ஏராளன்
கருத்துக்கள உறவுகள்-
Posts
18047 -
Joined
-
Last visited
-
Days Won
12
ஏராளன் last won the day on December 29 2023
ஏராளன் had the most liked content!
About ஏராளன்
- Birthday 12/24/1980
Profile Information
-
Gender
Male
-
Location
யாழ்
-
Interests
வாசிப்பு
Recent Profile Visitors
21054 profile views
ஏராளன்'s Achievements
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஏராளன் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர் பலி: வெள்ளை மாளிகை தெரிவிப்பு Published By: SETHU 19 MAR, 2024 | 01:25 PM ஹமாஸ் அமைப்பின் 3 ஆவது உயர் தலைவரான மர்வான் இஸா, கடந்தவாரம் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார் என வெள்ளை மாளிகை நேற்று திங்கட்கிழமை (18) தெரிவித்துள்ளது. ஹமாஸின் இராணுவப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணியின் பிரதித் தலைவராக விளங்கியவர் மர்வான் இஸா. மார்ச் 9, 10 ஆம் திகதிகளில் இஸாவை இலக்குவைத்து காஸாவில் தாக்குதல் நட்ததப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டேனியர் ஹகாரி கடந்த 11 ஆம் திகதி கூறினார். எனினும், அந்நடவடிக்கையில் இஸா கொல்லப்பட்டாரா என்பது தெளிவில்லை என ஹகாரி கூறியிருந்தார். இந்நிலையில், கடந்தவாரம் இஸ்ரேலின் தாக்குதலில் இஸா கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலீவன் நேற்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179110 -
பாலியல் கல்வியை வழங்க மேலும் நான்கு புத்தகங்கள்! பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க பல வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், இதற்காக பாடசாலை நூலகங்களுக்கு மேலதிகமாக 4 வாசிப்புப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறித்த புத்தகங்கள் இ-தக்சலாவ இணையத்தளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். குறித்த புத்தகங்கள் இங்கே… https://thinakkural.lk/article/296325
-
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம் Published By: DIGITAL DESK 3 19 MAR, 2024 | 03:38 PM இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (19) உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இன்றைய தினம் காலை மருதடி சந்தியில் இருந்து பேரணியாக யாழ் இந்திய துணைத் தூதரகம் நோக்கி சென்ற கடற்தொழிலாளர்கள் துணைத் தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியதை அடுத்து யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/179128
-
19 MAR, 2024 | 03:28 PM பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என 19 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதேவேளை, சிஐடி மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் சில அதிகாரிகள் ஹரக்கட்டாவிடமிருந்து பணம் பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கடமையாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை இடமாற்றம் செய்திருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தப்பிச் செல்ல ஹரக் கட்டாவுக்கு உதவியதாக பல பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/179124
-
வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை ; வழக்கு தள்ளுபடி
ஏராளன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
வெடுக்குநாறிமலை கைது விவகாரம் - பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் 19 MAR, 2024 | 04:52 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வெடுக்குநாறி ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 08 பேரை விடுவிக்குமாறு வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் சபை நடுவில் வந்து ' வெடுக்குநாறி,மாதவனை, குருந்தூர் எங்கள் சொத்து' என்று உரத்த குரலில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து 'நாட்டின் மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தமிழ் பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடன் விசாரணைகளை முன்னெடுங்கள் ' என்று வலியுறுத்தினார். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினால் சபையில் அமளி துமளி ஏற்பட்டது. நீதிமன்ற விசாரணைக்கு இடம்பெற்றுள்ள விடயத்துக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண முடியாது. 08 பேர் கைது செய்யப்பட்ட விதம் முறையற்றதாயின் அது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சபைக்கு உறுதியளித்தார். பாராளுமன்ற அமர்வு செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வினோநோதராதலிங்கம், எஸ். சிறிதரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார், இராதாகிருஸ்ணன், நளின் பண்டார ஆகியோர் 'பொலிஸ் அராஜகம் ஒழிக, அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பதவி விலக வேண்டும். வெடுக்குநாறி எங்கள் சொத்து, மாதவனை எங்கள் சொத்து, பொய் வழக்கை வாபஸ் பெறு, அப்பாவிகளை விடுதலை செய், குருந்தூர் மலை எங்கள் சொத்து என கோசங்களை எழுப்பியவாறு சபை நடுவில் வந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து தமிழ் பிரதிநிதிகளுடன் போராட்டத்தில் கலந்துக் கொண்டார். அத்துடன் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். ஆளும் கட்சியின் ஒருசில உறுப்பினர்களும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல் வீரவன்ச இது இனவாத செயற்பாடு ஆகவே இதற்கு இடமளிக்க வேண்டாம் என இந்த போராட்டத்துக்கு எதிராக உரையாற்றினார். இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ 'உங்களின் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி விட்டு