-
Posts
10305 -
Joined
-
Last visited
-
Days Won
26
Maruthankerny last won the day on July 2 2021
Maruthankerny had the most liked content!
Profile Information
-
Gender
Not Telling
-
Location
USA
-
Interests
In Anything
Recent Profile Visitors
12257 profile views
Maruthankerny's Achievements
-
இந்த திரியை இனியும் வாய்ப்பன் மா மாதிரி வைச்சு இழுக்க தேவையில்லை என்று நினைக்கிறன் யாரும் மாட்ட போவதில்லை இந்த பகல் கொள்ளைக்கு சடடம் அனுமதிக்கிறது சுருக்கமாக சொல்லப்போனால் பகல் கொள்ளை கர்களினதுதான் அரசு நீதிமன்று எல்லாம். பிரிடிஸிடம் 13 ஸ்டேட்ஸ் இருந்து பிரிந்த போது பொருளாதாரத்துக்கு என்ன செய்வது என்று ஜோர்ஜ் வாசிங்டன் மற்றும் ஏனையோரும் யோசித்துக்கொண்டு இருந்தபோது. ஒரு குதிரை வண்டியில் 5 பேர்கள் வந்து இறங்கி தமது ஆலோசனைகளை வழங்கி அதை தாமே பார்த்துக்கொள்வதாகவும் உறுதி கொடுத்து இருக்கிறார்கள். அன்றில் இருந்து இன்றுவரை பெடரல் ரேசெர்வே எமது அரசுக்கு பணம் தேவைப்படும்போதெல்லாம் ட்ரில்லியன் கணக்கில் அள்ளி கொட்டுது ........அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று யாருக்கும் தெரியாது. தற்போதுகூட பெட்ரோல் விலை ஏறும்போது பிரசிடண்ட் பைடன் ரெசெர்வில் இருந்து திறந்து விடுவதாக 200-300 மில்லியன் பேரல்கள் எண்ணையை திறந்துவிடுவார் ........ரெசெர்வில் எவ்வளவு என்னை இருக்கு எங்கு இருக்கு என்று யாருக்கும் தெரியாது. இப்ப்டிடியே உலகை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோம்
-
முக்கியமான தகவல் நான் இதுவரை முன்னணி நிறுவனங்களின் பங்குகள் இறங்காது எப்போதும் ஏறிக்கொண்டே இருக்கும் என்று எண்ணி கொண்டு இருந்தேன். புது வருட பிறப்புடன் புது தகவலும் கிடைத்து இருக்கிறது நன்றி ! நான் என்ன எழுதினேன் என்று வாசித்து இருக்கலாம் என்று எண்ணுகிறேன் நடுத்தர ஏழை வர்க்க மக்களின் 200 பில்லியன் பணம் கை மாறி உள்ளதையே சுட்டி காட்டி இருந்தேன். இந்த 200 பில்லியன் டெஸ்லாவின் கணக்கு சோர்ட் செல் Short sell கணக்கு இன்னொரு 150 பில்லியன் இருக்கும் இலங்கையின் மொத்த கடனே வெறும் 35 பில்லின்தான் புதுவருட வாழ்த்துக்கள்
-
