• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

RaMa

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  2,131
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About RaMa

 • Rank
  Advanced Member
 1. வசம்பு அண்ணாவின் துயரச் செய்தி வேதனை அளிக்கின்றது... கவிதை என்ற பெயரில் நாம் கிறுக்கிய கிறுக்கல்களுக்கு எல்லாம் தனிமடல் மூலமாகவும் ஊக்கம் தந்தவர்... ஒரு வரி பதில் என்றாலும் மிகவும் நகைச்சுவை உணர்வுடன் தன் கருத்தை சொல்லுபவர். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.... அன்னாரி்ன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகி்றேன்..
 2. <<<<<<<<<<<<<வாழ்வில் சில எல்லைகளை தொட்டவர்களுக்கு.. அல்லது மரணத்தின் எல்லைவரை சென்று வந்தவர்களுக்கு ஏனையவர்களைவிட மற்றவர்களை மகிழ்விப்பதில் அதிக ஆர்வம் இருக்கலாம். அப்படியான அனுபவங்கள் இருந்தால் கொஞ்சம் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களை மகிழ்விப்பதை சிலர் உங்கள் ஓர் பலவீனமாக எடுத்து அதன்மூலம் தங்கள் தேவைகளை நிறைவேற்ற உங்களை சாணக்கியமான முறையில் நன்கு பயனபடுத்தி உங்கள்மூலம் பயனும் பெற்று இருக்கலாம். பெற்றுக்கொண்டு இருக்கலாம். இது உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். தெரிந்துகொண்டே தொடர்ந்தும் அவர்களை மகிழ்விப்பதில் நீங்கள் ஈடுபடலாம். மற்றவர்களை மகிழ்விப்பதில் உங்களுக்கு ஆத்மதிருப்தி கிடைத்து இருக்கலாம். சிலவேளைகளில் அவர்களிடமிருந்து நீங்கள் எதையாவது எதிர்பார்த்து இருந்தால் உங்களுக்கு அது கிடைக்காதபோது ஏமாற்றம் கிடைத்து இருக்கலாம். இதன்பிறகு மற்றவர்களை மகிழ்விப்பதில் நீங்கள் ஆர்வம் காட்டுவதை குறைத்து இருக்கலாம்.>>>>>>>>>>>>>> ================================================================================ =================================== மிகவும் அர்த்தமுள்ளதும் என்னையும் சிந்திக்க வைக்கும் விடயம்.. பல உதராணங்களை சொல்லாலம். 1) முக்கியமாக எனது ஒன்றுவிட்ட தங்கைகள் தம்பிகளுக்கு மாச்சான்மார்கள் மாச்சாள்மார்கள் (அவர்கள் இலங்கையில் இருக்கும்போது) நான் எவற்றை எல்லாம் அனுபவிக்கமால் ஒரு காலத்தில் ஏங்கிக் கொண்டிருந்தேனோ அவற்றையெல்லாம் அவர்களுக்கு கிடைக்கும்படி செய்திருக்கேன். அப்போது நான் அவற்றை அனுபவிக்கும் திருப்தி எனக்கு கிடைக்கும்.. அதனால் நிறைய பணக்கஸ்டங்களை சந்தித்து இருக்கேன். கிராடிட் கார்ட் கூட பயன்படுத்தி பல தடவை அவர்களின் பிறந்த நாளுக்கு அல்லது விரும்பிய உடைகள் வேண்ட பணம் அனுப்பி இருக்கேன்... இப்போ அவர்களும் வெளிநாடு வந்துவிட்டார்கள். ஆனால் இப்போது எனக்கு ஒரு கஸ்டம் என்றால் அவர்களிடம் இருந்து எனக்கு உதவி கிடைக்கும் என்பது கேள்விக்குறியே! இன்னும் இருக்கு மற்றவர்கள் எழுதியவுடன் தொடர்ந்து எழுதுகின்றேன்...
 3. மேஜர் விதுரா (நவரத்தினம் வினோதா) அவர்களுக்கு எமது வீரவணக்கங்கள். அன்பு தம்பி நிதர்சனதும் அவர்்களது குடும்பத்தினாரினதும் ஆழ்ந்த துயரில் நாமும் பங்கு எடுத்து கொள்கின்றோம்.
