• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மின்னல்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,753
 • Joined

 • Last visited

 • Days Won

  2

மின்னல் last won the day on October 31 2010

மின்னல் had the most liked content!

Community Reputation

31 Neutral

1 Follower

About மின்னல்

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male
 • Location
  முகில்களுக்குள்

Recent Profile Visitors

4,044 profile views
 1. http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=104&cid=14644 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=104&cid=14645 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=104&cid=14646 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=104&cid=14647
 2. தமிழீழ தாயக விடுதலைப் போரில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள் அவர்கள் வீரச்சாவைத் தழுவிய நாட்களில் இப்பக்கத்தில் அவர்களின் பதிவு செய்யப்படும். (படங்களிற்கு கீழேயுள்ள இணைப்பில் சென்று அம் மாவீரர் தொடர்பான மேலதிக விபரங்களைப் பார்க்கலாம்) சனவரி 3ம் நாளில் மடிந்த மாவீரர்களின் ஒளிப்படங்கள் http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=14640 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=14641 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=14642 சனவரி 4ம் நாளில் மடிந்த மாவீரரின் படம் http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=14643
 3. வீரவேங்கைகள் தளத்தில் பதிவு செய்யப் பட்டிருந்த மாவீரர்களின் விபரங்களில் சொந்த இடம் மற்றும் அவர்கள் வீரச்சாவைத் தழுவிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. தற்போது அந்த விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
 4. நுணாவிலான் நீங்கள் கூறும் மாவீரர் இவர் என்று நினைக்கிறேன். வீரவேங்கை றோம் செல்லையா ஜெகநாதன் நுணாவில் மத்தி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு 30.10.1984 யாழ்ப்பாணம் தெல்லிப்பளைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போது வீரச்சாவு
 5. பூனைத்தொடுவாயில் காவியமான லெப்.கேணல் வாசன், கப்டன் ஆனந்தபாபு, லெப். கெங்கன் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் காவியமான லெப். மன்மதன், வீரவேங்கை சாந்தா ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 20.10.1996 அன்று முல்லை மாவட்டம் பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு(ராடார்) தளத்தினை தாக்குதவற்காக தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் “கொமாண்டா” அணியினருடனான மோதலின்போது லெப்.கேணல் வாசன் (தனராஜ்) (நந்தகோபால் நவநீதராஜ் - திருகோணமலை) கப்டன் ஆனந்தபாபு (கிறகோரி கிறித்துராஜா - குருநகர், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கெங்கன் (கெங்காதரன்) (மார்க்கண்டேசர் விக்கினராசா - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநாள் பூநகரி கடலில் மூழ்கி லெப்டினன்ட் மன்மதன் (மதன்) (வேலுப்பிள்ளை செந்தில்குமார் - தச்சன்தோப்பு, யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலின்போது விழுப்இது சரியல்லந்து வீரவேங்கை சாந்தா (சின்னராஜா சிவரஞ்சினி - எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில நிறுத்தி நினைவு கூருகிறோம்.
