இந்தப் பதிவினுடைய தலைப்பு சற்று வித்தியாசமானதாக உணர வைக்கிறது.சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்திலுள்ள ராகல வித்தியாலயத்தில் அதிபராக இருந்த நண்பர் ஒருவருடன் ்அங்கு சென்று கதைத்துக் கொண்டிருந்த போது சற்று தொலைவில் அவரது பாடசாலை ஆசிரியர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.அவரை இதற்கு முன்னர் எங்கோ பார்த்த நினைவு.எனவே அவரையே பார்த்தபடி நான் நிற்க அருகில் வந்த அவ் ஆசிரியர் சிரித்தபடி”கொக்கெண்று நினைத்தாயோ கொங்கணவா’என்று கேட்டார்.மலையகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் இந்த வார்த்தைப்பிரயோகத்தை அன்றே பயன்படுத்தி இருந்தார்.
சட்டி,சருவச்சட்டி என்ற வார்த்தைகள் கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப் படுகிறது.
சும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் என்று தெரியமா என வடிவேல் தனது நகைச்சுவை காட்சியிலேயே சொல்லி இருப்பார்.
இப்படி இருக்கும் போது,
“யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கில்” என இங்கு குறிப்பிடுவதன் மூலம் எதனையோ இவர் விதந்துரைக்க முற்படுவதாகத் தெரிகிறது.