Jump to content

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1641
  • Joined

  • Last visited

  • Days Won

    42

Posts posted by Kavi arunasalam

  1. 12 hours ago, கிருபன் said:

    யுத்தச் சத்தங்களைக் கேட்டுக் கேட்டு, சதைகளைவிட சத்தங்களால் வளர்ந்தாள். இங்கு வந்த பிறகு, நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இது மனச்சிதைவு என்று கண்டுபிடிப்பதற்கே மருத்துவர்களுக்குப் பலகாலமானது நண்பனே.

    காலத்துக்கு ஏற்ற கதை. தந்ததற்கு நன்றி கிருபன்

  2. 12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

    தங்களது நடிப்பில் உருவாகும் திரைப்படங்களை ஈழத் தமிழர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். அதேவேளை இலட்சக்கணக்கான ஈழ தமிழர்கள் உங்களின் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்

    IMG-4924.jpg

  3. 2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

    லியோ' திரைப்படத்தை இலங்கையில் அக்டோபர் 20 ஆம் தேதி, வெளியிட வேண்டாம் என இலங்கையை சேர்ந்த தமிழ் எம்பிக்கள் தளபதி விஜய்க்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்

    நடிகர் விஜய் தனது திரைப்படத்தை இலங்கையில் நேரடியாக வெளியிடுகிறாரா?

  4. நூறாண்டு வாழ்வது எனபது சாதாரணமானது அல்ல.அன்னார் வாழ்க்கையை சிறப்பாக,ஒழுக்கமாக,சீராக வாழ்ந்திருக்கிறார் என்பது புரிகிறது.

    ஈழப்பிரியன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

    • Thanks 1
  5. 3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

    அத்தனை நாட்கள் பத்திரப்படுத்தியிருந்த அவனும் கலாவும் வற்சப்பில் பரிமாறிய செய்திகளை அவளிடம் கொடுக்கிறாள்.

    என்ன நடந்தது உங்களுக்கு? “வரும், விரைவில் வரும்” என்று போடாமல் ஒரே மூச்சில் கதை சொல்லி விட்டீர்கள்

    வயது வந்த (மூத்த) ஆணாக  இருப்பதால் இந்தப் பிரச்சினை எனக்கு இல்லை. வற்சப் கொஞ்சம் லேற்றாக வந்ததால் தப்பித்தேன். கண்ணதாசன் பாடல்வரி ஒன்று சொல்லட்டுமா?

    “பொல்லாத பெண்களடா புன்னகையில் வேசமடா

    நன்று கெட்ட மாதரடா நான் அறிந்த பாடமடா”

    (சென்ஸாரின் ஆட்சேபணையால் ‘மாதரை’ ‘மாந்தர்’ என்று மாற்றிப் போட்டார் கண்ணதாசன்)

  6. 11 hours ago, ஏராளன் said:

    இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை மூன்று விசைப் படகையும் அதிலிருந்து 12 மீனவர்களை கைது செய்தனர். 

     

    “கன்னியாகுமரி மீனவர்களுக்கு 200 கடல் மைல் தொலைவுக்குள் மட்டுமே சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல மீனவர்கள் அதை மீறி 1000 கடல் மைல்களை தாண்டிச் சென்று பிரிட்டன் கடற்படை கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவு மற்றும் ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், ஓமன் போன்ற நாடுகளின் கடல் பகுதிகளுக்குச் சென்று மீன்பிடிப்பதாக புகார்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன”

    https://www.bbc.com/tamil/articles/c4nd5exz36ko

  7. 4 hours ago, P.S.பிரபா said:

    இந்த முதலியாரின் வாசிகசாலைக்கு அருகில் ஒரு கோயிலையும் கண்டதாக நினைவு.. ஆனால் எந்தக்கடவுளின் கோயில் என பார்க்கவில்லை..

    அதேதான். அவரேதான் வைரவர். படத்தை இணைத்திருக்கிறேன். பாருங்கள். காவல் தெய்வத்தையே வெளியே வரவிடமால் உள்ளே எப்படிப் பூட்டி வைத்திருக்கிறார்கள் என்று. e60cab42-b267-4a03-80d8-f5adfa8a21ba.jpg

  8. IMG-4915.jpg

    “வள்ளிப்பிள்ளையின்ரை கனவிலை வந்து வைரவர் உண்மையிலேயே சொன்னவராமடி

    “வைரவர் இருந்தால் ஊரைக் காவல் செய்வார்தான். கனவிலை அவர் வந்து தனக்கொரு கோயிலைக் கட்டச் சொன்னதுக்குப் பிறகும் கட்டாமல் விட்டால் கோவத்திலை அவர் ஏதாவது செய்தும் போடுவார்

    எங்கள் கிராமத்தில் வைரவர் கோவில் உருவாக வள்ளிப்பிள்ளை என்பவரின் கனவில் வைரவர் வந்து சொன்னதே காரணமாக இருந்தது. வெள்ளைக்காரனிடம் இருந்து இலங்கை சுதந்திரத்தை பெறுவதற்கு முன்னர் நடந்த சம்பவம் அது.

