Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  2,468
 • Joined

 • Last visited

 • Days Won

  2

ஏராளன் last won the day on September 10

ஏராளன் had the most liked content!

1 Follower

About ஏராளன்

 • Birthday புதன் 24 டிசம்பர் 1980

Profile Information

 • Gender
  Male
 • Location
  யாழ்
 • Interests
  வாசிப்பு

ஏராளன்'s Achievements

Grand Master

Grand Master (14/14)

 • Reacting Well Rare
 • Dedicated Rare
 • Very Popular Rare
 • Conversation Starter
 • First Post

Recent Badges

598

Reputation

 1. இவனுடைய இழப்புத் தான் எனது தயக்கத்தை உதறி முன் செல்ல தூண்டுகிறது.
 2. பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலி - என்ன நடந்தது? 15 அக்டோபர் 2021, 14:41 GMT புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UK PARLIAMENT கன்சர்வேடிவ் எம்.பி. சர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் உள்ளூர் நேரப்படி பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ-யில் எம்.பி சர் டேவிட் அமேஸ் கத்தியால் குத்தப்பட்டதாக தங்களுக்கு தகவல் வந்ததாகவும் அதன் பேரில் ஒருவரை கைது செய்ததாகவும் எஸ்ஸெக்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர். பிடிபட்ட நபரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், எம்.பி தாக்கப்பட்ட சம்பவத்தில் வேறு எவரையும் தாங்கள் தேடவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். 1983ஆம் ஆண்டு முதல் பிரிட்டனில் எம்.பி ஆக இருக்கும் டேவிட் அமேஸுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். அவரது இறப்பு குறித்து பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் சஜித் ஜாவேத் கூறுகையில், "டேவிட் ஒரு சிறந்த மனிதர், சிறந்த நண்பர், மற்றும் சிறந்த எம்.பி., தனது ஜனநாயக கடமையை ஆற்றும்போது அவர் கொல்லப்பட்டுள்ளார்," என்று குறிப்பிட்டார். பிரிட்டன் நிதித்துறை செயலாளர் (சான்சலர்) ரிஷி சுனக், "வன்முறையின் மோசமான அம்சமே அது மனிதாபிமானமற்று இருப்பதுதான். அது உலகின் மகிழ்ச்சியைத் திருடுகிறது, நாம் மிகவும் விரும்புவதை நம்மிடமிருந்து பறிக்கிறது," என்று கூறியுள்ளார். "இன்று அது ஒரு தந்தை, கணவர் மற்றும் மரியாதைக்குரிய சக மனிதரை பறித்து விட்டது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் சர் டேவிட்டின் அன்புக்குரியவர்களுடன் உள்ளன," என்று ரிஷி சுனக் கூறியுள்ளார். நியூயார்க்கில் யூத மத குருவின் வீட்டில் கத்திக்குத்து - ஐவர் காயம் லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு "இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியைத் தொடர்ந்து டேவிட் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த கோபமூட்டும் மற்றும் வன்முறை நடத்தையை அரசியலிலோ அல்லது வேறு எந்த வாழ்க்கையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது," என்று அவர் கூறியுள்ளார். படக்குறிப்பு, தாக்குதல் நடந்த பகுதியை காட்டும் படம் 69 வயதாகும் டேவிட் அமேஸ், செளத் எண்ட் வெஸ்ட் தொகுதி எம்.பி ஆக இருக்கிறார். பெல்ஃபேர்ஸ் தேவாலயத்தில் தமது தொகுதிவாசிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டபோது தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார். சம்பவ இடத்துக்கு உடனடியாக வான் வழியாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது. பட மூலாதாரம்,ANTHONY FITCH படக்குறிப்பு, டேவ்ட் அமேஸ் தாக்கப்பட்ட தேவாலயத்துக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர். சம்பவம் நடந்த இடத்தில் செளத் எண்ட் கவுன்சிலர் ஜான் லேம்ப் இருந்துள்ளார். "எப்போதும் பிறருக்கு உதவக் கூடிய நிலையில் இருந்தார் டேவிட். குறிப்பாக, அகதிகளுக்காக உதவ எப்போதும் முயற்சி எடுத்து வந்தார். தான் நம்பும் ஒரு விஷயத்தில் எப்போதும் உள்ளப்பிடிப்பு மிக்கவராகவும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதில் அதிக முனைப்பு காட்டுபவராகவும் விளங்கினார் டேவிட்," என்றார் ஜான் லேம்ப். "தொகுதிவாசிகளை அவர்கள் வசிக்கும் வெவ்வேறு பகுதிகளுக்கே நேரில் சென்று குறைகளை கேட்டறிவதை டேவிட் அமேஸ் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், இப்படியொரு தாக்குதலில் அவர் பலியாவார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை," என்றார்ஜான் லேம்ப். சம்பவம் நடந்தவுடன் மருத்துவமனைக்கு டேவிட் கொண்டு செல்லப்படவில்லை என்றும் சம்பவ பகுதியிலேயே அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர் என்றும் ஜான் லேம்ப் பிபிசியிடம் தெரிவித்தார். டேவிட் அமேஸின் உடல்நிலை மிக மோசமாக இருந்ததால், அவரை ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லாமல் சம்பவ பகுதியில் வைத்தே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்டனர். ஆனாலும் அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்தவர்கள் தெரிவித்தனர். 2016இல் கொல்லப்பட்ட ஒரு எம்.பி.யின் நினைவாக உருவாக்கப்பட்ட ஜோ காக்ஸ் ஃபவுண்டேஷன், "'டேவிட் கத்திக்குத்து சம்பவம் கொடூரமான செயல்," என்று கூறியுள்ளது. தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கேர் ஸ்டார்மெர், "'டேவிட்டுக்கு நடந்த கொடூரமான மற்றும் துயரமான சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பம், ஊழியர்கள் மீதே எனது நினைவு இருக்கிறது," என்று தெரிவித்துள்ளார். டேவிட் அமேஸின் மறைவுக்கு கட்சி வித்தியாசமின்றி பிரிட்டனில் உள்ள அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://www.bbc.com/tamil/global-58928921
 3. சீனப் பெருஞ்சுவரை விட அதிகமாக குவிந்த மின்னணு கழிவுகள் விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலக அளவில் உற்பத்தியாகும் மின்னணு கழிவுகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான கழிவுகளே மறு சுழற்சி செய்யப்படுகின்றன என்கிறார்கள் வல்லுநர்கள். மின்னணு கழிவுகள் உலக அளவில் ஒரு தலைவலியாகவே உருவெடுத்துள்ளன. 2021ம் ஆண்டில் மட்டும் தூக்கி எறியப்பட்ட பழைய மின்னணுப் பொருள்களின் எடை 5.7 கோடி டன் இருக்கும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளார்கள். மின் மற்றும் மின்னணு சாதனக் கழிவுகளை கையாள்வது தொடர்பான சர்வதேச வல்லுநர் குழு ஒன்று இந்த மதிப்பீட்டை செய்துள்ளது. 5.7 கோடி டன் என்பது சீனப் பெருஞ்சுவரின் எடையைவிட அதிகம். இதுவரை புவியில் செயற்கையாகப் படைக்கப்பட்ட பொருள்களிலேயே அதிக எடை கொண்டது சீனப்பெருஞ்சுவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போன்கள், குளிர்சாதனப் பெட்டிகள், கெட்டில்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், மின்னணு பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் போன்றவை இந்தக் கழிவுப் பொருள்களில் அடக்கம். தூக்கி வீசப்பட்ட அந்த மின்னணு கழிவுகளின் மதிப்பு பிரும்மாண்டமானது என்கிறது அந்த வல்லுநர் குழு. உலக மின்னணு கழிவுப் பொருள்களின் மதிப்பு 62.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என்கிறது வேர்ல்டு எக்கனாமிக் ஃபோரம் வெளியிட்ட ஓர் அறிக்கை. இது பெரும்பாலான நாடுகளின் ஆண்டு மொத்த உற்பத்தி மதிப்பைவிட அதிகம். "ஒரு டன் வீசியெறியப்பட்ட மொபைல் போன்களில் 1 டன் தங்கத் தாதுவில் இருப்பதைவிட அதிகம் தங்கம் இருக்கும்," என்கிறார் ஐ.