள கல்விமான்களில் ஒருவரான ராஜவன்னியனுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் யாழ்கள சின்னப்புவுக்கு... யாழில் அடையாளங்களில் ஒருவர், யாழ்கள உறவுகளை காணவில்லையென்ற தலைப்பை 1.2 தசாப்தங்களூக்கு முன்னர் ஆரம்பித்ததும் அவரே, இப்போ அவரையே காணவில்லை!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.