    ஊரில் பரவிய வள்ளிப்பிள்ளையின் கனவு, தனியாக வாழ்ந்து கொண்டிருந்த முதலியார் சுப்பிரமணியத்தார் காதுகளுக்கு போய்ச் சேர்ந்தது. தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் சுவாமி அறையில் ஒரு அலுமாரியில் வைத்துப் பூட்டி இருக்கும் முதலியாருக்கும் ஒரு காவல் தெய்வம் தேவைப்பட்டது. கறுத்த நாயுடன் அதுவும் அம்மணமாக வைரவர் ஊரில் வலம் வரும் போது ஒருத்தருக்கும் இரவில் நடமாடத் துணிவு இருக்காது என்று கணக்குப் போட்டு, தன் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு சின்னத் துண்டு காணியை வைரவர் கோயிலுக்காக முதலியார் தானமாகத் தந்தார்.

    சின்னதாகக் கட்டப்பட்ட  கோயிலுக்கு, வைரவர் குடியிருந்த அறையின் வாசலில் ஒரு அலங்கார வளைவாக பித்தளையால் செய்த விளக்குகளையும் அமைத்துக் கொடுத்தார் முதலியார். ஒரு வாரம்தான் ஆகியிருக்கும். வைரவர் இருட்டில் இருந்தார். விளக்குகளைக் காணவில்லை. தன் விளக்குகளைக் காப்பாற்ற முடியாத வைரவரால் தனக்கு ஒரு பயனும் வரப் போவதில்லை என்று முதலியாருக்கு விளங்கி விட்டது. துன்னாலை என்ற இடத்தில் இருந்து ஒருவரை அழைத்து வந்து தன் வீட்டில் காவலுக்கும் எடுபிடி வேலைகளுக்கும் வைத்துக் கொண்டார்

    வைரவருக்கு நாள்தோறும் மாலையில் வடைமாலை போட்டு பூசை நடந்தது. வைரவர், கோயிலுக்குள்ளேயேதான் இருந்தார். போ.மு (போராட்டத்துக்கு முன்னர்), போ.பி இரண்டு காலத்திலும் வைரவர் எதற்காகவும் கவலைப்பட்டதே இல்லை. லண்டனில் இருந்து வந்த விஸ்ணு என்பவர் இப்பொழுது வைரவருக்கு மடம் கட்டித் தந்திருக்கிறார்.

    எந்தக் காலத்திலும் நேரடியாக வந்து கடவுள்  “பக்தா, எனக்கு ஒரு கோயில் கட்டித் தாஎன்று மனிதனிடம் கேட்டதே இல்லை. எப்பொழுதும் கனவில்தான் வருவார். ஆனாலும் சமீப காலமாககடவுள் கனவில் வந்தார்என்று சொல்பவர்கள் இல்லை என்ற நிலை வந்திருக்கிறது. கனவிலும் மனிதனிடம் வர கடவுள் பயப்படுகிறாரோ தெரியவில்லை.

    யேர்மனியில் நான் வசிக்கும் பாடன் வூர்ட்டம் பேர்க் (Baden Württemberg) மாநிலத்தில் அங்கொன்று இங்கொன்றாக பல கடவுள்கள் வாசம் செய்கிறார்கள். அதிலும் மாநிலத்தின் தலைநகரான ஸ்ருட்காட் (Stuttgart) நகரில் இரண்டு பிள்ளையார்கள் இருக்கிறார்கள். ஒருவர்புலிப் பிள்ளையார்மற்றவர்புளொட் பிள்ளையார்’. ஆக, பிள்ளையாளர்களின் உரிமையாளர்கள் யார் யார் என்று இப்பொழுது உங்களுக்கு விளங்கி இருக்கும்

    ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு க் கொண்டாட்டம்என்பார்கள்இங்கே கடவுள்களுக்குத்தான் கொண்டாட்டம். யேர்மனி வாழ் தமிழ் அமைப்பொன்றின் உள்வீட்டுக் கலவரத்தால் பிரிந்தவர்களால் இப்பொழுது பிள்ளையாரின் தம்பி சிறீ பாலமுருகன்18.10.2023 அன்று 10:48 முதல் 12:00 மணிவரை உள்ள சுபமுகூர்த்த வேளையில் ஸ்ருட்காட் நகரில் குடியேற இருக்கிறார். இந்த விபரம் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. அந்த விபரத்தில் தலைவர், செயலாளர் தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டது மட்டுமல்லாமல் மறக்காமல்  கோயில் குருக்களின் தொலைபேசி எண்களையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

    எழுபது வருடங்களுக்கு முன்னர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

    “கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே

    கருத வேண்டியதை மறந்தாச்சு - பழங்

    கதைகளைப் பேசி காலம் வீணாச்சு

    photo- P.S.பிரபா (யாழ் இனையம்)

     

    கவி அருணாசலம்

    • Like 2
  9. 14 minutes ago, நிழலி said:

    வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதிக்கு இருந்த தடை நீக்கம் “ எண்டு அரசாங்கம் அறிவித்தது எண்டு லோசனின் செய்திகள் தயையங்கம் சொல்ல, இது எந்த ஏற்றுமதியை எண்டு யோசிச்சபடி நடந்தன்.

