Karan T.

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    27
  • Joined

  • Last visited

Community Reputation

15 Neutral

About Karan T.

  • Rank
    புதிய உறுப்பினர்
  • Birthday April 17

Profile Information

  • Gender
    Male
  • Location
    Switzerland

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

  1. இது நீ யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த விடயம். திருகோணமலை உலகில் பார்க்கவேண்டிய 52 நகரங்களில் 41 இடத்தை பிடித்துள்ளது. http://www.nytimes.com/interactive/2016/01/07/travel/places-to-visit.html?rref=collection%2Fsectioncollection%2Ftravel&action=click&contentCollection=travel&region=rank&module=package&version=highlights&contentPlacement=9&pgtype=sectionfront&_r=0
  2. கழுத்தில் மின்னும் தங்க சங்கிலி, கறுத்த கண்ணாடி, வார்த்தைக்கு வார்த்தை வெக்கை, ஊருக்கு போனா செலவு அடுத்தது அங்க இருக்கிற எல்லாருக்கும் ஏதாவது குடுத்திட்டு வரவேணும். போகாமலே இருக்கலாம், ஆனா போறம். „அண்ண விமான பற்றுச்சீட்டு கொழும்புக்கு என்ன விலையண்ண ஏழாம் மாசம் 9ம் திகதி போய் 22 23 வாற மாதிரி?“ „தம்பி இப்ப தை மாசம், ஆனா நிறைய சீட் இல்லை. எத்தின பேர் நீங்க?“ „நான் என்ற வைப் அடுத்தது என்ற இரண்டு சின்ன பிள்ளைகள், மகனுக்கு 7 வயசு மகளுக்கு 4 வயசு. அவாவ மடியில வச்சு இருக்க ஏலாதா?“ „இல்ல தம்பி அவாக்கு புள் டிக்கெட், தலா ஒருத்தருக்கு 850.- சுவிஸ் பிராங் வருது.“ „என்ன அண்ண இந்த விலை சொல்லுறீங்க? „நான் ஒண்டும் பண்ண ஏலாது, விடுமுறை நேரம், இது எமிரேட்ஸ் விமானம், கத்தார் ஒரு கிழமை முதல் போனா குறைவு. தம்பி எமிரேட்ஸ் 20 கிலோ நான் கொண்டு போகலாம். ஓமான் 40 கிலோ ஆனா சீட் இல்லை“ „சரி அண்ண யோசிச்சிட்டு சொல்லுறன்.“ மனைவியோட பேசும் போது. „அப்பா இவங்கள் இந்த விலை சொல்லுறாங்கள் இப்ப என்ன செய்ய?“ „வேற இடத்தில அடிச்சு விசாரிங்கோப்பா.“ „அண்ண விமான பற்றுச்சீட்டு கொழும்புக்கு என்ன விலையண்ண ஏழாம் மாசம் 9ம் திகதி போய் 22 23 வாற மாதிரி?......." „எல்லாரும் ஒரு விலை தான் சொல்லுறாங்கள் முதல் கேட்ட இடத்தில புக் பண்ணுவம். காசு உடனடியா கட்ட வேணும் கையில இல்ல, யாரிட்டயாவது கைமாறுவம். கிச்சன்ல லீவு கேக்க வேணும். தருவன் எண்டு போன வருசம் சொன்னவன், மறந்திருக்க மாட்டான் எண்டு நினைக்கிறன். நீயும் பக்ரீல லீவு கேள் நாளைக்கு“ „குமார் அண்ணேட்ட காசு கேட்டு பார்க்கிறன். அங்க செலவுக்கு 5000 பிராங் ஆவாது வேணம் அதுக்கும் ஏதாவது பண்ணுவம். ஓம் கேட்கிறன்.“ ஏழாம் மாசம் „எல்லாம் எடுத்து வச்சாச்சோ? உடுப்பு பிள்ளைகளுக்கு உனக்கு நிறைய எடுத்து வை. அங்க வாங்க ஏலாது. லொக்கரில என்ற செயின் இருக்கு எடுத்திட்டு வாறன் பின்னேரம், உனக்கும் ஏதாவது வேணுமா? கடேல அரை விலைக்கு கண்ணாடி போட்டு இருந்தவன் அதை வாங்கீற்றன், சூரியன் கண்ண குத்தும். எங்கயாவது சொக்லேட் மலிவா கிடந்தா பார்க்கிறன், எல்லாரும் எதிர்பார்ப்பினம். டொயிலேட் பேப்பர் மறந்திடாத. யார் ஏத்தவருவினம் எண்டு சொன்னி?“ „எனக்கு ரெண்டு சோடி காப்பு எடுங்க. மாமா வான் வச்சு இருக்கிறேர் அவர் ஏத்த வருவேர். பெற்றோல் மட்டும் அடிச்சா காணும் கொழும்பில இருந்து யாழ்ப்பாணத்துக்கு. அங்கயும் அவர புடிச்சா மலிவா இருக்கும்.“ விமான நிலையத்தில் „அப்பா எல்லாம் எடுத்திட்டியே, பிள்ளைகளுக்கு எல்லாம் இருக்கா? என்னம் 3 மணித்தியாளம் இருக்கு எல்லா சூட்கேசயும் கொண்டே போடுவம், பேந்து கியூ பெரிசா இருக்கும்.“ „10 கிலோ கூட இருக்கு நாலு சூட்கேஸ் சேர்த்தா.“ „அத கான்ட்லக்கேசுக்க வச்சு இருக்கலாமே?“ „அதுக்க 7 கிலோக்கு பதிலா தலா 10க்கு கிட்ட இருக்கு நாலு சின்ன சூட்கேசுக்க. தன்மையா கேட்டு பார்ப்பம் பிள்ளைகளோட போறம் விட சொல்லி. இல்லாட்டி தம்பி நிக்குறான் அவனிட்ட குடுத்து விடுவம் கொண்டே வீட்ட வைக்கட்டும்.