Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Shanthan_S

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  64
 • Joined

 • Last visited

Profile Information

 • Gender
  Male
 • Location
  Colombo
 • Interests
  Travelling, Listening Songs

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

Shanthan_S's Achievements

Explorer

Explorer (4/14)

 • Conversation Starter
 • First Post
 • Collaborator
 • Week One Done
 • One Month Later

Recent Badges

41

Reputation

 1. அவனவன் சமையலுக்கு மஞ்சள் இல்லாமல் கஷ்டப்படுறான். உள்ளூர் உற்பத்தியும் காணாது, இறக்குமதியும் தடை. இவங்கள் செய்யிற கூத்தப்பாக்க கடுப்பாகுது மை லாட்.
 2. நாட்டில் இப்ப குடுத்த கடனை வாங்கி எடுக்கிறதுக்குள்ள சீவன் போய்விடும். அவ்வளவு கஷ்டம் திரும்ப வாங்கிறது. நான் அபு தாபிக்கு வந்த புதிதில், யாழ்ப்பாணத்தில் உள்ள எனது நண்பனுக்கு ஒரு லட்சம் ரூபா அவசரத்தேவைக்காக அனுப்பின்னான். இப்ப கிட்டத்தட்ட 2 வருடம் முடியப்போகுது. இன்னும் தரல்ல அந்த காசை. நானும் கனதரம் போன் பண்ணி கேட்டுப்பாத்திட்டன். தாறபிளான் இல்ல. இப்ப கொஞ்சநாளா போன் அடிச்சாலும் எடுக்கிறானில்லை. வராது போல கிடக்குது. இதால காசு இருந்தாலும் நம்பிக்குடுக்க பயமாக்கிடக்குது.
 3. அவர்கள் இருந்தபோது இப்படி ஏதாவது சம்பவம் நடந்ததாக நான் அறியவில்லை. அது ஒரு பொற்காலம். ஆனால் இயக்கம் தோன்றமுதல், சில ஊர்களில் இப்படியான சம்பவங்கள் நடந்ததாக வாய்வழி கதைகள் மூலம் அறிந்தான். விபரங்கள் தெரியாது. தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் தெளிவுபடுத்துங்கள்.
 4. யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம், வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனப்படுத்தியதை எதிர்த்தும் ஒரு குரூப் facebook ல கம்புசுத்திக்கொண்டு திரியுதுகள்.
 5. இந்த லைக்ல பாருங்க. வீரைப்பழம் மற்றும் சூரைப்பழம் என்பன பெரும்பாலும் பெருவாரியாக விற்றபனைக்கு வருவதில்லை. வீரைப்பழம் - https://ta.wikipedia.org/wiki/வீரை_(மரம்) சூரைப்பழம் -
 6. இது பாலைப்பழம். வன்னியில் பரவலாக ஒரு சீசனுக்கு கிடைக்கும். மிகவும் இனிப்பானது. 1995 இடம்பெயர்வுடன் மல்லாவியில் இருந்தபோது. நண்பர்களுடன் சேர்ந்து பாலைப்பழம், வீரைப்பழம் (சிவப்பு நிறத்தில் இருக்கும்), சூரைப்பழம் (கருப்பு நிறத்தில் இருக்கும்), நாவல் பழம் ஆய்ந்து சாப்பிடுவதுதான் பொழுதுபோக்கு.