 6. திருகோணமலை துறைமுகத்தில் காவியமான மேஜர் சிவசுந்தர் உட்பட்ட கடற்கரும்புலிகளினதும் வலிகாமத்தில் காவியமான 53 மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமொன்று 17.10.1995 அன்று கடற்கரும்புலிகளால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது. இத்தாக்குதலின்போது நீரடி நீச்சற்பிரிவைச் சேர்ந்த கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர் (சித்திரவேல் இராமச்சந்திரன் - உப்புவெளி, திருகோணமலை) கடற்கரும்புலி கப்டன் ரூபன் (சுப்ரபிமணியம் சுதர்சன் - கொடுவாமடு, மட்டக்களப்பு) கடற்கரும்புலி கப்டன் சிவகாமி (சண்முகலிங்கம் இராஜகுமாரி - மயிலிட்டி, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநாள் சிறிலங்கா படையினரின் சூரியக்கதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது 53 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். மேஜர் கபிலன் (கபில்) (மயில்வாகனம் சிவதாசன் - அராலி, யாழ்ப்பாணம்) மேஜர் திலிக்கா (சூசையா டயல்அக்கினோ - பேசாலை, மன்னார்) மேஜர் நேமிநாதன் (ஜோசப் ஸ்.ரீபன் - புல்லுமலை, மட்டக்களப்பு) கப்டன் கண்ணப்பன் (சுபாஸ்) (கந்தையா விஜயராஜா - கல்லடி, மட்டக்களப்பு) கப்டன் மைந்தன் (சுபாஸ்) (சூரியநாராயணன் சந்திரகுமார் - துன்னாலை, யாழ்ப்பாணம்) கப்டன் சர்வேந்திரன் (நாகப்பன் சந்திரகுமார் - மடு, மன்னார்) கப்டன் சொக்கலிங்கம் (திரவியம் ஆனந்தராஜன் - பூநகரி, கிளிநொச்சி) கப்டன் கிரிஜா (பொன்னுத்துரை ராதா - கொம்மாதுறை, மட்டக்களப்பு) கப்டன் சுதா (நடேசு சறோஜாதேவி - அச்சுவேலி, யாழ்ப்பாணம்) கப்டன் ஆசா (இலட்சுமனன் கீதா - தொண்டமானாறு, யாழ்ப்பாணம்) கப்டன் தேவகி (சிவப்பிரகாசம் சிவமேகலா - அராலி, யாழ்ப்பாணம்) கப்டன் எழினி (சிவசுப்பரமணியம் தேவினா - காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்) கப்டன் இதயமலர் (கனகராசா சரஸ்வதி - கோப்பாய், யாழ்ப்பாணம்) கப்டன் ஞானி (ஆறுமுகம் கோதிராசா - மொறக்கொட்டாஞசேனை, மட்டக்களப்பு) கப்டன் தவராசா (சோமசுந்தரம் சிவநேசன் - புங்குடுதீவு, யாழ்ப்பாணம்) கப்டன் செஞ்சுடர் (ஜோதி) (புஸ்பநாதன் ஜெகன் - நல்லூர், யாழ்ப்பாணம்) கப்டன் வேங்கையன் (மாமா) (கந்தசாமி கிருபாகரன் - மாதகல், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் குருபரன் (ஏழுமலை) (சிற்றம்பலம் ராசபாஸ்கர் - நவாலி, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் டெய்சி (நீலமதி) (சுப்பிரமணியம் ஜெயா - பெரியமடு, மன்னார்) லெப்டினன்ட் உதயா (ஆறுமுகம் கௌரி - பூநகரி, கிளிநொச்சி) லெப்டினன்ட் மீரா (தளையசிங்கம் சுபாசினி - புங்குடுதீவு, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நவசோதி (கணபதிப்பிள்ளை கலாராணி - நெடுந்தீவு, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இளவேனில் (ரெட்டியான்) (சிறிபாலறோகன் தேசப்பிரியா - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வள்ளல் (தங்கராசா) (ஆனந்தன் உதயகுமார் - களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அறிவானந்தன் (சத்தியவேல் ஜெயசீலன் - பரந்தன், கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் பொன்மொழி (வேலு மேரிகிறிஸ்ரி - திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் அர்ச்சுனா (மகாலிங்கம் பாரதி - கொக்குவில், யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அருழொளி (சதாசிவம் தேவராணி - ஓமந்தை, வவுனியா) 2ம் லெப்டினன்ட் அனித்தா (இராசேந்திரம் அகிலா - கொடிகாமம், யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் தென்றல் (தனராஜா தனலட்சுமி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் ஜீவகுமாரி (விஜி) (தங்கராசா கொலஸ்ரிக்கா - மயிலிட்டி, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அன்புக்கினியன் (பத்மகாந்தன் சுதர்சன் - அச்சுவேலி, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் தேவதாசன் (வேலுப்பிள்ளை