Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Rasikai

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Content Count

  3,798
 • Joined

 • Last visited

Posts posted by Rasikai

 1. பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

 2. வெறும் நன்றிகளோட முடிஞ்சுதோ ரசிகை? கேக் துண்டுகள் ஒண்டும் வேண்டாம். கனகாலத்துக்கு பிறகு வந்து இருக்கிறீங்கள். யாழில ரெண்டு கருத்துக்கள் எழுதிப்போட்டு போகலாமே? வந்ததும் வராததுமா அவசரமா எங்க ஓடுறீங்கள் :lol::lol:

  வேலைல நிண்டதால உடனே ஓடிட்டன். மன்னிக்கவும்.

  நேரம் கிடைக்கும் போது நிச்சயமாக வந்து எழுதுவேன்.

 3. உங்கள் எல்லோருடைய அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

  மேலும் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்

 4. தக்கையிசை ராமாயணம் என்ற நூலை இயற்றிய எம்பெருமான் என்ற தமிழ்ப் புலவர் ஒருவர் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவியின் பெயர் பூங்கோதை. சிறந்த தமிழ் அறிவும், வேத உபநிடதங்களில் ஆழ்ந்த அறிவையும் பெற்ற மங்கை நல்லாள் இவர்.

  ஒரு நாள் புலவர் வெளியில் சென்றிருந்தார். அப்போது சில புலவர்கள் அவரைப் பார்த்து அளவளாவி மகிழ அவர் இல்லத்திற்கு வந்தனர். புலவர் பெருமான் வெளியில் சென்றிருப்பதை அறிந்த அவர்கள் வீட்டில் உட்கார்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு பெண்களைப் பற்றித் திரும்பியது.

  எவ்வளவு தான் பெண்கள் படித்தாலும் அவர்களுக்கு முதிர்ந்த அறிவு உண்டாகாது என்றும் பெண் மக்கள் ஆணுக்குத் தாழ்ந்தவர்களே என்றும் அவர்கள் தம்முள் பேசி மகிழ்ந்தனர்.

  வீட்டின் உள்ளே இருந்து இவர்களின் பேச்சைச் செவி மடுத்த பூங்கோதையார் ஒரு சிறிய ஓலை நறுக்கில் வெண்பா ஒன்றை எழுதி சிறுவனிடம் கொடுத்து புலவர்களின் பார்வைக்கு அனுப்பினார்.

  "அறிவில் இளைஞரே ஆண்மக்கள் மாதர்

  அறிவின் முதிஞரே ஆவர் - அறிகரியோ

  தான் கொண்ட சூலறிவர் தத்தையர் ஆண்மக்கள்

  தான் கொண்ட சூலறியார் தான்"

  என்ற வெண்பாவைப் படித்த புலவர்கள் பெரும் வியப்பை அடைந்தனர். ஒருவரை ஒருவர் பார்த்து பேச முடியாமல் வெட்கம் அடைந்தனர். "அறிவில் ஆண்களை விடப் பெண்களே உயர்ந்தவர்கள்; தான் கொண்டிருக்கும் கர்ப்பத்தைப் பெண்களே அறிவர். ஆண்கள் அதை அறிய மாட்டார்கள் என்பதை அறியவில்லையோ?' என்ற கருத்தும் உயர்ந்தது; அதை ஏற்கவும் முடியவில்லை; மறுக்கவும் முடியவில்லை; அதைச் சொல்லிய தமிழ் அவர்களுக்குத் தேனாய் இனித்தது!

  அந்தச் சமயத்தில் உள்ளே வந்தார் புலவர் பெருமான். திகைப்புற்று இருக்கும் நண்பர்களிடம் "என்ன விஷயம்?" என்றார். அவர்கள் ஓலை நறுக்கைக் காட்டினர். அவர் நகைத்தார். தன் மனைவியிடம் இப்படி ஆண் மக்களை இழித்துக் கூறலாமா?" என்று கேட்டார். உள்ளிருந்தபடியே நடந்ததைக் கூறிய பூங்கோதையார், "நான் இந்தப் பாடலில் ஆண்களை இகழவில்லையே! ஆன்மாவானது நீர்த்துளி வழியாகப் பூமியில் சேர்ந்து உணவு வழியாகப் புருஷ கர்ப்பத்தில் தங்குகிறது. பிறகு பெண்ணின் கருப்பையை அடைந்து கர்ப்பமாகி குழந்தையாகப் பிறக்கிறது. இதை உபநிடதங்கள் விளக்கவில்லையா? பெண்கள் தான் கர்ப்பமானதை அறிவது போல ஆண்கள் தங்கள் கர்ப்பத்தை உணராமல் இருப்பது உண்மைதானே!" என்றார். உயர்ந்த உபநிடதக் கருத்தைக் கேட்ட புலவர்கள் மெய் சிலிர்த்தனர்.

