
Rajesh
வரையறுக்கப்பட்ட அனுமதி-
Posts
3105 -
Joined
-
Last visited
-
Days Won
11
Rajesh last won the day on June 30 2020
Rajesh had the most liked content!
Profile Information
-
Gender
Male
-
Location
பூவுலகு
-
Interests
எல்லாம்
Recent Profile Visitors
16679 profile views
Rajesh's Achievements
-
ஸ்ரீலங்காவில் கொரோனா பீதி! யாழ். களநிலவரம் என்ன? நேரடி ரிப்போர்ட்
Rajesh replied to போல்'s topic in ஊர்ப் புதினம்
-
முதல்ல முஸ்லிம்கள் அடிச்ச காணிக் கொள்ளைகளுக்கு ஆப்பு வரும்!
-
ஆட்சியை மாற்றியே சம்பூரை மீட்டோம் - இரா.சம்பந்தன்
Rajesh replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அடேங்கப்பா யாரிட்டை சொல்லி ஆட்சியை மாத்தினீங்க! இன்னொருக்க ஆட்சியை மாத்தி உங்கட திறமைகளை காட்டுறது! -
ஸ்ரீலங்காவில் கொரோனா பீதி! யாழ். களநிலவரம் என்ன? நேரடி ரிப்போர்ட்
Rajesh replied to போல்'s topic in ஊர்ப் புதினம்
யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா அச்சம்! 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தல் யாழ்ப்பாணத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு சென்று வந்த மூவரின் குடும்பங்களே இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இரண்டு குடும்பங்களும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரு குடும்பமும் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இன்றுவரை 252 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உப்புக்குளம் பகுதியை சேர்ந்த மூன்று குடும்பங்களும் இன்றைய தினம் முதல் எதிர் வரும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/146677?ref=home-imp-parsely -
இன்றும் தமிழ்நாட்டுடன் இணைந்திருக்கும் மதுரையோடு சிங்கள மக்களுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. சுருக்கமாக கூறினால் ஒருவர் தமிழரோ அல்லது சிங்களவரோ எல்லோருக்கும் தமிழ் பெண்ணே தாயாக இருந்திருக்கின்றாள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். நாம் மகாவம்சத்தை நம்பினால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த உண்மை வரலாற்றை பௌத்த குருமார் உட்பட எவராவது மறுப்பார்களா? என கேள்வியும் எழுப்பியுள்ளார். தற்போது ஆலயங்கள் பௌத்த விகாரை என பௌத்த தோர்கள் தெரிவித்து வருவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டனம் தெரிவித்து இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக இலங்கையின் எந்த பகுதி யாருக்கு சொந்தம்? யார் பூர்வீக குடிகள்? என்று சரித்திரம் தெரியாதவர்கள் மாறி மாறி அறிக்கைவிடுகின்றார்கள். ஆனால் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதியிடப்பட்ட மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ (அப்போதைய ஜனாதிபதி) அவர்களுக்கு என்னால் அனுப்பி வைக்கப்பட்ட “நிரந்தர தீர்வு கோரும் ஒரு தேசாபிமானியின் துணிச்சல் மிக்க கோரிக்கை” என்ற தலைப்பைக் கொண்ட கடிதத்தின் ஒரு பகுதியினை கீழே குறிப்பிடுகின்றேன். சிங்கள மக்களின் பூர்வீக தொடர்பு ஜனாதிபதியே நாம் காலவரையறை இன்றி இவ்வாறு செல்லமுடியாது. மேலும் தாமதியாது இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இலங்கையில் வாழும் பல்வேறு சமூகத்தினரும் தம் மத்தியிலுள்ள சந்தேகங்களை களைந்து ஒன்று பட்டு ஒரே தளத்தில் நிரந்தரமான ஒரு தீர்வுக்கு ஒத்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் வாழும் இரு பெரும்பான்மை சமூகத்தினர் நீண்ட காலமாக ஒருவர் மீது ஒருவர் கொண்ட அவநம்பிக்கை வளர்ந்தமைக்கு முக்கிய காரணம் எமது நாட்டின் வரலாற்றில் நடந்தேறிய சில முக்கிய சம்பவங்கள் பற்றி அறிந்திருக்காமையே. தன்னுடைய விளைவு ஒரு குழுவினர் மற்றய குழுவினரை சந்தேக கண்கொண்டு பார்ப்பதே நீண்டகாலமாக நடந்து வருகின்றது. இந்த நாட்டில் சனத்தொகையில் எத்தனை வீதத்தினர் தமிழ், சிங்கள மக்களின் பூர்விக உறவு பற்றி தெரிந்து வைத்திருக்கின்றனர்? எம்மில் அனேகருக்கு தெரிந்தவகையில் விஜயன் என்ற இளவரசன் பாண்டிய நாட்டு இளவரசியை மணமுடித்ததும், அதே போன்று அவனது தோழர்கள் 700 பேருக்கு அவரவர் தகுதிக்கு பொருத்தமான பெண்களை பாண்டிய நாட்டு மன்னன் திருமணம் முடித்து அனுப்பிவைத்ததும் மட்டுமே. ஆனால் சிங்கள மக்களின் பூர்வீக வரலாற்றை எடுத்துக் கூறம் 'மகாவம்சம்' என்ற புத்தகத்தில் 7ம் அத்தியாயத்தின் ஒரு பகுதியை கீழே தருகின்றேன். 