Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Kavi arunasalam

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  880
 • Joined

 • Last visited

 • Days Won

  23

Kavi arunasalam last won the day on March 19

Kavi arunasalam had the most liked content!

Community Reputation

1,007 நட்சத்திரம்

About Kavi arunasalam

 • Rank
  உறுப்பினர்

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. Tom Mooreக்கு இன்று (30.04.2020) 100 வயதாகிறது. பிரித்தானியப் படையில் போர் வீரனாக இருந்து சாகசம் புரிந்த Tom Moore தனது 100வது வயதிலும் புதுமையான ஒரு விடயத்தை நிகழ்த்தி சாதனை ஒன்றைப் புரிகிறார். அவரது பிறந்த நாளுக்கு இதுவரையில் வந்த வாழ்த்து அட்டைகள் மட்டும் 125,000க்கு மேல் இருக்கின்றன. "எங்கள் குடும்பத்தில் தாத்தா மிகவும் முக்கியமான மனிதர். இன்று இந்த நாட்டில் வசிப்பவர்கள் எங்கள் தாத்தாவை அவர்களது இதயத்துக்குள் வைத்துக் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையை எண்ணிப் பார்க்கும் போது, நான் மிகவும் நேசிக்கும் என் தத்தாவைப் பற்றிய பெருமையை வார்த்தைகளால் வெளிப்படுத்த என்னால் முடியவில்லை” என Tom Moo
 2. முதலில் ஆண்டவனைக் கைது செய்திருந்தால் பிரச்சினை வந்திருக்கது.
 3. அஞ்சலிகள். விசுகு, இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஆனாலும் இதையும் தாங்கித்தான் பயணம் தொடரப் போகிறது. காலம் உங்கள் கவலையைப் போக்கும். தைரியமாக இருங்கள்.
 4. ரெஸ்றோரண்ட்டுகள் திறப்பதற்கு அனுமதி இல்லாத்தால் இவர்களது காட்டில் மழை
 5. வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது. ஏப்ரல் மாதத்தில் வழமையாக பெய்யும் மழை இந்த வசந்தத்தில் ஏனோ இன்னமும் இல்லை. ஆனால் இன்னுமொன்று இருக்கிறது. கோடையில் இருக்க வேண்டிய வெய்யில் வசந்தத்தில் வந்திருக்கிறது. சூரியனுக்கு தாராள மனதா? இல்லை கொரோனாவில் வீடுகளுக்குள் அடைந்து கிடப்பவர்களை வெளியே இழுத்துவிடும் எண்ணமா? தெரியவில்லை. வெறிச்சோடி இருக்கும் வீதிகளில் எல்லாம் சூரியன் வெளிச்சம் ஓடி இருக்கிறான். வெப்பநிலை 25 செல்ஸியசைக் கடந்திருக்கிறது. இந்த நேரத்தில்தான் 800 சதுர மீற்றர் பரப்பளவுக்குள் உள்ள வியாபார நிலையங்களை மீண்டும் திறந்து வியாபாரங்களை ஆரம்பிக்க யேர்மன் அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது. அதற்குள
 6. போராட்ட காலம். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு பொருளாதாரத் தடையை சிறீலங்கா அரசாங்கம் அறிவித்தது. உணவு, மருத்துவம் முதல் அனைத்துப் பொருட்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் எடுத்துச் செல்ல முற்று முழுவதுமான தடை. வன்னியில் உள்ள மக்களுக்கு தங்கள் நிழல் அரசாங்கத்தின் ஊடாக அவர்களது தேவைகளை விடுதலைப் புலிகள்தான் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழ் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் என்ற அமைப்புகள் ஊடாக பொருளாதாரத் தடையை சமாளித்து மக்களின் அன்றாட வாழ்க்கை சிதைவடையாமல் விடுதலைப் புலிகள் பார்த்துக் கொண்டார்கள். இங்கே நான்
 7. இப்போதைக்கு சமையல் தெரிந்து கொள்வது போல் இருக்கும். வேலையில் ஓய்வு கிடைத்து ஊருக்குப் போனால், ஐயாதான் மூன்று நேரமும் சமைக்க வேண்டி வரும். ஏதோ என்னால் முடிந்த அறிவுரை.
 8. சுமேரியர், இன்னுமா செய்தித்தாள்களை சமையலுக்கு பயன்படுத்துகிறீர்கள். மிக மிக தவறான விடயம். என் வயதுக்கு எண்ணைப் பணியாரம் எல்லாம் சரிவராது. வேறு நல்ல சமையல் குறிப்புகளைப் போடும் போது பார்ககலாம்.
 9. நட்ட மரமாக வாசலில் குமார் மூர்த்தி. பக்றறிக்குள்ளே நட்ட கல்லாக எல்லாம் வல்லவன். தாயின் மறைவில் செருப்பு பறிபோகிறது. தாயின் நினைவு நாளில் சப்பாத்து காணாமல் போகிறது. ஏதோ தெய்வக் குற்றம் என்று நினைக்கிறேன். ஐயருக்கு கொஞ்சம் பணம் கொடுத்தால் பரிகாரம் ஏதாவது செய்து விடுவார் நல்லதொரு கதை. நன்றி கிருபன்
 10. அப்படி எல்லாம் சொல்ல முடியாது Sir. அவளுக்கென்று ஒரு மனம் திரைப்படத்தில் பாரதியை, ஶ்ரீதர் அந்தப் பாடு படுத்தியிருப்பாரே. ஆனந்தஜோதி திரைப்படத்துக்கு கண்ணதாசன் “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்றொரு பாடலை எழுதியிருந்தார். கண்ணதாசனை காணும் போதோ பேனில் பேசும் போதோ இந்தப் பாடலை பிரமிளா (தேவிகா) பாடத் தொடங்கிவிடுவார் என கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். தேவிகாவை கடற்கரையில் நடக்க விட்டு சிவாஜி பின்னால், “நடையா இது நடையா..” என்று பாடிக் கொண்டு வருவார். பாடலில், “இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது” என்றொரு வரி இருக்கிறது. தேவிகாவின் இடையைப் பார்தத பின்னும் கண்ணதாசன்
 11. ஈழத் திரைப்பட நடிகர் ஏ.ரகுநாதன் தனது 85வது வயதில் 22.04.2020 இல் காலமானார் என்ற துயரமான செய்தி வந்திருக்கிறது. ஈழத்து சினிமாவில் இவரது பங்கு அதிகமானது. இவரைப் பற்றி 2004இல் நான் எழுதிய ஈழத் தமிழ் சினிமா பற்றிய ஒரு கட்டுரையின் ஒரு சிறிய பகுதி இது. சினிமாப்படத்தை உருவாக்கும் ஆர்வம் யார் யாருக்கு வருமென்றில்லை. யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம்.வேத நாயகத்துக்கும் வந்திருக்கின்றது. விளைவு 'கடமையின் எல்லை' படம் தயாரானது. இது ஷேக்ஸ்பியரின் Hamlet என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட திரைப்படம். திரைப்படம் சம்பந்தமான நுட்பங்கள் தெரியாமலேயே எம்.வேதநாயகம் இந்தத
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.