     

    இன்றைய நடைமுறையை உங்கள் நடையில் அழகாக தந்திருக்கிறீங்கள். “வரமுதல் உங்கயே எல்லாத்தையும் காட்டீட்டு வரச்சொல்லி, ஒரு பிரச்சினையும் இல்லைத் தானே” என்ற வரியில் கொஞ்சம் பயந்து விட்டேன். நீங்கள் ஏற்றுமதியை நினைத்தபடி நடக்கப் போய் யாழ்ப்பாணத்தில் தடக்கிட்டீங்கள்.☺️

  10. 4 hours ago, கிருபன் said:

    இறுதியாக ஹர்த்தால் அறிவிக்கப்பட்டது. இதனை ஏழெட்டுக் கட்சிகள் இணைந்து அறிவித்துள்ளன. இதுவும் புதிதல்ல. வழமையாக இந்தக் கட்சிகள் செய்கின்ற வேலைதான். இதனுடைய பயன் எப்படி அமையும் என்று எல்லோருக்குமே தெரியும்.

    IMG-4769.jpg

  11. On 11/10/2023 at 18:09, ஏராளன் said:

    'தி இந்து' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாலினி பர்த்தசாரதி X தளத்தில் எழுதியுள்ளார்: "இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் பிரச்சினையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடூரத்தனம் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அது போலவே, பாலத்தீன விவகாரத்திலும் (அல்லது அவர்களின் உரிமைகள் பிரச்சினையிலும்) தீவிரவாதிகள் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹமாஸின் கொடூரத்தனம் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது."

    IMG-4767.jpg

    • Thanks 1
    • Haha 1
  12.  

    இந்தியக் காவல்துறை ஊழல் நிறைந்தது மட்டுமல்ல, பயனற்ற  ஒன்று என்றும் யேர்மனியத் தொலைக்காட்சி ஊடகம் NTV  செய்தி வெளியிட்டிருக்கிறது. வீதி விபத்தில் பலியான ஒரு முதியவரின் உடலின் ஒரு பகுதியை மூன்று இந்தியக் காவல்துறையினர், கால்வாயில் எறியும் ஒரு வீடியோவை அது இணையத்தில் இருந்து எடுத்து பதிவிட்டிருக்கிறது

    முசாபர்பூர் (Muzaffarpur) மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ராகேஷ் குமார் இந்தச் சம்பவம் பற்றிக் கூறுகையில், மூன்று காவலர்களும் பாரிய தவறொன்றைச் செய்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் மூவரையும் சேவையில்  இருந்து இடைநிறுத்தி இருக்கிறோம் என ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்

    வேகமாக வந்த ஒரு பார ஊர்தி மோதி  முதியவர் உடல் நசுங்கி உயிர் இழந்திருக்கிறார்.அவர் இன்னும் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. "முதியவரின் உடலின் மேற்பகுதியை (?)காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி விட்டு, கீழ் பகுதியை மட்டும் கால்வாயில் எறிந்திருக்கிறார்கள்" என போலீஸ் அதிகாரி ராகேஷ் குமார் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்திருக்கிறார்.

    இணைய சேவையான எக்ஸ் ( ட்விட்டர்) பயனர் ஒருவர்  "அவர்கள் காவல்துறை அதிகாரிகளா அல்லது காட்டு விலங்குகளா?"  எனக் கேள்வி எழுப்பி உள்ளார்

     

     

  13. On 29/9/2023 at 23:18, putthan said:

     

    " என்ன உம்மடை முருகன் ஸ்போர்ட் தரவில்லையே இன்றைக்கு"

    " பக்கத்து தெருவில் பார்க் பண்ண உங்களை தூண்டியது எம் பெருமான் முருகன் தானே"

    கடவுள் ஏதோ ஒரு வடிவத்தில் வந்து உதவுவார் என்று நாமு சொன்னது கரெக்ட் தான்.

    அழகாக கதையை நகர்த்த இருக்கிறீர்கள் putthan 😋

    • Like 1
  14. 1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

    என்னை ஓடுகாலி எண்டு மறைமுகமா நீங்கள் திட்டுரமாதிரி இருக்கு😀

    என்ன இப்படி சொல்லிட்டீங்கள். வாத்தியார் மகளை அப்படிச் சொல்வேனா? கதையின் நாயகியைத்தான் சொன்னேன். உங்கள் கதையின் நாயகி அப்படி ஒரு கரெக்டர். “சுயநலம்", “அவள் அப்படித்தான்” என்றெல்லாம் தலைப்பிடலாம் என்று யோசித்தேன். திடீரென “ஓடுகாலி” புகுந்து விட்டது.  

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.