Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நந்தி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  130
 • Joined

 • Last visited

Everything posted by நந்தி

 1. ஆழ்ந்த இரங்கல்கள்.இறுதிக்காலத்தில் சுப்பர் ஸ்டாரைச் சந்திக்க ஆசைப்பட்டதாகவும் அது நிறைவேறவில்லை என்றும் கூறப்படுகிறது.
 2. “யாழ்ப்பாண மருமகன் என்கிறீர்கள்”,தூய தமிழர் இல்லையென நினைக்கிறேன் என்கிறீர்கள்” இரண்டையும் பார்க்கையில் ஒரே குழப்பமாக இருக்கிறதே.
 3. இதை நீங்கள் சொல்லித்தானா மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.நாட்டின் விலைவாசி ரொக்கட் வேகத்தில் பறக்கிது,நாளாந்த உணவுக்கே மக்கள் நாய்படாப்பாடு படுகிறார்கள் .அன்னம் ஒறுத்தால் அனைத்தும் ஒறுக்கும்.வீட்டுக்குள் சுறா வளர்த்து தீனி போடுவது போலல்ல நாட்டை ஆள்வது.அது எல்லாம் அறிவுடன் சம்பந்தப்பட்ட ஆற்றல். .
 4. எளியார்க்கு வலியார் உதவின் வலியார்க்கு தெய்வம் உதவும். மிக்க நன்றிகள் முதல்வரே.
 5. பிரித்தானியா போன்று கனடா பிரதமரும்கூட 20000 ஆப்கான் அகதிகளுக்கு புகலிடம் வழங்க இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார். ஒருவகையில் தலிவான்களின் எதிர்கால உலகமயத்தாக்குதல்களுக்கு இவைகூட உறுதுணையாக அமையலாம்.வேலி ஓணான் வேட்டிக்கு உள்ளே.
 6. தம்பி என்பது தண்ணன் என இருந்திருந்தால் அவரது மனைவியை தண்ணி என அழைத்திருக்கலாம்.ஆனால் அப்படி இல்லையே. அண்ணன்-அண்ணி தண்ணன்-தண்ணி
 7. இருவரும் பண்பானவர்கள் எனினும் உயிர் ஒன்று வதைக்கப்பட்டு அழிந்திருக்கிறதே எப்படி.ஆகவே பண்பில்லாதவர்கள் வேறு சிலர் உங்கள் வீட்டில் உள்ளனர் என்பது உங்கள் வாக்குமூலம் நிரூபணமாகின்றது.அவர்களும் குற்றவாளிகள்,அவர்களை வீட்டில் வைத்திருந்ததால் நீங்களும் குற்றவாளியே.
 8. மலசலத்தையும் மூடிய அறைக்குள்ளேயே போக அனுமதிக்குமாறு மாண்புமிகு ஜனாதிபதியிடம் வேண்டிக்கொள்கின்றேன். அத்துடன் அரசியல்வாதிகளாக இருந்து அதிகம் ஆட்டம்போடுபவர்களுக்கு “ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவா மனிதா”என்ற பாடலை பதிவு செய்து தினமும் காலை மாலை கேட்க ஆவன செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.வொகோம ஸ்துதி ஜனாதிபதிதுமணி.
 9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ கிருபன். நோய் நொடி இன்றி நூறாண்டுகள் மேல் வாழ்க.
 10. உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அமைச்சர் இதுமாதிரியான உத்தியோகம்தான் பார்த்திருக்கிறார் போல.என்ன மனிசன்டா இந்த மனிசன் என்ர அல்லா .
 11. சி.சி.ரி.வி கமராக்கள் வேலை செய்யவில்லையாம் என்றும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.எத்தனை காரணங்கள் குற்றவாளிக்குச் சாதகமாக இருப்பினும் அரசியல் என்ற துரும்புச்சீட்டு அமைச்சர் நானாவிடம் இருக்கு.அத்துடன் 2 கைகளும் இருக்கு,எல்லாத்துக்கும் கை உயர்த்துவன் என வாக்குக்கொடுத்தால் நானாவும் குடும்பமும் சுத்தவாளி,பிள்ளைதான் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டது என்ற தீர்ப்பு வரும்.கவுண்டமணி சொன்னாரே அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று அதுதான் நினைவு வருகிறது.பாவம் அப்பாவிமக்கள். “பேய்கள் ஆட்சி செய்தால், பிணம்தின்னும் சாத்திரங்கள்” மகாகவி பாரதியார்.
