Suguthar

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    25
  • Joined

  • Last visited

Community Reputation

9 Neutral

About Suguthar

  • Rank
    புதிய உறுப்பினர்
  • Birthday 05/21/1979

Profile Information

  • Gender
    Male

Contact Methods

  • Yahoo
    suguthar1979@yahoo.com

Recent Profile Visitors

516 profile views
  1. வட மாகாண முதலமைச்சர் அவர்கள் புதிய கட்சி தொடங்க இருந்ததால்தான் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கூறியிருக்கின்றார். ஒருவர் கட்சி கட்டுப்பாட்டை மீறினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமேயொழிய நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில்லை என்பது கூட சட்ட வல்லுனரும் ஊடக பேச்சாளருமான திரு சுமந்திரனுக்கு தெரியவில்லை. இன்னும் இரு வாரங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுவிடும் என்கின்றார். இவர்கள் மக்களை முட்டாளாக கருதித்தான் அறிக்கை விட்டுக்கொண்டுருக்கின்றார்கள். நேற்றய தினம் பிரதமமந்திரி அவர்கள் ஒரு கூட்டத்திலே பேசும் பொழுது இடைக்கால அறிக்கை ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் வரும் என்கிறார். எது உண்மை?
  2. கட்டுரை நன்றாக இருந்தது ஆனாலும் கட்டுரையாளர் கூறும் ஒரு விடயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. த தே கூட்டமைப்பின் ஒற்றுமை அவசியம் என்றும் அல்லாவிடில் வர இருக்கின்ற கிழக்கு மாகாணசபை தேர்தலிலே வேறு இனத்தவர்களுக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்துவிடும் என்பதே கட்டுரையாளரின் பயம். த தே கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்கவேண்டுமென்பதே தமிழ் மக்கள் எல்லோரினதும் விருப்பமாகும். ஆனால் த தே கூட்டமைப்பு நடந்துகொள்ளும் விதம் மக்களை அவர்கள் மீது ஒரு கோபத்தை உண்டாக்கியுள்ளது. ஒற்றுமை என்பது கொள்கை அடிப்படையில் இருக்கவேண்டும் மாறாக தேர்தல் காலங்களில் வாக்கு கேட்பதற்காக இருக்கக்கூடாது. ஒற்றுமைதான் முக்கியம் என பாண்டவர்கள் நினைத்திருந்தால் மாகாபாரத யுத்தம் நடந்திருக்கமாட்டாது, ஒற்றுமைதான் முக்கியம் என தந்தை செல்வா நினைத்திருந்தால் தமிழரசுக்கட்சி உருவாகியிருக்கமாட்டாது, ஒற்றுமைதான் முக்கியம் என திரு பண்டாரநாயக்கா நினைத்திருந்தால் சிறீலங்கா சுதந்திரக் கட்சி உருவாகியிருக்கமாட்டாது. ஒற்றுமைதான் முக்கியம் என நிணைத்திருந்தால் தமிழர் விடுதலைக் கூட்டணியை விட்டு விட்டு தமிழ் தே கூட்டமைப்பு உருவாகியிருக்கமாட்டாது. மேலே கூறியவையெல்லாமே கொள்கை வேறுபாட்டினால் ஏற்பட்டவையே, த தே கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்கவேண்டுமா இல்லையா என்பது த தே கூட்டமைப்பை தலைமை தாங்கும் தமிழரசுக்கட்சி எப்படி நடந்துகொள்கின்றது என்பதிலேயே தங்கியுள்ளது. த தே கூட்டமைப்பு மக்களுக்கு கொடுத்த வாக்குறிதிகளை புதிய அரசியலமைப்பில் நிறைவேற்ற தவறின் விரும்பதகாத நிகழ்ச்சிகள் நடப்பதை யாராலும் தடுக்கமுடியாது
  3. அதனால்தான் நான் முன்பு எழுதிய கட்டுரையொன்றில் அரசியல் கட்சிகள் முதியோர் அணியை ஆரம்பிக்க வேண்டும் என எழுதியிருந்தேன்.
  4. எனது நண்பர் ஒருவர் திரு எம். ஏ. சுமந்திரன் அவர்கள் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட செவ்வியை எனக்கு அனுப்பியிருந்தார். ஏரிக்கரை பத்திரிகையான தினகரன் பத்திரிகை எப்பொழுதும் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் பத்திரிகை மற்றும் அரசாங்க பத்திரிகை என்பது யாவரும் அறிந்ததே. ஆனபடியால் சாதாரணமாக நான் தினகரன் பத்திரிகை பார்ப்பது குறைவு அப்படியிருந்தும் எனது நண்பர் மூலம் இவ் செவ்வியை பார்க்க கிடைத்ததற்கு முதலில் எனது நன்றியை அவருக்கு தெரிவித்துகொள்கின்றேன். இனி திரு எம். ஏ. சுமந்திரன் அவர்களின் செவ்வியில் கூறப்பட்ட முக்கியமான விடயங்கள் சிலவற்றைப்பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவி விலக்கப்படவேண்டு மெனக் கோரி வட மாகாண சபையின் உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கைச்சாத்திட்டவர்களில் பலர் தங்கள் நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளனவே? முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது வட மாகாண சபையின் ஆளும் கட்சியினைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் எடுத்த தீமானம். அதில் தமிழரசுக்கட்சியின் நிர்ப்பந்தம் எதுவுமில்லை. அதேபோல தங்கள் நிலைப்பாட்டினை எவரேனும் மாற்றினாலும் அதில் தமிழரசுக் கட்சியின் நிர்ப்பந்தம் எதுவும் இருக்கப்போவதில்லை. மேற் கூறப்பட்ட பதிலில் இருந்து திரு எம். ஏ. சுமந்திரன் அவர்கள் என்ன சொல்லவருகின்றார் என்றால் தாங்கள் நல்லவர்கள் போலும் முதலமைச்சர்தான் தவறு செய்துவிட்டது போலவும் காண்பிக்க முற்படுகிறார். சமீபத்தில் நீதிக்குழு என்ற குழுவின் பேச்சாளர் தங்கள் செய்தியாளர் மகாநாட்டில் தாங்கள் பல காலமாக அமச்சர்களுக்கு எதிராக குற்றசாட்டுக்களை முதலமைச்சரிடம் வைத்ததாகவும் இதைப்பற்றி த தே கூட்டமைப்பு தலைவர் திரு சம்பந்தனிடம் பேசியதாகவும் கூறியிருந்தார். இதிலிருந்து உங்களுக்கு என்ன நடக்கின்றது என்பது புரிந்திருக்கவேண்டும். இந்த பிரச்சினை ஒன்று இரண்டு நாட்களாக நடக்கும் பிரச்சினையில்லை பல மாதங்களாக நடக்கின்றது. த தே கூட்டமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரின் தலைமையில் இக் குழு மாகாணசபையிலே இயங்கிவருவதை பல வலைத் தலங்களில் பார்த்திருக்கின்றேன். இவர்கள்தான் முதலமைச்சரை வீழ்த்துவதற்காக முதலமைச்சரின் வலது கரமான திரு ஐங்கரநேசனுக்கெதிராக முதலில் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள். அதைத்தொடர்ந்து மற்றய அமைச்சர்களுக்கெதிராகவும் மற்றய அங்கத்தவர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுதான் உண்மை. இந்த குழுவின் முக்கிய நோக்கம் முதலமைச்சருக்கெதிராக மாகாண சபையில் பிரச்சினைகளை கொடுப்பது பின்னர் முதலமச்சருக்கெதிராக அவர் வினைத்திறனுடன் இயங்கவில்லை என குற்றம் சுமத்துவது. இவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைதிருக்க தெரியாத தமிழரசுக்கட்சியினருக்கு முதலமைச்சரைப்பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. பதவி விலக்குவதற் கெதிராக வட மாகாணமெங்கும் வட மாகாண முதலமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றினைக் கொண்டு வந்து அவரை முழு அளவிலான ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. வெள்ளியன்று முழு வட மாகாணமுமே வெறிச்சோடிப்போயிருந்ததைக், காணக்கிடைத்தது. இது