Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

திரு

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  29
 • Joined

 • Last visited

Everything posted by திரு

 1. இனப்படுகொலையைச் சந்தித்த இனத்தைச் சார்ந்த ஒருவனின் கண்களிற்கு குருதிச் சிவப்புநிற மாலைச் சூரியனை பார்க்க நேர்கையில் எத்தகையை காட்சிகளை அது தோற்றுவிக்கும்? என்பதனை வரிகளில் நான் எழுதி இருக்கிறேன், மகாகலைஞன் சித்தன் ஜெயமூர்த்தி இசையமைத்து பாடியிருக்கிறார், நந்திக்கடற்கரையில் மெளனித்துப் போன வீரயுகவரலாற்றை மாலைச் சூரியனின் சிவப்பு நிறத்திற்குள்ளால் பார்க்கிறேன்..
 2. இன்றென்ன..! ஆண்டு பல கடந்தும் அடியோடு மறந்திருந்தும்..? எப்படி எங்கிருந்து என்னறிவுக் கெட்டாமல் விரல் வழியாய்த் தாளில் விழுந்தாய்!, ஒரு வேளை நீ கூட என்னை நினைத் தாயோ? எதுவேனும்.. என் புலனுக்கறியாமல் தாள் மீது ஒரு கவியாய் விழுந்த உன் பெயர் வியப்பூற உயிர் பெற்று விம்பமாய் என் முன்னெழவும் உன் வாசம் நாசிதனில் ஏறிப் புரக்கடித்து கண்ணோரம் ஆசைக் கனவாக வழிகிறது வாழ் கனவே..! கால நதிக்கரையில் நாம் நடந்த காற் தடத்தை ஆண்டுகளின் ஆற்றோட்டம் அரித்தாலும் எஞ்சியுள்ள சுவட்டுக் கரைக் குருதிச் சுற்றோட்ட வெப்பமென்னில் இறக்கும் வரை வாழ்வாய் என் காலம் கடந்தவளே.. திரு.திருக்குமரன்
 3. திடீரென்று ஒரு நாள்மம்மல் பொழுதொன்றில்எல்லைப் பிரதேசத்தில் உள்ளஎன் வீட்டு வேப்ப மரத்தில்பறவை ஒன்று வந்துகுந்தி இருக்கத் தொடங்கியதுஅதன் ஈனஸ்வரமானபசிக்குரலைக் கேட்டுஎன் உணவில் சிறிதளவைஅதற்கு நான் வழங்கியும்இருந்தேன்,மறுநாள் கூடு கட்டவும்குடும்பமாயும் குழுமமாயும்வந்திருக்கவும் தொடங்கியது,என் நாளாந்தச் சமையலுக்காகவைத்திருந்த விறகுகளைகுச்சிகளாய்ப் பிரித்தெடுத்துகூடு கட்டுவதை நான்கவனித்தேன்,சில நாட்களில் முட்டை இட்டுக்குஞ்சும் பொரித்தது,அதன் பின்னர் ஒரு போதும் அதுஉணவு கேட்டுக் கத்தியதில்லைஎனக்குத் தெரியாமலும்தெரியவும் கூடஎன் சமையற் கட்டுக்குள்புகுந்து உணவுகளைஎடுக்கத் தொடங்கியதுஅதில் பலவந்தம் இருந்ததைநான் அவதானித்தேன்சொந்தம் கொண்டாடுவதையும், குஞ்சு பொரித்த காலங்களில்மரத்தின் கீழே எமைப்போக விடாமல்கொத்தியும் கலைத்ததுபயத்தால்தானோ என எண்ணி இருந்தேன்பொரிக்காத