நா. நீடித்த நிலைத்த சுழற்சித் திட்டத்தின் இயக்குநர் ரியூடிஜெர் கியூயர். குவியும் சாதனங்கள் இ-கழிவுகள் என்று கூறப்படும் இந்த மின்னணு கழிவு உற்பத்தி ஒவ்வோர் ஆண்டும் 2 மில்லியன் டன் அதிகரிக்கிறது. மொத்த உற்பத்தியில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே மறுசுழற்சிக்கு உள்ளாகிறது. பிட்காயின் உருவாக்கத்திற்கு பெரும் அளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா? அணுக் கழிவு: 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் வரும் தலைமுறையை எச்சரிப்பது எப்படி? குறைவான ஆயுளும், சீர் செய்வதற்கான குறைவான வாய்ப்புகளும் உள்ள பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலம் இந்த இ-கழிவுகள் அதிகரிப்பதற்கு உற்பத்தியாளர்கள் காரணமாக இருக்கிறார்கள் என்று மின், மின்னணு கழிவுப் பொருள்களைக் கையாள்வதற்கான வல்லுநர் குழுவின் தலைமை இயக்குநர் பாஸ்கல் லெராய் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிட்ஜ், டிவி, பிற மின்னணு கழிவுகளின் குவியல். "மொபைல் போன்களில் அதிவேகமாக செய்யப்படும் வளர்ச்சிகளால் பழை போன்களை மாற்றவேண்டிய நிலை சந்தையில் ஏற்பட்டுள்ளது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். தங்கள் தனிப்பட்ட மின்னணு சாதனங்களை மறுசுழற்சி செய்வதற்கு நுகர்வோரிடமும் தயக்கம் இருக்கக்கூடும். பிரிட்டனில் 4 கோடி பயன்படுத்தப்படாத சாதனங்கள் வீட்டில் உறங்குவதாக ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி 2019ல் செய்த ஓர் ஆய்வில் தெரியவந்தது. திறன் பேசிகளை செய்வதற்குத் தேவையான சில அரிதான, மதிப்பு மிக்க தனிமங்களின் சப்ளையில் இது பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நூற்றாண்டில் தீரப்போகும் இத் தனிமங்கள் செல்போன் செய்யத் தேவை கேலியம் (Gallium): மருத்துவ வெப்பமானிகள், எல்.இ.டி.கள், சோலார் பேனல்கள், டெலஸ்கோப்புகள் ஆகியவற்றில் பயன்படும். புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆர்சனிக் (Arsenic): பட்டாசுகளில் பயன்படும். வெள்ளி (Silver): கண்ணாடிகளில், எதிர்வினையாற்றும் லென்ஸ்களில், பாக்டீரியா எதிர்ப்பு துணி மற்றும் கையுறைகளில் பயன்படுகின்றன. இரிடியம் (Indium): டிரான்சிஸ்டர், மைக்ரோ சிப், தீயணைப்பதற்கான நீர் தூவும் இயந்திரம், ஃபார்முலா 1 கார்களுக்கான பால் பேரிங்குகள், சோலார் பேனல்களுக்கான மேல்பூச்சு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. யிட்ரியம் (Yttrium): வெள்ளை எல்.இ.டி. விளக்குகள், கேமரா லென்ஸ்கள், சில வகை புற்றுநோய் சிகிச்சைகளில் பயன்படும். டான்டலம் (Tantalum): அறுவை சிகிச்சைகளில் உள்ளே வைக்கப்படும் இம்ப்ளான்டுகள், நியான் விளக்குகளின் எலக்ட்ராடுகள், டர்பைன் பிளேடுகள், ராக்கெட் நாசில்கள், சூப்பர்சானிக் விமானங்களின் நோஸ் கேப்புகள், காது கேட்கும் கருவிகள், பேஸ் மேக்கர்கள் போன்றவற்றில் பயன்படுகிறது. பட மூலாதாரம்,ROYAL SOCIETY OF CHEMISTRY படக்குறிப்பு, திறன்பேசிகளில் 30 வகை தனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில புவியில் வேகமாகத் தீர்ந்துவருகிறவை. "சரியானதை செய்ய நுகர்வோர் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு சரியான தகவல்கள் தெரிவிக்கப்படவேண்டும். அத்துடன் இ-கழிவுகளை சரியான முறையில் அகற்றுவது சமூக நெறியாக மாறுவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் வேண்டும்," என்கிறார் பாஸ்கல் லெரோய். மின்னணு பொருள்களை தூக்கி வீசாமல் அவற்றை மறுசுழற்சி செய்வதன் மூலம் பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வும் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு டன் மின், மின்னணு கழிவுகளை மறு சுழற்சி செய்வதன் மூலம் இரண்டு டன் கரியமில வாயு உமிழ்வைத் தடுக்க முடியும். எனவே பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டுக்கு நமது அரசுகள் செல்லும் நிலையில், கார்பன் உமிழ்வை குறைக்க இந்த நடவடிக்கை முன்னெப்போதையும்விட முக்கியம்" என்கிறார் அவர். பிரிட்டனில் உள்ள மெட்டீரியல் ஃபோகஸ் என்ற நிறுவனம் அஞ்சல் குறியீட்டை அடிப்படையாக வைத்து மக்களுக்கு அவர்களுக்கு அருகே உள்ள இ-கழிவு மறுசுழற்சி மையம் குறித்த தகவல்களை அளிக்கிறது. https://www.bbc.com/tamil/global-58925076
 4. தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: 'விஜயகாந்த் வெற்றிக்கு ஆதாரம் உள்ளது; விஜய் வென்றாரா?' ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 13 அக்டோபர் 2021 புதுப்பிக்கப்பட்டது 14 அக்டோபர் 2021 பட மூலாதாரம்,XB CREATIONS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வென்றிருப்பதாக விஜய் மக்கள் மன்றத்தினர் தெரிவித்து வந்தாலும், அவ்வாறு வென்றவர்கள் விஜய் மக்கள் மன்றத்தில் உறுப்பினராகவோ நிர்வாகியாகவோ இருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை அவர்கள் வெளியிடவில்லை. தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும், 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தமாக 27,003 தேர்தல் உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் வேறு மாவட்டங்களில் இடைத் தேர்தல் நடந்த மிகச் சில இடங்களும் அடக்கம். இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2874 பதவியிடங்களும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிடங்களில் 119 பதவியிடங்களும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் போட்டியின்றி நிரப்பப்பட்டன. மேலும், ஒரு கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடம் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடத்திற்கும் 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கும் போட்டியிட ஆட்கள் முன்வரவில்லை என்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 23,978 பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்தது. இவற்றில் 110 இடங்களைக் கைப்பற்றியுள்ளோம் என்கின்றனர் விஜய் மக்கள் மன்றத்தினர். விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: எஸ்.ஏ. சந்திரசேகர் தரும் விளக்கம் என்ன? விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன்? அஜித் வாக்களிக்க வந்தபோது என்ன நடந்தது? 'இயக்கத்தின் கொடி, பெயர் பயன்படுத்தியதால் வெற்றி' `மக்கள் இயக்கத்தின் கொடி, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேர்தலில் நின்றதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது' என்கிறார், காஞ்சிபுரம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் சரவணன். என்ன நடந்தது? தமிழ்நாட்டில் அக்டோபர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி என ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில் பெரும்பான்மையான வெற்றியை ஆளும்கட்சியான தி.மு.க பெற்றுள்ளது. பல மாவட்டங்களில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க படுதோல்வியடைந்துள்ளது. தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அ.ம.மு.க வெற்றி பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. சட்டமன்றத் தேர்தலில் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, இந்தமுறை படுதோல்வியை சந்தித்துள்ளது. போட்டி 169 இடங்கள்.. வெற்றி? அதேநேரம், 109 இடங்களில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நேற்று மாலை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நேரம், 55 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து நேற்று இரவு முழுக்க வாக்கு எண்ணும் பணிகள் நீடித்தன. முடிவில் 110 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார் நடிகர் விஜய் இதன் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஓரிரு நாள்களில் நடிகர் விஜய்யை சந்தித்து ஆசி பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சின்னம் என்பது பிரதானமாக இருப்பதில்லை என்பதால், அந்தந்த பகுதிகளில் செல்வாக்கானவர்களை அரசியல் கட்சிகள் களமிறக்கின. சட்டமன்றத் தேர்தலுக்கு இணையாக உள்ளாட்சித் தேர்தலிலும் பணம் பிரதானப் பங்கு வகித்ததாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றியை மிக முக்கியமான ஒன்றாக அக்கட்சியின் நிர்வாகிகள் பேசி வருகின்றனர். போட்டியின்றி தேர்வான 13 பேர் உள்ளாட்சித் தேர்தல் நிலவரம் குறித்து, தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளரும் மாவட்ட இளைஞர் அணி தலைவருமான சரவணனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னரே ஒன்பது மாவட்டங்களில் போட்டியின்றி 13 பேர் தேர்வானார்கள். குறிப்பாக, காஞ்சிபுரத்தில் 2 பேர், கள்ளக்குறிச்சியில் 3 பேர் என வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே இந்த வெற்றி எங்களுக்குள் மகிழ்ச்சியை கொடுத்தது" என்கிறார். தொடர்ந்து பேசிய சரவணன், `` உள்ளாட்சியில் 169 இடங்களில் போட்டியிட்டோம். இந்த நிமிடம் வரையில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 2019 உள்ளாட்சித் தேர்தலில் 32 மாவட்டங்களில் சுயேச்சையாக கொடி, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் போட்டியிட்டோம். அப்போது 135 பேர் வெற்றி பெற்றனர். இந்தமுறை மக்கள் இயக்கத்தின் கொடி, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை அறிய முடிந்தது. உள்ளாட்சித் தேர்தல்: சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு படுதோல்வி ஏன்? 