வட மாகாண மக்கள் முதமைச்சருடன் இருக்கின்றார்கள் என்பதைத்தானே உணர்த்துகின்றது? இதனைக்கொண்டு மக்கள் அவருக்குச் சார்பாக இருக்கின்றார்கள் என்று சொல்ல முடியாது. திரு எம். ஏ. சுமந்திரன் அவர்கள் தனது பதிலில் என்ன கூறுகின்றார் என்றால் ஜனனாயக முறையிலே நடாத்தப்படும் போராட்டங்களால் மக்கள் ஆதரவை கணிப்பிடமுடியாதென்கின்றார். இவர்கள்தான் தங்களை தாங்களே ஜனனாயகவாதிகள் என்கின்றனர். இந்த போராட்டங்களை பார்த்து பயப்படவில்லையென்றால் எதற்காக பராளுமன்ற உறுப்பினர்கள் திரு சிறீதரனையும் திரு சித்தார்த்தனையும் முதலமைச்சருடன் பேசுவதற்கு அனுப்பவேண்டும் அத்துடன் த தே கூட்டமைப்பு தலைவர் திரு சம்பந்தன் அவர்கள் எதற்காக முதலமைச்சருடன் தொலைபேசி தொடர்பையும் கடிதத் தொடர்பை தொடங்கவேண்டும். இவையெல்லாமே போராட்டத்தின் எதிரொலியேயொழிய மற்றும்படி தமிழரசுக்கட்சி விரும்பி செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை பதவி விலக்க வேண்டும் எனக் கோருவதன் மூலம் தமிழரசுக்கட்சி ஒரு வரலாற்றுத் தவறினைச் செய்கின்றது என்பது பலரது அபிப்பிராயமாக உள்ளதே? விக்னேஸ்வரனை பதவியில் அமர்த்தியதே தமிழரசுக் கட்சி செய்த வரலாற்றுத் தவறு என்பதாகத்தான் எங்களைப் பலர் விமர்சித்திருக்கின்றார்கள் தமிழரசுக் கட்சி செய்தது வரலாற்றுத் தவறு மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே பதியப்படவேண்டிய முதல் நிகழ்ச்சி. ஆளும்கட்சிக்குள்லேயே ஒரு பகுதியினர் தங்களது முதலமச்சருக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து ஆளுனரிடம் சமர்ப்பித்தது உலக வரலாற்றில் இதுதான் முதல்முறையாகும். த தே கூட்டமைப்பு தலைமையும் சரி அவர்களது ஆதரவு வலைத்தலங்களும் சரி இரண்டு விடயங்களை திரும்ப திரும்ப கூறிவருகின்றார்கள் அதாவது 1. த தே கூட்டமைப்பின் (தமிழர்களின்) ஒற்றுமையை சீர்குலைக்கக்கூடாது. 2. பாராளுமன்ற தேர்தலிலே தோல்வியுறவர்கள் இப்பொழுதுள்ள பிரச்சினைகளுக்கு பின் புலத்திலிருந்து செயற்படுகின்றார்கள். முதலாவதாக ஒற்றுமை என்பது கொள்கையடிப்படையில் இருக்கவேண்டும் மாறாக பாராளுமன்ற ஆசனங்களை பங்கீடு செய்வதில் மட்டும் இருக்கக்கூடாது. த தே கூட்டமைப்பு எதை ஒற்றுமையென்கின்றது, எதிகட்சிகளுடன் சேர்ந்து தங்களது முதலமைச்சருக்கெதிராக நம்பிக்கையிலா தீர்மானத்தை கொண்டு வந்ததையா? அல்லது புதிய அரசியலமைப்பில் என்ன நடக்கின்றது என்பதை த தே கூட்டமைபிலுள்ள மற்றய கட்சிகளுடன் விவாதிக்காமலிருப்பதையா? அல்லது மற்றய கட்சிகளை ஒதுக்கிவிட்டு தமிழரசுக்கட்சியை வளர்த்தெடுப்பதையா? இவர்கள் எதை ஒற்றுமையென்கிறார்கள். சரியான கொள்கைக்காக த தே கூ பிரிந்தால் அதில் எந்தவித தவறும் இருக்கமுடியாது மாறாக அமைச்சு பதவிக்காகவோ அல்லது பாராளுமன்ற ஆசனங்களுக்காகவோ த தே கூட்டமைப்பை உடத்தால் அது தவறு என்பது எனது அபிப்பிராயம். உதாரணத்துக்கு 1949ல் தமிழ் காங்கிரஸ் உடைக்கப்பட்டு தந்தை செல்வா தலமையில் தமிழரசுக்கட்சியை உருவாக்கியதை யாராவது தவறு என்று கூறுவார்களா? ஏன் திரு சம்பந்தனால் தவறு என்று கூறமுடியுமா? அத்துடன் தமிழர் விடுதலைக் கூட்டணியை உடைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானது சரியென்றால் த தே கூட்டமைப்பு ஒற்றுமையென்ற பெயரில் தவறான கொள்கையில் செல்வதை ஏற்க முடியாது. இரண்டாவதாக பாராளுமன்ற தேர்தலிலே தோல்வியுறவர்கள் பின் புலத்திலிருந்து த தே கூட்டமைப்பின் ஒற்றுமையை குழப்புவது என்ற குற்றச்சாட்டு. ஏன் அவர்களை குற்றம் சொல்லவேண்டும் நானே தமிழரசுக் கட்சிக்காலத்திலிருந்தே அக் கட்சியை ஆதரிப்பவன் என்னாலேயே இவர்களை ஜீரணிக்க முடியவில்லை அப்படியானால் மற்றவர்கள் எப்படியிருப்பார்கள். இதற்க்கான காரணம் என்ன? முதலில் த தே கூட்டமைப்பு தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பற்க்காக உருவாக்கப்பட்ட இயக்கம் ஆனால் அதை மறந்து தமிழரசுக்கட்சி த தே கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக மாற்றி அரசியல் விளையாட்டுக்களை நடாத்துகின்றது. 1956ம் ஆண்டிலிருந்து 2009 வரை எமது தலைவர்களின் கொள்கை முதலில் தமிழர்களின் பிரச்சினை தீக்கப்படவேண்டும் அதன் பின் தான் எமது பிரதேச அபிவிருத்தி என்பதேயாகும் அதனால்தான் தமிழரசுக் கட்சியினர் சந்தர்ப்பம் கிடைத்தும் அமைச்சுப்பதவிகளை ஏற்கவில்லை இது திரு சம்பந்தன் திரு மாவை போன்றவர்களுக்கு நன்றாக தெரியும் . ஆனால் இன்று ஞானோதயம் பிறந்த திரு சம்பந்தனுக்கும் மாவைக்கும் முதலில் அபிவிருத்திதான் முக்கியம் என்றும் அதற்காக நாலு ஐந்து இணைத்தலைவர்கள் (நல்ல காலமாக இரண்டு மூன்று இணை பிரதமந்திரிகள் இல்லாமல் போய்விட்டது) உரிமைபிரச்சினை இரண்டாவது நிலை என்றாகிவிட்டது. ஆனால் முதலமைச்சரோ முன்னைய தலைவர்களின் கொள்கையை கடைப்பிடிக்கின்றார் அவரது கருத்துக்கள் இனத்துக்கான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்றது அதனால்தான் அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கூடுகின்றது. அவர் 300 தீமானங்களை நிறைவேற்றி நேரத்தை வீணடிக்கின்றார் என்பது குற்றச்சாட்டு அவர் தங்களுக்கு வாகனம் வேண்டும் என்றோ அல்லது வீடுகள் வேண்டும் என்றோ தீர்மானம் போடவில்லை மாறாக தமிழ் இனத்தின் பிரச்சினை சார்ந்தே தீர்மானங்களையே நிறைவேற்றினார்கள். உதாரணத்துக்கு இராணுவ குறைப்பு, மீள்குடியேற்றம் கைதிகள் விடுதலை போன்றவை இதில் எந்தவித தவறு இல்லையென்பதுதான் எனது கருத்து மட்டுமல்ல தமிழரசுக்கட்சியின் அடிப்படக்கொள்கையும் இதுதான். அதனால்தான் முதலில் தமிழர் பிரச்சினைக்கு அரசியல்மைப்பு ஊடாக காலம் கடத்தாமல் விரைவில் தீர்வை காணவேண்டும் என விரும்புகின்றோம். பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டால் அபிவிருதியுடன் சிங்கள குடிடியேற்றங்களும் சேர்ந்து வரும் என்பதையும் கவணத்தில் கொள்ளவேண்டும். மீண்டும் சொல்கின்றேன் கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பது போல் தமிழரசுக்கட்சியை சரியான வழிக்கு கொண்டுவரவேண்டுமாக இருந்தால் சரியான தலைமையின் கீழ் மக்கள் பேரவை பலப்படுத்தப்படவெண்டும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
  5. 2009 க்கு பின் அரசியலுக்கு வந்தவர்கள் தான் த தே கூட்டமைப்புக்கு உள்ளே குழுக்களை உருவாக்குகின்றார்கள். இவர்களுக்கு தலைமை பின் புலத்திலிருந்து செய்யற்படுகின்றது.அப்படியில்லாவிட்டால் தலைமை இவர்களிடம் விளக்கம் கேட்கவேண்டும். இவரால் எப்படி இவ்வளவு பகிரங்கமாக கூறமுடிகின்றது ? முதலில் இவர்கள் ஒரு தலைமைக்கு கீழே கட்டுப்பாட்டுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும்.
