Jump to content

Rajesh

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    3105
  • Joined

  • Last visited

  • Days Won

    11

Everything posted by Rajesh

  1. மேலும் 39 பேருக்கு கொரோனா – ஒரேநாளில் அதிகளவானவர்கள் அடையாளம் In இலங்கை May 26, 2020 4:33 pm GMT 0 Comments 1011 by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1317 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. http://athavannews.com/மேலும்-39-பேருக்கு-கொரோனா-ஒ/
  2. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரிப்பு In இலங்கை May 3, 2020 5:55 pm GMT 0 Comments 1284 by : Benitlas நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 718ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது இதேவேளை, இதுவரையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-47/
  3. சற்று முன்னர் வெளியான அறிக்கை; ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று ஸ்ரீலங்காவில் சற்று முன்னர் மேலும் 3 கொரோனா தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 619 இலிருந்து 622 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை 134 பேர் குணமடைந்துள்ள நிலையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்ரீலங்காவில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தற்போது படிப்படியாக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/142152?ref=imp-news குருநாகலில் 326 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்! In இலங்கை April 29, 2020 8:31 am GMT 0 Comments 1189 by : Benitlas குருநாகலில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 326 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வடமேல் மாகாண சுகாதாரப் பணிமனையின் பணிப்பாளர் என்.பரீட் இதனைத் தெரிவித்துள்ளார். அலவ்வ, பொல்கஹவெல, மடஹபொல, நிக்கவெரட்டிய, கொடவெஹெர, தும்மலசூரிய, உடுபத்தாவ, மாவத்தகம, கல்கமுவ, குளியாப்பிட்டிய, மாஹோ, வாரியப்பொல, பண்டாரகொஸ்வத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் குருநாகல் மாவட்டம் முழுவதும் சுற்றி திரிந்துள்ளார்களென, அவர்களுடன் தொடர்புப்பட்டவர்கள் மூலம் தெரியவந்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் இதுவரை 13 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் இராணுவத்தினர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/குருநாகலில்-326-பேர்-சுய-தனி/
  4. ஸ்ரீலங்காவில் இன்றும் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளான மேலும் 15 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களது எண்ணிக்கை 420 இலிருந்து 435 ஆக அதிகரித்துள்ளது. தற்போதுவரை 116 பேர் குணமடைந்துள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/141892?ref=imp-news UPDATE கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 440 ஆக அதிகரிப்பு In இலங்கை April 25, 2020 2:00 pm GMT 0 Comments 1144 by : Benitlas நாட்டில் மேலும் 05 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 440 ஆக அதிகரித்துள்ளது. http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-32/
  5. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரையில் ஆறு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோன்று இதுவரையில் 100 பேர் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-24/
  6. ஸ்ரீலங்காவில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு வரை 217ஆக இருந்த எண்ணிக்கை இன்று காலை 218ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/141169
  7. சற்று முன்னர் வெளியான அறிக்கை! மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று இலங்கையில் மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 56 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ள நிலையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/141090
  8. அறிவுறுத்தல்களை பின்பற்றாத அக்குறணை வாசிகள் புனானைக்கு அனுப்பி வைப்பு! In இலங்கை April 5, 2020 6:33 am GMT 0 Comments 1168 by : Benitlas சுய தனிமைப்படுத்தல் உத்தரவுகளை பின்பற்றாத ஒரு குழுவினர் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அக்குறணை பகுதியினைச் சேர்ந்த 144 பேரே இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களுக்கே ஆரம்பத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும், சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக, இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்கருதி அவதானத்துடன் செயற்பட வேண்டியது அனைத்து மக்களினதும் கடமை என்பதனை நாம் இந்த இடத்தில் ஒருதடவை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். http://athavannews.com/அறிவுறுத்தல்களை-பின்பற்/