தர்மரட்ணம் - மூதூர், திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் எல்லாளன் (செல்வகுமார் செல்வகுமார் - பன்குளம், திருகோணமலை) வீரவேங்கை பாயும்புலி (நவரத்தினம் தர்மேந்திரராசா - நவக்கிரி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை முகில்வாணன் (கந்தசாமி தர்மஉதயேஸ்வரன் - வரணி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை காளிதாஸ் (நமசிவாயம் மனோகர் - பாலம்பிட்டி, மன்னார்) வீரவேங்கை அனுதீபன் (மகாலிங்கம் புண்ணியமூர்த்தி - விடத்தல்தீவு, மன்னார்) வீரவேங்கை சிவமதி (நமநாதன் தமிழ்ச்செல்வி - சேனைப்புலவு, முல்லைத்தீவு) வீரவேங்கை மாலதி (சுப்பிரமணியம் குமுதினி - அல்லிப்பளை, யாழ்ப்பாணம்) வீரவேங்கை சசி (சின்னையா இராசமலர் - வரணி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை பிரகலா (நவரட்ணம் விமலினி - நாவற்குடா, மட்டக்களப்பு) வீரவேங்கை மாதங்கி (மகாலிங்கம் அருள்மொழி - குப்பிளான், யாழ்ப்பாணம்) வீரவேங்கை கோணேஸ்வரி (செல்லையா ரஞ்சி - தருமபுரம், கிளிநொச்சி) வீரவேங்கை தீபா (செல்வம் ஜெயரதி - முகமாலை, யாழ்ப்பாணம்) வீரவேங்கை வதனா (நாகேந்திரம் புனிதமலர் - சுழிபுரம், யாழ்ப்பாணம்) வீரவேங்கை இன்பநிலா (வேலாயுதம் ஞானம்மா - சந்திவெளி, மட்டக்களப்பு) வீரவேங்கை மயூரி (இராசையா தர்சினி - திருநெல்வேலி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை இளவதனி (வில்லியம் ஜெயரட்ணம் உதயகுமாரி - மல்லாகம், யாழ்ப்பாணம்) வீரவேங்கை பாமதி (அரியரட்ணம் யசோதா - அராலி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை வில்லவன் (திருநாவுக்கரசு திருச்செல்வம் - வரணி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை அருளாளன் (தோமஸ்) (கனகலிங்கம் சனா - சுண்ணாகம், யாழ்ப்பாணம்) வீரவேங்கை துளசிகரன் (சின்னத்துரை நந்தகுமார் - நவக்கிரி, யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகளே வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில நிறுத்தி நினைவு கூருகிறோம்.
 7. மட்டு. நகரில் காவியமான கரும்புலி மேஜர் உதயகீதன், திருமலையில் காவியமான கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன், 2ம் லெப். வேந்தன், 2ம் லெப். ஈழச்செல்வன், முல்லைத்தீவில் காவியமான 2ம் லெப்.சிவா ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். சிறிலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கிய தேசவிரோதிகள் மீது மட்டக்களப்பு நகரில் வைத்து 15.10.2001 அன்று மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் கரும்புலி மேஜர் உதயகீதன் (ஆனந்தன் விஜயஜெயந்தன் - அக்கரைப்பற்று, அம்பாறை) வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதே நாள் திருகோணமலை பள்ளித்தோட்டம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் (நவசிவாயம் சிவரூபன் - மந்திகை, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் வேந்தன் (செல்லத்துரை பாலகுமார் - மீசாலை, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வன் (செல்லக்கணபதிப்பிள்ளை றமேஸ் - கொச்சிக்கடை, கொழும்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். முல்லை மாவட்டம் முந்திரிகைக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலின்போது 2ம் லெப்டினன்ட் சிவா (இராசையா பாலகுமார் - சுண்ணாகம் யாழ்ப்பாணம்) வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில நிறுத்தி நினைவு கூருகிறோம்.
