Jump to content

நந்தி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    186
  • Joined

  • Last visited

Posts posted by நந்தி

  1. 1 hour ago, nunavilan said:

    அவர் யாழ்ப்பாணத்தில் ஊரெழு என்னும் இடத்தை சேர்ந்தவர்.

    “ சிங்கப்பூரில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

    இதில் தமிழரான தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்”….

    இவ்வாறு ஒரு ஊடகச்செய்தி கூறுகிறது.

  2. வாழைமரம் மங்கலத்தின் அடையாளம். அத்துடன் சந்ததி விருத்தியை நீண்டு நிலைத்து வாழ வைப்பது. வாழையடி வாழையாக தொடர்வது. ஆனால் கவிஞருக்கு மரம் என்று அப்பெண்ணைக்கூற மனம் வரவில்லை போலும். மேலும் பரந்த மனப்பாங்கு கூட்டுக்குடும்பப் பெண்ணுக்கு அவசியம் வேண்டும். ஒரு இலை பெரிய பரப்பு இந்த வாழையில்தானே.

  3. 2 hours ago, ஏராளன் said:

    ஹைப்பர் டென்ஷனை கட்டுக்குள் வைக்க உதவும் சில வழிகள்

     

    கணவன்- மனைவி அன்பாகவும், அடிக்கடி அரவணைப்பாகவும் இருப்பது மிக முக்கியம்.

    • Like 1
  4. 6 hours ago, பிழம்பு said:

    பொய்யான விமர்சனங்கள் எழுந்த போது மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம்

    ஓ அப்படியா . அப்படித்தான் இருக்கும். நீங்கள் விட்டுக்கொடுத்து விட்டுத்தான் வெளிக்கிட்ட நீங்கள் என்னப்பு. ஆனால் உலகம் எல்லாம் கதை என்ன தெரியுமோ உங்கள நாட்டை விட்டே மக்கள் விரட்டி விட்டிவிட்டதாக. எப்படியோ விரைவில் உங்கள் நா(கா)ட்டில் மழைதான்.

     

  5. 6 hours ago, தமிழ் சிறி said:

    ஊரில் இருந்து  அகதியாக... கனடா போய், அங்கிருந்து ஊருக்கு  கஞ்சா அனுப்புபவன் 
    எவ்வளவு கேவலம் கெட்ட    மனநிலையில் உள்ளவன் என்று தெரிகின்றது. 😡

    நம்ம ஆட்களே... பணத்துக்காக எவ்வளவு கீழ்த்தரமான வேலைகளை 
    செய்வதை பார்க்க ஆத்திரமாக உள்ளது. 😡 

    அங்குள்ள இளம் சமுதாயத்தை...  கெடுக்க என்றே உள்ள ஈனப்பிறவிகள். 😡

    எங்களின் நிறத்தைக் கண்டாலே அந்த நாடுகளில் அப்படி ஒரு நல்ல எண்ணம் ஏற்கனவே இருக்கிறதாம்.இந்தச் செய்தியையும் அறிந்தான் என்றால் சுப்பர். இனிமேல் ஆத்திரவசரத்துக்குக் கூட ஒரு பொருளை அனுப்புவதென்றால் ? எத்தனை கடவுள் எத்தனை அவதாரம் எடுத்தாலும் எம்மவரைத் திருத்துவது இயலாது.

    • Like 1
  6. 7 hours ago, தமிழ் சிறி said:

     

    புதிய பயணம் ஒன்றை மேற்கொள்ள 76 ஆவது ஆண்டு நிறைவில் ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு

    உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் – ஐ.தே.க நம்பிக்கை!

     

    உண்மைதான் குரங்குகளைக் கடன்களாகத்தனும் நாங்கள் வழங்க ரெடி.

  7. 6 hours ago, தமிழ் சிறி said:

    டக்ளஸ் நெடுந்தீவை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சொல்லி 10 வருசமும்,
    அங்கஜன் யாழ்ப்பாணத்தை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சொல்லி 5 வருசமும் ஆச்சு. 