  9. வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா இல்லை! – அறிக்கை வெளியானது In இலங்கை April 2, 2020 11:25 am GMT 0 Comments 1032 by : Litharsan வவுனியா, கற்குழியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் அவர் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் நேற்று காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அவர் மரணமடைந்திருந்தார். இதேவேளை இந்தப் பெண், கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் அவருக்கு கொரோனோ வைரஸ் தொற்றவில்லை என்று வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே மரணித்ததாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவத்தில் வவுனியா கற்குழி பகுதியை சேரந்த 56 வயதுடைய அருட்செல்வன் கலாராணி என்பவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/வவுனியாவில்-உயிரிழந்த-ப-2/
  10. அத்தியாவசிய தேவைகளுக்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் மக்கள் தகவல்களை தெரிவிக்கவும் தகவல் அறிந்து கொள்ளவும் “அத்தியாவசிய சேவை ஜனாதிபதி பணிக்குழு”வினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின் தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் வழிநடாத்தல் மத்திய நிலையம் அலரி மாளிகையில் நிறுவப்பட்டுள்ளது. பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக ஜனாதிபதி செயலணியின் வழிநடாத்தல் மத்திய நிலையத்தினை மக்கள் தொடர்புகொள்ள முடியும். தொலைபேசி இலக்கங்கள் - 0114354854, 0114733600 நேரடி தொலைபேசி இலக்கங்கள் - 0113456200, 0113456201, 0113456202, 0113456203, 0113456204 பெக்ஸ் இலக்கங்கள் - 0112333066 0114354882 மின்னஞ்சல் முகவரி - ptf@pmoffice.gov.lk https://www.ibctamil.com/srilanka/80/140035
  11. ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது!! இரண்டாம் இணைப்பு தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி ஸ்ரீலங்காவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாம் இணைப்பு ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 107 ஆக உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா அறிகுறி இருப்பவர்கள் மருத்துவமனைக்கு வருமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் 106 ஆக இருந்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை தற்போது 107 ஆக அதிகரித்திருக்கிறது. இதேவேளை, கொரோனா தொற்று தொடர்பில் பொது மக்கள் விழிப்பாகவும் சுகாதாரத்துடனும் செயல்படுமாறும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/140021?ref=imp-news
  12. அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் இரத்து! In இலங்கை March 27, 2020 2:20 am GMT 0 Comments 1027 by : Benitlas அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபரினால் இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி வரையில் இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். http://athavannews.com/அனைத்து-பொலிஸ்-உத்தியோகத/
  13. அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள்...! கொவிட்-19 தொற்றினால் அதிகம் பாதிக்கப்படும் வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமுலாக்கப்பட்டுள்ள உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை நாளை காலை 6 மணிக்கு தளர்த்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டது. எனினும், நிலவும் சூழ்நிலையை ஆராய்ந்ததன் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு மாத்திரம் மறு அறிவித்தல்வரை ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். இந்த மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படுகின்ற ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். இதேநேரம், குறித்த பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது. அந்த பிரதேசங்களில், எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பின்னர் காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம். பிற்பகல் 2 மணிக்கு அந்தப் பகுதிகளில் மீள அமுல்படுத்தப்படும். ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு அழைத்துச் செல்வதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் எந்தவொரு மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுபவர்களுக்கும், சிறு தேயிலை தோட்டம் மற்றும் ஏற்றுமதி பயிர் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அவர்களது பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊடக சேவைகளை முன்னெக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற காலப்பகுதியில் சுகாதாரத் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பொதுமக்களும், விற்பனை நிலையங்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசேட உத்தரவுகளுக்கு அமைய, நாடு முழுவதும் 600 வரையான வீதித்தடைகளை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையிலான மக்கள் போக்குவரத்தை தடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, அபாயகரமான பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பயணிக்க முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளிலும் அத்தியாவசிய மற்றும் அனுமதிக்கப்பட்ட சேவைகளுக்காக மாத்திரமே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்படும். அதன்போது சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையிலும் மெனிங் சந்தையில் பொருட்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.' எனினும் குறித்த சந்தையில் பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/sooriyanfmnews/237297/அதிக-விலையில்-விற்பனை-செய்யப்பட்ட-அத்தியாவசிய-பொருட்கள்
  14. இலங்கையில் ஏப்ரல் 10 வரை ஆபத்தான காலக்கட்டமாக அறிவிப்பு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏப்ரல் 10 வரை ஆபத்தான காலக்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதுவரையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கு தொடரும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபயவுடன் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். புத்தளமும் கொரோனா வைரஸ் தொற்று விடயத்தில் அதி ஆபத்து பிரதேசமாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் நிலைமை கட்டுக்குள் வரும்வரை பொறுமையாக செயற்பட்டால் ஆபத்தில் இருந்து மீளலாம் என்றும் அவர் தெரிவித்தார். https://www.ibctamil.com/srilanka/80/139914?ref=home-imp-parsely
  15. ஸ்ரீலங்காவில் இன்று மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று நோயாளர்கள்! ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஸ்ரீலங்காவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்காவில் ஏற்கனவே 102 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சற்று முன்னர் மேலும் இருவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/139896
  16. பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் கைது! In இலங்கை March 26, 2020 4:08 am GMT 0 Comments 1081 by : Jeyachandran Vithushan பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுலான கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 3 முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் உட்பட 771 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். http://athavannews.com/பொலிஸ்-ஊரடங்குச்-சட்டத்த/
  17. இன்று மாலை 4.30 வரை புதிதாக எந்த தொற்றும் கண்டுபிடிக்கேலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
  18. வவுனியாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலில்! கொரனா வைரஸ்தாக்கம் இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் வவுனியாவில் இதுவரை 208 பேர் வருகை தந்துள்ளதுடன் அவர்களில் 137 பேர் சுய தனிமைபடுத்தப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 104 பேரும் செட்டிகுளம் பிரிவில் 17 பேரும், வவுனியா வடக்கில் 8 பேர் மற்றும் யாழில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்துகொண்ட 8 பேர் உட்பட 137 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதனைவிட வெளிநாட்டில் இருந்து வருகைதந்த விமானபயணிகள் 538 பேர் வவுனியா மாவட்டத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் 212 பேரும், பெரியகட்டு இராணுவமுகாமில் 120 பேரும்,பூவரசங்குளத்தில் 206 பேரும் என 538 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/139808
