Jump to content

Maruthankerny

புதிய உறுப்பினர்கள்
 • Posts

  10291
 • Joined

 • Last visited

 • Days Won

  26

Everything posted by Maruthankerny

 1. ஒரு ரகசிய பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது அதன் பிரகராமே ரஷ்ய தனது படைகளை அங்கிருந்து அகற்றி இருக்கிறது. இன்று திடீரென போலாந்துக்கு ஏவுகணை வீசியது ரஷ்ய என்கிறார்கள் ரஷ்ய மறுத்து இருக்கிறது . இந்த பேச்சுக்களை குழப்பும் யுத்தியாகவும் இருக்கலாம். வெறும் அழிவுகளை மட்டுமே தரும் யுத்தம் ஓய்ந்தால் நன்று
 2. எனக்கு என்னமோ நாம் தான் பாவம் பாவம் என்று எண்ணி அவர்களை சோம்பேறி ஆக்குகிறோமோ என்று உறுத்துதலாக இருக்கு
 3. அது போன மாசம் இப்ப கிரைண்டரில் அடிச்சு பருக்கோணும் (வாயை அசைகிறது கூட பெரிய வேலையா நினைக்கிறார்கள்)
 4. அங்குதான் டயானாவுக்கும் சார்ள்ஸுக்கும் ஒத்துவரவில்லை என்றால் இங்குமா? இந்த பெயருக்கே ஆகாது போல இருக்கு
 5. ஆனால் பெரும் அந்நிய செல்வணிகளை கொண்டுவந்து செல்வழிக்கும்போது அது இந்தியாவுக்கு நல்லதுதானே? இரட்டை குடியுரிமை இந்தியாவுக்கு நன்று என்றே எண்ணுகிறேன் மிகவும் தரமான வயோதிபர் மடங்களை இப்போதே அமைத்து செயல்படுத்தினால் பின்னாளில் அவர்கள் இந்தியாவில் வாழவே விரும்புவார்கள் அப்போது பெரும்பாலான சேமிப்பை கொண்டு வருவார்கள் தமிழ் ஈழத்தை பொறுத்தவரை இது சிக்கலானதாகவே அமையும் காரணம் மிகவும் குறிகிய நிலப்பரப்பை வெளிநாட்டு தமிழர்கள் காணிகள் வாங்கி குவிப்பதால் விலைவாசி ஏறி ... உள்ளூர் மக்களால் காணி கொள்வனவை எட்டியும் பார்க்க முடியாதா நிலைக்கு தள்ளிவிடுகிறார்கள்
 6. நாங்கள் என்ன வேண்டாம் என்று அடம் பிடிக்கிறோமா? அனு சக்தியை பயன்படுத்த ... அனு ஒத்துக்கொள்ளணுமே
 7. கையிலே அமிர்தமே இருந்தாலும் .... அதைவிட சுவையானது எங்கே அன்று அலைவதே மனித மனம். அதுதான் இந்த மனிதன் இந்த அழகான பூமியையே அழித்துக்கொண்டு இருக்க காரணம் கையிலே சக்கரை கிடைத்தாலே .... அமிர்தம் என்ற அளவுக்கு கொண்டாட தெரிந்தால் மனதை வென்று ஒரு கொண்டாட்ட நிலையிலேயே வாழ்ந்து கொள்ளலாம் வயதில் ஒரு பக்குவம் வருவது மனதுக்கு மட்டுமல்ல வாழ்வுக்கும் அவசியமான ஒன்று பெண்கள் பறவைகள் மிருகங்கள் காடுகள் மலைகள் போன்ற இயற்கை எவ்வளவு அழகானது என்ற ஆழமான ரசனை கண்களில் தெளிவு இருந்தாலே தெரிய தொடங்கும் மத நம்பிக்கை கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு மதங்களின் சார அம்சம் தெளிவான அறிவிலேயே புரிய தொடங்கும் அல்லாஹ் சிவன் கிறிஸ்து போன்றவர்கள் எங்குமே இல்லாதவர்கள் ... இல்லாமையிலேயே எல்லாம் இருக்கிறது என்பதைத்தான் மதங்கள் சொல்கின்றன என்ற புரிதல் வரும் அப்போ மூட நம்பிக்கைகள் கலைந்து போகும் ... அது