Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மியாவ்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  280
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by மியாவ்

 1. திண்ணையும் கிடைத்தது, பிழை திருத்தம் செய்யும் விருப்பமும் கிடைத்தது... மகிழ்ச்சி... நன்றி நிழலி...
 2. சின்ன கோரிக்கை, திண்ணையை காண முடியவில்லை... நான் பதிந்த கருத்தில் சிறு தவறுகளை களைய திருத்தம் செய்வற்கான விருப்பம் காணகிடைக்கவில்லை...
 3. ஓம் பைர ருத்ராய மஹா ருத்ராய கால ருத்ராய கல்பாந்த ருத்ராய வீர ருத்ராயருத்ர ருத்ராய கோர ருத்ராய அகோர ருத்ராய மார்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய ப்ரமாண்ட ருத்ராய சண்ட ருத்ராய பிரசண்ட ருத்ராய தண்ட ருத்ராய சூர ருத்ராய வீர ருத்ராய பவ ருத்ராய பீம ருத்ராய அதல ருத்ராய விதல ருத்ராய சுதல ருத்ராய மஹாதல ருத்ராய தசாதல ருத்ராய தலாதல ருத்ராய பாதாள ருத்ராய நமோ நமஹ: அண்டப்ரமாண்ட கோட்டி அகில பரிபாலனாபூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியாவேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயாநிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனாசோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹணாசூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனாப்யோமகேஷ மஹாஸேன ஜனகாபஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ:ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்பஜே ஹம்ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்பஜே ஹம் இது நான் கடவுள் இயக்குனர் பாலா இயக்கிய படமாகும்... --சமக்கிருதம் அதை சுத்தமாக ஏறெடுத்தும் பார்த்ததில்லை எனினும் ஒட்டுமொத்தமாக புரியவில்லை என்று கூற இயலாது... தடிமன் செய்ய பட்ட வார்த்தைகளை தவிர மற்றவை சுத்தமாக புரியவில்லை எனலாம்... ஆனால் இரண்டையும் கலந்து கேட்கும் பொழுது சிவனை பற்றிய பாடல் என்றும் அவனை பற்றி ஆக்ரோஹஷமாகவும் பாடுவதை உணர்ந்து மகிழ்ச்சியில் திளைக்க முடிகிறது... கண்டிப்பாக இந்த குறிப்பிட்ட பாடலில் இசைஞானின் பங்கை தவிர்க்க இயலாது... மனித மனது புரிந்தும் புரியாத ஒன்றை கேட்கும் பொழுது இயல்பாகவே அதை எத்தனை முறை கேட்டாலும் அதன் சுவை குறையாது... ஒன்றை முழுவதுமாக புரிந்து கொண்டால் அதை மறுபடி மறுபடி கேட்க கேட்க பழக பழக பாலும் புளிக்கும் என்ற ரீதியில் புளித்துவிடும்... இது மனிதர்களுக்கு... "என்னை பழித்தாலும் தமிழில் பழித்து பாடு" என்று கடவுள் நிலையை அடைந்தவன் சொல்வதாக எங்கோ படித்ததாக ஞாபகம்... அல்லது கடவுளுக்கு மனிதர்கள் தன் (மனித) நிலையில் இருக்கும் புரிந்தும் புரியாமல் பாடும் பாடலில் தான் மனித பார்வையில் பார்த்து விருப்பு வெறுப்பு கொள்வாரா...!
 4. களத்திற்கு கடைசியாக விஜயம் செய்து பத்து மாதங்கள் தான் ஆகிறது... ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டதாக உணர்வு...
 5. திருட்டு திராவிடம் இருக்கும் தமிழ்நாட்டில் வெக்கம், மானம், சூடு, சுரணை இருப்பவர்கள் சிறையில் இருப்பார்கள்... மேற்குறிப்பிட்டவற்றில் கடுகளவேனும் இல்லாதவர்கள் கடைந்தெடுத்த தத்தியாக இருப்பினும் அரியணையில் அமர்ந்து துக்ளக் ஆட்சி நடத்துவார்கள்..