  19. ஆண்களை அதிகளவில் இலக்கு வைக்கும் கொரோனா! காரணத்தை கண்டறிந்தது ஆய்வுக்குழு ஆண்களிடம் மதுபானம் அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள் அதிகளவில் இருப்பதனால் கொரோனா வைரஸ் ஆண்களை அதிகம் தாக்குவதாக சர்வதேச அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பான ஆய்வுகளை சர்வதேசத்தின் பல நிறுவனங்களும், அமைப்புக்களும் மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களில் 60 வீதமானவர்கள் ஆண்கள் என்பதுடன், இறந்தவர்களில் 70 வீதமானவர்களும் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது. குறித்த ஆய்வின் முடிவுகளின்படி, பெண்களை விட ஆண்கள் மதுபானம் அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள் தான் இதற்கு காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை கொரோனா பாதிப்பு உள்ளான அமெரிக்கர்கள் அதனை மறைப்பதாக அமெரிக்காவின் சீ.என்.என் செய்தி சேவை தெரிவித்துள்ளது. இதனால், காணப்படும் நிலைமை குறித்து உலகளாவிய ரீதியாக புரிந்துக்கொள்ள முடியாமல் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பல உலக நாடுகள் கொரோனா வைரஸ் காரணமாக அரை குறையாகவும் முழுமையாகவும் முடக்கப்பட்டுள்ள நிலையிலும் இவை அனைத்துக்கு சவால் விடுத்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இன்னும் குறிப்பிடத்தக்க காலம் செல்லும் எனவும் நபர்கள் முடிந்தவரை ஒருவருக்கு ஒருவர் இடையிலான இடைவெளிகளை பேண வேண்டியது முக்கியமானது என சுகாதார அதிகாரிகள் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தினால் இலங்கையும், இந்தியாவும் முழுமையாக தமது நாடுகளை முடக்கியிருக்கின்றன. இலங்கையில் தற்போது வரை 102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் 3 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/world/80/139788?ref=ibctamil-recommendation கர்ப்பிணிப்பெண்ணுக்கு கொரோனா: தனியார் வைத்தியசாலைக்கு வைக்கப்பட்டது சீல் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கோவிட் -19 (கொரோனா வைரஸ்) இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து பாணந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, வெளிநாட்டைச் சேர்ந்த உறவினர்கள் கொண்ட குழு பாணந்துறையில் வசித்து வந்த குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து வெளியேறியது. இது குறித்த தகவல்களுக்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள சுகாதார அதிகாரிகள் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று, அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவிட்டனர். அந்த பெண் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை மீறி அப்பகுதியில் பல இடங்களுக்குச் சென்று சில நாட்களுக்கு முன்பு பாணந்துறையில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். கர்ப்பிணிப் பெண் தனது உண்மையான நிலையை மறைத்து கிளினிக்கில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. அதன்படி, பெண் மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்ற பாணந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/139784?ref=home-imp-flag
  20. 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது – சுகாதார அமைச்சு In இலங்கை March 24, 2020 2:39 pm GMT 0 Comments 1023 by : Jeyachandran Vithushan கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் 5 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை இரண்டு நோயாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வௌியேறியுள்ளனர் என்றும் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 229 பேர் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதார மேம்பட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கொழும்பு ஐ.டி.எச்.வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வைத்தியசாலையில் பணியாற்றிய சமூக வைத்திய நிபுணர் ஒருவரே தொற்றுக்குள்ளாகியுள்ளார். http://athavannews.com/102-பேருக்கு-கொரோனா-தொற்று-உ/
  21. மலையக மக்கள் பற்றி எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளும் குரல் எழுப்பாமல் இருக்கிறது கவலையானது. அவங்க ஊரடங்கு தளர்த்தப்பட்ட கொஞ்ச நேரத்தில போதிய உணவுப் பொருட்களை வாங்க முடியவில்லை எனச் சொல்றாங்க, போதிய போக்குவரத்தும் இல்லை. பிரதமருடன் செல்பீ எடுத்துப்போட்டு பிரபல்யமாக நினைக்கும் கபடதாரிகள் அந்தந்த நேரத்துக்குரிய மக்களின் தேவைகளை பேசுறதில்ல.
