Jump to content

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1641
  • Joined

  • Last visited

  • Days Won

    42

Posts posted by Kavi arunasalam

  1. 6 hours ago, nochchi said:

    பேனாவைக் கட்டுவதற்குப்பதிலாக வீடற்று வீதியோரங்களில் படுத்துறங்கும் 162குடும்பங்களைத் தெரிவுசெய்து குடியிருக்க வழிசெய்தால் கருணாநிதியின் பெயர் மட்டுமல்ல ஸ்ராலினின் பெயரும் நிலைக்குமல்லவா?

    தப்பு. கடலில் பேனா காலகாலமாக நின்று கருணாநிதி பேர் சொல்லும்.

  2. 4 minutes ago, தமிழ் சிறி said:

    பல்கேரியா பெண்ணின் படம் ஒன்றும் இல்லையா

    புல்காரியப் பெண்கள் படங்கள் இணையத்தில் நிறைய இருக்கின்றன. கூச்சல் போடுவார்களா தெரயாது

  3. 6 hours ago, nochchi said:

    இது ஈழத்தமிழர் ஒருவர் தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படமாகும். அதிரடியாக முதல் படத்திலேயே மூன்று வேடங்களில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகிறார் ஈழத்தமிழர் துஷாந்.

    முதல் படத்திலேயே மூன்று வேடங்கலா? சொந்தப் பணம்.

    அகலமாகக் கால் வைத்திருக்கிறார்

    ஈழத்தவர் தயாரிக்கும் இந்தியப்படம்?

    • Like 1
  4. IMG-4163.jpg

    கடந்த வெள்ளிக்கிழமை 23.06.2023 யேர்மனி முனிச் நகரில் இருந்து சோபியா (பல்கேரியா)வுக்கு  லுஃப்தான்சா விமானம் ஒன்று புறப்படத் தயாரக இருந்தது. திடீரென 27 வயது நிரம்பிய பெண் பயணி ஒருவர் தனது உடைகளைக் களைந்து விட்டு பெரும் சத்தமாகக் கூச்சல் போட ஆரம்பித்தாள்.

    நிலமையைச் சீராக்க விமானத்துக்குள் பொலிஸார் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் எவ்வளவோ முயன்றும் அவளுக்கு உடையை அணிவிக்கவோ, அவளைச் சமாதானப் படுத்தவோ முடியவில்லை. இதற்கிடையில் அவளது நிர்வாண மேனியை போர்வை கொண்டு மூடி விட எத்தனித்த ஒரு பொலிஸின் இடது கையின் முன்பக்கத்தில்  கடித்து காயத்தையும் ஏற்படுத்தியிருந்தாள்.

    நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் விமானத்தை விட்டு வெளியே கொண்டு வரப்பட்ட  பல்கேரியாவைச் சேர்ந்த அந்தப் பெண் மருத்துவச் சோதனைகளுக்காக Bezirks மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். இந்த அமளியால் அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தைவிட மூன்றரை மணித்தியாலங்கள் தாமதமாக முனிச் விமான நிலையத்தில் இருந்து பறக்க ஆரம்பித்தது

     பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவித்தமை, அவர்கள் மீதான உடல் ரீதியான தாக்குதல்கள் குறித்து அந்தப் பெண்ணின் மேல் இப்பொழுது பொலிஸாரினால் வழக்கு ஒன்று பதிவாகி இருக்கிறது

  5. IMG-4161.jpg

    அவளுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒரு இனிய நாளாக இருந்திருக்க வேண்டியநாள். ஆனால் மாறாக அந்தநாள் அவள் வாழ்வில் ஒரு பயங்கரமான நாளாகிப் போனது.

    திருமணம் நடந்து ஒரு மணித்தியாலத்தில் இதயத்தில் இரத்தம் உறைந்து போனதால் அவளது கணவன் மரணித்துப் போனான்அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

    Johnnie Mae Davis, Toraze († 48) இருவரும்  அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவர்கள் முகங்களில் புன்னகைகள் பூத்திருந்தன. இருவரதும் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் பலர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவிப்பதற்காக தேவாலயத்தில்  கூடி இருந்தார்கள்

    அருட்தந்தையிடம் திருமணத்துக்குசரிஎன்று இருவரும் ஒப்புக் கொடுத்ததன் பின்னர்  புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது  Toraze திடீரென சரிந்து விழுந்தான். சில வினாடிகள்தான் அவனது இதயம் நின்று விட்டது

    ஏற்கனவே Johnnie அவளது தந்தையையும் இன்னுமொரு நெருங்கிய உறவினரையும்  இதே போன்று இதய நோயால் இழந்திருக்கிறாள். இப்பொழுது மூன்றாவதாக அவளது கணவன்.

    Johnnie க்கு உதவுவதற்காக அவளின் நண்பரான Miller இணையத்தினூடாக அன்பளிப்புகளை நாடினார். ஐந்து நாட்களில் 16,800 அவரால் திரட்ட முடிந்தது. Toraze இன் இறுதி நிகழ்வு 5ந் திகதி யூலையில் நடைபெற இருக்கிறது.