'அண்ணாத்த' ரஜினி உருக்கம்: "எஸ்பிபி 45 வருடங்களாக எனது குரலாகவே வாழ்ந்தவர்" விழுப்புரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கிறோம். எங்களின் சேவைகளைப் பார்த்து மக்களும் ஆதரவு கொடுத்தனர். வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே, `100 இடங்களில் வெற்றி பெறுவோம்' என உறுதியாக நம்பினோம்" என்கிறார். ``தேர்தல் நேரத்தில் நடிகர் விஜய் தரப்பில் இருந்து எதாவது தகவல்கள் வந்ததா?" என்றோம். `` மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான புஸ்ஸி ஆனந்தின் வழிகாட்டலில்தான் நாங்கள் தேர்தலில் நின்றோம். தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகளிடம் இருந்து எங்களுக்கு எந்தவித சிக்கல்களும் வரவில்லை. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் மாநிலத் தலைமைக்கு அனுப்பி வந்தோம்" என்கிறார். என்ன ஆதாரம் இருக்கிறது? `` உள்ளாட்சியில் வெற்றி பெற்றதை நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடுகிறார்களே?" என மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். பட மூலாதாரம்,ACTOR VIJAY `` தாங்கள் வெற்றி பெற்றதற்கு எந்த ஆதாரத்தின் அடிப்படையில் விஜய்யை முன்வைத்து உரிமை கோருகிறார்கள் எனத் தெரியவில்லை. இந்தத் தேர்தலில் சுயேச்சை சின்னத்தில்தான் அனைவரும் போட்டியிட்டுள்ளனர். ஊராட்சி மன்றத் தேர்தலில் கட்சி சின்னத்தில் யாரும் போட்டியிடுவதில்லை. அப்படியிருக்கும்போது, `நடிகர் விஜய்யின் ஆதரவில்தான் நாங்கள் வெற்றி பெற்றோம்' என இவர்கள் கூறுவதை யாரும் சென்று சரிபார்க்கப் போவதில்லை" என்கிறார். தொடர்ந்து பேசிய சிகாமணி, `` ஊரக உள்ளாட்சியில் இவர்கள் அனைவரும் ஒரே சின்னத்தில் போட்டியிடவும் வாய்ப்பில்லை. தனது தந்தை புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, அதனை மறுத்து விஜய் அறிக்கையும் வெளியிட்டிருந்தார். கடந்த காலங்களில் உள்ளாட்சியில் அதிக இடங்களில் விஜயகாந்த் வெற்றி பெற்றார் என்றால், அதற்குப் போதிய ஆதாரங்கள் இருந்தன. அதேநேரம், விஜய் ரசிகர்கள் தரப்பில் கற்பனையான, நிரூபிக்க முடியாத தகவல்களைக் கூறுவது ஏன் எனத் தெரியவில்லை" என்கிறார். மேலும், `` தற்போதைய அரசியல் சூழலில், யாராவது ஒருவர் வந்துதான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியம் எதுவும் தற்போது இல்லை. உள்ளாட்சியில் எதாவது ஒரு காரணத்தால் சிலர் வெற்றி பெற்றிருக்கலாம். அதற்காக, விஜய்க்காகத்தான் மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? இதன்மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இதில், 110 இடங்களில் வெற்றி பெறுவதில் என்ன பெருமை இருக்கப் போகிறது?" என்கிறார். https://www.bbc.com/tamil/india-58895863
 5. நாகப்பட்டினத்தில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த மகளை இழுத்துச் சென்ற தந்தை - தலித் கணவர் புகார் நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 13 அக்டோபர் 2021, 05:32 GMT படக்குறிப்பு, பெண்ணின் தந்தை (வலது) மற்றும் உறவினர் ஒருவர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அவரை இழுத்துக்கொண்டு வெளியே வந்தனர். தலித் இளைஞர் ஒருவரை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண், அந்தத் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக, சார் பதிவாளர் அலுவலகம் வந்திருந்தபோது, அப்பெண்ணின் தந்தையும் வேறு சிலரும் அடித்து இழுத்துச் சென்ற காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் வீட்டில் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு, அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பெண்ணை மீட்ட காவல்துறையினர் அவரை மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்தனர். இதில் என்ன நடந்தது? நீதிமன்றம் இருந்த வளாகத்துக்குள்ளேயே சட்டத்தை மீறிய பெண்ணின் தந்தை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவருக்கு வயது 21. இவரும் நாகப்பட்டினம் மாவட்டம் செம்பியன் மாதேவி கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மதன்ராஜ் என்பவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பாரதி, மதன்ராஜ் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மேற்கொண்டு இவர்கள் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு: ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் தண்டனை திமுக பிரமுகர் தூண்டுதலில் ஆணவப் படுகொலையா? இளைஞர் மரணத்தில் என்ன நடந்தது? இந்த சூழலில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சியில் உள்ள கோயில் ஒன்றில் தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பெண் வீட்டுத் தரப்பில் எதிர்ப்பு நீடித்தது வந்த காரணத்தால் முறைப்படி பதிவு திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு கடந்த 10ஆம் தேதி திருச்சியிலிருந்து மதன்ராஜின் சொந்த ஊரான நாகப்பட்டினம் வந்துள்ளனர். பிறகு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12) காலை வழக்கறிஞர் மூலமாக முறைப்படி பதிவு திருமணம் செய்ய நாகபட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அங்கு மதன்ராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆதரவுடன் பதிவு திருமணம் செய்து கொண்டனர். படக்குறிப்பு, பெண்ணை மீட்டு அழைத்துச் செல்லும் பெண் காவலர்கள். பதிவு திருமணத்தின் போது இறுதியாக சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ளே நுழைந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள், பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுள்ளனர். நீதிமன்ற வளாகத்தின் வெளியே இழுத்து சென்ற பாரதியை காரில் ஏற்றுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் இதை தடுக்கும்‌ முயற்சியில் ஈடுபட்டபோது, அவரையும்‌ மீறி பாரதியை காரில் ஏற்றினர். இதையடுத்து இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அருகே இருந்த பொதுமக்கள் அவர்களது காரை மறித்து பெண்ணை காரிலிருந்து இறக்கிவிட வலியுறுத்தினர். நீதிமன்ற வளாகம் அருகே வந்த பெண் காவலர் அப்பெண்ணை அவர்களின் பிடியில் இருந்து விடுமாறு கூறும்போது, தாம் ஒரு கிராம நிர்வாக அலுவலர் என்றும் அது தமது மகள் என்றும் பெண்ணின் தந்தை கூறினார். தலித் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் - அதிர்ச்சி ஆய்வு முடிவெட்ட சென்றதற்காக அடித்த ஆதிக்க சாதியினர்: தற்கொலைக்கு முயன்ற தலித் இளைஞர்கள் பின்னர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்தமேலதிக காவல்துறையினர் பெண்ணை மீட்டு அருகே இருக்கும் போக்சோ நீதிமன்றத்துக்கு பாதுகாப்பிற்காக அழைத்துச் சென்றனர். இதற்கிடையே மனைவியின்‌ உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை, மீட்டுத்தர வேண்டும் என்று வலியுறுத்தி நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பெண்ணின் கணவர் மதன்ராஜ் புகாரளித்தார். காவல்துறை பெண் வீட்டார் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? அவர் கொடுத்த புகாரில், "திருமணத்தை பதிவு செய்து கொண்டிருந்த போது