• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

காட்டுவாசி

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  25
 • Joined

 • Last visited

Community Reputation

3 Neutral

1 Follower

About காட்டுவாசி

 • Rank
  புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது கஜு கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம். அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரகமாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம். ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது. நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மை, அடர் கரைசலான சிறுநீரினை வெளியேற்றும் தன்மை மற்றும் உடலில் உள்ள தனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து, செயல் அற்ற தன்மை அதிகரிப்பதாகும் காரணங்கள் சிறுநீரகங்களை பாதிக்கும் நோய்கள் வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல் சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பினால உடலில் திரவம் மற்றும் தேவையற்ற வீணான பொருட்கள் சேர்ந்து இவை இரத்தத்திலும் அளவில் அதிகரிப்பதினால் அசோடிமியா மற்றும் யூரிமியா ஏற்படுகிறது. அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஐன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூரிமியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும். அறிகுறிகள் ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன உடல எடை இழப்பு குமுட்டல் வாந்தி பொதுவான உடல்நலக்குறைவு சோர்வு தலைவலி அடிக்கடி ஏற்படும் விக்கல் உடல் முழுக்க ஏற்படும் அறிப்பு (ப்ரூரைட்டிஸ்) பின் நிலைகளில் ஏற்படும் அறிகுறிகளாவன வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல் வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம் காணப்படுதல் மந்தமான துாங்கிவிழுகிற நிலமை, சுறுசுறுப்பின்மை, குழப்பம், சித்தபிரமை , நினைவற்ற நிலை தசை துடிப்பு அல்லது தசை இழுப்பு தோலில் வெள்ளைநிற படிகங்கள் கைகள் பாதங்கள் மற்றும் பிற பகுதிகளில் உணர்வு திறன் குறைதல் நோயுடன் தொடர்புடைய மற்ற கூடுதல் அறிகுறிகளாவன அதிக அளவில் இரவு நேரங்களில் சிறுநீர் கழித்தல் அதிக தாகம் ஏற்படுதல் தோல் நிறம் வெளிர்ந்து காணப்படுதல் நகங்கள் ஒழுங்கின்றி காணப்படுதல் சுவாசம் நாற்றம் எடுத்தல் உயர் இரத்த அழுத்தம் பசியின்மை எப்பொழுது மருத்துவ நிபுணரை அணுகுவது? தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் குமட்டல் அல்லது வாந்தி இருப்பின் மருத்துவரை அணுகலாம். அன்றாடம் வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு குறைந்தாலோ அல்லது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கான அறிகுறிகள் தோன்றினாலே மருத்துவரை அணுகலாம். தடுப்புமுறை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரத்தத்திலுள்ள சர்’க்கரை அளவினை மற்றும் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதின் மூலமும் புகை பிடிக்கும் வழக்கத்திலிருந்து விலகியிருப்பதன் மூலமும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதினை தடுக்கலாம். சிறுநீரகம் என்றால் பிறப்புறுப்பு என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. சிறுநீரகம் என்பது முதுகுத் தண்டின் இருபுறமும் விலா எலும்புகளின் கீழ்ப்புறத்தில் பாதி மூடப்பட்டுள்ள அவரை விதை வடிவுள்ள இரு உறுப்புகள் ஆகும். நாம் உயிர் வாழ இன்றியமையாத அங்கங்களில் ஒன்று சிறுநீரகம். மிகச்சிறிய உறுப்பாயிருப்பினும் சிறுநீரகங்களின் பணி வியக்கத்தக்கது. இரத்தத்திலிருந்து தேவையற்ற பொருள்களைப் பிரித்தெடுத்து சிறுநீராக வெளியேற்றும் இந்த இரண்டு சிறுநீரகங்களும் நமது உடலின் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் அங்கமாக மட்டுமே செயல்படுவதில்லை. இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது எலும்புகளை உறுதிப்படுத்துவது, இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவது, உடலின் நீர் மற்றும் அமிலப் பொருள்களைச் சீரான அளவில் கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர் நிலைப்பதற்கான இரசாயன அளவீடுகள் கண்காணிக்கப்படுவது போன்ற இன்யிறமையாத பணிகளைச் செய்யும் சிறுநீரகங்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவைதாம். சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகி வரும் சிறுநீர் இக்குழாய் மூலமாக சிறுநீர்ப் பையினை அடைக்கின்றது. சிறுநீர்ப் பையானது விரிந்து கொடுக்கக்கூடிய தசைகளால் ஆன பகுதி. அவ்வப்போது இத்தசைகள் சுருங்கி உள்ளிருப்பதை வெளியேற்றுகின்றன. சிறுநீர் இறக்கு குழாய் அமைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. பெண்களுக்கு இது வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது. நரம்பு மண்டலம் சிறுநீர்ப் பையில் சில சிறப்பான பணிகளை செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகுழாய்கள் மூலம் துளித்துளியாக சிறுநீர்ப் பைக்குக் கொண்டு வந்து சேர்க்க உத்தரவளிப்பது, சிறுநீர்ப்பையை விரிவடையச் செய்து சிறுநீரைத் தேக்கி வைப்பது, சிறுநீர்ப்பை ஓரளவு நிரம்பியதும் மூளைக்கு தெரிவிப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது. திடீரென்று இரவில் மட்டும் அதிகச் சிறுநீர் கழிப்பது பெரும்பாலும் சிறுநீரகப் பாதிப்பின் முதல் அறிகுறியாகும். இதுதவிர சிறுநீர் பாதையில் கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதனாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயினாலும் வயது முதிர்ந்த ஆண்களுக்கு சுக்கிலன் பெருத்துப் போவதாலும் இந்நிலை ஏற்படலாம். சிறுநீர் இறங்காமையும் ஒருவித நோய்தான். குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் சிறுநீர் பிரியாமல் இருந்தால் அது மிகவும் பயப்படத்தக்க நிலையாகும். சிறுநீரகம் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் முக்கியமான பணியை மேற்கொள்வதால் இரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் ஆகியவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படைந்ததாக அறிய முடியும். இவற்றில் யூரியாவின் அளவு 100 மிலி, ரத்தத்தில் 20 முதல் 40 மி.கி. வரை இருக்கலாம். சிறுநீர்ப் பாதையில் கற்கள் தானாகவே தோன்றும். இவை தோன்றுவது எதனால் என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை. இக்கற்கள் பெரும்பாலும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். இந்த வலி முதுகின் மேல்புறம் விலா எலும்புகள் முடியும் இடத்தில் ஏற்படும். கற்கள் சிறுநீர்க் குழாயில் இருந்தால் வலிமேலிருந்து கிழாக விட்டுவிட்டுத் தொடரும். பொதுவாக இதுபோன்ற சிறுநீரகக் கல்லடைப்பு நோய் ஏற்படாமல் தடுக்க மிக அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர்ப் பாதையில் கற்களுக்கான கரு தோன்றும்போதே அதை அடித்து செல்லும் அளவுக்கு தண்ணீர் குடிப்பது நல்லது. பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம். அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியா விட்டால் முடிந்த அளவு குறைத்து உட்கொள்ளலாம். கற்களின் இராசயன குணத்திற்கு தக்கவாறு உணவு உட்கொள்வதை மாற்றிக்கொள்ளவேண்டும். உதாரணமாக கந்தகச் சத்து அதிகம் உள்ள கற்களினால் இறைச்சி, மின், முட்டை ஆகியவை அதிகம் உண்ணக்கூடாது. மனித உடலின் ஆதார சுருதியான சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக இருக்கிறது. இதனை உணர்ந்தே சித்தர்கள் சிறுநீரகச் செயல்திறனை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும் யோக மார்க்கங்களையும் சித்த மூலிகை ரகசியங்களையும் கண்டறிந்து உலகிற்குப் பரிந்துரை செய்திருக்கின்றனர். அந்தக் காலத்தில் எல்லாம் இப்படி ஒரு நோயே இல்லை. பல்வேறு நோய்களைக் குறித்து பேசும்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய அங்கலாய்ப்பு, கிட்னியில் ஏற்படும் கல் அடைப்பு பற்றிய உரையாடலின் போதும் பலரிடம் வெளிப்படுகிறது. இது உண்மைதானா? நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். 