தக்கையிசை ராமாயணம் என்ற நூலை இயற்றிய எம்பெருமான் என்ற தமிழ்ப் புலவர் ஒருவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவியின் பெயர் பூங்கோதை. சிறந்த தமிழ் அறிவும், வேத உபநிடதங்களில் ஆழ்ந்த அறிவையும் பெற்ற மங்கை நல்லாள் இவர்.
ஒரு நாள் புலவர் வெளியில் சென்றிருந்தார். அப்போது சில புலவர்கள் அவரைப் பார்த்து அளவளாவி மகிழ அவர் இல்லத்திற்கு வந்தனர். புலவர் பெருமான் வெளியில் சென்றிருப்பதை அறிந்த அவர்கள் வீட்டில் உட்கார்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு பெண்களைப் பற்றித் திரும்பியது.
எவ்வளவு தான் பெண்கள் படித்தாலும் அவர்களுக்கு முதிர்ந்த அறிவு உண்டாகாது என்றும் பெண் மக்கள் ஆ
நிலவைப் பெண்ணாகவும், குளிர்மையானதாவும் தான் கவிஞர்கள் வர்ணித்திருக்கிறார்கள். நிலவு குளிர்மையானதென்றால் , அந்த நிலவுக்கு யாரையாவது வெப்பத்தால் சுட்டெரிக்கும் தன்மை உள்ளதா? இல்லை. ஆனால் இங்கே கவியரசர் கண்ணதாசன் குறிப்பிடும் காதலர்கள், தமது காதல் துணையை சுட்டெரிக்கும் வண்ணம் நிலவிடம் விண்ணப்பிக்கின்றாகளே? இது சாத்தியமா? இல்லை. நிலவு இதம் தருமே தவிர வதை செய்யாது. உண்மையான காதலர்கள் தமது காதல் துணைக்கு கனவிலே கூட துன்பம் நினைக்கார். அதனால் தான் அவர்கள் தமது காதலரை சுட்டெரிக்கும் படி சூரியனிடம் கோரவில்லை. இதைத் தான் ஊடல் என்பது. இதோ அந்தப் பாடல்:
" அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
ஒட்டக்கூத்தரின்மீது மனைவியின் கோபத்திற்குக் காரணம் புகழேந்திப் புலவர் சிறையிலிருப்பதுதான் என்பதைப் புரிந்து கொண்ட அரசன் உடனே புகழேந்தியை விடுதலை செய்து அவரை அந்தப்புரத்திற்கு அனுப்பித் தன் மனைவியை சமாதானம் செய்யும்படிக் கேட்டுக் கொண்டான். புகழேந்தி அரசியின் வாசலுக்கு வந்து
"இழையன்றிரண்டு வகிர் செய்த நுண்ணிடை யேந்தியபொற்
குழையன்றிரண்டு விழியணங்கே கொண்ட கோபந் தணி
மழையன்றிரண்டு கைப் பாணாபரண நின் வாசல் வந்தால்
பிழையன்றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே!"
எனும் பாடலைக் கூறியதும் அரசி இரண்டு தாழ்ப்பாள்களையும் திறந்தாள்.
அதன் பொருள்
“நூலிழை ஒன்றை இரண்டாக வகிர்ந்தது போன்ற மெல
குலோத்துங்க மன்னனின் மனைவி பாண்டிய நாட்டு ராஜகுமாரி. அவளது குரு புகழ்பெற்ற நளவெண்பா என்னும் காவியத்தை இயற்றிய புகழேந்திப் புலவர். புகழேந்திப் புலவர் ராஜகுமாரியுடனே வந்து சோழ நாட்டில் தங்கி இருந்தார். குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவரும் குருவுமான ஒட்டக்கூத்தர் புகழேந்தியை எக்காரணமுமின்றிச் சிறையிலடைத்துவிட்டார். இந்த விவரத்தைக் கேள்வியுற்ற ராணிக்குக் கோபம் வந்து விட்டது. அதனால் அவள் அரசன் அந்தப்புரத்திற்கு வரும் சமயம் அறைக்குள்ளே புகுந்து கொண்டு கதவைத் தாழிட்டுக் கொண்டாள். மன்னன் குரல் கொடுத்தும் கதவைத் திறக்கவில்லை. அந்த நாளில் மகாராணிகள் ஊடல் கொண்டால் மன்னர்கள் தங்கள் அவைக்களப் புலவரை அனுப
ஏதோ தேடும் போது இது கிடைத்தது. இங்கு பொருந்தும் என்பதால் இதனை இணைக்கிறேன்
ஔவையாரின் பதிலடி- ஏ.கே.ராஜகோபாலன்
ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.
அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்