 4. முரளி! உங்களுடன் களத்தில் அதிகமாக கதைத்்ததில்லை. ஆனால் உங்கள் ஆக்கங்கள் பலவற்றை படித்திருக்கின்றேன். இந்த ஆக்கத்தை முதலில் மேலோட்டமாகத் தான் படித்தேன். பின்னார் தான் ஆக்கத்்தின் வலிமையை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. தன்னம்பிக்கை, விடா முயற்சி உள்ள நீங்கள் வாழ்வில் தோற்கவே மாட்டீர்கள். தலையிடியும் காய்ச்சலும் தனக்கு தான் வந்தால் தான் தெரியும். அந்த வகையில் நீங்கள் அனுபவித்த அந்த வலியின் ஒரு துளியை தான் இங்கு பதிந்து இருப்பீர்கள் என்று நம்்புகின்றேன். உங்கள் அனுபவம் தன்னம்பிக்கை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்குமே நல்ல எடுக்்காட்டாக இருக்கின்றது. உங்கள் அனுபவப் பகிர்வுக்கு மிக்க நன்றி முரளி..
 5. ------இழப்பு கமுகு கிளி பக்கம் பப்படம் பாகை தாட்ருட்ழந்டப்ல்லு------- பழக பழக பாலும் புளிக்கும் சரியா கந்தப்பு? ஆனால் இது.......பாகை தாட்ருட்ழந்டப்ல்லு ((விளங்கவே இல்லை)
 6. வணக்கம் Sarani தயவு செய்து சினிமா பாடல்களுடன் தாயகப்பாடல்களையும் சேர்க்காதீர்கள். தாயகப்பாடல்களின் பல்லவியை கண்டுபிடிப்பதற்கென பிறிதொரு இணைப்பு இங்கு இருக்கின்றது. அங்கு தாயகப்பாடல்களின் பல்லவியை கண்டுபிடியுங்கள்.
 7. டு (எதாவது சொற்கள் தொடங்குமா?) ....... டும் டும் அடுத்த ம
 8. ஒவ்வொரு போட்டியையும் சிறப்பாக நடத்தி வரும் அரவிந்தனுக்கு பாராட்டுக்கள். வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள். அடுத்த முறை என்றாலும் நாங்களும் வெல்லக்கூடிய அளவில் போட்டிகளை வையுங்கள் அரவிந்தன்.
 9. ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி விதி
 10. நெடுக்ஸ் உங்களுடன் வாதம் செய்த உண்மையை மறைப்பதால் எனக்கு எவ்வித லாபமும் இல்லை. ஆனால் எனக்கு அப்படியாக ஞாபகம் இல்லை. அதைத்தான் சொன்னேன். ஆனால் உங்களைப் போலவே வாதம் புரியும் குருவிகளுடன் நன்றாக வாதம் செய்து இருக்கின்றேன். அது நன்றாக ஞாபகம் இருக்கின்றது. உங்களின் கருத்துப்படி கலியாணம் ஆகும் முன் ஆண்கள் எல்லோரும் ரொம்ப நல்லவர்களாக இருக்கின்றார்களா? கலியாணம் ஆனவுடன் தான் மாறிவிடுகின்றர்களா? ஏன் நெடுக்ஸ் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் யாருமே உங்கள் குடும்ப ஆண்களை புரிந்து கொள்வதில்லையா? காதலித்த பிறகோ திருமணம் ஆன பிறகோ ஆண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கு முக்கிய காரணம் ஆணாதிக்கம். பெண்கள் தங்களை அண்டியே வாழ வேண்டும் என்றா வெறியில் தான் அப்படி மாறிவிடுகின்றார்கள் என்றா உண்மை பாவம் அப்பாவியான உங்களுக்கு புரியவில்லை போல. தாயகத்தில் இருக்கும் பெற்றோர்கள் ஒரு மகனையோ மகளையோ வட்டிக்கு பணம் எடுத்து வெளிநாட்டு அனுப்புவதன் நோக்கமே பணம் சம்பாதிக்கத்தான். தனது குடும்ப நிலையை உணர்ந்து தான் அவர்களும் இவ்விடம் வருகின்றார்கள். வந்தவுடன் தான் பெற்றோர்களும் அவர்கள் பாடும் கஷ்டத்தை