    Foto: Johnnie Mae Drummer-Davis/Facebook

    • Sad 1
  6. யேர்மனியில் Saarbruecken மாநிலத்தின் Wehrden நகரப் பொலீஸ் நிலையத்துக்கு சனிக்கிழமை 24.06.2023 மதியத்தின் பின்னர் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

    பொருட்கள் வாங்க பல்பொருள் அங்காடிக்கு வந்தேன். காரை வாடிக்கையாளர்கள் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து பார்த்தால் எனது காரைக் காணவில்லைஎன்று கவலையோடு  45 வயதான ஆண் ஒருவர்  தொலைபேசியினூடாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார்.

    பொலிஸர் அந்த ஆணிடம் அவரது கார் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டனர். அங்காடியில், கமரா மூலம்  பதிவு செய்யப்பட்டிருந்த விபரங்களைப் பொலிஸார் பரிசோதித்த போது அவரது கார் தரிப்பிடத்தை விட்டு வெளியேறவேயில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது

    பொலிஸார் சந்தேகம் வந்து அந்த ஆணுடன் அங்காடியின் தரிப்பிடத்தைச்  சுற்றிப் பார்வையிட்ட போது, எங்கே அவர் தனது காரை நிறுத்தி  வைத்தாரோ அதே இடத்தில் அவரது கார் அமைதியாக நின்றது

    அந்த ஆணிடம் தகவல்களைப் பெறும் போது அவரிடம் இருந்து மது வாசனை வருவதை அவதானித்திருந்த பொலிஸார் அவரை இரத்தப்பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அவரது இரத்தத்தில் 2 புறோ மில்லி அற்ககோல் இருப்பது தெரிய வந்தது.

    மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினார் என்ற  அடிப்படையில்  அவரது சாரதிப் பத்திரத்தை பொலிஸார் எடுத்துக்  கொண்டு போய்விட்டார்கள்.

    இப்பொழுது அவரது கார் அங்காடியின் வாடிக்கையாளர் தரிப்பிடத்தில் நிற்கிறது.

    • Haha 1
  7. On 19/6/2023 at 20:04, நிழலி said:

    பாக்க ரோட்டில போகேக்க எங்கயோ ஒரு மூலையில போடிற பழைய பாட்டுக் கேக்கேக்க வாற சந்தோசமும் எப்பவுமே தனிரகம்.

    அனுபவிச்சு எழுதியிருக்கிறார் Dr.T.கோபிசங்கர்

  8. On 18/6/2023 at 23:47, குமாரசாமி said:

    ஏனெனில் ஜேர்மனியில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் ஈழத்தமிழர்களின் அமைதியும் சாந்தமும் பளிச்சென்று புலப்படும்.

    உண்மைதான் குமாரசாமி. ஞாயிற்றுக்கிழமை நடந்த காமாட்சி அம்மாள் தேர்த்திருவிழாவைப் பற்றி பத்திரிகை ஒன்று இப்படி எழுதியிருக்கிறது

    Farbenfroh und sehr friedlich feierten am Sonntag tausende Gläubige der Hindu-Gemeinde in Hamm das höchste Fest des Sri-Kamadchi-Ampal-Tempels.  ( இந்து சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹம்மில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலின் தேர்த் திருவிழாவை ஞாயிற்றுக்கிழமை அன்று வண்ணமயமாகவும் மிகவும் அமைதியாகவும் கொண்டாடினர்)

    • Thanks 1
  9. மாடுகள் கொல்லப்பட வேண்டும்

    IMG-4155.jpg

    எங்கள் நாட்டு பட்டர் மிகவும் சுவயானவை. ஏனெனி்ல் எங்கள் மாடுகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனஎன்று ஐயர்லாண்ட், பட்டருக்காக  விளம்பரம் செய்கிறது. ஆனால் 19.06.2023  ஐயர்லாண்ட் நாட்டால் இருந்து வந்த செய்தி  அதற்கு நேர்மறையாக இருந்தது.   மாடுகளுக்கு  ஒருவேளை படிக்கத் தெரிந்திருந்தால் அந்தச் செய்தியை வாசித்து அவைகள் மகிழ்ச்சியைத் தொலைத்து கண்ணீர் வடிக்கும் . பட்டர்களும் கூட இனி சுவை குறைந்து போகும்.

    காபனீர்ஒக்சைட் வெளியேற்றத்தை 1990 ஆம் ஆண்டை விட 2050 ஆம் ஆண்டளவில்  80 சதவிகிதத்தால் குறைக்கும் நோக்கை ஐயர்லாண்ட் நாடு அடைய  வேண்டுமாயின் 200,000 மாடுகள் கொல்லப்பட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். ஒரு மாடு ஆண்டுக்கு 100 கிலோகிராம் மீத்தேன் வாயுவை வெளியிடுகிறது. மீத்தேன் வாயு, காபனீர்ஒக் சைட்டை   விட பத்து முதல் இருபது மடங்கு அதிக தீங்கு விளைவிக்கும் ஒரு வாயு எனவே தான் இந்த முடிவு எடுக்கப் பட்டிருக்கிறது.

    வருடம் ஒன்றுக்கு 65,000 மாடுகள் வீதம் மூன்று வருடங்களுக்கு மாடுகளை அழிப்பதற்கான செலவுகள் மட்டும் 200 மில்லியன் யூரோக்கள் என அதற்கான நிதியும் திட்டமிடப் பட்டிருக்கிறது.