காலங்களிலும் கூடஇது தொடர்வதைமரம் பறவைக் கூட்டத்தின்கட்டுப்பாட்டில் வந்தசில காலங்களின் பின்னர் தான்உணர்ந்தேன்,இப்பொழுதுஎன் வீட்டு வேப்பமரத்தில் மட்டுமல்லஊரில் உள்ள அத்தனை மரங்களிலும்பறவைகள் திட்டமிட்டுக் குடியேறி இருந்தன,ஆனாலும்கேக்கிற பெடியள்கேக்கத்தான் செய்தார்கள்தட்டியும் முட்டியும்,ஆயிரம் நியாயங்கள் இருந்தும்ஏனோ..? காலம்அவர்களையும் வீழ்த்திவிட்டது.அதன் பின்னர்கதவற்ற வீடாய்ப் போனஎம் வாழ்வில்அவைகளின் இரைச்சலும்கழிச்சலும் புகைச்சலும்தாங்கொணாது ஊரினைப் பெயர்ந்துஅவைகளால் வரையறுக்கப்பட்டமரங்களின் கீழேஅதே ஈனஸ்வரத்தில் முனகியபடிகலங்கிய கண்களோடு காலம் கடக்கிறோம்..இருக்க இடந்தேடிஒண்ட வந்த பறவைக்குஒரு மரம் மட்டுமல்லபெரிய கானகமும் ஊருமேஇப்படியாகத்தான் தோழர்களே..!சொந்தமாக்கப்பட்டது.. -திரு திருக்குமரன்
 4. அப்பா..! என்னைப் பார்க்க வரமாட்டீர்களா..? முடியாது மகனே.. ஏன் முடியாது..? வந்தால் கொன்று விடுவார்கள் ஏன் கொன்று விடுவார்கள்...? நான் என் மக்களுக்காகப் பேசினேன் ஏன் மக்களுக்காகப் பேசினீர்கள்..? பறிக்கப்பட்ட அவர்களின் உரிமைகளுக்காக, ஏன் உரிமைகள் பறிக்கப்பட்டன..? சமமாக வாழ நினைத்தபோது ஏன் தான் அப்ப பறிக்க விட்டீர்கள்..? நாங்கள் இல்லை மகனே, எம் முன்னவர்கள் விட்ட பிழை ஏன் அவர்கள் பிழை விட்டார்கள்..? அவர்கள் மட்டும் பிழைப்பதற்காக, அவர்கள் பிழைத்தார்களா..? பெயரளவில் பிணமில்லை என்பதுவாய் பிழைத்தார்கள் என்னவோ பிழைத்தார்கள் தானே..? இதெல்லாம் ஒரு பிழைப்பா மகனே.. சரி, நீங்கள் மட்டுந்தானா கேட்டீர்கள்..? இல்லை மகனே என் போல் பல்லாயிரம் பேர்.. ஆயின், என் போல் பல்லாயிரம் மகன்களுமா..? ஆம் மகனே ஒவ்வொரு மகனும் உன் போலவே ஆயிரமாயிரம் கேள்விகளுடன்.. விடை கிடைக்குமா அப்பா..? என்ன சொல்ல மகனே..! விடுதலைப் போராட்டம் நெடிது தான் ஆயினும் என்னுடைய பிராத்தனை என்னவெனில் உன்னுடைய காலத்திலும் எங்கோ ஓர் மூலைக்குள் என் போல் நீயும் என்புருகிக் கொண்டிருக்க உன் மகனும் விடைகளற்ற கேள்விகளுடன் மட்டும் வளர்ந்து விடக்கூடாது என்பதே.. திரு.திருக்குமரன்
 5. தங்களது கருத்திற்கு நன்றி தங்களது கருத்திற்கு மிக்க நன்றி மிக்க நன்றி கருத்திற்கு மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி..
 6. ஒரு செய்தியைக் கூட விட்டுச் செல்லாமலும்ஓர் வார்த்தையைக் கூடச் சொல்லாமலும்அன்று நீ காணாமற் போனாய்..சித்தம் கலங்கிப்போய் உன் தந்தையும்சாவீடு போல உன் வீடும் சிதறிப்போய்க் கிடந்ததுநீ இறந்திருக்கலாமெனபலர் தமக்குள் பேசிக்கொண்டார்கள்காலமும் ஓடிப்போயிற்றுவழமை போலவே தியாகங்களும்நினைவுகளும் எமக்குள்மங்கிப்போயின..சுரணை அற்ற வாழ்வுக்காகதொலை தேசத்திற்கு நான்வந்திருந்தபோதுபனிப் பொழிவினிடையேஉன்னைப் போலவே ஒருவனைப் பார்த்தேன்..!அது நிச்சயமாக நீதான்அதே கூர் மூக்கு,தெத்திப்பல்ஆயின்..நீ இறக்கவில்லை..!ஆனால் இறந்திருந்தாய்நிற்க முடியாமலும் இருக்க முடியாமலும்காலைச் சவட்டியபடி,கல்லூரிக் காலங்களில்எப்படி எல்லாம் கலகலப்பாய்இருந்தாய்..! இப்போதோபேச்சுக் கொடுத்தாலும்பெரும் மெளனம் காக்கின்றாய்..முட்கம்பிகள் உன் குதத்தைக்கிழித்த போதும்மின்சாரம் உன் குறியைஎரித்த போதும்கேள்விகளாலும் கம்பிகளாலும் நீதுளையிடப்பட்ட போதும்நீ காட்டிய அதே மெளனம்இது கூட நல்லது தான் நண்பனேஒருவேளைவதையின் போது நீ வாய் திறந்திருந்தால்ஐம்பது குடும்பமாவதுஅலறி இருக்காதா..?தேவை அற்ற இடங்களில்நீ அதிகம் பேசி இருந்தாலும்தேவையான இடத்தில் நீமெளனமாகத்தான் இருந்திருக்கிறாய்நல்லது போய்வருகிறேன் என் அன்பு நண்பனே..!இனி நீ காணப்போகிற உலகும்கடக்கப்போகிற மனிதர்களும்ஒவ்வொரு தியாகங்களைப் பற்றியும்இப்போது பேசத்தொடங்கி இருப்பதைப் போலவேஉன்னைக் கடந்து செல்கின்ற போதும்அவர்கள் பேசிக்கொள்வார்கள்இவன்வேறு வேலை அற்றவன்வாழத் தெரியாதவன் என்றும்.. - திரு.திருக்குமரன்
 7. ஒரு செய்தியைக் கூட விட்டுச் செல்லாமலும்ஓர் வார்த்தையைக் கூடச் சொல்லாமலும்அன்று நீ காணாமற் போனாய்..சித்தம் கலங்கிப்போய் உன் தந்தையும்சாவீடு போல உன் வீடும் சிதறிப்போய்க் கிடந்ததுநீ இறந்திருக்கலாமெனபலர் தமக்குள் பேசிக்கொண்டார்கள்காலமும் ஓடிப்போயிற்றுவழமை போலவே தியாகங்களும்நினைவுகளும் எமக்குள்மங்கிப்போயின..சுரணை அற்ற வாழ்வுக்காகதொலை தேசத்திற்கு நான்வந்திருந்தபோதுபனிப் பொழிவினிடையேஉன்னைப் போலவே ஒருவனைப் பார்த்தேன்..!அது நிச்சயமாக நீதான்அதே கூர் மூக்கு,தெத்திப்பல்ஆயின்..நீ இறக்கவில்லை..!ஆனால் இறந்திருந்தாய்நிற்க முடியாமலும் இருக்க முடியாமலும்காலைச் சவட்டியபடி,கல்லூரிக் காலங்களில்எப்படி எல்லாம் கலகலப்பாய்இருந்தாய்..! இப்போதோபேச்சுக் கொடுத்தாலும்பெரும் மெளனம் காக்கின்றாய்..