பாரதியின் பெற்றோர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அடையாளம் தெரியாத சுமார் 5 நபர்களுடன் நுழைந்து என்னையும், எனது மனைவி பாரதியை அடித்து கீழே தள்ளவிட்டு, எனது மனைவியை அடித்து கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர்," என்று குறிப்பிட்டிருந்தார் . படக்குறிப்பு, பெண்ணின் கணவர் மதன்ராஜ் சம்பவம் குறித்து பிபிசி தமிழுக்கு கூறிய மதன்ராஜ் தரப்பினர், "மதன்ராஜ் கொடுத்த புகாரில் அடிப்படையில், இருவரையும் விசாரித்த காவல்துறையினர், பெண்ணின் விருப்பப்படி கணவருடன் சேர்த்து வைத்தனர். பெற்றோருடன் செல்ல பெண் மறுப்பு தெரிவித்ததால், எங்களுக்கும் உனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பெண்ணிடம் அவரது பெற்றோர்‌ எழுதி வாங்கிக்கொண்டனர்." என்று தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் ஜவஹரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. அப்போது விளக்கமளித்த அவர், "அந்த பெண்ணை அழைத்து விசாரணை செய்தபோது, அவர் பையனுடன் இருக்க விரும்புவதாக தெரிவித்தார்" என்று கூறினார். "பெண் 21 வயது ஆனவர் என்பதால் யாருடன் இருக்க விருப்புகிறாரோ அவருடன் இருக்க உரிமையுள்ளது என்பதால் அந்த பெண்ணை கணவருடன் அனுப்பி வைத்தோம். பெண்ணின் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு இருந்துவந்த நிலையில், இனிவரும் நாட்களில் பெற்றோரால் இவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கியுள்ளோம்" என நாகை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதால் கணவர் கொடுத்த புகார் தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று வெளிப்பாளையம் காவல் நிலைய அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். தம்மை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகவோ, தாக்கியதாகவோ பாதிக்கப்பட்ட பாரதி புகார் அளித்தால் பெண்ணின் குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அரசு வளாகத்துக்குள்ளேயே இந்த நிகழ்வு நடந்து இருந்தாலும் காவல்துறை தாமாக முன்வந்து இது தொடர்பாக இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது குறித்துக் கேட்டபோது, அப்பெண் புகார் அளிக்க வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் மீண்டும் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-58893860
 6. இலங்கை போலீஸ் ஒருவர் காலணியுடன் இந்து கோயிலுக்குள் சென்றதாக சர்ச்சை 2 மணி நேரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களுக்குள் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பாதணியுடன் பிரவேசித்த சம்பவம் பாரிய எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை போலீஸ் மாஅதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று (13) மேற்கொண்டிருந்தனர். இதன்போது, போலீஸ் மாஅதிபருடன் சென்ற உயர் போலீஸ் அதிகாரியொருவர், பாதணியுடன் ஆலயத்திற்குள் சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படமொன்றை பகிர்ந்து, அதிகளவானோர் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு பாதணியுடன் ஆலயத்திற்குள் செல்லும் போலீஸ் அதிகாரியின் புகைப்படங்கள் இன்று முற்பகல் முதல் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் − தொண்டமனாறு செல்வசந்நிதி ஆலயம் மற்றும் வல்லிபுர ஆழ்வார் ஆலயம் ஆகிய ஆலயங்களுக்கே போலீஸ் மாஅதிபர் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த இரண்டு ஆலயங்களும், இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்கள் என்பது விசேட அம்சமாகும். இந்திய ராணுவத் தளபதியின் இலங்கை பயணம்: சீனாவை ஓரங்கட்டும் முயற்சியா? இலங்கை அரசு விழாவில் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி - என்ன நடந்தது? இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களுக்குள், போலீஸ் அதிகாரி பாதணியுடன் சென்றமை, ஆலயத்தின் மகிமையை அவமதிப்பதாக இந்துக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பானது - போலீஸ் யாழ்ப்பாணத்தில் போலீஸ் உயர் அதிகாரியொருவர் பாதணியுடன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார். இந்த சம்பவம் தொடர்பில் பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த போலீஸ் அதிகாரி ஆலய நுழைவாயிலிலேயே தமது கடமைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் கூறினார். அதைவிடுத்து, ஆலயத்திற்குள் சென்றதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார். போலீஸார் கடமைகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் மேல் சட்டையை கழற்ற கூடாது என்ற போதிலும், யாழ்ப்பாணம் − நல்லூர் ஆலயத்திற்குள் போலீஸ் அதிகாரிகள் செல்லும் போது, மேல் சட்டையை கழற்றுவதாக அவர் கூறினார். அது இந்து மதத்திற்கு போலீஸார் வழங்கும் கெளரவம் எனக் கூறிய அவர், ஆலய நுழைவாயிலுக்கு அருகில் போலீஸ் அதிகாரி சென்றமை கூட தவறுதலாக இடம்பெற்ற ஒன்று என தெரிவித்தார். தமது அதிகாரிகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைத்து மதங்களையும் கெளரவத்துடன் மதிப்பார்கள் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/sri-lanka-58901201
 7. உங்கள் மக்கள் மீதான கரிசனத்திற்கு தலை வணங்குகிறேன். எங்கடை சனம் தப்பிப்பிழைக்குங்கள், கொஞ்சம் உடலை வருத்தத் தயாராக வேண்டும். இப்பவே வீட்டுத்தோட்டங்கள் செய்ய தொடங்கிற்றினம், தூசு அடுப்பெல்லாம் தூசி தட்ட வெளிக்கிட்டாச்சு காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்துடன்.
 8. ஏர் இந்தியாவை வாங்கிய டாடாவுக்கு முன்னுள்ள சவால்கள் என்ன? சல்மான் ராவி பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உப்பு தயாரிப்பிலிருந்து உயரே பறப்பது வரை அனைத்தும் சாத்தியம் என்று மீண்டும் ஒரு முறை மார்தட்டிக்கொள்ளலாம் டாடா குழுமம். ஏர் இந்தியாவின் சின்னமான மஹாராஜா மீண்டும் அதிகாரப்பூர்வமாக டாடா நிறுவனத்திடம் வந்துள்ளது இந்தியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவை அதிகத் தொகைக்கு வாங்கிய டாடா சன்ஸ் நிறுவனம் இப்போது மீண்டும் அதன் அதிகாரப்பூர்வ உரிமையாளராகிறது. ஜே ஆர் டி டாடா-வால் உருவாக்கப்பட்ட ஏர் இந்தியாவை மீண்டும் உரிமை கொள்வதில் 'டாடா சன்ஸ்' மிகுந்த உற்சாகமடைந்துள்ளது. 1953 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா தேசியமயமாக்கப்பட்ட போதிலும், டாடா சன்ஸ் தான் அதனைத் தொடர்ந்து இயக்கியது. பின்னர் எழுபதுகளில், ஜனதா கட்சி அரசாங்கத்தில் இருந்தபோது, அதன் மேலாண்மை டாடா சன்ஸ் நிறுவனத்திடமிருந்து முற்றிலும் திரும்பப் பெறப்பட்டது. அதன் பிறகும் கூட, 1993 வரை, ஏர் இந்தியாவின் தலைவராக, அதில் பல்வேறு பதவிகளை வகித்த அதிகாரிகளே நியமிக்கப்பட்டு வந்தனர் என்று விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் பின்னர் இந்தப் பதவிக்கு சிவில் விமானத் துறையின் சவால்கள் குறித்த புரிதல் உள்ளவர்கள் நியமிக்கப்பட்டனர். ஏர் இந்தியா பதவி பறிக்கப்பட்ட ஜே.ஆர்.