Rajesh

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,899
 • Joined

 • Days Won

  9

Everything posted by Rajesh

 1. ஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள திடீர் தீர்மானம்? நாடு முழுவதும் வார இறுதியில் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் இந்த வாரம் முதல் அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. வார இறுதி நாட்களில் மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இதுவரை வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி வந்தது. எனினும் கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவதால், வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்த அமுல்படுத்தும் தேவையில்லை என பலர் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் பொசோன் போயா தினத்தை முன்னிட்டு மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்க எதிர்வரும் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் மாலை முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/144520
 2. நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயக வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக அமையும் – முன்னாள் சபாநாயகர் In இலங்கை June 2, 2020 9:43 am GMT 0 Comments 1227 by : Jeyachandran Vithushan பொதுத்தேர்தல் திகதியை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிப்பது தொடர்பான தீர்ப்பு இலங்கையின் ஜனநாயக வரலாற்றில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமையும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதா, இல்லையா என்ற தீர்மானமும் இன்னமும் இழுபறி நிலையிலுள்ள நிலையில் டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு சுமார் மூன்று மாதங்கள் கடந்திருக்கிறது. அரசியலமைப்பின் 70 ஆவது பிரிவு இன்னமும் கேள்விக்குறியான நிலையிலேயே இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். “இவ்விடயம் தொடர்பில் தற்போது நீதிமன்றம் ஆராய்ந்து வருகின்றது. அதற்கு முழுமையாக மதிப்பளிக்கும் அதேவேளை, இலங்கையின் ஜனநாயக வரலாற்றில் மிகமுக்கிய சந்தர்ப்பமொன்றாக அமையவிருக்கும் இந்தத் தீர்ப்பிற்காக நாம் காத்திருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/நீதிமன்ற-தீர்ப்பு-ஜனநாயக/
 3. விடுதலைப் புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் - இன்றும் அகழ்வுப்பணி கிளிநொச்சி - முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வு இன்றைய தினம் இடம் பெற்றது. கிளிநொச்சி - பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் கடந்த 22 ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் விடுதலைப்புலிகளின் சீருடைகளுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதற்கமைய கடந்த 26 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த. சரவணராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு விடுதலைப் புலிகளின் சீருடையுடனான மனித எச்சங்கள் மற்றும் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டன. இந்த நிலையில் இன்றையதினம் இரண்டாம் கட்ட அகழ்வு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் இடம் பெற்றது.இன்றைய தினமும் மகசின் 02, வெடிக்கும் தோ 34, வெடித்த கப் 6, சைநட் 1 , தகடு 1 பச்சை இராணுவ சீருடையுடனான மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டன. குறித்த அகழ்வு தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வு எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற உள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/144524
 4. அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டது விடுமுறை எதிர்வரும் 4 ஆம் திகதி வியாழக்கிழமை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவித்துள்ளது அரசாங்கம். பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 4 ஆம் திகதி நாடு பூராகவும் அமுலுக்கு வரும் வகையில் ஊடரங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/144527
 5. சொறிலங்கா போர்குற்றவாளிகள் கோவிட் வைரஸை வெற்றிகரமா கட்டுப்படுத்தியபடியா மனித உரிமை பிரச்சினை ஐநாவில் எழாமல் இருக்க எலிக்காச்சலும் டெங்கும் உதவிக்கு விரைந்துள்ளன.
 6. ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி எதிர்வரும் 10 ம் திகதியின் பின்னர் புகையிரதங்களில் பயணிப்பதற்கான முன்பதிவு அவசியமில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரம் புகையிரதத்தில் பயணிப்பதற்கென சுமார் 21 ஆயிரம் பேர் முன்பதிவுகளை மேற்கொண்டிருந்தனர். எனினும் அவர்களில் 446 பேர் மாத்திரமே பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் 10 ம் திகதியின் பின்னர் அரச மற்றும் தனியார் பணியாளர்கள் முன் பதிவுகளை செய்வது அவசியமில்லையென புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/144530
