Jump to content

ஏராளன்

புதிய உறுப்பினர்கள்
 • Posts

  6837
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by ஏராளன்

 1. மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனப்படுத்தும் சட்டமூலத்தை விரைவாக சமர்ப்பிக்கவும் - சஜித் By T. SARANYA 19 NOV, 2022 | 12:58 PM (இராஜதுரை ஹஷான்) மத்திய வங்கியை கொள்ளையடித்தவர்கள் மீண்டும் தமது ஆதரவாளர்களை மத்திய வங்கியில் அமர்த்தி மிகுதியாக இருப்பதையும் கொள்ளையடிக்க முயற்சிக்கிறார்கள். மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனப்படுத்தும் வகையிலான சட்டமூலத்தை விரைவாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார். மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தும் சட்டமூலத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. சட்டமாதிபர் திணைக்களத்தின் ஆலோனை கோரப்பட்டுள்ளன. வெகுவிரைவில் சட்ட மூலம் சபைக்கு சமர்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க எதிர்க்கட்சி தலைவருக்கு பதிலளித்தார். சபாநாயகர் தலைமையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொரின் போது எதிர்க்கட்சிதலைவர் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது, மத்திய வங்கியை கொள்ளையடித்தவர்கள் மீண்டும் தமது ஆதரவாளர்களை மத்திய வங்கியில் அமர்த்தி மிகுதியாக இருப்பதையும் கொள்ளையடிக்க முயற்சிக்கிறார்கள். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. கடந்த காலங்களில் மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் தற்போதைய பிரதமர் அப்போது சபையில் ஆற்றிய உரையை அவர் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதை அவரிடம் வலியுறுத்துகிறேன். விமர்சனங்களுடன் ஒன்றிணைய வேண்டிய நிலை அவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சிக்கு புன்னியம் கிடைக்கும் வகையில் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளவர் மத்திய வங்கியின் செயற்பாடுகளை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தும் வகையிலான சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு விரைவாக கொண்டு வாருங்கள். அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியதை போன்று அந்த சட்டமூலத்திற்கும் ஆதரவு வழங்குவோம் என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தும் வகையிலான சட்டமூலத்தை தயாரிப்பதற்கான ஆலோசனை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளது. ஆகவே வெகுவிரைவில் அந்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/140523
 2. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா தவிர்க்க 1950இல் எடுத்த முடிவுதான் காரணமா? என்ன முடிவு அது? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரதீப் குமார் பதவி,பிபிசி செய்தியாளர் 19 நவம்பர் 2022, 13:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகக் கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20ஆம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. உலகம் முழுவதும் கால்பந்து விளையாடி வரும் 32 சிறந்த அணிகளுக்கு இடையிலான பரபரப்பான பந்தயங்களுக்குப் பிறகு கால்பந்து உலகின் மன்னர் யார் என்பது முடிவாகும். நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும் இந்த உலகக் கோப்பை போட்டிகளை சுமார் 500 கோடி மக்கள் பார்ப்பார்கள் என்று உலகெங்கிலும் கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் அமைப்பான ஃபிஃபா கூறுகிறது. 2018 உலகக் கோப்பையின் 400 கோடி பார்வையாளர்களை ஒப்பிடும்போது இந்தமுறை மேலும் 100 கோடி பேர் இந்தப்போட்டிகளை கண்டு மகிழ்வார்கள். கத்தாரில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியாகும். ஆனால் இந்திய விளையாட்டுப் பிரியர்களுக்கு இதில்எந்த உற்சாகமும் இல்லை. ஏனென்றால் இதுவரை இந்தியாவால் ஒரு முறை கூட இந்த போட்டியில் பங்கேற்க முடியவில்லை. ஆனால் ஒரு காலத்தில் இந்தியா இந்தப்போட்டியில் பங்கேற்க வாய்ப்பு பெற்றது என்பதை இன்றைய தலைமுறையைச் சேர்ந்த ஒருசில விளையாட்டு ஆர்வலர்கள் மட்டுமே அறிவார்கள். இது நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். ஆனால் 72 ஆண்டுகளுக்கு முன்பு 1950-ல் பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய கால்பந்து அணி பங்கேற்க இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1942 மற்றும் 1946இல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவில்லை. 12 வருட காத்திருப்புக்குப் பிறகு 1950ல் உலகக் கோப்பை போட்டி நடைபெற இருந்தது. பிரேசிலில் நடைபெறவிருந்த உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் விளையாட 33 நாடுகள் மட்டுமே சம்மதம் தெரிவித்திருந்தன. இந்தியா, பர்மா (மியான்மர்) மற்றும் பிலிப்பைன்ஸுடன் 10-வது தகுதிச் சுற்றில் இடம் பெற்றது. ஆனால் பர்மா மற்றும் பிலிப்பைன்ஸ் அணிகள் தகுதிச் சுற்றில் இருந்து தங்கள் பெயர்களை வாபஸ் பெற்றன. அதாவது இந்தியா விளையாடாமலேயே உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றிருந்தது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்த முதன்முறையாக இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்தது. 1950 உலகக் கோப்பையில் இந்தியா 1950 உலகக் கோப்பை கால்பந்தின் இறுதிச் சுற்று டிரா தயாரிக்கப்பட்டபோது இந்தியா, ஸ்வீடன், இத்தாலி மற்றும் பராகுவேயுடன் பிரிவு 3 இல் இடம் பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா பங்கேற்றிருந்தால், அது எப்படி விளையாடியிருக்கும்? இதுகுறித்து மறைந்த கால்பந்து பத்திரிகையாளர் நோவி கபாடியா, உலக கோப்பை கால்பந்து வழிகாட்டி புத்தகத்தில் எழுதியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES "அப்போது பராகுவே அணி அதிக வலுவாக இருக்கவில்லை. ஒழுங்கீனம் காரணமாக, இத்தாலி தனது எட்டு முக்கிய வீரர்களை அணியில் சேர்க்கவில்லை. அணி மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், பயிற்சியாளர் விட்டோரியோ போஸோ பிரேசிலை அடைந்த பிறகு ராஜினாமா செய்தார். ஸ்வீடன் அணி இந்தியாவை ஒப்பிடும்போது மிகவும் நல்ல நிலையில் இருந்தது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்தியா குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கலாம். ஆனால் அணிக்கு சிறந்த அனுபவம் கிடைத்திருக்கும்,”என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 1950ல் இந்திய கால்பந்தின் நிலை என்ன? 1950களில் இந்திய கால்பந்து அணி சர்வதேச அளவில் அவ்வளவாக விளையாடியதில்லை. ஆனால் நல்ல விளையாட்டை விளையாடும் அணி என்ற நற்பெயரை அது கொண்டிருந்தது. 1948 லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய அணியின் விளையாட்டு இதை நிரூபித்தது. பிரான்ஸ் போன்ற வலுவான அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் மட்டுமே இந்தியா தோல்வியடைந்தது. அந்த காலகட்டத்தில், ஃபார்வேர்ட் மற்றும் டிரிப்லர் விளையாட்டின் மூலம் இந்திய கால்பந்து அணி, தனது அடையாளத்தை உருவாக்க முயற்சித்தது. உலக கோப்பை கால்பந்து - போட்டிகளும் நேரலை முடிவுகளும்18 நவம்பர் 2022 FIFA கால்பந்து உலக கோப்பை கத்தார் 2022: போட்டிகள், மைதானங்கள் - முழு விவரம்19 நவம்பர் 2022 கால்பந்து உலகக் கோப்பை: புலம்பெயர் தொழிலாளர்களின் மரணங்களை குறைத்துக் காட்டுகிறதா கத்தார்?17 நவம்பர் 2022 அகமது கான், எஸ்.ரமன், எம்.ஏ.சத்தார், எஸ்.மேவாலால் போன்ற வீரர்களுக்கு பல ரசிகர்கள் இருந்தனர். லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் அனைவரும் வெறுங்காலுடன் கால்பந்து மைதானத்தில் களமிறங்கினர். எனினும் Right Back இல் விளையாடிய தாஜ் முகமது பூட்ஸ் அணிந்து விளையாடினார். பிரேசில் உலகக் கோப்பையில் இந்திய அணி ஏன் பங்கேற்கவில்லை 1950 உலகக் கோப்பையில் இந்திய கால்பந்து அணி ஏன் பங்கேற்கவில்லை என்பதற்கு தெளிவான பதில் இல்லை. அணியின் தேர்வு தொடர்பான கருத்து வேறுபாடுகள் மற்றும் பயிற்சிக்கு போதுமான நேரம் இல்லாததால் அணி தனது பெயரை விலக்கிக்கொண்டது என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) அளித்த அதிகாரப்பூர்வ காரணம் தெரிவிக்கிறது. ஆனால் பல ஆண்டுகள் இது பற்றி விவாதங்கள் நடந்தன. இந்திய வீரர்கள் வெறுங்காலுடன் கால்பந்து விளையாட விரும்பினர் என்றும் ஃபிஃபா அதை ஏற்கவில்லை என்றும் அதிகம் பேசப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய கால்பந்து அணியின் இரண்டு வீரர்கள் எஸ் மேவாலால் மற்றும் எஸ் நந்தி வெறுங்காலுடன் பயிற்சி செய்கின்றனர். மூத்த விளையாட்டுப் பத்திரிக்கையாளர் ஜெய்தீப் பாசுவின் சமீபத்திய புத்தகமும் இந்தக் காரணத்தை மிகவும் நம்பகமானதாகக் கருதவில்லை. ஜெய்தீப் பாசு தொகுத்துள்ள 'பாக்ஸ் டு பாக்ஸ்: 75 இயர்ஸ் ஆஃப் தி இந்தியன் ஃபுட்பால் டீம்' என்ற புத்தகத்தில், "இந்திய வீரர்கள் வெறுங்காலுடன் விளையாடுவதை ஃபிஃபா ஆட்சேபித்த கேள்விக்கே இடமில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "அந்த அணியில் இருந்த ஏழு-எட்டு வீரர்கள் தங்கள் பயணப் பைகளில் ஸ்பைக் பூட்ஸை வைத்திருந்தனர். வெறுங்காலுடன் விளையாடுவது வீரர்களின் சொந்த விருப்பம்,"என்று லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஏழு-எட்டு வீரர்களை மேற்கோள் காட்டி ஜெய்தீப் பாசு எழுதியுள்ளார். கால்பந்து வீரர்கள் தங்கள் காலில் தடிமனான துணிப்பட்டையை கட்டிக்கொண்டு விளையாட விரும்பிய காலம் அது. இந்தப்போக்கு 1954 வரை உலகின் பல நாடுகளிலும் இருந்தது. பணப் பற்றாக்குறை காரணமா? இந்திய அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்காததற்கு பொருளாதாரமும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. ஆனால் இந்தக் கூற்றிலும் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. பிரேசில் செல்வதற்கான செலவுகளில் சிக்கல் இருந்தது, ஆனால் அது தீர்க்கப்பட்டது என்று ஜெய்தீப் பாசு தனது புத்தகத்தில் கூறியுள்ளார். இந்தியாவின் மூன்று மாநில அளவிலான கால்பந்து சங்கங்கள் செலவில் பங்களிக்க உறுதியளித்ததாக அவர் எழுதியுள்ளார். இது மட்டுமின்றி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிரேசில், இந்திய கால்பந்து சங்கத்தை அணுகி, அணியின் பெரும்பாலான செலவுகளை ஏற்றுக்கொள்ள உறுதியளித்ததாக நோவி கபாடியா தனது புத்தகத்தில் கூறியுள்ளார். ”பிரேசிலின் இந்த நம்பிக்கைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், துருக்கி மற்றும் செக்கோஸ்லோவாக்கியா அணிகளும் கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து தங்கள் பெயர்களைத் திரும்பப் பெற்றன. இரண்டாவதாக, மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் நாட்டைச்சேர்ந்த அணி, தனது நாட்டில் கால்பந்து விளையாடவேண்டும் என்று பிரேசில் விரும்பியது,” என்று நோவி கபாடியாவின் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. 1950 ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி இந்தியா உலகக் கோப்பைக்கு செல்லும் அணியை அறிவித்தது என்று ஜெய்தீப் பாசுவின் புத்தகம் கூறுகிறது. இந்தியாவின் முன்மொழியப்பட்ட அட்டவணையின்படி, இந்திய அணி ஜூன் 15 அன்று பிரேசிலுக்குப் புறப்பட்டிருக்க வேண்டும். மேலும் இந்தியா தனது முதல் பந்தயத்தை ஜூன் 25 அன்று பராகுவேவுக்கு எதிராக விளையாட இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது இந்திய கால்பந்து உலகின் மிகப்பெரிய மர்மம் என்று ஜெய்தீப் பாசு கூறுகிறார். இதற்கு எந்த தெளிவான பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. கத்தாரின் முயற்சிக்கு பிறகும் இந்தியா திரும்பும் தொழிலாளர்களால் புதிய சவால்2 செப்டெம்பர் 2020 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை கத்தார் நடத்துவதற்கு எதிர்ப்பு ஏன்?29 அக்டோபர் 2022 இந்தியா-பாகிஸ்தான்: கிரிக்கெட்டை காயப்படுத்தும் போர்களும் அரசியலும்22 அக்டோபர் 2022 இருப்பினும் அந்தக்காலகட்டத்தின் இந்திய கால்பந்து வீரர்களோ அல்லது கால்பந்து அதிகாரிகளோ இந்த வாய்ப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை என்பது நோவி கபாடியா மற்றும் ஜெய்தீப் பாசுவின் புத்தகங்களிலிருந்து தெளிவாகிறது. அந்த நேரத்தில் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளின் சாம்பியன் அணியாக மாறியது. மேலும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் புகழின் இறுதி அளவுகோல் ஒலிம்பிக் போட்டியாக இருந்தது. அத்தகைய சூழ்நிலையில் இந்திய கால்பந்து அணியில் விளையாடிய வீரர்கள் மற்றும் விளையாட்டை நடத்தும் அமைப்புகள் ஆகிய இருதரப்புமே, ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடுவதில் அதிக கவனம் செலுத்தின. இது தவிர 1951ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் டெல்லியில் நடைபெறவிருந்தது. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கமாக இருந்தது. 1950 வரை உலகக் கோப்பை கால்பந்தாட்டம் அவ்வலவு பிரபலமாக இருக்கவில்லை. உலக அளவில் அதன் பிரபலம் பின்னர்தான் அதிகரிக்கத்தொடங்கியது என்பதை இங்கு கவனிக்க வேண்டும். அப்போதுவரை அது ஒரு வசீகரமான விளையாட்டுப் போட்டியாகவே கருதப்பட்டது. விதிகள் பற்றிய அறிவு இல்லாமை விதிகள் பற்றிய அறிவு இல்லாததால், இந்தியாவின் கால்பந்து அதிகாரிகள் இத்தகைய முடிவை எடுத்திருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. உலகக் கோப்பை கால்பந்தில் பங்கேற்கும் வீரர்கள் அப்போது தொழில்முறை வீரர்களாக கருதப்பட்டனர். தொழில்முறை வீரர்களாக இருப்பவர்கள் ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதியில்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் அமெச்சூர்களாக இருக்க வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் இந்த விதியிலும் ஓட்டைகள் இருந்தன. உலகக் கோப்பை கால்பந்தில் பங்கேற்கும் வீரர்கள் ராணுவத்தின் உறுப்பினர்கள் என்றும் ராணுவ உறுப்பினர்கள் தொழில்முறையினராக இருக்க முடியாது என்றும் ஹங்கேரி, ரஷ்யா மற்றும் பிற சோஷியலிச நாடுகள் கூறின. ஆனால் அந்த நேரத்தில் இந்திய கால்பந்து அதிகாரிகளுக்கு இந்த அளவு அறிவுஞானம் இருக்கவில்லை என்று தோன்றுகிறது. ஆசிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்படும் என்ற அச்சம் காரணமாக இந்திய கால்பந்து சங்கம், 1950 உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்திருக்கலாம். ஆனால் இந்த முடிவு ஒரு மாபெரும் தவறு என்று நிரூபணமானது. இது கடந்த 72 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள விளையாட்டு ஆர்வலர்களை வருத்தி வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின்போது இந்த வருத்தம் மேலும் அதிகமாகிறது. https://www.bbc.com/tamil/articles/c0k1n5j8ypqo