மறந்து தெருவோரங்களில் கட்டாக்காலிகளாக திரிகின்றார்கள். அங்கும் ஒரு தாயையே குற்றம் சாட்டி எழுதும் கருத்து ரொம்ப நன்றகவே இருக்கின்றது. ஏன் நெடுக்ஸ் எத்தனை பெண்கள் காதலிக்கின்ற ஆண்களின் மோகப் பேச்சில் மயங்கி அவனுடன் வெளியில் சென்று படும் ஆசிங்கள் எல்லாம் உங்கள் லண்டன் மாநகரில் நடப்பது இல்லையா? பெண்கள் தங்கள் நிலை உணராமட்டார்கள் என்றால் ஏன் இவர்கள் அப்படியான பெண்களை காதலிக்க வேண்டும்? பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கும் மட்டும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது தானே. .முதலே சொல்லிவிட்டேன் நெடுக்ஸ். நீங்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று நீங்கள் அவதானித்தவர்களை பற்றி தான் கதைக்கின்றீர்கள். வெளியில் நடப்பவற்றையும் கொஞ்சம் பாருங்கள். உங்கள் கருத்துக்களை வாசிக்க சிரிப்பாக இருக்கு. வெளிநாடு வந்து மொழி அறிவின்றி உங்கள் ஆண் இனம் தவிக்குதாம். இங்கு வந்தவுடன் எந்த மதுவாகை சிறந்தது எந்த பாடசாலையில் எந்த பிகர் படிக்குது எங்கு எல்லாம் இரவு விடுதிகள் இருக்கு என்று அறிந்து அவ்விடம் எல்லாம் அலைந்து திரியும் உங்கள் ஆணினம் குடும்ப கஷ்டத்தை மட்டும் நினைக்கையில் மொழி உதைக்குதோ? இல்லை தெரியமால் தான் கேட்கின்றேன். வெளிநாடுகளுக்கு வந்து எமது உற்றார் உறவினார்கள் எல்லாம் ஆங்கிலமோ மற்றைய மொழியில் சிறிலாங்காவில் இருக்கும்போதே டிப்பிளோமா பட்டம் பெற்று இங்கு வந்து கஷ்டப்படமால் இருந்து எங்களையெல்லாம் இவ்விடம் அழைத்து இருக்கின்றார்கள். ஒரு சாதரணமானவர் வேறொரு நாட்டிற்கு வந்து புதிதாக வாழ்க்கை தொடங்குவது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது நாமும் எமது அனுபவத்தில் கண்டு இருக்கின்றோம். நாங்கள் ஒன்றும் இங்கையே பிறந்து வளர்ந்து விடவில்லை. நாமும் தாயகத்தில் இருந்து அகதி என்ற போர்வையில் தான் இங்கு வந்து படித்து வேலை செய்கின்றோம். விதண்டாவாதங்கள் புரிவது நெடுக்ஸா? ரமாவா? என்று இங்கு கருத்துக்களை வாசிக்கும் எல்லோருக்கும் புரியும். இதற்கு மேலும் உங்களுக்கு பதில் கருத்து எழுதினால் சத்தியமாக எனக்கு மன அழுத்தம் வந்துவிடும். என்னைப் பொறுத்தவரையில் ஆணோ பெண்ணோ மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பின் தங்களுக்குள்ளையே பிரச்சனைகளை மூடி வைக்கமால் தகுந்த உதவியை நாடுவதே நன்று. மன அழுத்தம் என்பது சிறு சிறு காரணங்களுக்காக உண்டாயிருப்பினும் ஒரு காலகட்டத்தில் அக்காரணங்களையே நீங்கள் நினைத்து பாா்க்க முடியாமால் ஆக்கிவிடும். புலம்பெயர் நாடுகளில் நிறைய உதவிகள் இலவச முறையில் பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே ஆணா பெண்ணா என்று பட்டிமன்றம் வைப்பதை விட்டு உபயோகமான அந்நாடுகளுக்குரிய தகவல்களை இணைத்தால் வாசிப்பவர்கள் பயனடைவர்கள்.