டி டாடாவுக்கு இந்திரா காந்தி எழுதிய கடிதம் ஏர் இந்தியாவை வாங்குகிறது டாடா - நிபந்தனைகள் என்ன? வரலாறு என்ன? ஏர் இந்தியாவைக் கையகப்படுத்தியதையடுத்து, டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் வெளியிட்ட ஒர் அறிக்கையில் இதை ஒரு "வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்" குறிப்பிட்டுள்ளார். நாட்டின் மிக முக்கியமான விமான நிறுவனத்தின் உரிமை பெறுவது பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார். சந்திரசேகரன் தனது அறிக்கையில், "ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக்கூடிய ஒரு உலகத்தரம் வாய்ந்த விமான சேவையை இயக்குவது எங்கள் முயற்சியாக இருக்கும். மஹாராஜா சின்னம் மீண்டும் உரிமையாவது, இந்தியாவில் விமான சேவையில் முன்னோடியாக இருந்த ஜேஆர்டி டாடாவுக்குச் சிறந்த அஞ்சலியாக இருக்கும்" என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES சிவில் விமானப் போக்குவரத்தில் இரண்டாவது பெரிய நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் இணைந்து ஏர் விஸ்தாரா விமான சேவையையும் மலேஷியன் ஏர்லைன்ஸுடன் இணைந்து ஏர் ஏஷியா விமான சேவையையும் நடத்தும் டாடா சன்ஸிடம் இப்போது மூன்றாவதாக ஏர் இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது, இந்த கையகப்படுத்தலுக்குப் பிறகு, 'சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில்' டாடா சன்ஸ் 'இரண்டாவது பெரிய நிறுவனமாக மாறியுள்ளது. முதல் இடத்தில் இருக்கும் 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' உள்நாட்டுச் சந்தையில் 57 சதவிகித பங்கைக் கொண்டுள்ளது. ஏர் இந்தியாவை கையகப்படுத்திய பிறகு, டாடா சன்ஸ் 27 சதவீத சந்தைப் பங்கைப் பெறும். ஏர் இந்தியாவைக் கையகப்படுத்திய பிறகு, 'டாடா சன்ஸ்' முன் நிற்கும் சவால்களும் கடினமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர், ஏனெனில் அது ஏற்கனவே இந்தியாவில் மேலும் இரண்டு 'விமான நிறுவனங்களை' இயக்கி வருகிறது. பிபிசியிடம் பேசிய சிவில் ஏவியேஷன் விவகார நிபுணரும் மூத்த பத்திரிக்கையாளருமான அஷ்வினி ஃபட்னிஸ், "அவர்கள் இரண்டு விமான நிறுவனங்களுடன் சேர்த்து ஏர் இந்தியாவையும் எப்படி சிறப்பாக இயக்கப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏர் இந்தியாவின் சேவைகளை உலகத் தரத்திற்கு வழங்க முடியுமா என்பது அடுத்த சவால். இரண்டு விமான நிறுவனங்களில் டாடா சன்ஸ் மூலம் வழங்கப்படும் சேவைகள் மிகச் சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது." என்று கூறினார் பட மூலாதாரம்,GETTY IMAGES இழப்பு எவ்வாறு ஈடு செய்யப்படும்? மேலும் அஷ்வினி ஃபட்னிஸ், 'ஏர் இந்தியாவின் இழப்பு எப்படி ஈடு செய்யப்பட்டு லாபகரமான விமான நிறுவனமாக்கப்படவிருக்கிறது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்" என்று கூறுகிறார். அரசின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, 'ஏர் இந்தியா' ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூ .20 கோடி இழப்பைச் சந்தித்து வருகிறது என்றும் அரசு இதைத் தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுத்ததற்கு இதுவே காரணம் என்றும் அவர் கூறுகிறார். "இப்போது அரசின் சுமை குறைந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால், கிடைத்ததைக் கொண்டு டாடா சன்ஸ் என்ன செய்யப்போகிறது என்பதும் ஒரு சவாலாக முன் நிற்கிறது. பெரும் இழப்பைச் சந்தித்து வந்த ஒரு விமான நிறுவனத்தைத் தலைகீழாக எப்படி மாற்றப்போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். இதற்காக அவர்கள் மொத்த அமைப்பையுமே மாற்ற வேண்டியிருக்கும்" என்று அவர் கூறுகிறார். இருப்பினும், கையகப்படுத்தலின் போது டாடா குழுமத்திற்கு அரசாங்கம் விதித்த நிபந்தனைகளும் குறிப்பிடத்தக்கவை. நிபந்தனைகளை விளக்கிய இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் ராஜீவ் பன்சல், ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம், ஓராண்டிற்கு எந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்ய முடியாது என்றும் ஓராண்டுக்குப் பிறகும், பணி நீக்கம் செய்யாமல் ஊழியர்கள் தாமாக முன்வந்து பணி ஓய்வு பெற வழி வகை செய்ய வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார். இதனுடன், 'வருங்கால வைப்பு நிதி' மற்றும் 'கிராச்சுட்டி' ஆகியவையும் கொடுக்கப்பட வேண்டும் என்பவையும் நிபந்தனைகளாக விதிக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,MANJUNATH KIRAN/AFP VIA GETTY IMAGES தற்போது, 'ஏர் இந்தியா' மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது - ஒன்று 'ஏர் இந்தியா இன்டர்நேஷனல்' வெளிநாட்டுச் சேவை, மற்றொன்று 'ஏர் இந்தியா' உள்நாட்டுச் சேவை மற்றும் மூன்றாவது 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' வளைகுடா நாடுகளுக்கும் தென்னிந்திய மாநிலமான கேரளாவிற்கும் இடையேயான விமானச் சேவை. 'ஏர் இந்தியா'வில் 12,085 ஊழியர்கள் உள்ளனர், அவர்களில் சுமார் 4,000 பேர் ஒப்பந்தப் பணியாளர்களாகவும் 8084 பேர் நிரந்தரப் பணியாளர்களாகவும் உள்ளனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் 1434 நிரந்தர ஊழியர்கள் உள்ளனர். எனவே, ஊழியர்களின் நிர்வாகமும் 'டாடா சன்ஸ்' முன் ஒரு பெரிய சவாலாக இருக்கும். அஷ்வினி ஃபட்னிஸ் குறிப்பிடும் மற்றொரு சவால் விமானங்களின் மேலாண்மை. இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான காலத்தில், 'ஏர் இந்தியா'வில் 107 விமானங்கள் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக அவர் கூறுகிறார். ஏர்பஸ் மற்றும் போயிங்கின் நவீன விமானங்களான சிறிய மற்றும் பெரிய விமானங்கள் இதில் அடங்கும். நவீன 'ஜம்போ ஜெட்' 'ஏர் இந்தியா' -வில் இணைக்கப்பட்ட 1971-ல் நிர்வாகம் டாடாவின் கையில் தான் இருந்தது என்றும் ஃபட்னிஸ் கூறுகிறார். அனைத்து பெரிய 'விமான நிறுவனங்களும்' இப்போது விமானங்களை வாங்குவதற்கு பதிலாக குத்தகைக்கு எடுத்துக்கொள்கின்றன, ஏனெனில் வாங்குவதற்கு அதிக அளவு பணம் செலுத்த வேண்டும், அதேசமயம் விமானத்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்வதற்கு, கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும். உள்நாட்டு விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் போயிங் -737 விமானமாக இருந்தாலும், ஏர்பஸ் அல்லது ட்ரீம்லைனராக இருந்தாலும், அவற்றின் கட்டணமும் மாதத்திற்கு 3.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள். கிட்டத்தட்ட அனைத்து 'விமான நிறுவனங்களும்' இந்த முறையில் தான் இயங்குகின்றன என்று ஃபட்னிஸ் கூறுகிறார். அதாவது, வாடகைக்கு விமானத்தை எடுத்துக்கொண்டு அவற்றை இயக்குகிறார்கள். இந்தக் கையகப்படுத்தல் மூலம் டாடா குழுமத்திற்கு 1500 பயிற்சி பெற்ற விமானிகளும் 2000 பொறியாளர்களும் கிடைப்பது ஒரு நல்ல விஷயம். இதை விடப் பெரிய நல்ல விஷயம் என்னவென்றால், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் விமானங்களுக்கான 'ஸ்லாட்'கள் கிடைப்பதுதான். பட மூலாதாரம்,GETTY IMAGES 'ஸ்லாட்' என்பது என்ன? விமான நிலையங்களில் விமானங்களும் அதிகரித்து வருகின்றன; பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், 'விமான நிறுவனங்கள்' ஒவ்வொரு விமான நிலையத்திலும் தங்கள் விமானங்கள் சீராக இயங்குவதற்குத் தேவையான இடங்களைப் பெற வேண்டியது அவசியம். இதுவும் ஒரு வகையில் வாடகை இடம் தான். இதற்காக நிறைய பணமும் செலுத்த வேண்டும். தற்போது ஏர் இந்தியாவிற்கு 6200 உள்நாட்டுச் சேவை இடங்களும் 900 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் சேவை இடங்களும் உள்ளன. ஃபட்னிஸ் மற்றும் விமான வல்லுநர்கள் விமான நிறுவனங்களுக்கிடையில் இந்த 'ஸ்லாட்டுகளை' வாங்க ஒரு வர்த்தகப் போர்ச் சூழலே நிலவுகிறது என்று கூறுகிறார்கள். 'ஜெட் ஏர்வேஸ்' லண்டன் விமான நிலையத்தில் தனது இடங்களை 'எத்திஹாட் ஏர்வேஸ்'க்கு பல பில்லியன் டாலர்களுக்கு விற்ற உதாரணத்தை மேற்கோள் காட்டி ஃபஜ்னிஸ் இதைக் கூறினார். 'டாடா சன்ஸ்' நிறுவனம் 'ஏர் இந்தியா'வை வாங்க விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அதற்குச் சாதகமாகவே உள்ளன. மொத்தமாக ரூ.18,000 கோடி சுமை இருந்தாலும், இதில் ரூ.15,000 கோடி கடனாகவும் மற்றும் ரூ.2,700 கோடி சொத்தின் பேரிலும் செலுத்தப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' போன்ற ஒரு நிறுவனமும் அவர்களிடம் இருப்பதுதான் 'டாடா சன்ஸ்' இன் மிகப்பெரிய பலம் என்று பட்னிஸ் கூறுகிறார். அது அவர்களிடம் இருப்பது அவர்களுக்கு லாபத்தை அளிக்கும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/india-58891677
 9. அரசிடம் ஏலவே உள்ள பணம் என்னாச்சு? வரிகள் இதர வருமானங்களாக திரும்ப கஜானவிற்கு வரவில்லையா? இல்லை பணத்தை யாரோ அமுக்கிறாங்களா? அக்னி சொல்ற போல சிம்பாவே ஆக்காமல் ஓயமாட்டினம் போல!