  பிரம சூத்திரமும் சிவ ஞான போதமும் விளக்கும் உயிர்ப் பிறப்பு ஒரு பெரும் ரகசியம்! மேலுலகம் சென்ற உயிர் திரும்பும் போது முறையே துறக்கம், மேக மண்டலம், நிலம், தந்தை, தாய் என்று ஐந்து இடத்தில் புகுந்து வருவதை தியானிக்கும் வித்தை பஞ்சாக்கினி வித்தை என்பதை ஞானிகள் அறிவர்! சொர்க்கம் சென்ற ஆன்மா மேகம் வழியே மழையாக மாறி உணவுப் பொருளாக ஆகி ஆண் தேகத்தில் விந்துவாக இரண்டு மாதம் இருந்து பின் பெண்ணின் சேர்க்கையால் பத்து மாதம் கர்ப்பத்தில் இருந்து குழந்தையாகப் பிறக்கிறது என்ற அரிய தத்துவத்தை அறிந்த புலவர்கள் பெண் தமிழைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்து பெண்ணே உயர்ந்தவர் என்று கருத்துக் கூறி விடை பெற்றனர்.

  இந்த அற்புதமான உண்மை வரலாற்றை அப்படியே ஒரு பாடலில் சொல்கிறது கொங்கு மண்டல சதகம்!

  "குறுமுனி நேர் தமிழ் ஆழியுண் வாணர் குழாம் வியப்ப

  அறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்ன அறுதியிட்ட

  சிறிய விடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர்

  மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே"

  - பாடல் -65

  தமிழ் முனிவர் அகத்தியர் போன்ற பல புலவரும் வியக்கும் வண்ணம் அறிவில் இளையவர்கள் ஆண்களே என்று நிலை நிறுத்திய எம்பெருமான் புலவரின் மனைவி வாழ்ந்த பெருமையை உடையது கொங்கு மண்டலம் என்று சதகம் கூறும் போது பெண்ணின் பெருமையையும் பெண் தமிழின் மென்மையையும் அவர் சொல்லின் வன்மையையும் உணர்கிறோம் இல்லையா?

  நன்றி நிலாச்சாரல்

 5. நிலவைப் பெண்ணாகவும், குளிர்மையானதாவும் தான் கவிஞர்கள் வர்ணித்திருக்கிறார்கள். நிலவு குளிர்மையானதென்றால் , அந்த நிலவுக்கு யாரையாவது வெப்பத்தால் சுட்டெரிக்கும் தன்மை உள்ளதா? இல்லை. ஆனால் இங்கே கவியரசர் கண்ணதாசன் குறிப்பிடும் காதலர்கள், தமது காதல் துணையை சுட்டெரிக்கும் வண்ணம் நிலவிடம் விண்ணப்பிக்கின்றாகளே? இது சாத்தியமா? இல்லை. நிலவு இதம் தருமே தவிர வதை செய்யாது. உண்மையான காதலர்கள் தமது காதல் துணைக்கு கனவிலே கூட துன்பம் நினைக்கார். அதனால் தான் அவர்கள் தமது காதலரை சுட்டெரிக்கும் படி சூரியனிடம் கோரவில்லை. இதைத் தான் ஊடல் என்பது. இதோ அந்தப் பாடல்:

  " அத்திக்காய் காய் காய்

  ஆலங்காய் வெண்ணிலவே

  இத்திக்காய் காயாதே

  என்னைப் போல் பெண்ணல்லவோ - நீ

  என்னைப் போல் பெண்ணல்லவோ?"

  அத்திக்காய் = அந்தப் பக்கமாக, அந்தத் திசையாக [காதலன் நிற்கும் பக்கம்]

  இத்திக்காய் = இந்தப் பக்கமாக [ தான் நிற்கும் பக்கம்]

  ஆல் = தொலைவு, அதிக தூரம், அங்கே

  அங்கே காயும் நிலவே, நீயும் என்னைப் போல ஒரு பெண்தானே, ஆகவே, இந்த்தப் பக்கமாக [நான் நிற்கும் பக்கம்] வந்து என்னைச் சுடாதே. என் காதலர் நிற்கும் பக்கம் சென்று அவரைச் சுடு.

 6. என்ன.... பொருள் எழுதுவதற்கு மணியண்ணை வரவேணுமா? அதையும் எழுத வேண்டியது தானே?

  பொறுங்கோ இப்பதான் பாட்டை கண்டு பிடிச்சு எழுதுறன் பொருளையும் எழுதுறனப்பா :angry: :angry:

 7. ஆமாம். கண்ணதாசன்கூட சிலேடை பாடல்கள் பாடியுள்ளார்.