“ „Passport please. How many baggage? You have 90kg, only 80kg possible. Please put the handbaggage on the band, sorry only 7kg per person, you have 12kg more.“ „Please, kids, going Sri Lanka, ஒருக்கா விடுங்கோ, Sorry please just one time leave. „No sir, I have to follow the rules. Please reduce the weight and come back. Next please!“ „என்னத்தை அப்பா கட்டி வச்சனி? ஆக்கள் பாக்குதுகள்.“ „பார்த்தா பார்க்கட்டும், நீங்கள் தானே அதை இதை கட்டி வை எண்டனிங்கள். சுபா அக்கா ஏதோ பலகாரம் தன்ர ஆக்களுக்கு தந்து விட்டவோ, அதுவே கிட்டத்தட்ட 15 கிலோ. சோல்லேக்க 5 கிலோ எண்டு தான் சொன்னவோ.“ „இதுக்கு தான் ஆக்களுக்கு சொல்லாம போகோணும். சரி கதைக்காம குறையும்.“ விமானத்தில் „நல்ல சாப்பாடு மாதிரி தெரியிது. பிறகு ஏதாவது வாங்கி அடிச்சிட்டு படுத்தா டுபாய்ல தான் ஒழும்புவன்.“ „அப்பா என்ன சாப்பாடப்பா இது, எப்படி இத சாப்புடுறது? அப்பா இந்த ரீவீல தமிழ் படம் பார்க்கலாமாம் ஒருக்க போட்டுவிட சொல்லுங்க“ „பக்கத்து ஆக்கள் எப்படி சாப்புடுறினம் எண்டு பார்த்திட்டு நீ சாப்புடு. வேலை செய்றவள் வரேக்க கூப்புடுறன்.“ கொழும்பில் செயினை வேளியே விட்டு, கண்ணாடியை மாட்டிக்கொண்டு, இராஜ நடை நடந்து இந்தா வந்திட்டேன்டா வெளிநாட்டுக்காரன். கண்ணன் தர்மலிங்கம்
  3. எரியும் விளக்கே அணையாமல் நீ இரு என் தோழி உறங்குகின்றாள் துணையாக நீ இரு சுத்தும் மணியே சத்தங்கள் போடாதே தூக்கத்தில் எழுந்துவிட்டால் என் உள்ளம் தாங்காதே கைகளை பிடித்து உள்ளத்தை நீ அணைத்தாய் தோள்மீது தலைசாய்த்து உன் சுமையை இறக்கிவைத்தாய் உன் உதட்டின் வெப்பத்தில் என் கன்னம் உருகிபோக மெய்மறந்து நான் நின்றேன் இன்னும் இறுக்கி அணைத்தாயே உன் கண்ணின் நீர்துளி கைகளிலே ஏந்திவைத்தோன் உன் கையில் என் இதயம் பத்திரமா சொல் தோழி உயிரை பகிர்ந்தாய் உறவை பகிர்ந்தாய் காலம் முழுதும் என்னோடு துணையாக வரவேண்டும் எரியும் விளக்கே அணையாமல் நீ இரு என் தோழி உறங்குகின்றாள் துணையாக நீ இரு சுத்தும் மணியே சத்தங்கள் போடாதே தூக்கத்தில் எழுந்துவிட்டால் என் உள்ளம் தாங்காதே கரன் தர்மலிங்கம்
  4. சிறு வயதில் வெளிநாடு வந்துவிட்டேன். பெரிய வயதும் இல்லை. நாட்டுக்கு சென்று அங்கு வாழ ஆசை. திருமணம் குட்டி என்று ஆனபிறகு சாத்தியம் இல்லாமல் போய்விடுமா என்று மனது உருக்குகின்றது. பிள்ளையின் படிப்பு முக்கியம். எனக்கு அங்கு என்ன வேலை வாய்ப்பு உண்டு? பிள்ளையின் எதிர்காலம் என்ன. எல்லாத்துக்கு வினா கிடைக்குமா...
  5. சுவிஸ் நாட்டில் பரவலாக சீட்டு மற்றும் கடன் பற்றியே பேச்சு. இருப்பினும் சில சுவாரசியங்கள் நடந்தவண்ணமே உள்ளன. அதில் ஒரு உண்மை சம்பவம் உங்களுக்காக. பெயர் மல்லிகா என்று வைப்போம். மல்லிகா அக்கா ஒரு அவசர தேவைக்கு சிலரிடம் கடனாக பணம் வாங்கினார். ஒருவரிடம் 20,000, மற்றவரிடம் 10,000, வேறு ஒருவரிடம் 15‘000 என கிட்டத்தட்ட 60‘000 சேர்த்து விட்டார். வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டவில்லை, பணத்தை திரும்ப கேட்க இல்லை என்று கூறிவிட்டார். கடன்காரர் மிரட்ட அவர் தனக்கு 5,000 சம்பளம், அதில் எல்லா செலவும் போக மிஞ்சுவது 1,000. இந்த 1,000 கழித்து எடுக்க விரும்பினால் எடுக்கலாம், உங்களில் யார் அதியம் கழிக்கிறாரோ அவருக்கு தரப்படும். இதன் அர்த்தம்: மல்லிகா அக்கா செலுத்த வேண்டிய கடனில் யார் அதிகம் கழிக்கிறார்களோ அவருக்கு பணம். உதாரணம: எனக்கு தரவேண்டிய கடனில் 2,000 கழிக்கிறேன் எனக்கு இந்த 1,000 தா, நான் 3,000 கழிக்கிறேன் எனக்கு இந்த 1,000 தா, நான் 5,000 கழிகிறேன் இந்த 1,000 தா. அதிகமாக 5,000 கழித்தவருக்கு இந்த 1,000. தனது காசு 5,000 இழந்து இந்த 1,000 பெற்றது எந்த அழவுக்கு எமாற்றப்படுகிறார்கள் எண்டு தெரிகிறது.