 8. யாழ்தேவி நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் நரேஸ் உட்பட்ட 80 மாவீரர்களினதும் அச்சுவேலி மற்றும் மட்டக்களப்பில் காவியமான ஏழு மாவீரர்களினதும் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தென்மராட்சிப் பகுதிகளை வல்வளைக்கும் நோக்குடன் ஆனையிறவிலிருந்து சிறிலங்கா படைகளால் “யாழ்தேவி” என்ற குறியீட்டுப் பெயருடன் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலோப்பளைப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் இப்படை நடவடிக்கையை வழிநடாத்திய சரத் பொன்சேகா உட்பட இரு நூறு படையினர் படுகாயமடைந்தனர். படையினரின் இரு முதன்மைப் போர் டாங்கிகள் தாக்கியழிக்கப்பட்டன. பெருமளவான ஆயுதங்கள், வெடிபொருட்கள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன. இந்த முறியடிப்புத் தாக்குதலில் கிளிநொச்சி கோட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் நரேஸ் உட்பட 80 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். அவர்களின் விபரம் வருமாறு லெப்.கேணல் நாயகன் (நரேஸ்) (சிங்கராசா அருள்நாயகம் - முல்லைத்தீவு) மேஜர் துஸ்யந்தன் (தர்மலிங்கம் ஜெயக்குமார் - முல்லைத்தீவு) மேஜர் உதயகுமார் (கிச்சான்) (சீமான்பிள்ளை கிறிஸ்ரி - மன்னார்) மேஜர் செந்தில் (அந்தோனிப்பிள்ளை பத்மநாதன் - மன்னார்) மேஜர் செல்வம் (சோமு முருகேஸ் - மன்னார்) மேஜர் யாழிசை (மனோ) (திருலோகசிங்கம் செல்வராணி - யாழ்ப்பாணம்) மேஜர் சுகன்யா (நடராசா சுபாசினி - யாழ்ப்பாணம்) மேஜர் செந்தூரன் (பிறேம்நாத்) (சிதம்பரப்பிள்ளை சிவரூபன் - யாழ்ப்பாணம்) மேஜர் குமரன் (மணியம் சிறிசிவநாதன் - யாழ்ப்பாணம்) கப்டன் நகுலன் (நாகமணி கேதீஸ்வரன் - மன்னார்) கப்டன் உதயசீலன் (டென்சன்) (கணபதிப்பிள்ளை ஜெகதீஸ்வரன் - மன்னார்) கப்டன் பொன்னன் (சிறிகாந்தன்) (நாகலிங்கம் சுரேந்திரன் - மட்டக்களப்பு) கப்டன் மருத்துவன் (லுக்காஸ்) (சாமுவேல் செல்வானந்தன் - மன்னார்) கப்டன் கருணா (சர்மிளன்) (அருள்நேசன் கின்சிலி - மன்னார்) கப்டன் கல்யாணி (தர்மலிங்கம் ரேணுகாதேவி - திருகோணமலை) கப்டன் அன்பழகி (அபி) (சபாபதி இலட்சுமி - திருகோணமலை) கப்டன் குயிலி (சுதா) (இராசேந்திரம் இன்பவதினி - மட்டக்களப்பு) கப்டன் சேரன் (ஈசன்) (நடராஜா சர்வேஸ்வரன் - யாழ்ப்பாணம்) கப்டன் பிரதீபன் (கந்தசாமி மகிந்தன் - யாழ்ப்பாணம்) கப்டன் சுதர்சன் (செல்லத்துரை ஜெயசீலன் - திருகோணமலை) கப்டன் சத்தியன் (சிவஞானம் ரமேஸ் - முல்லைத்தீவு) கப்டன் தமிழ்மறவன் (கல்கத்) (ஆறுமுகம் காண்டீபன் - முல்லைத்தீவு) கப்டன் முகிலன் (வினோ) (சூரியகாந்தி சதாசிவம் - வவுனியா) கப்டன் கதிர் (கீதன்) (இராமையா பாஸ்கரன் - திருகோணமலை) கப்டன் மோகனரூபன் (சாந்தன்) (தங்கவேல் ராதாமோகன் - யாழ்ப்பாணம்) கப்டன் செந்தூரன் (புலோமின்) (மரியாம்பிள்ளை கமிலன் - மன்னார்) கப்டன் செம்பிறை (சௌமி) (வல்லிபுரம் நளினி - வவுனியா) கப்டன் வினோதன் (நாகலிங்கம் உதயகுமார் - கிளிநொச்சி) லெப்டினன்ட் சசிதரன் (வேலாயுதம் மகேந்திரன் - வவுனியா) லெப்டினன்ட் மகேந்திரன் (மகேஸ்) (கந்தப்பிள்ளை விஜிதரன் - முல்லைத்தீவு) லெப்டினன்ட் சீலன் (சலீம்) (தர்மகுலசிங்கம் சுந்தரராஜன் - முல்லைத்தீவு) லெப்டினன்ட் சங்கர் (கனகரத்தினம் கனகலிங்கம் - வவுனியா) லெப்டினன்ட் ஒப்பிலாமணி (சிவராஜ்) (அந்தோனிப்பிள்ளை செல்லத்துரை - புத்தளம்) லெப்டினன்ட் செல்வன் (கனகரட்ணம் ஜீவரட்ணம் - அவிசாவளை) லெப்டினன்ட் கில்மன் (கிருஸ்ணசாமி சின்னவன் - கண்டி) லெப்டினன்ட் விந்தன் (கந்தையா சிவரூபன் - முல்லைத்தீவு) லெப்டினன்ட் சிவனேசன் (ஆறுமுகம் பிரதீபன் - முல்லைத்தீவு) லெப்டினன்ட் சிவம் (செல்வம் ரவி - மட்டக்களப்பு) லெப்டினன்ட் உமா (அந்தோனிப்பிள்ளை தேவமேகன் - வவுனியா) லெப்டினன்ட் குமணன் (செல்வரட்ணம் குணரட்ணம் - மன்னார்) லெப்டினன்ட் தம்பித்துரை (தாசன் அன்ரன் - மன்னார்) லெப்டினன்ட் சிவன் (பாக்கியராஜா மங்களேஸ்வரன் - மன்னார்) லெப்டினன்ட் சிவானந்தன் (அந்தோனி