  22. பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை – அலட்சியமாக இருந்த 15 பேர் கைது In இலங்கை March 23, 2020 4:50 am GMT 0 Comments 1345 by : Jeyachandran Vithushan ஊரடங்கு தளர்த்தப்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை கடைபிடிக்க தவறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களும், கொழும்பு, புத்தளம், கம்பஹா ஆகிய பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்படும்போது பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை விடயங்களை அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தபோதும் அதனை மீறிய 15 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1589 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 3 முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 362 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். http://athavannews.com/பொதுமக்கள்-கட்டாயம்-கடைப/
  23. ஊரடங்கு காலத்தில் 1754 பேர் அதிரடியாக கைது, 477 வாகனங்கள் பறிமுதல்! In இலங்கை March 23, 2020 6:46 am GMT 0 Comments 1031 by : Jeyachandran Vithushan ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறியதற்காக மொத்தம் 1,754 பேர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி உள்ளிட்ட 447 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக விளையாட்டு மைதானங்களில், வாகனங்களில் பயணம் செய்தல், வர்த்தகத்தில் ஈடுபடுவது மற்றும் பொது இடங்களில் மது அருந்திய குற்றச்சாட்டுக்களில் சிலர் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பொலிஸார் ஊரடங்கு உத்தரவின் போது அனைத்து விதிமுறைகளையும் பின்னற்றவும் வீடுகளுக்குள் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். http://athavannews.com/ஊரடங்கு-காலத்தில்-1754-பேர்-அ/
  24. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டாவது கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று என்ற சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டவருக்கு அந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டாவது கொரோனா தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு ரிதிதென்னையில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர் எனவும் இத்தாலியில் இருந்து வந்த நிலையில் அங்கு தங்க வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 55 வயதுடைய நபரே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர் பாணந்துறையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் நேற்று தனிப்மைப்படுத்தல் முகாமில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/139515
  25. நாம் நினைப்பதை விட எமது எதிரி பலசாலியாக இருக்கலாம் – மட்டக்களப்பு வைத்தியர் எச்சரிக்கை! நாம் நினைப்பதை விட எமது எதிரி பலசாலியாக இருக்கலாம் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தைநல மருத்துவ நிபுணர் வைத்தியர் விஷ்ணு சிவபாதம் தெரிவித்துள்ளது. தனது முகப்புத்தகத்தின் ஊடாகவே அவர் இந்த விடயத்தினைக குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று இலங்கையிலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. ஆனால் பொதுமக்களாகிய நாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகின்றது. ஏனென்றால் பொது இடங்களில் கூடும் மக்களின் செயற்பாடுகள் இதை காட்டி நிற்கின்றன. அதைவிடவும் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களினதும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர் உடன் நேரடியாக தொடர்புபட்டவர்களினதும் நடவடிக்கைகள் எம்மை சற்று சிந்திக்க வைத்துள்ளது. சுகாதார அமைச்சுடன் இணைந்து பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் பொலிஸாரின் உதவியுடன் இவர்களை கண்காணித்து வருகின்றனர். ஆனாலும் இந்நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது அவர்களின் இந்த நடவடிக்கையின் செயல்திறன் குறையலாம் என்பது தவிர்க்க முடியாததாகும். இன்று இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸின் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சீனாவை விட அதிகரித்துள்ளது. இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. 1. இத்தாலியின் சனத்தொகையில் 27.8 சத வீதமானோர் 60 வயதை தாண்டியவர்கள் (சீனாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 9.5சத வீதம் மட்டுமே) 2. அதிகரித்துவரும் நோயாளர்களின் எண்ணிக்கையால் வைத்தியசாலைகளும் வைத்தியர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் அதிகரித்த வேலைப்பளுவுடன் உள்ளமை. இலங்கையை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இந்த நோய் தீவிர தன்மையை காட்டும் பொழுது வைத்தியசாலை கட்டமைப்பு செயலிழக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஏனென்றால் ஒரு வைத்திய விடுதியில் உள்ள உத்தியோகத்தருக்கு கொரோனா நோய் உறுதிப்படுத்தப்படும் பொழுது அவருடன் வேலை செய்த அனைவருமே குறைந்தது 