 10. இந்திய ராணுவத் தளபதியின் இலங்கை பயணம்: சீனாவை ஓரங்கட்டும் முயற்சியா? ரஞ்ஜன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக, இலங்கையில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MINSITRY OF DEFNCE, INDIA படக்குறிப்பு, இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இலங்கை தொடர்பில் கடந்த சில காலமாக இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகின்ற நிலையில், சமீப காலமாக இந்தியாவில் ராஜதந்திர ரீதியிலான முக்கிய பிரமுகர்கள் தொடர்ச்சியாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக இந்த மாத ஆரம்பத்தில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா, இலங்கைக்கான அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது வருகையின் போது, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என பலரையும் சந்தித்திருந்தார். அவரது விஜயத்தின் பின்னர், சுமார் 3 முதல் 5 வருட காலமாக நடைபெறாதிருந்த மாகாண சபைத் தேர்தலை நடத்தும் அறிவிப்பை அரசாங்கம் விடுத்திருந்தது. இந்தியாவின் அழுத்தமே, மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கு காரணம் என எதிர்கட்சிகள் கூறிய போதிலும், அந்த கூற்றை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மறுத்திருந்தார். இவ்வாறான பின்னணியில், இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கைக்கான விஜயம் நிறைவு பெற்று, சுமார் ஒரு வாரங்கள் கூட கடப்பதற்கு முன்னர், இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இலங்கைக்கான அதிகாரபூர்வ 5 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் இந்திய ராணுவ தளபதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. இலங்கையின் உண்மை நண்பன் சீனாவா? இந்தியாவா?- ஓர் அலசல் இலங்கை அரசு விழாவில் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி - என்ன நடந்தது? இந்திய ராணுவ தளபதி, இலங்கை ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர், ராணுவ தளபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதாக ராணுவ ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. அத்துடன், இலங்கை - இந்திய கூட்டுப் பயிற்சியான மித்ர சக்தி பயிற்சிகளின் இறுதி கட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட மூலாதாரம்,SRILANKAN ARMY படக்குறிப்பு, இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா (வலது) உடன் இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே மேலும், ராணுவம் சார்ந்த சில முக்கிய நிகழ்வுகளிலும் அவர் கலந்துக்கொள்ளவுள்ளார். அதேபோன்று, இலங்கையில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய ராணுவ தளபதி, அங்கு அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீன பாதுகாப்பு அமைச்சரின் பயணத்தின் பின் இந்திய ராணுவ தளபதியின் பயணம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடான இந்தியாவின் ராணுவத் தளபதி, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஜயமாக கருதப்படுகின்றது. இந்திய ராணுவ தளபதிகள் இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்;. இந்திய முன்னாள் ராணுவ தளபதியான ஜெனரல் பிபின் ராவத், 2018ம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்திய பாதுகாப்பு தரப்பு மாத்திரமன்றி, பல நாடுகளின் பாதுகாப்பு சார்ந்த முக்கியஸ்தர்கள் இலங்கைக்கான விஜயத்தை அண்மை காலமாக மேற்கொண்டிருந்தனர். "சீனாவே உண்மையான நண்பன்" இலங்கை பிரதமர் ராஜபக்ஷ சீனாவை எதிர்கொள்ள இந்திய விமானப்படையிடம் போதிய பலம் உள்ளதா? இலங்கையில் கோவிட் நிலைமை தீவிரமாக காணப்பட்ட தருணத்தில், சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி சீன பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான தூதுக்குழு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தது. சீன பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழு, ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு தரப்பின் பிரதானிகள் உள்ளிட்டோரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது. இந்த நிலையில், சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்திற்கு பின்னர், உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் இலங்கைக்கு வருகின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். சீன திட்டங்கள் இலங்கையில் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்திய இராணுவ தளபதியின் விஜயம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. 'ஏனைய நாடுகளிடமிருந்து போட்டி' புவிசார் அரசியல் விவகாரத்தில் இந்திய - இலங்கை நாடுகளுக்கு இடையிலான உறவுகளை, ஏனைய நாடுகளிலிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு இந்தியா தற்போது முயற்சித்து வருவதாக சௌதி அரேபியாவிற்காக முன்னாள் தூதுவரும், முன்னாள் ராஜதந்திர அதிகாரியுமான அஹமட் ஜாவீட் யூசுப் பிபிசி தமிழிடம் தெரிவிக்கின்றார். இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான நட்புக்கு, ஏனைய நாடுகளிடமிருந்து போட்டி காணப்படுவதாகவும், அதனை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கிலேயே இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார். அரசியல் ரீதியில் உறவுகளை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கு அப்பால் ராணுவ ரீதியில் ஏன் உறவுகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பிபிசி தமிழ், அவரிடம் கேள்வி எழுப்பியது. பட மூலாதாரம்,JAVID YUSUF படக்குறிப்பு, அஹமட் ஜாவீட் யூசுப் நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் திட்டத்தில் அரசியல் ரீதியான உறவுகளே வலுப்படுத்தப்படும் என்ற போதிலும், இலங்கையுடனான உறவை மேம்படுத்துவதில் ராணுவ ரீதியிலான உறவுகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். இலங்கையில் கோவிட் ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அவர் கூறுகின்றார். இலங்கையில் ராணுவத்தின் ஆதிக்கத்தை கருத்திற் கொண்டு, இந்திய இராணுவ ரீதியிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு இந்தியா முயற்சித்து வருவதை அவதானிக்க முடிகின்றது என அவர் குறிப்பிட்டார். ராணுவ ரீதியிலான உறவுகள் மேம்படுத்தப்படும் பட்சத்தில், அது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதாகவே அமைகின்றது எனவும் அவர் தெரிவித்தார். கசப்பான உறவை சீர் செய்யும் முயற்சியா? பின்னடைவை சந்தித்திருந்த இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தெரிவிக்கின்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் கடந்த வாரம் நாட்டிற்கு வருகைத் தந்திருந்ததாகவும், தற்போது ராணுவ தளபதி நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அதேபோன்று, இலங்கையில், இரு நாட்டு ராணுவத்தினரின் பங்குப்பற்றுதலுடன் பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிடுகின்றார். இந்தியாவுடன் காணப்பட்ட கசப்பான உறவை சீர் செய்யும் வகையிலேயே இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இந்தியாவுடனான உறவை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொடவின் முயற்சியினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,V.THANABALASINGHAM'S TWITTER HANDLE படக்குறிப்பு, வீரகத்தி தனபாலசிங்கம் சீனாவிற்கு நிகரான மூலோபய நலன்களை இலங்கையுடன் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிற்கு உள்ளதாகவும் அவர் கூறுகின்றார். எனினும், சீனாவுடனான இலங்கையின் உறவை போல, இலங்கை இந்தியாவுடன் உறவை பேணாத போதிலும், இந்தியாவுடன் அண்மித்த உறவை பேண வேண்டும் என்ற உணர்வை இலங்கை ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். ராஜதந்திர உறவுகளின் போது, இந்திய இராணுவத்தின் பிரவேசம் குறித்தும், மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். மூலோபய நலன்கள் என்ற விடயத்திற்குள், பொருளாதாரம், இராணுவம், புலனாய்வு, கடல்சார் பாதுகாப்பு விடயங்கள், அரசியல் என அனைத்தும் உள்ளடங்கும் என அவர் விளக்கமளித்தார். அனைத்து துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை துரிதகரியில் வலுப்படுத்துவதே, இவ்வாறான விஜயங்களின் நோக்கமாக காணப்படுகின்றது என மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தெரிவிக்கின்றார். இலங்கை - இந்திய ராணுவ தொடர்பு இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையில் பல ஆண்டு கால ராணுவ தொடர்புகள் காணப்பட்டு வருகின்ற நிலையில், உள்நாட்டு போர் காலத்திலும் இந்தியா ராணுவத்தின் பங்களிப்பு இலங்கைக்கு இருந்து வந்தது. இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் 1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படை நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த ராணுவ அமைதிப்படை இலங்கையில் தனது பணிகளை 1987ம் ஆண்டு ஆரம்பித்திருந்தது. இவ்வாறு இலங்கைக்குள் பிரவேசித்த இந்திய அமைதிபடை 1990ம் ஆண்டு காலப் பகுதியில் நாட்டை விட்டு வெளியேறியது. இவ்வாறான நிலையில், இந்திய ராணுவத்திற்கும், இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காலம் காலமாக இருந்து வருகின்றது. https://www.bbc.com/tamil/sri-lanka-58894792