7000 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மிகளின் கிட்னிகளில், கல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அப்படியானால், கிட்னிக்குள் கல் உருவாகும் தன்மை, மனித இனத்தின் தொடக்கம் முதலே இருந்து வந்துள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 5 லட்சம் பேர் வரும்போதே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய அனைத்து மருத்துவ முறைகளிலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுப்பதற்கும், உருவான பின்னர் கரைப்பதற்கும் எளிய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இந்த நோய் எந்த அளவிற்கு பரவலான நோயாக மாறி இருக்கிறதோ அந்த அளவிற்கு எளிதில் குணப் படுத்தக்கூடிய நோயாகவும் உள்ளது. கிட்னி கல் என்றால் என்ன? சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன. கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள் கிட்னியில் கல் உருவாவதற்கான காரணங்களை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன. இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும் நோய்களில் இவை தோன்றுகின்றன. பாரா தைராய்டு மிகுதி நோயும் (Hyperparathyroidis m), சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் (Urinary tractinfections) , , சிறுநீரக நோய்கள் (Cystic kidney diseases) போன்ற நோய்களும் இவ்வகைக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும். யூரிக் அமிலம், புரதச் சத்து சிதைப்பிற்கு பின்பு உண்டாகும் கழிவுப் பொருளாகும். இது ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி நொதிக்குறைகள் சிலவற்றில் யூரிக் அமிலம் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு. நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் oxalate மற்றும் phosphate உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன. சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் (Diuretics) கால்சியம் கலந்த antacid மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது. பிறவியிலேயே ஏற்படும் சில நொதிக் குறைகளில் சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக ஏதுவாகிறது. கிட்னி கற்கள் யாருக்கு வரும்- பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களக்கு இந்த நோய் வருகிறது. பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. நோயாளியின் பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர்களுக்கோ, இந்த பாதிப்பு இருந்தாலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். கிட்னி கல் – அறிகுறிகள் சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும். நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும். அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட், ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும். ஆராய்ச்சியின் முடிவுகள் Eric taylor MD மற் றும் அவருடைய சக ஆராய்ச்சியாளர்களும் நடத்திய மிகப் பெரிய ஆய்வின் சாராம்சம் : மூன்று பிரிவுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒன்று :-Health professionals follow up study 45,821 ஆண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு இரண்டு :- Nurses Health study I 94,108 வயது முதிர்ந்த பெண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு. மூன்று :- Nurses Health study II 1,01,837 இளம் பெண்களிடையே 14 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு Dr. Taylor குழு இந்த மூன்று பிரிவானவர்களில் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் எட்டு விதமான அளவுகோல்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். DASH (Dietary Approaches to Stop Hypertension) என்பது இந்த ஆய்வின் பெயர். இதில் உள்ள 8 அளவுகோள்கள் யாதெனில், அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது. அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது. அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள்வது. குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது. முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல் குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல். குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல். குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல். இப்படிப்பட்ட உணவு முறைகளை கடைபிடித்தவர்களிடையே அதிக ரத்த அழுத்தம் (Hypertension) , நீரிழிவு (Diabetes) , சிறுநீரக கற்கள் (Kidney stone) உருவாவது போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு குறைவான அளவே உள்ளது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளனர். நாம் இந்த ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள வேண்டியது :– மேற்கொண்ட உணவுப் பழக்கங்களை பின்பற்றினால், சிறுநீரக கல் உருவாகும் நிலை தடுக்கப்படும் என்பதே. சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க வந்த பின் திரும்ப வராமல் தடுக்க அறுவை சிகிச்சைக்குப் பின் திரும்பவும் கல் உருவாகாமல் தடுக்க மேற்கண்ட உணவு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதாவது, நார்ச்சத்து அதிகமான காய்கறிகள், பழ வகைகள், முழு தானிய வகைகள் மற்றும் பீன்ஸ் இவைகளை அதிகமாக ஆகாரத்தில் சேர்க்க வேண்டும். முக்கியமாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். 