யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

பிரபா

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  172
 • Joined

 • Last visited

Community Reputation

3 Neutral

About பிரபா

 • Rank
  உறுப்பினர்
 • Birthday 10/31/1964

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  USA

Recent Profile Visitors

1,098 profile views
 1. சுவரொட்டி ஒட்டியவனின் நோக்கம் எம்மை மதரீதியாகப் பிரித்து, மோதவிட்டு, வெற்றி கொள்வதாயின் அது நிச்சயம் நிறைவேறும் போலுள்ளது
 2. கண்ணீர் அஞ்சலிகள். சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
 3. 1) தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்? கருணாநிதி 2) அடுத்த தமிழக அரசு: B) ஆட்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறும் 3) அதிக சீட்டுகளை வெல்லும் கட்சி B) திமுக 4) கருணாநிதி தன் தொகுதியில் வெல்வாரா? ஆம் 5) ஜெ தன் தொகுதியில் வெல்வாரா? ஆம் 6) ஸ்டாலின் தன் தொகுதியில் வெல்வாரா? ஆம் 7) சீமான் தன் தொகுதியில் வெல்வாரா? ஆம் 8) அன்புமணி தன் தொகுதியில் வெல்வாரா ? ஆம் 9) விஜயகாந்த் தன் தொகுதியில் வெல்வாரா? இல்லை 10) தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் சேர்த்து நாம் தமிழர் என்ன சதவீத வாக்குகளைப் பெறும்? C) 6%-12% வரை
 4. தந்தையின் பிரிவால் துயருறும் சுமேக்கும், அவரது குடும்பத்தினர்க்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.
 5. வாழ்த்துக்கள் ஜெசிக்கா *********** நியானி: ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது.
 6. தனிமடல் அனுப்பிய தமிழ்சிறிக்கு நன்றிகள். நேரமின்மையால் யாழ்களத்தில் எழுதுவதில்லை, ஆனால் ஒரு நாளைக்கு 10 தடைவைக்கு மேல் யாழ்களத்துக்கு வந்துபோவேன்.
 7. இது கவிதையும் இல்லை கதையும் இல்லை, வெறும் நான் என்ற அகங்காரம் மட்டுமே.
 8. "இரத்தினன் தொழில் திறமை .பக்தி இதுக்கு அடுத்ததாய் சாதியத்திற்கு எதிரானதொரு போராளியும். யார் செத்தவீட்டிற்கு கூப்பிடப் போனாலும் அவனின்ரை முதல் உத்தரவு தனக்கோ தன்னோடை வாறவைக்கோ சிரட்டையிலை தேத்தண்ணி தரக்கூடாது எண்டு கண்டிப்பாய் சொல்லிவிடுவான்"
 9. தன்னம்பிக்கையின் மறு உருவம் சந்தியா! உருவமோ நோயோ தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று விதியை மாற்றி எழுதிய தைரியசாலி. சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் சந்தியாவைப் பார்க்கும் யாருமே அசந்துவிடுவார்கள். தரையில் உருண்டு புரண்டே குழந்தைகளுக்குத் தலைவாரி விடுவது, ஓவியம் வரைவது, எம்ப்ராய்டிங் செய்வது, வகுப்பு எடுப்பது என அத்தனை வேலைகளையும் செய்யும் சந்தியாவின் உயரம், ஒன்றே முக்கால் அடிதான். ஆனால், வயது 18. இவரால் எல்லோரையும்போல் நடக்கவோ, உட்காரவோ முடியாது. எல்லாமே படுக்கையில்தான். எலும்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், சந்தியாவின் எலும்புகள் பிஸ்கட்டைப்போல மென்மை யாக இருக்கும். அடிக்கடி உடைந்துவிடும். மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் லாரன்ஸ், ''சந்தியா, பவளத்தானூர் பக்கத்தில் இருக்கும் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த பொண்ணு. 10 வருஷத் துக்கு முன்பு அவங்க அம்மா அவளை இங்க பிசியோ தெரபி பயிற்சி கொடுப்பதற்காக அழைத்துவந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக நாங்களே அவளை இங்கே தங்கவெச்சுக்கிட்டோம். அவதான் எங்க இல்லத்தின் செல்லக் குழந்தை. சந்தியா உட்கார்ந்தா உடலின் எடை தாங்காம எலும்புகள் உடைஞ்சுடும். மூச்சுத் திணறல் வரும். அதனால் படுத்த படுக்கையாத்தான் அவளால இருக்க முடியும். அவளைத் தூக்கினாக்கூட கைக் குழந்தையைத் தூக்குற மாதிரி பார்த்து பக்குவமாத்தான் தூக்குவோம். இப்படி பல பிரச்னை இருந்தாலும், அதை எல்லாம் அவ சட்டையே பண்ண மாட்டா. உருண்டு புரண்டே நிறைய வேலைகள் செய்வா. எங்க இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சந்தியாதான் தொகுப்பாளினி. தினமும் காலையில் எழுந்து எல்லா குழந்தைகளுக்கும் தலை வாரி, மேக்கப் போட்டு விடுறதே அவதான். உடல்ரீதியாகத்தான் அவள் பாதிக்கப் பட்டு இருக்காளே தவிர, மனரீதியா நம்ம எல்லோரையும்விட ஆரோக்கியமா இருக்கா. இப்ப சந்தியா எட்டாம் வகுப்பு படிக்கிறா. சந்தியாவுக்கு சிக்ஸ்த் சென்ஸ் உணர்வுகள் அதிகம். ஹாலில் படுத்துட்டு இருப்பா. குழந்தைகள் ஓடி வர்ற சத்தம் கேட்டா, நொடியில் கட்டிலுக்குக் கீழே உருண்டு ஓடிடுவா. இவளைக் குளிக்க வைக்குறதுக்கும், கழிவறைக்குக் கூட்டிட் டுப் போறதுக்கு மட்டுமே ஒருத்தர் உதவி தேவை. மற்றபடி டிரெஸ் பண்ணிக்குறது, மேக்கப் போட்டுக்குறது, சாப்பிடுறதுனு எல்லாத்தையும் அவளே செஞ்சுக்குவா. சந்தியாவால் அதிகம் பேச முடியாது. அப்படியும் விசுவோட அரட்டை அரங்கத்தில் முதல் பரிசு வாங்கி இருக்கா. ஓவியப் போட்டி, கவிதைப் போட்டியிலும் கலக்குறா. ஆனா, தன்னைப் பார்த்து யாராவது பரிதாபப்பட்டா மட்டும் அவளுக்குப் பிடிக்காது!'' என்று நெகிழ்கிறார். சந்தியாவுடன் பேசினோம். ''அப்பா வேலாயு தம், அம்மா சுபதினி. எனக்கு சந்தோஷ் தம்பி யும் சரண்யா தங்கச்சியும் இருக்காங்க. அவங்க எல்லாம் நல்லா படிச்சுட்டு இருக்காங்க. ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை வந்து பார்த்துட்டுப் போவாங்க. விவரம் தெரிஞ்சதும் இப்படி ஒரு குறைபாடு எனக்கு இருக்குனு முதல்முறையா தெரிஞ்சப்ப, கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. அப்புறம் என்னை நானே தேத்திக்கிட்டேன். என்னால முடிஞ்ச வரைக்கும் மத்தவங்க மாதிரியே எல்லா வேலைகளையும் செய்யப் பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்கேன். நிறையப் படிக்குறேன். இந்த மண்ணுல பிறந்த யாருமே சாகப் பிறந்தவங்க கிடையாது. சாதிக்கப் பிறந்தவங்க! எங்க தலைவர் பிரபாகரன் போல எனக்கும் நிறைய லட்சியம் இருக்கு. என்னைக் கண் கலங்காம அன்பா பார்த்துக்குற இந்த இல்லத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியலை. சீக்கிரம் பட்டப்படிப்பு முடிச்சு, இந்த இல்லத்துக் குழந்தைகளுக்கு டீச்சர் ஆகணும். அதுதான் நான் இவங்களுக்குக் காட்டுற நன்றிக் கடன்!'' பக்குவமும் நிதானமு மாகப் பேசுகிறார் சந்தியா. Reference: http://www.vikatan.com/article.php?aid=13696&sid=371&mid=10&#சாதிக்கப் பிறந்தவள் சந்தியா!..
 10. அறிவுமதி அண்ணனின் க(அ)ண்ணன் பாட்டு ------------------------------------------------------------------------------------------------ என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! என்ன தவறோ என்ன சரியோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! என்ன வினையோ என்ன விடையோ அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! நன்றும் வரலாம் தீதும் வரலாம் நண்பன் போலே கண்ணன் வருவான்! வலியும் வரலாம் வாட்டம் வரலாம் வருடும் விரலாய் கண்ணன் வருவான்! நேர்க்கோடு வட்டம் ஆகலாம் நிழல்கூட விட்டுப் போகலாம்! தாளாத துன்பம் நேர்கையில் தாயாக கண்ணன் மாறுவான்! அவன் வருவான் கண்ணில் மழை துடைப்பான் இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்! அந்தக் கண்ணனை அழகு மன்னனை தினம் பாடி வா மனமே! உண்டு எனலாம் இல்லை எனலாம் இரண்டும் கேட்டு கண்ணன் சிரிப்பான்! இணைந்தும் வரலாம் பிரிந்தும் தரலாம் உறவைப் போலே கண்ணன் இருப்பான்! பனிமூட்டம் மலையை மூடலாம் வழி கேட்டு பறவை வாடலாம்! புதிரான கேள்வி யாவிலும் விடையாக கண்ணன் மாறுவான்! ஒளிந்திருப்பான் எங்கும் நிறைந்திருப்பான் அவன் இசை மழையாய் உலகினை அணைப்பான்! அந்தக் கண்ணனை கனிவு மன்னனை தினம் பாடி வா மனமே! ஆனந்த விகடன் 30-06-2010
 11. சட்டியிலுள்ளதுதானே அகப்பையில் வரும் பிரபா
 12. இதை வாசித்து சிரித்து, முரளியைக் கேட்டமாதிரி, பக்கத்திலிருந்து வேலை செய்பவன் என்னைக்கேட்கிறான் "Are you OK?" என்று