யூட் - மன்னார்) லெப்டினன்ட் தாரகா (இராமசாமி சந்திரா - வவுனியா) லெப்டினன்ட் கார்வண்ணன் (ரகுநாதன்) (குணரட்ணம் குணராஜ் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இளமுருகன் (ஐயாத்துரை அன்பழகன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஈகவரசன் (தியாகு) (இராசேந்திரன் யோகநாதன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஐயாத்துரை(நியூட்டன்) (வன்னியசிங்கம் விஜயகுமார் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சந்திரன் (அருளப்பு பிலிப்சாள்ஸ் - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் திருவள்ளுவன் (ரகீம்) (சுப்பிரமணியம் கணேசமூர்த்தி - வவுனியா) 2ம் லெப்டினன்ட் நவீனன் (செல்வராசா செல்வேஸ்வரன் - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் மதியழகன் (பசுபதிப்பிள்ளை தயாரஞ்சீதன் - வவுனியா) 2ம் லெப்டினன்ட் நம்பியாண்டான் (செல்லத்துரை பிரபாகரன் - வவுனியா) 2ம் லெப்டினன்ட் அரவிந்தன் (செந்தமிழ்) (வெற்றிவேல் ஞானசேகரம் - வவுனியா) 2ம் லெப்டினன்ட் களப்பாடி (செல்லத்துரை புனிதகுமார் - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் நீதிதேவன் (ஆணுப்பிள்ளை ரகு - மன்னார்) 2ம் லெப்டினன்ட் வேல்விழி (அபிசா) (சூசைகுருஸ் லெனிஸ்கொலஸ்ரிக்கா - மன்னார்) 2ம் லெப்டினன்ட் செல்வம் (தனா) (கிறிஸ்.ரீன் செல்வராணி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சசி (சண்முகநாதன் வசந்தலாவேணி - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் வாசுகி (குருசுமுத்து தேவதிரவியம் - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் சீத்தாலட்சுமி (சுப்பன் முனியம்மா - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் காரணி (துரைச்சாமி லலிதாதேவி - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் மிதுலா (கணபதிப்பிள்ளை மாரிமுத்து - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் நரேந்தினி (அப்பாசாமி அன்னலட்சுமி - கிளிநொச்சி) வீரவேங்கை வீரபாண்டியன் (கந்தசாமி இந்திரகுமார் - முல்லைத்தீவு) வீரவேங்கை முருகவேல் (பெருமாள் கண்ணன் - கிளிநொச்சி) வீரவேங்கை சுரேஸ்குமார் (கதிரேசு சசிக்குமார் - கிளிநொச்சி) வீரவேங்கை செல்வநந்தினி (செல்வராசா சகுந்தலாதேவி - திருகோணமலை) வீரவேங்கை வெங்கடேஸ்வரன் (வடிவேல் சிவகுமார் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை கிட்ணகுமார் (செல்வராஜா சந்திரகுமார் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை ஜெயமதி (கணபதிபிள்ளை சறோசா - கிளிநொச்சி) வீரவேங்கை ஜெனார்த்தினி (சீனிவாசகம் குணவதி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை தட்சாயினி (சங்கரப்பிள்ளை விக்கினேஸ்வரி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை எழிலருவி (அருள்தாஸ் புஸ்பமலர் - கிளிநொச்சி) வீரவேங்கை திருமலர் (யோகராசா கமலேஸ்வரி - திருகோணமலை) வீரவேங்கை சுரபி (முத்துக்குமார் மோகனராணி - கிளிநொச்சி) வீரவேங்கை துவாரகா (நல்லதம்பி கமலா - மட்டக்களப்பு) வீரவேங்கை ரமணி (ஞானப்பிரகாசம் பெனடேற் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை கவிமலர் (நல்லையா சத்தியகலா - கிளிநொச்சி) வீரவேங்கை நவம் (முனீஸ்வரன் தவசீலன் - வவுனியா) இதேநாள் அச்சுவேலி பகுதியூடாக முன்னகர முயன்ற படையினருடனான மோதலில் 2ம் லெப்டினன்ட் இன்பன் (கிட்ணன் ரவிச்சந்திரன் - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் தமிழ்க்கொடி (சிவபாலன்) (பாலசிங்கம் (பக்கிரி) மகேந்திரன் - கண்டி) வீரவேங்கை சதானந்தன் (சதா) (சின்னத்தம்பி சந்திரவடிவேல் - முல்லைத்தீவு) வீரவேங்கை பானுதேவன் (முத்தையா சிவகுமார் - வவுனியா) மட்டக்களப்பு மாவட்டம் மின்வெட்டிகங்கைப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் லெப்டினன்ட் புவனேசலிங்கம் (கணபதிப்பிள்ளை வன்னியசிங்கம் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் ஜேசுதாஸ் (தாமோதரம்பிள்ளை நல்லதம்பி - மட்டக்களப்பு) வீரவேங்கை மனோஜன் (சிவச்சந்திரன் யோகநாதன் - மட்டக்களப்பு) ஆகிய போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