ஆசனங்களுக்கு செல்லுங்கள்' என்று குறிப்பிட்டு விட்டு சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதன்போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ' வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிகள் பாரதூரமான பிரச்சினைகளை முன்வைத்து சபையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். ஆகவே அவர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுங்கள் ' என்றார். சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் 'சபை நடுவில் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்த தமிழ் பிரதிநிதிகளை நோக்கி உங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி விட்டு தயவு செய்து ஆசனங்களுக்கு செல்லுங்கள். நீங்கள் முன்வைக்கும் காரணிகள் பொறுப்பான தரப்பினருக்கு அறிவிக்கப்படும்' என்று அறிவித்து விட்டு சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல 'கோயிலில் வணங்கிக் கொண்டிருக்கும் போது சிவில் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது முற்றிலும் தவறு' என்றார். சபைக்கு நடுவில் இருந்து எதிர்ப்பு தெரிவித்த தமிழ் பிரதிநிதிகள் 'தொல்பொருள் அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும். வெடுக்குநாறி எங்கள் சொத்து, மாதவனை எங்கள் சொத்து, குருந்தூர் எங்கள் சொத்து' என உரத்த குரலில் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். மீண்டும் எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் 'மத சுதந்திரம் இந்த நாட்டின் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும். கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ய அதிகாரம் இல்லை. ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுங்கள், மத சுதந்திரம் வடக்குக்கும், தெற்குக்கும் ஒன்றாக காணப்பட வேண்டும் என்றார். இதன்போது உரையாற்றிக் கொண்டிருந்த அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா' தயவு செய்து சபையை கட்டுப்படுத்துங்கள்' என்றார். சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் 'அவர்கள் ஆசனங்களுக்கு செல்லாவிட்டால் நாங்கள் என்ன செய்வது' என்றார். தமிழ் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பிரதி சபாநாயகர் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து தமிழ் பிரதிநிதிகளின் மத்தியில் நின்று 'பிரதி சபாநாயகர் அவர்களே தயவு செய்து இவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள்.மத உரிமை மறுக்கப்பட்டுள்ளதை இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். நீங்கள் பதிலளியுங்கள் என்றார். சபைக்கு தலைமை தாங்கிய பிரதிசபாநாயகர் ' சபை நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது.இவர்கள் முன்வைத்த விடயத்தை உரிய தரப்பினருக்கு அறிவிப்பதாக நான் குறிப்பிட்டேன்.அதனை கருத்திற் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது' என்றார். பொலிஸ்மா அதிபரை பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை செய்யுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் நீங்கள் குறிப்பிடுவதை போன்று பொலிஸ்மா அதிபரை அழைக்க முடியாது. நான் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கிறேன் என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க 'வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகளுக்கு பிரச்சினைகளுக்கு காணப்படுமாக இருந்தால் அவர்கள் ஆசனங்கள் இருந்தவாறு அவற்றை குறிப்பிடலாம். எதிர்க்கட்சித் தலைவர் இவர்களுடன் ஒன்றிணைந்து 'சோ' காட்டுகிறார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றார். சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் 'பெரும்பாலானோர் 'சோ'தான் காட்டுகிறார்கள் என்றார். தமிழ் பிரதிநிதிகள் சபை நடுவில் இருந்தவாறு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இதன்போது எழுந்து உரையாற்றிய பிரதமர் தினேஷ' குணவர்தன 'சாணக்கியன் அவர்களே தயவு செய்து ஆசனத்துக்கு செல்லுங்கள். இவர்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு நாங்கள் எதர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆகவே ஆசனங்களுக்கு சென்று பிரச்சினைகளை குறிப்பிடுங்கள். சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றார். இதனை தொடர்ந்து சபை நடுவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆசனத்துக்கு சென்று ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து' கடந்த 08 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலையில் மத வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் தொல்பொருள் சின்னங்களுக்கு சேதம் விழைவித்ததாக பொய் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.ஆகவே 08 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ '08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.முறையற்ற வகையில் கைதுகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து பக்கச்சார்பற்ற வகையில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்க முடியும்.அதனை தொடர்ந்து நீதிமன்றம் தீர்மானம் எடுக்கும்.கைது செய்யப்பட்டுள்ளவர்களை பாராளுமன்றத்தால் விடுவிக்க முடியாது.ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் ' என்றார். இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் ' நீதியமைச்சரே நான் குறிப்பிடுவதை கேளுங்கள் தொல்பொருள் திணைக்களம் பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச' நீதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நாட்டில் மத சுதந்திரம் உள்ளது.இது அடிப்படை உரிமை.