  6. பரவலா எல்லா இடமும் சீட்டு பற்றி தான் பேச்சு. வேற கடைக்காரர் காச சுத்தீற்றாங்கள், இவர் இவர் காச எடுத்துக்கொண்டு ஓடிட்டார், இவர் தரேல்ல எண்டு. கிட்டத்தட்ட எல்லா பெரிய சீட்டுக்களும் தொங்கீற்று. கடைக்காரர் போட்ட சீட்டுகள் யாரோ சுத்தீற்றினம் எண்டு தான் கதை, பார்த்தா கடையில புதிய புதிய சாமான்கள் கிடக்கு. உடுப்பு கடைகளில புதிய டிசைன் உடுப்பு. இது போதாத குறைக்கு வேற இடத்தில புதுக்கடை. பெரிய விசயம் இல்ல, சீட்ட எடுத்த ஆக்களுக்கு காசு போகேல்ல, 60,000 வரவேண்டிய இடத்தில 25,000 குடுத்தா, மிச்சத்த கேக்க, இவர் தந்தா தாறன் எண்டு பதில். உதாரணத்துக்கு, மிச்சம் தரேல்ல எண்டா 20 பேரில 8 பேரா தந்தவே, மிச்சம் 12 தரேல்லையா? சாத்தியம் இல்லாத நிலை, மிச்சம் எங்க? ஒரு நகை கடைகாரர் தனக்கு கடன், சீட்டுக்கு தந்த காசுகளை தனக்கு எடுத்திட்டேர், இப்ப 20,000 தாறன், மிச்சம் 4 மாசத்தில தாறன் எண்டு சொல்லீட்டார். எங்க முறையிடுறது? சீட்டுக்கு பத்திரங்கள் இல்ல, எல்லாமே வாய்பேச்சில தான் நடக்கு. நடத்துற ஆக்களே இப்புடி செய்றது தவறு. ஊரில சீட்டுகள் சுத்தினதால நிறைய பேர் கடனாழியா ஆகீற்றினம். இந்த சீட்ட எடுத்து மற்றது கட்டுவம் எண்ட ஆக்கள் நல்லா நாறி பொயிற்றினம். எடுக்கிற சம்பளம் 5000 மாசம் 4000, 4000 எண்டு இரண்டு சீட்டு புடிக்கிறது எப்படி. சீட்ட எடுத்த ஆக்களுக்கு முதல் 20,000 தாறன், மிச்சம் 5 மாசத்தில தாறன் எண்டு சீட்டு நடத்தின ஆக்கள் சொல்லீற்றினம். அடுத்த கூறல் நடக்கேக்க கட்டுக்காசு குடுக்க வேணும், ஆனா எத்தின மாசம் கட்டுறது. 20,000 முடிஞ்சா எங்க போறது. குடும்பம் குட்டி சாப்பாட்டுக்கு என்ன செய்றது. சில பேர் வட்டிக்கு காசு வாங்கி சீட்ட கட்டீற்று வாறினம். கட்டாட்டி மிச்ச காசும் வராமா போயிரும், அதோடு முகங்களில முழிக்க வேணும், அது நண்பரா இருக்கலாம். முதலில சீட்ட எடுத்த ஆக்களுக்கு காசுகள் சரியா தான் வந்தது, பிறகு தான் ஒருத்தன் சுத்த மற்றவன் சுத்த வெளிக்கிட்டான். அண்ணாச்சீல நம்பிக்க வச்ச ஆக்கள் காச கட்டீற்று தான் வாறினம். சரி வேற வழி? எடுத்த ஆக்கள் கட்டாட்டி ஊரில வேற ஆக்கள் முகத்தில முழிக்க ஏலாது, மனசாட்சியும் வேணும். அண்ணாச்சி வருமானம் காணாது எண்டு தான் சீட்டு தொடங்கினவர். இரண்டு பேர் சுத்தீற்றினம், ஆறுமுகம் தருவன் தருவன் எண்டு இழுக்கிறேர். சில பேர் அண்ணாச்சீட்ட கட்டின காசயாவது தாங்க நாங்கள் சீட்டில இருந்து விலகுறம் எண்டும் கேட்டு; பார்த்திச்சினம். சீட்டுக்கு எண்டு விதிமுறைகள் இருக்கு, நடத்திறவர் எல்லாத்துக்கும் பொறுப்பு. சந்திரன் வீட்டில தட்டினா மனிசி அவர் இல்ல எண்டு திருப்பி அனுப்பீற்றா. திரும்ப போக தப்பா நடந்தனிங்கள் எண்டு சொல்லி பொலிஸ்ட சொல்லீருவன் எண்டு மிரட்டி இருக்கிறா. இதுக்கு மேல என்னத்த பண்ண. சந்திரன் பாண்டிய பார்த்துத்தான் கட்டாட்டி எப்படியும் யாரும் ஒண்டும் பண்ண ஏலாது எண்டு தெரிஞ்சிற்று. பாண்டீன்ர மகள் புது வாகனத்தில திரியுறது ஆக்கள் பார்த்து இருக்கினம். புறோக்கர் இண்டைக்கு தாறன் நாளைக்கு தாறன் எண்டு தான் இன்னும் சொல்லுறேர். எடுக்கிற 6000 சம்பளத்திற்கு ரெண்டு சீட்டு, பழைய வீட்டு வட்டி, புது வீட்டுக்கு வட்டி, ரெண்டு கடனா எடுத்த சீட்டு அடுத்தது வட்டிக்கு வாங்கின காசு. பிள்ளைகள் மனிசியோட விடுமுறை போக சிங்கப்பூர்க்கு டிக்கட் போட்டிட்டார். மற்ற சீட்டும் கட்டாம திரியுறேர். எங்கட ஆக்கள் வீடு பாக்குறதுக்கு இவர புறோக்கர புடிச்சது. ஏனி புடிக்க தேவை இல்ல எண்டு தெரிஞ்சிற்று. விபரம் தெரிஞ்ச ஆக்கள் நிறைய பேர் இருக்கேக்க, எதுக்கு இவருக்கும் காசு குடுக்க வேணும். இதிலயும் பவுடி என்ன எண்டா, வீடு வித்தா இவருக்கு வீடு வாங்குற ஆக்கள் காசு குடுக்கினம், வீடு விக்குறவன் காசு