    • Sad 1
  10. இப்படி ஒரு இனங்களுக்கான மோதலை என் வாழ்நாளில் நான் யேர்மனியில் பார்த்ததில்லைஎன  யேர்மனிய பொலீஸ் அதிகாரி ஒருவர் அதிர்ச்சியுடன் அறிவித்திருக்கிறார்.

    Nordrhein-Westfalen மாநிலத்தில் எசன் நகரில் சிரியா, லெபனான் இனக் குழுக்களிடயில் வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணி அளவில் மோதல் ஒன்று இடம் பெற்றிருந்தது . ஆரம்பத்தில் 70 முதல்80 வரையிலானோர் வரையில் பங்கு பற்றிய இந்த மோதல் 500 பேருக்கு மேலானோர் பங்கு பற்றும் அளவுக்கு விரவடைந்திருந்தது.

    எசன் நகரில் ஒரே குடியிருப்பில் வசிக்கும்இரண்டு  குடும்பங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவே  16.06.2023 வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் இரத்தக் களறியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் சிறார்களுக்கிடையில் விளையாட்டின் போது ஏற்பட்ட சண்டையே அடிப்படையானது என அறிய முடிகிறது.

    தகவல் கிடைத்து காவல்துறை வந்தபோது, கத்தி, வாள், இரும்புக் கம்பிகள், துடுப்பாட்ட மட்டைகள் போன்றவை மோதலின் போது மிகவும் மோசமாகப் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருந்தன.

    அங்கு நின்ற லெபனான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை பத்திரிகையாளர் வினவிய போது,  “சிரியன் எங்களுடன் கேவலமாக நடந்து கொள்கிறார்கள். இப்பொழுது நாங்கள் யார் என்று அவர்களுக்கு காட்ட வேண்டிய தருணம்  வந்திருக்கிறது. எங்களில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்திருக்கிறார். எங்களில் பெரியவர் ஒருவர் Whatsapp மூலமாக அறிவித்தல் தந்ததால் லெபனான் குடும்பத்தைச் சேர்ந்த  நாங்கள் இங்கே ஒன்றாகத் திரண்டிருக்கிறோம். எங்களின் தாக்குதல் எப்படி இருக்கும் என்பதை சிரியர்களுக்கு காட்டப் போகிறோம்என்றார்.

    மேலும் எசன் நகரப் பூங்காவில் இருந்து 150 மீற்றர் தூரத்தில் இருக்கும் லெபனான் நாட்டைச் சேர்ந்தவரது உணவு விடுதிக்கு முன்னால் சிரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல்கள் விடுக்கும் காட்சியின் ஒளிப்பதிவு பரவலாகப் பரப்பப்பட்டு வந்திருக்கிறது.

    இதன் எதிரொலியாக 500க்கு மேற்பட்ட லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்கள் சிரிய நாட்டவர்களுக்குச் சொந்தமான சிற்றுண்டி விடுதியைச் சேதமாக்கி இருக்கிறார்கள். “எங்களை யாரும் பயமுறுத்த முடியாதுஅது மிகவும் பிழையான காரியம்அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும் வரை இது தொடரும்என லெபனானைச் சேர்ந்த ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

    ஆரம்பத்தில் விசயம் இவ்வளவு விபரீதமாக இருக்கும் என்று நினைக்காமல் வந்த பொலிஸாருக்கு தங்களிடம் இருக்கும் Pfefferspray எந்த மூலைக்கு என்பது புரிந்து போயிற்று. மேலும் 250 பொலீஸாரும், சிறப்பு அதிரடிப் பொலீஸாரும் அழைக்கப்பட்டார்கள். கூடுதலாக ஒரு உலர்ங்கு வானூர்தியும் வானத்தில் பறந்து கொண்டிருந்தது. இந்த மோதல்களில் பலர் காயப்பட்டிருக்கிறார்கள். மேலும்100 பேர்வரை கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்

    மதங்களூடாக வழங்கப் படும் நீதி அவரவர்கள் வாழும் நாட்டில் இருக்கலாம். ஆனால் யேர்மனியில் அது சாத்தியப்படாது. யேர்மனிக்கு என்று முறையான சட்ட திட்டங்கள் இருக்கின்றன. இந்த நாட்டில் வாழும் மக்கள் அவர்கள் எந்த நாட்டவரானாலும் சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நடக்க வேண்டும் என Nordrhein Westfalen பாராளுமன்ற கிறிஸ்தவ ஜனநாயக்க கூட்டணிக் கட்சியின் இணைத் தலைவர் Gregor Golland,அறிவித்திருக்கிறார்

    பொலிஸார் நடத்திய சோதனைகளில் தாக்குதலுக்குத் தேவையான கத்தி துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் பணமும் கைப்பற்றப் பட்டுள்ளது.

    • Like 1
  11. IMG-4147.jpg

    மேல் ஆடை இல்லாமல் வெறும் பிக்னி மட்டும்  அணிந்து கொண்டு பொது நீச்சல் தடாகத்தில் நீந்துவதற்கு அவளுக்குப் போதுமான துணிவு இருந்ததுமேலாடை இல்லாமல் நீந்த முயற்சித்ததைப் பற்றி  எதிரான கருத்துகள் வந்த போது அவள் அவற்றைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

    அவளுக்கு கொலை அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கிய பொழுதுதான் அவள் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தாள்.