  6. வட மாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் தனது அமைச்சர்களில் இரண்டு அமைச்சர்களை இராஜினாமா செய்ய சொன்னதும் மற்றய இரண்டு அமைச்சர்களை கட்டாய விடுமுறையில் செல்லவேண்டுமென கேட்டுக்கொண்டதை தொடர்ந்து முதலமைச்சருக்கெதிராக அவரது கட்சியை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் சிலரால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் தனக்கெதிராக சதி நடந்திருக்கின்றது எனவும் அதே நேரத்தில் முதலமைச்சர் தமிழரசு கட்சியை பழிவாங்குவதாகவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை இன்று காணக்கூடியதாக இருக்கின்றது. இதை பார்த்து தமிழர்கள் ஆகிய நாங்கள் வெட்கப்படவேண்டியிருக்கின்றது. இந்த குழப்பங்களுக்கான அடிப்படை தவறு என்ன என்பது பற்றி ஆராய்வதே இப் பந்தியின் நோக்கமாகும். த தே கூ தலைவர் திரு சம்பந்தன் ஐயா அவர்கள் திரு விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சராக தேர்தலில் நிற்கும் படி கேட்டுக்கொண்டபொழுது அவர் திரு சம்பந்தனிடம் கேட்டுக்கொண்டது என்னவென்றால் த தே கூட்டமைப்பிலுள்ள எல்லா கட்சிகளும் ஏற்று வேண்டுகோள் விடுத்தால் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு தயார் என்பதுதான். இதன் மூலம் திரு விக்னேஸ்வரன் அவர்கள் த தே கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராகவே தெரிவு செய்யப்பட்டார் தமிழரசுக்கட்சி சார்பான வேட்பாளராக தெரிவுசெய்யப்படவில்லை. அதைத்தொடர்ந்து நடந்த மாகாணசபை தேர்தலிலே த தே கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று 132,000 வாக்குகள் பெற்ற திரு விக்னேஸ்வரன் அவர்கள் வட மாகாணசபையின் முதலமைச்சராகிறார். ஆரம்பத்தில் தமிழர் அரசியலை சரியாக புரிந்திருக்காவிட்டாலும் பின்னர் யாழ் மக்களுடன் பழகியதைத் தொடர்ந்து அவரது பேட்டிகளும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு சொல்லும் கருத்துக்களும் அவர் தமிழ் தேசியத்தின் மீது எவளவு ஈடுபாடு கொண்டுள்ளார் என்பதை பறைசாற்றி நின்றது. இதன் மூலம் அவருக்கு புலம் பெயர் மக்களிடத்திலும் இலங்கை தமிழர்களிடத்திலும் ஆதரவு பெருகத்தொடங்கியது. இது தமிழரசுக்கட்சியிலுள்ள சில தலைவர்களுக்கு பயத்தை உண்டாக்கியிருக்க வேண்டும் ஏனென்றால் அக் காலகட்டத்திலிருந்து முதலமைச்சர் மாற்றப்படபோகின்றார் என பரவலாக பேசப்பட்டு வந்தது யாவரும் அறிந்திருப்பீர்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது த தே கூட்டமைப்புக்கு வாக்கு கேட்பதற்கு திரு விக்னேஸ்வரன் அவர்களை கூட்டமைப்பு அனுகியபொழுது திரு விக்னேஸ்வரன் அவர்கள் அக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை அதற்கான காரணமாக தான் மக்களின் பிரதிநிதியேயொழிய த தே கூட்டமைப்பின் பிரதிநிதி அல்லவென்றும் அதனால் பாராளுமன்ற தேர்தலிலே த தே கூட்டமைப்புக்கு வாக்கு கேட்க முடியாதென்றும் கூறியிருந்தார். அதன் பின்பும் அவர் பல முறை இதே போன்று கூறியிருக்கின்றார். இங்கேதான் த தே கூட்டமைப்பு தலைமையின் பலவீனமான ஆளுமைதன்மை தென்படதொடங்குகிறது. உண்மையில் தலைவர் சம்பந்தனின் தலைமை பலமாகவும் ஆளுமையுள்ளதாக இருந்திருந்தால் அவர் என்ன செய்திருக்க வேண்டுமென்றால் த தே கூட்டமைப்பு கூட்டத்தை கூட்டி திரு விக்னேஸ்வரன் அவர்களிடம் விளக்கம் கேட்டிருக்கவேண்டும். திரு விக்னேஸ்வரன் அவர்களின் நிலைப்பாடு முற்றிலும் தவறு. அவர் த தே கூட்டமைப்பு சார்பிலே த தே கூ தேர்தல் விஞ்ஞாபணத்தின் அடிப்படையிலேயே வாக்கு கேட்டார் அவர் சொல்வது போல் மக்கள் பிரதிநிதியென்றால் அவர் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றிருக்கவேண்டும். திரு விக்னேஸ்வரன் த தே கூட்டமைபுடன் ஒத்துழக்கவில்லையென்றால் அவர்களை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கியிருக்கவேண்டும். 1965ம் ஆண்டளவில் தமிழரசுக்கட்சின் மூளை என வர்ணிக்கப்பட்ட ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் திரு நவரத்தினம் அவர்கள் கொள்கைரீதியாக தமிழரசுக்கட்சியுடன் முரன்பட்ட பொழுது அவரை உடனடியாகவே கட்சியிலிருந்து நீக்கியது தமிழரசுக்கட்சி. இப்படியான ஒரு முடிவை எடுப்பதற்கு திரு சம்பந்தன் அவர்களுக்கு துணிவும் இல்லை ஆளுமையும் இல்லை. இதன் மூலம் திரு சம்பந்தன் அவர்கள் முதலமைச்சருக்கு மக்களிடத்தில் இருந்த ஆதரவைக் கண்டு பயப்படத்தொடங்கிவிட்டார் என்பதை காணக்கூடியதாக இருந்தது. தமிழ் அரசியல் வரலாற்றில் திரு சம்பந்தன் போன்று பலவீனமான தலைவர் வேறு எவராகவும் இருக்கமுடியாது. ஒரு திடமான முடிவெடுப்பதில்லை எல்லா பிரச்சினைகளையும் பின்போட்டுக்கொண்டே செல்வது, மற்றய உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்பதுமில்லை அத்துடன் செவிடடுப்பதுமில்லை. அவர் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளே அடைபட்டுள்ளார். இப்பொழுது மாகாணசபையிலே நடைபெறுகின்ற நிகழ்ச்சியை பார்ப்போமானால் விசாரணை, அறிக்கை, தீர்ப்பு என்பன ஒன்று இரண்டு நாட்களில் நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் அல்ல பல மாதங்கள் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. திரு சம்பந்தன் ஒரு பலமான தலைவராக இருந்திருந்தால் இக் காலப்பகுதியில் திரு விக்னேஸ்வரன் அவர்களுடன் பேசி ஒரு முடிவெடுத்திருக்கலாம் அல்லது த தே கூட்டமைப்பு தலைவர்களை கூட்டி ஒரு முடிவை எடுத்திருக்கலாம். மாறாக திரு சம்பந்தன் என்ன சொல்கின்றார் என்றால் வட மாகாணசபை விடயத்தில் தன்னால் தலையிட முடியாதென்றும் வட மாகாணசபையே அதை பார்த்துக்கொள்ளும் என்கிறார். இது அவரின் கையாலாகதனத்தை காட்டுகின்றது. அவர் தலைமை தாங்கும் த தே கூட்டமைப்பு ஆட்சி செய்யும் மாகாணசபையிலே உறுப்பினர்களுக்கிடையில் நடக்கும் பிரச்சினையை திரு சம்பந்தன் அவர்கள் தலையிட்டு தீர்க்காமல் சண்டையிட்டுக்கொள்ளும் உறுப்பினர்களிடம் ஒப்படைத்தது அவரது பலவீனத்தை காட்டுகின்றது. அடுத்ததாக முதலமைச்சர் தனது முடிவை சபையிலே அறிவித்தவுடன் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் பலர் எதிர் கட்சி அங்கத்தவர்களுடன் சேர்ந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையிலா தீர்மானத்தை கவர்னரிடம் சமப்பிக்கின்றார்கள். இங்கே வேடிக்கை என்னவென்றால் ஆளும்கட்சிக்குள்லேயே ஒரு பகுதியினர் தங்களது கட்சியை சேர்ந்த முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையிலா தீர்மானம் கொண்டுவருவது