  "அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே" எனும் பாடல்தான் உடனே ஞாபகத்துக்கு வருகிறது. பாடலை தெரிந்தவர்கள் பொருளுடன் இணைத்தால் நல்லது. :rolleyes::)

  படம் - பலே பாண்டியா

  பாடியவர் - ரி.எம்.சௌந்தரராஜன்+P.B.சிறீநீவா

 8. தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

  தூதிதூ தெத்தித்த தூததே - தாதொத்த

  துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது

  தித்தித்த தோதித் திதி

  ஆரவல்லியக்கோய்!

  இங்கு இன்னொரு பாடலை பாருங்கோ

  "தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

  தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த

  துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது

  தித்தித்த தோதித் திதி"

  என்ற கவி காளமேகப் புலவரின் பாடலைப் பார்த்தால் சற்றுத் திகைக்க வேண்டி வரும்.

  தாதி - தோழியின்(அடிமைப் பெண்ணின்)

  தூதோ- மூலமாக அனுப்பும் தூது

  தீது - நன்மை பயக்காது!

  தத்தை- (நான் வளர்க்கும்) கிளியோ

  தூது - தூதுப் பணியில் தூதை

  ஓதாது - (திறம்பட) ஓதாது!

  தூதி தூது - தோழியின் தூதோ

  ஒத்தித்த தூததே - நாளைக் கடத்திக் கொண்டே போகும்.

  தேதுதித்த - தெய்வத்தை வழிபட்டுத்

  தொத்து - தொடர்தலும்

  தீது - தீதாகும்

  தாதொத்த - (ஆகவே) பூந்தாதினைப் போன்ற

  துத்தி - தேமல்கள்

  தத்தாதே- என் மேல் படராது

  தித்தித்தது _ எனக்கு இனிமையான தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை

  ஓதித் திதி - ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக!

 9. ஒட்டக்கூத்தரின்மீது மனைவியின் கோபத்திற்குக் காரணம் புகழேந்திப் புலவர் சிறையிலிருப்பதுதான் என்பதைப் புரிந்து கொண்ட அரசன் உடனே புகழேந்தியை விடுதலை செய்து அவரை அந்தப்புரத்திற்கு அனுப்பித் தன் மனைவியை சமாதானம் செய்யும்படிக் கேட்டுக் கொண்டான். புகழேந்தி அரசியின் வாசலுக்கு வந்து

  "இழையன்றிரண்டு வகிர் செய்த நுண்ணிடை யேந்தியபொற்

  குழையன்றிரண்டு விழியணங்கே கொண்ட கோபந் தணி

  மழையன்றிரண்டு கைப் பாணாபரண நின் வாசல் வந்தால்

  பிழையன்றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே!"

  எனும் பாடலைக் கூறியதும் அரசி இரண்டு தாழ்ப்பாள்களையும் திறந்தாள்.

  அதன் பொருள்

  “நூலிழை ஒன்றை இரண்டாக வகிர்ந்தது போன்ற மெல்லிய இடையும் பொற்குழைகள் போன்ற விழிகளும் உடைய பெண்ணே! நீ கொண்ட கோபத்தைத் தணித்துக் கொள். மழை போல இரு கைகளாலும் எதிரிகளின் மேல் பாணங்களைப் பொழியும் ஆற்றல் கொண்ட குலோத்துங்கன் உனது வாசலுக்கு வரும்பொழுது நற்குடியில் பிறந்த பெண்ணான நீ மன்னனின் ஒன்றிரண்டு பிழைகளைப் பொறுத்தருளவேண்டும்!” என்பதாகும்

 10. குலோத்துங்க மன்னனின் மனைவி பாண்டிய நாட்டு ராஜகுமாரி. அவளது குரு புகழ்பெற்ற நளவெண்பா என்னும் காவியத்தை இயற்றிய புகழேந்திப் புலவர். புகழேந்திப் புலவர் ராஜகுமாரியுடனே வந்து சோழ நாட்டில் தங்கி இருந்தார். குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவரும் குருவுமான ஒட்டக்கூத்தர் புகழேந்தியை எக்காரணமுமின்றிச் சிறையிலடைத்துவிட்டார். இந்த விவரத்தைக் கேள்வியுற்ற ராணிக்குக் கோபம் வந்து விட்டது. அதனால் அவள் அரசன் அந்தப்புரத்திற்கு வரும் சமயம் அறைக்குள்ளே புகுந்து கொண்டு கதவைத் தாழிட்டுக் கொண்டாள். மன்னன் குரல் கொடுத்தும் கதவைத் திறக்கவில்லை. அந்த நாளில் மகாராணிகள் ஊடல் கொண்டால் மன்னர்கள் தங்கள் அவைக்களப் புலவரை அனுப்பி சமாதானம் செய்து வைப்பது வழக்கம். அதன்படியே குலோத்துங்கனும் தனது அவைக்களப் புலவரும் குருவுமான ஒட்டக்கூத்தரை அனுப்பினான். ஒட்டக்கூத்தர் அந்தப்புரத்திற்கு வந்து ராணியின் அறைக்கு முன்னால் நின்றுகொண்டு இவ்வாறு பாடினார்