 3. இலங்கை பெண்களை ஓமனில் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவல் கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 51 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DINESH GUNAWARDENA படக்குறிப்பு, தினேஷ் குணவர்த்தன பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை பெண்கள் சிலரை வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கே பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்துவதாக தற்போது தகவல்கள் வெளியாகிவருகின்றன என்கிறது இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களம். குறிப்பாக ஓமனுக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்கள், அங்கு பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றமையை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியது. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்று தருவதாக கூறி, சுற்றுலா விசாவின் மூலம் ஓமனிற்கு பெண்களை அழைத்து சென்று, அங்கு ஆட்கடத்தல் வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல், வர்த்தக விசாரணை மற்றும் சமுத்திர குற்றச் செயல் விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சமரநாயக்கவின் கண்காணிப்பின் கீழ் விசேட விசாரணை குழுவொன்று ஓமன் நோக்கி பயணித்துள்ளது. இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க பெண் எம்.பி.க்கள் ஆதரவு28 நவம்பர் 2021 மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர் இடைநீக்கம்17 ஜனவரி 2022 பாலியல் குற்றவாளிகளை அவர்கள் செலவிலேயே அசிங்கப்படுத்த சௌதி நீதிமன்றம் உத்தரவு12 ஜனவரி 2022 ஓமனிலுள்ள பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 45 இலங்கை பெண்களிடம், குறித்த அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவு செய்துக்கொண்டுள்ளனர். சுற்றுலா விசா மூலம் இலங்கையிலிருந்து அழைத்து செல்லப்பட்ட பெண்கள், பல்வேறு இன்னல்களை அனுபவித்து, அதன் பின்னர் தாம் கடமையாற்றிய வீடுகளிலிருந்து தப்பிச் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தமது தொழில் வழங்குநரிடமிருந்து தப்பிய பெண்களே இவ்வாறு பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது கடவூச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை, இவர்களுக்கு வேலை வழங்கியவர்கள் பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனால், இந்தப் பெண்களுக்கு மீண்டும் தாயகம் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல், அதிக வேலைகளை பெற்றுக்கொள்ளுதல், துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இந்த பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளமை, விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிநிதிகளினாலேயே, குறித்த பெண்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை பெண்கள் வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு, அந்த நாட்டு குடிமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல், வர்த்தக விசாரணை மற்றும் சமுத்திர குற்றச் செயல் விசாரணை பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சமரநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மிகக் குறைந்த வயதுடைய பெண்களை 25 லட்சம் இலங்கை ரூபா வரை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இலங்கை முகவர்களின் ஊடாக அங்குள்ள முகவர்கள், இலங்கை பெண்களை பொறுப்பேற்று, அதன் பின்னர் அவர்களை தமது அலுவலகங்களுக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிய வருகின்றது. சுற்றுலா விசாவின் மூலம் செல்கின்றமையினால், அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முடியாத நிலைமை காணப்படுவதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அரபு நாட்டவரை அழைத்து, குறித்த பெண்களை வரிசைகளில் நிறுத்தி அவர்களை விற்பனை செய்துள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு2 நவம்பர் 2022 பாலுறவு இல்லாத திருமண வாழ்க்கைக்கு ஆபாச படங்கள் காரணமா?22 அக்டோபர் 2022 இலங்கை அதிகாரிகளும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல் இவ்வாறு தப்பிய நிலையில், ஓமனிலுள்ள பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவர், அந்த நாட்டுக்கான இலங்கை தூதரக அதிகாரி ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அறிவித்தலுக்கு அமைய, இவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆட்கடத்தல் வலையமைப்பில் இலங்கை பிரதிநிதிகளும் அடங்குவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட வெவ்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கு குழுக்கள் இருப்பதாகவும் திணைக்களம் கூறுகின்றது. குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளும் இந்த வலையமைப்பில் அங்கம் பெற்றுக்கொண்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஏன் இந்த பெண்களை நாட்டிற்கு அழைத்து வர முடியவில்லை? இலங்கை பெண்களை சுற்றுலா விசா மூலம் அழைத்து சென்றுள்ளமையினால், அவர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வர முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், சிலரது கடவூச்சீட்டுக்கள் உள்ளிட்ட ஆவணங்கள், தொழில் வழங்குநர்களிடம் காணப்படுகின்றமையும், அவர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வர முடியாமைக்கு காரணம் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். பட மூலாதாரம்,JAGATH PUSHPAKUMARA பிரதான சந்தேகநபர் கைது இந்த ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, சந்தேகநபர் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அபுதாபியிலிருந்து நாடு திரும்பிய 44 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகமொன்றை நடத்திச் சென்றதன் ஊடாக, குறித்த நபர் ஆட்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. ''நான் இந்த ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்பில்லை. இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள 20 பெண்களிடம் கேட்டு பாருங்கள். அவர்கள் உண்மையை கூறுவார்கள். என்னை காப்பாற்றுவதற்காகவே அவர்கள் வருகைத் தந்துள்ளார்கள். அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்" என கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, அழைத்து செல்லப்படும் சந்தர்ப்பத்தில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில், முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் எதிர்வரும் 24ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சுற்றுலா விசாவில் செல்லத் தடை தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சுற்றுலா விசாவில் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேக்டர் அப்புஹாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஆட்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக, தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கூறியுள்ளார். பிரதமரின் பதில் ஓமன் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட விசாரணை குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த குழு இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் என அவர் கூறுகிறார். இந்த செயற்பாடுகளின் முன்னேற்றத்தினாலேயே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் என்ற விதத்தில் முன்னின்று செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/articles/cz583yd1z61o
 4. எதிர்காலம் குறித்து கவலைப்பட வேண்டி ஏற்படும் - பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா By T. SARANYA 19 NOV, 2022 | 03:28 PM (எம்.வை.எம்.சியாம்) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சிறிதம்ம தேரர் உள்ளிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்து அவர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இருப்பினும் நிச்சயம் இதன் பின்விளைவுகளை எதிர்காலத்தில் அரசாங்கம் அனுபவிக்கும் என்றும் அதனை கண்டு நாம் கவலைப்பட வேண்டிய தருணமொன்று ஏற்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் சிறிதம தேரரை பார்ப்பதற்காக நேற்று (18) சென்றிருந்த போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிதம்ம தேரரை பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனை பார்க்கும் போது அரசாங்கத்தினால் பழிவாங்கும் செயற்பாடே முன்னெடுக்கப்படுகிறது என்பது தெட்டத் தெளிவாக புரிந்துக்கொள்ள முடிகிறது. மேலும், வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் தொடர்பான வழக்கு விசாரணைகளின் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓரிரு மாதங்களில் கிடைக்கும் என்பதை உறுதியாக கூறமுடியாது. குறித்த கைதுகள் அநீதியான, சட்டரீதியற்ற, பழிவாங்கல் நடவடிக்கைகளாக நாம் காண்கிறோம். இந்நிலையில் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரையில் அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர், யுவதிகளால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு நாம் ஆதரவாக செயல்படுவோம். அரசாங்கம் இதுபோன்ற கைதுகளை மேற்கொண்டு அவர்களை சிறையில் அடைத்து அவர்களின் தலைவிதியை மாற்ற முடியாது. மேலும் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நிச்சயமாக எதிர்காலத்தில் வருந்தும். இதனை கண்டு நாம் கவலைப்பட வேண்டி ஏற்படும் என்றார். https://www.virakesari.lk/article/140542
 5. பிக்பாஸ் ஷிவின்: திருநங்கைகள் மீது புதிய பார்வையை உருவாக்குகிறாரா? பட மூலாதாரம்,SHIVIN/INSTAGRAM ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாலினம் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்கிறார் ஷிவின் கணேசன். பிக்பாஸ் சீசன் 6-இல் கடந்த ஆண்டு நமீதா மாரிமுத்து போலவே இந்த ஆண்டு பங்கேற்றிருப்பவர் ஷிவின். அவரது பிக்பாஸ் பங்கேற்பு திருநங்கைகள் உள்ளிட்ட பிற பாலினத்தவர் மீதான புதிய பார்வையையும் விவாதத்தையும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில வாரங்களாக உருவாக்கி இருக்கிறது. "உங்களை நீங்கள் ஏற்றுக் கொண்டால் வேறு யாரும் உங்களை அசைக்க முடியாது" என்று தன்னைப் பற்றிய காணொளியில் இவர் கூறுகிறார். பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 6 வாரங்கள் ஆகும் நிலையில், தொலைக்காட்சி ரசிகர்களின் பரவலான ஆதரவு அவருக்கு இருப்பதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்களும் பெரிய அளவில் வேறுபாடு இல்லாமல் அவரோடு பழகுகிறார்கள். ஆனால் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்குச் சென்றதற்கு அடிப்படையான காரணமே தனது பாலினம்தான் என்று தொலைக்காட்சியின் காணொளியில் அவர் கூறியிருக்கிறார். 'கலகத் தலைவன்' சினிமா விமர்சனம்: மு.க.ஸ்டாலின் சொன்னது போல இது ‘நேர்த்தியான’ படமா?18 நவம்பர் 2022 தமிழ் சினிமா 'திலீபன்': திரைக்கு வர தயாராகி வரும் ஒரு போராளியின் கதை16 நவம்பர் 2022 சுஷ்மிதா சென் திருநங்கையாக நடிப்பதால் 'திருநங்கை' நடிகையின் வாய்ப்பு பறிபோகிறதா?7 நவம்பர் 2022 காரைக்குடி அருகே தேவக்கோட்டையில் பிறந்து வளர்ந்த இவர், "[திருநங்கையாக] இந்தியாவில் வாழ முடியாது என்பதால் எனது அம்மா சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார். இந்தியாவில் இருந்து இவ்வளவு பேரை விட்டுவிட்டு சிங்கப்பூருக்கு வந்தது ஏன் என்றால் பாலினம்தானம் காரணம்" என்று கூறியிருக்கிறார். கடந்த பிக்பாஸ் சீசனின் பங்கேற்ற திருநங்கையான் நமிதா மாரிமுத்து சில நாள்களிலேயே போட்டியில் இருந்து விலகி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் விலகியதாக அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை ஷிவின் கணேசன் தொடர்ந்து போட்டியில் இருப்பதுடன் பெரும்பாலான போட்டியாளர்களைவிட ரசிகர்களின் ஆதரவில் முன்னணியிலும் இருக்கிறார். சில நாள்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் பிடித்த போட்டியாளர் யார் என்று ஒவ்வொருவரிடமும் கமல் கேட்டபோது, பெரும்பாலானவர்கள் ஷிவின் பெயரைக் கூறினார்கள். தனது கருத்தை துணிச்சலாகக் கூறுவார் என்றும் அப்போது சிலர் தெரிவித்தார்கள். திருநங்கைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று பொதுச் சமூகத்தில் கட்டமைக்கும் பிம்பத்தை ஷிவின் உடைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாகப் பலர் பதிவிட்டு வருகிறார்கள். பிக்பாஸ் வீட்டில் ஷிவினை உருவக் கேலி செய்த நிகழ்வுகள் நடந்தபோதும் அதை ஷவின் திறமையாகக் கையாண்டு வருவதாக ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். பலர் உருவக் கேலி செய்வதற்குக் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். பட மூலாதாரம்,SHIVIN/INSTAGRAM திருநங்கைகள் அல்லது திருநம்பிகளைப் பற்றி புரிதல் இல்லாததுதான் இதுபோன்ற பேச்சுகளுக்குக் காரணம் என்ற விவாதமும் எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் ஆண்கள், பெண்கள் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருப்பதன் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம் என்கிறார் திருநங்கையான சுஜாதா. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். பிக்பாஸ் வீட்டில் ஷிவின் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறும் சுஜாதா, வேறுபாடு இல்லாமல் அவரால் பிறருடன் பழக முடிந்திருக்கிறது என்று கூறுகிறார். தொடக்கத்தில் ஷிவினுடன் பிறர் பழகுவதற்கு தயக்கம் காட்டியதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். “திருநங்கைகளைப் பற்றி பிறர் பேசும்போது முதலாவதாக வருவது அவர்களுக்கு அந்தரங்க உறுப்புகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய பேச்சாகத்தான் இருக்கும். தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இதைக் காண முடிந்தது.” என்கிறார் சுஜாதா. இந்தியாவை விட வெளிநாடுகளில் திருநங்கைகள் மீதான பார்வை முன்னேறியிருப்பதாக ஷிவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியதை ஏற்றுக் கொள்கிறார் சுஜாதா. பட மூலாதாரம்,SUJATHA படக்குறிப்பு, சுஜாதா திருநங்கைகளைப் பற்றிய புரிதல் சென்னை போன்ற நகரங்களில் முன்பைவிட அதிகரித்திருப்பதாக திருநங்கைகள் நலனுக்கான செயல்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் வாடகைக்கு வீடு தேடும்போது இரண்டு மடங்கு வாடகை கேட்பது, வேலைகளில் புறக்கணிப்பது போன்றவை இன்னும் தொடருகின்றன என்கிறார்கள். “கிராமப்புறங்களில் இன்னும் சில வார்த்தைகளைக் கூறி கேலி செய்வது தொடருகிறது” என்கிறார் சுஜாதா. “சில ஆண்டுகளில் பத்துப் பதினைந்து நிறுவனங்களில் வேலை செய்து விட்டேன் ” என்று கூறுகிறார் கமலி. தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இருவர், சமூகப் பணிகளைச் செய்து வருவதாகவும் கூறுகிறார். “புதிதாகப் பழகும் பலர் சுற்றி வளைத்து கடைசியாக பாலியல் நோக்கத்தையே வெளிப்படுத்துவார்கள். அவர்களைத்தான் முதலில் சமாளிக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் கமலி. https://www.bbc.com/tamil/articles/cd19g9w0rd1o
 6. இங்குள்ள பலரும் பொருளாதார நெருக்கடியையும் காரணமாக்கி வெளிநாடு செல்லும் வழியையே தேடுகிறார்கள்.