நீங்கள் முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் கிளிண்டனுக்கு பங்கம் விளைவித்தது மொனிக்காவுடனான தொடர்பு இல்லை கோர்டில் பொய் சொன்னதுதான் பெரும் சிக்கலனானது ராஜரட்னம் ஒன்றும் ஹ் ராஜா இல்லை கோடடாவது மயிராவது என்று புத்தகம் எழுத அமெரிக்க நீதித்துறை அரசு மேன்மையினை கண்ணின் மணிபோல மதிப்பேன் என்று சத்தியம் செய்தபின்புதான் அமேரிக்க பிரஜாவுரிமை கிடைக்கிறது இதில் மில்லிமீட்டர் சறுக்கினாலும் பிரஜாவுரிமை பறிமுதல் செய்ய தக்க வழியுண்டு ஆகவே ராஜரட்ணம் அவர்களே இனி உண்மை பேசமுடியாது என்ன வழக்கு நடந்ததோ என்ன தண்டனை கிடைத்தததோ அதை கோர்ட்டின் தவறு என்று ராஜரட்ணம் எங்கும் கூறியதில்லை ... கூற போவதுமில்லை அவர் அந்த அளவுக்கு முடடாள் இல்லை. அவர் எங்கும் தனக்கு நீதி வேண்டும் என்றும் கூறவில்லை மோனேற்றி வர்த்தகத்தில் மாறுதல்வேண்டும் அது பக்க சார்பாக இருக்கிறது என்றுதான் கூறுகிறார். உண்மையில் அது அப்படிதான் இருக்கிறது. அது அவ்வாறு இல்லை என்றால் 2009இல் பலர் உள்ளே சென்றிருக்க வேண்டும் யாரும் செல்லவில்லை என்பதுதான் நிஜம். யாழ் களத்தை பொறுத்தவரை ராஜரட்ணத்துக்கு என்ன உணவு பிடிக்கும் உங்களுக்கு என்ன ஜூஸ் பிடிக்கும் என்று நீங்களோ அவரோ கூறமுடியாது. அதை இங்கிருக்கும் சிலர்தான் எழுதமுடியும் என்ற புரிந்துணர்வு இருந்தாலே போதும் தேவையில்லாத அலட்டல்களை குறைப்பதுக்கு. இந்த திரியை இவ்வளவு தூரம் நீடுவதுக்கு இதில் ஒன்றுமே இல்லை. ஒன்றில் அவர் குற்றவாளி அல்லது நிரபராதி திரி இந்த அளவுக்கு நீளுவத்துக்கு அடிப்படை காரணமே இங்கு கருத்து எழுதும் யாருக்கும் வழக்கில் என்ன நடந்தது என்பது முழுமையாக தெரியாது என்பதுதான். ஆனால் இவர்களை கட்டுப்படுத்த வேண்டிய காலம் 2009 பொருளாதார நெருக்கடி காலத்தின் பின்னர் வந்திருந்தது என்பது உண்மையே. இவர்களின் நெட்வெர்க் அந்த அளவிற்கு விரிசலாகவும் ஆழமாகவும் இருந்தது. ஒரு சிறிய உதாரணத்துக்கு இன்டெல் நிறுவனத்தின் இரண்டாம் நிலை அதிகரிக்கும் இவர்களுக்கு தகவல் கொடுக்கும் இந்திய பெண்ணுக்கும் பாலியல் தொடர்பு இருந்தது ஒவ்வொரு குவாடடர் ரிலீஸின் லாப நஸ்ட கணக்கு இன்டெல் Intel வெளியிடுவதுக்கு முன்பே இவர்களுக்கு தெரிந்துகொள்வதால் அதன் முன்பே பங்குகளை வாங்குவது/விற்பதை செய்துவிடுவார்கள். இதில் சிக்குபட்ட பல இந்தியர்கள் மாஸ்டர், பி ஏஜ் டி முடித்து பிரபல நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருந்து நல்ல வசதியா வாழ்ந்துகொண்டு இருந்தவர்கள் மேலும் மேலும் பணத்துக்கு ஆசைப்பட்டு இருந்ததையும் இழந்தவர்கள். இதை நாங்கள் நல்ல படிப்பினையாக ஞாபகத்தில் வைத்திருப்பது எதிர்காலத்துக்கு நன்று.