உலகத்திலேயே இதுதான் முதல் முறை என்று நிணைக்கின்றேன். நம்பிக்கையிலா தீர்மானம் கொண்டுவந்த உறுப்பினர்கள் த தே கூ தலைமைக்கு நிலைமையை முறையிட்டுயிருக்கவேண்டும் அதன் பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் த தே கூ மாகாணசபை உறுப்பினர்கள் எல்லோரையும் அழைத்து நிலைமையை விளக்கி முதலமைச்சரை மாற்றுவதா இல்லையா என்பதை முடிவு செய்திருக்கவேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றாமல் நேரடியாகவே கவர்னரிடம் தீர்மானத்தை சமர்ப்பித்த உறுப்பினர்களிடம் த தே கூ தலைமை விளக்கம் கேட்டிருக்கவேண்டும் ஆனால் இதை செய்வதற்கு திரு சம்பந்தனுக்கு திராணியில்லை இங்கேதான் த தே கூ தலைமையின் பலவீனம் தென்படுகின்றது. அத்துடன் முதலமைச்சர் கூறுவது போல் இது ஒரு சதி என்பது நிரூபனமாகின்றது காரணம் முன்னமே அவர்கள் கூடி பேசி தீர்மானம் எடுத்துதான் சபைக்கு வந்திருக்கிறார்கள் அதனால்தான் உறுப்பினர்களுக்கு நேராக கவர்னரிடம் செல்ல கூடியதாக இருந்தது. காலம் சென்ற இந்திய பிரதமர் திரு நரசிம்மராவ் தலைமையில் எப்படி காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்ததோ அதேபோன்றுதான் திரு சம்பந்தனின் தலைமையில் த தே கூட்டமைப்பு பலவீனமடைந்து செல்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்பொழுது த தே கூட்டமைப்பு ஒரு துக்களக் நிர்வாகத்தை நடாத்துகின்றது. யார் வேண்டுமென்றாலும் எதுவும் பேசலாம், எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில்லை, இவர்களை நம்பாமல் மக்கள் தாங்களகவே தலைமையேற்று பல இடங்களிலே போராட்டங்களை நடாத்துகின்றார்கள். சுமந்திரனும் சம்பந்தனும் மனித உரிமை பேரவைக்கு ஒன்றை சொன்னால் இவற்றுக்கு எதிமறையாக மற்றய உறுப்பினர்கள் கடிதம் அனுப்புகின்றார்கள். அதற்கு மேலாக இவர்களுக்கு என்ன தெரிந்து கையெழுத்திடார்கள் என திரு சுமந்திரன் கேள்வி கேட்கிறார். இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார் தலைவர் திரு சம்பந்தன். த தே கூட்டமைப்பு கூட்டங்களிலே இதைப்பற்றி பேசினால் உடனே தலைவர் சம்பந்தன் பள்ளிக்கூட ஆசிரியாகிவிடுவார் உடனே பிள்ளைகளுக்கு இப்படி பேசக்கூடாது நல்ல பிள்ளைகளாக இருக்கவேண்டும் என்பார். இப்படியான பலவீனமான தலைமையின் முதுகிலே 2009 க்கு பின் அரசியலுக்கு வந்தவர்கள் குதிரை சவாரி செய்கின்றார்கள். இவர்கள் வந்தபிந்தான் த தே கூட்டமைப்புக்குள் குழுக்கள் தோன்றியுள்ளது. தமிழ் அரசியலில் 2009க்கு முன் இப்படியான குழுக்கள் இருந்ததில்லை. தெனாலி படத்திலே கமலஹசன் கூறுவது போல் திரு சம்பந்தனுக்கு எல்லோர்மீதும் பயம் பயம் பயம். திரு சம்பந்தன் மற்றும் திரு மாவை சேனாதிராசா போன்றோர் 50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் தேசியத்துடன் ஈடுபாடுகொண்டவர்கள். ஆனால் இன்று இவர்கள் இருவரையும் யாரோ கட்டுப்படுத்துவது போல் என்னதோன்றுகிறது. திரு சம்பந்தனின் முதுமை காரணமாகவும் உடல் நிலை காரணமாகவும் அவரால் கூட்டமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியாது, அவருக்கு தமிழினம் மீது உண்மையிலேயே அக்கறையிருக்குமானால் தனது தலைமை பதவியை இளையதலைமுறைக்கு விட்டுகொடுக்கவேண்டும், தனது நீண்ட கால அனுபவத்தை ஆலோசகராக இருந்து த தே கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்கலாம். இன்றய நிலையில் திரு சம்பந்தன் இதை செய்ய தவறின் த தே கூட்டமைப்பு சின்னாபின்னமாவதை யாராலும் தடுக்கமுடியாது. வட மாகாணசபையில் நடந்தது ஆரம்பம் மட்டுமே.
  7. இன்றைய வலைத்தளத்தில் வடமாகான முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்களின் பேட்டியை பார்த்தேன். அந்த பேட்டியில் முதலமைச்சர் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம் முதலாவதாக வடக்கு கிழக்கு தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் கொள்கையில் ஏதாவது மாற்றம் இருக்குமென தான் நினைக்கவில்லை என்கிறார் அத்துடன் இரண்டாவதாக பெரியண்ணனாக இந்தியா விளங்கவேண்டும் என தமிழர்கள் விரும்புகின்றனர் என கூறுகின்றார். அவர் கூறிய இரண்டு விடயங்கள் குறித்து உங்களுக்கு எழுதலாமென நிணைக்கிறேன். முதலமைச்சரின் பேட்டிக்கு வருவோம் அவர் முதலில் என்ன கூறுகின்றார் தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் கொள்கையில் ஏதாவது மாற்றம் இருக்குமென நினைக்கவில்லை என்கிறார். ஐயா முதலமைச்சரே தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் கொள்கை என்னவெண்று சற்று விளக்கிவீர்களா? இந்த கொள்கையைத்தான் நானும் பலகாலமாக பலரிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றேன் அனால் யாரும் இதுவரை கூறவில்லை. இந்தியாவிடம் கொள்கையிருந்தால்தான் ஐயா கொள்கை மாறுவதற்கு. ஐயா முதலமைச்சரே இந்தியாவின் கொள்கை தமிழர்களைவைத்து தங்கள் வியாபாரத்தை பெருக்குவதுதான் அதைத்தவிர வேறொன்றுமில்லை. இரண்டாவதாக இந்தியாவை பெரியண்ணா என்கிறார் அப்படியானால் சின்னண்ணா யார் இலங்கை அரசாங்கமா?, முதலில் தமிழர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் இந்தியா எங்களுடைய பெரியண்ணாவும் இல்லை தொப்புள்கொடியுறவும் இல்லை தமிழ்நாட்டு மக்களைத்தான் எங்கள் தொப்புள்கொடியுறவென்று கூறமுடியும். இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறுகின்ற ஒரு பெரிய நாடு அவ்வளவுதான். இந்தியாவை கையால்வதில் தமிழர்தரப்பு தோல்வியடைந்து விட்டதென்றுதான் சொல்லவேண்டும், இந்தியா நிழழைப்போன்றது அதாவது நாங்கள் நிழழை நோக்கிசென்றால் நிழல் எங்களை விட்டு விலகிச்செல்லும் அதே நேரதில் நாங்கள் நிழழை விட்டு விலகிச்சென்றால் நிழல் எங்களை நோக்கிவரும் இப்படித்தான் இந்தியாவும். இதனடிப்படையில் தமிழர்தரப்பு இந்தியாவோடுமட்டும் உறவை பேனாமல் சீனாவோடும் உறவை பேனவேண்டும். இதன் மூலம் தமிழர்தரப்பு தங்களை விட்டு விலகுகின்றதோ என இந்தியாவை நினைக்கவைக்கமுடியும். இதனால் தமிழர்தரப்புக்கு நிறைய நன்மைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு என நான் திடமாக நம்புகின்றேன். அதைவிட்டுவிட்டு பெரியண்ணா முறை சொல்லி அழைப்பதும் இந்தியா இல்லாவிட்டால் பிரச்சினையை தீக்கமுடியாது என்று கூறுவதன் மூலம் நாங்கள் இந்தியாவின் அடிமைகளாக இருக்கிறோம் என்ற செய்தியை இந்தியாவுக்கு அனுப்புகின்றோம் இதன் மூலம் தமிழர்களின் பிரச்சினை இன்னும் 100 வருடங்கள் சென்றாலும் தீரப்போவதில்லை என்பதுதான் உண்மை, இந்தியா பக்கத்திலுள்ள