 6. சீனா ஊடுருவல் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல... நாங்க தான் ராமர் கோவில் கட்டுகிறோமே!!!...
 7. இருபது மைல் தூரத்திற்கு பிரம்மிக்கதக்கவகையில் ஏரியை வெட்டி இருக்கிறான் ராஜேந்திர சோழன்... இப்பொழுதிருக்கும் மண்ணாங்கட்டிகள் எல்லாத்தையும் ப்ளாட் போட்டு கபளீகரம் செய்திருக்கும்...
 8. கிந்தி தெரியாமல் இருப்பவரை நோக்கி இந்தியரா என்று கேட்பவர்களிடம், கிந்தி தெரிந்தவர்கள் தான் இந்தியரா என்று பதில் கேள்வி கேட்க வேண்டும்... அதற்கு ஆம் என்று பதில் வந்தால், அப்படி என்றால் நான் இந்தியன் இல்லை என்று பதிலுரைக்க வேண்டும்... திருந்த வேண்டியது கேள்வி எழுப்புபவர்கள் தானே தவிர பதிலுரைப்பவர்கள் அல்ல...
 9. பிரபாகரன் என்ற ஒற்றை அதுவும் எந்த நாடுகளும் அங்கீகரிக்காத ஆளுமையின் கீழ் சிறிய மக்கள் தொகையின் கீழ் மட்டுமே தமிழும் தமிழர்களும் சுதந்திரமாக பயணித்தது... 2009 க்கு பிறகே உலக தமிழர்கள் தங்கள் நிலையை உணரத் துடங்கியுள்ளனர்... இந்த நேரத்தில் வெளங்காத மாதிரியே பேசிக்கொண்டு இருந்தால் எல்லாம் வெளங்காம தான் போகும்... இது தமிழர்களின் கடைசி நிலை... இந்த சமயம் தன் உரிமைக்கான குரலை எந்த நிலையிலும் ஒற்றுமை குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்... தமிழினத்தலைவர் என்றும் தமிழ் தமிழ் என்றும் தமிழகத்தை ஏமாற்றி துரோகம் இழைத்ததும் தமிழர்களின் இன்றைய இழி நிலைக்கு மூல காரணம்...
 10. அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களுடைய பெருமையை எடுத்துக்கூறும் ஆணையை மட்டுமே அரசியலில் நிறுவுவார்கள்... துரதிர்ஷ்டவசமாக தமிழர்களின் அதிகாரம் ஆரிய, திராவிட, சிங்களவனின் கையில் சிக்கியிருக்கிறது... உரிமையை பிச்சை போடுவார்கள் என போடும் வரைக்கும் இசைந்து கொடுப்போமென்று இருந்தால் தமிழன் கக்கூஸை மட்டும் தான் கழுவ வேண்டும் கடைசியில்...
 11. வந்தேரிகளாக உள்ள நீங்கள் அதிகாரத்தில் ஏறி தங்கள் இனத்தை தூக்கி பிடிக்க வந்தேரியாக இருக்கும் நாட்டின் வரலாறை தங்களின் வரலாறு என்றும் கூற முனைகிறீர்களா...
 12. என்ன காரணத்திற்காக வெறுக்கிறது??? காரணம் நியாயமானதாக இருந்தால் மாறலாம்... நியாயமனதாக இல்லையெனில் மாறவேண்டியது உலகமே...