    “சிலர் என்னை பலாத்காரம் செய்யக் கூடத் தயங்க மாட்டார்கள்இப்படிச் சொன்னவர் 33 வயதான லொற்றே மீஸ்

    “இங்கே என்ன பிரச்சனை இருக்கிறது? எல்லோருக்கும் ஒரே மார்பகம்தானே. நாங்கள் இந்த வருட கடும் கோடையில் பிக்னி மட்டுமே அணிந்து கொண்டு  நடைப் பயணம் செல்லலாம் என்று  தீர்மானித்திருக்கிறோம்என்று லொற்றே மீஸ் சொல்கிறார்.

    கடந்த வருடம் மார்கழி மாதம் பேர்லினில் உள்ள ஹவுள்ஸ்டோர்ப்  நீச்சல் தடாகத்தில் மேல் ஆடை இன்றி   பிக்னி மட்டுமே அணிந்து கொண்டு லொற்றே மீஸ் நீந்த எத்தணித்த போது , அங்கிருந்த பணியாளர்கள் அவரை நீச்சல் செய்ய அனுமதிக்கவில்லை. “ஆண் பெண் என்று பாகுபாடு பார்க்கக் கூடாது எல்லோரும்  சமமாக நடத்தப்பட்ட வேண்டும்”  என்று  லொற்றே மீஸ் அங்கே வாதம் செய்ய ஆரம்பித்தார். அவரின் விவாதம் நீச்சல் தடாகத்து நீரில் கரைந்து போனது. நிர்வாகிகளால்  அவர் நீந்துவதற்கு அனுமதிக்கப் படவேயில்லை.

    “மேலே ஆடை அணியாமல்  இருப்பது ஒரு பிரச்சனையில்லை. அடிப்படையில் அது தடை செய்யப் படவும் இல்லை  ஆனால் ஆடை வடிவமைப்பாளர்கள் ஏன் பெண்களுக்கான நீச்சல் உடைகளை  அப்படி வடிவமைத்திருக்கிறார்கள் என்பதை  லொற்றே மீஸ் புரிந்து கொள்ள வேண்டும்என நீச்சல் தடாக நிர்வாகிகள் பதில் தந்திருக்கிறார்கள்.

    சமூக வலைத்தளங்களில்  இது ஒரு பேசும்  பொருளாக வந்த போது   ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் வைக்கப்படுகின்றன.

    எங்களுக்குத் தைரியம் இல்லை. ஆனால் உங்களுக்கு எங்கள் ஆதரவு இருக்கிறதுஎனப் பல பெண்கள் என்னை பாராட்டி எனக்கு எழுதியிருக்கிறார்கள் என லொற்றே மீஸ் கூறுகிறார்.

    “பெண்கள் உடலை மையப்படுத்தியிருக்கும்  பாலியல் பார்வையை இன்று நாளை என ஒரு நாளிலேயே தீர்த்து விடலாம்  என்பது ஒரு கற்பனை வாதம். ஆனால்  பலர் பாதிக்கப்பட்ட பெண்களின்   பின்னால் நிற்பது எங்களுக்கு நல்லதொரு அறிகுறிஇப்படிச் சொல்லும் லொற்றே மீஸின் பெண்ணியம் பற்றிய எழுத்துக்களுக்கு பல  புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அவர் எழுதும் பெண்ணியம் பற்றிய புத்தகத்தை வெளியிட அவர்கள்  பெரிதும் ஆர்வமும் காட்டி வருகிறார்கள்.

    யூலை 1ந் திகதி, ‘ எல்லோருக்கும் ஒரே மார்பு’   என்ற கோசத்துடன் ஒரு  தெளிவான எதிர்ப்புப் போராட்டத்தை டிறேஷ்டன் நகரத்தில் நடாத்த  லொற்றே மீஸ் தீர்மானித்திருக்கிறார். நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் இடுப்புக்கு மேலே ஏதும் அணியாமல் நான்கு மணி நேரம் சைக்கிள் பவனி வரப் போகிறார்கள். ஊர்வல அமைப்பாளர்கள் நிதானமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஊர்வலம் டிறேஷ்டன் நகரப் புதிய சந்தை, தேவாலயங்கள் அதுவும் பெண்கள் தேவாலயம் எல்லாவற்றையும் சுற்றி  நான்கு மணி நேரம் நடக்கப் போகிறது என்பதில்  டிறேஷ்டன் நகரசபைதான் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது.

    இன்னும் என்ன என்ன உரிமைகள் இவர்கள் கேட்கப் போகிறார்களோ தெரியாது.  

    யூலை 1ந் திகதி  டிறேஷ்டன் நகரத்துக்குப் போனால்பார்க்கலாம்.

    • Like 1
  12. எனக்கும் இப்படியான அனுபவம் ஒன்று இருக்கிறது. அந்த அம்மா இப்பொழுது உயிரோடு இல்லை. அவர் பற்றி எழுதியும் இருக்கிறேன்.

