yakavi

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  51
 • Joined

 • Last visited

Community Reputation

56 Good

About yakavi

 • Rank
  புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

1,165 profile views
 1. படித்தவனும் இங்கே தான். படியாத மக்களும் இங்கே தான். பணம் சேர்த்தவனும் இங்கே தான். பரம ஏழையும் இங்கே தான். குடித்தவனும் இங்கே தான். புகைத்தவனும் இங்கே தான். நடித்தவனும் இங்கே தான் நல்லாய் இருந்தவனும் இங்கே தான். கடவுள் காப்பான் என்று இருந்து கடைசியில் வருபவனும் இங்கே தான். இனி கடவுள் தான் காக்க வேண்டும் என்று சிலருக்கு செல்வதும் இங்கே தான். சமரசம் உலாவும் இடமும் இங்கே தான். மனித வாழ்வில் இயற்கையின் இரண்டு நிலை ஐனனம் மரணம் இங்கே தான்.
 2. நன்றி. அப்படியே இணைக்கின்றேன். நன்றி என் கவிதையை உற்றுநோக்கியதற்தகு. உங்கள் அம்மாவின் இழப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உங்களுக்குகாக வருந்துகிறேன் அம்மா அப்பாவுக்கு நிகர் யாருமில்லை. ....
 3. அப்பா என் அப்பா ஏழை தான்! ஆனாலும் என்னை எப்போதும் ஏழையாக வளர்க்க நினைத்தது இல்லை. என் தாய் என்னை இடுப்பில் வைத்திருக்கும் பொழது தனக்கு தனக்கு இணையாகத்தான் தந்தை யை காட்டினாள். ஆனால் என்தந்தையோ என்னை தோளில் ஏற்றித் தான் கான இயலாத ஒன்றையும் காணவைக்கிறார். அப்பா என்னும் பொக்கிசம் நாம் அருகில் இருக்கும் போது நமக்கு தெரிவதில்லை, தாயை இழக்கும்பாசத்தையும் . தந்தை இழக்கும் போது பாதுகாப்பையும் இழந்து விடுகின்றோம் . மரமாய் வளர்ந்து கிளை பரப்ப உரமாய் இருந்தவர் தந்தை, எந்த உறவு பக்கத்தில் இருந்து எதைசொன்னாலூம். அப்பாவின் ஒரு வார்த்தைக்கு இடாகுமா? அப்பா எப்பவும் எங்களுக்கு காவல் தெய்வம். முடிந்த வரை எமக்காய் முயல்கின்ற தெய்வம் அப்பா. உள்ளத்தில் இருப்பதைச் சொல்லிட வார்த்தைகள் என்னிடம் இல்லை. -அதை மறந்து வாழ்வது மனிதமும் இல்லை. சொன்னால் வரும் வேதனையை தாங்கிடும் சக்தியும் என்னிடம் இல்லை. அப்பா அம்மா இருந்த நாட்கள் மனதுக்குள் அடங்கி கிடக்கிறது. என் அப்பா எப்பவும் ஏழை தான்.
 4. என் அன்பே! !! முழு நிலவான உன்னை பற்றி ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன். என் மேசை எங்கும் வார்த்தைகள் நட்சத்திரங்களாய் கொட்டி க்கிடக்கின்றன. என் அன்பே! என் வெளிச்சம். உன் காதல் எனக்கு காவல். உன் பேச்சு. .... எனக்கு இன்பம் உன் குரல். .. என் தேடல். உன் நலம் என் நிம்மதி. உன் நிம்மதி என்சந்தோசம். உன் உயிர் அது என் உயிர். என் அன்பே. ........