பெரிய நாடு ஆனபடியால் இந்தியாவுடன் அனுசரித்து செல்ல வேண்டுமென்கிறார்கள். உங்களுக்கு 1971ம் ஆண்டை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் பங்களாதேஷ் பாகிஸ்தானிலிருந்து பிரிவதற்கு சுதந்திரபிரகடணம் செய்கின்றது அப்பொழுது பாகிஸ்தானை சீனா ஆதரிக்கின்றது இந்தியாவை ரஸ்சியா ஆதரிக்கின்றது இக்கட்டத்தில் சீனா பாகிஸ்தானுக்கு சார்பாக தலையிடலாம் என்ற நிலை வந்த பொழுது ரஸ்சியா தனது துருப்புக்களை சீனா எல்லைக்கு நகர்த்தியதன் மூலம் சீனாவை அமைதிகாக்கவைத்தது. அத்துடன் இன்னொரு உதாரணம் முன்னையகாலத்தில் குதிரை, யாணை, ஈட்டி, அம்பு கொண்டு போராடியபொழுது உதவிக்கு பக்கத்தில் உள்ள நாடுகளை நம்பியிருந்தார்கள் ஆனால் இன்று தொழில் நுட்பம் முன்னேறிய காலதில் நிலைமை வேறு உதாரணமாக தென் கொரியாவின் நண்பனான அமெரிக்கா எவ்வளவு தூரத்திலிருந்து வந்து தென் கொரியாவுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றார்கள். இதே போல் எத்தணையோ உதாரணங்களை கூறமுடியும். இதிலிருந்து என்ன தெரிவதென்றால் பெரிய நாடு சிறிய நாடு என்பதில் ஒன்றுமில்லை ஆனால் எப்படி நாங்கள் காய்களை நகர்த்துகின்றோமென்பதில்தான் வெற்றி தோல்வி நிச்சயிக்கப்படுகின்றது என்பதுதான் உண்மை.. அரசியல்வாதிகள் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுடன் தொடர்பை பேனுவதற்கு பின் நிற்பதன் காரணம் அவர்களின் சோபேறித்தனமும் ஊக்கமின்மையும்தான். முதலில் தமிழர்களாகிய நாம் ஒரு திடமான முடிவை எடுக்கவேண்டும். அதாவது சிங்களவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு அவர்களோடு சேர்ந்து வாழ்வதா அல்லது தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பாடுபடுவதா என்பதுதான். இந்த இரண்டு தெரிவில் ஏதாவது ஒன்றை தவிர இரண்டுக்கும் நடுவே நிற்கமுடியாது. ஆனால் அரசியல்வாதிகள் மூன்றாவதாக கூறிய வகையை சேர்ந்தவர்கள் அதாவது சிங்களவர்களுடன் சேர்ந்து வாழவும் விரும்பமாட்டார்கள் அத்துடன் தமிழர் உரிமைக்கு போராடவுமாட்டார்கள் ஏதோ சாக்குபோக்கு சொல்லி பதவியை தக்கவைத்துக்கொண்டு காலத்தை கடத்துவதுவார்கள்.
  8. கேள்வியை பார்த்தால் பெண்கள் எல்லாம் உயரமானவர்களாகவும் ஆண்கள் குட்டையாக உள்ளது போல் அல்லவா இருக்கிறது. பெண்கள் ஏன் ஆண்களை விட கட்டையாக இருக்கிறார்கள் என்பதற்கு பதில் கிடைத்தால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்துவிடும்.
  9. ஒரு பத்திரிகையின் கிசு கிசு பகுதியிலே பிரபல நடிகருக்கும் பிரபல நடிகைக்கும் திருப்பதியில் திருமணம் நடந்தேறியதாக ஒரு செய்தி. அந்த நடிகரும் நடிகையும் உடனடியாகவே தங்கள் மறுப்பை அந்த குறிப்பிட்ட பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார்கள். அந்த திருமண காட்சி ஒரு சினிமா காட்சிக்காக படமாக்கப்பட்டதாக கூறியிருந்தார்கள். இதே போன்று வேறு ஒரு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை வீட்டுக்கு புறத்தே நிற்கும் ஒருவர் தவறாக புரிந்துகொண்டு வீட்டிலிருப்பவர்கள் பேசிக்கொள்வதாக கருதி காவல்துறைக்கு அறிவிக்கின்றார். காவல்துறையினர் வருகின்றார்கள் வீட்டுக்கு சென்று விசாரிக்கின்றார்கள் அப்பொழுதுதான் காவல்துறையினருக்கு தெரியவருகின்றது வீட்டுக்கு வெளியே நின்ற நபர் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தவறாக புரிந்துகொண்டுள்ளதாக. இந்த இரண்டு காட்சிகளையும் இவர் எதற்காக எழுதுகின்றார் என நீங்கள் நினைக்கலாம். சரி விடயத்துக்கு வருவோம் மேற்கூறிய முதலாவது நிகழ்ச்சியில் பார்க்கப்பட்ட காட்சி பொய்யாகின்றது அதே போல் இரண்டாவது நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது செய்தி பொய்யாகின்றது. இதைத்தான் முன்னோர்கள் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்று கூறினார்களோ? இதிலிருந்து முன்னோர்கள் முற்காலத்தில் இப்படியான கருவிகளை பாவித்திருப்பார்கள் என ஊகிக்ககூடியதாக இருக்கின்றது, அது சரி கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்பதின் உண்மையான விளக்கம் என்ன என்பதை யாராவது கூறுவீர்களா?
  10. புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்காளால் வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் என்பது ஒன்று. தமிழ் மக்களுக்கு இவ்விணைப்பு அவசியம்தானா என ஆராய்வதே இப் பந்தியின் நோக்கமாகும். நான் அறிந்தவரையில் தூர நோக்குடன் சிந்தித்த தலைவர்களில் தந்தை செல்வா போல் ஒரு சிறந்த தலைவரை இதுவரையில் தமிழ் தலைவர்களில் நான் காணவில்லை. 1970ம் ஆண்டு தேர்தல் வெற்றியின் பின் கச்சேரியின் முன் பேசும்பொழுது கடவுள்தான் தமிழ் மக்களை காப்பேற்றவேண்டும் என்றார் இதில் எவளவு அர்த்தம் உண்டென்பதை கடந்த 47 வருடங்களாக கண்டுகொண்டிருக்கிறோம். அத்துடன் 1949ம் ஆண்டு இந்திய வம்சாவழியினரின் வாக்குகள் பறிக்கப்பட்டபொழுது இன்று அவர்களுக்கு நடந்தது நாளை நமக்கு என்று கூறியதுடன் தமிழ்மக்களை காப்பேற்ற வேண்டுமானால் வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சியே ஒரே வழி என்ற கொள்கையுடன் தமிழரசுக்கட்சியையும் தொடங்கினார். 1949ம் ஆண்டில் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியப்பாடாக இருந்தது உண்மைதான் காரணம் அந்த நேரத்தில் தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் தமிழர்களாக கருதப்பட்டார்கள்.ஆனாலும் தந்தை செல்வாவின் திட்டப்படி இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு ஒரு மாநிலமும் முஸ்லீம்களுக்கு ஒரு மாநிலமுமாக இரண்டு மாநிலமும் மற்றும் மத்திய மாகாணம், தென்மாகாணம், வடமத்தியமாகாணமுமாக ஐந்து மாகாணங்கள் உருவாகவேண்டுமென்பதுதான். இதைத்தான் தந்தை செல்வாவின் தலையிலே ஐந்து முள் வைத்த கீரிடம் வைத்து டெலிமிரர் பத்திரிகை கேலிச்சித்திரம் வரைந்திருந்தது. வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமாக இரண்டு மாநிலம் உருவாவதை திரு அஷ்ர்ப் அவர்களும் ஏற்றுக்கொண்டிருந்தார். 