Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Kavi arunasalam

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  880
 • Joined

 • Last visited

 • Days Won

  23

Posts posted by Kavi arunasalam

 1. 8-EDCE7-D5-5104-4327-9285-2238196-F1634.

  Tom Mooreக்கு இன்று (30.04.2020) 100 வயதாகிறது. பிரித்தானியப் படையில் போர் வீரனாக இருந்து சாகசம் புரிந்த Tom Moore தனது 100வது வயதிலும் புதுமையான ஒரு விடயத்தை நிகழ்த்தி சாதனை ஒன்றைப் புரிகிறார். அவரது பிறந்த நாளுக்கு இதுவரையில் வந்த வாழ்த்து அட்டைகள் மட்டும் 125,000க்கு மேல் இருக்கின்றன.

  "எங்கள் குடும்பத்தில் தாத்தா மிகவும் முக்கியமான மனிதர். இன்று இந்த நாட்டில் வசிப்பவர்கள் எங்கள் தாத்தாவை அவர்களது இதயத்துக்குள் வைத்துக் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையை எண்ணிப் பார்க்கும் போது, நான் மிகவும் நேசிக்கும் என் தத்தாவைப் பற்றிய பெருமையை வார்த்தைகளால் வெளிப்படுத்த என்னால் முடியவில்லைஎன Tom Mooreஇன் பேரன் Benjie குறிப்பிடுகிறான்.

  Tom Mooreஇன் இடுப்புப் பகுதியில் நடந்த ஒரு அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் Walker இல்லாமல் அவரால் நடமாட முடியாமல் போயிற்று. கொரோனா வைரசின் தாக்குதலின் அனர்த்தங்களை பார்த்தும் கேட்டும் விட்டு அந்தப் போர்வீரனால் வீட்டுக்குள் வீழ்ந்து கிடக்க முடியவில்லை. பிரித்தானிய தேசிய சுகாதார சேவைக்கு பணம் சேகரித்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்தது. நிதி சேகரிப்புக்காக, தனது வீட்டின் பிற்பக்கம் தோட்டத்தோடு அண்டிய 25 மீற்றர் அளவிலான தூரத்தை நாளொன்றுக்கு 100 தடவைகள் நடப்பதாக அறிவித்தார். அவரின் வயது, தேச நலன் கருதி நிதி சேகரிக்கும் அவரது எண்ணம் எல்லாவற்றையும் பார்த்து மக்கள் நிதிகளை அளிக்கத் தொடங்கினார்கள். இதுவரை அவரது வேண்டுகோளுக்கு மக்களால் விரும்பி அளிக்கப்பட்ட பணம் 32 மில்லியன் யூரோக்கள்.

  Tom Moore தனது பிறந்தநாளை மிகப் பெரியளவில் கொண்டாட விரும்பியிருந்தார். கொரோனா தனிமைப் படுத்தலினால் அது பெரியளவில் நடைபெறாமல் போனாலும் கூட அவரது பெரிய மனதுக்கு பலரது உளமார்ந்த வாழ்த்துகள் அவருக்கு அதிகளவில் கிடைத்திருக்கிறது.

 2. 3 hours ago, உடையார் said:

  யாழ். அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

  முதலில் ஆண்டவனைக் கைது செய்திருந்தால் பிரச்சினை வந்திருக்கது.

 3. அஞ்சலிகள்.

  விசுகு,  இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஆனாலும்  இதையும் தாங்கித்தான் பயணம் தொடரப் போகிறது. காலம் உங்கள் கவலையைப் போக்கும். தைரியமாக இருங்கள்.

 4. 12 hours ago, தமிழ் சிறி said:

  சராசரியாக ஒரு நாளைக்கு, 25,000 € விற்கு  வியாபாரம் நடக்கின்றதாம். 

  ரெஸ்றோரண்ட்டுகள்  திறப்பதற்கு அனுமதி இல்லாத்தால் இவர்களது காட்டில் மழை

 5. A256-E4-C3-E133-4-DCF-907-C-1-DD4-DDAE9-

  சந்த காலம் ஆரம்பமாகிவிட்டது. ஏப்ரல் மாதத்தில் வழமையாக பெய்யும் மழை இந்த வசந்தத்தில் ஏனோ இன்னமும் இல்லை. ஆனால் இன்னுமொன்று இருக்கிறது. கோடையில் இருக்க வேண்டிய வெய்யில் வசந்தத்தில் வந்திருக்கிறது. சூரியனுக்கு தாராள மனதா? இல்லை கொரோனாவில் வீடுகளுக்குள் அடைந்து கிடப்பவர்களை வெளியே இழுத்துவிடும் எண்ணமா? தெரியவில்லை. வெறிச்சோடி இருக்கும் வீதிகளில் எல்லாம் சூரியன் வெளிச்சம் ஓடி இருக்கிறான். வெப்பநிலை 25 செல்ஸியசைக் கடந்திருக்கிறது.