 7. In இலங்கை June 2, 2020 10:50 am GMT 0 Comments 1135 by : Yuganthini முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தம்மிடம் கப்பம் கோரியதாக அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஆணைக்குழுவில் நேற்று (திங்கட்கிழமை) முன்னிலையாகி சாட்சியம் வழங்கியிருந்தார். அதன்பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ரவீந்திர விஜேகுணரட்ன என்னிடம் மறைமுகமாக கப்பம் கோரினார். அத்துடன் இரண்டு பேரை ஆயுதங்களுடன் அனுப்பி என்னை கொலை செய்யவும் முயற்சித்திருந்தார். மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரவீந்திரவின் பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை அவர் ஆயுதங்களுடன் வீட்டுக்கு அருகாமையில் அனுப்பி வைத்திருந்தார். இதன்போது, என்னிடம் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருந்த ஒரே காரணத்தனால் நான் உயிர் தப்பிக்கொண்டேன். குறித்த சம்பவம் தொடர்பாக மிரிஹான பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/முன்னாள்-கடற்படைத்-தளபதி/
 8. அதாவது 21,000 ஆவணங்களையும் படிக்காம கையெழுத்து போட்டதால அந்த 21,000 ஆவணங்களும் சட்டவலுவற்றது என்கிறார் கைநாட்டு மைத்திரி.
 9. கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து தற்காலிக குடியிருப்பாளர்களும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி (மேற்கு மாகாணம்) தேசபந்து தென்னக்கூன் தெரிவித்தார். "வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்கள் இல்லாதவர்கள் காவல்துறையில் பதிவு செய்ய வேண்டும்" என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.. கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வசிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்கள் குறித்த தரவு தளத்தை பொலிஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கி பராமரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். "சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள், போதைப்பொருள், பாதாள உலக செயற்பாடுகளை அடையாளம் காணவும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த நடைமுறை அதிகாரிகளுக்கு பயனளிக்கும்" என்று அவர் கூறினார். முதல் கட்டமாக கொழும்பில் 13 பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 40,000 தற்காலிக குடியிருப்பாளர்களின் தகவல்களை பொலிஸார் சேகரித்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/144458
 10. இதை சிவமோகன் கோட்டில் வழக்கு தொடுத்து கேட்கலாமே! இப்ப சிவமோகன் தேர்தல் நாடகமாடும் இந்த அறிக்கை அரசியலில் கொஞ்ச நாளாகவே மும்மரம்.
 11. சுமந்திரனின் சுயரூபத்தை படத்தின் மூலம் தத்ரூபமாக காட்டியுள்ளனர்.
 12. பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் -கல்வி அமைச்சு அனுப்பியுள்ள ஆலோசனை கொரோனா அச்சுறுத்லை அடுத்து மூப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்ததன் பின்னர் பின்பற்றவேண்டிய தகுந்த வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. இது தொடர்பிலான ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிருபம், மாகாண மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் சித்ரானந்த தெரிவித்துள்ளார். மாணவர்களின் எண்ணிக்கை, சுகாதார நிலைமை மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய குறித்த வழிகாட்டலை தயாரிப்பது அவசியமாகும். மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/144404?ref=imp-news
 13. யாழ் - கதிர்காமம் பாதயாத்திரை கைவிடப்பட்டது யாழ்.கதிர்காம பாதயாத்திரை கைவிடப்பட்டுள்ளதாக பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சாமி தெரிவித்தார். வியாழனன்று யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் விசேட பூஜையுடன் வேல்சாமி தலைமையில் பாதயாத்திரை ஆரம்பமானது. எனினும் மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம் கைதடிசிவன் ஆலயத்தைச் சென்றடைந்ததும் கைவிட நேரிட்டது என குறிப்பிட்டுள்ளர். கொரோனோ வைரஸ் தாக்கத்தினால், இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்ததாக பாதயாத்திரைக்கு தலைமை தாங்கி இருந்த சி.ஜெயசங்கரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/144406
 14. வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை தடுக்க அண்ணா பல்கலைக்கழகம் போட்டுள்ள திட்டம் டிரோன் உதவியுடன், வியூகம் வகுத்து வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று இந்தியாவை ஒருபுறம் தாக்கிவரும் நிலையில், உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உட்பட சில மாநிலங்களில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து கபளகரம் செய்து வருகிறது. ‘லோக்கஸ்ட்’ வகையான இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் எமன், ஈரான், பாகிஸ்தான் நாடுகள் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து இருக்கிறது. பசுமையான இடங்களை நோக்கி படையெடுக்கும் இந்த வெட்டுக்கிளிகள் கோடிக்கணக்கில் புகுந்து, நாசம் செய்கிறது. இதுவரை இந்தியாவின் 41 மாவட்டங்களின் விளைநிலங்களை சூறையாடியுள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று வேளாண்துறை சொல்லி இருந்த நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி மாவட்டங்களின் சில இடங்களில் கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் இருந்ததை பார்த்து விவசாயிகளும், மக்களும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இதனை ஆய்வுசெய்த வேளாண்துறை அதிகாரிகள், விவசாய நிலங்களை சூறையாடும் ‘லோக்கஸ்ட்’ வகை வெட்டுக்கிளிகள் இல்லை என்றும், சாதாரண வகை வெட்டுக்கிளிகள்தான் என்றும் தெரிவித்துள்ளனர். இது பெரும்பாலும் எருக்கஞ்செடிகளில் மட்டும்தான் காணப்படும் எனவும் கூறினர். இந்தநிலையில், தமிழகத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்தால் அதனை முறியடிப்பதற்கு ஏதுவாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் வானூர்தி துறை ஆயத்தமாகி வருகிறது. வானூர்தி துறையின் இயக்குனர் செந்தில்குமார் தலைமையில், மூத்த விஞ்ஞானி வசந்த்ராஜ் உள்பட சுமார் 80 பேர் இதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளனர். https://www.ibctamil.com/india/80/144407