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டுவார்கள். அதாவது அந்த வைத்திய விடுதி செயலிழக்கின்றது. இன்று இலங்கையில் இரண்டு வைத்தியர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் பிழையான தகவல்களை வழங்கும் நோயாளர்களே. இலங்கையின் சனத்தொகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12.3 சதவீதமாக இருந்தாலும், கொரோனா நோய் அபரிமிதமாக பரவும் பொழுது அதனால் ஏற்படும் சுகாதார, பொருளாதார, சமூக கட்டமைப்பில் ஏற்படும் தாக்கங்கள் மிக நீண்ட காலத்திற்கு எம்மையும் எமது எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கலாம். அதைவிட இந்த வைரஸினால் எமது பெற்றோர்கள் இறக்கும்பொழுது அவர்களின் இறுதிச் சடங்குகளை நாம் தன்னந்தனியே செய்ய நேரிடலாம். சரி இதை தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம்? அரசாங்கத்தினாலும் சுகாதார அமைசாலும் வழங்கப்படும் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதாவது எந்த காரணத்தைக் கொண்டும் சன நெரிசலை ஏற்படுத்தக்கூடாது. எப்பொழுதுமே மக்களிடமிருந்து ஒரு மீட்டர் தூரத்தை பேணுதல் வேண்டும். வெறுமனவே முகக் கவசங்கள் அணிவதால் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்று நம்ப வேண்டாம். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வைத்தியர்களிடம் கொரோனா தொற்று பற்றிய உங்களது உண்மையை மறைக்க வேண்டாம். (அண்மையில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களும்). வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் கண்டிப்பாக தங்களை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்ளவும். இதுதான் நீங்கள் இப்பொழுது உங்கள் தாய் நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி. இவை நடைபெறுகின்றதா என்பதை அவர்களின் உறவினர்களும் அயலவர்களும் சற்று கண்காணிப்பது சிறந்தது. கொரோனா நோயாளர் உடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் செய்யவேண்டியவை 1. தங்களை தொடர்பு ஏற்படுத்திய நாளிலிருந்து 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ளுதல். இதற்கு உங்கள் வீட்டில் நன்கு காற்றோட்டம் உள்ள ஒரு அறையை பயன்படுத்தலாம். 2. வீட்டிலுள்ள மற்றவர்களுடன் எந்த ஒரு தொடர்பையும் வைக்க வேண்டாம். முடியும் என்றால் தனியான மலசல கூடத்தை பயன்படுத்தவும். அவ்வாறு இல்லையென்றால் நீங்கள் பயன்படுத்திய பின்னர் மலசல கூடத்தை நன்கு சுத்தப்படுத்தவும். 3. குளித்தபின் தனியான துவாயை பயன்படுத்தவும். 4. உங்களது ஆடைகளை பயன்படுத்திய பின்னர் நன்றாக கழுவி வெயிலில் காயவிடவும். உங்களுக்கு கொரோனா நோய்க்குரிய அறிகுறிகள் தோன்றும் பொழுது (வறண்ட இருமல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல்) ஒரு முகக் கவசத்தை அணிந்துகொண்டு தனியான ஒரு வாகனத்தில் வைத்தியசாலைக்கு அறிவித்த பின்னர் கொண்டு செல்லவும். வைத்தியசாலையில் உங்களுக்காக விசேடமாக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு சென்று வைத்தியரை அணுகவும். மூடநம்பிக்கையில் மூழ்கி (பெருங்காயம் அணிவது) எமது எதிரியை குறைத்து மதிப்பிட வேண்டாம். நாம் இவ்வாறு செய்யவில்லை என்றால் கொரோனா தொற்றிலிருந்து எமது நாட்டைப் பாதுகாப்பது சற்று சிக்கலாகிவிடும். எம்மை பெற்று வளர்த்தெடுத்த பெற்றோருக்கு நாங்கள் செய்ய வேண்டியதை கற்பனை செய்து வைத்திருப்போம் அல்லவா? ஆனால் இந்த கொரோனா வைரஸ் எமது அந்த கடமையை இலகுவாக்கி உள்ளது என்றால் நம்புவீர்களா? ஆம், நாம் எமது முதியோருக்கு இப்பொழுது செய்ய வேண்டியதெல்லாம் வீட்டில் ‘சும்மா’ இருப்பதுதான். ஒன்றிணைந்து கொறோனாவை எதிர்ப்போம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/நாம்-நினைப்பதை-விட-எமது-எ/ கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது எப்படி? இலங்கைக்கு சொல்லிகொடுத்தது சீனா தமது நாட்டில் ஊழித்தாண்டவமாடிய கொரோனா வைரஸ் எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பான தமது அனுபவ பகிர்வுகளை சீன சுகாதாரத்துறை நிபுணர்கள் இலங்கையுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் சுகாதாரத்துறை நிபுணர்களுடன் கொரோனா தொடர்பான தமது அனுபவங்களையும், நுட்பங்களையும் வீடியோ கலந்துரையாடல் மூலம் அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். இந்த கலந்துரையாடலில் இலங்கை உள்ளிட்ட 18 தெற்காசிய நாடுகளின் பிரதிநிகள் பங்குபற்றிய அதேவேளை இலங்கை சார்பில் சிரேஷ்ட தொற்றுநோய்த் தடுப்பு வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கலந்துகொண்டார். https://www.ibctamil.com/srilanka/80/139501
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.