மத தலங்களுக்கு சென்று வழிபட அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.225 உறுப்பினர்களும் மத சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்.ஆகவே இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதியமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்' என்றார். ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் 'தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடித்தனத்தால் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.முறையான விசாரணைக்கு பின்னர் அவர்களை விடுதலை செய்ய முடியும் என்று நீதியமைச்சர் குறிப்பிடுகிறார்.ஆனால் குருந்தூர் மலை விவகாரத்தில் ஒருசில பௌத்த பிக்குகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.தமிழர்களுக்கு ஒரு நீதி,சிங்களவர்களுக்கு பிறிதொரு நீதி இதுவே இந்த நாட்டின் அடிப்படை பிரச்சினை என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, 'தொல்பொருள் கட்டளைச்சட்டம் தொடர்பில் பொதுவான பிரச்சினைகள் காணப்படுகின்றன.மத தலங்கள் உள்ள பெரும்பாலான இடங்கள் தொல்பொருள் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.அதில் பௌத்த விகாரைகள் பெருமளவில் காணப்படுகின்றன.தொல்பொருள் திணைக்களத்தினால் பௌத்த பிக்குகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொல்பொருள் சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றங்களுக்கு கிடையாது.ஆகவே இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.தொல்பொருள் சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் திருத்தங்களை முன்வைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ஆகவே தொல்பொருள் சட்டத்தின் குறைப்பாடுகளை ஒரு இனத்துக்கு மாத்திரம் வரையறுக்க வேண்டாம் என்றார். இதனை தொடர்ந்து சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ' இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.பாராளுமன்றத்தின் ஊடாகவும் உரிய கவனம் செலுத்தப்படும் ' என்று சபைக்கு அறிவித்தார். https://www.virakesari.lk/article/179098 -
நாளை நாடு முழுவதும் அதிக வெப்பநிலை! மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை, நாளை (20) முழுவதும் நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் சில இடங்களில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொணராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/296333
-
கற்பனைக் கதை தானே அண்ணை?!
-
அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார். விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார். செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன, அதிக வெப்பநிலையால் மென்மையான தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம் என்றும் அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
-
பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன். தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார். பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான். பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்." பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
-
ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
-
என் இந்தியப் பயணம்
ஏராளன் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன். -
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஏராளன் replied to ஏராளன்'s topic in அயலகச் செய்திகள்
"ஒவ்வொன்றாக குறிப்பிட்டு கேட்டால்தான் தருவீர்களா?" - தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மார்ச் 2024 தேர்தல் பத்திர எண்களை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்துத் தகவல்களையும் அளித்த பிறகு, இந்தத் தகவலை ஆணையத்திடம் சமர்ப்பித்ததாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச். 18) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “தேர்தல் பத்திரங்களில் இருந்து பெறப்படும் பணம் குறித்த முழுமையான தகவல்களை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்று 2024 பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது'' என தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ”அனைத்து தகவல்களையும் தர வேண்டும்” "அந்த உத்தரவின்படி, எஸ்பிஐ இரண்டு பகுதிகளாக தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏப்ரல் 12, 2019 முதல், தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் பெயர், பத்திரம் வாங்கப்பட்ட தொகை மற்றும் பிற தகவல்கள் உட்பட தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டது" என தெரிவித்தார். "இரண்டாம் பகுதியில், இடைக்கால உத்தரவு வரும் வரை அரசியல் கட்சிகள் எவ்வளவு தேர்தல் பத்திரங்களைப் பெற்றன, எத்தனை பத்திரங்களை பணமாக்கின என்ற விவரங்களை கேட்டிருந்தோம்" என தெரிவித்தார். “அந்த உத்தரவை நீங்கள் படித்தால், அதில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அவை பணமாக்கப்பட்டது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை எஸ்பிஐ தரவில்லை என்பது தெளிவாகிறது” என்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “எஸ்பிஐ தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரங்களின் எண்கள் மற்றும் சீரியல் எண்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பாக இத்தகைய தகவல் எஸ்பிஐ-யிடம் இருக்கும் பட்சத்தில் அதனை தெரிவிக்க வேண்டும்” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார். பட மூலாதாரம்,ANI சரமாரி கேள்விகள் எஸ்பிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, எஸ்பிஐ எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றார். "நீதிமன்ற உத்தரவின்படி கடந்த வியாழன் மாலை 5 மணிக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளோம். எந்த தகவலும் மறைக்கப்படவில்லை" என அவர் கூறினார். ”நீங்கள் (நீதிமன்றம்) குறிப்பிட்ட தகவலை கேளுங்கள், நாங்கள் தருகிறோம் என்பது போன்று எஸ்பிஐ அணுகுமுறை இருக்கிறது” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார். "எஸ்பிஐ தலைவராக, உங்களிடம் உள்ள அனைத்து தகவல்களையும் நீங்களே பகிரங்கப்படுத்த வேண்டும்" என்றார். பத்திரத்தில் உள்ள எண் பாதுகாப்பு அம்சமா அல்லது தணிக்கையின் ஒரு பகுதியா என்று தலைமை நீதிபதி கேட்டார். இதற்குப் பதிலளித்த சால்வே, பத்திரத்தில் உள்ள எண் ஒரு பாதுகாப்பு அம்சம் என கூறினார். இதற்கு, "பத்திரத்தை பணமாக்க கிளைக்கு செல்லும்போது, பத்திரம் போலியா, இல்லையா என்பதை சரிபார்க்க இந்த எண் உள்ளதா?" என கேட்டார். ”இது ரூபாய் நோட்டு போன்றது” என சால்வே கூறினார். இந்த எண்களின் அடிப்படையில் என்ன தகவல் கிடைக்கும் என நீதிமன்றம் கேட்டது. இதைத்தொடர்ந்து எஸ்பிஐ தேர்தல் பத்திர எண்களை வழங்க வேண்டும் என்றும், அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறினார். அசோசெம், ஃபிக்கி மனுக்கள் தள்ளுபடி இதனிடையே, தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என ASSOCHAM, FICCI ஆகிய நிறுவனங்களும் மனுத்தாக்கல் செய்திருந்தன. ஆனால் இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுவரை என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டன. அந்தத் தகவலின்படி, இந்த காலகட்டத்தில் பாஜக ரூ.6,987 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பணமாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், ரூ. 1,600 கோடிக்கும் அதிகமான தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இந்த நிறுவனம் மொத்தம் 1,368 பத்திரங்களை வாங்கியது, அதன் மதிப்பு ரூ.1,360 கோடிக்கும் அதிகமாகும். இருப்பினும், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. சில கட்சிகள் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட்டன தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் செய்தது. தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து செப்டம்பர் 2023 வரை இந்தத் தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பித்திருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அத்தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளது. சில கட்சியினர் தங்களுக்கு யார், எவ்வளவு மதிப்பிலான பத்திரங்களை வழங்கினர், எப்போது பணமாக்கினோம் என்பது போன்ற முழுமையான தகவல்களை சமர்ப்பித்துள்ள நிலையில், பல கட்சியினர் எந்தெந்த பத்திரத்தில் இருந்து எவ்வளவு பணம் பெற்றனர் என்பதை மட்டும் தெரிவித்துள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகளில், அதிமுக, திமுக, மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்களுக்கு யார் நன்கொடை அளித்தனர் என்பது குறித்த தகவல்களை அளித்துள்ளனர். சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி போன்ற சிறிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை எங்கிருந்து பெற்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி பாஜக சொல்லும் காரணம் என்ன? அதேசமயம், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் 2019-ம் ஆண்டு வரை நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை மட்டும் அளித்துள்ளன. நவம்பர் 2023-ல் இந்த கட்சிகள் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த போது, நன்கொடையாளர்கள் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. இவைதவிர, பெரும்பாலான கட்சிகள் நன்கொடை அளித்தவர்கள் குறித்து தகவல் தரவில்லை. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனடைந்த கட்சிகளில் முதலிடத்தில் பாஜகவும் இரண்டாவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியும் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதில் மௌனம் காத்துவருகின்றனர். கடந்த ஆண்டு, தேர்தல் ஆணையத்திடம், பாஜக தாக்கல் செய்த மனுவில், “அரசியல் நிதியில் கணக்கு வைப்பதற்கும், நன்கொடையாளர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக மட்டுமே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அத்தகைய சூழ்நிலையில், அச்சட்டத்தின் கீழ், நன்கொடையாளர்களின் பெயர்களை கட்சி அறியவோ அல்லது அதன் பதிவுகளை வைத்திருக்கவோ தேவையில்லை. நன்கொடையாளர்களின் பெயர்கள் பற்றிய பதிவுகள் எங்களிடம் இல்லை” என தெரிவித்தது. https://www.bbc.com/tamil/articles/c994d1gdpzvo -
கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய வாகனம் தொடர்பில் விசாரணை! 19 MAR, 2024 | 11:08 AM விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகும் போது பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்டது என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட இந்த வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மாத்திரமே என்பதுடன் இதில் கைதிகளை ஏற்றிச்செல்ல முடியாது எனும் நிபந்தனையை மீறி கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரகசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/179097
-
19 MAR, 2024 | 11:21 AM வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார். குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம், அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர். https://www.virakesari.lk/article/179099