 7. ஆண்கள் தினம்: பெண்கள் கூறும் இந்த அறிவுரைகளைக் கேளுங்கள்! காணொளிக் குறிப்பு, ஆண்கள் தினம்: பெண்கள் கூறும் இந்த அறிவுரைகளைக் கேளுங்கள்! 53 நிமிடங்களுக்கு முன்னர் நவம்பர் 11-ஆம் தேதி ஆண்கள் தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், அதுபற்றி பெண்கள் கூறுவது என்ன? - இந்தக் காணொளியில் பார்க்கலாம். https://www.bbc.com/tamil/articles/c51ege32z9po
 8. போலந்தில் விழுந்த ஏவுகணை குறித்து உக்ரைன் விசாரணை Saturday, November 19, 2022 - 3:28pm போலந்தைத் தாக்கிய ஏவுகணை குறித்து புலன்விசாரணை நடத்த உக்ரைனிய நிபுணர்கள் சென்றுள்ளனர். போலந்து, நேட்டோ கூட்டணி, மற்ற மேற்கத்திய நாடுகள் ஆகியவை அந்த ஏவுகணை தற்செயலாக உக்ரைனில் இருந்து பாய்ந்ததாக நம்புகின்றன. ஆனால் உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி அதனை மறுக்கிறார். அது ரஷ்யாவில் இருந்து பாய்ச்சப்பட்டதாக அவர் கூறுகிறார். எனினும் நூறு வீதம் உறுதியாகச் சொல்ல முடியாது என்று அவர் தற்போது தமது நிலையைச் சற்று மாற்றிக்கொண்டார். போலந்து ஜனாதிபதி ஆன்றே டூடா தமது நாட்டின் புலனாய்வு முடிவை உக்ரைனிடம் காட்டலாம் ஆனால் சர்வதேச சட்டத்தின்படி நடக்க வேண்டும் என்று கூறினார். ஏவுகணை யாரிடம் இருந்து பாய்ந்தது என்பதில் அமெரிக்கா, போலந்து, உக்ரைன் என்று தரப்புக்கொரு கருத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்கிடையே உக்ரைனில் பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எரிசக்தி வசதி இல்லாமல் குளிர்காலத்தைச் சந்திக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். https://www.thinakaran.lk/2022/11/19/வெளிநாடு/92827/போலந்தில்-விழுந்த-ஏவுகணை-குறித்து-உக்ரைன்-விசாரணை
 9. யாழ் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி 2022 களைகட்டப் போகுது. கடைசி நேரத்தில் பலர் களத்தில் குதித்துள்ளனர், எல்லோரும் வெற்றி பெற வாழ்த்துகள்.
 10. ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு By T. SARANYA 19 NOV, 2022 | 03:44 PM ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் 2023 முதல் 2027 வரை பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வவுனியா நகர மண்டபத்தில் இன்று (19) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உணவுப் பாதுகாப்புக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது எமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்காக நான்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட மாகாணத்தில் பசும்பால் கைத்தொழில் இந்திய உதவியின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக, நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடவும் நீங்கள் இச்சந்தர்ப்பத்தில் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதைக் கட்டுப்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். இத்திட்டம் 2023 இறுதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தலாமா வேண்டாமா என்பதை பின்னர் பரிசீலிப்போம். உலகளாவிய உணவுப் பற்றாக்குறை எதிர்காலத்தில் ஏற்படலாம். அவ்வாறான சூழ்நிலையில், இலங்கையைப் பாதுகாக்க இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டம் முக்கியமானது என்றே கூற வேண்டும். ஆபிரிக்கா ஏற்கனவே உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் பெரும்போகத்தில் வெற்றிக் கண்டுள்ளோம். ஏனைய பயிர்ச்செய்கையிலும் இதுபோன்ற விளைச்சல் கிடைத்தால், எளிதில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம். இதைத் தவிர, இன்னும் இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று போஷாக்குக் குறைபாட்டைக் கட்டுப்படுத்தல், இரண்டாவது கிடைக்கும் விளைச்சலைப் பாதுகாத்தல் ஆகும். அறுவடையின் போது ஏற்படும் விரயத்தைக் குறைக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, அவற்றை சேமிப்பதற்கும் நுகர்வோருக்கு விநியோகிக்கும் பணிகளைப் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம். இதில் வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளன. கிடைக்கும் மேலதிக உணவைப் பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இதேபோன்று இம்மாவட்டங்களில் நிலவும் கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் தெரிய வந்துள்ளன. அவற்றுக்கான தீர்வுகளை விரைவில் வழங்க எதிர்பார்க்கின்றோம். சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை உருவாக்க முடியும். ஏற்றுமதி பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதிக டொலர்களை உழைக்கும் பொருளாதாரத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை நான் 2023 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளேன். அதற்கமைய வடக்கில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. யாழ்ப்பாணத்திற்கு மட்டுமல்ல, வன்னிக்கும் இதில் பொறுப்பு உண்டு என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். எங்களுக்கு ஒரு புதிய ஆற்றல்மிக்க பொருளாதாரம் தேவை. இதன் முக்கிய பகுதி வட மாகாணமாகும். அதன் மூலம் நிறைய அந்நியச் செலாவணியைப் பெறலாம். மத்திய கிழக்கு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்ட வாய்ப்பு உள்ளது. புதிய பயிர்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம். கறுவா போன்ற பயிர்களை வளர்க்க இங்கு வாய்ப்பு உள்ளது. கால்நடை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தலாம். இதுபோன்ற பல வேலைத்திட்டங்கள் உள்ளன. 2023 முதல் 2027 வரையிலான ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் இவ்வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த விடயத்தில் வன்னிக்கும் பாரிய பொறுப்பு உண்டு என்பதை நான் கூற விரும்புகின்றேன். வவுனியா விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாம் தற்போது ஆராய்ந்து வருகின்றோம். இவை அனைத்தும் நடைபெற உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். வவுனியா மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் பிரதேச செயலாளர்களிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகர அபிவிருத்தி வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதுர்தீன், சார்ள்ஸ் நிர்மலநாதன், குலசிங்கம் திலீபன், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/140544
 11. இளவாலையில் வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடியவர் ஹெரோயினுடன் கைது By NANTHINI 19 NOV, 2022 | 04:01 PM இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து 16 இலட்சம் ரூபா தங்க நகைகளை திருடிய நபர் நேற்று வெள்ளிக்கிழமை (நவ 18) இளவாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்தேக நபரிடமிருந்து 130 மில்லி கிராம் ஹெரோயின், நகைகள், நகை அடகு வைத்த ஆவணம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் முதலியன மீட்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சந்தேக நபர் தான் திருடிய நகைகள் சிலவற்றினை நகைக் கடையில் அடகு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட நபர் இளவாலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார். இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சந்தேக நபர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/140545
 12. உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாறும் நடந்து முடிந்த அத்தியாயங்களும் - 3 19 NOV, 2022 | 05:12 PM (நெவில் அன்தனி) உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் நடப்பு ம்பியன் நேரடியாக இறுதிச் சுற்றில் முறைமை 1974 உலகக் கிண்ணப் போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இதற்கு அமைய 11ஆவது உலகக் கிண்ணத்தை முன்னின்று நடத்திய வரவேற்பு நாடான ஆர்ஜன்டீனாவுக்கு மாத்திரம் இறுதிச் சுற்றில் நேரடியாக பங்குபற்றும் தகுதி கிடைத்தது. மற்றைய 15 அணிகளும் 5 கண்டங்களிலும் நடத்தப்பட்ட தகுதிகாண் சுற்றின் மூலம் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன. 11. பதினொன்றாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - சொந்த மண்ணில் அசத்திய ஆர்ஜன்டீனா ஆர்ஜன்டீனாவின் 5 நகரங்களில் 11ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்று 1978 ஜூன் 1ஆம் திகதியிலிருந்து 25ஆம் திகதிவரை நடைபெற்றது. இறுதிச் சுற்றுக்கு முன்னோடியாக ஐந்து கண்டங்களிலும் நடத்தப்பட்ட தகுதிகாண் சுற்றில் 107 நாடுகள் பங்குபற்றின. உலகக் கிண்ண வரலாற்றில் 1978 உலகக் கிண்ணப் போட்டியில் 16 அணிகள் பங்குபற்றியது கடைசி தடவையாகும். 1982இலிருந்து பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கையை 24ஆக அதிகரிக்க பீபா தீர்மானித்தது. அரசியல் சூழ்நிலைகள் காரணமாக உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி ஓரளவு மழுங்கடிப்பு நிலையை எதிர்நோக்கியது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆர்ஜன்டீனாவில் ஆட்சி அதிகாரத்தை ஜுன்டா கைப்பற்றியிருந்தது. ஜுன்டா ஆட்சியாளர்கள் அந்த உலகக் கிண்ணத்தை தங்களது சொந்த நலன்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவியது. நாட்டில் நிலவிய கொந்தளிப்பான சூழ்நிலைகள் உலகக் கிண்ணப் போட்டிக்கு உகந்ததாக அமையவில்லை. அத்துடன் ஒழுங்கமைத்தல் திட்டமிடல்களும் பின்தங்கிக் காணப்பட்டது. இதன் காரணமாக உலகக் கிண்ணப் போட்டியை ஸ்பெய்னுக்கு நகர்த்துவது குறித்து பீபா எண்ணியது. எனினும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிக்கு முன்னுரிமை அளிக்க புதிய அரசாங்கம் முன்வந்ததன் பலனான திட்டமிட்டபடி ஆர்ஜன்டீனாவில் உலகக் கிண்ணப் போட்டி அரங்கேற்றப்பட்டது. ஈரான், போலந்து, டியூனிசியா ஆகிய நாடுகள் உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் முதல் தடவையாக பங்குபற்றின. 1974இல் போன்றே இரண்டு கட்டங்களாக லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் சுற்றில் 16 அணிகள் 4 குழுக்களில் 4 அணிகள் வீதம் போட்டியிட்டன. முதல் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்ளைப் பெற்ற 8 அணிகள் 2 குழுக்களாக வகுக்கப்பட்டு இரண்டாம் கட்ட லீக் போட்டி நடத்தப்பட்டது. அந்த இரண்டு குழுக்களிலும் முதல் இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. இதற்கு அமைய 2ஆம் சுற்றில் 2 குழுக்களிலும் முதல் இடங்களைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும் நெதர்லாந்தும் இறுதிப் போட்டியில் மோதின. 90 நிமிடங்கள் நிறைவின்போது இரண்டு அணிகளும் தலா 1 கோலைப் போட்டிருந்தன. இதனை அடுத்த சம்பியன் அணியைத் தீர்மானிப்பதற்கு மேலதிக நேரம் கொடுக்கப்பட்டது. மேலதிக நேரத்தில் மேலும் 2 கோல்களைப் போட்ட ஆர்ஜன்டீனா 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பயின் பட்டத்தை முதல் தடவையாக சுவீகரித்தது. அத்துடன் சொந்த நாட்டில் சம்பியனான ஐந்தாவது நாடானது. அதற்கு முன்னர் உருகுவே (1930), இத்தாலி (1938), இங்கிலாந்து (1966), மேற்கு ஜேர்மனி (1974) ஆகிய நாடுகள் வரவேற்பு நாடுகளாக போட்டியை முன்னின்று நடத்தி சம்பியனாகியிருந்தன. பங்குபற்றிய நாடுகள் 16: ஆர்ஜன்டீனா, ஒஸ்திரியா, பிரேஸில், பிரான்ஸ், மேற்கு ஜேர்மனி (சமஷ்டி குடியரசு), ஹங்கேரி, ஈரான், இத்தாலி, மெக்சிகோ, நெதர்லாந்து, பெரு, போலந்து, ஸ்கொட்லாந்து, ஸ்பெய்ன், சுவீடன், டியூனிசியா. 12. பன்னிரெண்டாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - இத்தலிக்கு 3 ஆவது உலக சம்பியன் பட்டம் பன்னிரெண்டாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி ஸ்பெய்னின் 14 நகரங்களில் 1982 இல் நடத்தப்பட்டது. அவ் வருட உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கை 24ஆக அதிகரிக்கப்பட்டு 6 குழுக்களில் லீக் முறையில் போட்டிகள்நடத்தப்பட்டது. அல்ஜீரியா, கெமறூன், ஹொண்டுராஸ், குவைத், நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றன. குழு 1இல் போலந்து, இத்தாலி, பெரு ஆகிய நாடுகளுடன் போட்டியிட்ட கெமறூன் அந்த 3 அணிகளுடனான போட்டிகளை வேற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது. ஆனால், நொக் அவுட் சுற்றுக்கு கெமறூனினால் முன்னேற முடியாமல் போனது. முதல் சுற்று லீக் போட்டியில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களைப் பெற்ற அணிகள் இரண்டாம் கட்ட லீக் சுற்றில் 4 குழுக்களில் போட்டியிட்டன. ஏ குழுவில் முதலாம் இடத்தைப் பெற்ற போலந்தும் சி குழுவில் முதலாம் இடத்தைப் பெற்ற இத்தாலியும் ஒரு அரை இறுதியில் போட்டியிட்டன. அதில் இத்தாலி 2 - 0 என வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பி குழுவில் முதலாம் இடத்தைப் பெற்ற மேற்கு ஜேர்மனியும் டி குழுவில் முதலாம் இடத்தைப் பெற்ற பிரான்ஸும் மற்றைய அரை இறுதியில் மொதின. அப் போட்டி முழு நேரத்தின்போது 1 - 1 என்ற கோல் அடிப்படையிலும் மேலதிக நேர நிறைவில் 3 - 3 என்ற கோல்கள் அடிப்படையிலும் வெற்றிதோல்வி முடிவடைந்தது. இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிக்க சமநிலை முறிப்பு பெனல்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் 5 - 4 என்ற பெனல்டி அடிப்படையில் மேற்கு ஜேர்மனி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றில் பெனல்டி முறையில் வெற்றி அணி தீர்மானிக்கப்பட்டது அதுவே முதல் தடவையாகும். இறுதிப் போட்டியில் 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் மேற்கு ஜேர்மனியை வீழ்த்திய இத்தாலி 3ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றெடுத்தது. பங்குபற்றிய நாடுகள் 24: அல்ஜீரியா, ஆர்ஜன்டீனா, ஒஸ்திரியா, பெல்ஜியம், பிரேஸில், கெமறூன், சிலி, சேக்கோஸ்லோவாக்கியா, எல் செல்வடோர், இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜேர்மனி, ஹொண்டுராஸ், ஹங்கேரி, இத்தாலி, குவைத், நியூஸிலாந்து, வட அயர்லாந்து, பெரு, போலந்து, ஸ்கொட்லாந்து, சோவியத் யூனியன், ஸ்பெய்ன், யூகோஸ்லாவியா. 