  இந்த நேரத்தில்தான் 800 சதுர மீற்றர் பரப்பளவுக்குள் உள்ள வியாபார நிலையங்களை மீண்டும் திறந்து வியாபாரங்களை ஆரம்பிக்க யேர்மன் அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது. அதற்குள்ளும் சலூன்கள், பார்கள், உணவகங்கள் என்று சிலவற்றுக்கான அனுமதி இன்னமும் மறுக்கப் பட்டிருக்கின்றன. ஆனாலும் வெப்பமான கால நிலை, மக்களின் விருப்பங்கள் எல்லாவற்றையும் கணக்குப் போட்டு ஐஸ்கிறீம் நிலையங்களை திறப்பதற்கு யேர்மனிய அரசாங்கம் மனமுவந்து அனுமதி அளித்திருக்கிறது. அனுமதி வழங்கப் பட்டிருந்தாலும் ஏகப்பட்ட கெடுபிடிகள் அங்கே இருக்கின்றன.

  ஐஸ்கிறீமை வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியே போய்விட வேண்டும். நிலையத்துக்குள் வைத்து அதை சுவைப்பதற்கு அனுமதி இல்லைவிற்பனை நிலையத்துக்கு அப்பால் அதுவும் 50 மீற்றர் தள்ளி நின்றே ஐஸ்கிறீமை சுவைக்க அனுமதி தரப்பட்டிருக்கிறது. ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்துக்குள் அதிகப் பட்சம் மூவர் மட்டும் அனுமதிக்கப் படல் வேண்டும். அனுமதிக்கப் படுபவர்களுக்குள் சமூக இடைவெளி பேணப்படல் வேண்டும். வாடிக்கையாளர்கள் நிற்பதற்கான இடங்கள் தரையில் அடையாளப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். விற்பனையாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றெல்லாம் ஏகப்பட்ட நிபந்தனைகள். இவற்றுக்கெல்லாம் கட்டுப்பட்டவர்களே விற்பனை நிலையத்தை திறக்க முடியும்.

   Nordrhein- Westfalen மாநிலத்தில் உள்ள ஐஸ்கிறீம் நிலையம் ஒன்றுக்கு ஐஸ்கிறீம் வாங்குவதற்காக Jenniferஉம் Patrickகும் சென்றார்கள். தங்களுக்கு விருப்பமான ஐஸ்கிறீமுகளையும் வாங்கிக் கொண்டார்கள். வெளியில் வெய்யில், கையில் உருகி ஓடும் ஜஸ். மனதில் மகிழ்ச்சி. சட்டம் ஒழுங்கு எல்லாம் அவர்களுக்கு  மறந்து போக ஐஸை நாக்கால் நக்க ஆரம்பித்தார்கள். ஐஸ்கிறீமின் சுவை தெரியும் முன்னே அவர்கள் முன்னே பொலீஸார் வந்து நின்றனர். ஐஸ்கிறீமை விற்பனை நிலையத்தில் இருந்து 50 மீற்றர் தூரத்தில்தான் சுவைக்கலாம் என்ற விதியை மீறியதற்காக 400 யூரோக்கள் அவர்களுக்கு அபராதம் தரப்பட்டது.

  “இது அவர்கள் குற்றமல்ல. இங்கே சொல்லப்பட்ட விதிகளை நாங்கள் கடைப் பிடிக்கிறோம். தவறுதலாக நடந்திருக்கிறது. பொலீஸாரின் இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் கோபம் கொள்ளக் கூடும் என்பதால் வேண்டுமானால் எனது வாடிக்கையாளரின் தண்டனைப் பணத்தை நானே செலுத்துகிறேன்என ஐஸ்கிறீம் விற்பனை நிலைய உரிமையாளர் Giuseppe Sambito பொலிஸாரிடம் கேட்டிருக்கிறார்.

  “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். இது என்ன புது நடைமுறை. சாப்பிடுவதற்கே யேர்மனியில் தண்டம் செலுத்த வேண்டுமா? நாங்கள் இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கிறோம்என்று Jenniferஉம் Patrickஉம் பொலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

  • Like 2
 6. On 24/4/2020 at 19:24, கிருபன் said:

  வெளிநாட்டு உதவிகளை ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் மூலமும் கொடுத்திருக்கலாம்தானே என்றும் வாதிக்கிறார்கள். சில பிரதேசச் செயலாளர்கள் சரியாக  வேலை செய்வதில்லை என்று மறுசாரார் குற்றம் சாட்டுகிறார்கள். மொத்தத்தில் வழமைபோல எமது பாரம்பரியம் தவறாமல் ஆளையாள் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

   

  போராட்ட காலம். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு பொருளாதாரத் தடையை சிறீலங்கா அரசாங்கம் அறிவித்தது. உணவு, மருத்துவம் முதல் அனைத்துப் பொருட்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் எடுத்துச் செல்ல முற்று முழுவதுமான தடை. வன்னியில் உள்ள மக்களுக்கு தங்கள் நிழல் அரசாங்கத்தின் ஊடாக அவர்களது தேவைகளை விடுதலைப் புலிகள்தான் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

  மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழ் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் என்ற அமைப்புகள் ஊடாக பொருளாதாரத் தடையை சமாளித்து மக்களின் அன்றாட வாழ்க்கை சிதைவடையாமல் விடுதலைப் புலிகள் பார்த்துக் கொண்டார்கள். இங்கே நான் குறிப்பிட்ட இரண்டு கழகங்களுக்கும் வெளி, உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஆனால் இந்த இரண்டு கழகங்களையும் புலம் பெயர் தமிழர்கள் தங்கள் இரண்டு தோள்களில் தாங்கி நின்றார்கள். வன்னி மக்களின் தேவைக்கு அதிகமான நிதிகளை புலம் பெயர் நாட்டில் இருந்து தமிழர்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

  மேலதிகமான நிதி கிடைத்ததனால் காந்தி நிலையம், குருகுலம், இனிய வாழ்வு இல்லம், வெற்றிமனை, பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு, முன்பள்ளி, தொழில்சார் பயிற்சி நிலையம், சத்துணவு நிலையங்கள், வெண்புறா என்று பல அமைப்புகள் அங்கே உருவாகி மிக நேர்த்தியாக நிர்வகிக்கப் பட்டன. அதிலும் யாரிடமும் கையேந்தும் நிலை இல்லாமல் அவரவர்கள் சுயமாக வாழ வழி செய்து கொடுப்பதே அங்கே பிரதானமாகக் கருதப்பட்டது. தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களின் தேவைகளைக் கவனிப்பது தங்களது அரசின் கடமை என்று விடுதலைப் புலிகள் நடந்து கொண்டார்கள்.

  இன்று இவை எதுவும் சிறிலங்காவில் இல்லை. பொருளாதாரத் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இருக்கிறார். பிரதமர் இருக்கிறார், அவரது அமைச்சுக்கள் இருக்கின்றன. தமிழ் மக்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து அனுப்புகிறார்கள். மாகாணசபை, அதற்கான ஆளுனர், மாநகரசபை, மேஜர், நகரசபை, நகரபிதா கிராமசேவகர்கள் என எல்லாமே இருக்கின்றன. இங்கே மக்களுக்கான பிரச்சனைகள் என்று வரும் போது அதை கவனிக்க வேண்டியது அரசாங்கமே

  இன்றைய கொரோனாக் காலகட்டத்தில் அன்றாடம் தொழில் புரிந்து அந்த வருமானத்தில் வாழ்பவர்கள் வீட்டில் இருத்தப் பட்டால், அவர்களது தேவைகளைக் கவனிக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. நான் வசிக்கும் யேர்மனியில், கொரோனாக் காலத்தில் வேலைக்குப் போக முடியாதவர்களுக்கு யேர்மனிய அரசாங்கம்,  அவர்கள் இதுவரை பெற்ற சம்பளத்தில் 60 வீதமான பணத்தைத் தருகிறது. அது போதுமானதாக இல்லை என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டதால் இப்பொழுது சம்பளத்தின் 80 வீதமான தொகையைத் தருகிறோம் என நிதியமைச்சு அறிவித்திருக்கிறது

  இலங்கை அரசாங்கமும் உலக நாடுகளிடம் நிதி கேட்கிறது. வரும் நிதிகளைத் தங்கள் பகுதிகளுக்குத் தர வைப்பதும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை. தேர்தல் வரும் போது வந்து வார்த்தைகளை அள்ளி வீசும் பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்களது கடமைகளைச் செய்ய வேண்டும்.அல்லது பொதுமக்கள் அவர்களைக் கேட்க வேண்டும்.

  நாட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், உடனடியாகப் புலம் பெயர் தமிழர்களிடம் நிதி கேட்கும் இன்றுள்ள நிலை மாறவேண்டும். லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு தமிழ் வானொலிஇது ஒரு வரலாற்றுக் கடமை. தமிழர்களே உதவுங்கள்என்கிறது. இங்கே எங்கே ஒரு வரலாறு எழுதப் படுகிறது என்று தெரியவில்லைஒரு பொது நலனுக்காக அனுப்பப்படும் பணம் சரியான முறையில் பயன்படுத்தப் படல் வேண்டும். எதற்கெடுத்தாலும் புலம் பெயர் தமிழ் மக்கள் பணம் அனுப்பிக் கொண்டிருந்தால் ஒரு வலிமையான சமுதாயம் உருவாகமல் போகும் வாய்ப்பு ஏற்பட்டு விடும்

   

  • Like 1
  • Thanks 1
 7. 11 hours ago, ராசவன்னியன் said:

  இரவில் வீட்டில் பேசும்பொழுது 'காலையில் இட்லிக்கு எப்படி தயார் செய்வது..?' என பெரிய விளக்க உரையை மனைவியிடம் முழித்தவாறே கேட்டு புரிந்த மாதிரி தலையாட்டினேன்..

  இப்போதைக்கு சமையல் தெரிந்து கொள்வது போல் இருக்கும். வேலையில் ஓய்வு கிடைத்து ஊருக்குப் போனால், ஐயாதான் மூன்று நேரமும் சமைக்க வேண்டி வரும். ஏதோ என்னால் முடிந்த அறிவுரை.