1956ம் ஆண்டு தேர்தலில் தமிழ் பேசும் முஸ்லீம்களாகிய திரு காரியப்பர் மற்றும் திரு முஸ்தப்பா ஆகியோர் தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பின் கட்சி மாறினார்கள் என்பது சரித்திரம். இப்படியான நிகழ்ச்சிகள் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கும் முஸ்லீம் அல்லாத தமிழர்களுக்குமிடையில் நம்பிக்கையீனத்தையுண்டாக்கியது. அதன் பின் தமிழ் பேசும் முஸ்லீம் தலைவர் திரு அஸ்ரப் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லீம் ஐக்கிய விடுதலை முன்னனி தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியுடன் கூட்டு சேர்ந்து 1977 தேர்தலை சந்தித்தது ஆனாலும் திரு அஷ்ரப்பால் வெற்றிபெறமுடியவில்லை அத்துடன் அவரது கட்சிசார்பில் போட்டியிட்ட யாரும் வெற்றிபெறவில்லை. இது தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கும் முஸ்லீம் அல்லாத தமிழர்களுக்குமிடையில் உள்ள விரிசலை எடுத்துக்காட்டியது. தமிழர்களிடதில் ஒரு மரவு உண்டு அதாவது சகோதர சகோதரிகளுக்கு பிறக்கும் சிறு பிள்ளைகளை இன்னாரை இன்னாருக்கு திருமணம் செய்துவைப்பதென முடிவு செய்துவிடுவார்கள். அந்த பிள்ளைகள் வளர்ந்துவரும் பொழுது பிள்ளைகளின் விருப்பு வெறுப்போ குணாதிசயங்களோ அறியாது பெரியோர்கள் முடிவு செய்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக திருமணம் செய்துவைத்து பின் பிரிவில் முடிந்ததை எங்கள் வாழ்நாட்களில் கண்டிருக்கிறோம். இதேபோல்தான் 1949ம் ஆண்டு வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டுமென கேட்டதற்காக இண்றய காலகட்டத்தில் வடக்கு கிழக்கு இணைப்பின் மூலம் தமிழர்களும் தமிழ்பேசும் முஸ்லீம் மக்களும் சேர்ந்து வாழமுடியும் என நினைப்பது தவறு, சேர்ந்துவாழமுடியாது என்பதே எனது வாதம். 1881ம் ஆண்டு குடிசனமதிப்பீட்டின் படி கிழக்கு மாகாணத்தில் 75,318(58.96%) தமிழ்மக்களும் 43,001(33.66%) முஸ்லீம் மக்களும் 5947(4.66%) சிங்கள மக்களும் வசித்துவந்தார்கள். சற்று ஆயுதபோராட்டத்துக்கு முன் 1981ம் ஆண்டு குடிசனமதிப்பீட்டின் படி கிழக்கு மாகாணத்தில் 410,156(42.06%) தமிழ்மக்களும், 315,436(37.64%) முஸ்லீம் மக்களும் 243,701(21.64%) சிங்கள மக்களும் வசித்துவந்தார்கள். சற்று ஆயுதபோராட்டத்துக்கு பின் 2012ம் ஆண்டு குடிசனமதிப்பீட்டின் படி கிழக்கு மாகாணத்தில் 617,295(39.79%) தமிழ்மக்களும், 575,936(36.72%) முஸ்லீம் மக்களும் 359,136(23.15%) சிங்கள மக்களும் வசித்துவந்தார்கள் என்பது தரவுகள். போர்க்காலத்தில் நடந்தவற்றை வைத்துக்கொண்டு கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணைவதை முஸ்லீம் மக்கள் எதிக்கின்றார்கள் அப்படியானால் மேற்கூறிய தரவுகளிலிருந்து முஸ்லீம் அல்லாத தமிழ் மக்கள் கிழக்கில் சிறுபாண்மையினர் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.எனவே இதற்கு சிறந்த தீர்வு தந்தை செல்வா கூறியது போல் இணைந்த வடகிழக்கில் முஸ்லீம் மக்கள் பெருபாண்மையாக வாழும் பகுதிகளைக் கொண்ட ஒரு அலகு உருவாக்கப்படவேண்டும். இதற்கு ஆதரவாக மேலும் பல பின்வரும் காரணங்களை உங்கள் முன் வைக்கின்றேன். 1. முஸ்லீம் மக்கள் மார்க்கத்தை முன்னிறுத்தி வாழ்பவர்கள் மற்றும் அரசியல் செய்பவர்கள் நாங்கள் (இங்கே நாங்கள் என்பது முஸ்லீம் அல்லாத தமிழர்கள்) மொழியையும் உரிமையையும் முன்னிறுத்தி வாழ்பவர்கள். ஆனபடியால் இவ்விரு சமூகமும் சேர்ந்து அரசியல் செய்வது முடியாத காரியம், 2. வடக்கு கிழக்கு இணைந்தால் சில கூற முடியாத காரணங்காளால் 50-75 வருடங்களில் முஸ்லீம் அல்லாத தமிழ் மக்கள் சிறுபாண்மை நிலையை அடையும் இதற்கு சான்றாக 1881 இலிருந்து 1981 வரையான குடிசனமதிப்பீட்டின்படி முஸ்லீம் மக்கள் 33.66% இலிருந்து 37.64% மாக கூடியும் நாங்கள் 58.96% இலிருந்து 42.06% மாக குறைந்திருக்கின்றோம். 1981 இலிருந்து 2012 வரையான காலப்பகுதியில் இடப்பெயர்வுகள் நடைபெற்றதால் குடிசனமதிப்பீட்டு தரவை கவணத்தில் கொள்ளவில்லை. 3. முஸ்லீம் அரசியல் கட்சிகள் எப்பொழுதும் பதவி ஆசை பிடித்தவர்கள் ஆனால் முஸ்லீம் அல்லாத தமிழ் மக்களாகிய நாங்கள் பதவிக்காக ஆசைப்பாடதவர்கள் நாங்கள் உரிமைக்காக போராடுபவர்கள் 1956ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தமிழரசுக்கட்சி எத்தனையோ அமைச்சுபதவிகளை பெற்றிருக்கலாம் ஆனால் ஒரே ஒரு முறை மட்டும்தான் 1965ல் திரு டட்லி சேனநாயக்கா அமைச்சரவையில் செனட்டர் திரு திருச்செல்வம் அவர்களை தந்தை செல்வா அமைச்சராக்கினார் காரணம் அமைச்சரவையில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக மட்டுமே. 4. வடக்கு கிழக்கு இணைந்தால் தமிழில் செய்யவேண்டிய அரசாங்க உத்தியோகங்கள் எல்லாம் முஸ்லீம் மக்களுக்கே சென்றடையும் காரணம் தேசிய கட்சிகளிலுள்ள முஸ்லீம் அமைச்சர்களின் உதவி அவர்களுக்குண்டு. இதனால் பாதிக்கப்படப்போவது நாங்கள்தான் உதாரணமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிதிகளில் பெரும்பாலனவை வட கிழக்கு மக்கள் என்ற போர்வையில் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களுக்கே சென்றடைந்தன. 5. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே எத்தனையோ பள்ளிவாசல்கள் உடைத்தபின்பும் அப்பகுதிகளிலுள முஸ்லீம் மக்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழமுடுடியுமென்றால் எங்களுடன் சேர்ந்து வாழ்வதில் அவர்களுக்கு என்ன பிரச்சினையிருக்கிறது என்பது எனக்கு புரியவில்லை.வீம்புக்காகவும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவுமே வடக்கு கிழக்கை பிரிக்க முற்படுகின்றார்கள். அவர்களது பகுதிகளை அவர்களுக்கு கொடுத்துவிடவேண்டும் அப்பொழுதான் தமிழர்களின் அருமை முஸ்லீம் மக்களுக்கு தெரியவரும். எங்களிடம் ஒரு பழமொழியுண்டு அதாவது இரண்டாவது மருமகன் வந்தால்தான் மூத்த மருமனின் அருமை தெரியுமென்பார்கள். இப்பொழுதும் பாருங்கள் முஸ்லீம் மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்தவுடன் உடனே தமிழ் தேசிய கூட்டமைப்பை உதவிக்கு அழைப்பார்கள். 6. சமஸ்டி ஆட்சியில் நிலத்தொடர்பு அல்லாத பகுதிகளை இணைத்து ஆட்சி செய்வது பல நாடுகளிள் காணக்கூடியதாகவுள்ளது. 7. எல்லா முஸ்லீம் கட்சிகளும் இணைப்புக்கு எதிராக இருக்கும் பொழுது தமிழ் கட்சிகள் எல்லாமே கட்டாயம் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமெண்கிறார்களே இதனால் எங்களுக்கு என்ன இலாபமிருக்கிறது என்பதை யாராவது கூறவேண்டும் ஆனால் நஷ்டம் மேற்கூறிய ஐந்து காரணங்களில் அடங்கியுள்ளது. நான் ஒரு கட்டுரையாளன் இல்லை ஆனாலும் எமது இனத்தின் பிரச்சினைகளைப்பற்றி சிந்திக்கும் பொழுது எனது மனதில் தோன்றுவதைத்தான் இங்கே பதிவு செய்கிறேன். அது சரியாகவோ அல்லது பிழையாகவோ இருக்கலாம் எனவே வாசகர்கள் இப்பந்தியில் உள்ள கருத்துக்கள் குறித்து திறந்த மனதுடன் விவாதிக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.