 7. 1990 - 1995 காலப்பகுதிகளில் நாங்கள் இடம்பெயர்ந்து நீர்வேலில இருந்தம். நீர்வேலில தேன்துளி எண்டு ஒரு இனிப்பு தயாரிக்கும் இடம் இருந்தது. பாடசாலை போகும்போதும் வரும்போதும் அந்த தேன்துளி அமைந்துள்ள பாதையாலைதான் போய் வருவம் (சைக்கிள் எல்லாம் இல்லை. நடராசாதான்). பாடசாலை விட்டுவரும்போது ஒரு 50 சதத்துக்கு தேன்துளியில் இனிப்பு தூள் / துகள் (இனிப்புகள் செய்யும்போது உடைந்து வரும் குறுணி துண்டுகள் - இதுக்கை அவர்கள் தயாரிக்கும் எல்லாவகையானா இனிப்புகளின் துகள்களும் கலந்திருக்கும் - ஒரு பேப்பரில் கோன் போல சுருட்டி அதுக்கை நிறைய போட்டு தருவார்கள்) வாங்கினானால் அண்டு முழுவது சாப்பிடாலும் முடியாது. அன்றைய நிதி நிலைமை காரணமாக ஒவ்வொருநாளும் வாங்க கிடைக்காது. எப்படியும் கிழமைக்கு ஒருக்கா அல்லது 2 தரம் அம்மாவை இணாப்பி 50 சதம் வாங்கிப்போடுவன். அந்த 50 சதம் கிடைத்து, அதைக்கொண்டு தேன்துளில இனிப்பு தூள் வாங்கிக் தின்னும்போது கிடைத்த சந்தோசம், திருப்தி , இப்ப இங்க தேவையான அளவு உழைத்து விருப்பம்போல செலவு செய்தாலும் கிடைக்குதிலை. அம்மா அப்பாவின் நிழலில் வாழ்ந்தகாலங்கள்..... நினைத்தாலே கண்கள் கலங்குது ..... மறுபடியும் அந்த பாக்கியம் கிட்டாது.....
 8. அக்கா அவரோட ஸ்கூல் பிள்ளைகளுக்கு ஸ்கூல் மூடியிருந்த காலப்பகுதியில் ஜூம் ல கிளாஸ் எடுக்கிறவ. ஸ்கூல் சிலபஸ்ஐ கவர் பண்ண. மற்றும்படி தொடர்ச்சியாக்க ஜூம் கிளாஸ் எடுக்க அவவுக்கு நேரம் இல்லை. 3 பிள்ளைகள் மற்றும் அத்தான் முழுநேர விவசாயி என்பதால் வீட்டுவேலை மற்றும் தோட்டவேலை என்பவற்றுடன் டைம் போய்விடும்.
 9. நான் இதுக்கை அரசியால் கதைக்க வரல்லை. நான் மருத்துவ துறை சார்ந்தவனும் இல்லை. எனக்கு தெரிந்ததை எழுதுகின்றான். இங்கை நான் வசிக்கும் அபுதாபி பெரும்பாலானவர்களுக்கு சினோபார்ம் தான் கடந்த டிசம்பர் 2020 முதல் போடுகின்றார்கள். நானும் எனது மனைவியும் 2 டோஸும் போட்டுவிடன். எங்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. இதுவரை எல்லாம் நோர்மலாதான் இருக்குது.
 10. சில ஆசிரியர்கள் மிகவும் மோசம். உதாரணமாக, எனது அக்காவின் மக்கள் 7ம் ஆண்டு படிக்கிறாள். ஜூம் கிளாஸ்சுக்கு ஒரு பாடத்துக்கு மாதம் 500 ரூபா வாங்குகிறார்கள். எனவே முக்கியமான கணிதம் விஞ்ஞானம் இங்கிலீஸ் போன்ற பாடத்துக்கு ஜூம் கிளாஸ்சுக்கு காசுகட்டி படிக்கிறவள். ஆனால் அவளது பாடசாலை தமிழ் மற்றும் சைவசமய ஆசிரியர்களும் தங்களது ஜூம் வகுப்பில் அவளையும் இணையச்சொல்லி ஒரே ஆக்கினை. எனது அக்கா சொன்ன, தமிழ் மற்றும் சைவசமயம் போன்றவற்றை நாங்களே வீட்டில் சொல்லிகுடுபோம் என்று (எனது அக்கா ஒரு BA தமிழ் பட்டதாரி) . ஆனாலும் அவர்கள் தொடர்ந்தும் அக்காவுக்கு போன் பண்ணி ஒரே ஆக்கினை. ஆனாலும் அக்கா முடியாதெண்டு சொல்லிப்போட்டா. பாடசாலை தொடங்கத்தான் பிரச்சினை இருக்கு. 7ம் ஆண்டு பிள்ளைக்கு 8 பாடத்துக்கு ஜூம் கிளாஸ்சுக்கு போறதெண்டால் மாதம் 4000 ரூபா முடியும். இது பெரும்பாலான பெற்றோரால் முடியாத காரியம். இவர்களை என்ன செய்வது????