 12. எல்லா நாடுகளும்,ஆட்சியாளர்களும் தங்கள்தங்கள் சுயநலன் சார்ந்து சிந்திக்கும் போது இலங்கைத்தமிழரின் நியாயபூர்வ போராட்டத்தைப்பற்றி சார்புநிலையில் செயற்படும் வண்ணம் நாடுகளோ ஆட்சியாளர்களோ இல்லை.அதுமட்டுமன்றி வலையுலகத்தில் இன்றைய இளையசமூகம் வசமாக மாட்டுப்பட்டுள்ளது.அதிலிருந்து வெளியில்வந்து ஒரு திரைப்படத்தின் வழியே கருத்தூட்டம்பெற்று போராடும் பக்குவமும் இல்லை.தமிழகமும் சாதியத்தால் சிதறுண்டுகிடக்கிறது.இந்நிலையில் தாங்கள் கூறும் ஆய்வுக்கருத்துகள் எவ்வாறு அமையும் என்பதைக் காலம்தான் சொல்லும்.
 13. “பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என எம்முன்னோர் கூறியது நினைவு வருகிறது இங்கே.
 14. வாழநினைத்தால் வாழலாம்,வழியா இல்லை பூமியில்.என்ன தலையை கொஞ்சம் பயன்படுத்த வேண்டும்.முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
 15. மேதினியில் உயிர்களது மேன்மை பற்றிப் பேசுகின்ற மேற்பூச்சுப் பூசிய மேலான நாடெல்லாம், காதிருந்தும் செவிடனாக கண்முன்னே இனஅழிவை வாய்மூடிப் பார்த்திருந்த வரலாற்றுத் துயரநாள். பூர்வீக நிலம்தனிலே பூச்சரம் போல்வாழ்ந்த மக்கள் தார்மீக நெறிகளற்று தரக்குறைவாய் அழித்தநாள். கோணிகளை அவிழ்த்துக் குப்பைகளைக்கொட்டுதல்போல் வானிருந்தும் நிலமிருந்தும் வளம் கொழிக்கும்கடலிருந்தும் குண்டுகளைக் கொட்டிக் கொலை புரிந்த கரிநாள் குஞ்சென்றும் கிழவியென்றும் கொஞ்சுமிள நங்கையென்றும் இஞ்சித்தும் இரக்கமின்றி வஞ்சம் கொண்டு அழித்தநாள் மே பதினெட்டு மேதினியில் மனிதத்தின் மேல் விழுந்தது தீட்டு. வா வேள்வித் தீ மூட்டு வந்து அதில் எதிரியை வதைத்து எரியூட்டு.
 16. என்னுடன் பணிபுரியும் ஒரு பணியாளரின் (A)அறையில் அவருடன் தங்கியிருக்கும் ஒரு நபருக்குக் கோரணா தாக்கம் ஏற்பட்டு அவர் தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு அனுப்பப் பட்டுள்ளார்.இதனை இப்பணியாளர் எமக்கு அறிவித்து விட்டு தான் கோவிட் பரிசோதனை செய்துகொண்டு முடிவு வரும்வரை வீட்டில் தங்கிக்கொண்டார். இச்செய்திகளை என்னுடன் பணிபுரியும் இன்னுமொரு பணியாள்(B) தன்னுடைய மனைவியிடம் சொல்லியிருக்கிறார்.உடனே அவருடைய மனைவி நீங்கள் என்னருகே வரக்கூடாது,தனி அறையில் தங்குங்கள் எனப்பலவாறு கதைத்துக்கொண்டு தான் தனிஅறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாராம்.இப்போது அப்பெண் மனநிலை பாதிப்புக்குள்ளாகி,கணவரைப்பற்றியோ மகனைப்பற்றியோ,குடும்பநிலை பற்றியோ சிந்தனை அற்றவராக வைத்தியசிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறாராம் வைத்தியசாலையில் இருவாரங்களாக..இவரும்,இவரது 12வயது மகனும் கஸ்டப்படுகின்றனர்.ஆனால் முதல்பணியாளரின்(A) வைத்திய அறிக்கை எதிர்மறையாக வந்துள்ளது. எல்லாவற்றையும் இல்லாளிடம் எடுத்தியம்பும் கணவன்மாரின் செய்கைபற்றி சற்றுச் சிந்திக்க வேண்டியதாக உள்ளது.