8 முதல் பத்து தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். மீன், உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். எனவே இவற்றை உட் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராச்ப்பெர்ரி போன்ற பழவகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை. புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி போன்ற பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. சாக்லேட், காஃபி, கீரைகள், டீ போன்றவற்றில் ஆக்ஸலேட் அதிகம் உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும். சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் த‌‌ற்போது இளைஞ‌ர், இளை‌ஞிகளு‌க்கு‌ம் கூட தோ‌ன்று‌கிறது. இத‌ற்கு பல காரண‌ம் இரு‌ந்தாலு‌ம், இதனை ச‌ரிபடு‌த்த வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சியமாகு‌ம். கடுமையான வ‌லி, ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌ப்ப‌தி‌ல் ‌சி‌க்க‌ல் போ‌ன்றவ‌ற்றை இது ஏ‌ற்படு‌த்த‌க் கூடு‌ம். இத‌ற்கு, ‌சில எ‌ளிய வை‌த்‌திய முறைக‌ள் உ‌ள்ளன. ஆயு‌‌ர்வேத‌த்‌தி‌ல் இவை கூற‌ப்ப‌ட்டு‌ள்ளன. அதாவது, வார‌த்‌தி‌ல் 3 நா‌ட்க‌ள் இடைவெ‌ளி‌யி‌ல் 2 முறை அதாவது செ‌வ்வா‌ய், வெ‌ள்‌ளி என வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். இ‌ந்த ‌கிழமைக‌ளி‌ல் ந‌ல்லெ‌ண்ணெ‌ய், ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய், ‌சி‌றிது கடுகெ‌ண்ணெ‌ய் ஆ‌கியவ‌ற்றை கல‌ந்து லேசாக(வெதுவெது‌ப்பாக) சூடா‌க்‌கி, அதனை வ‌யிறு, முதுகு, தலை ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் தே‌ய்‌த்து ஊற‌வி‌ட்டு ‌பிறகு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் தலை‌க்கு கு‌ளி‌க்க வே‌ண்டு‌ம். அ‌ன்றைய ‌தின‌ம் சா‌ப்‌பிடு‌‌ம் உண‌வி‌ல், சூடான ‌மிளகு ரச‌ம், கருவே‌ப்‌பிலை‌த் துவைய‌ல், தே‌ங்கா‌ய், ‌சீரக‌ம் சே‌ர்‌த்து அரை‌த்த பூச‌ணி‌க்கா‌ய் கூ‌ட்டு, மோ‌ர், கேர‌ட் போ‌ன்றவ‌ற்றை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். எ‌ப்போது‌ம் வெதுவெது‌ப்பான ‌நீரை‌ப் பருகுத‌‌ல் ந‌ல்லது. மேலு‌ம், ‌காலை வேளை‌யி‌ல் வெறு‌‌ம் வ‌யி‌ற்றுட‌ன் உ‌ள்ள போது ‌சி‌றிது நேர‌ம் ‌ஸ்‌கி‌ப்‌பி‌ங் என‌ப்படு‌ம் க‌யிறுதா‌ண்டு‌ம் உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்த‌ல் ‌மிகவு‌ம் ந‌ல்லது. ‌வீ‌ட்டு வேலைகளையு‌ம் சு‌றுசுறு‌ப்புட‌ன் செ‌ய்து வருவது உடலு‌க்கு ந‌ல்ல உட‌ற்ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம். இவ‌ற்றை செ‌ய்து வ‌ந்தா‌ல் ‌சிறு‌‌நீரக‌க் க‌ற்க‌ள் கரை‌ந்து போகு‌ம். ‌சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் கரைய ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டாலு‌ம், அதனுட‌ன் மே‌ற்கூ‌றிய பழ‌க்க வழ‌க்க‌ங்களையு‌ம் கடை‌பிடி‌ப்பது ந‌ல்லது. வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளும் ஆரம்பித்து விடும். இதைத் தவிர்க்க தினந்தோறும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து விடுங்கள். உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும். சிறுநீரகத்தைக் காக்க 7 பொன்விதிகள் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சிறுநீரக நோய்கள்பற்றிய விழிப்பு உணர்வை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே சிறுநீரக தினத்தின் நோக்கம். இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி சிறுநீரக தினம். சிறுநீரகத்தால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை நிபுணர் டாக்டர் என்.செழியன் பேசுகிறார். ”மனிதனுடைய தண்டுவடத்தின் இருபுறமும் பக்கவாட்டில் பீன்ஸ் விதை வடிவில் அமைந்திருக்கும் உறுப்பு சிறுநீரகம். பொதுவாக பெரியவர்களின் சிறுநீரகம் 11 முதல் 14 செ.மீ. நீளமும், 6 செ.மீ. அகலமும் இருக்கும். ஆண்களின் சிறுநீரகம் ஒவ்வொன்றும் 125 முதல் 170 கிராம் எடை கொண்டது. பெண்களுக்கு 115 முதல் 155 கிராம் எடை இருக்கும். இதயத்தில் இருந்து வெளியாகும் ரத்தத்தில் 20 முதல் 25 சதவிகிதத்தை சிறுநீரகம் பெறுகிறது. தினமும் நமது உடலில் உள்ள தேவையற்ற உப்பு மற்றும் தண்ணீரை சுத்திகரித்து, வெளியேற்றி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பணியை சிறுநீரகம் செய்கிறது. ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் நெஃப்ரான்கள் உள்ளன. இவைதான் ரத்தத்தில் இருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்று கின்றன. இது தவிர, மேலும் பல பணிகளை சிறுநீரகம் செய்துவருகிறது. சிறுநீரகப் பிரச்னை ஆரம்பத்திலேயே தெரியாது. பிரச்னை முற்றிய நிலையில்தான் அதன் அறிகுறிகள் தெரியவரும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிட்டால், அது சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கையையே மாற்றிவிடும். அதனால் இதை ‘சைலன்ட் கில்லர்’ என்றுகூட சிலர் வர்ணிப்பார்கள். சிறுநீரகத்தைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. சிறுநீரகத்தைப் பாதுகாக்க எளிய 7 பொன் விதிகள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடித்தாலே போதும். 1. ரத்த அழுத்தத்தைக் கண்காணித்தல் உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. எனவே, உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கலாம். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் உயர் ரத்த அழுத்தமே முக்கியக் காரணம். சராசரி ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் மெர்க்குரி (mmHg) என்று இருக்க வேண்டும். உங்கள் ரத்த அழுத்த அளவு 129/89 என்ற அளவில் இருந்தால், உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கைமுறை மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் இதைத் தவிர்க்கலாம். உங்கள் ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கு மேலே இருந்தால், டாக்டரிடம் சென்று ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆலோசனை பெற வேண்டும். 2. ரத்தத்தில் சர்க்கரை அளவு சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் பாதிப்பேருக்கு சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படுகிறது. அதில் 30 சதவிகிதத்தினருக்கு முழுமையாக செயலிழப்பு ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மற்றும் மரபியல் ரீதியாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து சிறுநீரகச் செயல்பாடு குறித்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. 3. ஆரோக்கிய உணவு மற்றும் உடல் எடைக் கட்டுப்பாடு சத்தான சமச்சீரான உணவைச் சாப்பிட்டு, உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பது சிறுநீரகப் பாதிப்புடன் தொடர்புடைய சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பையும் தவிர்க்கும். உடல் எடை அதிகரிப்பது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும் என்பதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை உப்புச் சத்து தூண்டுகிறது. எனவே, உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான உப்பின் அளவு ஐந்தில் இருந்து ஆறு கிராம் மட்டுமே. இதைவிடவும் குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். பதப்படுத்தப்பட்ட மற்றும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய் போன்ற உப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்த்து, காய்கறி மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். இது உடம்பில் ஏற்கெனவே அதிகப்படியாகச் சேர்ந்திருக்கும் உப்பின் அளவைக் குறைப்பதற்கும் பெரிய அளவில் உதவும். ‘ரெட் மீட்’ என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவையே. வாழைத்தண்டு சாப்பிடுவது சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் என்று மாற்று மருத்துவத்தில் கூறப்படுகிறது. வாழைத் தண்டில் உள்ள டையூரிடிக்ஸ் (Diuretics) என்கிற பொருள் அதிக சிறுநீர் கழித்தலைத் தூண்டி, சின்னச் சின்னக் கற்களை வெளியேற்றிவிடுகிறது. 