    மட்டக்களப்பில் சந்திரன்-புத்திரன்-வியாழன் இடையே மும்முனைப் போட்டி, வெந்ததைத் திண்டுவிட்டு விதிவந்தால் சாவோம் என்று திருமலை, அம்பாறையில் ஒரு அப்பாவி.என்னத்த சொல்வது. “விதியே விதியே என் செய்ய நினைத்தாய் இத் தமிழ்ச் சாதியை” என்பதுதான் நினைவில் வருகிறது.

    இலங்கை ஆட்சியாளர்கள் அனைவரையும் ஒரு சொகுசு விமானத்தில் ஏற்றி யாரும் இல்லாத வேற்றுக்கிரகத்தில் மோதி அழித்துவிட வேண்டும்.அந்தச் செய்தி கூட வெளிவராமல் “காணாமல் போனவர்கள்” என முடித்துவிட வேண்டும்.

    • Haha 1
  8. 19 hours ago, ஏராளன் said:

    சுதந்திரமடைந்து 75 ஆவது வருடத்தில் 'தோல்வியடைந்த அரசாக' மாறியுள்ள இலங்கை 

    இதுவும் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லக்கூடிய ஒரு  மாமெரும் வெற்றிதானே. இன்னும் 50 வருடங்களுக்குப் பின்னரும் இதே வாக்கியத்தை இன்னுமொரு ஆட்சியிழந்த சனாதிபதி சொல்லுவார்.ஒரு தமிழனிடம் நாட்டைக் கொடுத்துப் பாருங்கள்.பிறகு சொல்லுங்கள்.

  9. On 13/4/2023 at 12:02, ஏராளன் said:

    எருமைக்குப் புல் பிடுங்கலாம்; பெருமைக்குப் புல் பிடுங்கலாகுமா?

    சரியான கேள்வி.ஆனால் இப்போ எல்லாம் பெருமைக்கு மட்டும்தான் புல் பிடுங்குகிறார்கள். உதாரணம் புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பெற்றோர்கள் படும்பாடு. பிள்ளைக்குச் சோதனையா அல்லது பெற்றோருக்குச் சோதனையா ? ஒன்றுமே புரியலே உலகத்திலே .

    • Like 1
  10. On 13/4/2023 at 11:08, ஏராளன் said:

    யுரியூப்பில் இணைத்து அதன் இணைப்பை இங்கே பகிருங்கள்.

    யுரியூப்பில் இணைத்தால் அதனை மற்றவர்களும் பார்க்க முற்படுவார்களே சகோ.

  11. 4 hours ago, குமாரசாமி said:

     நீங்கள் நந்தினி அக்காவா? :beaming_face_with_smiling_eyes:

    ஐயையோ எப்பிடி இப்பிடி கண்டுபிடிச்சிட்டியல் இவ்வளவு காலமும் கட்டிக்காப்பாத்தின உண்மையை . ‘நுணலும் தம் வாயால் கெடும்” அல்லவா ?

  12. On 12/4/2023 at 01:33, ஏராளன் said:

    வீட்டிற்குள்ளயே இருக்கினமோ? ஆடையால் உடல் முழுவதும் மறைக்கப்படுவதாலும் சூரிய ஒளி பட்டாலும் பயன் இருக்காது தானே.

    ஆடையை கொஞ்சம் அப்பிடி, இப்பிடி போடுவம் என்று வெளிக்கிட்டால் அந்த மனிசன் விடுதில்லை, வேற சோலிக்கு வெளிக்கிடுது.

  13. 15 hours ago, alvayan said:

    இப்போதும் செய்கின்றார்...முசுலிம்களின் ..இல்லாத காணிகளையெல்லாம் தமிழர் பறித்து விட்டினம் என்று சொல்லி கலர் போட்டோக் கொப்பி கொண்டு திரியிறார்..