  • Confused 1
 8. 21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

  அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நீரை வடியவிட்டு செய்தித் தாளிலோ அல்லது வேறு தாள்களிலோ பரவி நீரை வடியவிடவேண்டும்

  சுமேரியர், இன்னுமா செய்தித்தாள்களை சமையலுக்கு பயன்படுத்துகிறீர்கள். மிக மிக தவறான விடயம்.

  என் வயதுக்கு எண்ணைப் பணியாரம் எல்லாம் சரிவராது. வேறு நல்ல சமையல் குறிப்புகளைப் போடும் போது பார்ககலாம்.

   

 9. On 21/4/2020 at 21:05, கிருபன் said:

  வெளியில் போவோரின் கால்களைப் பார்த்தவாறு கதவு மூலையில் நட்ட மரமாக நான்.

  நட்ட மரமாக வாசலில் குமார் மூர்த்தி. பக்றறிக்குள்ளே நட்ட கல்லாக எல்லாம் வல்லவன்.

  தாயின் மறைவில் செருப்பு பறிபோகிறது. தாயின் நினைவு நாளில் சப்பாத்து காணாமல் போகிறது. ஏதோ தெய்வக் குற்றம் என்று நினைக்கிறேன். ஐயருக்கு கொஞ்சம் பணம் கொடுத்தால் பரிகாரம் ஏதாவது செய்து விடுவார்

  நல்லதொரு கதை. நன்றி கிருபன்

  • Like 1
 10. 6 hours ago, ராசவன்னியன் said:

  காதலில் தோற்றுப் போன பெண்களுக்கும் வாழ்க்கை உண்டு என்பதைத் தன் படங்களில் அழுத்தமாகச் சொன்னவர் இயக்குநர் ஸ்ரீதர்.

  அப்படி எல்லாம் சொல்ல முடியாது Sir. அவளுக்கென்று ஒரு மனம் திரைப்படத்தில் பாரதியை, ஶ்ரீதர் அந்தப் பாடு படுத்தியிருப்பாரே.

  ஆனந்தஜோதி திரைப்படத்துக்கு கண்ணதாசன்பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானேஎன்றொரு  பாடலை எழுதியிருந்தார். கண்ணதாசனை காணும் போதோ பேனில் பேசும் போதோ இந்தப் பாடலை பிரமிளா (தேவிகா) பாடத் தொடங்கிவிடுவார் என கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்.

  தேவிகாவை கடற்கரையில் நடக்க விட்டு சிவாஜி பின்னால், “நடையா இது நடையா..” என்று பாடிக் கொண்டு வருவார். பாடலில், “இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குதுஎன்றொரு வரி இருக்கிறது. தேவிகாவின் இடையைப் பார்தத பின்னும் கண்ணதாசன் இப்படி ஒரு வரியை ஏன் சேர்த்தார் என்பது தெரியவில்லை.

  “எம்ஜிஆர் படங்களில் நடிப்பதற்கு பல அழைப்புகள் வந்தன. சிலர் என்னை விடவில்லைஎன்று ஒரு பேட்டியில் தேவிகா சொல்லியிருக்கிறார்.

  பத்மினி,சாவித்திரி,சரோஜாதேவி,தேவிகா,விஜயகுமாரி என்று ஒரு சில நடிகைகளே அப்போது முன்ணணியில் இருந்தார்கள். இதில் சாவித்திரி கொஞ்சம் உடம்பு போட்டுவிட்டார்.பத்மினி திருமணம் முடிந்து அமெரிக்கா போய்விட்டார். எஸ்எஸ்ஆரின் மனைவியான விஜயகுமாரியோடுஜோடி சேர்ந்து நடிக்க எம்ஜிஆர், சிவாஜி இருவரும் விரும்பவில்லை. சரோஜாதேவி எம்ஜிஆர் படங்களில் அதிகம் நடித்துக் கொண்டிருந்தார். சிவாஜி, தேவிகாவை தன் பக்கம் இணைத்துக் கொண்டார்.

  கண்ணதாசன் தயாரித்த  வானம்பாடி திரைப்படத்தில் தேவிகாவுடன் கமலஹாசனும் நடித்திருப்பார்.

  தேவிகா நடித்த படங்களில் எனக்குப் பிடித்த இன்னுமொரு படம், வாழ்க்கைப் படகு.

  • Thanks 1
 11. ஈழத் திரைப்பட நடிகர் ஏ.ரகுநாதன் தனது 85வது வயதில் 22.04.2020 இல் காலமானார் என்ற  துயரமான செய்தி வந்திருக்கிறது. ஈழத்து சினிமாவில் இவரது பங்கு அதிகமானது. இவரைப் பற்றி 2004இல் நான் எழுதிய ஈழத் தமிழ் சினிமா பற்றிய ஒரு கட்டுரையின் ஒரு சிறிய பகுதி இது.
  96729-D12-C659-48-D4-9-ABF-7033372-C28-B