முட்கம்பிகள் உன் குதத்தைக்கிழித்த போதும்மின்சாரம் உன் குறியைஎரித்த போதும்கேள்விகளாலும் கம்பிகளாலும் நீதுளையிடப்பட்ட போதும்நீ காட்டிய அதே மெளனம்இது கூட நல்லது தான் நண்பனேஒருவேளைவதையின் போது நீ வாய் திறந்திருந்தால்ஐம்பது குடும்பமாவதுஅலறி இருக்காதா..?தேவை அற்ற இடங்களில்நீ அதிகம் பேசி இருந்தாலும்தேவையான இடத்தில் நீமெளனமாகத்தான் இருந்திருக்கிறாய்நல்லது போய்வருகிறேன் என் அன்பு நண்பனே..!இனி நீ காணப்போகிற உலகும்கடக்கப்போகிற மனிதர்களும்ஒவ்வொரு தியாகங்களைப் பற்றியும்இப்போது பேசத்தொடங்கி இருப்பதைப் போலவேஉன்னைக் கடந்து செல்கின்ற போதும்அவர்கள் பேசிக்கொள்வார்கள்இவன்வேறு வேலை அற்றவன்வாழத் தெரியாதவன் என்றும்.. - திரு.திருக்குமரன்
 8. எங்கேயோ இருக்கிறீர்கள் எனக்குத்தெரியும் நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள் கடைசியாக நீங்கள் வேலையால் வந்து கழற்றிப்போட்ட ஆடைகள் உங்களில் நான் கிறங்கும் அதே வியர்வை மணத்துடன் கொழுக்கியில் தொங்கிக்கொண்டு இருக்கிறது.. அன்றிரவு அவர்கள் உங்களை அடித்து இழுத்துச்சென்ற போது நான்கதறிய கதறல் இப்போது ஒவ்வொரு வீடாய் கேட்கத்தொடங்கி இருக்கிறது காலையில் எழுந்து அப்பா எங்கே என மகன் கேட்டான் எப்படித்தான் காணாமல் போனமை பற்றி அவனுக்கு நான் விளக்க முடியும்..? வருடங்கள் உருண்டோடி விட்டன காலமும் மனிதர்களும் எதுவுமே நடந்து விடாதது போல் போய்க் கொண்டிருக்கிறார்கள்...! உங்கள் நெஞ்சில் இருந்து துள்ளுவது போலவே நேற்றைக்கு மாலையும் என் மார்பில் குதித்தபடி அப்பா புராணம் பாடிக்கொண்டிருந்தான் மகன், பொறுக்க முடியாமையின் விளிம்பிலும் காலநீட்சியின் விரக்தியிலும் அப்பா அப்புச்சாமியிடம் போய்விட்டார் எனச்சொல்ல வாயெடுப்பேன் ஆனால் ஏதோ ஒன்று உள்ளிருந்து தடுக்கும் எத்தனையோ இரவுகள் தலையணையைக்கட்டி அணைப்பதும் வெறுங்காற்றில் காலைத்தூக்கிப் போடுவதுமாக கழிந்துவிட்டன.. ஜோசியர்கள் சொன்னபடி ஈசானமூலை, அக்கினிமூலை என அத்தனை திசைகளிலும் உள்ள இராணுவ முகாம்களிலும், நடுநிசியின் நாய்க்குரைப்பு ஓசைகளைக் கிழித்தபடி வாசலில் நின்று செல்லும் வாகனங்களின் பின்னாலும் பல ஆண்டுகளாக ஓடிக்களைத்து விட்டேன், உண்மையில் உங்களைத்தேடி நான் ஏறாத வாசல்கள் இல்லை சுவர்க்க வாசலைத்தவிர, நான் உணர்ந்து கொள்கிறேன் என்னுடைய இந்தப்பிறப்பின் வாழ்க்கைக்காலத்தில் இனி ஒருபோதும் உங்களை நான் காணப்போவதில்லை.. ஆனாலும் இப்போது கூட உள் மனசு சொல்கிறது நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள்...? -திரு. திருக்குமரன்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.