    உண்மைதான். இவரின் அழகான சில வீடியோக்கள் உள்ளன. என்னால் வீடியோக்களை இங்கு பதிவேற்ற முடியாமலுள்ளதே .

  14. 7 hours ago, colomban said:

    தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி அத்துமீறல் செய்து இனவாதத்தை ஏற்படுத்தக் கூடாது

    இந்த வேலையை இவரும் செய்தவர்தானே.இப்போது வேதம் ஓதுகிறார்.

  15. மேற்படி வினாவை நான் 8/ April இல்  chatbox கேட்டிருந்தேன். சில உறவுகள் பதிலளித்திருந்தார்கள். ஐ என ஒரு தனியான எழுத்து இருக்கும் போது அய் என இரு எழுத்துக்களைச் சேர்த்து எழுதுவது  வலிந்து கட்டாயப்படுத்தி சேர்ப்பது போல் உணர்கிறேன். இது போலவேதான் மையம்-மய்யம்.எழுத்துச் சீர்திருத்தத்திற்காக, எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக என்ற கருத்துக்கள் காரணங்களாக க் கூறப்பட்டாலும் இவ்வாறு எழுதுவதன் மூலம் அவ் எழுத்துக்களை இல்லாமல் செய்ய முடியதுதானே, அவை வேறு சொல்லாக்கத்திற்கு தேவைதானே.

    மையத்தை மய்யம் என எழுதலாம் என்றால் தை என்பதனை தய் என எழுதலாம்தானே.

     

     

     

     

     

     

    • Thanks 1
  16. கால் நூற்றாண்டுகளாய்

    களம் கண்டு-நின்றியங்கும்,

    யாழ் இணையம்- நூறாண்டு

    மேல் உயர வாழ்த்துக்கள் !

     

    மச்சானின் நெல் வயலில்

    மகிழ்ந்திருந்த நெல் மணிகள்,

    கச்சான் காத்தடித்ததனால்

    கதிர் விலகிச் சிதறினவே.

     

    அருகினிலே சில மணிகள்

    ஆழ மண்ணில் சில மணிகள்

    தெருவினிலே சில மணிகள்

    தேசம் விட்டுச் சில மணிகள்.

     

    கலகலத்துச் சிரித்துவிட்டு

    கச்சான் காத்தோய்ந்து போக,

    வெலவெலத்துப் போன மச்சான்

    வெளிப்பட்டான்-செயற்பட்டான்.

     

    பதறிப் போன மச்சானும்

    சிதறிப்போன மணிகளதைக்,

    கதறிக் கொண்டு சேகரித்துக்

    கட்டிச் சேர்த்தான் கோணியிலே.

     

    சிதறிப் போன மணிகளாகச்

    சிறிலங்காத் தமிழர் இன்று.

    கட்டிச் சேர்த்த கோணியாக

    களம் இந்த யாழ் -இங்கு.

     

    ஒன்றாவோம் உரிமைகளை

    வென்றாவோம்.

    நன்றாவோம் நாளை நமது

    என்றாவோம்.!

    • Like 6
    • Thanks 1
  17. சந்தேகத்திற்கிடமானவர்களை காலவரையறையின்றி தடுத்து வைக்க முடியாதென்ற சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.அவ்வாறு தடுத்து வைத்து குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் அவ்வளவு காலத்துக்குமான இழப்பீட்டுத்தொகை வழங்கப்படவேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும்.எப்படியோ இவர்கள் விடுதலை மிக்க மகிழ்ச்சி. இதுபோல் மற்றையோரும் விடுதலையாகி,மகிழ்வாய் வாழ வழி பிறக்கவேண்டும்.

    • Like 1
  18. 7 hours ago, கிருபன் said:

    சந்தேக நபர் தனது முன்னாள் மனைவியை அங்கு சந்தித்துள்ளார்..