  சினிமாப்படத்தை உருவாக்கும்  ஆர்வம் யார் யாருக்கு வருமென்றில்லை. யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம்.வேத நாயகத்துக்கும்  வந்திருக்கின்றது. விளைவு 'கடமையின் எல்லை' படம் தயாரானது. இது ஷேக்ஸ்பியரின் Hamlet என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட திரைப்படம். திரைப்படம் சம்பந்தமான நுட்பங்கள் தெரியாமலேயே எம்.வேதநாயகம் இந்தத் திரைப்படத்தை நெறியாண்டார். கூடவே இசை அமைப்பையும் ஏற்றுக் கொண்டார். இசை அமைப்பதற்கான தகமை அவரிடமிருந்தது. எம்.வேத நாயகம் அவர்கள் விரிவுரையாளர் மட்டுமல்ல சங்கீத பூசணம் பட்டம் பெற்ற வித்துவானும் கூட. 1966இல் வெளியான இத்திரைப்படத்தில்தான் இன்றும் நடித்துக் கொண்டிருக்கும் ஏ.ரகுநாதன் அறிமுகமாகியிருந்தார். எம்.உதயகுமாருக்கும் இப்படமே அறிமுகமாக இருந்தது. 

  இப்படம் பெரும் தோல்வியை அடைந்திருந்தாலும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் சரித்திரப் படம் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டது. இப்படத்தில் நடித்த கதாநாயகி ஜி. நிர்மலா உயரம் குறைந்தவராகவே இருந்தார். நாலரையடி நடிகை என்ற பெயர் இவருக்கு தானகவே வந்துவிட்டது. தென்னிந்தியத் திரையுலகில் நுளைந்து இலங்கை நடிகை தவமணி தேவி புரட்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படத்தில் நடிக்க நடிகை இல்லாமல் சிரமப்பட்டிருக்கின்றார்கள். இல்லாவிட்டால் கடமையின் எல்லையில் ஒரு ஆணுக்கு பெண்வேடம் போட்டு நடிக்க விட்டிருக்க மாட்டார்கள். 

  ஒரு ரயில் பயணம் சிறந்த கலைஞன் ஒருவரை எங்கள் திரையுலகத்திற்குத் தந்திருக்கின்றது. அறுபதுகளின் ஆரம்பத்தில் தனக்கு மனைவியாக நிச்சயிக்கப் பட்டிருந்த பெண்ணைப் பார்க்கும் ஆவலில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வார விடுமுறைக்குச் சென்று கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அந்த ரயிலிலேதான் நிச்சயிக்கப்பட்டது. ரயிலிலே கூடப் பயணித்த விரிவுரையாளர் எம்.வேதநாயகத்தின் கண்களில் அந்த திடகாத்திரமான இளைஞன் பட்டுவிடுகிறான். அந்த இளைஞனைப் பார்த்த மாத்திரமே அவனிடம் விரிவுரையாளர் எம்.வேதநாயகம் கேட்டு விடுகின்றார். நானெடுக்கும் திரைப்படத்தில் நடிக்கிறாயா? கலையரசு சொர்ணலிங்கம் அவர்களிடம் கலை பயின்ற அந்த நாடகக் கலைஞனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும். சம்மதித்துவிடுகிறான். எடுக்கப்படும் திரைப்படம் சரித்திரப் படம் என்பதால் குதிரையேற்றம், வீர விளையாட்டுக்கள் எல்லாம் பயின்று கொள்கிறான். கதாநாயகனுக்குத் தேவையான எல்லாமிருந்த போதும் பல் வரிசை நேர்த்தியில்லை என்ற காரணத்தால் அந்த வாய்ப்பு இல்லாமல் போகிறது. இவருக்கு கிடைத்திருக்க வேண்டிய அந்தப் பாத்திரம் அன்றைய கராத்தே சம்பியனான பொனி றோபேர்ட்ஸ் இற்குப் போய்விடுகிறது. ஆனாலும் கதாநாயகனின் நண்பனாக நடிக்கும் வாய்ப்பு அந்த இளைஞனுக்குக் கிடைக்கிறது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனக்கென்று ஒரு வரலாறு எழுதிய, எழுதுகின்ற அந்தக் கலைஞன் ஏ.ரகுநாதன் ஆவார். 

  கடமையின் எல்லையை உருவாக்கிய எம்.வேத நாயகம் அவர்கள் அதன் படத்தொகுப்பின் போது கலையகத்திலேயே மாரடைப்பால் காலமானார். தான் படைத்த திரைப்படத்தைப் பார்க்காமலேயே அவர் காலமானது வரலாற்றில் பதிந்து விட்ட சோகமான சம்பவம்.

   

   

   

  • Like 1
  • Thanks 1
 12. On 18/4/2020 at 00:46, தமிழ் சிறி said:

  இந்த... இடைவெளியில்,  மிச்ச மயிரையும்...  
  முழு மொட்டை  அடித்து விட்டு, கண்ணாடியில் பார்த்து ரசிப்பதும்... ஒரு அழகு தான்.

  882-F5182-0-AC6-466-E-94-F6-1-FAF77-DCA7

  • Haha 2
 13. 10 hours ago, suvy said:

  என் உயிர் உள்ளவரை உங்களையும் மறக்க முடியாது நண்பரே

  உயிர் இல்லாத போது நினைக்கவே முடியாது. நல்லது Suvy உங்கள் அன்புக்கு நன்றி.