     ஓர்மை இல்லடா கோந்தே எனக்கு பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்க உதவியது. நன்றி ஏராளன்

    • Like 1
  13. IMG-4142.jpg

    கிரேக்க நாட்டின் பெலோபொன்னீஸ் தீபகற்பத்தின் கடற்கரையிலிருந்து 47 கடல் மைல்தூரத்தில் உள்ள சர்வதேசக் கடலில்  கப்பல் கவிழ்ந்ததில்  பலர் இறந்துள்ளதாக கிரேக்கஅதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    புதன்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. லிபியாவில் உள்ளடோப்ரூக்கில் இருந்து இத்தாலிக்கு நோக்கிப் புறப்பட்ட அந்தக் கப்பலில்500பேர்வரையில் இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவிக்கிறார்கள்.  

    இதுவரையில்104 பேர்  மட்டுமே மீட்க பட்டிருக்கிறார்கள் இந்தக் கப்பலில் பயணம்செய்தவர்கள்  பெரும்பாலும் சிரியா, எகிப்து மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர்கள்என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    செவ்வாயன்று, சர்வதேசக் கடலில் பயணித்த இந்தக் கப்பலைப் பற்றிய தகவலைஇத்தாலிய அதிகாரிகள்  கிரேக்க நாட்டுக்குக்   கொடுத்திருக்கிறார்கள். Frontex விமானமும் பெலோபொன்னீஸ் தீபகற்பத்தின் தென்மேற்கே 47 கடல் மைல் தூரத்தில்இந்தக் கப்பலை கண்டு தகவல் கொடுத்திருக்கிறது.

    இந்தக் கப்பலை அவதானித்த  கிரேக்க கடலோர காவல்படை அவர்களுக்கு உதவிகள்ஏதாவது  தேவையா என ஒலிவாங்கியின் மூலம் கேட்ட போது பயணிகள் உதவியை மறுத்து விட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல் அவர்களது கப்பலை கடந்து சென்ற ஒரு சரக்குக் கப்பலும் உதவ முன்வந்தபோது அதுவும் மறுக்கப்பட்டிருந்தது. பயணிகளது இலக்கு இத்தாலி என்பதாலும் அகதிகள் தொடர்பாக ஐரோப்பிய யூனியனில் சமீபத்தில் எடுக்கப்பட்ட முடிவும் கிரேக்க நாட்டின் அகதிகள்தொடர்பான செயற்பாடுகளும் அவர்கள் அந்த உதவிகளை மறுத்ததற்கான காரணங்களாக இருக்கலாம் என்ற கருத்து வைக்கப்படிருக்கின்றது

    • Sad 1
  14. IMG-4137.jpg

    52 வருடங்களுக்கு முன்னர், 1971ம் ஆண்டில்   பேரு நாட்டு அடர்ந்த காட்டின் மத்தியில் நடந்த விமான விபத்தில்  17 வயதாக இருந்த ஜூலியானே டில்லர் (Juliane Diller)  என்பவர் உயிர் தப்பினார்.

    ஜூலியானே அப்பொழுது லீமாவில் தனது பெற்றோருடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளது தந்தை அங்குள்ள அடர்ந்த காட்டின் மத்தியில் ஒரு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி  பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    தனது கல்லூரிப் படிப்பை டிசம்பர் 23இல் முடித்த ஜூலியானே அந்த வருடத்து கிறிஸ்மஸ் தினத்தையும் பிறக்கும் புத்தாண்டையும்  தந்தையுடன் கொண்டாடுவது என்று தீர்மானித்துக் கொண்டாள். அவளது தந்தை இருந்த இடம் புகால்பா நகரத்தை ஒட்டிய காட்டுப் பகுதியில் இருந்தது. பாடசாலை முடிந்த அடுத்த நாளே  புகால்பா நகரத்தை நோக்கிப் பறப்பதற்காக ஜூலியானேயும் அவளது தாயார் மரியாவும் லீமா(பேரு) விமான நிலையத்தில் இருந்து புறப்படும் நான்கு இயந்திரங்கள் கொண்ட  OB-R-941 விமானத்தில் ஏறினார்கள.

    ஜூலியானே தனது தாயாருக்குப் பக்கத்தில் 19F இலக்க இருக்கையில் அமர்ந்திருந்தாள். தந்தையைக் காணப் போகும் சந்தோசம் மட்டுமல்ல, அடர்ந்த காடுகளில் இயற்கையோடு இருக்கப் போகும் விடுமுறையைப் பற்றிய கனவுகளும் அவளுடன் சேர்ந்திருந்தன.

    விமானம் மணிக்கு 600 கிலோ மீற்றர் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. புகால்பா விமான நிலைய இலக்குக்கான  பயணம் வெறும்  ஒரு மணித்தியாலம் மட்டுமேஆனால்  விமானம் 500 கிலோமீட்டர் பறந்த பின்னர், கடுமையான  புயல் வீச ஆரம்பித்ததுஉயிருள்ள விலங்குகள் போல் கருமேகங்கள் விமானத்தை சுற்றிச் சுற்றி வலம் வர ஆரம்பித்தன. புயற்காற்றின் மோதல்களில் விமானம் பயங்கரமாகக் குலுங்க ஆரம்பித்தது. அடிக்கடி வானத்தில் தோன்றும் மின்னல்கள் மேலும் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. ஒரு மின்னல்  விமானத்தின் வலது பக்க  இயத்திரத்தை தாக்க உடனேயே விமானம் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இப்பொழுது விமானம் தனது கட்டுப் பாட்டை இழந்து தாறு மாறாகப் பறக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் நெருப்புப் பந்தாக விமானம் தரையை நோக்கி வேகமாக கீழே விழ ஆரம்பித்தது.