13. பதின்மூன்றாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - மரடோனாவுக்கு கடவுளின் கரம் கொடுத்த கோல் : ஆர்ஜன்டீனா 2ஆவது தடவையாக சம்பியனானது பதின்மூன்றாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றை கொலம்பியாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பொருளாதார நெருக்கடி காரணமாக கொலம்பியா பின்வாங்கியது. ஐக்கிய அமெரிக்காவும் கனடாவும் அப் போட்டியை நடத்த விரும்பின. ஆனால், மெக்சிகோ தேர்ந்தெடுக்கப்பட்டது. மெக்சிகோ ஏற்கனவே உலகக் கிண்ணப் போட்டியை நடத்தியிருந்ததால் அந்தத் தீர்மானம் கடும் விமர்சனத்திற்குள்ளானது. உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு 8 மாதங்களுக்கு முன்னர் அங்கு இடம்பெற்ற பூகம்பத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். எனினும் உலகக் கிண்ணப் போட்டியை மெக்சிகோ வெற்றிகரமாக நடத்தி முடித்தது. பதின்மூனறாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போடடி மெக்சிகோவின் 12 நகரங்களில் 1986 மே 31ஆம் திகதியிலிருந்து ஜூன் 29ஆம் திகதிவரை நடத்தப்பட்டது. அதற்கு முன்னோடியாக 121 நாடுகள் தகுதிகாண் சுற்றில் விளையாடின. அல்ஜீரியா, கனடா, ஈராக், தென் கொரியா ஆகிய நாடுகள் முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்குபற்றின. புதிய போட்டி முறைமை முதலாலம் சுற்று லீக் போட்டிகள் 6 குழுக்களில் தலா 4 அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டது. லீக் சுற்று முடிவில் 6 குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 12 அணிகளும் அதிசிறந்த 3ஆம் இடங்களைப் பெற்ற 4 அணிகளுமாக 16 அணிகள் 2ஆம் சுற்றில் நொக் அவுட் முறையில் போட்டியிட்டன. அதனைத் தொடர்ந்து கால் இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டன. இங்கிலாந்துக்கும் ஆர்ஜன்டீனாவுக்கும் இடையில் நடைபெற்ற கால் இறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டநேர பகுதியில் டியகோ மரடோனா போட்ட இரண்டு கோல்கள் முக்கிய இடத்தைப் பிடித்தன. போட்டியின் 51ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து கோல்காப்பாளர் பீட்டர் ஷில்டனைவிட உயரே தாவிய மரடோனா தனது இடது முஷ்டியால் பந்தை முட்டி அபார கோல் ஒன்றைப் போட்டார். மரடோனா கையால் அடித்தத்தை மத்தியஸ்தர் கவனிக்கத் தவறியதால் அதனை கோலாக அங்கீகரித்தார். நான்கு நிமிடங்கள் கழித்து மரடோனா போட்ட இரண்டாவது கோல் 20ஆம் நூற்றாண்டின் அதிசிறந்த கோலாக அறிவிக்கப்பட்டது. தனது எல்லையில் பந்தைப் பெற்றுக்கொண்ட மரடோனா தனி ஒருவராக வேகமாக பந்தை நகர்த்தியவாறு இங்கிலாந்தின் 5 வீரர்களைக் கடந்து சென்று அலாதியான கோல் ஒன்றைப் போட்டார். போட்டி முடிவில் தான் போட்ட முதலாவது கோல் தனது தலையாலும் கடவுளின் கையாலும் போடப்பட்ட கோல் என மரடோனா விபரித்திருந்தார். அப் போட்டியில் இங்கிலாந்தை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஆர்ஜன்டீனா வெற்றிகொண்டது. மற்றைய 3 கால் இறுதிப் போட்டிகளில் வெற்றி அணிகள் பெனல்டி முறையில் தீர்மானிக்கப்பட்டது. பிரேஸிலுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான கால் இறுதிப் போட்டி மேலதிக நேர நிறைவில் 1 - 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் பெனல்டி முறை அமுல்படுத்தப்பட்டது. அதில் 4 - 3 என பிரான்ஸ் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. மேற்கு ஜேர்மனிக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையிலான கால் இறுதிப் போட்டி மேலதிக நேர நிறைவில் கோல்கள் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இதனை அடுத்து அமுல்படுத்தப்பட்ட பெனல்டி முறையில் 4 - 1 என மேற்கு ஜேர்மனி வெற்றிபெற்றது. ஸ்பெய்னுக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான போட்டி மேலதிக நேர நிறைவில் 1 - 1 என வெற்றதோல்வியின்றி முடிவடைந்தது. பெனல்டி முறையில் 5 - 4 என பெல்ஜியம் வெற்றிபெற்றது. அரை இறுதிப் போட்டிகளில் பிரான்ஸை மேற்கு ஜேர்மனியும் பெல்ஜியத்தை ஆர்ஜன்டீனாவும் 2 - 0 என்ற ஒரே கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டியில் மேற்கு ஜேர்மனியை 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்ஜன்டீனா இரண்டாவது தடவையாக உலக சம்பியனானது. பங்குபற்றிய நாடுகள் 24: அல்ஜீரியா, ஆர்ஜன்டீனா, பெல்ஜியம், பிரேஸில், பல்கேரியா, கனடா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜேர்மனி, ஹங்கேரி, ஈராக், இத்தாலி, தென் கொரியா, மெக்சிகோ, மொரோக்கோ, வட அயர்லாந்து, பரகுவே, போலந்து, போர்த்துக்கல், ஸ்கொட்லாந்து, சோவியத் யூனியன், ஸ்பெய்ன், உருகுவே. 14. பதினான்காவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - மேற்கு ஜெர்மனி 3ஆவது தடவையாக உலக சம்பியன் பதினான்காவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி இத்தாலியில் 1990 ஜூன் 8ஆம் திகதியிலிருந்து ஜூலை 8ஆம் திகதிவரை நடைபெற்றது. உலகக் கிண்ணப் போட்டிகள் 12 நகரங்களில் நடத்தப்பட்டன. இதற்கு முன்னோடியாக 5 கண்டங்களில் நடத்தப்பட்ட தகுதிகாண் சுற்றில் 116 நாடுகள் பங்குபற்றின. உலகக் கிண்ணப் போட்டியை முன்னின்று நடத்திய இத்தாலியும் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் நேரடியாக இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றதுடன் மேலும் 22 நாடுகள் கொஸ்டா ரிக்கா, அயர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய 3 நாடுகள் முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன. இங்லாந்து, கிரேக்கம், சோவியத் யூனியன் ஆகிய 3 நாடுகளும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டன. 1990 உலகக் கிண்ணப் போட்டியில்தான் கோல்காப்பாளரை நோக்கி பந்தை பின்நகர்த்தும் முறைமை (Back pass) இரத்துச் செய்யப்பட்டிருந்தது. அதாவாது ஒரு வீரர் தனது பாதத்தால் பந்தை தனது கோல் காப்பாளருக்க நகர்த்தினால் அதனை கோல் காப்பாளர் கையால் பிடிக்க முடியாது என்ற முறையே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டியில் வேகத்தையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தும் நோக்கில் இந்த புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. வெற்றிக்கு வழங்கப்பட்டு வந்த 2 புள்ளிகள் 3 புள்ளிகளாக அதிகரிக்கப்பட்டது. அத்துடன் பந்தை நகர்த்திச் செல்லும் வீரரை பின்னாலிருந்து வீழ்த்துவதை தடுக்கும் வகையில் கடுமையான விதி அறிமுகப்படுத்தப்பட்டது. வீரர் ஒருவரை பின்னால் இருந்து வீழ்த்தும் வீரருக்கு நேரடி சிவப்பு அட்டை காட்டப்படும் விதி 1990 உலகக் கிண்ணப் போட்டியில் அமுலுக்கு வந்தது. முதலாம் சுற்று லீக் போட்டிகள் 6 குழுக்களில் தலா 4 அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டது. லீக் சுற்று முடிவில் 6 குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 12 அணிகளும் அதிசிறந்த 3ஆம் இடங்களைப் பெற்ற 4 அணிகளுமாக 16 அணிகள் 2ஆம் சுற்றில் நொக் அவுட் முறையில் போட்டியிட்டன. அதனைத் தொடர்ந்து கால் இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டன. 1990 உலகக் கிண்ண கால்பந்தாட்டம் தலைகீழ் முடிவுடன் ஆரம்பமானது. அப்போதைய நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவை ஆரம்பப் போட்டியில் எதிர்த்தாடிய கெமறூன் 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தது. கெமறூன் வீரர் ஓமாம் பியிக் போட்டியின் 67ஆவது நிமிடத்தில் உயரே தாவி தலையால் முட்டி போட்ட கோல் ஆர்ஜன்டீனாவை திக்குமக்காட வைத்தது. இரண்டாம் சுற்றில் கொலம்பியாவை 2 - 1 என வெற்றிகொண்ட கெமறூன் கால் இறுதிப் போட்டியின் மேலதிக நேரத்தில் 2 பெனல்டிகளை இங்கிலாந்துக்கு தாரை வார்த்து 2 - 3 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதேவேளை, சிறந்த 3ஆம் இடங்களைப் பெற்ற அணிகளில் ஒன்றாக நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஆர்ஜன்டீனா, 2ஆம் சுற்றில் பிரேஸிலை 1 - 0 எனவும் கால் இறுதியில் யூகோஸ்லாவியாவை 3 (0) - 2 (0) என்ற பெனல்டி முறையிலும் அரை இறதியில் இத்தாலியை 4 (1) - 3 (1) என்ற பெனல்டி முறையிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மறுபுறத்தில் 2ஆம் சுற்றில் நெதர்லாந்தை 2 - 1 எனவும் கால் இறுதியில் செக்கோஸ்லோவாக்கியாவை 1 - 0 எனவும் அரை இறுதியில் இங்கிலாந்தை 4 (1) - 3 (1) என்ற பெனல்டி முறையிலும் மேற்கு ஜேர்மனி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மிகவும் உக்கிரமமாக மோதிக்கொள்ளப்பட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனாவின் மாற்று வீரர் பெட்ரோ மொன்ஸன் 65ஆவது நிமிடத்தில் சிவப்பு அட்டைக்கு இலக்காகி களம் விட்டு வேளியேற்றப்பட்டார். போட்டியின் 85ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீன பெனல்டி எல்லைக்குள் ரூ வொலர் விதிகளுக்கு புறம்பாக வீழ்த்தப்பட்டதால் ஜேர்மனிக்கு பெனல்டி வழங்கப்பட்டது. அண்ட்றியாஸ் ப்றீம் மிகவும் சாமர்த்தியமாகவும் நிதானமாகவும் பந்தை கோலினுள் புகுத்தி ஜேர்மனியை முன்னிலையில் இட்டார். இரண்டு நிமிடங்கள் கழித்து கஸ்டாவோ டிஸோட்டி சிவப்பு அட்டைக்கு இலக்கானதால் ஆர்ஜன்டீனா 9 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. இது குறித்து மத்தியஸ்தருடன் வாதிட்ட அணித் தலைவர் டியகோ மரடோனாவுக்கும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. இறுதியில் மேற்கு ஜேர்மனி 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3ஆவது தடவையாக உலக சம்பயினானது. இதன் மூலம் ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக 3 தடவைகள் உலக் சம்பியனான நாடு என்ற பெருமையை மேற்கு ஜேர்மனி பெற்றுக்கொண்டது. பங்குபற்றிய நாடுகள் 24: ஆர்ஜன்டீனா, ஒஸ்திரியா, பெல்ஜியம், பிரேஸில், கெமறூன், கொலம்பியா, கொஸ்டா ரிக்கா, செக்கோஸ்லோவாக்கியா, எகிப்து, இங்கிலாந்து, மேற்கு ஜேர்மனி, இத்தாலி, தென் கொரியா, நெதர்லாந்து, அயர்லாந்து, ருமேனியா, ஸ்கொட்லாந்து, சோவியத் யூனியன், ஸ்பெய்ன், சுவீடன், ஐக்கிய அரபு இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, உருகுவே, யூகோஸ்லாவியா. 15. 15ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - பிரேஸில் 4ஆவது தடவையாக -உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது ஐக்கிய அமெரிக்காவின் 9 நகரங்களில் 15ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்று 1994 ஜூன் 17ஆம் திகதியிலிருந்து ஜூலை 17ஆம் திகதிவரை நடத்தப்பட்டது. உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்ததுடன் 1994 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் 147 நாடுகள் பங்குபற்றின. உலகக் கிண்ணப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்ற வகையில் ஐக்கிய அமெரிக்காவும் நடப்பு சம்பியன் என்ற வகையில் மேற்கு ஜேர்மனியும் இறுதிச் சுற்றில் விளையாட நெரடித் தகுதியைப் பெற்றுக்கொண்டன. தகுதிகாண் சுற்றின்மூலம் இறுதிச் சுற்றுக்கு தெரிவான 22 நாடுகளில் கிரேக்கம், நைஜீரியா, சவூதி அரேபியா ஆகியன முதல் தடவையாக இடம்பெற்றன. முன்னைய உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் போன்றே போட்டி நடைமுறை பின்பற்றப்பட்டிருந்தது. முதலாலம் சுற்று லீக் போட்டிகள் 6 குழுக்களில் தலா 4 அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டது. லீக் சுற்று முடிவில் 6 குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 12 அணிகளும் அதிசிறந்த 3ஆம் இடங்களைப் பெற்ற 4 அணிகளுமாக 16 அணிகள் 2ஆம் சுற்றில் நொக் அவுட் சுற்றுக்கு முன்னெறின. சுவீடனும் பல்கேரியாவும் பெரு முன்னெற்றத்தை வெளிப்படுத்தி நொக் அரை இறுதிவரை முன்னேறியிருந்தன. ஒரு அரை இறுதிப் போட்டியில் சுவீடனை எதிர்கொண்ட பிரேஸில் 1 - 0 என்ற கோல் அடிப்படையிலும் மற்றைய அரை இறுதிப் போட்டியில் பல்கேரியாவை சந்தித்த இத்தாலி 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. பிரேஸிலுக்கும் இத்தாலிக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போட்டி 90 நிமிட முழு நேரத்தின்போதும் மேலதிக நேர நிறைவின்போதும் கோல் எதுவும் போடப்படமால் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இதனை அடுத்து அமுல்படுத்தப்பட்ட பெனல்டிகளில் 3 - 2 என்ற அடிப்படையில் வெற்றிபெற்ற பிரேஸில் 4ஆவது தடவையாக உலக சம்பியனானது. கசப்பான இரண்டு சம்பவங்கள் 1990 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் நடக்கக்கூடாத இரண்டு கசப்பான சம்பவங்கள் விளையாட்டுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதலாவதாக டியகோ மரடோனா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் சிக்கியதால் கால்பந்தாட்ட தடைக்குள்ளானார். தனது எடையைக் குறைத்துக்கொண்டு மீண்டும் ஆர்ஜன்டீனான அணியில் இடம்பெற்ற மரடோனா கிரேக்கத்துடனான போட்டியில் அபரா ஆற்றலை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மரடோன ஊக்கமருந்து உட்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக எஞ்சிய போட்டிகளில் மரடோனா இல்லாமலேயே ஆர்ஜன்டீனா விளையாட நேரிட்டது. இரண்டாவது சம்பவமோ மிகவும் வேதனைக்குரியது. ஐக்கிய அமெரிக்காவுடனான போட்டியில் துரதிர்ஷ்டவசமாக சொந்த கோல் ஒன்றைப் போட்டுக் கொடுத்த கொலம்பிய பின்கள வீரர் அண்ட்ரெஸ் எஸ்கோபர் நாடு திரும்பியதும் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை கால்பந்தாட்ட உலகை மட்டுமல்லாமல் முழு உலகையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. பங்குபற்றிய நாடுகள் 24: ஆர்ஜன்டீனா, பெல்ஜியம், பொலிவியா, பிரேஸில், பல்கேரியா, கெமறூன், கொலம்பியா, ஜேர்மனி, கிரேக்கம், இத்தாலி, தென் கொரியா, மெக்சிகோ, மொரோக்கோ, நெதர்லாந்து, நைஜீரியா, நோர்வே, அயர்லாந்து, ருமேனியா, ரஷ்யா, சவூதி அரேபியா, ஸ்பெய்ன், சுவீடன், சுவீட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா. 16. பதினாறாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - பிரான்ஸ் முதல் தடவையாக சம்பியனானது 16ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி பிரான்ஸில் 1998 இல் நடைபெற்றது. பிரான்ஸில் முதல் தடவையாக நடத்தப்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கை 24 இலிருந்து 32ஆக அதிகரிக்கப்பட்டது. இறுதிச் சுற்றுக்கு முன்னோடியாக ஐந்து கண்டங்களிலும் நடத்தப்பட்ட உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் 174 நாடுகள் பங்குபற்றின. இன ஒடுக்கல் காரணமாக சர்வதேச விளையாட்டுத்துறையில் 20 வருடங்களுக்கு மேல் தடைக்குட்பட்டிருந்த தென் ஆபிரிக்கா தடை நீக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றது. போல்கன் யுத்தம் காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் யூகோஸ்லாவியாவுக்கு விதிக்கபட்டிருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்த அந்த நாடும் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றியது. குரோஏஷியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் அந்த நாடு பங்குபற்றிய முதலாவது உலகக் கிண்ணமாகவும் 1998 உலகக் கிண்ணப் போட்டி அமைந்தது. கரிபியன் தீவுகளில் ஒன்றான ஜெமெய்க்காவும் முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றது. போட்டி முறை 1998 உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் அதற்கு முன்னர் 6 குழுக்களில் நடத்தப்பட்ட உலகக் கிண்ண இறுதிச் சுற்று 1998இலிருந்து 8 குழுக்களில் நடத்தப்பட்டுவருகிறது. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும்16 அணிகள் நொக் அவுட் சுற்றில் விளையாட தகதிபெற்றது. 1998 உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றில் தங்க கோல் அறிமுகப்படுத்தப்பட்டது. வெற்றிதோல்வியின்றி முடிவடையும் போட்டிகளில் வழங்கப்படும் மேலதிக நேரத்தில் ஏதேனும் ஒரு அணி முதலாவதாக கோல் போட்டால் அத்துடன் போட்டியை முடிவுக்குக் கொண்டுவருவதே தங்க கோல் முறையாகும். பல்லாண்டுகளுக்கு முன்னர் இந்த முறைமை இருந்தபோதிலும் பின்னர் அது கைவிடப்பட்டு தலா 15 நிமிடங்களைக் கொண்ட மேலதிக நேரம் பூர்த்தி அடையும்வரை போட்டி தொடரப்பட்டது. அணிகளுக்கு இடையிலான போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கே இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த முறைமை வெற்றி அளிக்கவில்லை. பரம வைரிகள் சந்திப்பு உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அரசியலில் பரம வைரிகளான ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒரே குழுவில் இடம்பெற்றது விசேட அம்சமாகும். அமெரிக்காவை ஒரு சாத்தானகவே முழு ஈரானும் பார்த்தது. ஆனால், ஆடுகளத்தில் அமெரிக்க வீரர்களும் ஈரான் வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் மரியாதை செலுத்தி விளையாடியது பெரும் பாராட்டைப் பெற்றது. சொந்த மண்ணில் சம்பியனான பிரான்ஸ் எட்டு குழுக்களில் 32 அணிகள் பங்குபற்றிய முதல் சுற்று நிறைவில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் தலா 2 அணிகள் வீதம் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. ஒரு அரை இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை எதிர்த்தாடிய பிரேஸில் 4 (1) - 2 (1) என்ற பெனல்டி முறையில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. மற்றைய அரை இறுதிப் போட்டியில் குரோஏஷியாவை சந்தித்த பிரான்ஸ் 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் 3 - 0 என்ற கோல்கள் கணக்கில் பிரேஸிலை வெற்றிகொண்டு சொந்த நாட்டில் சம்பியன் பட்டத்தை சுவிகரித்தது. பங்குபற்றிய நாடுகள் 32: ஆர்ஜன்டீனா, ஒஸ்திரியா, பெல்ஜியம், பிரேஸில், பல்கேரியா, கெமறூன், சிலி, கொலம்பியா, குரோஏஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஈரான், இத்தாலி, ஜெமெய்க்கா, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, மொரோக்கோ, நெதர்லாந்து, நைஜீரியா, நோர்வே, பராகுவே, ருமேனியா, சவூதி அரேபியா, ஸ்கொட்லாந்து, தென் ஆபிரிக்கா, ஸ்பெய்ன், டியூனிசியா, ஐக்கிய அமெரிக்கா, யூகோஸ்லாவியா. (இன்னும் வரும்) https://www.virakesari.lk/article/140550
 13. மலேசியாவில் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு - இன்றே முடிவுகள் வெளியாகும் கட்டுரை தகவல் எழுதியவர்,சதீஷ் பார்த்தீபன் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மலேசிய நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், புதிய அரசை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இது மலேசிய நாடாளுமன்றத்தின் 15ஆவது பொதுத்தேர்தலாகும். இந்தத் தேர்தலில் மொத்தம் 2.1 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 21லிருந்து 18ஆக குறைக்கப்பட்டுள்ளதால் இன்றைய தேர்தலில் 40 லட்சம் இளம் வாக்காளர்கள் புதிதாக வாக்களிக்க உள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை அனைத்துக் கட்சிகளும் சமூக ஊடகப் பிரசாரங்களில் தீவிர கவனம் செலுத்தின. தமிழ் மக்களைக் கவர எம்ஜிஆர் பாடல்கள் உட்பட தமிழ்த்திரைப்பட பாடல்கள் பிரசார களங்களில் பயன்படுத்தப்பட்டன. கொரோனா காரணமாக மலேசிய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த நேரத்தில் தேர்தலை நடத்த எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மலேசியாவில் பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், சில இடங்களில் கனமழையைப் பொருட்படுத்தாமல், மக்கள் வாக்களிக்க திரண்டிருந்தனர். தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற முழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சாலை சுங்க கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தேர்தல் களத்தில் நான்கு கூட்டணிகள் களமிறங்கி உள்ளன. பிரதமர் பதவிக்கு ஆறு பேருக்கு இடையே நேரடியாகவும் மறைமுகமாகவும் போட்டி நிலவுகிறது. எனினும், 70 மலாய் பேராசிரியர்களைக் கொண்ட குழு எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமை ஆதரிப்பதாக கூறியுள்ளதை அடுத்து, கடைசி நேரத்தில் பிரதமர் பதவிக்கான போட்டியில் அன்வார் முன்னிலை வகிப்பதாக பேச்சு எழுந்துள்ளது. அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான நம்பிக்கை கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) அதிக நாடாளுமன்ற இடங்களைப் பிடிக்கும் என்றும், ஆனால் பெரும்பான்மை கிடைப்பது கடினம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. “தற்போது நிலைமை நன்றாக உள்ளது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என பினாங்கு மாநிலத்தில் வாக்களித்த பின்னர் அன்வார் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் கூறினார். தங்கள் கூட்டணி தனிப்பெரும்பான்மையை இலக்காக கொண்டுள்ளதாகவும், அது கிடைக்காத பட்சத்தில் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட தயார் என்று நடப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES மலேசிய பொதுத் தேர்தல்: வாக்காளர்களை கவர பணம், தமிழ் சினிமா பாடல்கள்15 நவம்பர் 2022 இஸ்மாயில் சப்ரி: மலேசிய துணைப் பிரதமர் 40 நாள்களில் பிரதமர் ஆனது எப்படி?21 ஆகஸ்ட் 2021 கலைக்கப்பட்ட மலேசிய நாடாளுமன்றம்; தேர்தல் வேண்டாம் எனப் பதறும் எதிர்க்கட்சிகள்10 அக்டோபர் 2022 மலேசிய நாடாளுமன்றத்தில் மொத்தம் 222 இடங்கள் உள்ளன. பாடாங் செராய் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் காலமானதால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 221 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு மலேசியாவில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் எந்த கூட்டணி 90 முதல் 100 தொகுதிகளைக் கைப்பற்றுகிறதோ, அந்த கூட்டணியே ஆட்சி அமைக்கும், வலிமையைப் பெறும் என்கிறார் செல்லியல் இணையதள ஆசிரியர் இரா.முத்தரசன். வாக்குப்பதிவுக்காக விடுமுறை அளிக்கப்பட்டதால், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சாலைகள் போக்குவரத்து இன்றி அமைதியாக காணப்படுகின்றன. இன்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டு, நள்ளிரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/cjr29827n18o
 14. காசி தமிழ்ச் சங்கமம் யோசனை மோதிக்கு எப்படி வந்தது என வியக்கிறேன்: இளையராஜா 19 நவம்பர் 2022, 10:36 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் "பெருமை மிகுந்த காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்தும் யோசனை பிரதமர் நரேந்திர மோதிக்கு எப்படி வந்தது என்று வியந்துகொண்டிருக்கிறேன்" என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசினார். தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் நூற்றாண்டு கால தொடர்பு நீடித்து வருவது பெருமை தருவதாக உள்ளது என்றும் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோதி நடத்த முடிவு செய்ததை எண்ணி வியப்பதாகவும் இசைஞானி இளையராஜா வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தெரிவித்தார். வாரணாசியில் ஒரு மாதம் நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்ட இளையராஜா, பாரதியார் காசியில் தங்கியிருந்த இரண்டு ஆண்டுகளில் பலவற்றை கற்றுக்கொண்டார், கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்ஷிதர் காசியில் தேசாந்திரியாக திரிந்து அனுபவங்களை பெற்றவர் என்றார். ''இந்தியாவில் நதிநீர் இணைப்பு குறித்து 22 இளவயதில் பாரதியார் பாடி சென்றார். தற்போதுதான் நாம் அது பற்றி பேசுகிறோம். காசி நகரத்திற்கும், தமிழகத்திற்கும் பல ஆண்டுகளாக தொடர்பு நீடிப்பது பெருமைக்குரியது,''என்றார் இளையராஜா. அது தவிர, நிகழ்ச்சியில், நான் கடவுள் படத்தில் இடம்பெற்ற ஓம் சிவகோம் பாடலை இளையராஜா வழங்கினார். கலைமாமணி ஷேக் சின்ன மௌலானா குடும்பத்தை சேர்ந்த காசிம் நாதஸ்வரம் வாசித்தார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பங்கேற்றார் பிரதமர் நரேந்திர மோதி. மதுரை ஆதீனத்திடம் அவர் ஆசி பெற்றார். முன்னதாக, கெமர் என்ற கம்போடிய மொழி உள்ளிட்ட 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் வெளியிட்டார். நரேந்திர மோதி பேசியது என்ன? நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, ''நம் நாட்டில் ஒரு கொள்கை உள்ளது. ஒரே உண்மை அது பல ரூபங்களில் வெளிப்படும். அதுபோல, காசியும்,தமிழ்நாடும் இரண்டுமே கலாச்சாரத்தில் சிறந்து விளங்குகின்றன. காசியும் தமிழ்நாடும் சிவமயமமானவை, சக்திமயமானவை. காசியில் விஸ்வநாதரும், ராமேஸ்வரத்தில் ராமநாதரும் இருப்பதால் இரண்டு இடங்களுக்கும் பெருமை. மொழி, பண்பாடு என எல்லா விஷயத்திலும் பாரம்பரியம் மிகுந்த காசியும், தமிழ்நாடும் பல ஞானிகள் பிறந்த நிலமாக இருந்துள்ளன. காசியில் துளசிதாசர் பிறந்தார், தமிழ்நாட்டில் திருவள்ளுவர் பிறந்தார். தமிழ்நாட்டில் நடக்கும் திருமண சடங்குகளில், காசிக்கு செல்வது என்ற சடங்கு உள்ளது. இதுபோல இந்த இரண்டு நகரங்களுக்கும் பல தொடர்புகள் உள்ளன. பனாரஸ் புடவைகள் போலவே காஞ்சிபுரம் புடவைகள் உலகம் முழுவதும் பிரபலமானவை,'' என்றார். ஒற்றுமை உணர்வு ஓங்கவேண்டும் என்று கூறிய அவர், இரண்டு இடங்களிலும் உள்ள ஞானிகள் ஒற்றுமையை ஏற்படுத்த பல முயற்சிகள் செய்தனர் என்றார். ''காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைகழகத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் அரும்பணி ஆற்றியுள்ளார். காசியில் உள்ள ஹனுமான்கட் பகுதியில் பல தமிழர்கள் இன்றும் வசிக்கிறார்கள். கேதார்நாத் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான குமாரசாமி மடம் செயல்படுகிறது. இதுபோல பலகாலமாக இரண்டு இடங்களுக்கும் நட்பு தொடர்கிறது. பாரதியார் காசியில் இருந்த சமயத்தில்தான் முறுக்கு மீசை வைத்துக்கொண்டார் என்று சொல்வார்கள். இதுபோன்ற சங்கமம் நிகழ்ச்சி மூலம்தான் ஒற்றுமையை மேலும் பலப்படுத்தமுடியும். தேசஒற்றுமையைதான் மந்திரங்கள் கூறுகின்றன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, ஒற்றுமையை பலப்படுத்தும் முயற்சிகள் செய்யப்பட்டிருக்கவேண்டும். பல்வேறு காரணங்களால் அவை நடக்கவில்லை. தற்போது, நாம் இந்த சங்கமம் நிகழ்ச்சிகள் மூலம் அதனை உறுதிபடுத்துவோம்,''என்றார். https://www.bbc.com/tamil/articles/c721j14xel5o
 15. பிரியா மரணம் | மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம்: அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு மாணவி பிரியா சென்னை: மாணவி பிரியா மரண வழக்கில் மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள இரண்டு மருத்துவர்களை, மூன்று தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் தீவிரமாக போராட்டம் நடத்துவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சங்க மாநிலத் தலைவர் செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணம் தொடர்பாக சங்கம் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. முதல்வரும், தமிழக அரசும் இறந்த குடும்பத்தாருக்கு வழங்கிய ஆறுதலையும் உதவி தொகைக்கும் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அதே சமயம் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலில் மருத்துவ சிகிச்சையின் போது ஏற்பட்ட இறப்பில் பொதுவாக அந்த துறை மூத்த ஸ்பெஷலிஸ்ட் கருத்தை காவல் துறை பெற வேண்டும். அவ்வாறு மூத்த ஸ்பெஷலிஸ்ட் அந்த மரணத்தில் மருத்துவ சிகிச்சையின் போது கடும் கவனக்குறைவு (Criminal Negligence) இருக்கிறது என்று கூறினால் மட்டுமே காவல்துறை 304 A பிரிவில் வழக்கு தொடர வேண்டும். அப்படி 304 A பிரிவில் வழக்கு தொடர்ந்தாலும் டாக்டர்களை கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. தற்போது நடந்த மரணத்தில் கிரிமினல் கவனக்குறைவு இருப்பதாக சிறப்பு மருத்துவர் குழு அறிக்கை கொடுக்கவில்லை. சிவில் கவனக்குறைவு இருப்பதாகவே அறிக்கை அளித்து இருக்கிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் மீறி தமிழக காவல்துறை கிரிமினல் வழக்கில் மருத்துவர்களை சேர்த்து அவர்களை தனிப்படை அமைத்து தேடி வருவதாக செய்திகள் வருகிறது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாமல் மருத்துவர்களை கொலை குற்றவாளி போல முன்ஜாமீன் மறுத்து உடனடியாக சரணடைய கூறி இருப்பது நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களையும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது. இந்த நிகழ்வில் சிவில் கவன குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே மருத்துவர்கள் மீது எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் மருத்துவரின் பெயர்களையோ, புகைப்படங்களையோ ஊடகத்தில் கிரிமினல் குற்றவாளிகளை போல வெளியிட வேண்டாம் என்றும் சங்கம் வேண்டுகோள் வைக்கிறது. நோயாளியின் காலை சிகிச்சை செய்யும் நோக்கில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, அதன் பின் கவனக்குறைவில் உயிர் சேதம் ஏற்பட்டது வருத்தமாக இருந்தாலும் அது சிவில் நெக்லிஜென்ஸில் மட்டுமே வரும். போலீஸ் நடவடிக்கை அதிகப்படியானது. மருத்துவர் செவிலியர் மற்றும் சுகாதார அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு எதிரானது என்று சங்கம் கருதுகிறது. எனவே மருத்துவர் மீது பதியப்பட்ட 304ஏ பிரிவு மாற்றப்பட வேண்டும். அதையும் மீறி மருத்துவர் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளது. தேவைப்பட்டால் மற்ற சுகாதார ஊழியர் சங்கங்களையும் சேர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல்பட்டவர்கள் தான். கவனக்குறைவினால் துரதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்பட்டது. சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. https://www.hindutamil.in/news/tamilnadu/900317-protest-across-the-state-if-doctors-are-arrested-in-student-priya-death.html