 9. முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலி கப்டன் புலிமகள், கடற்புலி மேஜர் திருமலை, கடற்புலி மேஜர் நல்லமுத்து ஆகியோரினதும் பளையில் காவியமான வீரவேங்கை மயிலரசியினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 23.09.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்கள் மீதான தாக்குதலின்போது கடற்கரும்புலி கப்டன் புலிமகள் (முத்துலிங்கம் யசோதா - உடையார்கட்டு, முல்லைத்தீவு) கடற்புலி மேஜர் திருமலை (உருத்திரசிங்கம் ரவிநந்தன் - ஏழாலை, யாழ்ப்பாணம்) மேஜர் சிவாகரன் (நல்லமுத்து) (கார்த்திகேசு செந்தில்குமார் - பாவற்குளம், வவுனியா) ஆகியோர் வீரச்சாவைத் தழுவினர். இம் மாவீரர்களினதும் இதேநாள் பளைப் பகுதியில் சிறிலங்கா படையினர் பரவலாக மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவைத் தழுவிய வீரவேங்கை மயிலரசி (யோசப் சகாயதர்சினி - சூரியகட்டைக்காடு, மன்னார்) என்ற மாவீரரினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
 10. களுவாஞ்சிக்குடி சிறிலங்கா காவல்துறை நிலையத் தாக்குதலில் காவியமான லெப்.பரமதேவா, வீரவேங்கை ரவி ஆகியோரின் 28ம் ஆண்டு நினைவு நாளும், முல்லைக் கடலில் காவியமான லெப்.கேணல் அருணனின் 14ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். 22.09.1984 அன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது மட்டக்களப்பு மாவட்ட தாக்குதல் படைத் தளபதி லெப்டினன்ட் ராஜா (இராமலிங்கம் பரமதேவா - மட்டக்களப்பு) வீரவேங்கை ரவி (தம்பையா வாமதேவன் - மகிழடித்தீவு, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். 22.09.1998 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் அருணன் (அருணா) (இராசேந்திரம் சசிகரன் - துன்னாலை, யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
 11. காங்கேசன்துறை மற்றும் மாதகல் கடற்பரப்பில் காவியமான நான்கு கடற்கரும்புலிகளினதும் மட்டக்களப்பில் காவியமான மூன்று மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 20.09.1995 அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான தாக்குதலில் கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி (வல்லிபுரம் நகுலேஸ்வரன் - பளை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் சிவன் (சிவா) (கிருஸ்ணபிள்ளை மோகனதாஸ் - மண்டைதீவு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். மாதகல் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் மீதான தாக்குலில் கடற்புலிகளின் முல்லை மாவட்டத் சிறப்புத் தளபதி கடற்கரும்புலி மேஜர் அன்பு (அந்தமான்) (இராமசாமி இராஜ்பவான் - அல்வாய், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் செவ்வானம் (கிருஸ்ணபிள்ளை சுமதி - மூளாய், யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டம் மங்களஓயா பகுதியில் அமைந்திருந்து புளியடி படைமுகாம் மீதான தாக்குதலின்போது மேஜர் வசியராஜன் (குட்டி) (கந்தசாமி நல்லநாதன் - சொறுவில், மட்டக்களப்பு) மேஜர் நவிந்தன் (ராகவன்) (தங்கவேல் சந்திரன் - பெரிய ஊரணி, மட்டக்களப்பு) வீரவேங்கை பாண்டிதரன் (பாண்டியன்) (ஆறுமுகம் ஆனந்தராசா - மொறக்கொட்டஞ்சேனை, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.