-
யூரோ, ஷெங்கன் வலயங்களில் குரோஷியா இன்று இணைந்தது
Maruthankerny replied to கிருபன்'s topic in உலக நடப்பு
United States Secretary of the Treasury இந்த இரு ஆச்சிமாருக்கும் பொருளாதார நெருக்கடிகளை ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் உருவாக்குவதே முழுநேர வேலை. சாதாரண செய்திகளிலும் கட்டுரைகளிலும் பொருளாதார நெருக்கடி ...... பொருளாதார தேக்க நிலை என்று நீங்கள் வாசித்தும் கேட்டும் கொண்டிருக்கும் போது அமெரிக்க ஐரோப்பிய நடுத்தர ஏழை மக்களின் எதிர்கால முதலீடுகள் ட்ரில்லியன் டாலர் கணக்கில் காணாமல் போய் ....... பெருத்த பண முதலைகளின் கைகளுக்கு மாறியிருக்கும். எனது கருத்தை தவறாக புரிந்துகொண்டு இவர்களை இன்ச் அளவும் வெறுத்துவிடாதீர்கள் இவர்களையும் கொஞ்சம் காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் .... அப்போதான் உங்களை அறியாமலே இவர்களை பின்தொடர தொடங்குவீர்கள். இவர்களுடைய நேர்காணல்கள் கட்டுரைகளை வாசிப்பதன் மூலம் அடுத்து எங்கு புள்ளி வைக்க போகிறார்கள் கோலம் என்ன வடிவாகும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அமெரிக்காவை பொறுத்தவரை வேலையற்றோர் வீதம் (Unemployment) மிக வெகுவாக குறைந்து இருக்கிறது ( விலைவாசி ஏற்றத்துக்கு இதும் ஒரு காரணம்) அதை வெகுவாக ஏற்றி வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கையை கூட்டுவதுக்கு பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். வட்டி வீதத்தை வெகுவாக ஏற்றியதன் மூலம் சிறிய வியாபார நிறுவங்களின் பணப்பரிமாற்றம் மற்றும் வங்கிகடன் தடைபட்டு அதன் மூலம் வேலையற்றோர் எண்ணிக்கை கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது அது எதிர்பார்த்ததுபோல அமையவில்லை. இதுக்கு மேல் வட்டி வீதம் கூடினால் பொருளாதாரம் இன்னமும் மந்த நிலை அடையும் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்க தொடங்கி இருக்கிறார்கள். வரும் வருட பட்ஜட்டுக்கு கூடுதல் கடன் பெறுவதுக்கு இப்போதே ஒப்புதல் கிடைத்துள்ளதால் மேலும் சில ட்ரில்லியன்கள் கட்டுமானத்துறை வளர்ச்சிக்கு எனும் பெயரில் பணக்காரரிடம் செல்ல இருக்கிறது. 5 வருடத்துக்கு முன்பு என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்துவிடுவார்கள் என்பது அவர்களுக்கு தெளிந்த உண்மை. ஆதலால் இவர்கள் எப்போதுமே மீட்ப்பார்கள் வேஷம் கலையாமல் வாழ்வார்கள் -
தாகம் எடுக்கிறது என்பதுக்காக நீங்கள் ஒரு நாளைக்கு 5 போத்தல் தண்ணி உங்கள் சொந்த காசில் வாங்கி குடித்தாலும் அதுவே பெரும் திருட்டுதான். எங்கோ ஒரு ஏழைக்கு இலவசமாக இந்த பூமியில் இருந்த தண்ணீரை அவர்களுக்கு கிடைக்க விடாது தடுத்து தண்ணீரை தனிநபர் சொத்தாக்கி உங்களை என்னைப்போன்ற பணக்காரவர்க்கத்தின் அடியாட்கள் ஆகிய எங்களை வடிக்கையாளராக்கி. பணம் பார்க்கும் ஆதிக்க வெறியர்களுக்கு நாம் துணையாக நின்றுகொண்டே.... திருட்டு