குடுக்கிறான் அடுத்தது வங்கி காசு குடுக்குது. இது இவர்ர பக்கத்தது பிஸ்ணசு, இப்ப படுத்திட்டு. கடன்களால யாரும் வீடும் வாங்க வரவும் மாட்டினம். அடுத்த கூறலில திரும்ப அந்த 3 பேரின்ர காசு வரேல்ல, இன்னும் ஒரு கிழைமையில மிச்சம் தாறன் எண்டு சொல்லி அண்ணாச்சி அனுப்பீற்றார். போன முறை காசு யாரிட்டையோ கைமாறி குடுத்தவர். கிட்டத்தட்ட இந்த கூறலுக்கு 12000 குடுக்குமதி இருக்கு. இரண்டு பேர் சுத்தின காசு கிட்டத்தட்ட 90,000 கிட்ட வருது, இதில ஆறுமுகம் 50,000கு மேல குடுக்க வேணும். வருமானமும் கெட்டு போச்சு. ஒரு நாள் சாமத்தில அண்ணாச்சிக்கு நித்திர வரேல்ல. இரவு முழுக்க ஜோசனை. ஒரு சிந்தனையும் இல்லாமல் கயித்த எடுத்தார், நல்ல இடம் தேடினார், தூக்க போட்டார். என்னடா சத்தம் கேக்குது எண்டு மனிசி ஓடிவர இவர் தொங்குறத பார்த்து அலரி அடிச்சு ஓடிவந்து கால புடிச்சிட்டா. இவர் விடு விடு எண்டு கத்த, குடும்பத்த குட்டிகளை யோசிக்கேல்லையே எண்டு மனிசி அலறிச்சு. படுத்த பிள்ளைகளும் ஓடிவந்து கத்த வெளிக்கிட்டுதுகள். கதிரைய காலுக்கு வச்சு இறக்கிச்சினம். என்னால முடியேல எண்டு அண்ணாச்சி அழுகை. உடனே மனிசி வீடுகளை விப்பம் எண்டு சொல்லிச்சு. வீட்ட வித்தா கூட எல்லா காசும் வராது, வங்கீன்ர பணம் (மோர்கேச்) ஒரு 600,000 இருக்கு, விக்குறது எண்டா 750,000 விக்கலாம், அனா யாராச்சும் வாங்க வேணுமே. போட்ட முதல் 150,000 வரும். அதுக்கு ஏற்ற வழிய பார்க்க வேணும். கடையில சேருறது உடனே கடனுக்கு போகுது. எனி யாரும் சுத்தாம இருந்தா சரி இல்லாட்டி இன்னும் தலையிடி. இந்த சீட்டோட அண்ணாச்சி நொந்து நூலாகிற்றார். சீட்டு முடிய இன்னும் 6 மாசம் இருக்கு, அதோட கொஞ்சம் நிம்மதி. முடிவு… கருத்து கூறல்: நன்றி வாசித்தமைக்கு. எனது முதல் தொடர்கதை, தவறுகளுக்கு மன்னிக்கவும். சீட்டு 80,000 என்பது சிறிய தொகை. உண்மையில் 100,000 மேல் நடைபெறுகிறது. சம்பளம் குறைவாக எடுப்பவர்கள் கூட முதலில் கழித்து எடுத்து மீதியை கட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் இந்த சூதாட்டத்தில் இணைகிறார்கள். அதிக கழிவில் எடுப்பது நட்டம், அதனால் சில காலம் பொறுத்து எடுப்பம் என்பது சிலரது விருப்பு. சேர்த்து வைத்த காசுpனை ஈடுபடுத்தி நட்டம் பட்டவர்கள் அதிகமானவர்கள். பேராசைகள் நம்மவர்களுக்கு வந்தது போட்டி பொறாமையால். ஒருவர் வீடு வாங்கி விட்டார் நாங்களும் வாங்க வேண்டும். பணத்தை சேர்த்து வாங்குவதர்க்கு இரண்டு மூண்டு வருடங்கள் ஆகி விடும் அத்தோடு விலைகள் உயர்ந்து விடும். விரைவில் பணம் வேண்டும் என்றால் சீட்டே தகுந்தது. இது பிழையான சிந்தனை. சீட்டினை சுத்தினவர்கள் தாங்கள் தருவம் தருவம் எண்டே சொல்லி காலத்தை ஓட்டுகிறார்கள். மற்றவரின் பணத்தில் சாப்பிடுவது எப்படி எண்டு தெரியவில்லை. தொண்டையில் உணவு ஒட்டுமா தெரியவில்லை. நன்றி கரன் தர்மலிங்கம்
  7. பாகம் 4 கடைசி பாகம் ஆகும். எழுதி முடித்து விட்டேன், திருத்த வேலைகள் செய்ய வேண்டும். விடுமுறை காரணங்களால் சிறு தாமதத்துடன் வெளிவரும்.
  8. மூண்டாவது சீட்டுக்கு கூடியாச்சு. கழிவு இன்னும் பெரிசா தான் இருக்கு, கட்டாய கழிவு 13‘600. இந்த முறை 22‘500 மொத்த கழிவு. ஆறுமுகம் வாங்கீற்றார். கழிவு எப்புடியும் பெரிசா இருந்தாலும் இவருக்கு தேவையா இருக்கு. கழுத்தில கத்திய வச்சமாதிரி நிலமை. 130‘000ல நிண்ட கடன் சீட்ட கழிச்சு இப்ப 77‘000 கிட்ட நிக்குது. சீட்டு எடுத்ததால அந்த மாசத்தில கட்டுப்பணம் இல்ல. சொந்தக்காரர் யாரோ 15‘000 ஆயிரம் வட்டிக்கு தாறினம் எண்டதால இன்னும் 52‘000 எங்க போறது எண்ட யோசினை. வேற சீட்டுகள் நடக்குறதால அங்க தெரிஞ்ச ஆளுக்கு சீட்டு விழுந்திருக்கு. 