 11. சேர் , உங்கள் zoom அழைப்பு கிடைத்தது ஆனால் passcode தான் கிடைக்கவில்லை. பணம் கட்டினால் தான் அது கிடைக்குமாமே, பகலுணவுக்கு வழியில்லை பாதை வியாபாரம் செய்யும் அப்பா பாதுகாவலனுக்கும் பயந்து பயந்து மறைந்து மறைந்து செய்யும் வியாபாரம் ஒரு வேளை உணவுக்கே போதாதாம் சேர். ஆயிரம் ரூபா தேட பாதையில் பல பாயிரம் ஓத வேண்டுமாம். ஒரு நாளில் அதை உங்களுக்கு வைப்பிலிட ஒரு கிழமை எமது அடுப்புக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமே சேர். நான்கு சகோதரர்கள் நாம் டேட்டா போடுவதற்கே எமது அப்பாவின் பல பாட்டாக்கள் தேய வேண்டுமே சேர். சம்பாளுடன் தான் நாம் சாப்பிடுகிறோம் என்பதை சம்பளம் வீட்டுக்கு வரும் உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் தானிருக்கும் சேர். அறிவு தர்மம் செய்ய ஆண்டவன் அளித்த வாய்ப்பை எமக்காக கொஞ்சம் வழங்குங்கள் சேர். நீங்கள் உழைப்பதற்காக ஏழைகள் எங்களை உறிஞ்சி குடிப்பது ஞாயமில்லை சேர். எம்மிடம் இதுவரை எத்தனை ரூபாய்களை எண்ணி எடுத்து இருக்கிறீர்கள். மூச்சுக் காற்றையும் பேச்சுக் கூற்றையும் நீங்கள் வியாபாரம் செய்வது வியப்பாயுள்ளது சேர். ஆசிரியர் சேவை என்று தான் நாமறிகிறோம். ஆசாரம் இல்லாத உங்களால் அர்ப்பணிப்புடன் உள்ளோரும் படும் அவதியும் அவலமும் நீங்களறிந்தும் அறியாமல் போலுள்ளது தான் அவலம். வேண்டாம் சேர் உங்களுக்கு விற்பனையாகாத பண்டமாகவே நானிருந்து கொள்கிறேன். உங்களின் நுகர்வோர் சேவையாளர்களில் உணர்வுளால் வேஷம் போடத் தெரியாத கழிவுப் பண்டமாக என்னைக் கருதிக் கொள்ளுங்கள். ஒரு நாள் வருத்தப் படுவீர்கள் எனது பாடத்தில் A பெற்றவர்கள் இவர்கள் தான் என்ற உங்கள் விளம்பரப் பதாகையில் எனது இருப்பிடம் இல்லையே என வருத்தப்படுவீர்கள். மன்னித்துக் கொள்ளுங்கள் சேர். உங்களுக்கு இடித்துரைப்பதற்காக நான் எழுதவில்லை. படித்தவர்கள் பண்புள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பதைப் படித்தாவது உணரட்டுமே. இப்படிக்கு ஏழை மாணவி. ஏழையின் மாணவி Copied from FB குறிப்பு: படித்தது பிடித்தது. அதனால் பகிர்கிறேன். இப்படியும் சில ஆசிரியர்கள் உண்டு.
 12. அவர் உங்கட ஸ்கூல்ல இருந்து Drop Out ஆனதாலதான் இந்த நிலைக்கு வந்தவர். அங்கையே தொடர்ந்து படித்திருந்தால், உங்களை மாதிரி கோமிய குடிக்கியாகத்தான் வந்திருப்பார். நல்ல வேளை Drop Out ஆகிட்டார்.
 13. ஓம் நிறைய ஓட்டைகள் இருக்குது. இது அவர்களுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. கட்டாயம் அவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவர்களாலும் ஒண்டும் செய்ய முடியாது எண்டு நினைக்கிறன். ஏனேனில் மேலே சொன்ன 3 வழிகளும் சட்டத்துக்கு புறம்பானவை இல்லை. அத்துடன், ஒருவர் இதனை கூகிள் account தான் தொடங்கலாம் என்று கூகுலில் எந்த வரைமுறையும் எனக்கு தெரிந்தவரையில் இல்லை.