  11. வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 41 வருடங்கள் கடந்துள்ள நிலயில் இன்று தமிழ் இனம் மிக மோசமான நிலையில் இருக்கிறார்கள். தமிழர் விடுதலை கூட்டணி 1977ம் ஆண்டு தமிழ் ஈழக் கோரிக்கையை முன் வைத்த பொழுது பெருந்தொகையான இளைஞர்கள் தேர்தலின் பொழுதும் அதன் பின்பும் ஈழக்கோரிக்கைக்கு ஆதரவாக வேலைசெய்தார்கள். அதுமட்டுமன்றி பெருந்தொகையான இளைஞர்கள் இயக்கங்களில் சேர்ந்து உயிரை கொடுத்தார்கள். மக்கள் இட்ப்பெயர்வு முலம் மன உளைச்சலுக்காணார்கள் அத்துடன் உடைமைகளையும் இழந்தார்கள்.இப்படியான நிலையில் தமிழர் விடுதலை கூட்டணியிலிருந்து பெயர் மாறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு 2009 பின் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டிதான் எங்கள் கொள்கையென்றும் பிரிவிணை கிடையாது என்றார்கள். கொள்கை வகுப்பதும் மாற்றுவதும் அவர்களைப்பொறுத்த விடயம் ஆனால் இவர்களுடைய ஈழ கோரிக்கையினால் உயிகளை இழந்தவர்கள், உடமைகளை இழந்தவர்கள் மற்றும் மன உளைச்சளுக்கு உள்ளானவர்களுக்கு யார் பொறுப்பேற்பது. உண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதே எனது கோரிக்கை.
  12. நீங்கள் தந்த விளக்கங்களுக்கு மிக்க நன்றி ஆனாலும் தலை சுற்றுகிறது. நான் அறிய முன்பு ஆங்கில மாதம் ஏப்பிரல் 14 தமிழர்கள் வருடப்பிறப்பும் 13ம் தேதி வருடப்பிறப்புக்கு முந்தய நாள் (Prior to New year) என இரண்டு நாட்கள் விடுமுறை இருந்தது. இன்று ஏப்பிரல் 13 சிங்கள புது வருடப்பிறப்பாகமாற்றம் பெற்றுவிட்டது. இது நாங்களறிய சொற்ப காலத்த்க்குள் நடந்தேறியுள்ளது. அப்படியிருக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலங்களில் நடைபெற்ற சம்பவங்களோ கதைகளோ நினைத்து பார்க்கமுடியாதளவுக்கு மாற்றம் பெற்று இருக்கும் என்பதை நாங்கள் கவணத்தில் கொள்ளவேண்டும்.இக் கதைகள் எல்லாம் உண்மையா பொய்யா என் ஆராய்வதைவிட ஏதாவது நல்ல விடயங்கள் உள்ளனவா என நோக்கவேண்டும் அத்துடன் அவற்றை பின்பற்றுவதால் சமுதாயத்துக்கு ஏதாவது தீமையுண்டா என்பதையும் ஆராயவேண்டும். சமயங்களில் சொல்லப்பட்ட பல விடயங்கள் இன்று விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டுவருகின்றன, அப்படியிருக்க அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவது தவறு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.இறை பயமும் சமுதாய பயமும் இல்லாததனால்தான் இன்றைய சமுதாயம் சீரழிந்து கொண்டு செல்கிறது,அதனால்தான் பாலியல் , இல்ஞ்சம்,கொலை குற்றசாட்டுகளில் கைது செய்யபடுபவர்கள் தொலைகாட்சிகளில் பெருமையாக கையசைத்து செல்வதை காணக்கூடியதாக இருக்கிறது,
  13. நேற்றய தினம் வெள்ளிக்கிழமை இந்திய பிரதமர் திரு மோடி அவர்கள் தமிழர்களின் பிரதிநிதிகளாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேசியிருந்தார். அதன்பின் பத்திரிகையாளருக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவர் திரு அடைக்கலநாதன் கூறும் பொழுது சமஸ்டி தீர்வை தமிழர்கள் பெறுவதற்கு இந்தியா ஒத்துழைக்கவேண்டும் என திரு சம்பந்தன் அய்யா கேட்டுகொண்டதாக கூறப்பட்டது. கடந்த ஒரு வருடமாக புதிய அரசியல் அமைப்பு குறித்து திரு சுமந்திரன் மற்றும் திரு சம்பந்தன் அவர்களும் எல்லாகட்சிகளுடனும் பேசிக்கொடிருக்கிறார்கள். அப்படியானால் திரு மோடி இலங்கை வரும்வரை ததேகூ இந்தியாவுடன் தொடர்பில் இருக்கவில்லையா? ததேகூ பிரதிநிதிகள் இந்தியா சென்று பிரதமர் திரு மோடி அவர்களை சந்திக்காவிடாலும் வெளியுறவு அதிகாரிகளை சந்தித்து எமது பிரச்சினைகளை கூறமுடியாமல் போனது ஏன்? பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள்தான் எங்கள் பிரச்சினைகளை அவர்களுக்கு கூறவேண்டுமேயொழிய அவர்கள் எங்களிடம் வந்து கேட்கவேண்டுமென நினைப்பது தவறு. அவர்கள் இலங்கை வருவது தங்கள் வியாபாரம் பற்றி பேசுவதற்கேயொழிய எங்கள்பிரச்சினையை தீர்ப்பதற்கில்லை.நேற்றய தினம் கூட திரு மோடி அவர்கள் என்ன கூறுகிறார் வட கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக இலங்கை பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் விரிவாக பேசியிருப்பதாக கூறியிருக்கிறார்.அத்துடன் அவர் வந்த காரியம் முடிந்துவிட்டது. அத்துடன் இந்தியா தமிழர்களோடு நிற்கும் என்றும் கூறியிருக்கிறார் அது உண்மைதான் தமிழர்களோடு நிற்காவிட்டால் இலங்கை இந்தியாவை கணக்கில் எடுக்கமாட்டாது என்பதுதான் உண்மை.1956ல் இருந்து எமது போராட்டம் ஒரு அஞ்சல் ஓட்டம் போல் தந்தை செல்வாவால் தொடக்கிவைக்கப்பட்டு 2009 ல் புலிகளின் தலைவர் திரு பிரபாகரனால் சம்பந்தன் அய்யாவிடம் கொடுக்கப்பட்டிருகிறது. ததேகூ ஒரு இனத்தின் சுபீட்சத்துக்காக வேலை செய்யவேண்டியவர்கள் இவ்வளவு அழிவுகளுக்கு பிறகும் இப்பொழுது கட்சி அரசியல் நடாத்திக்கொண்டிருக்கிறார்கள், நாங்கள் வேதனைப்படமுடியுமேயொழிய வேறு என்ன செய்ய முடியும்.
  14. சதாரணமாக அக்காவுக்கு தம்பி காவலுக்கு போவதும் அம்மாவுக்கு மகன் காவலுக்கு போவதும் நமது மரபு, அப்படியிருக்க உமாதேவியாருக்கு மகனாகிய பிள்ளையார் காவல் இருப்பதில் என்ன பிழையிருக்கிறது என புரியவில்லை.