 5. காதல் ....எந்த. .....? நிச்சயித்து காதல் செய்தால் -பாசம் .. நிறத்திற்காக காதல் செய்தால் -காமம் . அழகிற்காக காதல் செய்தால் -மோகம் . பணத்திற்காக காதல் செய்தால் -வேஷம். குணத்திற்காக காதல் செய்தால் -நேசம். கண்டவர்களை யெல்லாம் காதல் - செய்தால் நாசம். இதில் நாம் காதல். .எந்த.....? எங்கெங்கு போவேனோ. என்னென்னஆவேனோ . தலையில் எழுதியது தலைகீழாக போகுமோ. சுற்றித்திரிந்தும் கிடைக்காத வரமென்றெண்னி உன்னை பார்க்க செருப்பாய்தேய்ந்தேன். வாழ்வென்னும் வெகுமதியை கடவுள் நமக்கு வழங்கியிருக்கிறார். நம் வாழ்தலைப் பொறுத்தே அது மகிமையடைகிறது என காட்டியவன் நீ. எந்த கனவையும் நனவாக்கலாம். எனகாட்டியவன் நீ. இன்னும் ஓரடி கூட எடுத்து வைக்காமல்! எங்கள் காலடிகளை வழிநடத்துபடி, கடவுளிடம் கேட்பது தப்பு என சுட்டிக் காட்டியவன் நீ. படிக்கட்டுகளை கண்டு மலைக்ககூடாது நாம் படிப்படியாக ஏறிக் கடந்தாகவேண்டும் என வழி காட்டியவன் நீ. இதில் நாம்..காதல் ....றக.....?
 6. புரிந்து விட்டது உங்கள் கருத்து. நன்றி நன்றி. .
 7. ஆடு மாடுகள் கூட அந்திவேளையில் தமது வயிற்றை நிரப்பி கொண்டு நிம்மதியாக செல்லும். நாம் அப்படியா அந்த இடத்தை விட்டு வந்தோம். ஒரு கனம் நினைத்து பாருங்கள். உங்களுக்கு எனது நன்றி. .. உங்களுக்கு எனது நன்றி.
 8. நீங்கள் கூறுவது புரியவில்லை. எங்கே மூச்சை விடுவது அந்த நேரத்தில் நாம் ஒரு ஐடப்பொருள் ஆகிவிட்டோம். உங்களுக்கு எனது நன்றி.
 9. வணக்கம் அக்கா. நீங்கள் கூறியதுஉண்மைதான் . ஆனாலும் நாங்கள் அந்த நாளிலேயே பட்ட வேதனைகள் தான் கவிதையாய் வந்தது. எனது கவிதையை உற்றுநோக்கியதற்தகு நன்றி.
 10. வைகாசி 18.......? எங்கள் முகவரியை முற்றாக தொலைத்த நாள். அகத்தினிலே தீராத வலியை புதைத்த நாள். யேகத்தினிலே எல்லோரும் விழிசொரிய சொந்த நிலத்தை இழந்த நாள். வைகாசி காற்று கூட தனது வழமையான செயலைக் கூட செய்ய முடியாமல் கண்ணீர் விட்டநாள்.......
 11. வெற்று காகிதம் .. ... நாட்களும் நகருகின்றன. நெருடும் நினைவுகளுடன் வாழ்க்கையும் நகருகின்றது. வண்ண எழத்துக்களாலும். கிறுக்கல்களாலும் வாழ்க்கையின் பக்கங்கள் நிரப்படுகின்றது. கற்பனையில் சில கவிதைகள் நினைவில் சில கவிதைகள் நிகழ்வில் சில கவிதைகள் என என்கை எழுகின்றது. நான் இழந்தவைகள் ஏதுவாயினும் எஞ்சியிருப்பது நம்பிக்கையே. அடி மனதில் அடுக்கடுக்காய் அலுமாரியில் அடுக்கிய புத்தகங்களாய் மீண்டும் புரட்டிப் படிக்க நினைத்தால் புண்பட்டு போகுது என் மனசு . நான் எங்கு சென்றாலும் துன்பங்களும் வேதனைகள் என் கழுத்தை நெரிக்கின்றான. எத்தனை பேரின் சொல் காயப்பட்ட போது! காலம் தான் என் கரம் பிடித்து கூட்டி செல்கிறது. விரும்பி நான் இங்கு வரவில்லை. வந்த வழி தெரியாமல். ..... அரும்பிய ஆசைகள் அடியோடு கருகி போயின, திரும்பிய திசையெல்லாம் வெறுப்பும் வேதனையும். உதை பந்தாட்ட பந்தாய் உள்ளம் மட்டும் உருக்குலையாமல் இருப்பதால். உணர்வுகளோடு வாழ்கின்றன்.... என்னை நான் வாசிக்க தொடங்கும் போது தான்! நான் இன்னமும் எதுவும் எழதாத ஒரு வெற்று காகிதம் என்பதை......தெரிந்து கண்டேன். ... எ
 12. நிலா மதி அக்கா அருமையான கவிதை உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.