இல்லாதவர்களுக்கு சமூக பணி நற்பணிகளின் பலா பலன் புரியத்தொடங்கும் அவசர வாழ்க்கையில் ஏமாற்றங்கள்.... பிறருடனான உறவுகள் கடமைகள் அடுத்தவரின் அலங்கோல வாழ்க்கையினால் வரும் கோபம் தாபம் போன்றவை ஒரு முட்டு கட்டையாக இருந்துகொண்டே இருக்கும் காமத்தில் கற்பனையை கடந்துவிட்டால் ... அதை கடந்து அங்கு பெரிதாக ஒன்றும் இல்லை வீண் கற்பனைகள்தான் முழு சிக்கலுக்கும் காரணம் ஆகிறது என்ற தெளிவு ஆறுபதில் வரவில்லை என்றால் வாழ்க்கை பெரும் சிக்கலாவே அமையும். இந்த வாழ்வை திருப்திகரமாக முடித்து சாவை மகிழ்ச்சியுடன் அணைக்கும் பாக்யம் கைதவறி போகும்
 8. ஒட்டிய குழுக்கள் ... ஓடடாத குழுக்கள் லஞ்ச பணம் களவு கொள்ளைகள் அதிகரிப்பதும் இதனால்தான். ஜூன் மாதம் $ 5 பில்லியனுக்கு ஆடையும் தேயிலையும் ஏற்றுமதி செய்திருந்தார்கள் நான் நினைத்திருந்தேன் ஆடை தொழிலார்கள் இப்போதுதான் இன்னமும் பிஸியாக இருப்பார்கள் என்று தமிழ்நாட்டில் ஒரு ஆடை தொழில் கொம்பனி மிகவும் பாரிய அளவில் வளர்ந்துகொண்டு வருகிறது அவர்களின் இலக்கு இந்த இலங்கை தொழிலை அங்கு எடுப்பதுதான்
 9. அங்க மட்டுமா எரியுது ....... இங்கு எட்டு பத்து வருசமா எரியுது
 10. கால சூழலும் எம் கைகளில் இருக்கும் தொழில்நுட்பம் கருவிகள்தான் சம்பிரதாயம் சடங்குகளை நிர்ணயிக்கிறது என்று நான் எண்ணுகிறேன். பத்து பன்னிரண்டு வயதில் யாழில் ஒரு கிறிஸ்தவரின் இறுதி கிரிகையில் பாண்ட் இசை குழுவினர் முன்னுக்கு வாசித்து கொண்டு போவதை முதல் முதலில் பார்த்த போது என்னால் நம்ப முடியவில்லை பணக்கார வர்க்க ... பாட்டாளி வர்க்க சிந்தனைகள் ஏன் என்று தெரியவில்லை சிறுவயதிலேயே எனுக்குள் தோன்றிவிட்டது. ஆதலால் பணக்கார வர்க்கம் மீதான ஒரு வெறுப்பு எனக்குள் இருந்துகொண்டே இருந்தது அதன் விளைவோ என்னவோ தெரியவில்லை. அதை பார்த்த நாளில் இருந்து எனக்குள் ஒரு பெரும் கோபம் இருந்துகொண்டே இருந்தது பணம் இருந்தால் எண்ண வேண்டுமானலும் செய்துவிட்டு போங்கள் அதற்காக இப்படி செத்தவீட்டிலா இசை கச்சேரி வைத்து ஆடடம் போடுவீர்கள்? என்று ஒரே ஆதங்கமாக இருந்தது ஒரு மனிதன் இறந்து கிடக்கிறான் உங்களுக்கு கவலை இல்லாது போனால் கூட ... சிறு மரியாதை கூட வேண்டாமா? போன்ற எண்ணங்களே வந்து வந்து போய்க்கொண்டு இருந்தது. பின்பு புலிகளின் தளபதிகள் விக்ரர் ராதா திலீபன் போன்றவர்களின் பூதவுடலை எமது ஊருக்கு கொண்டுவந்த போது மீண்டும் அதே பாண்ட் இசையை முழக்கி கொண்டு வந்தார்கள் அப்போதுதான் இந்த பேண்ட் இசை வேறு .... இசை கச்சேரி வேறு என்று புரிய தொடங்கினேன் பின்பு யாழில் இதை அடிக்கடி பார்க்க நேர்ந்தது எனக்கும் பழகிவிட்டது ... முதன் முதலில் எனக்கு வந்த கோபம் என் அறியாமையால் வந்தது எங்களுடைய செத்தவீட்டு சடங்குகளும் தேவையின் காரணமாகவே