 16. மெஸ்ஸி - ரொனால்டோ இறுதிப் போட்டியில் மோதுவதற்கு வாய்ப்பிருக்கிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கால்பந்து என்றால் இந்தியாவில் அதிகமாகத் தெரியும் சர்வதேச நட்சத்திரங்கள் அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸியும். போர்ச்சுகலின் ரொனால்டோவும்தான். கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் இவர்கள் இருவரும் மோதுவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வி இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுவது இயல்பு. உண்மையில் அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் மோதும் கத்தார் உலகக் கோப்பை போட்டியில் 4 அணிகளைக் கொண்ட 8 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குச் செல்லும். அதன் பிறகு காலிறுதி, அரையிறுதிப் போட்டிகளைக் கடந்த இறுதிப் போட்டிக்குச் செல்ல வேண்டும். லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் மோத வேண்டும். ஆக, இறுதிப் போட்டியை எட்டுவதற்கு முதல் ஆறு போட்டிகளைக் கடந்தாக வேண்டும். முதல் சுற்றில் போர்ச்சுகல் அணி எச் பிரிவில் இடம்பெற்றிருக்கிறது. உருகுவே, கானா, தென்கொரியா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிவு இது. மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி சி பிரிவில் இடம்பெற்றிருக்கிறது. சௌதி அரேபியா, மெக்சிகோ, போலந்து ஆகிய அணிகள் இந்தப் பிரிவில் இடம்பெற்றிருக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES 12 நாட்கள் நீடிக்கும் குழு சுற்றுப் போட்டிகளின்போது, ஒவ்வொரு நாளும் நான்கு போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கடைசி 16 அணிகள் மோதும் கட்டத்திற்கு முன்னேறும். மெஸ்ஸிக்கும் ரொனால்டோவுக்கும் இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் என்று கருதப்படும் தருணத்தில் அந்த இருவரும் இறுதிப் போட்டியில் மோதிக் கொள்வார்களா என்ற விவாதம் எழுந்திருக்கிறது. இதற்கு விவாதத்துக்கு விதைபோட்டது சில நாள்களுக்கு முன்பு வெளியான ஒரு கணிப்பு. வீடியோ கேம்களை உருவாக்கும் EA Sports நிறுவனம் வெளியிட்ட இந்தக் கணிப்பில் அர்ஜென்டினாவும் பிரேசிலும் இறுதிப் போட்டியில் மோதும் என்றும் அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்றும் கூறியிருந்தது. அரையிறுதிப் போட்டியில் போர்ச்சுகல், பிரான்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெறும் என்னும் அவரை முறையே பிரேசில், அர்ஜென்டினா ஆகிய அணிகளிடம் தோல்வியடையும் என்றும் இந்தக் கணிப்பில் கூறப்பட்டிருந்தது. 2010, 2014, 2018 ஆகிய மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் தங்களது கணிப்பு சரியாக இருந்ததாகவும் அந்த நிறுவனம் கூறியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் இந்தக் கணிப்புகளை சமீபத்திய பேட்டி ஒன்றில் போர்ச்சுகல் நட்சத்திரம் ரொனால்டோ ஏற்கவில்லை. முதல் ஆறு போட்டிகளிலும் கடுமையாகப் போராடுவோம் என்று அவர் கூறியிருக்கிறார். மெஸ்ஸி பற்றிய கேள்விக்கு, “அவர் அற்புதமான ஆட்டக்காரர், அவர் ஒரு மாயாஜாலம்” என்று கூறியிருக்கிறார் ரொனால்டோ. போர்ச்சுகல் அணி இதுவரை உலகக் கோப்பையை வெல்லவில்லை. முதல் முறையாக அதைப் பெறுவதற்கு ரொனால்டோ முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதிருக்கும் அட்டவணைப்படி அர்ஜென்டினாவும் போர்ச்சுகலும் நேரடியாக மோத வேண்டுமெனில் இரு அணிகளும் குறைந்தபட்சம் அரையிறுதிப் போட்டிக்காவது தகுதி பெற வேண்டும். ஏனெனில் காலிறுதி வரை சி பிரிவு அணிகளும் எச் பிரிவு அணிகளும் மோதுவதற்கு வாய்ப்பில்லை. அர்ஜென்டினா அணி இதுவரை இரு முறை உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. மூன்று முறை இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறது. பிரேசில் அணி இதுவரை 5 முறை உலகக் கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாகத் திகழ்கிறது. 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது, குரோஷிய அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அர்ஜென்டினா, பிரேசில், போர்சுகல் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES கத்தார் ஃபிஃபா உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் எவை? லுசைல் ஸ்டேடியம் (கொள்ளளவு- 80,000) அல் பேத் ஸ்டேடியம் (கொள்ளளவு- 60,000) ஸ்டேடியம் 974 (கொள்ளளவு- 40,000) கலீஃபா சர்வதேச அரங்கம் (கொள்ளளவு- 45,416) எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000) அல் துமாமா ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000) அல் ஜனுப் ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000) அகமது பின் அலி ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000) உலக கோப்பை 2022 அட்டவணையில் உள்ள பிரிவுகள் என்னென்ன? 32 அணிகள், நான்கு அணிகள் கொண்ட 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குழு A: கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து குழு B: இங்கிலாந்து, இரான், அமெரிக்கா, வேல்ஸ் குழு அர்ஜென்டீனா, செளதி அரேபியா, மெக்சிகோ, போலந்து குழு பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனீஷியா குழு E: ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஜெர்மனி, ஜப்பான் குழு F: பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோயேஷியா குழு G: பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் குழு H: போர்ச்சுகல், கானா, உருகுவே, கொரிய குடியரசு 12 நாட்கள் நீடிக்கும் குழு சுற்றுப் போட்டிகளின்போது, ஒவ்வொரு நாளும் நான்கு போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கடைசி 16 அணிகள் மோதும் கட்டத்திற்கு முன்னேறும். பட மூலாதாரம்,GETTY IMAGES FIFA உலக கோப்பை போட்டி ஏன் குளிர்காலத்தில் நடத்தப்படுகிறது? FIFA உலக கோப்பை போட்டிகள் வழக்கமாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும். ஆனால் கத்தாரில் ஆண்டின் இந்த மாதங்களில் சராசரி வெப்பநிலை சுமார் 41 °C மற்றும் 50 °C ஐ எட்டும். இத்தகைய வெப்பம் ஆபத்தானது. அத்தகைய சூழ்நிலையில் 90 நிமிடங்கள் விளையாடுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏலத்தின் போது, கத்தார் மேம்பட்ட ஏர் கண்டிஷனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக உறுதியளித்தது. இது மைதானங்கள், பயிற்சி மைதானங்கள் போன்ற இடங்களை 23 டிகிரி செல்சியஸ் வரை குளிர்விக்கும் என்று கூறப்பட்டது. இருப்பினும், 2015 இல், போட்டியை குளிர்காலத்தில் நடத்த ஃபிஃபா முடிவு செய்தது. உலகக் கோப்பை போட்டி நவம்பர் 21-ம் தேதி தொடங்கி இறுதிப்போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. அதாவது, பல நாடுகளின் கிளப் கால்பந்து சீசனின் நடுப்பகுதியில் இது வரும். இதன் காரணமாக அவர்கள் குறுக்கீடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். https://www.bbc.com/tamil/articles/cx9eyge8nn8o
 17. உலகில் ஒருவரைப் போல மற்றொருவர் இருக்க என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெர்மனி கால்பந்து வீரர் மெசுட் ஓசில் மற்றும் ஃபெராரி அணியின் நிறுவனர் என்சோ ஃபெராரி 18 நவம்பர் 2022 ஆக்னஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவரை அணுகிய ஓர் ஆண் ஆக்னஸிற்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார். அந்த நபர் நினைக்கும் நபர் நாம் இல்லை என்று உணர ஆக்னஸிற்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அதை அவர் தெளிவுபடுத்தியதும், ஆக்னஸை போன்று இருக்கும் ஒருவரை தனக்கு தெரியுமென அந்த நபர் கூறினார். தன்னைப் போன்று இருக்கும் எஸ்டர் என்ற பெயர் கொண்ட அந்த நபரை முதலில் ஃபேஸ்புக் வழியாக ஆக்னஸ் சந்தித்தார். பின்னர், இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டனர். “தோற்றம் மட்டுமல்ல, எங்களுடைய பண்புகளும் ஒரே மாதிரியாக இருந்தன” என்கிறார் எஸ்டர். தன்னில் ஒரு பகுதியை மற்றொருவரிடம் பார்ப்பது எஸ்டருக்கு வினோதமாகவும் விசித்திரமாகவும் இருந்தது. “ஆக்னஸும் நானும் குணத்திலும் ஆர்வத்திலும் ஒரே மாதிரியாக இருந்தது மேலும் சிறப்புமிக்கதாக இருந்தது. எங்களுக்கு இசை, உடைகள், டாட்டூ ஆகியவற்றில் ஒரே மாதிரியான ரசனை இருந்தது” என்றும் எஸ்டர் கூறுகிறார். எஸ்டருக்கு 32 வயது, ஆக்னஸிற்கு 28 வயது. அவர்கள் இருவரும் கனடாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஃபிராங்கோயிஸ் ப்ருனெலின் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். அவர் தான் பிபிசி முண்டோ சேவையிடம் இவர்கள் கதையைப் பகிர்ந்தவர். அவர்களைப் பார்த்தபோது, அவர்கள் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டு தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக ஃபிராங்கோயிஸ் ப்ருனெல் நினைவுகூர்ந்தார். உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள எந்தவித தொடர்பும் இல்லாத ஒத்த தோற்றம் கொண்டவர்களைக் காட்சிப்படுத்துவதற்காக பல ஆண்டுகளை அவர் செலவழித்துள்ளார். கீழேயுள்ள ஆக்னஸ் மற்றும் எஸ்டரின் இந்தப் படம்தான் 2015ஆம் ஆண்டு அவர் எடுத்தது. பட மூலாதாரம்,FRANÇOIS BRUNELLE படக்குறிப்பு, ஆக்னஸ் மற்றும் எஸ்டர் ‘ஐம் நாட் ஏ லுக் அலைக்’(I'm not a look-alike) என்ற ப்ரூனெல்லின் திட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானவர்களில் ஆக்னஸ் மற்றும் எஸ்டரும் அடங்கும். சாதாரண நபர்கள் பிரபலங்களைப் போல இருப்பது தொடர்பாக நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இணையத்தில் இருப்பதால் இது குறித்து நீங்கள் முன்னரே அறிந்திருக்கலாம். ஃபெராரி அணி நிறுவனர் இத்தாலியைச் சேர்ந்த என்சோ ஃபெராரி மற்றும் துருக்கி வம்சாவளி ஜெர்மன் கால்பந்து வீரர் மெசுட் ஓசில் ஆகியோரின் தோற்ற ஒப்பீடு சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமானது. ப்ரூனெல் தனது திட்டத்தைத் தொடங்கியபோது, இது அறிவியல் ஆராய்ச்சிக்கு முன்னோடியாக மாறும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. குடும்ப உறவுகள் அல்லாத நபர்களுக்கு இடையேயான உடல் ஒற்றுமையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருந்த பார்சிலோனாவில் உள்ள ஜோசப் கரேராஸ் லுகேமியா ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் குழு ப்ருனெல்லை தொடர்புகொண்டது. அதன் இயக்குநரும், பார்சிலோனா பல்கலைக்கழக மருத்துவத்துறையின் மரபியல் பேராசிரியருமான மானெல் எஸ்டெல்லர், ஆய்வுக்கு தலைமை தாங்கினார். அவர் பிபிசி முண்டோ சேவையிடம் சில சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறினார். வலி என்பது என்ன? இரவில் அதிகமாக வலி எடுப்பது ஏன்?17 நவம்பர் 2022 செவ்வாயில் உயிர்கள் உள்ளதா? 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகள் சொல்லும் ரகசியங்கள்14 நவம்பர் 2022 வேற்றுகிரகவாசிகள் விண்வெளியில் இருப்பதைக் கண்டுபிடிக்க உதவும் ஃபார்முலா15 நவம்பர் 2022 என்ன ஆய்வு? 2016ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், கடந்த ஆகஸ்ட் மாதம் Cell Reports என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டன. 'Look-alike humans identified by facial recognition algorithms show genetic similarities' என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரையில், ஒரே மாதிரியான முகத்தோற்றம் கொண்ட தொடர்பில்லாத நபர்களை அடையாளம் காணுவதை இந்த ஆராய்ச்சி நோக்கமாக கொண்டிருந்ததாக அதன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆராய்ச்சியாளர்கள் ப்ரூனெல்லை தொடர்புகொண்டபோது, அவருடைய திட்டத்தில் பங்கேற்ற 32 தன்னார்வ ஜோடிகள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். அவர்களின் புகைப்படங்கள் முகத்தை அடையாளம் காணும் மூன்று நவீன மென்பொருள் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. பட மூலாதாரம்,FRANÇOIS BRUNELLE "இவை ஒரு முகத்தை மற்றொன்றுடன் ஒப்பிடும்போது எவ்வளவு ஒற்றுமை உள்ளது என்பதைக் கண்டறியும் முறை" என்று எஸ்டெல்லர் கூறினார். உதாரணமாக, இந்த முறை இரட்டையர்களிடம் பயன்படுத்தப்பட்ட போது ஒற்றுமை விகிதம் 90 முதல் 100 சதவிகிதம் வரை இருந்தது. தொடர்பில்லாத நபர்களிடம் முக ஒற்றுமையைக் கண்டறிய நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அதிக ஒற்றுமை விகிதம் கண்டறியப்பட்டது. 