 15. நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் In இலங்கை May 31, 2020 10:51 am GMT 0 Comments 1591 by : Dhackshala மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடை பெற்றுவருகின்றன. அகில இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் அமைச்சர் தொண்டமானின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியதுடன், அவரின் ஆத்மா சாந்தி வேண்டி விசேட பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் என 500 பேர் வரையில் மைதானத்தில் குழுமியுள்ளனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை சற்று முன்னர் நோர்வூட் மைதானத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் கொண்டுசெல்லப்பட்டிருந்தது. இந்த இறுதிக்கிரியைகளுக்காக நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் பரவல் மற்றும் பாதுகாப்பு ஆகியன கருத்திற்கொண்டு சுகாதாரப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோர் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மைதானத்தின் உள்ளே செல்லும் ஒவ்வொருவரும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உடல்வெப்பம் அளவிடும் கருவியின் மூலம் உடல்வெப்பம் அளவிடப்பட்ட பின்னரே மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறுதிக்கிரியைகளில் பங்கெடுக்கும் ஒவ்வொரு நபரும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு பொலிஸார் மற்றும் சுகாதாரப்பிரிவினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால் வாகனங்கள் கூட்டம் கூட்டமாக வருவதை பாதுகாப்பு பிரிவினர் தடைசெய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நோர்வூட்-விளையாட்டு-மைதா/
 16. சிங்களவன் எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி என்ட கோதாவில் இங்கு முழுமையாக சிங்களவனை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளீர்கள். யாழ் நூலக எரிப்புக்குள் கறுப்பு சட்டைக்காரர்களை தேவையில்லாமல் இழுத்து சிங்களவனை காப்பாற்ற நினைப்பதில் ஏதாவது லாபம் இருக்குமோ? இதுவொன்றும் புதுசில்லையே!
 17. நன்றாக தெரிந்த உண்மையை பலவீனப்படுத்தும் வகையில் அதிகப்பிரசங்கி தனமா சிந்திச்சு எரித்த சிங்களவனை காப்பாற்றுவதை விட புதுசா சாதிக்க போவது ஒன்டுமில்லை.
 18. ஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி In இலங்கை May 31, 2020 11:21 am GMT 0 Comments 1046 by : Jeyachandran Vithushan ஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் ஹோட்டல்களில் மூன்றில் ஒரு பங்குடையவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குள் 1.5 மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை சுற்றுலாவை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து சுகாதார அதிகாரிகள் அமைச்சிற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி மேலும் தெரிவித்தார். அந்தவகையில் ஹோட்டல் ஊழியர்கள், பயண நிறுவனங்கள், சுற்றுலா முகவர் மற்றும் சுற்றுலாவைச் சார்ந்த மற்றவர்கள் இந்த கொடுப்பனவைப் பெறுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். http://athavannews.com/ஜூன்-01-முதல்-ஹோட்டல்களில்/
 19. ஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை (01 ) திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிவரை மாத்திரமே அமுலில் இருக்கும். அதேபோன்று, எதிர்வரும் ஜூன் 04 மற்றும் பொசன் நோன்மதி தினமான 05 ஆம் திகதிகளிலும் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைவாக ஜூன் 03 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்கு 06 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிவரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருக்கிறது. நாளை ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 03 ஆம் திகதி புதன்கிழமை வரை வழமைபோன்று தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும். இன்றைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதனால் அனைத்து மாவட்டங்களிலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்து நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. வரும் நாட்களில் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தால் இந்த முடிவை நடைமுறைப்படுத்த அரச உயர்பீடம் எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி எதிர்வரும் பொசன் தினத்திற்குப் பின்னர் பெரும்பாலும் ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.ibctamil.com/srilanka/80/144365