உருவாக்கி இருக்கும் சாம்பல்.... எட்டு எல்லாம் மூன்று நாலு நாள் சீரான உணவு இன்றி இருந்த எமக்கு ஒரு ஊட்ட சத்து தருவதுபோலவும் எமது சிந்தனையை மாற்றும் நிகழ்வாகவுமே பார்த்து இருக்கிறேன் இளவயதில் யாராவது விபத்தில் இறந்தால் அந்த கவலை மீள முடியாததாக இருக்கும் .... பின்பு இந்த சாம்பல் எட்டு அதுகள் வரும்போது சமையல் பொருட்கள் கொள்வனவு போன்ற நிகழ்வுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சிந்தனைகள் திசை திரும்பி மீண்டும் வாழ்க்கை துளிர்விட தொடங்கும் இங்கு வெளிநாட்டில் தூர தேசத்தில் இருந்து பலரும் பயணிக்கலாம் அதனால் ஒரு உணவு முறைமை இருக்கு என்று எண்ணுகிறேன் சைவ முறைமையை ஆழமாக பார்த்தால் (இறைவனடி சேர்ந்தார்) இறைவனிடம் அனுப்பும் நிகழ்வுகள்தான் அவைகள். ஆதலால்தான் அவர்கள் இறைவனுக்கு (சிவனுக்கு) சமமாகவே வைக்கப்பட்டு பந்தம் பிடித்து தேவாரம் எல்லாம் பாடி அனுப்புகிறோம். இறுதி நிகழ்வு என்பது (இளவயது விபத்து தவிர்த்து) அவருடைய இந்த ஜென்ம வாழவை கொண்டாடுவதுதான். அதனால்தான் அதுக்காக என்றாலும் ஒரு நாலு பேருக்கு நல்லவர்களா இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அவர்களுடைய இந்த ஜென்ம வாழ்வு பூரணம் அடைவதால் அதை கொண்டாடுவது தவறாக எனக்கு படவில்லை ( இளவயதில் இறந்தவர்கள் பூரணம் பெறாதவர்கள் மீண்டும் அவர்கள் பிறந்து இந்த ஜென்மத்தை முழுமை செய்ய வாய்ப்பிருக்கிறது என்ற நமிபிக்கை இருப்பதால்தான் அவர்களுக்கு நாம் துவசம் அந்திரேட்டி ஓன்றும் செய்வதில்லை) இன்னும் சில வருடங்களில் 2-3 நாள் பாட்டு கோஸ்ட்டி சின்னமேளம் அது இது என்று களை கட்டும் என்றுதான் எண்ணுகிறேன் அதுபற்றி பெரிதாக அலட்டி கொள்ள எதுவும் இல்லை என்றே நம்புகிறேன் அன்னை தெரசா போல எமது வாழ்வு இல்லை சக்கை நிரப்பிய படகில் ஏறி பயணித்த பெண் கரும்புலிகளின் மனதில் அப்போது என்ன என்ன எண்ணங்கள் வந்திருக்கும்? நாம் எல்லோரும் அதற்கு நேர் எதிரான வாழ்வே வாழ்கிறோம் எல்லோராலும் தியாகங்கள் ஈடாவதில்லை அவரவருக்கு விளங்கியதன் படி வாழவை வாழ்கிறோம் எப்படியோ இன்னொருவரை துன்புறுத்தாது இன்னொருவர் தன மகிழ்ச்சிக்காக செய்வதில் நாம் ஏன் தலையிட வேண்டும்? எல்லாவற்றையும் கொண்டாட பழகி கொள்வோம்
 11. இனி திரிஷாவின் திருமணத்தையும் பார்த்துவிட்டால் நிம்மதியா கண் மூடலாம்
 12. இந்த சித்து விளையாட்டுக்குத்தான் இதெல்லாம் எல்லா சர்வதேச விமான நிலைய டவர்களும் சர்வதேச சட்ட்ங்களுக்கு (IATA ) அமையவே செயல்பட முடியும் இந்த விமானம். இந்த விமானம் அவர்களால்தான் தடுக்க்க பட்டு இருந்தது இதை இலங்கை உள்ளூர் நீதிமன்றுக்கு இழுக்கவே இதெல்லாம் செய்து இருக்கிறார்கள் இப்பெ இலங்கை நீதிமன்று இது தனியார் விமானம் ( அவ்வாறுதான் இப்போ பதிவாகி இருக்கிறது) இதை தடுத்து வைக்கும் உரிமை இல்லை என்று தீர்ப்பாகி இருக்கிறது அந்த தீர்ப்பின் அடிப்படையில் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அனுமதித்து இருக்கிறது அனால் அதே (IATA) SU 289 தில்தான் இப்போ பயந்துகொண்டு இருக்கிறது நான் இதை எழுதிக்கொண்டு இருக்கும் நேரம் உபேகேசித்தானை கடந்துகொண்டு இருக்கிறது இது எவ்வாறு எல்லா நாட்டு வான் பரப்பிலும் அனுமதி பெற்று போகிறது என்பதை இனிதான் நானும் தேடி வாசிக்க வேண்டும் https://flightaware.com/live/flight/AFL289
 13. இது ஸ்ரீ லங்கா அரசு எடுத்த முடிவில்லை இதற்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை சர்வதேச பறப்பு முறைமை மூலம் குறித்த விமானம் மேலெழும்பும் ( ) உரிமையை ரத்து செய்திருக்கிறார்கள் இலங்கையில் இருந்து பறந்தாலும் ஏனைய நாடுகளின் ( குறிப்பாக இந்திய) வான் பரப்பில் பறக்க முடியாது. இது லீசிங் முறைமையில் இருந்த விமானம் பொருளாதார தடையின் பின்பு ரசியா ஒரு தனி நிறுவனம் நிறுவி இந்த விமானத்தை பதிவு செய்திருக்கிறார்கள் ஆதலால் இது ஒரு திருட்டு விமானம் என்பதுதான் அடிப்படை பிரச்சனை உதாரணத்துக்கு நீங்கள் ஒரு காரை வாடகைக்கு எடுத்து தமிழ் சிறி அண்ணருக்கு விற்று இருக்கிறீர்கள் அவர் அந்த காரில் பிரான்சுக்கு விசுகு அண்ணாவிடம் சென்று இருக்கிறார் இப்போ பிரான்ஸ் போலீஸ் (சர்வதேச சட்டங்களுக்கு அமைய) அதை விசுகு அண்ணா வீட்டிலேயே தரைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் .
 14. உன் இலக்கு நோக்கிய பயணத்தில் வெற்றி தாமதம் ஆகலாம் அதற்காக அது தோல்வி என்று அர்த்தமில்லை ;
 15. "இன்று... பரமசிவனே, ஒழித்து திரியும் நிலைமை." ரொம்ப நாள் கழித்து வாய்விட்டு சிரிக்க வைத்து விடடீர்கள் ஒரு பிளோவில எழுதினாலும் ... பல அர்த்தம் நிறைந்த வசனம்
 16. நீங்கள் கூறுவது உண்மைதான் ஆனால் நானும் நீங்களும் ஏன் குத்துப்பட வேண்டும்? என்ற மனநிலைதான் எனக்கு இருக்கிறது யாழ்களம் ஒரு கருத்துக்களம் என்பதால் எல்லோரும் அவர் அவர் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதே நன்று கருத்து பகிர்வை குறைத்தால் யாழ் சூனியமாகிவிடும் என்பதால் அதையும் முயற்சிக்க கூடாது. புடின் செய்வினை மட்டுமல்ல செயற்பாட்டு வினையும் என்பதே எனது தாழ்மையான நிலைப்பாடு. ஹிட்லர் என்ற தனிநபர் அழிவை செய்யவில்லை தமது வேலை கடமை என்று எண்ணி செயல்பட்ட சாதாரண குடிமக்களே முன்னின்று அழிவை செய்தவர்கள். சாதாரண குடிகளின் ஒத்திசைவு என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் .....நாம் சாதாரண குடிகள்தானே என்று எல்லாவற்றையும் நாம் கடந்துகொண்டும் செல்ல முடியாது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.