செல்வி

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  11
 • Joined

 • Last visited

Everything posted by செல்வி

 1. அது அவர்களது பிழை. பிழைகளை எல்லோரும் செய்வதனால் பிழை ஒருபோதும் சரியாகி விடாது..
 2. அப்படியா? எப்படியிருப்பினும் தமிழல்லாத சொற்களுக்கு நான் ஏன் விளக்கம் தேட வேண்டும்.? தமிழில் இல்லையே உங்கள் பெயர்.
 3. அதனால் தான் உங்களுக்கு நீங்களே ராசா என்று வைத்துக்கொண்டீர்களா? ராசா என்றால் ஆள்பவன், தலைவன் என்று தான் பொருள் என்று நினைக்கிறேன்.
 4. படைப்பின் இலக்கணம் சார்ந்து சமூகத்தின் வாழ்வியல் நிகழ்வுகளை மீண்டும் படைப்பு வெளியில் கொண்டுவரும் சித்திரிப்பின் அழகியலை விடவும் மண் சார்ந்த மீள் படைப்பாக இருப்பது சிறப்பு. பகிர்விற்கு நன்றி. கல் சிலம்பம் இன்றும் பயிலுகையில் இருக்கிறதா? அதுபற்றிய தகவல்கள் இருந்தால் தரமுடியுமா?
 5. நீங்கள் கூறுவது போல பயன்பாட்டு வழக்கில் வேறுபட்ட பொருள்களில் இருந்தாலும்.... இலக்கண விதிப்படி ( தொல்காப்பியம் : ஐகாரக் குறுக்கம்) மையம் மய்யம் இரண்டுமே ஒரே பொருளைத் தான் தரும். ஆனால் மையம் என்பது தமிழ் சொல் அல்ல என்கிற போது அங்கே தொல்காப்பிய விதி எவ்வாறு வரும்? முதலில் தமிற்சொற்கள் எவை ? தமிழல்லாத சொற்கள் எவையெனப் பிரித்தறியும் திறன் தமிழர்களுக்கு வரவேண்டும். மையம் என்பது தமிழ் எனின் அதன் வேர்ச்சொல்எது? மையம் என்பதற்கு நடுவம் என்பதே தமிழ். அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். ( தொல்காப்பியம் ,எழுத்ததிகாரம் , 56)
 6. Dr.சாலினியை கனடாவிற்குத் தனது நிகழ்விற்கு அழைத்தவர் நினைவுகள் கணா, அவரை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றவர் ஜிவனீட்டா நாதன், நான் சாலினியை down town நாடகம் ஒன்று பார்க்கப் போயிருந்த போது ஜிவனீட்டா அவரை அழைத்து வந்திருந்த போது கண்டேன், அவரோடு கதைக்கும் சந்தர்ப்பம் அப்போது எனக்குக் கிடைக்கவில்லை, அடுத்த நாள் நினைவுகள் நிகழ்வில் Dr. சாலினியின் உரையின் பின்னால் அவரோடு இருக்கக் கிடைத்தது, நான் எனது திரைப்படம், பற்றியும் நான் அடுத்து எடுக்க இருக்கும் திரைப்படத்திற்கான ஸ்ரிப்டைப் பற்றியும் அவரோடு உரையாடினேன், அத்தோடு தமிழ்நாட்டு இன்றைய அரசியல் நிலை பற்றியும் நகைச்சுவையாக உரையாடினோம். உப்புச் சப்பற்ற புலிப் பிரச்சனை பற்றி தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்திருக்கும் ஒருவருடன் உரையாடும் அளவிற்கு நான் ஒன்றும் தாழ்ந்து போகவில்லை, மாறாக இந்தியர்களை இங்கே எல்லா நிகழ்விற்கும் அழைக்கின்றார்கள் நான் அதற்கு எதிரானவள் அதுபற்றி நான் எழுதியும் இருக்கின்றேன் என்று அவருக்கு நேரடியாகச் சொன்னேன். அந்த அளவு துணிவு எனக்கிருக்கின்றது எனக்கு. அடுத்தநாள் நிகழ்வு முடிந்து எனது நண்பி அவரை மதிய உணவிற்க அழைத்துச் சென்றார், அப்போது அங்கிருந்த வேறு சிலரையும் அவர் அழைத்ததால் நானும் போனேன். அவ்வளவுதான் எனக்கும் Dr.