65‘000 சீட்டுக்கு 11‘000 கழிவில 54‘000 வந்து இருக்கு. அத தர சொல்லி கெஞ்சி கூத்தாடி வாங்கீற்றார். யாரோ பாவம் வாங்குற சம்பளத்துக்கு ஏத்த சீட்டு போட்டிருக்கிறார். அந்த சீட்டு முடிய என்னும் ஜந்து மாசம் தான் இருக்கு. ஆறுமுகமோ தான் ஜந்து மாசத்தில திருப்பி தாறன் எண்டு சொல்லீற்றார். இல்லாத பொல்லாததுக்கு தன்ர புது வீட்டை பெற்றி பெரிசா சொல்லி திரியுறார். தன்ர பழைய வீட்ட வாங்க நல்ல காசுக்கு கேக்கிறாங்கள் எண்டுற நம்பிக்கையான வார்த்தைகள சொல்லி சமாளிக்கிறார். வாறவன் பார்க்கிறவன் எல்லாம் வீடு சின்னன், அதுக்கு ஏத்த விலையும் இல்ல எண்டு புறுபுறுப்பு தான். ஜந்து மாசத்தில பிள்ளைகளுக்கு பாடசாலை விடுமுறை வேற, எங்க போவம் எண்டு மனிசி கேட்டபடி, அதுக்கு ஒரு வழி பண்ண வேணும். மாசங்கள் ஓட எட்டாவது கூறலுக்கு வந்தாச்சு. 6வது சீட்ட சந்திரன் எண்டுற யாரோ எடுத்திற்றினம். 7வது சீட்ட 18‘000 கழிவுக்கு பாண்டி எடுத்திட்டேர். சும்மா எட்டிப்பார்க்கிற பாண்டிய இண்டைக்கு காணேல்ல. போன் பண்ணி கட்டுப்பணத்த மகளிட்ட சொல்லியாச்சு. பத்தாம் திகதி ஆகி கட்டுக்காசு இன்னும் வரேல்ல. போன் பண்ணினா தூக்கேல, கைபோனுக்கு அடிச்சும் தூக்கேல்ல. வேற சீட்டுக்காறர் அண்ணாச்சிட்ட கேட்டிருக்கிறினம் பாண்டின்ர கட்டுக்காசு வந்திற்றா எண்டு, ஏனெண்டா தங்களுக்கும் வரேல்லையாம். காட்டு தீ மாதிரி இந்த விசயம் பரவீற்று. பாண்டி சீட்ட சுத்தீற்றான், தொப்பி போட்டிற்றான் எண்டு கதை ஊர் முழுக்க. சின்னுக்கு விழுந்த சீட்ட வாங்க அவன் வந்திற்றான். இப்ப காசு குறையிது. அண்ணாச்சி தன்னட்ட இருந்தத போட்டு குடுத்திட்டேர். ஒரு காசு தான் வரேல்ல. குடுக்காட்டி நம்பிக்க போயிரும். இப்ப பிரச்சின அந்த ஒரு மாச கட்டுக்காசு இல்லை. பாண்டி 62‘000 எடுத்து இருக்கிறான். மொத்தமா கட்டின காசு ஒரு 20‘000 தான் வரும். இப்ப 42‘000 என்ன பதில் சொல்லுறது, எங்க போறது. சீட்டு தொடங்கினது இவர். அண்ணாச்சி பாண்டிய தேடி வீடு மட்டும் பொயிட்டேர், அங்க மகள் மட்டும் தான் நிண்டது. வீட்டு போன் வேலை செய்யேல, கைபோன் துலஞ்சிற்றாம். நம்பாம சிரிச்சிற்று வந்தார். திரும்ப ஒருக்கா போக யாரும் திறக்கேல. அடுத்த கூறலும் வருது. இந்த முறை காசு வராட்டி சனம் குழம்பீரும். கடைசியா ஒருக்கா பாண்டி வீட்ட போய் பார்ப்பம் எண்டு போனவர் தான், பாண்டின்ர மனிசி பொலிஸ்க்கு போன் அடிச்சிற்று. பொலிஸ் வந்தோண பாண்டி முகம் காட்டினான். பெரிசா ஒண்டும் கதைக்கேல, வைராக்கியமா உன்னால முடிஞ்சா காச வாங்கிப்பார் எண்டு சொல்லீட்டான். பொலிஸ் என்ன எண்டு கேக்க பாண்டி மட்டும் இவர் சும்மா சும்மா வந்து இடஞ்சல் பண்ணுறார் எண்டாச்சு. எனி இந்த பக்கம் வந்தா புடிச்சிற்று போயிருவம் எண்டு எச்சரிச்சாச்சு. ஐந்து நாளுக்கு பிறகு தான் தெரியும் பொலிஸ் வேறு ஒரு சீட்டு காரணையும் எச்சரிச்சது எண்டு. யாரும் பொலிஸிட்ட சொல்ல முடியாது பெரிய பிரச்சினை. இது கழவு வேலை புடிபட்டா சுவிஸ் பத்திரிகையில தலைப்பில வரக்கூடிய விடயம். அடுத்த கூறலில எல்லாரும் எடுப்பம் எண்ட எண்ணம் தான். பெரிய கலவரம் மாதிரி தான் இருக்கு. அண்ணாச்சி சீட்டுக்கு தான் பொறுப்பு கவலை பட வேண்டாம் எண்டு கொஞ்சம் சமாதானம் படுத்தினார். அடுத்த காசு கட்டுற திகதி வந்தாச்சு. 6வதா எடுத்த சந்திரனும், பாண்டி மற்றும் புறோக்கர் ஆறுமுகம் தரேல்ல. சந்திரன் இண்டைக்கு தாறன் தாறன் எண்டு மழுப்பல், பாண்டி வரப்போறது இல்ல. ஆறுமுகம் நேரடியா எடுத்த ஆக்களிட்ட குடுக்கிறன் எண்டு சொல்லீட்டான். 10 நாள் ஆச்சு இன்னும் காசு ஆறுமுகம் குடுக்கேல்ல. அண்ணாச்சி தலேல கை வைச்சு ஐயோ எண்டு கத்த வெளிக்கிட்டார். தொடரும்.
  9. ஆர்வத்துக்கு நன்றி. அடுத்த பாகங்களில் இன்னும் விபரமாக விடயங்கள் தரப்படும். உங்கள் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.
