Jump to content

மியாவ்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  281
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by மியாவ்

 1. இது தவறான கருத்து... நான் என் வாழ் நாளில் ஏற குறைய பத்து பதினைந்துக் குள் இழுத்திருப்பேன்... செய்தி கூடுதலாகவே கிடைத்துவிட்டதால் மேற்கொண்டு இழுப்பதில்லை என்று முடிவெடுத்தாகி விட்டது... மேற்கொண்டு அவசியமும் இருக்காது என்றே கருதுகிறேன்...
 2. நயூட்ரினோ கூட ஒளியை விட சற்று வேகம் குறைவாகவே பயணிக்கும்...
 3. "ஒளி"யை விட வேகமாக பயணம் செய்வது எது???
 4. ஆங்கில படம் தி மண்டேலா எஃபக்ட் (The Mandela Effect) படத்தில் Parallel universe பற்றி அழகாக காட்டி இருப்பார்கள்... இந்த படத்தில் கோடிட்டு காட்ட வேண்டிய இடம் என்றால் ஒரு பெண் குழந்தை விளையாட்டு பொம்மையை எடுத்து கொண்டு தன் பெற்றோர்களின் மேற்பார்வையில் கடலுக்குள் குளிக்க சென்று இறந்து விடும்... அதே குழந்தை படம் முடியும் தருவாயில் பொம்மையை எடுத்து கொண்டு ஓடுகையில் குழந்தையின் தந்தை அந்த பொம்மையை வைத்துவிட்டு விளையாட செல்லுமாறு கேட்பதனில் அடங்கி இருக்கிறது சூட்சுமம்...
 5. என்னிடம் அறிவியல் சார்ந்த ஒரு கேள்வி இருக்கிறது... அதை கேட்கவே இந்த அவசரம்... தங்களது கேள்விக்கு எனது சிறு மூளைக்கு எட்டிய பதில் B...
 6. தாங்களே சொல்லிவிடுங்கள் யாருக்கும் தெரியவில்லை போலுள்ளது...
 7. வேரொறுவரின் கனவில் கூட இந்த உலகமானது இயங்கி கொண்டிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் அறிவியல் உலகில் உலவி வருகிறது... --Parallel Universe பற்றி யவரேனும் குறுகலாக இனிப்பான விளக்கம் அளித்தால் சுவையாக இருக்கும்...
 8. திமுகவின் மொத்த வாக்கு சதவிகிதமே 37%... தாங்கள் குறிப்பிட்டதிலேயே மிக குறைந்த 5% ஐ எடுத்துக்கொண்டாலும் கூட வாக்கு வங்கியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கிறது... இது அதிமுகவிற்கும் பொருந்தும்... இதனுடன் மீடியா... தேர்தல் வந்தால் தமிழ்நாடு ஒரு திருவிழா கோலமே காணும்... தமிழ்நாடு அரசு இன்று கூட (கொரோனா காலத்தில் கூட) டாஸ்மாக் வருமானத்தை மட்டும் தான் பெருமளவில் நம்பி இருக்கிறது என்பதை தாண்டி வேறென்ன உதாரணம் வேண்டும் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் அறியாமையில் இருக்கிறார்கள் என்பதற்கு... 50 ஆண்டு கால திராவிட ஆட்சி என்று பெருமை வேறு... --மன்னிக்கவும் இதை தட்டச்சு செய்யும் பொழுது இது அதற்கான திரி இல்லை என்பதனை மூளை சுட்டி காட்டி கொண்டே தான் இருக்கிறது...
 9. தமிழ்நாட்டில் வாக்கு செலுத்தும் உரிமை உள்ள நூறு சதவிகிக மக்களில் 65 முதல் 70% மக்கள் மட்டுமே வாக்கு செலுத்துகின்றனர்... ஓரளவு வாக்குரிமையை புரிந்தவர்களிடம் பாஜக உள்ளே புகுந்து இந்துத்துவத்தை புகுத்திவிடும் என்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறது திராவிடம்... இது வாக்கு செலுத்துபவர்களில் குறைந்த அளவே உள்ளது... நடுத்தர வர்க்கத்தினரும் வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களிடம் பணத்தை வைத்து விளையாடுகிறது திராவிடம்... இதை தான் மக்களின் அறியாமை என்றேன்... டல்பன் மக்கள் தான் தேர்வு செய்து விட்டனரே என்ற கருத்திற்கு அடிப்படையாக வைத்து எழுதிய கருத்தாகும்... நான் சீமானை தவிர்த்து யாரை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் இயங்க வேண்டும் என்பதற்கு சம்பந்தமே இல்லாமல் பதிலளித்தார்... சரி அதற்கு பதிலளிப்போம் என்றால் மறுபடியும் சம்பந்தமே இல்லாமல் வேறு பதிலளிக்கிறார்... இப்பொழுது விவாதம் எதை நோக்கி போகிறது என்றே எனக்கு தெரியவில்லை...
 10. ஒவ்வொரு கருத்திற்கு எதிரான உங்கள் கருத்து சுத்தமாக சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது...
 11. ப்ரொஃபைலில் உடனடியாக இடத்தை அப்டேட் செய்து விடுகிறேன்... எனது தமிழ் அவ்வளவு அழகாகவா இருக்கிறது... மகிழ்ச்சி...