சாலினிக்குமான தொடர்பு, நீங்கள் என்ன ஆதாரத்தை வைத்து இப்படி ஒரு பதிவைப் போட்டீர்கள், நீங்கள் இவ்வளவுதானா? இல்லாவிட்டால் எங்கோ விலைபோய் ஆதாயம் தேடுகின்றீர்களா?அடுத்துக் கோணேஸ்வரிக் கவிதை, ஒரு கதை காலம் செல்லச் செல்ல எப்படியெல்லாம் தமக்கேற்றபடி மனிதர்களால் மாற்றப்படுகின்றது என்று ரசித்துச் சிரிக்க முடிகின்றது. பிற்குறிப்பு – நான் Dr. சாலினியின் பதிவைப் படிக்கவில்லை. ஆனால் முகப்புத்தகத்தைப் பார்த்த போது அவர் நிச்சயம் நேர்மையாக எதையோ எழுதியிருக்கின்றார் என்பது மட்டும் புரிகின்றது. Karupy Sumathy in fb.. இது எந்த வகை?
 7. வாங்கோ தம்பியா.. தம்பி அல்ல.. தங்கைச்சி... முள்ளிவாய்க்காலின் பின் எல்லாரும் தலைவன் தலைவி தானே.. தனிக்காட்டு ராசா...
 8. மையம் ---- நடுசென்ரர். (சென்ரரா , நடுவா என்று கேட்கப்படாது). மய்யம் ---- பிணம். (ஆஸ்பத்திரிகளில் இந்தச்சொல்லை பாவிப்பினம்). அமரர் ஊர்தி காரர்களும் மய்யத்தை வானில் ஏத்து என்றுதான் விளிப்பார்கள்./// பிறமொழிக்கலப்புகள் களையப்பட வேண்டியவை.. மையத்தின் வேர்ச்சொல் என்ன?.. நடுச்செ ன்ரர் என்பதை குவியம் எனலாமா?
 9. மய்யம் என்றால் என்ன? மையம் என்றால் எங்களுக்கு என்ன? தமிழல்லாத சொற்களுக்காக ஏன் இந்த சொற்போர்?.. நடுவம் என்பது தான் தமிழ் .. எழுத்துச் சீர்திருத்தம் என்ற போர்வையில் பெரியார் செய்த வேலையே ஐ உருபுச் சொற்களை அய் ஆக்கும் முறைமை. ஆனாலும் முதலில் தமிழ்ச் சொல்லில் கலந்திருக்கும் சமசுக்கிருதத்தை அறிந்து கொள்வது நல்லது என நினைக்கிறேன். தமிழர் தாயகப் பகுதிகளில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலுமே இந்து மதத்தின் தாக்கத்தினால் மொழிக்கலப்பு மிக அதிகமாகவிருக்கிறது. தொன்மையான வழிபாட்டு முறைகளைப் பேணும் தென் தமிழீழத்தில் மொழிக்கலப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே நிகழ்ந்திருக்கிறது. தமிழகத்தில் ஆங்கிலம் கலந்த வழக்கு இருப்பதால் ஆங்கிலம் கலக்காத யாழ்ப்பாணத் தமிழ், அதற்கென ஒரு உயர்வைப் பெற்றுக்கொண்டது.ஆனால் அதனுள்ளே புரையோடிப்போயிருக்கும் சமசுக்கிருதத்தை கண்டுகொள்ளத் தவறிவிட்டோம். இந்துமதத்தின் காவலர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் யாழ்ப்பாணிகள் தமது மொழியில் கலந்துள்ள சமசுக்கிருதத்தைக் களையெடுக்க முன்வரவேண்டும். தொலைக்கப்பட்ட எமது தேசிய வெளியின் மீட்டெடுப்பின் துவக்கமாக அந்தக் களையெடுப்பு அமைய வேண்டும். பண்பாடும் மரபும் மதத்தினால் கட்டியமைக்கப்படல் கூடாது. அது தேசியக் கொள்கையினைச் சிதைக்கக்கூடியது.
 10. வணக்கம் மக்களே.. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.