 11. உங்களுடன் முன்பு ஒரு முறையும் கருத்தாடியாதக ஞாபகம் இல்லை. ஆனாலும் என்னை கணநாட்களுக்கு பிறகு சந்திப்பதாக சொல்கின்றீர்கள்? சரி உங்கள் கருத்துக்கே வாருகின்றேன். ஆண்கள் பெண்கள் மீது நியாமான ஆசை (?)வைத்திருக்கின்றார்கள் என்று சொல்கின்றீர்கள். ஆனால் ஒவ்வொரு பெண்ணின் குணங்கள் அவர்களின் வளர்ப்பு முறை சூழ்நிலை ஆகியவற்றில் மாறுபாடுகின்றது என்ற உண்மையை ஏன் இந்த ஆண்களால் புரிந்து கொள்ள முடியமால் இருக்கின்றது? ஆணோ பெண்ணோ தங்களின் வாழ்க்கை துணையின் குணங்களை கொண்டு அவர்களுக்காக தங்களை மாற்ற வேண்டிய இடத்தில் மாற்றி அனுசரித்து போவது தான் வாழ்க்கை. நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்க்கை நடத்த வேண்டும் என்றால் இது தான் உண்மையான வழி. அதை விட்டு பெண்கள் எங்கள் நிம்மதியை குலைத்துவிட்டார்கள் என்று புலம்பி கொண்டு திரிவது மடத்தனம். ஐச்சோ உங்கள் கருத்தை பார்க்கையில் சிரிப்பதா? அழுவதா? என்று தெரியலை. ஆண்களின் மன அழுத்தத்துக்கு பெண்கள் தான் காரணம் என்றால் அதே பங்களிப்பு பெண்களுக்கும் ஆண்களால் வந்து சேருகின்றது என்றா உண்மையை நீங்கள் ஏத்துத்தான் ஆகணும். ஒரு குறுகிய வட்டத்தில் நின்று குறுகிய மானப்பான்மையுடன் சிந்திக்கமால் இன்றைய காலகட்டத்தில் நாட்டில் நடப்பவற்றை அவதானியுங்கள். பெண்களை ஆண்கள் ஏமாற்றி விட்டு ஓடுவது எல்லாம் மலையேறி விட்டதா? வேலைக்கு போகமால் கடன் வாங்கி வந்து குடித்து மனைவியை மட்டுமன்றி பிறந்த குழந்தைகளையும் அடி உதை அத்தோடு பட்டினி என வாட்டி எடுக்கும் கணவர்மார்கள் எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? ஊரிலிருக்கும் மனைவிக்கு ஏதோ சாட்டுக்கு கொஞ்ச பணம் அனுப்பிவிட்டு இங்குள்ள நாடுகளில் மற்ற இனப் பெண்களுடன் கூடி குலாவி கொண்டிருக்கும் ஆண்கள் எல்லாம் உண்மையானவர்களா? அங்கு கடன் வாங்கி மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி எப்ப பணம் அனுப்புவான் சாப்பாட்டுக்கு இல்லாவிட்டாலும் வட்டிக் காசை என்றாலும் கட்டலாம் என்று ஏங்கி பெற்றோர்கள் ஏங்கி கொண்டிருக்க இங்கு வந்து தங்கள் உடை நடை எல்லாவற்றையும் மாத்தி கும்பல்களுடன் கோவிந்தா என்று திரியும் ஆண்கள் எந்த வகை? (இன்னும் இருக்கு )அப்பாவி பெண்களை குழந்தைகள் வயது போனவர்கள் என்றா பகுபாடு இன்றி கற்பழித்தும் கொன்று குவிக்கும் இலங்கை இராணுவத்தில் மட்டுமன்றி மற்ற நாட்டு இராணுவம் என்றா போர்வையில் இருக்கும் ஆண்கள் எல்லாம் உங்கள் பார்வையில் அப்பாவிகளா? இவற்றால் ஒன்றாலும் பெண்களுக்கு மனஅழுத்தம் வாராதா? கருத்துக்களத்தில் குப்பை கொட்டமுடியாது தான். ஆனால் குப்பை தனமான கருத்துக்களை நிறையவே கொட்டலாம். அதற்கு வலைஞன் வந்து பூட்டு போடும் வரை கொட்டிக் கொண்டே இருக்கலாம். இங்கு கருத்து எழுதியது நான் மட்டும் தான். என்னுடைய கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற பெண்களையும் கற்பனை செய்வீர்கள் என்றால் அது உங்களுடைய முட்டாள் தனம் என்று தான் சொல்லுவேன். நெடுக்ஸ் இயற்கையை ரசிப்பதும் கற்பனை செய்யும் தன்மை பெண்களுக்கும் இருக்கு. வீட்டில் இருக்கும் சிறு குப்பைகளை கூட அகற்றி வீட்டை அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருந்து அவற்றை ரசிக்க முடியாதவர்கள் வெளியில் இயற்கையை இரசிக்கின்றார்களாம். வீட்டில் பூங்கான்று வளர்ப்பதில் இருந்து வீட்டை அழகாக வைத்திருப்பதில் பெண்கள் தான் முன்னிடத்தில் இருந்து வருகின்றார்கள். அதை விட்டு றோட்டில் தன்னுடைய பாட்டில் வளர்ந்து கொண்டிருக்கும் மரங்கள் செடிகளை ரசிக்கட்டாம். நித்தம் நித்தம் குடித்து விட்டு அடித்து துன்புறுத்தும் கண்வர்மார்கள் இருக்கும் வீட்டில் அந்த பெண்ணுக்கு கட்டாயம் அடுத்த ஆணின் நினைப்பு வரும் என்பது தான் வேடிக்கையாக இருக்கு.