 14. Goshan Che anna. AR ரகுமானின் அப்பா திலீப்குமார் இல்லை. திலீப்குமார் என்பது AR ரகுமானின் இயற்பெயர் இஸ்லாம் மதத்துக்கு மாற முதல். AR ரகுமானின் அப்பா பெயர் சேகர் (முழுப்பெயர் தெரியாது). இவர் ஒரு பிரபல இசைக்கலைஞர் (கிற்றார் or வயலின்). சரி பார்க்கவும். இவர் இசைஞானி இளையராஜாவுக்குகூட இசைக்கருவிகள் வாசித்துள்ளார். இதை இளையராஜா ஒரு மேடை இசை நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார்.
 15. நான் அறிந்தவரையில், இதுவரை நீங்கள் Google Photo ல சேமித்த போடோஸ்க்கு ஒரு பிரச்சினியும் இல்லை. அவை அப்படியேதான் இருக்கும். நீங்கள் எந்த நேரமும் பாக்கலாம், Download பண்ணலாம். இதுவரை (31/05/2021 வரை) Google Photo ல சேமிக்கும் போட்டோஸ்கு உங்கள் google account capacity ல (15GB / Account) இருந்து எந்தவொரு capacity யும் கழிக்கப்படாமல், எல்லா போட்டோஸ்ம் Google சர்வர்ல சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால் ஜூன் 1, 2021 முதல் நீங்கள் Google Photo ல சேமிக்கும் போட்டோஸ்கு உரிய capacity உங்கள் google account capacity ல இருந்து கழிக்கப்படும். உதாரணமாக, இப்பொது உங்கள் Google Account available capacity 12GB என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ஜூன் 1, 2021கு பிறகு 2GB photos ஐ உங்கள் google photos ல சேமித்தால், இந்த 2GB ம் உங்கள் Google account capacityla இருந்து கழிக்கப்படும். எனவே இப்பொது உங்களது Google account available capacity 10GB (12GB - 2GB = 10GB) ஆக இருக்கும். இப்படியே நீங்கள் உங்கள் Google Account Capacity 0GB ஆகும் வரை எந்தவொரு பிரச்சினியும் இல்லாமல் போட்டோஸ் ஐ அப்லோட் பண்ணலாம். உங்களது 15GB யும் நிரப்பும்போது அல்லது நிரம்ப அண்மிக்கும்போது, Google உங்களுக்கு வார்னிங் ஈமெயில் அனுப்பும். அதன் பின்பு உங்களுக்கு 3 தெரிவுகள் உள்ளது. 1. Pay பண்ணி உங்களது Google Account capacity ஐ கூட்டுவது (monthly / Annually Subscription) 2. முக்கியத்துவம் குறைந்த photosகளை உங்கள் External Hard Drive ku download பணியபின்பு அந்த photos களை Google Photos ல இருந்து நிரந்தரமாக delete பண்ணலாம். நீங்கள் delete பண்ணிய போட்டோஸ் capacity உங்கள் கூகுளை அக்கௌன்ட்ல available ல இருக்கும். 3. புதிதாக ஒரு Google account open பண்ணி 15GB வரை photos upload பண்ணலாம். இப்படி எத்தினை Google account வேண்டுமானாலும் ஓபன் பண்ணலாம். (நான் 2 Google அக்கௌன்ட் வைத்துளேன். ஒன்று பிரைமரி அக்கௌன்ட். இந்த பிரைமரி அக்கௌன்ட் ல நான் போட்டோஸ் upload பண்ணுவதில்லை. ஈமெயில் மற்றும் முக்கிய தேவைகளுக்குதான் பாவிக்கின்றனான். Photos, புக்ஸ் (PDF), work related documents, etc .... எல்லாம் 2வது Google account ல தான் சேமிக்கின்றனான். இந்த 2வது account ம் fullaka, 3வது account ஓபன் பண்ணலாம்) மேலே உள்ள தரவுகளில் ஏதாவது பிழை இருப்பின் தாராளமாக சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.