75 சதவிகித ஜோடிகள் ஒற்றுமை கொண்டிருப்பதாக குறைந்தபட்சம் இரண்டு மென்பொருள் கூறுவதாக அந்நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முறை இரட்டையர்களை அடையாளம் காணக்கூடிய மனிதர்களின் திறனுக்கு மிக நெருக்கமானது என்று எஸ்டெல்லர் கூறுகிறார். ஆய்வில் கலந்துகொண்ட 16 ஜோடிகள் மிகவும் ஒத்த அடையாளம் கொண்டிருப்பதாக மூன்று மென்பொருள் சோதனையில் தெரியவந்தது. ஆய்வு முடிவுகள் பங்கேற்பாளர்களின் உயிரியல் மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு நாடுகளில் இருப்பதால் அதைப் பெறுவது சற்று கடினமாக இருந்ததாக எஸ்டெல்லர் கூறுகிறார். எனவே உமிழ்நீரில் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. “நாங்கள் உயிரியல் மாதிரிகள், ஜீனோம், எபிஜீனோம், மைக்ரோபயோம் ஆகியவற்றை ஆய்வு செய்தோம்” என்று எஸ்டெல்லர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES மரபியல் அவர்களை ஒன்றாக இணைத்தது. அதே சமயம் எபிஜெனெடிக்ஸ் மற்றும் மைக்ரோபயோம் அவர்களை தூரப்படுத்தியது. “அவர்களுக்கு இடையே எந்தவித தொடர்பும் இல்லாத போதும் ஒரே மாதிரியான மரபணு மற்றும் டிஎன்ஏ வரிசைகள் இருந்தது இந்த ஆய்வு முடிவுகளில் கிடைத்த முக்கிய விஷயம். இந்த தன்னார்வலர்களின் குடும்ப வரலாறை சில நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்று ஆராய்ச்சியாளர்கள் பார்த்த போதிலும் அவர்களுக்கு இடையே பொதுவான உறவினர்கள் யாரும் இல்லை” என்றும் அவர் கூறுகிறார். நிபுணர்கள் குறிப்பிடும் அந்தக் குறிப்பிட்ட டிஎன்ஏ வரிசைகள் நம் முகத்தின் சிறப்பியல்பு அம்சங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவை. இருவர் மிகவும் ஒத்திருப்பது லாட்டரி வாங்குவது போன்றது. நீங்கள் பரிசை வெல்வது மிகக் கடினம், ஆனால் திடீர் அதிர்ஷ்டம் வரலாம். "இரண்டு நபர்களுக்கும் இடையே தொடர்பில்லாத போதிலும், முடிவில் அவர்களுக்கு ஒரே வடிவத்தை அளிக்கக் கூடிய மரபணு மாறுபாடுகள் உள்ளன" என்கிறார் எஸ்டெல்லர். அதாவது, அவர்கள் டிஎன்ஏவின் சில பண்புகள் ஒத்துள்ளன. “தங்களின் புருவங்களை அடர்த்தியாக்கும் பண்பு கொண்ட ஒரு மரபணு, உதடுகளை தடிமனாக்கும் பண்பு கொண்ட ஒரு மரபணு மற்றும் சில குறிப்பிட்ட பண்புகள் கொண்ட மரபணுக்கள் தொடர்பில்லாத இருவரிடம் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இவை அனைத்தும் ஒன்றாக இணையும் போது, அவர்களின் முகம் ஒரே மாதிரியான தோற்றத்தில் உள்ளது” என்கிறார் எஸ்டெல்லர். உடலமைப்பைத் தாண்டி பிற ஒற்றுமைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்மித்சோனியன் இதழில் சாரா குடா சுட்டிக்காட்டியுள்ளபடி, மரபியல் துறையில் இந்த ஆய்வு புதிய சாதனையைப் படைத்துள்ளது. தங்கள் பழக்கவழக்கங்களைப் பற்றிய 60க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கொண்ட வினாத்தாள் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டு, அதற்கு பதிலளிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். "அவர்கள் அதில் ஒத்திருக்கிறார்களா என்பதைப் பார்க்க இந்த ஆய்வு செய்யப்பட்டதாகவும், சில சமயங்களில் அதில் ஒற்றுமைகள் வெளிப்பட்டதாகவும் கூறும் பேராசிரியர், எடை, வயது, உயரம் போன்ற பிற உடல் அம்சங்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டதாகக் கூறுகிறார். மிகவும் ஒரே மாதிரி இருந்த 16 ஜோடிகளில் செய்யப்பட்ட ஆய்வில், "பலர் ஒரே மாதிரியான எடை கொண்டிருந்தனர் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை பகுப்பாய்வும் ஒற்றுமைகள் இருப்பதைக் காட்டியது" என்றும் அவர் கூறுகிறார். "புகைபிடிக்கும் நடத்தை மற்றும் கல்வி நிலை ஆகியவற்றிலும் ஜோடிகளில் ஒற்றுமை இருந்ததாகவும், பகிரப்பட்ட மரபணு மாறுபாடு உடல் தோற்றத்துடன் தொடர்புடையது மட்டுமல்ல, பொதுவான பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தையிலும் தாக்கம் கொண்டிருக்கலாம் என்று அந்நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. 'சைக்கோபாத்' பெண்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?16 நவம்பர் 2022 காதுக்குள் 'இயர் பட்ஸ்' இருந்தது தெரியாமல் 5 ஆண்டுகளாக வலியோடு வாழ்ந்தவர்16 நவம்பர் 2022 7,80,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் உணவு சமைத்ததற்கான ஆதாரங்கள்16 நவம்பர் 2022 பயோமெடிசினில் இதன் சாத்தியமான பயன்பாடு குறித்தும் எஸ்டெல்லர் ஆராய விரும்புகிறார். "முகத்தின் வடிவத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மரபணுக்கள் மற்றும் அவற்றின் மாறுபாடுகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். எனவே மூக்கு, வாய், நெற்றி, காதுகளின் மரபணுக்கள் நோயறிதலிலும் உதவலாம்” என்கிறார் எஸ்டெல்லர். "ஒருவர் முகத்தில் இருந்து அந்த நபரின் மரபணுவை நாம் ஓரளவு அறிய முடியும். இது மரபணு நோய்களின் ஆரம்பநிலை கண்டறிதலுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றும் அவர் கூறுகிறார். சிறிய அளவிலான ஆய்வு இந்த ஆய்வு சிறிய அளவில் நடத்தப்பட்டது என்பதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இது சரியானது என்று நம்பும் அவர்கள், பெரிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டாலும் தங்களின் கண்டுபிடிப்புகள் மாறாது என்பதில் உறுதியாக உள்ளனர். "பெரிய அளவில் நடத்தப்படும் ஆய்வு, அதிக மரபணு மாறுபாடுகளை வழங்கும். மேலும், நமது முகங்களை வரையறுக்க உயிரியல் தரவுகளின் பிற அடுக்குகளின் பங்களிப்பை தெளிவுபடுத்துவதற்கும் அது பயனுள்ளதாக இருக்கும்" என எஸ்டெல்லர் அறிக்கையில் கூறியுள்ளார். “நம்மைப் போல 100 சதவிகிதம் ஒத்த நபர் இருப்பது கடினம். ஆனால், 75 சதவிகிதம், 80 சதவிகிதம் வேறுபாடு கொண்ட நபர்கள் உலகில் பலர் உள்ளனர். எனவே நாம் சரியான நேரத்தில் இருக்கிறோம்” என்று பிபிசி முண்டோ சேவையிடம் எஸ்டெல்லர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக ஒரே மாதிரியாக இருக்கும் அந்நியர்களை படம்பிடித்து அதில் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ள ப்ரூனெல், "ஒருமுறை உங்கள் மேற்பரப்பைக் கொஞ்சம் சுரண்டினால், அனைத்து இடங்களிலும் மக்கள் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நாம் எப்படி இருந்தாலும் நாம் ஓர் இனம்” என்கிறார். https://www.bbc.com/tamil/articles/c041982ymm0o
 18. வட மாகாணத்தின் காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - ஜனாதிபதி தெரிவிப்பு By T. SARANYA 19 NOV, 2022 | 02:45 PM காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். இதன்படி வடக்கு மற்றும் தெற்கில் நிலவும் காணிப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (19) முற்பகல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றதுடன், அந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். மாகாணத்தில் காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அதற்காக வடமாகாணத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். வடக்கில் இதுவரையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேவையான தீர்வுகளை வழங்குவதற்கு அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார். செட்டிகுளம் பகுதியில் 1994 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் வழங்கப்படாமைக் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இங்கு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். செட்டிகுளம் பிரதேசத்தின் காணிப்பிரச்சினை தொடர்பில் மத்தியஸ்தம் செய்து 03 மாதங்களுக்குள் தீர்வுகாணுமாறு வவுனியா மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இது தொடர்பில் நீதியமைச்சு மற்றும் காணி அமைச்சிடம் விசாரணை செய்வதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. வடமாகாண மக்களின் வீட்டுப் பிரச்சினை தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாகவும், அதற்கு மேலும் சுமார் மூவாயிரம் மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், நாடளாவிய ரீதியில் தற்போது பல வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், வடக்கு மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். வவுனியா குளம் மற்றும் திருக்குளம் குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களின் தேவைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார். மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைத்தல், உரப்பிரச்சினைக்கு தீர்வு காணல் மற்றும் விநியோக நடவடிக்கைகளை சீர்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. வடமாகாணத்தில் நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் வைத்தியர் பற்றாக்குறை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தேவையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகத்தில் இடம்பெறும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதுர்தீன் விளக்கமளித்ததுடன், அது தொடர்பில் விரைவாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகர அபிவிருத்தி வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், றிசாத் பதுர்தீன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/140534
 19. யாழில் உணவகங்கள் மீது திடீர் பரிசோதனை..! By T. SARANYA 19 NOV, 2022 | 02:55 PM யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று நடத்திய திடீர் பரிசோதனை நடவடிக்கையில் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேடுகள் தொடர்பிலும் எச்சரிக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மாநகரில் அமைந்துள்ள உணவகங்களில் திடீர் பரிசோதனக்களை முன்னெடுத்தனர். குளிர்சாதனப் பெட்டியில் சுகாதார சீர்கேடாகவும் தீங்கு விளைவிக்கும் வகையில் வைத்திருக்கப்பட்ட மீன், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அழிக்கப்பட்டன. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான நிற ஊட்டிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களும் அழிக்கப்பட்டன. அத்துடன் உணவகம், ஊழியர்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் எடுத்துரைத்ததுடன் இரண்டு வாரங்களுக்கு அனைத்தும் சீர் செய்யப்படாவிடின் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவக உரிமையாளர்கள் எச்சரிக்கைப்பட்டனர். https://www.virakesari.lk/article/140537
 20. மகளை உலகுக்குக் காட்டிய வடகொரிய அதிபர் கிம் - புகைப்படங்களால் எழும் புதிய கேள்விகள் பட மூலாதாரம்,KCNA VIA REUTERS படக்குறிப்பு, வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் மற்றும் அவருடைய மகள் கிம் சூ-ஏ 59 நிமிடங்களுக்கு முன்னர் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தனது இளம் மகளுடன் முதன்முறையாக பொதுவெளிக்கு வந்ததன் மூலம், அவருடைய மகளின் இருப்பு குறித்து நிலவி வந்த வதந்தி உறுதியாகியுள்ளது. அவர் பெயர் கிம் சூ-ஏ என நம்பப்படுகிறது. கடந்த வெள்ளியன்று நாட்டின் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை ஆய்வு செய்த போது கிம் ஜாங்-உன்னுடன் அவர் இருந்தார். அப்போது இருவரும் கைகோர்த்து நின்றனர். உலகின் மிக ரகசியமான நாட்டை ஆட்சி செய்துவரும் கிம் ஜாங்-உன்னின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியுலகிற்கு பெரிதும் தெரியாது. இந்த சோதனையின் போது இருவரும் கைகோர்த்து நின்று பேசிக்கொண்டிருந்த சில புகைப்படங்களை வடகொரியாவின் தேசிய செய்தி முகமை கேசிஎன்ஏ வெளியிட்டுள்ளது. கிம் சூ-ஏ பொதுவெளியில் தோன்றியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்கிறார் வாஷிங்டன் டிசியில் உள்ள ஸ்டிம்சன் மையத்தின் வட கொரியா நிபுணர் மைக்கேல் மேடன். வடகொரியாவை ஆட்சி செய்யும் கிம் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த கிம் ஜாங்-உன், அதிகாரத்தில் தன்னுடைய பிடி இன்னும் இருப்பதை வெளிப்படுத்திவருவதாக மைக்கேல் மேடன் பிபிசியிடம் தெரிவித்தார். இது, அதிகாரத்திற்கான நான்காம் தலைமுறை என்னுடைய ரத்த வழியில் இருந்து வரும் என்று கிம் ஜாங்-உன் சொல்லும் முறையாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,KCNA VIA REUTERS படக்குறிப்பு, நெடுந்தொலைவு ஏவுகணைகளால் தென்கொரியா, ஜப்பானை அச்சுறுத்திய வடகொரியா3 நவம்பர் 2022 வடகொரிய அதிபருக்கு வந்த 'காய்ச்சலுக்கு' தென்கொரியா எப்படி காரணமாகும்? சகோதரி தந்த விளக்கம்11 ஆகஸ்ட் 2022 ஜப்பானுக்கு மேலே பாலிஸ்டிக் ஏவுகணை செலுத்திய வட கொரியா - தென் கொரியா, அமெரிக்கா எதிர்வினை4 அக்டோபர் 2022 கிம்மிற்கும் அவரது கூட்டாளிகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக கடந்த 2021ஆம் ஆண்டு செய்திகள் வெளியான நிலையில், தற்போது கிம் சூ-ஏ பொதுவெளிக்கு வந்திருப்பதாக கூறும் மைக்கேல் மேடன், என்னை எதிர்த்தால் நீங்கள் வீழ்த்தப்படுவீர்கள் என்பது அதிபர் கிம் சொல்லும் சேதி என்கிறார். கிம் சூ-ஏவுக்கு 12லிருந்து 13 வயது இருக்கலாம் என நம்பும் மேடன், இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் அவர் பல்கலைகழகத்திற்கு அல்லது ராணுவ சேவைக்கு தயாரகிவிடுவார் என்றும் கூறுகிறார். நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் கிம் சூ-ஏ காணொளியில் காட்டப்பட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் பல வடகொரிய நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், அவர் அதிபரின் மகள் என்பதை வடகொரிய தலைமை உறுதிசெய்யாததால், இது வெறும் ஊகமாகவே இருந்தது. அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் டெனிஸ் ரோட்மேனின் சர்ச்சைக்குரிய வடகொரிய பயணத்திற்குப் பிறகு முதன்முறையாக 2013ஆம் ஆண்டு கிம் சூ-ஏ குறித்து வெளியுலகிற்கு தெரியவந்தது. கிம் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்ததாகவும், அவர்களுடைய குழந்தை கிம் சூ ஏவை கையில் வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஓர் ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், அதில் கிம் சூ-ஏ மூத்தவர் என்றும் வல்லுநர்கள் நம்புகின்றனர். ஆனால், தன்னுடைய குடும்பம் பற்றிய விஷயங்களை கிம் மிக ரகசியமாக வைத்துள்ளார். அவரின் திருமணத்திற்குப் பிறகு சில காலம் வரை அவரது மனைவி பற்றிய விவரங்கள் கூட ரகசியமாகவே இருந்தன. https://www.bbc.com/tamil/articles/cv2q95j4q3zo