  உங்கள் கவிதைக்கு நான் இரண்டு படங்கள் வரைந்தேன். முதலாவதில் அவ்வளவாக திருப்தி கிடைக்காததால் இரண்டாவதை வரைந்துஇங்கே பதிந்திருந்தேன். நான் கிறுக்கிய முதலாவது படத்தை இங்கே இணைக்கிறேன்  கவிதைக்குப் பொருந்தாவிட்டால் கவலை வேண்டாம். படத்துக்கு ஏற்ப இன்னொரு கவிதையை எழுதி விடுங்களேன்

  567-ECFE1-4534-4-ED1-A797-88-B296084-FAD

  • Like 1
 14. On 7/4/2020 at 16:32, suvy said:

  அனுபவத்துக்கு நீ வேண்டும்....நீதான் வேண்டும் ரூபிணி.....!
  எதுவரை......!
  என் உயிர் உள்ளவரை,நீ உயிர் குடுத்த சிலை உள்ளவரை,
   நிலமும் நீலவானம் உள்ளவரை......!

  3-EA92-BF2-7073-432-E-9-E15-3-FE6-ED6-B6

  • Like 5
 15. 9-F90861-F-EBBB-447-A-9844-DF0-C280817-E
  யேர்மனியில் மார்ச் 16ந் திகதி வந்த அரசாங்க அறிவிப்பின்படி தனிமைப் படுத்தல் மேலும் இரண்டு வாரங்கள் அதிகமாக்கப்பட்டு ஏப்ரல் 3ந்திகதிவரை நீடிக்கப் பட்டிருக்கிறது. 
   

  ஈஸ்டர், கிறிஸ்மஸ் இரண்டுமே யேர்மனியில் பிரதானமானவை. ஈஸ்டர் திருநாளை ஒட்டி யேர்மனியில் வெள்ளி முதல் திங்கள்வரை நான்கு நாட்கள் பொது விடுமுறை இருக்கிறது. பாடசாலைக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை. யேசுவை சிலுவையில் அறைந்த வெள்ளிக்கிழமையில் அநேக யேர்மனியர்கள் இறைச்சி சாப்பிடுவதில்லை. ஆனால் மீன் சாப்பிடுவார்கள். விருந்தினர்கள் வருகைகள், அன்பளிப்புகள் என்று யேசு உயிர்த்த ஞாயிறில் அவர்கள் களித்திருப்பார்கள். 

  ஈஸ்டர் திருநாளில் முட்டைகளுக்கு வர்ணம் தீட்டி, அவற்றைத் தோட்டங்களில் ஆங்காங்கு ஒளித்து வைத்து விட்டு பிள்ளைகளிடம் கூடைகளைக் கொடுத்து, “ஈஸ்டர் முயல் தோட்டத்தில் முட்டைகளை ஒளித்து வைத்திருக்கும். போய் தேடி எடுங்கள்” என்று சொல்லி பெற்றோர்கள் அனுப்பி வைப்பார்கள். சின்னச் சின்னக் கூடைகளைக் கையில் வைத்துக் கொண்டு பிள்ளைகள் ஓடியோடி புதர்களுக்குள் முட்டைகளைத் தேடி எடுத்து ஆனந்தப் படுவார்கள். 

  வழமையான பாடசாலை விடுமுறைக்கு முன்னரே மூன்று வாரங்களாக தனிமைப் படுத்தலில் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கும் சிறார்களுக்கு கொரோனா காலப் பகுதியில் வரும் ஈஸ்டர் திருநாள் மிகவும் சிரமமானது. இந்த வருடம் ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம் உறவினர்களோடும் நண்பர்களோடும் இல்லை என்பது பெரியவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் சிறார்களுக்கு? 

  யேர்மனியின் Thüringen மாநிலத்தில் உள்ள Saalfeld நகரத்தில் வசிக்கும் சிறார்களான Paula, Devin, Larissa, Hannah ஆகியோருக்கு, “இந்தத் தடவை ஈஸ்டர் முயல் வருமா? அப்படி வந்தால் முட்டைகளை எங்கே ஒளித்து வைக்கும்? இல்லாவிட்டால் ஈஸ்டர் முயலுக்கும் கொரோனா வந்திருக்குமா?” என்றெல்லாம் கவலை வந்திருக்கிறது. இது சம்பந்தமாகத் தங்களுக்குள் கதைத்துக் கொண்டார்கள். வெளியே கூட்டமாக நடமாட முடியாது. பொலீஸாரின் கண்காணிப்பில் நகரம் இருக்கிறது. ஆகவே பொலீஸாரிடமே இதைப் பற்றிக் கேட்டு விடுவோம் என்று நாலு பேரும் முடிவு செய்து பொலிஸாருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள். 