 13. கேரள மாநிலம் நிலச்சரிவை சுட்டி காட்டி வெளிநாடுகளில் வானிலையை துல்லியமாக கணிக்கும் கருவிகள் போல் ஏன் இத்தனை ஆண்டுகாலமாக எத்தனையோ இயற்கை சீற்றத்திற்க்கு பிறகும் தயாரிப்பதற்கோ வாங்குவதற்கோ முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என அண்ணன் கல்யாணசுந்தரம் மேலே பதிய பட்ட காணொளியில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திருக்கிறார்... ராமர் கோயில் கட்டுவதற்கும் தமிழர்களுடைய வரலாறை எப்படி ஆட்டைய போடவேண்டும் என்பதற்கும் தான் இந்த ஆரிய திராவிட மண்டைகளுக்குள் இருக்கும் களிமண் வேலை செய்யும்... மக்களை பற்றி சிந்தித்தால்தானே... --ட்ரோஜான் போரின் போது ட்ராய் நாட்டின் தடுப்பு சுவரை தரைமட்டமாவக்குவதற்கு எனக்கு பத்தாயிரம் வீரர்களை பலிகொடுத்தால் போதும் என கொடூரன் அகெமெம்னன் என்ற அரசன் சர்வசாதாரணமாக கூறுவான்... அதை கேட்டு கவலை கொண்ட வேறொரு கிரேக்க மன்னன் ட்ரோஜான் குதிரை திட்டத்தை தீட்டுவார்... அகமெம்னன் போன்ற அரக்கர்கள் தான் நாட்டில் அரசியலயல்வாதிகளாக மக்களுக்கு வாய்க்கப்பெற்றிருக்கின்றனர்...
 14. என் வாழ்க்கை என்னும் கோப்பையில், இது என்ன பானமோ!!! பருகாமலே ருசி ஏறுதே, இது என்ன ஜாலமோ!!!...
 15. எது மாதிரியான தவறிழைத்தவர்களை என்கௌன்டர் செய்ய வேண்டும் என அதரவு தெரிவித்தனர் இந்திய மக்கள்...
 16. இந்த பாடல் தற்பொழுது என் காதுகளில் வரிசையாக வந்த பாடல்களில் நிலை கொண்டுள்ள பாடல்... கவிப்பேரரசு வைரமுத்து வின் மெய் வண்ணத்தில்... நொறுங்கும் உடல்கள் பிதுங்கும் உயிர்கள் அழுகும் நாடு அழுகின்ற அரசன் பழம் தின்னும் கிளியோ பிணம் தின்னும் கழுகோ தூதோ முன்வினை தீதோ களங்களும் அதிர களிறுகள் பிளிற சோழம் அழைத்து போவாயோ தங்கமே எம்மை தாய்மண்ணில் சேர்த்தால் புரவிகள் போலே புரண்டிருப்போம் ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை அருவிகள் போலே அழுதிருப்போம் அதுவரை அதுவரை ஓ...... தமிழர் காணும் துயரம் கண்டு தலையை சுற்றும் கோலே அழாதே என்றோ ஒருநாள் விடியும் என்றே இரவைச் சுமக்கும் நாளே அழாதே நூற்றாண்டுகளின் துருவை தாங்கி உறையில் தூங்கும் வாளே அழாதே எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ என்னோடழும் யாழே அழாதே...
 17. எனக்கு இங்கு சுத்தமாக திண்ணையை காண இயலவில்லை...
 18. வணக்கம் தங்கள் வரவு நலவரவாகட்டும்...
 19. கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண் வரைந்த ஓவியமோ!!! எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா, பல்சுவையும் கொஞ்சுதம்மா...
 20. யாழ் களத்தை திறந்து பார்க்கையில், கீழ் பகுதியில் அங்கத்தவர்கள் யார் ஆன் லைனில் இருக்கிறார்கள் என்பது தெரியப்படுத்த படுகிறது... அது போல் யார் யார் திரியை தற்சமயம் காண்கிறார்கள் என்பதனை அந்தந்த திரிகளை திறந்து பார்க்கையில் கீழ் பகுதியில் தெரியபடுத்தினால் மேலும் வசதியாக இருக்கும்... நன்றி...
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.