 11. இவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்றால் எதற்காக பணத்தை அச்சிடுகிறார்கள்?! அச்சிட்டு புழங்க விடுவதால் வரும் தீமையை விட நன்மை அதிகமா?
 12. வடகொரியாவின் கிம் ஜோங் உன்: 'அமெரிக்காவின் அச்சுறுத்தலை முறியடிக்க வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்குவோம்' 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போவதாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம் என்றும் அந்நாட்டு அவர் தெரிவித்துள்ளார். தற்காப்புக்காக மட்டுமே ஆயுதங்களைப் பெருக்குவதாகவும் போரைத் தொடங்குவது வடகொரியாவின் நோக்கம் அல்ல எனவும் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். திங்கள்கிழமையன்று ஏவுகணைகள் உள்ளிட்டவை அடங்கிய பாதுகாப்பு கண்காட்சியைத் தொடங்கிவைத்து கிம் உரையாற்றினார். கடந்த சில வாரங்களாக வட கொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்திய நிலையில், கிம் ஜோங் உன் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். தென் கொரியாவுடன் ஹாட்லைன் தொடர்பை மீண்டும் தொடங்க விரும்பும் கிம் ஜோங் உன் கிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” - யார் இவர்? முன்னதாக நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணை ஒன்றை தென் கொரியா பரிசோதனை செய்தது. எனினும் அண்டை நாட்டுடன் சண்டையிட தாங்கள் விரும்பவில்லை என்று கிம் ஜோங் உன் தனது உரையில் குறிப்பிட்டார். "நாங்கள் யாருடன் போர் புரிவதைப் பற்றிப் பேசுவதில்லை. மாறாக தற்காப்புக்காகவும், இறையாண்மையைக் பாதுகாப்பதற்காகவும்தான் போரிடும் திறன்களை அதிகரித்து வருகிறோம்" என்று கிம் கூறினார். வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அமெரிக்கா விரோத மனப்பாங்குடன் செயல்படவில்லை என்பதை வட கொரியா நம்புவதற்கு நடத்தை ரீதியிலான எந்த அடிப்படையும் இல்லை என்றும் கிம் ஜோங் உன் தனது உரையில் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,REUTERS அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்ற பிறகு, வடகொரியாவைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவரது நிர்வாகம் அழைத்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக அணுஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என்ற முன் நிபந்தனையை விதிக்கிறது. இதை வடகொரியா ஏற்கவில்லை. "பாலிஸ்டிக் மிஸைல்" எனப்படும் பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்றபடி பயணிக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை வடகொரியா பயன்படுத்தவும் பரிசோதனை செய்யவும் ஐக்கிய நாடுகள் அவை தடை விதித்திருக்கிறது. ஆனால் அந்தத் தடைகளை வடகொரியா தொடர்ந்து மீறி வருகிறது. அதனால் அடுத்தடுத்து பல சுற்றுப் பொருளாதாரத் தடைகள் அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருக்கின்றன. தங்களது தற்காப்புக்காகவே ஆயுத வலிமையைப் பெருக்கி வருவதாக வடகொரியா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் நாட்டை வறுமையில் தள்ளுவதற்கும் இது காரணமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். கொரோனா முன்னெச்சரிக்கையாக நாட்டின் எல்லைகள் முற்றிலுமாக மூடப்பட்ட பிறகு அந்த நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதாக கருதப்படுகிறது. முக்கிய நட்பு நாடான சீனாவில் இருந்து உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வருவதற்கான வழிகளும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. https://www.bbc.com/tamil/global-58880258
 13. திமுக பிரமுகர் தூண்டுதலில் ஆணவப் படுகொலையா? கும்பகோணம் இளைஞர் மரணத்தில் என்ன நடந்தது? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கும்பகோணத்தில் காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால், அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். `என் தம்பியின் காதலால் பிரச்னை வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், கொலை வரையில் செல்லும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை' என கலங்குகிறார், கொலையான பிரபாகரனின் சகோதரி பிரியங்கா. என்ன நடந்தது? கும்பகோணத்தை அடுத்துள்ள பந்தநல்லூரில் உள்ள வேட்டமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். 24 வயதான இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரது தாயார், உடல்நலக் குறைவால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது தந்தை இளங்கோவும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து, மூத்த சகோதரி பிரியங்கா, தம்பி விக்னேஷ், தங்கை பிரபாவதி எனக் குடும்பத்தை கவனிக்க வேண்டிய இடத்தில் பிரபாகரன் இருந்துள்ளார். மேலும், குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக ஜவுளிக்கடை ஒன்றில் பிரியங்கா வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், பந்தநல்லூர் காமாட்சிபுரம், மேல்மரத்துறையை சேர்ந்த `வெல்டர்' மணிகண்டன் என்பவரின் மகளை, பிரபாகரன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பெண், பந்தநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பிரபாகரன் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், தொடக்கத்தில் இருந்தே இந்தக் காதலுக்கு மாணவியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 9ஆம் தேதி இரவு 7 மணியளவில் பிரபாகரனை, கத்தியால் குத்தி மணிகண்டன் கொன்று விட்டதாக பந்தநல்லூர் காவல்நிலையத்தில் பிரியங்கா புகார் கொடுத்துள்ளார். தலித் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் - அதிர்ச்சி ஆய்வு முடிவெட்ட சென்றதற்காக அடித்த ஆதிக்க சாதியினர்: தற்கொலைக்கு முயன்ற தலித் இளைஞர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கொன்று விட்டதால், `இது சாதி ஆணவப் படுகொலை' எனக் கூறி தலித் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. ''இந்தப் படுகொலையின் பின்னணியில் திருப்பனந்தாள் ஒன்றியத்தில் கவுன்சிலராக இருக்கும் தி.மு.க பிரமுகர் சீத்தாபதி என்பவர் இருக்கிறார். அவர் சொல்லித்தான் இந்தக் கொலை நடந்துள்ளது. அவரைக் கைது செய்யும் வரையில் சடலத்தை வாங்க மாட்டோம்'' எனக் கூறி வி.சி.க, சி.பி.ஐ, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது வரையில் சீத்தாபதி கைது செய்யப்படாததால், சடலத்தை வாங்குவதற்கு பிரபாகரனின் உறவினர்களும் சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கார்த்தி, `வெல்டர்' மணிகண்டன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். பிரபாகரன் மரணத்தில் என்ன நடந்தது? படக்குறிப்பு, கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி பந்தநல்லூர் காவல்நிலையத்தில் சம்பவம் நடந்த 9ஆம் தேதியன்று பிரபாகரனின் சகோதரி பிரியங்கா அளித்த புகாரின் அடிப்படையில், மணிகண்டன், கார்த்தி ஆகியோர் மீது 342, 302, 109, எஸ்.