பற்றி.... திருநீறு பூசிய நெற்றியுடன் நியாயம் பேசிக்கொண்டு இருக்கிறோம். கடந்த 3 மாதத்தில் டெஸ்லா நிறுவனர் எலன் மாஸ்க் 200 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்து இருக்கிறார் இந்தளவு பணத்தை உலகில் இதுவரை இழந்தவர்கள் யாரும் கிடையாது. அந்த 200 பில்லியனும் எலன் மாஸ்கின் குடும்ப சொத்தில்லை ..... கடின உழைப்பே உயர்வை தரும் என்று மூளைச்சலவை செய்யப்பட்டு அமெரிக்க நடுத்தர ஏழை வர்க்க மக்கள் இரவுபகலாக உழைத்து ஓய்வூதிய காலத்துக்கு என்று ஒதுக்கி சில முதலீட்டு நிறுவங்களில் முதலீடு செய்த பணம் ஆகும். பணம் ஒன்று நீர் அல்ல நீராவியாகி மேலே போவதுக்கு. இன்று அமெரிக்க உழைப்பாளிகளின் 200 பில்லியன் டாலர்கள் பணக்கரவர்க்கத்தின் கைகளுக்கு ...... வெறும் வார்த்தைகளான டெஸ்லா லாஸ்ட் 80% ( ) என்பதோடு கைமாறி இருக்கிறது. எம் கண்முன்னே நடந்த இந்த திருட்டுக்கு யார் குற்றவாளியாகி உள்ளே போவார்கள்? அமெரிக்க சடடத்தின் பிரகாரம் குற்றவாளியாக உள்ளே செல்லவேண்டும் என்றால் நான் இந்த யாழ்களத்தில் உண்மையாக எழுதிய சில கருத்துக்களே போதும். ராஜரட்ணம் என்ன குற்றம் செய்தார் .......அது உண்மையில் குற்றமா இல்லையா என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நீங்கள் முதலில் வால் ஸ்ட்ரீட் பற்றி குறைந்தது 20-25 புத்தகம் வாசிக்க வேண்டும். அல்லது இனொருவரது பணத்தை பறிக்காமல் எப்படி பங்கு வர்த்தகம் செய்வது என்ற உங்கள் சூட்ஷமத்தை தெளிவாக எமக்கும் சொல்லி தரவேண்டும். ராஜரட்ணத்தை சிறைபிடித்த போது கொழும்பில் சிங்கள மக்கள் அமெரிக்க துராலயம் முன்பு அவரை விடுதலை செய்ய சொல்லி ஆர்பாடடம் செய்தார்கள். ஏன் என்று நீங்கள் தெரிந்துகொள்ள முயன்றால் ஏன் குற்றவாளி ஆக்கப்படடார் என்பதை பாதியாவது புரிந்துகொள்வீர்கள். (ராஜரட்ணம் செய்த மாபெரும் குற்றம் என்ன? என்று கேட்டிருந்தேன் பதில் எழுத உங்களுக்கு நேரம் இல்லை என்று நினைக்கிறன் இன்று புதுவருடம் வேறு) இந்த கருத்தை உங்கள் எண்ண பாட்டில் ஏதும் மாறுதலை கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பில் நான் எழுதவில்லை. பிடித்த கொப்பில் நின்று தொங்குவதை கைவிடுவது யாழ் களத்துக்கே இழுக்கு என்றுதான் நான் எழுதுவதையே குறைத்துக்கொண்டேன். கருத்து பரிமாற்றம் என்பதுக்கு நாம் துளியும் இடம் கொடுக்கலாகாது. கருது திணிப்பில் கவனமாக இருக்கவேண்டும். புதுவருட நாளில் எதையாவது எழுதிடலாம் என்று தோன்றியதால் எழுதினேன் எல்லோருக்கும் பொதுவாக இருந்த தண்ணீர் இன்று ஓர் இரு பணக்காரர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று ஆனதை நேரில் பார்த்த தலைமுறை நாம் காற்றும் சூரிய ஒளியும் எமக்கு கிடைக்கிறது வரும்கால சந்ததிக்கு அதுக்கும் வரி வருமோ தெரியாது காற்றை உள் இழுத்து சுவாசத்தை ஆரோக்கியமாக்கி பிறந்திருக்கும் புத்தாண்டில் எல்லோரும் கொஞ்சம் ஆரோக்கியமாக வாழுவோம். புத்தாண்டு வாழ்த்துக்கள் !