    மனைவியைச்சந்தித்த மகிழ்ச்சியில் மனிசன் மற்ற மனிசாளைப் போட்டுத் தள்ளியிருக்கிறார்.வன்முறைதான் இப்போ வாழ்க்கை முறை ஆகிக்கொண்டு போகிறது.ஆழ்ந்த இரங்கல்கள்.

  19. ரணில் ஒரு நரி.எந்தத் தீர்வையும் அவர் வழங்கப்போவதில்லை.காலத்தை இழுத்தடித்து தன் காலத்தைக்கடத்தி செல்லுவார்.

  20. 8 hours ago, கிருபன் said:

    ஆட்சியில் அமர்த்திய மக்களை அன்பாகவும்,அறிவாகவும் அரவணைக்க முடியாதவர்கள்,அயல்நாட்டவனிடம் சென்று அவனின் விலங்குகளை அணைத்துக்கொள்ள வேண்டியதுதான்.காலம் சிறந்த ஆசிரியன்.

    • Like 1
  21. இந்த ஒம்பத்தி தொண்ணூத்தி எட்டுக்கு ஒரே தொணதொணப்புத்தான். நொய் நொய் எண்டபடி.குள்ளநரியன் அள்ளிக் கொடுத்திருப்பான் கள்ளன் இவனுக்குப் பள்ளம் தோண்டச்சொல்லி.ஒருவன் இடையில் நுழைந்து பஞ்சாயத்தைக் குழப்பிவிட்டால் சரிதானே. அதுதான் நடக்கும்.

  22. On 3/11/2022 at 05:22, island said:

    உண்மையில் கல்முனையில் என்ன தான் பிரச்சனை. எனக்கு புரியவில்லை. 🤨

    கல்முனையில் நடப்பது மனித உரிமை மீறல்.பாதிக்கப்படுவது அங்கு வாழும் தமிழர்கள்.அங்கு முஸ்லிம்களுக்கு ஒரு (தெற்கு) பிரதேச செயலகம் உள்ளது.தமிழர்களுக்கு ஒரு(வடக்கு)பிரதேச செயலகம் உள்ளது.முஸ்லிம்கள் தமது தேவைகளை தெற்கு பிரதேச செயலகத்துக்குச்சென்று விரைந்து பூர்த்தி செய்து கொள்ளலாம்.ஆனால் தமிழர்கள் தமது தேவைகளை வடக்கு பிரதேச செயலகத்தினூடாக பூர்த்தி செய்ய முடிவதில்லை,காரணம் வடக்கு பிரதேச செயலகத்திற்கு தனியான கணக்காளர் இல்லை.இதனால் ஆளணி,ஊழியர்கள்,கட்டிடங்கள்,பிரதேச செயலாளர் ஆகியனஇருந்தும் அவர்கள் முஸ்லிம் பிரதேச செயலகத்தையே நாட வேண்டி உள்ளது.இந்த கணக்காளர் நியமிப்பு விடயத்தில் இவர் கரீஷ் எம்.பி கடும் அழுத்தங்களைக் கொடுத்து தடுத்து வருகிறார்.அதனை மீறும் அழவு வலு எமது தமிழர் தரப்புகளுக்கு இல்லாமல் இருக்கிறது.

    • Thanks 1
  23. 20 hours ago, குமாரசாமி said:

    நானும்   சின்னவயதிலை  வெருட்டலுக்கு பொலிடோல் குடிச்சு சாகப்போறன் எண்டுட்டு பூவரசம் மரத்திலை ஏறி ஒளிச்சு மூண்டு மணித்தியால கணக்கிலை  இருந்தனான்.:cool:

    அந்தக்காலத்திலேயே நீங்க அந்த மாதிரித்தான் இருந்திருக்கிறியள்.ஏறினதுதான் ஏறின ஒரு முருங்க மரத்திலயாவது ஏறி இருந்தால் இரும்புச்சத்துள்ள இலையாவது பறிச்சிருக்கலாம்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.