  சிறார்களின் கடிதம் கிடைத்தும், “இருக்கிற தொல்லைகளுக்கு மத்தியில் இவங்கள் சும்மா தொல்லைகள் தந்து கொண்டிருக்கிறாங்கள்” என்று சொல்லி பொலிஸார் அதை அப்படியே தூக்கி எறிந்து விடவில்லை. நகரப் பொலிஸாரிடம் இருந்து அந்தப் பிள்ளைகளுக்கு ஒரு பதில் கடிதம் வந்தது. 

  "அன்பான Paula, Devin, Larissa, Hannah,
  நீங்கள் நினைப்பது போல் ஈஸ்டர் கொண்டாட்டம் இந்த வருடம் இல்லாமலில்லை. அது வழமை போல நடக்கும். ஈஸ்டர் முயலார் இந்த வருடமும் வருவார். நாங்கள் நகரப் பவனி வரும் போது கவனித்தோம், வழமைபோலவே ஈஸ்டர் முயலார் ஓடித் திரிகிறார். கொரோனா பாதிப்பில்லாமல் அவர் நலமாகவே இருக்கிறார். நிச்சயாமா இந்த வருடமும் அவர் முட்டைகளை ஒளித்து வைப்பார். ஆனால் இந்த முறை அவர் தோட்டங்களிலோ பூங்காக்களிலோ ஒளித்து வைக்கமாட்டார் என்று நம்புகிறோம். அவர் உங்கள் வீட்டுக்குள் வந்து அங்கங்கே ஒளித்து வைப்பார். ஆகவே ஈஸ்டர் முட்டைகளை உங்கள் வீட்டுக்குள் தேடுங்கள். நிச்சயமாக உங்களுக்கு அவை கிடைக்கும். மகிழ்வாக இருங்கள்” 

  பொலிஸாரிடம் இருந்து வந்த கடிதத்தைப் பார்த்த Paula, Devin, Larissa, Hannah நால்வரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். அவர்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியில் பெற்றோர்கள் தாங்களும் பங்கு கொள்ள, பொலீஸாரிடம் இருந்து வந்த கடிதத்தை தங்கள் முகநூலில் பதிவிட்டிருக்கிறார்கள்.
   

  • Like 2
 16. On 12/4/2020 at 11:17, nedukkalapoovan said:

  யாழ் கள உறவும் எங்கள் எல்லோராலும் அன்புத் தங்கையாகப் போற்றப்பட்டவருமான யாயினி அவர்களின் அம்மா 11.04.2020 அன்று அமரத்துவம் அடைந்துவிட்டதாக யாயினியினின் முகப்புத்தகக் குறிப்பு அறிவித்துள்ளது.

  055-E0169-10-D3-41-D1-8-F90-A05120-B73-C

  • Like 1
 17. On 29/3/2020 at 20:42, pri said:

  எங்கள் வீடு. அது இருந்த குட்டி ஒழுங்கை. ஊர் பள்ளிக்கூடம். இதுதான் ஹாட்லிக்கு போகிறவரை எனக்கு தெரிந்த உலகம்.

  அநேகமாக எல்லா ஊரிலும் குட்டி ஒழுங்கைகள் நிறைய இருக்கும். நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்.

 18. 36 minutes ago, பையன்26 said:

  தாத்தா உங்க‌ட பின்புல‌ம் தெரியாம‌ உங்க‌ட‌ ம‌ச்சான் உங்க‌ கூட‌ விளையாடுகிறார் /

  என்ன பின்புலம்? பல தாத்தாக்கள்தான் பின்னாலே இருப்பார்கள். கொரோனா அள்ளிக் கொண்டு போயிடும் எண்டு அதுகள் பயத்திலை இருக்குதுகள். இதுக்குள்ளே இந்த விலங்கம் எதுக்கு?

  நான் நினைக்கிறேன் குமஸின்ரை வீட்டுக்குள்ளைதான் வில்லங்கம் இருக்குது எண்டு. “வேலைக்கு போற மனுசன். அதுக்கும் பொழுது போகத்தானே வேணும்” எண்டு மனுசி முந்திப் பேசாமல் இருந்திருக்கும்.இப்போ கொரோனாவாலே வேலையும் இல்லை. இராப் பகலா கொம்பூயூட்டரிலை இருக்கிறதாலை எரிச்சல் பட்டு மனுசி தமக்கைக்காரியிட்டை புலம்பி இருக்கும்.

  “சுய புத்தியும் இல்லை சொல்வழிகளும் கேட்கமாட்டான். எதுக்கும் அத்தானின்ரை பேரைச் சொல்லி வெருட்டிப் பார்ப்பம்” எண்டு தமக்கையும் கும்ஸிட்டை கேட்டிருப்பா.

  யேர்மனியர் அடிக்கடி சொல்வார்கள் “ஒரு காதால் கேட்டு மறு காதால் வெளியே விடு” என்று, அதுபோல் கும்ஸும் செய்யலாம். இரத்த அழுத்தத்துக்கு குளிசை எடுக்கிறதாக கும்ஸ் சொன்னதாக ஞாபகம். எதுக்கு வீணான டென்ஸன்?