4. குடிநீர் அளவு வெப்பப் பிரதேசமான நம்முடைய நாட்டில் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அளவு முறை பொருந்தாது. எனவே அவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவிலேயே தண்ணீர் குடிக்க வேண்டும்). அதற்காக ஒரே மூச்சில் லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துவதும் தவறு. ஒரு நாளில் அவ்வப்போது அளவான முறையில் தண்ணீர் அருந்துவதுதான் சரியான முறை. இன்றைய சூழலில் நிறைய பேர் ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால், அவர்களுக்கு தாகம் எடுப்பது இல்லை. ஏ.சி. அறையில் இருந்தாலும் சரி, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படித் தண்ணீர் குடிக்கும்போது சிறுநீரகத்தில் சோடியம், யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் வெளியேற்றம் சீராக நடக்கும். சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பும் பெருமளவில் குறையும். சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம். 5. புகை பிடிக்காதீர்கள்! புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். 6. சுய மருத்துவம் வேண்டாம் மூட்டு வலி, முதுகு வலிக்கு எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சாதாரணமாக சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்போதும் அல்லது அவசரக் காலத்தின்போதும், உரிய ஆலோசனையுடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். எனவே, நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டு வலி என்று தவிப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று வலி நிவாரணிகளைச் சாப்பிட வேண்டும். மாற்று மருத்துவம் என்ற பெயரில் தகுதிஇல்லாத ஒரு சிலர் தயாரிக்கும் லேகியங்களில் அதிக அளவில் உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இந்த உலோகங்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடியவை. எனவே, கவனம் தேவை. 7. உங்கள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அறிய… சிறுநீரக நோய் வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிய எந்தத் தொழில்நுட்பமும் இல்லை. எனவே, 40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பருமனாக இருப்பவர்கள், மரபுரீதியான சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வரும் பிரச்னை உடையவர்கள் மற்றும் ஒரு முறைக்கு மேல் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டவர்கள் – சீரான கால இடைவெளியில், சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ரத்தம் – சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனையுடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தும் சிறுநீரகச் செயல்பாட்டினைத் தெரிந்துகொள்ளலாம். இதயம், கல்லீரல் பாதிப்பு, அதிக ரத்த சோகை போன்றவையும்கூட சிறுநீரகத்தைப் பாதிக்கும். 50 வயது கடந்த ஆண்களுக்கு விந்துச்சுரப்பியில் (ப்ராஸ்டேட்) ஏற்படும் வீக்கத்தால் சிறுநீரகப் பிரச்னை வரலாம். எனவே, இவர்கள் மருத்துவரின் ஆலோசனையை முன்கூட்டியே பெறுவது நல்லது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால், வாரத்துக்கு மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். சில சமயம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அளவுக்குக்கூட இது கொண்டுபோய் விட்டுவிடும். எனவே, ஏழு பொன்விதிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால் சிறுநீரகப் பிரச்னை வராமல் காத்துக்கொள்ள முடியும். https://vettrimurasu.com/archives/898
 2. அண்மையில் கொழும்பில் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் சந்தித்து பேசியுள்ளன. அதில் நசீர் அஹமட்டை மீண்டும் முதலமைச்சராக கொண்டுவரவேண்டும் எனவும். அதற்கா எவ்வளவு பணம் செலவு செய்யவும் தயார். முஸ்லிம் நாடுகள் உதவ தயார். அதாவுல்லா மட்டும் கலந்துகொள்ளவில்லை. நசீர் அஹமட்டை முதலமைச்சராக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறவேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கில் தமிழ் நிலங்கள் பறிக்கப்பட்டு கோமணத்தோடு அலைகிறார்கள். இனி அம்மணம்தான்
 3. நடைபெற இருக்கும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தேசியக்கட்சிகளில் குறிப்பாக ஐக்கியதேசியக்கட்சி(UNP)யிலோ அல்லது சுதந்திரக் கட்சி(SLFP)யிலோ வாக்கு கேட்டு சூறையாடப்படும் தமிழர்களின் வாக்குகள் மாற்று இன முதலமைச்சர் ஒருவரையே பெற்றுத்தரும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அக்கறையில்லாத தன்மையுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நடந்து கொண்டு வருகின்றதையே அவதானிக்க முடிகின்றது. தற்போதைய நடவடிக்கைகளும் அதையே சுட்டி நிற்கின்றது. குறிப்பாக கிராமப்புறங்களில் வறுமையைப்பயன்படுத்தி வாக்குகளைச் சூறையாட தேசியக் கட்சிகள் புறப்பட்டுள்ள நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டும் உறங்கிக்கொண்டுதான் இருக்கின்றது அல்லது உறங்குவது போல் நடித்துக்கொண்டு இருக்கின்றதா? கிழக்கில் உள்ள தமிழ்த் தலைவர்கள் ஓரணியில் களமிறங்க வேண்டும் எனுங்கருத்து வலுப்பெற்று வரும் நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் அதன் கிழக்குமாகாண உறுப்பினர்களும் மௌனம் காப்பது உசிதமானது அல்ல. இந்தக் கோரிக்கை கைகளை உதாசீனப்படுத்துவார்களாக இருந்தால் கிழக்கு மாகாணத்தில் இவர்களின் அரசியல் நடவடிக்கைகள் அஸ்தமனமாகும் என்பதில் ஒருதுளி சந்தேகமும் இல்லை. ஒருவேளை எதிர்கட்சி தலைவர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டு கிழக்குத் தமிழர்களை அடமானம் வைக்க "ஒப்பந்தம்" ஒன்று செய்யப்பட்டு விட்டதோ என்கின்ற சந்தேகம் பரவலாக எழத்தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கடந்த மாகாண சபை ஆட்சிக்காலத்தில் கிழக்குத் தமிழர்களுக்கு இரண்டு தடவை துரோகம் இழைத்ததைப் போன்று மீண்டும் ஒரு வரலாற்றுத் துரோகத்தைச் செய்து முடிக்கத் தயாராகி விட்டதா என எண்ணத் தோன்றுமளவிலான செயற்பாடுகளே தற்போது உள்ளது. அண்மைக்காலமாக படுவான்கரைப் பிரதேசத்தை நோக்கியதான ஐக்கிய தேசியக்கட்சியின் படையெடுப்புக்கு எந்தவித எதிர் பிரச்சாரங்களையும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை என்பதிலிருந்து இவர்களுடைய கபட நாடகம் புலப்படத்தொடங்கியிருக்கின்றது. குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளருமான அரியநேந்திரத்தின் பட்டிப்பளை பிரதேசத்திலேயே அதிகளவான ஊடுருவல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் கண்டும் காணாதவராக இருக்க வேண்டும் என மேலுடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது போலவே தோன்றுகின்றது. சதித்திட்டங்களை தோற்கடித்து தமிழ்முதலமைச்சர் ஒருவரைக் கொண்டுவர அனைத்துத் தமிழ்த் தலைவர்கள் , புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், சமயப்பெரியார்கள், இளைஞர்கள், யுவதிகள் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம். நாம் "கிழக்கின் மைந்தர்கள்"
 4. இப்பொழுது அரிது. சில இடங்களில் பாவனையில் உண்டு. எனது அம்மம்மா இப்பொழுதும் தனது வயதுக்கார பெண்களுடன் என்னகா என்றுதான் பேசுவார்.