  15. முன்னர் பதிவேற்றம் செய்யப்பட்ட ஈழ தமிழர்களின் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு என்னும் கட்டுரையின் பகுதி-2 நேற்று தவறுதலாக பிள்ளையாரின் உண்மையான வரலாறு என்னும் தலைப்பின் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டதற்காக மன்னிப்பு கேட்டுகொள்கின்றேன்.ஆனபடியால் பகுதி-2 மீண்டும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. முதல் பதிபில் கூறப்பட்ட காரனங்களிருந்து இந்தியாவால் தமிழர் தரப்புக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறேன், இனியும் தமிழர் தரப்பு இந்தியாவை உதவி செய்யும் என்றும் அழுத்தம் கொடுக்குமென்று நம்பியிருந்தால் அது இலவு காத்த கிளியின் நிலைதான் ஏற்படும். மக்களே மேலே கூறிய காரணங்களிலிருந்து இந்தியாவின் நிலைப்பாடு இப்பொழுது புரிந்திருக்குமென்று நம்புகின்றேன். தமிழர் தரப்பு இந்தியா மீது நம்பிக்கைவைக்க முடியாவிடின் மாற்றுத்திட்டம் என்ன என்பதைப்பற்றியும் இதை எப்படி சமாளிக்கலாம் என்பதுதான் இக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழர்களிடம் ஒரு பழமொழியிருக்கின்றது அதாவது கீரைக்கடைக்கும் ஒரு எதிர் கடை வேண்டுமென்பார்கள். அதன் சுருக்காமான விளக்கம் முதலாம் கடையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்றால் இன்னொரு கடை அருகே வரவேண்டுமென்பதுதான். இதே முறையில் இந்தியாவை தமிழர்கள் தங்கள் வழிக்கு கொண்டுவரவேண்டுமென்றால் தமிழர்கள் இன்னொரு நாட்டின் பக்கம் தங்களது பார்வையை திருப்பவேண்டும்.அந்த நாடு பலமான நாடாகயிருக்கவேண்டும் இதற்கு ஏற்ற நாடு சீனா என்பதுதான் எனது அபிப்பிராயம். நல்லாக யோசித்துபாருங்கள் நாங்கள் எதற்காக சீனாவை எதிரியாகபார்க்கவேண்டும். நன்றாக யோசித்து பாருங்கள் அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்சினை. உலக நாடுகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று எப்படி நல்லுறவை பேண விரும்பும்பொழுது பாதிக்கப்பட்ட தமிழர்தரப்புமட்டும் எதற்காக மற்றய நாடுகளுடன் உறவைபேணக்கூடாது? இதன் மூலம் இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளுடனும் உறவை பேணவேண்டும் என்பது எனது அபிப்பிராயம். வீட்டோ அதிகாரரமும் பலமான அரசாட்சியைக்கொண்ட சீனாவுடன் நட்பை ஏற்படுத்துவது பல பிரச்சினைகளையும் பல இனமக்களையும் வீட்டோ அதிகாரம் இல்லாத இந்தியாவிலும் பார்க்க சிறந்தது என்பது எனது அபிப்பிராயம். ஆரிய இந்திய ஆட்சியை எங்கள் தொப்புள்கொடியுறவென்றும் எங்கள் நட்பு நாடென்றும் தப்பு தப்பாக கணக்குபோட்டு மற்றய நாடுகளுடன் நட்பைபேண தவறிவிட்டோம். இதற்கு எங்கள் அரசியல் தலைவர்களும் ஒரு காரணம். 1960களில் எமது ஊர்களில் சீனா இல்ங்கை நட்புறவு கழகங்கள் பல இருந்தன ஆனால் இந்தியாவை நம்பி எல்லாவற்றையும் கைவிட்டோம் அதனால்தான் இந்தியா இப்பொழுது தான்தோண்றிதனமாக நடந்துகொள்கின்றது. எனது தனிப்பட்ட கருத்து இந்தியா தமிழர்களுக்கு எதுவுமே செய்யப்போவதிலை அத்துடன் இலங்கையை எதிர்த்து தமிழர்களுக்கு எதுவும் செய்யப்போவதிலை ஆனாலும் இந்தியா தமிழர்களின் நண்பன் என்பதை காண்பிப்பதற்கு கடைசியாக இந்தியாவுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கிறது அதுதான் புதிய அரசியலமைப்பில் கிழக்குமாகாணதில் முஸ்லீம் அல்லாத பகுதிகள் வடமாகாணத்துடன் இணைக்கப்பட்டு அதிகாரம் கூடிய ஒரு மாநிலம் உருவாக இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும். புதிய அரசியலமைப்பில் தமிழினத்துக்கு சாதகமாக தீர்வு கிடைக்காவிடின் தமிழர்கள் புதிய கொள்கைகளை உருவாக்கவேண்டும் அத்தருணத்தில் தமிழர் பார்வை சீனா பக்கம் திரும்பவேண்டும் தமிழர்கள் சீனாவை நண்பனாக ஏற்றுக்கொள்ளவேண்டும். இதன் மூலம் இலங்கையின் தென்பகுதியும் தமிழர்களின் வடகிழக்கு பகுதிகளும் சீனாவின் நண்பர்களாக மாறுவார்கள். அதே நேரத்தில் வடகிழக்கு பகுதியில் இந்தியாவுக்கு எமது அதிருப்தியை காட்டவேண்டும் இதன் மூலம் இந்தியா தமிழர்தரப்புக்கு எதுவும் செய்யவில்லை என்பதை விளக்கவேண்டும். இதன் அர்த்தம் இந்தியாவை எதிரியாக கருதவேண்டும்மென்பதில்லை. சீனாவுடன் நட்பை உருவாக்குவதற்கு பல வழிகள் உண்டு அவை யாவன தமிழர்களுக்கு இந்தியா மீதுள்ள அதிருப்திக்கான காரணத்தை விளக்கி இந்திய தூதுவருக்கு மின்னஞ்சல் அனுப்பப்படவேண்டும். வடகிழக்கு பகுதிகளில் இலங்கை சீனா நட்புறவுகழகங்கள் ஆரம்பிக்கப்படவேண்டும். வடமாகாணசபை அங்கத்தவர்கள் சீனா தூதுவராலயத்துக்கு சென்று வட மாகாணத்துக்கான அபிவிருத்திகளுக்கு உதவி கேட்கலாம் மற்றும் கலைக்குழுக்களை வரவழைக்கலாம். சீன அதிகாரிகளை தமிழ் பகுதிகளில் நடக்கும் விழாக்களுக்கு பிரதமவிருந்தினராக அழைக்கப்படவேண்டும். கனடா அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் பெரும் எண்ணிக்கையில் சீன மக்கள் வாழ்வதால் அந்த நாடுகளிலுல்ல தமிழ் அமைப்புகள் அவர்களுடன் நட்பைபேணி அவர்களை தமிழ்ர்பகுதிகளுக்கு அழைத்து வரவேண்டும் (இளைய சமுதாயத்தால் செய்ய்யமுடியும்). மேலே கூறப்பட்ட காரணங்கள் முலம் இதுவரை இந்தியாவிடம் இருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான ஏகபோக உரிமை சீனாவுக்கும் பகிரப்படவேண்டிவரும்.இதன் மூலம் இந்தியாவை தமிழர்தரப்புக்கு சார்பாக கொண்டுவரமுடியும் காரணம் புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு தமிழர்கள் பகுதி தேவை. இது கிட்டத்தட்ட இலங்கை அனுகுமுறையையொத்தது. வடபகுதிக்கு சீனர்கள் தமிழர்களின் விருப்பத்தின்பேரில் வருவார்கலேயானால் அது இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கும். இதன் மூலம் தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காக இந்தியா தமிழர்களுக்கு ஏதாவது செய்தேயாகவேண்டும், உதாரணத்துக்கு கடந்த ஆட்சிமற்றதின்பொழுது தமிழர்களின் தேவை மேற்குலக நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் தேவையாகயிருந்தது இதன் பொழுது த.தே.கூ.மேற்குலக நாடுகளின் முன்னிலையில் தமிழர்களின் முக்கிய கோரிக்கைகலான சமஸ்டி அரசியலமைப்பு அல்லது வடகிழக்கு இணைப்பு ஏதாவதொன்றை எழுத்துமூலம் உறுதி செய்திருக்கவேண்டும். ஆனால் சம்பந்தன் சுமந்திரனின் மேதாவிதனத்தால் தவறவிட்டுவிட்டோம். தந்தை செல்வாவுக்கு தெரியாத அரசியலா சுமந்திரனுக்கு தெரிந்துவிட்டது. இது ஒரு ஆயுதபோராட்டமோ அல்லது அகிம்சைபோராட்டமோ இல்லை தமிழ்மக்கள் எல்லோரும் தங்கள் கடமையையுணர்ந்து செய்யும் ஒரு செயல் உதாரணத்துக்கு சதாரண மக்களால் ஒரு மின்னஞ்சல் அனுப்பமுடியும் அதுபோல் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் சீன தூதுவராலயத்துடன் தொடர்பை ஏற்படுத்தலாம் அதேபோல் ஊர்களிலுள்ள விளையாட்டுகழகங்கள் சீன தூதுவ அதிகாரியை பிரதமவிருந்தினராக அழைக்கலாம் இவையெல்லாம் செய்யமுடியாதவையில்லை. தமிழர்களின் பலவீனம் என்னவென்றால் எங்கலால் எதுவும் செய்யமுடியாது என நினைப்பதும் அத்துடன் எங்களுக்காக யாராவது உதவி செய்யவேண்டும் என நினைப்பதும்தான். எப்பொழுதும் அமெரிக்கா என்ன செய்யும் இந்தியா என்ன செய்யும் என நினைப்போம் இது மாறவேண்டும். நான் ஒரு எழுத்தாளனில்லை எழுத்து பிழை இலக்கண பிழைகளிருக்கலாம் ஆனாலும் எழுதிய கருத்த்தில் பிழையிருப்பதாக நான் கருதவில்லை. உண்மையாக தமிழினத்தின் மீது அக்கறையிருந்தால் தமிழ் புத்துஜீவிகள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் மேற்கூறிய கருத்துக்களைக் குறித்து விவாதங்கள் நடாத்தவேண்டும் அத்துடன் புதிய கொள்கையொன்று உருவாக்கவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.