  10. முதல் மாசம் சம்பளம் வந்ததும் 10ம் திகதிக்கு முதல் காசை எடுத்து அண்ணாச்சி கடையில எல்லாரும் குடுத்திச்சினம். தாய் சீட்டு அவருக்கு, அதாவது முதல் சீட்டு அவருக்கு. அதால 20 பேருக்கும் தலா 4‘000. தன்ர கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி போட்டார். வியாபாரம் ஓரளவு ஓடிச்சு. வேற மலிகைசாமான் கடைகளும் பக்கத்தில இருக்கிறதால அவருக்கு கஷ்டம் தான். அண்ணாச்சி ஒரு பிழை விட்டிட்டார், அதின்ர விழைவு இன்னும் தெரியேல்ல. சில பேருக்கு வீட்டில இறுகீற்று. 4‘000.- பெரிய காசு. வாங்கிற சாமான்கள விலைய பார்த்து வாங்குற நிலை. சீட்டெண்டா சும்மாவா, அதுவும் 80‘000 பிராங் சீட்டு. வாயை கட்டி வைத்தை கட்டி வாழ வேண்டும். சரி பெரிசா வரும் எண்ட எண்ணம் மனசுக்க இருந்தது. வீடு வாங்கலாம் அது இது வாங்கலாம் என்கிற கற்பனையும் பெரிசாகிற்று. சின்னு வீடுகள் மும்முறமா தேடவெளிக்கிட்டான். ராசாத்தி ஊரில நல்ல காணியா தங்கச்சி மகனிட்ட பார்க்க சொல்லிட்டா. அடுத்த மாசத்துக்கான கூறல் வந்திற்று. அண்ணாச்சி கடையில சனம் கூடுது. கழிவ உயர்த்துறது நிறைய பேருன்ர ஆசை. காசு யாரும் கேக்காட்டி குலுக்கி குடுப்பினம், அது எப்புடியும் நடக்காது. யாராவது ஒருத்தன் கட்டாயம் அவசரமா கேப்பான், வடிவா சீட்ட கேட்டு கழிக்கலாம். வெள்ளையும் சொள்ளையுமா பாண்டி வந்து நிக்குறார்;. வேலைக்கு போன களைப்பு உடம்பில தெரியிது. கழிவு கொஞ்சம் போனா எடுப்பம் எண்டுற யோசின. புறோக்கர் ஆறுமுகம் தனக்கு இண்டைக்கு எடுக்க வேணும் இல்லாட்டி பட்ஜெட் இறுகீரும். வங்கியும் உடனடடிய மிச்சம் உள்ள 130‘000 கட்ட சொல்லி கடிதம் போட்டிருக்கு. இல்லாத பொல்லாதுக்கு வேற இடத்தில இன்னொரு சீட்ட வேற ஒரு ஆழிட்ட கைமாறிட்டார். அந்த சீட்டு கடைசியா தன்ர கையால அந்த ஆக்களுக்கு இவர் குடுக்க வேணும,; அது தான் ஒப்பந்தம். பெரிய வீடுதானே கட்டுறார், காசு தேவையா இருக்கு. முழுசி முழுசி கூட்டத்த பார்க்கிறார். சின்னு கையக்கட்டி வேடிக்க பார்க்கிறான். வீடு என்னும் பார்க்கிறதால அவசரம் இல்லை. கழிவு எப்படியும் கூடும் என்று இவனுக்கு வடிவா தெரியும். முருகேசண்ண தனியா வந்து இருக்கிறேர். கொஞ்சம் கழிவ கூட்டசொல்லி உத்தரவு வீட்டில இருந்து. இன்னும் ஆறு வருசத்தில பென்சன் இவருக்கு. சொந்தங்களை வெளிநாடு கூப்பிட்டு மனுசனிட்ட காசு பெரிசா இல்லை. குடுத்த காசும் திரும்பி வரேல்லை, கேட்டா வேலை போயிட்டு, கடன் எண்டு மழுப்புறினம். தங்களுக்கு எண்டு ஏதாச்சும் வேணும் தானே, அதுக்குத்தான் புது வீடு கட்ட பாக்கினம் இந்த வயசான காலத்தில. 80‘000 ஆயிரத்துக்கு 24‘000 கழிவு. கட்டாய கழிவு 1 வீதம், அதாவது 14‘400 போக கூவி கூவி 56‘000 பிராங்கில நிண்டிச்சு. சில பேருக்கு சந்தோசம் சில பேருக்கு கவலை. கட்டுக்காசு 2‘800 பிராங் வாற 10 திகதிக்கு முதல் குடுக்கோணும். மாணிக்கம் எண்ட ஒரு ஆள் கேட்டிருக்கிறார். பெட்ட சாமத்திப்பட்டிற்று அத பெரிசா கொண்டாட வேணும், அதோட மனிசீன்ர தம்பி வெளிநாடு வர இந்தியா வந்திற்றான். அவசரமா கேட்டிருக்கிறார். குறைய தான் எண்டாலும் தேவையா இருக்கு. சரி சாமத்திய வீட்டில நல்ல மௌய் விழும் தானே. நிறைய பேருக்கு காசு கொண்டே போட்டவர், இது தான் அவற்ற குடும்பத்தில முதலாவது நிதழ்ச்சி. இண்டைக்கு புறோக்கர் எதிர்பார்த்தது நடக்கேல. கவலை அதோட என்ன செய்றது எண்டு வழி தெரியேல. கழிவு கூடிப்போச்சு. வங்கீட்ட புது வீட்டின்ர முதல் கட்டவேண்டிய தவணய ஒரு மாசம் கூட்டி கேப்பம் எண்ட யோசினை, என்ன வங்கி வட்டி கேக்கும். அத தவிர வேறு வழி இல்லை. நிறைய பேரிட்ட கடன் கேட்டு இல்லை எண்டாச்சு. இப்ப தன்ர ரெண்டு சீட்டுகள், பழைய வீட்டுக்கு வட்டி வேற கட்ட வேணும். இந்த மாசம் யாரும் புது வீடு வாங்கேல்ல, கூட்டி கொண்டே காட்டினவர். அரவாசி பேருக்கு சம்பளம் காணாது எண்டு வங்கி மாட்டன் எண்டு சொல்லுது. தொடரும்.
  11. பாகம் 2 முடிந்து பாகம் 3 தயாராகின்றது. 1 கிழமை இடைவெளியில் வெளியாகும்.