 5. ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சில தனித்துவமான. பேச்சுத் தமிழ் இருக்கின்றது. ஒருவர் பேசுகின்ற தமிழை வைத்தே அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விடலாம். அதிலும் கிராமப் புறங்கள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. சில பேச்சுத் தமிழ் சொற்கள் இன்று மறைந்து கொண்டு வந்தாலும் இன்றும் பல சொற்கள் பயன்பாட்டிலே இருப்பதோடு அச் சொற்கள் பேச்சுக்கு இனிமை சேர்ப்பதாக இருக்கின்றன. மட்டக்களப்பைப் பொறுத்தவரை சில சொற்களோடு "கா" சேர்த்து பயன் படுத்தும் வழக்கம் இருக்கின்றது. (ஏனைய பிரதேசங்களிலும் இருக்கலாம் இருந்தால் பின்னூட்டங்களில் தரலாம் நண்பர்களே) உதாரணமாக நாம் என்ன நடக்கிறது என்று கேட்பதனை என்னகா நடக்கிறது என்று பேசுவார்கள். யார் - யாருகா, எப்போ - எப்போகா, வா - வாகா, தெரியுமா - தெரியுமாகா, சாப்பிட்டாச்சா - சாப்பிட்டாச்சாகா போன்று "கா" சேர்த்து பயன் படுத்தப்படுகிறது. இங்கே பேசுகின்ற போது ஆணுடனோ, பெண்ணுடனோ பேசுவதாக இருந்தாலும் கா போட்டே பேசுகின்றனர். இப்போது இவ்வாறு கா போட்டுப் பேசுவது இளைய சமுதாயத்திடம் குறைவான பயன்பாட்டில் இருந்தாலும். வயது வந்தவர்களாலும், கிராமப்புறங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. என்ன என்பதற்கும் என்னகா என்பதற்கும் இடையிலே ஒரு அன்பு அல்லது பாசப்பிணைப்பு வித்தியாசங்கள் இருப்பதாக உணரப்படுகின்றது. என்ன என்பதனைவிட என்னகா என்பது பேசுபவர்களுக்கிடையே ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்துகின்றது. என்ன என்பது நாம் பேசும் தொனியிலே வித்தியாசப் படுகிறது. என்ன என்று கோபமாகவும் கேட்கலாம் சந்தோசமாகவும் கேட்கலாம். என்னகா எனும்போது பெசுபவர்களுக்குள்ளேயான உறவு அல்லது அன்பு நெருக்கமடைவதாக உணர்கின்றனர். இன்றும் கிராமப் புறங்களிலும், முதியவர்களாலும் கா சேர்த்து சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று மறைந்து வருகின்ற உங்கள் பிரதேசத்துக்குரிய பேச்சுவழக்கு சொற்களையும் எழுதலாமே?
 6. அவங்களுக்கு இது எல்லாம் கண்ணுக்கு தெரியாது. கிழக்கை அடகு வைத்துவிட்டார்கள். கிழக்கு தமிழர்கள் கோமணமும் இன்றி விரைவில் வருவார்கள்
 7. கிழக்கு மாகாணம் பற்றிய பார்வை. முக்கியமாக போனவருடம் இருந்த கிழக்கு மாகாணத்திற்கும் தற்போதுள்ள கி.மா நிறைய வேறுபாடுகள். ஒவ்வொரு நாட்களும் கிழக்கினை தமிழர்கள் இழந்து வருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. திட்டமிடப்பட்டு திருகோணமலை அம்பாறை மாவட்டங்களை பறித்துவிட்டார்கள். மிகுதி மட்டக்களப்பும்; படுவான்கரை தவிர்ந்த எழுவான்கரையின் பெரும்பான்மை நிலங்களின் உரிமைகளும் மாற்றிக்கொண்டிருக்கிறது. படுவான்கரையும் அபிவிருத்தியற்ற வானத்தை பார்த்த பூமியாக இருக்கிறது. மூன்று மாவட்டங்களிலும் மட்டக்களப்பு தவிர்ந்த ஏனையவைகளில் சிங்கள மொழி தெரியாவிட்டால் அடிப்படையான தேவைகளை கூட நிறைவுசெய்ய முடியாது. தமிழ்மொழி தெரியாத தமிழர்கள் அங்கு உருவாகத் தொடங்கியுள்ளார்கள் என்பது கசப்பான உண்மை. கல்வி பீடங்களை எடுத்துக்கொண்டால் திருகோணமலை வளாகம் எப்பவோ பெரும்பான்மையினத்தினரால் நிரப்பப்பட்டுவிட்டது. தென்கிழக்கு முஸ்லீம்களால் நிரப்பப்பட்டுவிட்டது. மிகுதியான கிழக்கு பல்கலைக்கழகம் தற்போதைய நிலையில் கலைப்பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களின் பெரும்பான்மை சிங்கள மாணவர்கள். காலப்போக்கில் அனைத்தையுமே முழுமையாக விழுங்கிவிடுவார்கள். திணைக்களங்களை எடுத்துக்கொண்டால் வைத்தியசாலைகள் அனைத்திலும் பெரும்பான்மை இனத்தவரே அதிகம் தமிழரின் அளவு மிக சொற்பமே. வேறுதிணைக்களங்களில் சிற்றூழியர் அனைவருமே பெரும்பான்மையினர். முக்கிய பதவிகளும் பெரும்பான்மையினரே அலங்கரிக்கின்றனர். தமிழர்களின் வரலாற்று நிலங்கள் சின்னங்கள் யாவுமே பௌத்தசமய சின்னங்களாகின்றன. குறைந்தபட்சம் எம்மைவிட சிறுபான்மையின முஸ்லீம்களால் நிலஅபகரிப்பு உற்பட மதமாற்றங்கள் என அனைத்துமே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படுகிறது. தமிழர்கள் பூர்வீக இடமான கல்முனையினை பிரதேசசெயலகமாக தரமுயற்த்துவதற்கு முஸ்லீம் தலைவர்கள் மக்கள் எதிர்ப்பாக இருக்கிறார்கள். இவ்வாறு தமிழர்கள் கிழக்கை இழந்துவருகின்றமையைக் கூறிக்கொண்டே போகலாம். அரசியல், வாழ்க்கைமுறை, பொருளாதாரம் என அனைத்திலும் கிழக்கு மாகாணம் வேறுபட்டது அவர்களை அவர்களே ஆளும் நிலை வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது. அதேபோல் வடக்கினை ஒத்ததான அரசியல் நகர்வுகள் கிழக்கு மாகாணத்திற்கு பொருத்தமானவையல்ல என்பதே யதார்த்தம்.