 17. பாடசாலைக்காலத்தில் படித்த ஒரு இலக்கியப்பாடல் நினைவுக்கு வருகிறது.பசிப்பிணியால் வாடிய சத்திமுத்தப்புலவரின் பாடல். இனிய கருத்துச்சுவையும்,உவமைகளும் நிரம்பியது.கவிபாடிப் பொருள்பெற்றுச் செல்ல வந்த கவிஞர் காலதாமதமாவதால் தன்நிலையை தனது இல்லாளுக்குத் தெரிவிப்பதாக இப்பாடல் அமைகிறது. “நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் நீயுநின் பெடையும் தென்றிசைக் குமரியாடி வடதிசைக்கேகுவீராயின் எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு "எங்கோன் மாறன்வழுதி கூடலில் ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளனைக் கண்டனம் எனுமே" என்கிறது அப்பாடல். வரி பொருள் நாராய் நாராய் செங்கால் நாராய் நாரையே நாரையே சிவந்த கால்களை உடைய நாரையே பழம்படு பனையின் கிழங்குபிளந்தன்ன பழங்கள் நிறைந்த பனைமரத்து கிழங்கை பிளந்தது போன்ற பவளக் கூர்வாய் செங்கால்நாராய் பவளம் போல் சிவந்த கூர்மையான அலகை கொண்டசெங்கால் நாரையே நீயும் நின் பேடையும் தென்திசைக் குமரியாடி நீயும் உன் பெட்டையும் தென் திசையில் உள்ள கன்யாகுமரியில்நீராடிய பின் வட திசைக்கு ஏகுவீராயின் வட திசைக்கு திரும்புவீரானால் எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி எங்கள் ஊரில் உள்ள சத்திமுத்த குளத்தில் தங்கி நனைசுவர் கூரை கனைகுரல்பல்லி நனைந்த சுவர்களையும் கூரையையும் கனைக்கும் பல்லிகளும்கொண்ட பாடு பாத்திருக்கும் என்மனைவியை கண்டு வீட்டில் என்னை எதிர்பார்த்திருக்கும் என் மனைவியிடம் எங்கோன் மாறன் வழுதிக்கூடலில் எங்கள் அரசன் மாறன் வழுதி ஆளும் மதுரையில் ஆடையின்றி வாடையில்மெலிந்து குளிர்காலத்தில் சரியான ஆடையில்லாமல் உடல்மெலிந்துபோய் கையது கொண்டு மெய்யதுபொத்தி போர்வை இல்லாததால் கையைக் கொண்டு உடம்பை பொத்தி காலது கொண்டு மேலது தழீஇப் காலைக் கொண்டு என் உடலை தழுவி பேழையில் இருக்கும் பாம்பெனஉயிர்க்கும் பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரைபிடித்து வைத்திருக்கும் ஏழையாளனை கண்டனம் எனமே உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள்!
 18. “இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை” என்று பொய்யாமொழி இதற்கான தீர்வினை அன்றே சொல்லிவிட்டார்.அன்பாக,ஆதரவாக,பண்பாக, பாலியலாக பாட்னரை பார்த்துக்கொள்ளுங்கள். அடுப்பைச்சுற்றும் பூனைபோல் இடுப்பைச்சுற்றிக் கிடப்பாரே.
 19. மாஸ்க் போட்டு மறை உத்தன் முகத்தை என்ற டாஸ்க் போட்டுக் கத்துது மருத்துவத்துறை. ஆனால் இந்த அமைச்சரவை அல்லாவுடைய மாஸ்க்கை அகற்று என்று கத்துது. என்னடா இந்த தர்காவின் புர்காவுக்கு வந்த பர்கா
 20. உண்மைதான் சகோ.மாதா பிதா செய்தது மக்களுக்கு,எங்களின் தமிழ் தலைமைகள் செய்தது எங்களுக்கு.அன்றும் சரி இன்றும்சரி ஏன் என்றும்சரி தமிழ் இனம் இலங்கை நாட்டில் அடி பட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
 21. அறிவாளிகளின் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.சரி அதை இப்போ தரச்சொல்லுங்கோவன்.
 22. எனது வாழ்வில் ஏதாவது ஒரு விடயம் நடக்கக்கூடாது என்றால் என் மனைவியிடம் அவ்விடயம் நடந்தேயாக வேண்டும் என உறுதியாக உரைப்பேன்.அந்த விடயம் நடக்காது.அது போல் வியாழேந்திரனே உங்ளுக்குத் தெரியும் அவர்கள் வரமாட்டார்கள் என்று.பிறகுஎதற்குநேரத்தைவீண்டித்துக்கொண்டு. “வாருங்கள் என்றால் வரமாட்டார்- வரவேண்டாம் என்றால் வந்துவிடுவார்.தாருங்கள் என்றால் தரமாட்டார்-தரவேண்டாமென்றால் தந்துவிடுவார்”
 23. சிரிப்புடன் சிந்தனையையும் விதைத்த ஒரு சிறந்த கலைஞன்.என்ன செய்வது. எந்தத் திறமையும் எமனின் முன் செல்லாது.அவரின் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றேன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.