    “எல்லாமே முடிந்து போய் விட்டதுஎன்று ஜூலியானேயின் தாய் ஜூலியானேயைப் பார்த்து பயத்துடன் சொன்னாள். விமானம் எங்கும் பயங்கரமாக அலறல் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. தரையி்ல் இருந்து 3000 மீற்றர் உயரத்தில் விமானம் வெடித்துச் சிதறியது. தலை கவிழ்ந்த நிலையில் இருக்கையில் இணைக்கப்பட்டபடி ஜூலியானே வானத்தில்  வீசப்பட்டாள்அவளுக்கு மூச்சு முட்டியது. அவளின் கீழே காடு சுழன்று கொண்டிருந்தது. மெது மெதுவாக  ஜூலியானே சுய நினைவை இழக்கத் தொடங்கினாள்.

    ஜூலியானே கண்களைத் திறந்து பார்த்த போது அவள் தனது இருக்கையில்  இணைக்கப்பட்ட நிலையில் தரையில் இருந்தாள். எவ்வளவு நேரம் அவள் மயக்கத்தில் இருந்தாள் என்பது அவளுக்குத் தெரியவில்லை. தூரத்தில்   ஏறக்குறைய முழுவதுமாக எரிந்த விமானத்தில் இன்னும் கொஞ்ச நெருப்புகளின் மிச்சம் தெரிந்தது. அவளைச் சுற்றிக் காடு விரிந்திருந்தது. ஜூலியானே எந்தக் காட்டில் தனது விடுமுறையைக் கழிக்க நினைத்தாளோ, அங்கேதான் இருந்தாள். ஆனால் தனியாக.

    சுற்று முற்றும் பார்த்தாள். அந்த இடம் அமைதியாக இருந்ததுவிமானத்தில் இருந்த அவளின் தாய் உட்பட 91 பேரும் இறந்து விட அவள் மட்டும்  அந்த அடர்ந்த காட்டில் தனித்து நின்றாள்.

    ஜூலியானேயின் தந்தை அவளிடம் எப்போதோ சொன்னது அவளது நினைவுக்கு வந்தது. “ காடு  ஒரு பசுமையான சொர்க்கம். அது வாழ்க்கைக்கு அழகான அற்புதமான ஒரு இருப்பிடம். ஒருவேளை நீ எப்போதாவது காட்டில் வழி தவறிப் போய்விட்டாய் என்றால், எங்கே தண்ணீர் ஓடும் சத்தம் கேட்கிறதோ அந்த இடத்துக்குப்போ. அந்தத் தண்ணீரின் நீரோட்டம் எந்தப் பக்கமாக இருக்கிறதோ அதே திசையிலேயே நடக்கத் தொடங்கு. அது உன்னை காட்டை விட்டு வெளியேற வழி சொல்லும்

    ஜூலியானேயின் அதிர்ஸ்டம் அவள் ஒரு ஓடும் நதியைக் கண்டாள். தன் தந்தை சொன்னதை  நம்பியபடியே நதியின் நீரோட்டத்துடன் நடக்க ஆரம்பித்தாள். விமானத்தில் இருந்து தூக்கி எறியப் பட்டதால் உடலில் இருந்த வலிகள், தோள் பட்டையில் எலும்பு முறிவு, முதுகெலும்பில் தாளாத வலி, கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு, தனிமை, மிருகங்களால் ஆபத்து ஏற்பட்டு விடுமா என்ற பயம், காய் கனிகளை மட்டுமே உண்டு தளர்ந்து போன நிலை என பல சிரமங்களை தாங்கிக் கொண்டு ஒன்று இரண்டு நாட்கள் அல்ல பதினொரு நாட்களாக அவள் தனியாக நடந்து கொண்டிருந்தாள்.

    பதினோராம் நாள் மாலையில் ஆற்றின் கரையோரம் ஒரு படகினைக் கண்டாள். காட்டில் பலரது குரல்களையும் அவள் கேட்டாள். அந்தக் குரல்கள் அவளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தந்தது. காட்டில் மரம் வெட்டுபவர்களே அந்தக் குரல்களுக்குச் சொந்தக்காரர்கள்அவளைக் காப்பாற்றும் தேவதைகள் போல அவளுக்கு அவர்கள் தெரிந்தார்கள். ஜூலியானேயை அவர்கள் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

    தனது தந்தையின் வேண்டுகோளின்படி ஜூலியானே யேர்மனிக்குத் திரும்பினாள் .அவளுக்கான மருத்துவங்கள் சீராக நடந்தது. யேர்மனியிலேயே தனது உயிரியல் துறையில் பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு பேரு நாட்டின் மழைக் காட்டுக்கு மீண்டும் போனாள். தான் படித்த உயிரியல் பற்றிய அறிவை அவள் அந்தக் காட்டுக்குள்ளேயே தனது தந்தையைப் போலவே செய்ய ஆரம்பித்தாள்.

    இப்பொழுது முதிர்ச்சியில் இருந்தாலும் ஜூலியானே குறைந்தது வருடத்துக்கு ஒரு முறையாவது பேரு நாட்டுக் காடுகளுக்குச் செல்லத் தவறுவதில்லை.

    யேர்மனியின் திரைப்படத் தயாரிப்பாளர் வேர்ணர் ஹேர்ஸொக் , ‘நம்பிக்கையின் சிறகுகள்’ (Schwingen der Hoffnung) என்ற பெயரில் 1998இல் ஜூலியானேயின் கதையை சம்பவம் நடந்த காட்டிலேயே உருவாக்கி அறுபது நிமிட ஆவணப் படமாக யேர்மன்,ஆங்கிலம்,ஸ்பெயின் மொழிகளில்  வெளியிட்டார். ஜூலியானேயும் தனது அனுபவத்தை  ‘நான் வானத்திலிருந்து விழுந்தபோது’ (Als ich vom Himmel fiel)  என்னும் தலைப்பில் புத்தகமாக எழுதி 2011இல் வெளியிட்டார். யேர்மன் குடியரசின் ஜனாதிபதி வே. ஸ்ரைன்மயரினால்  ஜூலியானே 2021 இல்வலிமையான பெண்என்று கொளரவிக்கப் பட்டார்.

    காக்கியான்

     

     

    • Like 2
    • Thanks 1
  15. இணையத்தில் நேற்றுஹலோ மீராதிரைப்படம் பார்த்தேன். தெலுங்குப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள்.

    படத்தின் பெயருக்கு ஏற்ப படம் முழுதும் தொலைபேசி உரையாடல்கள்தான். இது இயக்குனருக்கு ஒரு பரீட்சார்த்தமான முயற்சி. ஆனால் அதை கையாண்ட விதமும் கதையை நகர்த்தும் நேர்த்தியும் நன்றாக இருந்தது.

    திருமணத்துக்காக தனது சொந்த ஊருக்கு வரும் பெண் எதிர்கொள்ளும் பிரச்சனையை கதை சொல்கிறது. Gargeyi Yellapragada அந்தப் பெண்ணாக நடித்திருக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அவர் மட்டும்தான் நடித்திருக்கிறார். திரையில் அவர் ஒருவரே இருக்கிறார். தாய்,தந்தை,சகோதரன், நண்பர்கள்,எதிர்காலக் கணவன், கடந்தகால காதலன், பொலீஸ் அதிகாரி என பலர் இருந்தும் அவர்கள் திரையில் இல்லை. மாறாக அவர்கள் குரல்கள்தான்  இருக்கும். ஆனாலும் அந்தக் குரல்கள் எல்லாமே அழகாக நடித்திருக்கின்றன.

    எனது பார்வையில், ஒரே ஒரு நடிகையை மட்டும் வைத்துக் கொண்டு 92 நிமிடங்களுக்கு ஒரு படத்தை அழகாகப் படைத்திருக்கிறார்கள்.

     

    பிற்குறிப்பு,

    இந்தப் படம் எனக்குப் பிடித்திருப்பதால் மற்றவர்களுக்கும்  பிடிக்குமா என்பது கேள்வி. ஆகவே உங்கள் பார்வையில் படம்  வேறு விதமாக இருக்குமானால் நான் பொறுப்பல்ல.

     

    • Like 1
    • Thanks 1
  16. On 10/6/2023 at 10:21, suvy said:

    தேனுடன் வந்த வண்டு சுத்திப் பறக்கும் 

    தேன் இல் மலரில் மகரந்தம் சுவைத்து - தன் 

    தேன்தந்து  தளர்ந்துதான்  பறந்தேகும் 

    கண்ணதாசனும் மலர், தேன் வண்டு மூன்றையும் தன் பாணியில் இப்படி வர்ணித்திருப்பார்

    வண்டு வருகின்றது

    மலரில் அமர்கின்றது-தேன்

    உண்டு மகிழ்கின்றது

    உறங்கி விழுகின்றது

    வானம் பொழிகின்றது

    பூமி நனைகின்றது

    • Like 1
  17. IMG-4128.jpg

    எகிப்து நாட்டின் ஹூர்கடா நகரத்தில் உள்ள கடற்கரை கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு அற்புதமான இடமாக இருக்கும். பளிங்கு போன்ற தெளிவான கடல் நீர், 37பாகை செல்சியஸ் வெப்பநிலை என்பன அந்தக் கடலில் நீராட, சுழியோடி மகிழ, கடற்கரையில் அமர்ந்து சூரியக் குளியல் செய்ய என பல உல்லாசப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும்.

    இன்று  நிலமை மாறி இருக்கிறது. கடற்கரையின் வெள்ளை மணலில் மனிதக் காலடிகளைக் காணவில்லை. அதன் 75 கிலோ மீற்றர் நீள சுற்றளவான கடற்கரை அரசாங்கத்தால் இப்பொழுது பாவனைக்குத் தடைசெய்யப்பட்டிருக்கிறது.