 8. விடுதலைப்புலிகள் தூர நோக்கோடு பொருண்மிய துறையினால் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட கிரான் #திலிபன் மருத்துவமனை, ஆயித்தியமலை அரிசி ஆலையும் நெசவு கைத்தறி நிலையமும் தற்போது அநாதையாய் காட்சியளிக்கின்றது. இதில் திலிபன் மருத்துவமுனை எம்மால் ஊடகத்திற்கு வெளிப்படுத்தியதையடுத்து அப்பகுதியில் இரு இடங்களில் மருத்துவ சேவையை மீள வழங்கி வருகின்றார்கள் #மட்டக்களப்பு தமிழ் சமூகத்தின் அர்ப்பணிப்பாளர்கள். இதே போன்று ஆயித்தியமலையில் புதிய தொழில் நிறுவனங்கள், படுவான்கரை பகுதியில் உற்பத்தி நிலையங்கள் பெரியளவில் உருவாக்கப்படாத நிலையில் இப்படியான பழமை வாய்ந்த எமது தமிழர் பொருளாதர மறுமலர்ச்சியின் திணைக்களங்களை நவீன தொழினுட்ப உபகரணங்களையும் உள்வாங்கி இவ் நிலையத்தை திட்டமிடலுடன் செயற்படுத்தலாம். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் அண்மைக்காலத்தில் பாரிய அனர்த்த பாதிப்புகளுக்கு முகம்கொடுத்த ஓர் மாவட்டமாகும். இயற்கையாகவே கடின உழைப்பும் வந்தாரை வரவேற்கும் பண்பும்கொண்ட இப்பிரதேசவாழ் மக்கள் தொடர்ச்சியாக அனர்த்தங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. இத்தனை இழப்புகளுக்கு மத்தியில் அவர்கள் இம்முறை காலபோகத்தில் தமது வயல்நிலங்களை விதைத்துவிட்டு காத்திருந்த வேளையில்,அடைமழை, வெள்ளப்பெருக்கு என்பவற்றால் அநேகமான வயல் நிலங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அழிவடைந்தன. இந்த வேளையில் அவர்கள் எஞ்சிய வேளாண்மையை விற்பதற்கு முயற்சித்த வேளையில் அக்கொள்வனவுக்கு உரிய நடைமுறைகள் உரிய காலத்தில் எடுக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். மட்டக்களப்பை எடுத்துக்கொண்டால் படுவான்கரை, எழுவான்கரை என இரு பாகங்களாக அவதானிக்கலாம். இதில் எழுவான்கரை பாகமானது கடல்சார்ந்த பிரதேசமாகும். இங்குதான் அநேகமானோர் வாழ்கிறார்கள். அடுத்து படுவான்கரை பாகத்தை எடுத்துக்கொண்டால் இதுவே விவசாயம் விளையும் பூமியாகும். இது ஆற்றின் மறுபுறம் காணப்படுகின்றது. 1970 களில் அதிக உற்பத்தி கண்டது இப்பிரதேசம். இங்கு உற்பத்தி செய்யப்பட்ட உணவுத்தானியங்கள் நாட்டின் ஏனைய பாகங்களுக்கும் எடுத்துச்செல்லப்பட்டன. ஆனால் இன்று அந்நிலை இல்லை. இடையே யுத்த காரணங்களால் விவசாய நிலங்கள் பல கைவிடப்பட்டன. 2500 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய இம்மாவட்டத்தில் 65000 இற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வாழ்கிறார்கள். 65000 விவசாய குடும்பங்களில் 25000 குடும்பங்களே இருபோகமும் செய்கிறார்கள். ஏனைய 40000 குடும்பங்களும் ஒரு போகம் மாத்திரமே செய்கிறார்கள். ஒரு ஆண்டினை கருத்திற்கொண்டால் சிறுபோகத்திற்க்கான பயிர் செய்யக்கூடிய மொத்த நிலப்பரப்பு 53368 ஏக்கர் ஆகும். இதில் பாரிய நீர்ப்பாசன திட்டத்தில் 5998 ஏக்கரும் தங்கியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகத்தில் ஆகக்கூடுதலாக 151463(ஒரு இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து நானூற்று அறுபத்தி மூன்று ) ஏக்கர் பயிர்ச்செய்கை பண்ணப்படுகின்றது. இதில் 51344 ஏக்கர் பாரிய நீர்ப்பாசன திட்டத்தின் ஊடாகவும், 16645 எக்கர் சிறு நீர்ப்பாசன திட்டத்தின் ஊடாகவும் ஏனைய 83474 ஏக்கர் மழையை நம்பி (வானம் பார்த்த பூமி) ஆகவும் விவசாயம் செய்கின்றார்கள். இதில் ஏறக்குறைய 55 வீதமான வயல்கள் மழையை நம்பியே உள்ளன. கடந்த ஆண்டு 15000 இற்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை. 