 12. இத நான் ஒத்துக்க மாட்டேன்... கைய்ய வச்சானு எங்க இருக்கு... ராஜா, பிறகு சின்ன, பிறகு ஆள் காட்டி விரலை வைத்து எதையோ சுட்டி காட்டுவது போலுள்ளது... அது எப்படி கைய்ய வச்சானு வரும்...
 13. தமிழநாட்டு மக்கள் தீர்மானிக்கவில்லை... தமிழகத்தை சுரண்டி தமிழர்களை தேர்தலின் போது பிச்சை எடுக்க வைத்து தமிழர்களை அறியாமையில் மிதக்கவிட்டு தீர்மானிக்க வைத்துள்ளனர்... தமிழகத்தில் சன நாயகமா இருக்கிறது... ஆங்கலேயனுக்கு பிறகு திராவிடம் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து கொண்டது... தமிழ்நாட்டிற்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்ல... திராவிடத்தின் பண பலத்தில் அடிமைபட்டு கிடக்கிறோம்... எங்களுக்கான சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக திராவிடத்திடம் இழந்து கொண்டிருக்கிறோம்... இதே நிலை தொடர்ந்தால் ராமசாமியும் கருணநிதியும் மட்டுமே (மட்டுமே) தமிழ்நாட்டின் அடையாளமாக இருப்பார்கள்... நாங்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக்கபடுவோம்...
 14. ஓரளவு நன்றாகவே புரிந்து கொண்டேன்... கறுந்துளை விண்வெளியை (Space) வளைக்க கூடியதா, அசுர பலம் கொண்ட புவியீர்ப்பு சக்தி கொண்டதா... அறிவியலில் இது போன்று இருவேறு கருத்துகள் நிலவுகின்றன... இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை புவியீர்ப்பானாலும் சரி விண்வெளியை வளைக்க கூடியதாக இருந்தாலும் சரி ஒளி அதனை கடந்து தப்பிக்க முடியாமல் அதனுள் சென்று விடும் என்பது...
 15. அவர் குப்பை கொட்டிய பிறகு அள்ளி போட நீங்க வருவீங்களா இல்லை அதற்கு தனியாக ஆள் அனுப்புவீங்களா...
 16. சீமானை தவிர்த்து யாரை அடித்தளமாக வைத்து செயல்படவேண்டும் தமிழ்நாட்டில்...
 17. பிரபஞ்சத்தில் ஒரு கோளே வைரமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா...
 18. தமிழ் நாட்டில் அப்படி ஒரு பிம்பத்தை தான் ஏற்படுத்துகின்றனர்... தமிழ் நாடு என்ற ஒன்று தற்போதுள்ள நிலையை அடைவதற்கு ராமசாமி தான் காரணம் என்கின்றனர்... இதனால் திராவிடத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் தமிழர்கள்... மற்ற நாடுகளில் தமிழர்கள் அப்படி இருக்க போவதில்லை என்பதனை சுட்டி காட்டவே மேற்கூரிய பதிவு... அதனால் மற்ற நாடுகளுக்கு தமிழர்களை எதிர்பதற்க்கு சந்தர்ப்பமும் இல்லாமல் போய்விடும்...
 19. தமிழீழ பிள்ளைகள் வெற்றி பெற்று சில நன்மைகளை செய்து விட்டு ஃப்ரான்ஸின் வல்லரசு தன்மை அனைத்திற்கும் மேதகு தான் காரணம் என நிறுவுவது ஏற்றுகொள்ளதக்கதா... மேதகு என்பதனால் அதனை எந்த விதத்திலும் எதிர்வினை புரியாமல் ஏற்று கொள்வீர்களா...
 20. இசைஞானி இசையில் ஞானம் பெற்றதே ராமசாமி என்ற திராவிடர் தான் காரணம்... நான் இங்கு கருத்து கூறுவதும் கூட ராமசாமி என்ற உன்னதமான மனிதனின் போராட்ட பலத்தில் தான்... தமிழ் நாடு கல்வி அறிவில் சிறந்து விளங்குவதற்கும் ராமசாமியே காரணம்... நிலமை இப்படி இருக்க தமிழர்கள் திராவிட சித்தாந்தத்தை எப்படி எதிர்ப்பது... வாழ்க ராமசாமி ஓங்குக அவர் புகழ்... மற்றவர்கள் ராமசாமியின் அருளுக்கு பிச்சை எடுக்கவும்...
 21. பள்ளி கூடத்துல பாடம் நடத்தல யாரும் மெனக்கெட்டு படிக்கல எந்த கெழவியும் சொன்ன கதையில்ல காட்டுல மேட்டுல காத்துல கலந்தது உறவுக்கு இது தான் தலமை இத உசுரா நெனைக்கும் எளமை காதலே கடவுளின் ஆணை அவன் பூமிக்கு தொட்டு வச்ச சேனை...
 22. மண்ட கடியா இருக்கு, இளையராஜா பாடல்கள் தான், இருந்தாலும் எமோஜியில் இருந்து சுத்தமாக பாடலாக கடத்த இயலவில்லை... மண்டைய போட்டு ஒடச்சது தான் மிச்சம்...
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.