  12. யார் யாருக்கு சீட்டு தெரியும் என்று கேட்டால், பெரியவர்களே கைகளை உயர்த்துவார்கள். இதில் உழைப்பாளிகளே தங்களது பணத்தினை ஈடுபடுத்துகிறார்கள். வாகனம், வீடு, கடை என அவர்களின் பெரிய செலவுக்கு பயன்படுகிறது, அத்தோடு அரசாங்க கணக்கில் வராத கறுப்பு பணம். சீட்டு பலவிதப்படும். கழிவுச் சீட்டு, குலுக்கல் சீட்டு என்று இருக்கிறது. கழிவுச்சீட்டின் பொருள். ஒரு தொகை மக்கள் இணைந்து மாதம் மாதம் பணம் போடுவார்கள். முதல் சீட்டு தாய் சீட்டு, அது நடத்துபவருக்கு, ஏனையவை எடுப்பவருக்கு கழிவுகளுடன். 12 பேர் இணைந்து 12‘000 ரூபாய் சீட்டு போட்டால் தலா 1000 ரூபாய் கட்டவேண்டும். அவசரமாக கேட்பவருக்கு கழித்து கொடுக்கப்படும். கழித்த பணத்தின் மீதியை 12ஆக பிரித்து கட்ட வேண்டும். கடைசி சீட்டை எடுப்பவர்களுக்கு கழிவு இல்லை. விளக்கம் சரி என்று எண்ணுகிறேன். தவறுக்கு மன்னிக்கவும். குலுக்கி ஒருவரை தேர்ந்தெடுப்பது குலுக்கல் சீட்டு. நீண்ட நாள் ஆசை இதை பற்றி எழுத. நீண்ட காலமாக சூதாட்டம் போல பணம் புரளுகிறது சீட்டுகளில். இந்தக் கதை கற்பனையே. சுவிஸ் நாட்டில் லுசெர்ன் மாநிலத்தை கதைக்கு இடமாக தேர்ந்தெடுத்தேன், எனக்கு இது வதிவிடம் என்பதால், இதனால் இங்கு நடந்ததாக நினைக்க வேண்டாம். விரும்பினால் அடுத்த பாகத்தில் மாத்துகிறேன். யாரையும் நோகடிக்க இந்த கதை மூலம் நான் விரும்பவில்லை. கதாபாத்திரங்கள்: மலிகைக்கடை அண்ணாச்சி – ஒல்லி உடம்பு, லேசான கறுப்பு, மொட்டை, கொஞ்சம் கட்டை பாண்டி – குண்டான உடம்பு, சிகப்பு நிறம், மொட்டை, ஓரளவான உயரம் புறோக்கர் ஆறுமுகம் - குண்டான உடம்பு, சிகப்பு நிறம், நல்ல கறுத்த முடி, கொஞ்சம் கட்டை சந்திரன் அண்ணை மகன் சின்னு – மெல்லிய உடம்பு, சிகப்பு நிறம், உயரம், இளமை பருவம் முருகேசு மனைவி ராசாத்தி – குண்டான உடம்பு, கறுப்பு நிறம், கட்டை, பல நரைச்ச முடிகள் கறுப்புக்கிடையில் சீட்டுக்கு வாங்கோ மலிகக்கடை அண்ணாச்சி புது சாமான் கடைக்கு வாங்கவேணும். காசு பெரிசா இல்லை. இருந்ததை வச்சு வீடு கட்டிட்டார் லுசெர்ன்லையும் யாழ்ப்பாணத்திலையும். ஒரு லட்சம் பிராங் வேணும், பக்கத்தில கொஞ்சம் இருக்கிறதால கட்டாயம் 80‘000ம் வேணும். இப்ப என்னத்த செய்றது, ஒரு சீட்ட போடுவம் எண்டு முடிவெடுத்தார். ரெண்டு மூண்டு பேரிட்ட சொல்ல, அது லுசெர்ன் முழுக்க பரவிட்டுது, அண்ணாச்சி 80‘000 பிராங் களிவுச் சிட்டுக்கு ஆழ் சேர்க்கிறேர் எண்டு. பட பட எண்டு 20 பேர் சேர்ந்திற்றினம். மாசம் மாசம் 4000.- கட்டவேணும், கழிவு பார்த்தா தொடக்கத்தில 2500 கட்டவேண்டித்தான் வரும் போல. 20 பேரில பாண்டி ரெண்டாவதா சேர்ந்தவன். வீடு வாங்குறதுக்கு முதல் போட்டது வேறு ஒரு சீட்டு எடுத்து. அது இன்னும் முடியேல்ல, இருந்தும் இன்னுமொரு சீட்டு போடுறான் புது வீட்டுக்கு. அதை வாங்கி வாடகைக்கு குடுத்தா ஒரு சம்பாத்தியமா இருக்கும். மனிசி வேலைக்கு போகுது, அவனும் 100 வீத வேலை செய்றான். சமாளிக்கலாம் ஏலாட்டி களிச்செடுத்து கட்டுவம் எண்டு முடிவுக்கு வந்திருக்கிறான். புறோக்கர் ஆறுமுகம் ஏற்கனவே வீடு வாங்கி சொகுசா வாழுறார். ரெண்டாவது வீடு வாங்குறதுக்கு அவசரமா காசு வேணும். இருக்கிற வீட்ட வித்திற்று, இதுக்கு போட்ட முதல் அதுக்கு போட்டு சொகுசா இன்னும் பெரிய வீட்டில இருக்கலாம். பழைய வீடு 800‘000, புது வீடு 1‘800‘000. இன்னும் இந்த வீடு வில்படேல்ல, அதால சீட்டு எடுத்து முதல் கட்ட வேணும் புது வீட்டுக்கு. வீடும் கட்டுவேல நடக்குது. போதாக்குறைக்கு இன்னும் ஒரு சீட்டு. அது தொடங்கி 5 மாசம் தான், 3 மாசத்தில கழிச்சு எடுத்திட்டார் முதல் கட்ட. இன்னும் ரெண்டு கிளமையில மொத்த முதலும் கட்டவேணும். இவர் ஆக்களுக்கு வீடு பார்த்து குடுக்கிறவர், அதால புறோக்கர் ஆறுமுகம் எண்டு பட்டம். சின்னு கல்யாணம் கட்டி ரெண்டு வருசம். புள்ளை இப்பத்தான் பிறந்தது. மனிசி வேலைக்கு போகுறா. நண்பர்கள் வீடு வாங்கினதால தனக்கும் ஒரு ஆசை. வாடக வீடு சின்னன், ரெண்டாவது பிள்ளை பெற்கிறது எண்டு ஒரு யோசனை. ராசாத்தி புருசன போட்டு படுத்தாத பாடா. சீட்ட போடு சீட்ட போடு உரில வீடு கட்டுவம், வயசான காலத்தில இங்க இருக்க ஏலாது, ஏக்கருக்கு யாழ்ப்பாணத்தில நல்ல காசு கேக்கிறாங்கள், விலை ஏறிக்கொண்டே போகுது, காணி வாங்கி கட்டுவம். ஒரே புலம்பல். ரெண்டு பேரும் பிறந்த இடம் வவுனியா. சொந்தக்காரர் யாழ்பாணத்தில இருக்கிறதால வவுனியாவோட ஈடுபாடு இல்ல. சுவிஸ் வந்து 30 வருசம் ஆகுது. அவாக்கு இன்னும் 10 வருசத்தில பென்சன். வருசத்தில ஒருக்கா ஊருக்கு போயிட்டு வருவினம். பிள்ளைகள் ரெண்டும் லண்டனில கல்யாணம் கட்டி நல்லா இருக்குதுகள். தொடரும்