சி, எஸ்.டி சட்டம் 2015 என நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் உள்ள தகவல்கள் பின்வருமாறு: ` எனது தம்பி டிரைவர் வேலை பார்த்து சம்பாதித்து வந்தான். என் தம்பியை மூன்று மாதங்களுக்கு முன்பு காமாட்சிபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் காதலித்து வந்தார். அவர், `என் தம்பியோடுதான் வாழ்வேன்' எனக் கூறி வீட்டுக்கே வந்துவிட்டார். அந்தப் பெண் வேற்று சமூகத்தைச் சேர்ந்தவர். இதன்பிறகு எனது வீட்டுக்கு வந்த அந்தப் பெண்ணின் தந்தை மணிகண்டன், `என் மகளோடு பேசுவதை நிறுத்தாவிட்டால் உன் சாவு என் கையில்தான்' எனக் கூறி என் தம்பியை மிரட்டிவிட்டு மகளை கூட்டிச் சென்றுவிட்டார். இதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார். ` கடந்த 10 நாள்களுக்கு முன்பு என்னுடைய மாமா ராமகிருஷ்ணனிடம், `என் மகளிடம் பழகுவதை நிறுத்தாவிட்டால் பிரபாகரனை கொலை செய்யுமாறு காவனூரை சேர்ந்த சீத்தாபதி சொல்லியிருக்கிறார். பிரபாகரனை நிறுத்திக் கொள்ளச் சொல்லுங்கள்' எனக் கூறியுள்ளார். கடந்த 9 ஆம் தேதி இரவு 7 மணியளவில் காமாட்சிபுரம் கோணுளாம்பள்ளம் ரோட்டில் வைத்து எனது தம்பி தலையில் பீர் பாட்டிலால் மணிகண்டன் அடித்துள்ளார். பின்னர், கார்த்திக் என்பவர் பிரபாகரனின் இரண்டு கைகளையும் பின்பக்கமாக இறுக்கிப் பிடித்துக் கொள்ள, மறைத்து வைத்திருந்த கத்தியால் இரண்டு முறை மணிகண்டன் குத்தினார். இதன்பின்னர் இரண்டு பேரும் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். எனது தம்பி பிரபாகரனை சென்று பார்த்தபோது இடதுபக்க நெஞ்சில் ரத்த காயத்துடன் இருந்தார். கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்துவிட்டதாக அரசு மருத்துவர் தெரிவித்தார்' என முதல் தகவல் அறிக்கையில் பிரியங்கா குறிப்பிட்டுள்ளார். படக்குறிப்பு, கைது செய்யப்பட்டுள்ள `வெல்டர்' மணிகண்டன் தூண்டிவிட்டாரா தி.மு.க பிரமுகர்? இதுகுறித்து பிரியங்காவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` என் தம்பியும் அந்தப் பெண்ணும் ஆறு மாதங்களாக காதலித்து வந்தனர். இரண்டு முறை எங்களின் வீட்டுக்கே அந்தப் பெண் வந்துவிட்டார். அவரிடம் என் தம்பி, `உனக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை. அது பூர்த்தியானதும் திருமணம் செய்து கொள்கிறேன்' எனக் கூறி அவரது வீட்டுக்கு கொண்டு போய்விட்டார். அதன்பிறகும் அந்தப் பெண் தொடர்ந்து அவரது தோழியின் செல்போன் மூலம் பிரபாகரனிடம் பேசி வந்தார். இதனை அந்தப் பெண்ணின் அப்பா கண்டிக்காமல், என் தம்பியை மிரட்டினார். இதனால் பிரச்னை வரலாம் என எதிர்பார்த்தோம். ஆனால், கொலை வரையில் செல்லும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்கிறார். தொடர்ந்து பேசிய பிரபாகரனின் உறவினர் குமார், `` இந்தச் சம்பவத்தில் கைதான கார்த்தி என்பவர், கடந்த ஒரு வாரமாக பிரபாகரனுக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்களாகவும் இருந்துள்ளனர். கடந்த 9 ஆம் தேதி மாலை நேரம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பிக் கூட்டிப் போய் மது வாங்கிக் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த மணிகண்டன், பிரபாகரனை கத்தியால் குத்திவிட்டார். அந்தப் பெண்ணின் அப்பாவுக்கு கொலை செய்யும் அளவுக்கு துணிச்சல் இல்லை. அவரை தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் சீத்தாபதிதான் தூண்டிவிட்டுள்ளார். அவரை போலீஸார் இன்னும் கைது செய்யவில்லை" என்கிறார். காவல் ஆய்வாளரின் பதில் என்ன? ``தூண்டுதலின் அடிப்படையில்தான் கொலை நடந்ததா?" என பந்தநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் ஓம் பிரகாஷிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ள தகவலின்படிதான் சம்பவம் நடந்துள்ளது. அதேநேரம், தூண்டுதலின் அடிப்படையில் இந்தக் கொலை நடக்கவில்லை. பெண்ணின் தந்தையும் மற்றொருவரும்தான் இதனைச் செய்துள்ளனர்" என்கிறார். மேலும், `` இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளோம். இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசுத் தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் சென்று சேர உள்ளது. அவர்கள், பிரபாகரனின் உடலை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் தி.மு.க பிரமுகர் சீத்தாபதியின் தொடர்பு குறித்து முதல்கட்ட விசாரணையில் வெளிவரவில்லை" என்கிறார். இதையடுத்து, தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் சீத்தாபதியை தொடர்பு கொள்ள முயன்றும் பேச முடியாததால், தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கல்யாண சுந்தரத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இருவரும் அண்ணன், தங்கை போல பழகிவிட்டு காதலிப்பது தெரியவந்ததால் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கொலை கொலைதான். அந்த நபர் காதலித்தார் என்பதற்காக கொலை செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நபர், தி.மு.கவினருடன் நட்பில் இருந்துள்ளார். அதனால், இந்த விவகாரத்தோடு இணைத்துப் பேசுகின்றனர். இதற்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. குறிப்பாக, சீத்தாபதிக்கும் இதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை" என்கிறார். பின்னணியில் நடப்பது என்ன? `` இப்படியொரு படுகொலைக்கு, சம்பந்தப்பட்ட கிராமத்தின் சூழல்களும் ஒரு காரணமாக அமைந்துள்ளன. அந்தக் கிராமத்தில் நில உடைமையாளர்களாக உள்ளவர்கள், விவசாயத்தோடு சேர்ந்து வேறு பெரிய தொழில்களையும் செய்து வருகின்றனர். இவர்களின் ஆதிக்கத்தில்தான் அந்தக் கிராமம் உள்ளது. இவர்கள் சார்ந்த சாதியை சுற்றி ஒரு குழு உருவாகியுள்ளது. அவர்களின் சொந்த சாதி ஆதிக்கத்தைப் பாதுகாப்பதற்காக மற்ற சமூகங்களின் விவகாரங்களில் தலையிடுகின்றனர். இது முற்றிலும் தனிப்பட்ட விவகாரமாக இருந்தாலும் சாதியின் பெயரில் கொடூரமான செயல்களை செய்கின்றனர்" என்கிறார், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே. சாமுவேல் ராஜ். பட மூலாதாரம்,SAMUEL RAAJ FACEBOOK படக்குறிப்பு, சாமுவேல் ராஜ் தொடர்ந்து பேசுகையில், `` பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள ஒரு பெண்ணை, தலித் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டால் அடுத்ததாக நமது வீட்டுக்குள்ளும் அவர்கள் வந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தை சிலர் பரப்புகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகம் உள்ள கிராமங்களைவிடவும் பல சாதிகள் உள்ள கிராமங்களில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கத்தைப் பாதுகாப்பது இவர்களுக்கு அவசியமானதாக உள்ளது. இதன் காரணமாக, கொலை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு பெற்றோர் தூண்டப்படுகின்றனர். பல சாதி ஆணவப் படுகொலைகளில் பெற்றோர் கையறு நிலையில் இருப்பது வழக்கமாக உள்ளது. மற்றவர்கள்தான் படுகொலை சம்பவங்களை அரங்கேற்றுகின்றனர்" என்கிறார். வாக்குறுதியை தி.மு.க நிறைவேற்றுமா? `` சட்டமன்றத் தேர்தலின்போது, `சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்றப்படும்' என தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதனை சில அரசியல் கட்சிகள் அலட்சியப்படுத்துகின்றன. `ஏற்கெனவே வலுவான சட்டங்கள் இருக்கும்போது எதற்காக தனிச்சட்டம்?' என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர். கும்பகோணம் சம்பவத்தில் மகளின் பெற்றோரே கொலைகாரர்களாக உள்ளனர். கண்ணகி-முருகேசன் போல ஒரு சில வழக்குகளில்தால் தண்டனை பெற முடிகிறது. அமைப்புகள் தலையிடும் பிரச்னைகளில் மட்டுமே தீர்வு கிடைக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை ஒடுக்க வேண்டும் என்றால், தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்" என்கிறார் சாமுவேல் ராஜ். https://www.bbc.com/tamil/india-58887305
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.