   

   

 19. 0-E54-AEA7-397-B-4-C03-98-F5-111-D31-D30
  ஒவ்வொரு நாளும்
  தன்னை வந்து பார்த்துவிட்டுப் போகும் தனது மகள் கொஞ்ச நாட்களாகத் தன்னை வந்து பார்க்கவில்லையே என்று ஒரு தவிப்பு அந்தத் தாயிடம் இருந்தது. ‘இன்று வருவாள் நாளை வருவாள்என்று காத்திருந்து இரண்டு வாரங்களாகியும், மகள் வந்த பாடேயில்லை. யார் யாரோ என்னென்னவோ சொன்னார்கள். எதையுமே அந்தத் தாய் தனது காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவளது நினைப்பு முழுக்கத் தன் மகளிடமே இருந்தது.

  கொரோனாத் தொற்று யேர்மனியில் பரவிய போது, முதியோர் இல்லங்களில் அதன் தாக்கத்தைத் தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து செயற்படும்படி அரசாங்கம், முதியார் இல்லங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. அப்படி இருந்தும் Wolfsburg என்ற நகரத்தில் இருந்த முதியவர் இல்லத்தில் கொரோனாத் தொற்று ஏற்பட்டு பல முதியவர்கள் இறந்து போனார்கள். இந்த அதிர்ச்சியான நிகழ்வால், முதியோர் இல்லங்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. வெளியார்கள் மட்டுமல்லாமல் இரத்த உறவினர்கள்கூட  முதியவர்கள் இல்லங்களுக்குள் உள்நுளைய யேர்மனி முழுதும் அனுமதி மறுக்கப்பட்டது.

  கட்டிலில் படுத்திருந்த 101 வயதான Ursulaவுக்குத் தூக்கம் வரவில்லை. இன்று Marianneக்கு 72வது பிறந்தநாள் ஆயிற்றே. எப்படியும் அவளைப் பார்த்து வாழ்த்துச் சொல்லியே ஆக வேண்டும் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டார். யாரும் வெளியேறவோ உள்நுளையவோ முடியாதவகையில் முதியோர் இல்லத்து வாசலில் காவல் இருந்தது. ஆனாலும் ஒரு வழி அங்கே இருந்தது. முதியவர் இல்லத்தில் இருந்து அவசரகால வாசலால் வெளி வீதிக்கு வரமுடியும் என்பது Ursulaக்குத் தெரிந்திருந்தது.

  வீதியில் தள்ளாடியபடி  நடந்து கொண்டிருந்த Ursulaவை பொலீஸ் இடை மறித்தது. தன்னைப் பற்றிய எல்லா விபரங்களையும் சொன்ன Ursula முதியோர் இல்லத்தைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.

  Ursula குறிப்பிட்ட இடத்துக்கு தங்கள் வாகனத்திலேயே பொலீஸ் அவரை அழைத்துச் சென்றார்கள். ஆனாலும் பொலீஸார் மிகவும் அவதானமாக நடந்து கொண்டார்கள். தாயையும் மகளையும் தூர நிறுத்திக் கொண்டார்கள். Ursulaவின் கையில் ஒரு வெள்ளை உறை இருந்தது. Marianneவுக்குப் புரிந்து விட்டது, தனது பிறந்த நாளுக்கு தாய் வாழ்த்தோடு வந்திருக்கிறார் என்று.

  இதற்கிடையில் தாங்கள் பெற்ற தகவல்களின் அடிப்படையில் Ursula முதியோர் இல்லத்தில் இருந்து வருகிறார் என்பதை பொலீஸார் அறிந்து கொண்டார்கள். அவரை மீண்டும் பாதுகாப்பாக அங்கே கொண்டு போய் விட்டு விட்டார்கள்.

  A9-BE2-B28-A411-4677-A8-C8-6-B4-F5-D4-EB

  தாயின் பாசத்தில் உருகிப் போய் Marianne, பூக்கள், சொக்கிளேற் பக்கெற்றுக்களை வாங்கிக் கூடையில் போட்டு முதியோர் இல்லத்து வாசலில்போய் நின்றார். பின்னர் முதியோர் இல்ல நிர்வாக ஏற்பாட்டில்  Ursula மாடி யன்னலுக்கு வர அங்கிருந்தே தனது தாய் தந்த பிறந்த நாள் வாழ்த்துகளை கண்ணீருடன் Marianne ஏற்றுக் கொண்டார்

   

  • Like 2
  • Sad 1
 20. 23 hours ago, Paanch said:

  பழைய ஞாபங்கள்வந்து என்னையறியாமல் என் கண்கள் பனித்துவிடும்.  

  இடையிடையே சோகம் கலந்து ஒலிக்கும் ஜிக்கியின் குரல். இப்படி ஒரு பாடல் இனி வர சந்தர்ப்பம் கிடையாது. ஜிக்கியம்மா உணர்ந்து உருகிப் பாடி இருப்பார். இந்தப் பாடல் எனது மூத்த சகோதரியின் காலத்தில் வந்தது. அவர் இந்தப் பாடலை அடிக்கடி முணுமுணுக்கக் கேட்டிருக்கிறேன்.

  இந்தப் பாடலை இங்கே பதிவிட்டதற்கு நன்றி Paanch

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.