Jump to content

Rajesh

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    3105
  • Joined

  • Last visited

  • Days Won

    11

Everything posted by Rajesh

  1. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்வு! In இலங்கை March 20, 2020 11:57 am GMT 0 Comments 1489 by : Litharsan கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை இன்று காலை அறிவிப்பின்படி 65 ஆக அதிகரித்திருந்தது. இந்நிலையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 218 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இலங்கை முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருகிறது. இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். தேவையேற்படும் பட்சத்தில் ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்படுமானால் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கொரோனா-தொற்றுக்குள்ளானவ/
  2. இலங்கையில் தங்கியுள்ள 38,000 வெளிநாட்டவர்களை திருப்பியனுப்ப நடவடிக்கை! இலங்கையில், தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை, மீள அவர்களது நாட்டிற்கு அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் சுமார் 38,000 வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதாகவும் அவர்களை, அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலையடுத்து இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, இலங்கையில் இன்று 7 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மொத்தமாக 59 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கையில்-தங்கியுள்ள-38000-வ/
  3. ஸ்ரீலங்காவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆயிரம் லீட்டர் மூலப்பொருள்! கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கிருமி நாசினிகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான ஆயிரம் லீட்டர் எத்தனோலை சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த எத்தனோல் தொகையை பயன்படுத்தி ஒரு இலட்சத்து இருபதாயிரம் லீட்டர் கிருமி நாசினிகளை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை உள்ளதாகவும் பிரதி கலால் திணைக்கள பணிப்பாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/139347?ref=imp-news
  4. ஸ்ரீலங்காவில் அமைக்கப்பட்டது மற்றுமொரு கொரோனா பரிசோதனை முகாம்! வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்திருப்போரை கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை செய்வதற்கு ஸ்ரீலங்காவின் பூஸா கடற்படை முகாமிலும் கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 43 ஆக அதிகரித்துள்ள நிலையில், வடக்கில் வவுனியாவில் 3 பரிசோதனை முகாம்களும், வைத்தியசாலையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அநுராதபுரம் கந்தக்காட்டுப் பகுதியிலும், மட்டக்களப்பு, தியத்தலாவ இராணுவ முகாம் என்பவற்றிலும் பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டில் அதிகளவில் நோய்த் தொற்று ஏற்படாது இருப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/139264
  5. ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஏனைய ஊழியர்கள் சிலரை தனிமைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றுமட்டும் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரியும் ஒருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஸ்ரீலங்கன்-விமான-சேவையின/
  6. மேலும் 06 பேருக்கு கொரோனா – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு! மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 10 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. http://athavannews.com/மேலும்-06-பேருக்கு-கொரோனா-ப/
  7. கொரோனாவின் பரவலை சிறப்பாக காட்டும் சித்திரம்!
  8. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு : சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மார்ச் மாதம் 10 ஆம் திகதக்கு முன்பாக நாட்டிற்கு வருகை தந்த நபர்களை தடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் நான்காயிரத்து 405 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவர்களுள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 2,769 இலங்கையர்கள் உட்பட 1,120 சீனர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் இதுவரையும் 18 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தாக்கம்-அதி/