  13. வரும் 28 மாசி அன்று சுவிஸ் நாட்டில் வாக்கெடுப்பு ஒன்று நடைபெற உள்ளது. அதில் தப்பு செய்கிற வெளிநாட்டவரை திருப்பி அனுப்புவது பற்றியது. ஸ்விபி (SVP) கட்சியினால் தாயாரிக்கப்பட்ட திட்டத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் சம நிலையில் உள்ளனர். வெளிநாட்டவரே அதிக குற்றங்கள் புரிகின்றனர் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு, தப்பு செய்பவர்கள் நாடுகடத்த படவேண்டும் எனும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பு வெளிநாட்டவரை சமநிலையில் இல்லாது இரண்டாம் நிலைக்கு தள்ளுகிறது. இங்கு பிறந்து வழர்ந்தவர்களுக்கு, மற்றும் சிறு வயதில் வந்தவர்களுக்கு இது ஒரு சவாலாக அமைகிறது. இன் நாட்டு புத்தம் (Passport) உள்ள வெளிநாட்டவர் தப்பித்தனர் என்றே கூறலாம். பல உதாரணங்கள்: - சம்பளம் பத்தாத நபர் ஒருவர் அரசாங்கத்தின் உதவியுடன் குடும்பத்தை நடாத்துகிறார். தனது வேலை பார்க்கும் மூத்த மகனிடம் தனது 12 வயது மகனுக்கு சைக்கில் வாங்க பணம் பெறுகிறார். இதை அரசாங்கத்திடம் சொல்லாமல் இருந்ததால் நாடுகடத்த படுவார். - சுவிஸ் நாட்டிற்கு 5 வயதில் வந்த இன்று 28 வயது ஆகும் குமார் (உதாரணம்) ஒரு நிறுவனம் நடாத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள். மனைவி வேலை இல்லை. அவர் நிறுவனம் நட்டத்தின் பின் அதை மூடிவிட்டு அரசாங்க வேலை இல்லாதவர்கள் மையத்தில் மாதம் மாதம் பணம் பெறுகிறார். பணம் பற்றாமல் ஒரு கடையில் கழவாக வேலைக்கு செல்கிறார். இது பிடிபட, இவரை நாடுகடத்த உத்தரவிடப்படுகிறது. இவர் தனது ஊர் அறியாதவர், உறவினர்கள் அறியாதவர். மனைவி மட்டும் பிள்ளைகளுடன் தனியே சுவிஸில் வாழும் நிலை. - ஒரு கடையில் திருடிய நபரை காவல்துறை பிடித்துவிட, இவர் இங்கு பிறந்த வெளிநாட்டவர் என்று அறிந்தும், நாடுகடத்த உத்தரவிடப்படுகிறது. - வெளிநாட்டவர் ஒரு சுவிஸ் பெண்ணை மணக்கிறார். இவருக்கு இன்னும் சுவிஸ் புத்தகம் கிடைக்கவில்லை. வீட்டில் நடந்த சண்டையில் மனைவி காயப்பட பக்கத்துவீட்டார் காவல்துறையை அழைத்தனர். ஏற்கனவே ஒரு குற்றசெயலில் பதிவான நபரை மனைவி கால்துறையிடம் குற்றம் செய்தார் என வாக்குமூலம் கொடுத்தால் நாடுகடத்த படுவார். இதை போல் பல உதாரணங்கள் உள்ளன. இன்றையை நிலையில் நமது தமிழ் மக்களும் வேறு இனத்தவரும் பலவித தவறுகளை புரிகின்றனர். திருட்டு வேலைகள், பணத்தை கணக்குகளில் காட்டாமை மற்றும் அரசாங்கத்தின் பணத்தை துஷ்பிரியோகம் செய்தல் என கூறிக்கொணடே போகலாம். நம்மவரின் உண்மை சம்பவங்கள்: - மனைவி இறந்து ஆறு வருடங்கள் ஆகின. இறக்கும் முன் மனைவிக்கு அரசாங்கம் மாதாந்தம் பணம் வழங்கியது. இறந்ததை இவர் அரசாங்கத்திற்கும் பல மையங்களுக்கும் அறிவித்தார், ஒரே ஒரு அமைப்பிற்கு அறிவிக்கவில்லை, அறிவித்தால் வரும் பணம் நிறுத்தப்பட்டிருக்கும். ஆறு வருடங்களாக அந்த அமைப்பு மொத்தம் 200‘000 சுவிஸ் பிராங் செலுத்தி வந்துள்ளது. இது பிடிபட்டது. - பெரிய பெரிய வாகனங்கள் விற்பதாக கூறி தனி நபர்களிடம் பல இலட்சம் சுவிஸ் பிராங் பெற்றார். வாகனங்கள் வாங்கியவர்கள் கைகளுக்கு செல்லவில்லை. பணம் எங்கே என்று அரசாங்கம் கேட்க செலவு செய்துள்ளேன் என கூறிவிட்டார். - சுய செலவுக்கு வங்கிகளில் பெரிய தொகைகள் எடுக்கப்பட்டன. சம்பள படிவங்கள் பெரிய பெரிய தொகையாக மாற்றப்பட்டன. சட்டத்தக்கு புறம்பானது. 4000 சம்பளம் எடுத்தவர் 6000 என காட்டினார். பணம் வழங்கப்பட்டது. இது சிக்கலாகி தமிழ் ஏயன்சிகள் மாட்டின. மாற்றியவர்கள் மற்றும் பணம் பெற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கபப்படன. இதை ஆதரிப்பதா வேணாமா?
  14. நான் புதிய உறுப்பினர். சில விடையங்களை பகிர்ந்துள்ளேன். என்னால் கொமன்ஸ் மற்றும் லைக் இன்னும் போட முடியாதுள்ளது. எதனால் என்று கூறுங்கள். என்னை அறிமுகம் செய்து பல கிழமைகள் ஆகின்றன.