  "நானே இனியுன்னை வேண்டுவதில்லை நளினமலர்த்

  தேனே கபாடந் திறந்திடு திறவா விடிலோ

  வானேறனைய வாள் விரவிகுலாதிபன் வாசல் வந்தால்

  தானே திறக்கு நின் கையிதழாகிய தாமரையே!"

  “நளினமான மலரில் இருக்கும் தேன் போன்ற பெண்ணே நீ கதவைத் திறப்பதற்கு நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்ளும் அவசியமில்லை ஏனென்றால் வானளாவிய புகழ் கொண்ட ஆண் சிங்கத்தைப் போன்ற வலிமையுடைய வாள் வீரனாகிய குலோத்துங்கன் உன் அறை வாசலுக்கு வந்தால் தாமரை போன்ற உன் கைகள் தானே கதவைத் திறந்துவிடும்!” எனும் பொருளுடைய பின்வரும் பாடலைக் கூறினார்.

  இந்தப் பாடலைக் கேட்ட அரசியின் கோபம் அதிகமாகவே அவள் கதவின் இன்னுமொரு தாழ்ப்பாளையும் தாளிட்டுக் கொண்டாள். அப்படித்தான் ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ சொற்றொடர் உருவானது.

 11. ஏதோ தேடும் போது இது கிடைத்தது. இங்கு பொருந்தும் என்பதால் இதனை இணைக்கிறேன்

  ஔவையாரின் பதிலடி- ஏ.கே.ராஜகோபாலன்

  ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.

  அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்கும்.

  ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.

  கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே காரிக் கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்:

  "தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே

  மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"

  தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஔவையார்.

  "குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் காரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.

  அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு காரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வாரிகளின் கீழே கீழ்க்கண்ட வாரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:

  "பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

  செம்பொற் சிலம்பே சிலம்பு."

  என்பதாகும் அவ்வரிகள்.

  ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.

  தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும் படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,

  "ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"

  என்று கூறினார். இதற்கு உத்தரமாக ஔவையார்,

  "எட்டேகால் லட்சணமே, எமனேறும் பா¢யே

  மட்டில் பொ¢யம்மை வாகனமே முட்டமேற்க்

  கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே

  ஆரையடா சொன்னாயது."

  தமிழில் "அ" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "வ" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.

  எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பாரி எருமை. எமனேறும் பாரியே என்றால் "எருமையே" எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.

  "குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.

  எவ்வளவு அருமையான புலமை விளையாட்டு!

  நன்றி

  நிலாச்சாரல்

 12. நல்ல முயற்சி ஈழத்திருமகன்

  நீங்கள் இரசித்த சிலேடை வெண்பாக்களை நானும் இரசித்தேன். நேரம் கிடைக்கும் போது நானும் இணைக்கிறேன். தொடர்ந்து இணையுங்கள்.

 13. கந்தப்பு, சினேகிதி, சுபித்திரன், சிவகாசி பாபு, எரிமலை, டண், வெண்ணிலா , முத்துகிருஷ்ணன், சங்கர் ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

 14. தம்பி ராசா மாப்பிளை!உந்த சீனாக்காரன்ரை வெள்ளையரிசிச்சோத்தை நாள்முழுக்க சாப்பிட்டுப்போட்டு இஞ்சை வந்து கொஞ்சப்பேர் கதை விடுகினம் தாங்கள் ஊரிலையே பசுமதியரிசிச்சோறுதான் சாப்பிட்டு வளர்ந்தவையாம்.சரி அது இருக்கட்டும் லண்டனுக்கு பாய்வம் எண்டு சொல்லுறீர்.இப்ப பொம்புளை இறக்குமதி முடிஞ்சு மாப்பிளை இறக்குமதி தான் கூடுதலாய் நடக்குது.இஞ்சை இப்ப கன குமருகள் கிலுகிலுத்துக்கொண்டு திரியினம்.என்ன மாதிரி உமக்கும் ஒண்டை பார்க்கவோ?கையிலை குறிப்பு,சாதகக்கொப்பி ஏதும் வைச்சிருக்கிறீரோ? :lol:

  ஆகா இங்க யாரோ நம்ம சாத்திரிக்கு ஆப்பு வைக்குற மாதிரி கிடக்கு. :rolleyes:

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.