151463 ஏக்கரில் அறுவடை இடம்பெற்றது 136974 ஏக்கரிலேயே ஆகும். கடந்த வெள்ள அனர்த்த நிலைமைகளால் பாத்திப்படைந்த விவசாயிகளுக்கு அவர்களின் நெல்லை ஒரு மூடை 2000 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதாக அரசாங்கம் அறிவித்த போதிலும் நெற் சந்தைப்படுத்தும் சபை சரியான வேளையில் நெற் கொள்வனவை மேற்கொள்ளாததனாலும் உரிய அதிகாரிகளின் அசமந்த போக்கினாலும் விவசாயிகள் வெறும் 980 ரூபாவிற்கு கூட நெல்மூடைகளை விற்பனை செய்யவேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதில் இன்னுமொரு விடயமாக இடைத்தரகர்களான முஸ்லிம்களின் வர்த்தகர்களுக்கு துணை போகும் தமிழர்களின் மறைமுக செயற்பாடுகளையும் கூறலாம். அதாவது விவசாயிகளுக்கு கடனாக பணம் கொடுத்தல், உரவகைகளை கொடுத்தல், அறுவடை இயந்திரத்தை கொள்வனவு செய்ய சிரமப்படும் விவசாயிகளுக்கு அத்தகைய உபகரணங்களை கடனாக பெற்றுகொடுத்தல் போன்ற சிறு சிறு விடயங்களில் உதவுவதாக செயற்பட்டு பின்பு வேளாண்மை காலத்தில் அதனை உடன் அறவீடு செய்யவேண்டி குறைந்த (அறாவிலை) விலையில் வேளாண்மை விளைவை சுரண்டி விடுகின்றனர். வேளாண்மை விளைவதற்கு அத்தியாவசியமாக காணப்படும் நீர்ப்பசனதிட்டங்களை எடுத்துக்கொண்டால் 1970-1980 களில் பல கோடிகணக்கான செலவில் உருவாக்கப்பட்ட 'மாதுறு ஓயா'' திட்டம் தமிழ் விசாயிகள் வாழும் பிரதேசங்களை அண்டி அமைக்கப்படவில்லை. இதனால் தமிழ் விவசாயக்குடும்பங்கள் நிர்க்கதியாகினர். அதுமாத்திரமல்ல இன்னும்பல குளங்கள் சரியான முறையில் புனரமைக்கப்படவில்லை. நாடளாவியரீதியில் 10000 குளங்கள் புனரமைக்கப்புகின்ற வேளையில் கிழக்கில் இத்திட்டத்திற்கு என்ன நடைபெற்றுள்ளது? கிரான் கோரளைப்பற்று தெற்கு பிரதேசத்தில் நான்கு ஆறுகள் வாழைச்சேனையின் வாவியூடாக கடலில் சங்கமிக்கின்றன. இதனால் வெள்ளப்பெருக்கு அனர்த்தம் அவ்வப்போது ஏற்படுகின்றது. இங்கு அணைக்கட்டு உருவாக்கப்பட்டு அது முறையாக திசைதிருப்பப்பட்டால் இந்நீரைக்கூட சரியான முறையில் சேமித்து வேளாண்மை போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். விவசாயிகளுக்கான நன்னீர், நீர்வள விடயங்கள் இவ்வாறு முறையற்ற பராமரிப்பால் சீரழிந்து போய்க்கொண்டிருக்கையில் அறுவடை நெல் அரிசியாக்கப்பட்டு அது சேமிக்கப்படக்கூடிய நெற்களஞ்சியசாலைகள் பல இன்னும் பூரணமாக இயங்க வைக்கப்படவில்லை. புலிகளின் காலத்தில் ஆயித்தியமலை பிரதேசத்தில் நெற்களஞ்சியசாலையும்இ அரிசியாலையும் காணப்பட்டன இன்று அவைகூட தூர்ந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளன. வந்தாறுமூலையில் காலஞ்சென்ற அமைச்சர் தேவநாயகம் அவர்களின் காலத்தில் நெற்களஞ்சியசாலை மற்றும் அரிசியாலை என்பன நிறுவப்பட்டன. பின்னர் யுத்தகாலத்தில் அந்த கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. இன்றைய சூழ்நிலையை எடுத்துக்கொண்டால் ஒரு சில தமிழர்கள்தான் அரிசியாலயை நடத்துகின்றனர். ஏனையோர் வேறு தொழில்களுக்கு மாறியுள்ளனர். யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளாகும் இன்றைய காலகட்டத்தில் பொருளாதார மற்றும் உணவின் தன்னிறைவைக்காண அனைவரும் பாடுபடும் வேளையில் அரிசி உற்பத்தியில் முன்னிலைமை வகித்த கிழக்கு மாகாணமும் அதன் தமிழ் விவசாயிகளும் சரியான முறையில் பராமரிக்கப்பட்டாலே முழு நாடும் அரிசித்தன்னிறைவை அடையமுடியும். அவ்வாறு இல்லாவிடின் அதிகாரிகள் தொடர்ந்தும் அசமந்தப்போக்கை கடைப்பிடித்தால் கிழக்கின் விவசாயிகள் குறிப்பாக தமிழ் விவசாய குடும்பங்கள் தொடர்ந்தும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுவது இயலாத காரியமாகலாம். நாட்டின் முதுகெலும்பாக உழைக்கும் இவ் விவசாயிகளை சரியானமுறையில் கவனிப்பது இன்றியமையாத ஒன்றாகும். கிழக்குவாழ் தமிழ் விவசாயிகள் தொடர்ந்தும் தமது விதை நிலங்களில் விவசாயத்தில் ஈடுபடுவதா? இல்லை அவர்கள் மனமுடைந்து எதிர்காலத்தை இழப்பதா? இவ்வினாவிற்கு விடை காண்பது இன்றைய காலகட்டத்தில் ஓர் முக்கிய விடயமாகும். கிழக்கு மாகாண விவாசாய அமைச்சர் மற்றும் தேசிய தமிழ் அமைச்சர்களான மனோகணேசன் ஐயா அவர்கள் இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி நடவடிக்கை எடுப்பதன் மூலம் குறிப்பாக கிழக்கில், பொதுவாக முழுநாட்டின் அரிசித்தன்னிறைவை ஈட்டலாம் என்றும், .