  9. வாட்சப்பில் வந்த கவிதை! முஸ்லிம் நண்பா! உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்! ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை! உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்! உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்! முடியவில்லை என்னால்; காரணம் இதே ஒரு மாதத்தில்த்தான் உடும்பனில் அவற்றை நீ வெட்டிவிட்டாயே! நீ மறந்திருப்பாய். என்னால் மறக்கமுடியவில்லை. காரணம் என்னால் நடக்கமுடியவில்லை! நினைவிருக்கிறதா உனக்கு.. நீ மறந்திருப்பாய். நீ கொலைவெறியோடு விரட்டும் போது; ஒரு கையில் குழந்தையும் இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம் வீரமுனை, திராய்க்கேணியில். நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள் உனக்காய் அழமாட்டமா? ஆனால்; மன்னித்துவிடு சகோதரா... இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை! நீ சிங்கள இனதாண்டவத்தில் தான் தத்தழிக்கிறாய் நாங்கள் கண்ணீரில் தத்தளிக்கிறோம்! நாளை இந்த இனகுரோம் வற்றி நீ நலம் பெறுவாய்! உனக்காய் உலகமே வரும்! குற்றுயிராய் நந்திக்கடலில் மூழ்கியபோது; எனக்காய் யாரும் வரவும் இல்லை நீ வராட்டியும் பரவால்லை பால்சோறு கொடுத்து கொண்டாடிக்க தேவையில்லை! முஸ்லிம் சகோதரா! உனக்காக நான் அழுவதற்கு தயார் ஆனால் என்னிடம் கண்ணீர் கைவசம் இல்லை. கொத்துக்கொத்தாய்.. பூவும் பிஞ்சுமாய்... குஞ்சு குருமனாய்... குடல் கிழிந்து... சதை கிழிந்து... வயிறொட்டி... உயிரற்ற பிண்டங்களையாய்... உணர்வற்ற பூச்சிகளாய்... இதே ஒரு மாதத்தில்தான் .... வானம் அதிர குழறினோம்!! உண்மையை சொல்லு உனக்கு கேட்டதா? இல்லையா?? நீயோ சிங்களத்தின் போர்க்குற்றத்திற்கு துணை போனாய். எனக்காய் நீ ஒரு கரம் கூட நீட்டவில்லையே! எனக்காய் ஒரு துளி கண்ணீர் கூட விடவில்லையே! எனக்காய் ஒரு குரல் கூட கிழக்கு முஸ்லிம்களிடம் கேட்கவேயில்லையே!!! உனக்கும் எனக்குமா போர் நடந்தது? இல்லையே!!! எதற்காக மெளனமாக இருந்தாய்? ஏன் திரும்பி நடந்தாய்? போர் உங்கள் முன்னால்... எங்களை; கடித்துக்குதறி... கைகளை பின்னே கட்டி.. கறுப்புத்துணியால் கண்களை மூடி.. முதுகில் உதைத்து பிடரியில் அடித்து... சப்பித்துப்பி... தின்று... கைகழுவிப்போனபோது... அம்பாந்தோட்டையிலும்... அழுத்கமவிலும்... காத்தான்குடியிலும் அக்கரைப்பற்றிலும் நீங்கள் வெடி கொழுத்தி கொண்டாடிக்கொண்டிருந்தீர்கள். பின்னர் ஒரு நாளில் முட்கம்பி வேலிக்குள்... நாங்கள் வானம் அதிர.. தொண்டை கிழிய... குழறிக்கொண்டிருந்தோம். நீங்கள் கொழுத்தி கொண்டாடிய "சீனா வெடிகளில்" ... எங்களின் கூக்குரல்... உங்களுக்கு கேக்கவேயில்லை! இன்று உனக்காக நான் அழுவதற்கு எனக்கு விருப்பம். ஆனால் என்னிடம் கண்ணீர் கைவசம் இல்லை! போன கிழமைதான்.. லண்டனில் தமிழனை கழுத்தறுப்பன் காட்டிய சிங்களவனுக்கு.. நீ வாழ்த்துகின்றாய். இன்று அழுதுகொண்டிருக்காய். சம்பூரில் தொலைத்த தன் மகனை ... தாயொருத்தி தேடிக்கொண்டிருந்தாள்! நீயோ! மூதூரின் வீதிகளில் "பிறை கொடி சிங்க கொடி கட்டுவதிலும்... உன்னிச்சையில் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டுவதிலும் மும்முரமாக இருந்தாய். கல்முனைக்குடி வீதிகளில்... வெடி கொழுத்துவதிலும்; வெற்றிக்கொண்டாட்டங்களில் "கிரிபத்" தின்பதிலும்... ஆரவாரமாய் இருந்தாய்! நீ மறந்திருப்பாய். ஆனால் நான் மறக்கவில்லை. மறக்கவும் முடியாது! மறக்கவும் கூடாது! உனக்காய் நான் அழவும்.. உனக்காய் என் கரம் நீழவும்.. உனக்காய் நான் ஓடிவரவும்... என்னால் முடியாது. ஏனெனில்; என் கால்களை... என் கைகளை இதே ஒரு மாதத்தில்தான் உடும்பன், வீரமுனை நீ வெட்டி எறிந்தாய். நீ மறந்திருப்பாய்.. ஆனால் நான் மறக்கவில்லை! ஏனெலில் என்னால் நடக்கமுடியவில்லை! முஸ்லிம் நண்பா! உனக்காய் நான் அழ விருப்பம்தான்.. என்னிடம் கண்ணீர் இல்லையே! ஆனால்; உன் துன்பத்தில் நானும் துணையாக வர இனியாவது உன் கரங்களை நீட்டு... காத்திருக்கிறேன்!!!
  10. நன்றி! நன்றி! நன்றி! ஒரு மாதிரி ஒரு பதிவை தரவேற்றியாச்சு!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.