'பாண்டிய மன்னன் தனது மகளாகிய அரசகுமாரியையும், அவளுக்கு உரித்தான ஆபரணங்கள், அவர்களுக்கு தேவையான பல்வேறுபட்ட பொருட்கள், விஜயனின் தோழர்களின் தகுதிக்கேற்ப தெரிவு செய்யப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நட்ட ஈட்டை கொடுத்து அழைக்கப்பட்ட பெண்கள், யானைகள், வாகனங்கள், அரசருக்குரிய தரமான பொருட்கள், பல்வேறு கைவினை கலைஞர்கள், 18 வகையான தொழில் புரியும் ,னக் குழுக்களைச் சேர்ந்த 1000 குடும்பத்துடன் ஒரு கடிதத்தையும் மன்னருக்கு அனுப்பியிருந்தார். இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களோடு தமக்குள்ள தொப்புள்கொடி உறவுபற்றி பிரமாதமாக பேசுவதனைப் போன்று, இன்றும் தமிழ்நாட்டுடன் இணைந்திருக்கும் மதுரையோடு சிங்கள மக்களுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. சுருக்கமாக கூறினால் ஒருவர் தமிழரோ அல்லது சிங்களவரோ எல்லோருக்கும் தமிழ் பெண்ணே தாயாக இருந்திருக்கின்றாள். நாம் மகாவம்சத்தை நம்பினால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது https://www.ibctamil.com/srilanka/80/146662
-
அபிவிருத்திக்காக நாங்கள் செயற்பட வேண்டு மென்பதற்கு முற்று முழுதாக நான் இணங்குகிறேன். அரசில் தீர்வொன்று எப்பொழுது வருமென சொல்ல முடியாது. ஜனநாயக சூழலில் காத்திருந்த பேச்சுவார்த்தை மூலம்தான் பெற முடியும். போர்ச்சூழல் என்றால் அடித்து பறிக்கலாம். இது அப்படியல்ல. அதற்கு எவ்வளவு காலம் எடுக்குமென சொல்ல முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், அரசாங்கத்துடன் இணைவதா இல்லையா என்ற தீர்மானம் பின்னர் எடுக்கப்படுவதாக இருந்தாலும், எற்கனவே சில தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துகிறோம். வடக்கு கிழக்கிற்கான மாற்று பொருளாதார நிறுவனமொன்றை ஏற்படுத்தும் முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. எப்படியான பாத்திரத்தை நாங்கள் வகிக்கப் போகிறோம் என்பது இப்பொழுது தெரியாவிட்டாலும், எங்களிற்கு தெரிந்த ஒன்று, நாங்கள் பலமான ஒரு அணியாக நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் அப்பொழுது அரசிடம் அமைச்சர்களை கூட எதிர்பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா வேட்பாளர்களுக்கு, மக்கள் அதிருப்தி வெளியிடும் வகையில், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான கருத்துக்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது சுமந்திரன் வெளியிட்டு வரும் இந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய மக்கள் சந்திப்பில் அமைச்சுப் பதவி எதிர் காலத்தில் பெறுவது கட்டாயம் என்பதை மிகவும் லோஜிக்காக சுமந்திரன் கூறுவதற்கான காரணம் இவை தொடர்பில் ஏதாவது சர்ச்சைகள் ஏற்பட்டால் அதன் அர்த்தத்தை அப்படியே மற்றி கூறுவதற்கு ஏதுவாகவே தனது கருத்தை முன்வைத்துள்ளார். இது குறித்து கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், வருகின்ற அரசுடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் தமிழர்களின் எதிர்கால நிரந்தரத்த தீர்வு குறித்த மாத்திரமே நாங்கள் பேச்சுவார்த்தைகளை கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் முரண்பாடை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் தாம் கண்காணிப்பதாகவும், மேலும் சுமந்திரன் தீர்வு வருவதற்கு இடையில் அபிவிருத்திக்காக அமைச்சுப் பதவிகளை பெறலாம் எனும் கருத்துப் பட கருத்துக்ககை வெளியிட்டுள்ளமைக்கு கண்டனங்களையும் தெரிவித்துள்ளார். https://www.tamilwin.com/srilanka/01/250691?ref=imp-news