 9. வாகரை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஆழங்குளம் பிரதேசத்தில் 30 மருதமுனையை சேர்ந்தமுஸ்லீம் குடும்பங்களை முதல் கட்டமாக குடியேற்ற அரசாங்க அதிபரின் அங்கிகாரமும் மாகணசபையின் அனுமதியும் அளிக்கப்படு அதற்கானவீட்டு திட்ட பணிகள் எதிர்வரும் வாரங்களில் அமுல்படுத்தபடவுள்ளது இதனை சிப்லிபாறுக் முன்னின்று நடத்துகிறார் இவர்தான் முஸ்லீம்கள் மட்டக்களப்பின் மொத்த நிலப்பரப்பில் 2% நிலப்பரப்பில் குறுகி வாழ்வதாகவும் சனத்தொகை பரம்பல் விகிதத்தில் அவர்களுக்கு 30%நிலப்பரப்பு காணப்படவேண்டும் எனும் பிரச்சாரத்தை தொடங்கிவைத்தவர், இவ்வாறு ஏனைய மாவட்ட முஸ்லீம்களை இங்கே கொண்டுவந்து குடியேற்றி நிலப்பரம்பலையும் தமிழ் மக்களின் பரம்பலை குறைத்து கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லீம்களின் ஆதிக்கத்தில் கல்குடா தொகுதியை மாற்றவும் தனி புணானை பிரதேச செயலகம் ஒன்றை முஸ்லீம்களுக்காக உருவாக்கி கிழக்கில் தமிழ் மக்கள் மட்டக்களிப்பில் மாத்திரம் பெரும்பாண்மையாக வாழ்வாதனால் அதனையும் அழித்து தமது முஸ்லீம் இராச்சிய கனவை மிக தெளிவாக நகர்த்தி செல்கின்றனர். இன்னும் தமிழர்கள் விழித்துக்கொள்ளவில்லை என்றால் நாளை உங்கள் இருப்பும் வரலாறும் கிழக்கில் இருந்து வடித்து துறைத்து எறிந்து புதிய வரலாறை அவர்கள் ஏற்படுத்திவிடுவார்கள். அத்தோடு கிருமிச்சை குஞ்சன் குளம் அடுத்தபடியாக குடியேற்றம் தயார் நிலையில் இருக்கிறது மார்கழியில் ஆரம்பம் ஆலங்குளம் தொடக்கம் கஜுவத்தை வரை குடியேற்றத்தை இணைத்து மிக்ப்பெரிய முஸ்லீம் சாம்ராச்சியத்தை அமைக்க மட்டு அரச அதிபரும் துணைநிற்பது எமது அரசியல் வாதிகள் உயிர்வாழ தகிதியற்றவர்கள் என்பதை காட்டுகிறது. அத்தோடு மருதங்குளம் குஞ்சன் குளம் போன்ற பகுதிகளில் விவசாயம் செய்த முஸ்லீம்களுக்கு ரிதிதென்னையில் நிம் வழங்கப்பட்டது. புலிகள் காலத்தில் அவர்களின் ஒப்புதலில் நல்லெண்ண நடவடிக்கையாக ஆனால் இன்று ரிதிதென்னை தனி முஸ்லீம்பிரதேசமாக மாறிவிட்டது!! இலங்கை சட்டத்தின் படி காணி இல்லாத ஒருவர் அரச காணியொன்றை அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் இந்த நடைமுறை தமிழர்களுக்கு தெரியாது காரணம் எமது அதிகாரிகள் ரோசம் கெட்டவனுகள் யாரும் தெரியப்படுத்துவதில்லை ஆனால் இரண்டு மூன்று காணிகள் உள்ள முஸ்லீம்களுக்கு அரச காணிகள் வழங்கபடுகிறது இவை அனைத்தும் மட்டகளப்பு கச்சேரியில் உள்ள நில மற்று காணி அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கிறது இவ்வளவு பெரிய குடியேற்றம் பற்றி இதுவரை எந்த தமிழ் ஊடகங்களும் கண்டுகொள்ள வில்லை! தமிழ் அரசியல் வாதிகளும் கண்டுகொள்ளவில்லை. வெருகல் முதல் வாழைச்சேனை வரை தமிழர்கள் நிலம் பறிபோய் தமிழர்கள் முடக்கபடுவார்கள் அரச காணிகளை தனியே முஸ்லீம்களுக்கு மட்டும் பிரித்து கொடுக்கும் எமது பண்ணாடைகள் ஏன் வரப்போகும் மிகப்பெரிய ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள்? ஒட்டமாவடி காத்தான்குடி ஏறாவூர் மருதமுனை அடுத்து வாகரை இப்படியே போனால் எமது அடுத்த தலைமுறை எங்கே போவது ? மக்கள் கச்சேரிக்கு போகவேண்டும் அங்கே நடப்பதை பார்க்க வேண்டும் இந்த செய்தி ஊடகங்களில் வரவேண்டும் ஒரு துண்டு நிலம் கூட இல்லாத எத்தனையோ தமிழர்கள் இருக்கிறார்கள் அவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு உடனடியாக அரச காணிகள் பகிர்ந்தளிக்கபட வேண்டும் அரச காணியை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் அத்தோடு அரச அலுவலகங்களில் வேலை செய்யும் உயர் அதிகாரிகளும் வரும் கடிதங்களை நன்கு படித்துவிட்டு கையெழுத்து இடுங்கள் 5க்கும் பத்துக்கும் ஆசைபட்டு கையெழுத்து போட்டால் உங்கள் குடும்பம் நடு வீதிக்கு வரும் வர வைப்போம் தமிழர் நிலம் பறிபோவதர்க்கு தமிழர்கள் காரணமாக இருந்தால் துரோகிகளாக்கபட்டு சமுகத்தில் இருந்து ஒதுக்கபடுவீர்கள் களுவாஞ்சிகுடியில் 20 ஏக்கர் அரச காணி இருகுகிறது அதையும் முஸ்லீமுகளுக்கு கொடுத்தாலும் சொல்வதர்க்கில்லை நிலம் இல்லாதவர்கள் கச்சேரிக்கு போய் நடைமுறை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் மாகாண சபை மாதர் சங்கம் இதுபற்றி தெரியாமல் இருப்பது ஏனோ ? நன்றி
 10. வணக்கம் உறுவுகளே நானும் இன்றுமுதல் உங்களோடு சேர்ந்து பயணிக்க வந்துள்ளேன். தமிழ் மக்களின் அவலங்களையும், சமகால அரசியல் பார்வைகளையும் தினம்தோறும் உங்களோடு பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளேன். எமது தமிழ் உறவுகளின் வறுமையை ஆயுதமாக பயன்படுத்தி முஸ்லிம்கள் திட்டமிட்டு மதமாற்றத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர், வடக்கு கிழக்கு பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் முஸ்லிமுக்கு மாறியுள்ளன. இவற்றை தடுப்பதற்கான வழிகள் என்ன?