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழனின் எதிர்காலம் - பகுதி 1
Maruthankerny replied to இணையவன்'s topic in பேசாப் பொருள்
நல்ல விடயம் எல்லோரும் நனமை வேண்டி கருத்து பரிமாறினால் பலருக்கும் சில விடயங்களை கற்று கொடுக்கும் என்று எண்ணுகிறேன் -
“கிழக்கு கிழக்காக..!” : ஒரு வரலாற்றுப் பாடம்..!!
Maruthankerny replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
பொருளாதார மேன்மைதான் பலத்தையும் நிர்ணயிப்பதால் நாம் அதன் பால் சிந்திப்பது நல்லது ..... யாருக்கும் இலங்கையில் எட்டியிருக்க முடியாத ஒரு தாளரா பொருளாதார வளம் ஈழ தமிழரகளிடம் சிக்கி இருக்கிறது. இதை முறையாக பயன்படுத்தினால் நிறைய சாத்தியப்பாடுகள் உண்டு. 25 வருடம் கழித்து சிந்திப்பதே நன்று -
அடுத்த 25 ஆண்டுகளில் உலக உணவு நீர் போன்ற அடிப்படை தேவைகளில் பெரும் மற்றம் வர வாய்ப்பு உண்டு வளர்ந்துவரும் மக்கள் தொகையும் அழிந்துவரும் விவாசாய கால்நடை நிலங்களும் ஒரு மாறுதலை உண்டுபண்ணும். அப்போது தமிழர்களை விட்டு மேலத்திய பணக்கார்களே குற்றம் சட்ட்டவிரோத நடவடிக்கைகள் குறைந்த கீழைத்தேய நாடுகளுக்கு இடம்பெயர அதிக வாய்ப்பு உண்டு. பல தொழில் துறைகள் எங்கிருந்தும் பணியாற்றலாம் எனும் நிலையை தோற்றுவிக்கும்போது .... யாருமே சுத்தம் சுகாதாரம் ஆரோக்கிய வாழ்வைத்தான் தேடுவார்கள். ஈழத்தமிழர்களை (இந்திய தமிழர்களை) பொறுத்தவரை நாட்டில் முதலீடு செய்வது என்பது இரட்டை லாபம் இங்கு முதலீடு செய்யலாமே தவிர அதை எடுத்து நாம் அனுபவிக்க முடியாது வரி என்ற கத்தி கொண்டு குத்துவதால் அடுத்த தலைமுறைக்கு மாற்றிக்கொண்டு செல்வதை தவிர வேறு வழியில்லை. முதலாவது தலைமுறை நாமே இவ்வாறு என்றால் அடுத்த தலைமுறை பெரும்பாலும் மில்லியனர் நிலையில்தான் வாழ்வையே தொடங்க போகிறார்கள் நாம் புத்திசாலித்தனமாக சிந்தித்தால் எங்கள் கால்களில் ஒன்றையாவது ஈழத்தில் ஊன்றியே ஆகவேண்டும்
-
ஒரு ரகசிய பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது அதன் பிரகராமே ரஷ்ய தனது படைகளை அங்கிருந்து அகற்றி இருக்கிறது. இன்று திடீரென போலாந்துக்கு ஏவுகணை வீசியது ரஷ்ய என்கிறார்கள் ரஷ்ய மறுத்து இருக்கிறது . இந்த பேச்சுக்களை குழப்பும் யுத்தியாகவும் இருக்கலாம். வெறும் அழிவுகளை மட்டுமே தரும் யுத்தம் ஓய்ந்தால் நன்று
-
இணைப்பிற்கு நன்றி எப்படி சுகம் ?