    08.06.2023 வியாழக்கிழமை Elysees Dream Beach Hotelக் கு முன்னால் உள்ள கடலில் குளித் துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் சுறாவினால் கொல்லப்பட்ட பின்னரே இந்த நிலை அங்கு வந்திருக்கிறது.

    ரஸ்ய நாட்டைச் சேர்ந்த 23 வயதான வால்டிமியர் பொப்போவ்  தனது தந்தையுடனும் காதலியுடனும் ஒரு இனிய  நாளை அனுபவிக்க அன்று கடற்கரைக்கு  வந்திருந்தான். ஆனால் நடந்ததோ துன்பமாகிப் போனது

    மொகமட் ஆறு வருடங்களாக அங்கு உயிர் காப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அன்று அவருடன் சேர்ந்து மேலும் மூன்று பணியாளர்கள் இருந்தார்கள். வானிலை அன்று நன்றாக இருந்ததுகரையில் பலர் சூரியக் குளியலிலும் சிலர் கடலில் நீச்சலிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். கடலில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த தனது காதலியை மகிழ்விக்க  வால்டிமியர் கடலில் இறங்கினான். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மொகமட்டுக்கு திடீரென்று கடலில் நீந்திக் கொண்டிருந்த பலர் நீரில் குதித்துக் கொண்டு ஓடி வருவதைக் கண்டு  ஏதோ விபரீதம் நடக்கிறது என்பது தெரிந்ததுபோதாததற்கு கரையில் நின்று பலர் கடலைப் பார்த்து ஆர்ப்பரித்திருக்கிறார்கள். மொகமட்  கடலுக்குள் நோட்டமிட்ட போது ஜெட்டியிலிருந்து சில மீட்டர் தூரத்தில் தண்ணீரில் ஒரு நபர் மீண்டும் மீண்டும் மூழ்குவதை கவனிக்க முடிந்தது.  

    மொகமட் உடனடியாக படகை எடுத்துக் கொண்டு வேகமாக  அந்த மனிதன் மூழ்கும் இடத்துக்கு துடுப்பை வலித்துக் கொண்டு சென்று  பார்த்தால், அந்த இடத்தில் உள்ள நீர் இரத்தத்துடன் கலந்து சிவப்பாகிப் போயிருந்தது. மொகமட்டின் கண்களில் முதலில் பட்டது ஒரு கை இழந்த மனிதன், அந்த மனிதனை தொடர்ந்து  சுறா தாக்கிக் கொண்டிருந்தது. அந்த மனிதன்தான் வால்டிமியர்.

    வால்டிமியரை இனிக்   காப்பாற்ற முடியாது என்பதை மொகமட் உடனடியாக உணர்ந்து கொண்டார். சம்பவம் நடந்த இடத்துக்கு சில மீற்றர் தள்ளி  அதிர்ச்சியில் நீரில் அசையாமல் வால்டிமேரின் காதலி இருந்தாள். மொகமட் அவளை உடனடியாக படகில் இழுத்துப் போட்டுக் கொண்டு கரைக்கு விரைந்து கரையில் அவளை விட்டு விட்டு கடலைப்  பார்த்தால் கடல் மேற்பரப்பில் துண்டு துண்டாக மனித உடல் மிதந்து கொண்டிருந்தது.

    உடனடியாக மீனவரான ஹம்டி தனது 15 தோழர்களைத் திரட்டி இரண்டு படகுகளில் சென்று அந்தச் சுறாவை வேட்டையாடி, கரைக்கு இழுத்து வந்தார். வயிறு உப்பிப் போய் பெரிதாக இருந்ததால் அந்தச் சுறா கருவுற்றிருக்கலாம் என்று எல்லோரும் கருதினார்கள் ஆனால் சுறாவை வெட்டிப் பார்த்த போது அங்கே வால்டிமேரின் ஒரு கையும் அவனது தலையும் இருந்தது.

    “வால்டிமேர் ரஷ்யாவில் இருந்தால் போராட்டத்துக்குப் போக வேண்டும். இங்கிருந்தால் போராட்டத்துக்குப் போக வேண்டியதில்லை. அதற்காகவே அவனுக்காக எகிப்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கி இருந்தேன். இந்தக் கடற்கரையில் இருந்து காரில் எட்டு நிமிடங்கள்  பயணிக்கும் தூரத்தில்தான் அந்தக் குடியிருப்பு இருக்கிறது. ஆனால் ஒரு  இருபது செக்கன்களுக்குள் எல்லாமே  என் கண்முன்னே நடந்து முடிந்துவிட்டதுஎன்று அவனது தந்தை தாளாத துயரத்தோடு சொன்னார்

    Quelle: Twitter

     

     

  18. 1 hour ago, நிழலி said:

    அண்ணை பிளான் எல்லாம் ரெடி,சொன்னபடி செய்யுங்கோ ஒண்டுக்கும் பயப்பிட வேண்டாம் , மற்ற ஆக்களை கொழும்பில் சந்திக்கலாம்

    கதை வேற மாதிரி என்று நினைத்தால்… ம் இதுவும் ஒரு போராட்டம்தான். Dr. கோபிசங்கருக்கு வாழ்த்துகள்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.