 21. உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாறும் நடந்துமுடிந்த அத்தியாயங்களும் - 2 19 NOV, 2022 | 06:39 AM (நெவில் அன்தனி) 6. ஆறாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - பிரேஸில் முதல் தடவையாக சம்பியனானது உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் 6ஆவது அத்தியாயம் சுவீடனின் 12 நகரங்களில் 1958 ஜூன் 8ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை நடத்தப்பட்டது. 16 நாடுகள் 4 குழுக்களில் லீக் சுற்றில் விளையாடின. அப் போட்டியில் ஐக்கிய இராச்சியத்தின் 4 நாடுகளும் (இங்கிலாந்து, வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ்) முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றிருந்தன. சோவியத் யூனியன் முதல் தடவையாக பங்குபற்றியதுடன் 1934க்குப் பின்னர் ஆர்ஜன்டீனா மீண்டும் உலகக் கிண்ணப் போட்டிக்கு திரும்பியது. முன்னாள் சம்பியன்களான இத்தாலி, உருகுவே ஆகிய நாடுகள் 6ஆவது அத்தியாயத்தில் விளையாட தகுதி பெறவில்லை. உலகக் கால்பந்தாட்டத்தில் பிரேஸிலின் ஆதிக்கம் 1958 உலகக் கிண்ணப் போட்டியின்போதே வெளிப்பட ஆரம்பித்தது. அத்துடன் உலகப் பிரசித்திபெற்ற கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலே, தனது 18ஆவது வயதில் உலகக் கிண்ணப் போட்டியில் அறிமுகமானார். அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் 16 வயது வீரராக அவர் பிரேஸில் தேசிய அணியில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. லீக் சுற்று முடிவில் 4 குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதி பெற்றன. முதலாவது அரை இறுதியில் பிரான்ஸை 5 - 2 என்ற கோல்கள் கணக்கில் பிரேஸிலும் இரண்டாவது அரை இறுதியில் பிரான்ஸை 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் சுவீடனும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டியில் சுவீடனை 5 - 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி கொண்டு பிரேஸில் முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றெடுத்தது. அத்துடன் வேற்றுக் கண்டத்தில் சம்பியனான முதலாவது நாடு என்ற பெருமையை பிரேஸில் தனதாக்கிக்கொண்டது. அதற்கு முன்னர் உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்ற கண்டத்தைச் சேர்ந்த நாடொன்றே சம்பியனாகியிருந்தது. பங்குபற்றிய நாடுகள் 16: ஆர்ஜன்டீனா, ஒஸ்திரியா, பிரேஸில், செக்கோஸ்லோவாக்கியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சமஷ்டி குடியரசு ஜேர்மனி, ஹங்கேரி, மெக்சிகோ, வட அயர்லாந்து, பரகுவே, ஸ்கொட்லாந்து, சோவியத் யூனியன், சுவீடன், வேல்ஸ், யூகோஸ்லாவியா. 7. ஏழாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது பிரேஸில் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் ஏழாவது அத்தியாயம் சிலியில் 4 நகரங்களில் 1962 மே 30ஆம் திகதியிலிருந்து ஜூன் 17ஆம் திகதிவரை நடைபெற்றது. வழமைபோல் 1962 உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றிலும் 16 நாடுகள் பங்குபற்றின. கொலம்பியாவும் பல்கேரியாவும் முதல் தடவையாக உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றன. 1958இல் இரண்டாம் இடத்தைப் பெற்ற சுவீடனும் 3ஆம் இடத்தைப் பெற்ற பிரான்ஸும் 1962 உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்கு தகுதிபெறாதது வியப்பை ஏற்படுத்தியது. வழமைபோல் 4 குழுக்களில் லீக் சுற்று நடத்தப்பட்டு லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்றன. ஒரு அரை இறுதிப் போட்டியில் அப்போதைய நடப்பு சம்பியன் பிரேஸில் 4 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வரவேற்பு நாடான சிலியை வெற்றிகொண்டது. மற்றைய அரை இறுதியில் யூகோஸ்லாவியாவை 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் செக்கோஸ்லோவாக்கியா வெற்றிகொண்டது. இறுதிப் போட்டியில் செக்கோஸ்லோவாக்கியா 15ஆவது நிமிடத்தில் முதலில் கோல் போட்டு பிரேஸிலை அதிரச் செய்தது. ஆனால் 2 நிமிடங்களில் கோல் நிலையை சமப்படுத்திய பிரேஸில் இறுதியில் 3 - 1 என்ற கொல்கள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது. அதன் மூலம் இத்தாலிக்கு (1934, 1938) அடுத்ததாக சம்பியன் பட்டத்தை தக்கவைத்த இரண்டாவது நாடு என்ற பெருமையை பிரேஸில் பெற்றுக்கொண்டது. பங்குபற்றிய நாடுகள் 16: ஆர்ஜன்டீனா, பிரேஸில், பல்கேரியா, சிலி, கொலம்பியா, செக்கோஸ்லோவாக்கியா, இங்கிலாந்து, சமஷ்டி குடியரசு ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி, மெக்சிகோ, சோவியத் யூனியன், ஸ்பெய்ன், சுவிட்சர்லாந்து, உருகுவே, யூகோஸ்லாவியா. 8. எட்டாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - சொந்த மண்ணில் சாதித்தது இங்கிலாந்து எட்டாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி இங்கிலாந்தின் 7 நகரங்களில் 1966 ஜூலை 11ஆம் திகதியிலிருந்து ஜூலை 30ஆம் திகதிவரை நடைபெற்றது. உருகுவே (1930), இத்தாலி (1934) ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக சொந்த மண்ணில் சம்பியனான மூன்றாவது நாடு இங்கிலாந்து ஆகும். இரண்டு தடவைகள் அடுத்தடுத்து சம்பியான நாடு என்ற அந்தஸ்துடன் 8ஆவது உலகக் கிண்ணப் போட்டியில் மிகுந்து எதிர்பார்ப்புடன் பங்குபற்றிய பிரேஸில், முதல் சுற்றுடன் வெளியேறியது. அறிமுக அணிகளான வட கொரியா கால் இறுதிவரையும் போர்த்துக்கல் அரை இறுதிவரையும் முன்னேறி பாராட்டைப் பெற்றன. லீக் சுற்றில் இத்தாலியை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வட கொரியா வெற்றிகொண்டமை உலகக் கிண்ண வரலாற்றில் மிகப் பெரிய தலைகீழ் முடிவாக அப்போது இருந்தது. ஆபிரிக்க நாடுகள் தகுதிகாண் சுற்றில் பங்குபற்றிய போதிலும் இடைநடுவில் 15 நாடுகளும் போட்டியிலிருந்து விலகிக்கொண்டன. ஆபிரிக்க அணிக்கு நேரடி தகுதி கிடைக்காது என பீபா எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டியும் தகுதிகாண் சுற்றிலிருந்து ஆபிரிக்க நாடுகள் விலகிக்கொண்டன. வரவேற்பு நாடான இங்கிலாந்தும் நடப்பு சம்பியன் பிரேஸிலும் உலகக் கிண்ணப் போட்டியில் நேரடியாக விளையாட தகுதிபெற்ற அதேவேளை மேலும் 14 நாடுகள் தகுதிகாண் சுற்றுமுலும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. நான்கு குழுக்களில் லீக் முறையில் நட்டத்தப்பட்ட முதல் சுற்று முடிவில் நான்கு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்றன. கால் இறுதிகள் முடிவில் நான்கு ஐரோப்பிய நாடுகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன. முதலாவது அரை இறுதிப் போட்டியில் சோவியத் யூனியனை 2 - 1 என்ற கோல்கள் கணக்கில் ஜேர்மனி வெற்றிகொண்டது. இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் போர்த்துக்கலை 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றிகொண்டது . இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இங்கிலாந்துக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான இறுதிப் போட்டி 90 நிமிட நிறைவின்போது 2 - 2 என்ற கோல்கள் அடிப்படையில் சமநிலையில் இருந்தது. இதனை அடுத்து வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் மேலும் 2 கோல்களைப் போட்ட இங்கிலாந்து 4 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் தடவையாக உலக சம்பியனானது. அப் போட்டியில் ஜெவ் ஹேர்ஸ்ட் 3 கோல்களைப் போட்டு ஹெட் - ட்ரிக்கைப் பதிவு செய்தார். உலகக் கிண்ண இறுதி ஆட்ட வரலாற்றில் இதுவரை போடப்பட்ட ஒரே ஒரு ஹெட் - ட்ரிக் அதுவாகும். களவாடப்பட்ட உலகக் கிண்ணத்தை பிக்ள்ஸ் என்ற நாய் கண்டுபிடித்தது எட்டாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் ஆரம்பமாவதற்கு 4 மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் காட்சிப்படுத்தபட்டிருந்த ஜூல்ஸ் ரிமெட் கிண்ணம் (உலகக் கிண்ணம்) களவாடப்பட்டிருந்தது. எனினும் பிக்ள்ஸ் என்ற பெயரைக் கொண்ட நாயினால் அந்த கிண்ணம் கண்டுபிடிக்கப்பட்டது. இது இவ்வாறிருக்க, ஏனைய கண்டங்களிலுள்ள நாடுகளுக்கு செயற்கைகோள் மூலம் தெரிவு செய்யப்பட்ட உலகக் கிண்ண போட்டிகள் முதல் தடவையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அத்துடன் பிபிசி தொலைக்காட்சியில் உலகக் கிண்ண இறுதிப் போட்டி முழு அளவில் கறுப்பு வெள்ளையில் ஒளிபரப்பட்டது அதுவே கடைசி தடவையாகும். பங்குபற்றிய நாடுகள் 16: ஆர்ஜன்டீனா, பிரேஸில், பல்கேரியா, சிலி, இங்கிலாந்து, பிரான்ஸ், சமஷ்டி குடியரசு ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி, வட கொரியா, மெக்சிகோ, போர்த்துக்கல், சோவியத் யூனியன், ஸ்பெய்ன், சுவிட்சர்லாந்து, உருகுவே. 9. ஒன்பதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் -பிரேஸில் 3ஆவது முறையாக சம்பியன் ஒன்பதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி மெக்சிகோவில் 5 நகரங்களில் 1970 மே 31ஆம் திகதியிலிருந்து ஜூன் 21ஆம் திகதிவரை நடத்தப்பட்டது. அதுவரை ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் மாத்திரம் நடத்தப்பட்டுவந்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்று முதல் தடவையாக வட அமெரிக்காவில் நடத்தப்பட்டது. உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்கு முன்னோடியாக சகல கண்டங்களிலும் நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் 75 நாடுகள் பங்குபற்றின. பீபா விதிகளின் பிரகாரம் நடப்பு சம்பியன் இங்கிலாந்தும், வரவேற்பு நாடான மெக்சிகோவும் நேரடியாக இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன. மற்றைய 14 நாடுகள் தகுதிகாண் சுற்றில் வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. எல் செல்வடோர், இஸ்ரேல், மொரோக்கோ ஆகிய நாடுகள் முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்குபற்றின. கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்திலும் கடும் உஷ்ணத்திற்கு மத்தியிலும் போட்டிகள் நடத்தப்பட்ட போதிலும் சகல போட்டிகளும் உயரிய வகையில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணமாக இருந்தன. வழமைபோல் 4 குழுக்களில் தலா 4 அணிகள் வீதம் முதல் சுற்றில் மோதின. முதல் சுற்று முடிவில் 4 குழுக்களிலும் முதல் 2 இடங்களைப் பெற்ற அணிகள் கால் இறுதிகளில் விளையாடி 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. அரை இறுதிகளில் விளையாட 2 தென் அமெரிக்க நாடுகளும் 2 ஐரோப்பிய நாடுகளும் தகுதிபெற்றன. தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது அரை இறுதியில் உருகுவேயை 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் பிரேஸிலும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற அரை இறுதியில் ஜேர்மனியை 4 - 3 என்ற கோல்கள் அடிப்படையில் இத்தாலியும் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. தலா 2 தடவைகள் உலக சம்பியனாகியிருந்த இத்தாலியும் பிரேஸிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்ததால், முதலாவது அணியாக 3 தடவைகள் சம்பியனான அணி என்ற பெருமையைப் பெறுவதற்கு இரண்டு அணிகளும் துடித்தன. இறுதிப் போட்டியில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய பிரேஸில் 4 - 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று 3ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தை வென்ற முதலாவது அணி என்ற வரலாற்றைப் படைத்தது. அத்துடன் 1958, 1962, 1966, 1970 ஆகிய நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய பேலே, 3 தடவைகள் உலக சம்பியனான பிரேஸில் அணிகளில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும். ஜூல் ரிமெட் கிண்ணத்தை 3 தடவைகள் பிரேஸில் சுவீகரித்ததால் அக் கிண்ணம் பிரேஸிலுக்கே சொந்தமானது. அதன் பின்னர் 1974இல் இருந்து பீபா உலகக் கிண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டது. பங்குபற்றிய நாடுகள் 16: பெல்ஜியம், பிரேஸில், பல்கேரியா, செக்கோஸ்லோவாக்கியா, எல் செல்வடோர், இங்கிலாந்து, மேற்கு ஜேர்மனி, இஸ்ரேல், இத்தாலி, மெக்சிகோ, மோரோக்கோ, பெரு, ருமேனியா, சோவியத் யூனியன், சுவீடன், உருகுவே, 10. பத்தாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம் - புதிய உலகக் கிண்ணத்தை வென்ற முதலாவது நாடு மேற்கு ஜேர்மனி பத்தாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்று மேற்கு ஜேர்மனியில் 9 நகரங்களில் 1974 ஜூன் 13ஆம் திகதியிலிருந்து ஜூலை 7ஆம் திகதிவரை நடத்தப்பட்டது. ஐந்து கண்டங்களிலிருந்தும் 16 நாடுகள் பங்குபற்றின. நடப்பு உலக சம்பியன் பிரேஸில், வரவேற்பு நாடான மேற்கு ஜேர்மனி ஆகியன இறுதிச் சுற்றில் நேரடியாக பங்குபற்றியதுடன் மற்றைய 14 நாடுகள் தகுதிகாண் சுற்றின் மூலம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. அவுஸ்திரேலியா, கிழக்கு ஜேர்மனி, ஹெய்ட்டி, ஸய்ரே ஆகிய நான்கு நாடுகள் உலகக் கிண்ணப் போட்டியில் அறிமுகமாகின. 16 நாடுகள் பங்குபற்றிய இறுதிச் சுற்று 4 குழுக்களில் நடத்தப்பட்டது. 4 குழுக்களிலும் லீக் சுற்று முடிவடைந்ததும் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இரண்டாம் சுற்றில் தலா 4 அணிகள் வீதம் மீண்டும் லீக் முறையில் விளையாடின. இரண்டாம் சுற்று லீக் முடிவில் இரண்டு குழுக்களிலும் முதலாம் இடங்களைப் பெற்ற நெதர்லாந்தும் மேற்கு ஜேர்மனியும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட மேற்கு ஜேர்மனி 20 வருடங்களின் பின்னர் 2ஆவது தடவையாக உலக சம்பியனானது. அத்துடன் புதிய கிண்ணத்தை வென்ற முதலாவது நாடு என்ற பெருமையையும் மேற்கு ஜேர்மனி பெற்றுக்கொண்டது. பங்குபற்றிய நாடுகள் 16: ஆர்ஜன்டீனா, அவுஸ்திரேலியா, பிரேஸில், பல்கேரியா, சிலி, கிழக்கு ஜேர்மனி, மேற்கு ஜேர்மனி (சமஷ்டி குடியரசு), ஹெய்ட்டி, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, ஸ்கொட்லாந்து, சுவீடன், உருகுவே, யூகோஸ்லாவியா, ஸய்ரே. புதிய கிண்ணம் அறிமுகம் 1930இல் இருந்து 1970வரை 9 அத்தியாயங்களில் வழங்கப்பட்டு வந்த ஜூல்ஸ் ரிமெட் உலகக் கிண்ணம் பிரேஸிலுக்கு முழுமையாக சொந்தமானதை அடுத்து 1974இல் புதிய உலகக் கிண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரேஸிலினால் சொந்தமாக்கப்பட்ட ஜூல்ஸ் ரிமெட் உலகக் கிண்ணம் 1983இல் களவாடப்பட்டது. அதன் பின்னர் அது கிடைக்கவே இல்லை. அந்தக் கிண்ணம் பெரும்பாலும் திருடர்களால் உருக்கப்பட்டிருக்கும் என கருதப்படுகிறது. 1970க்குப் பின்னர் 6.175 கிலோ கிராம் எடையுடைய 18 கரட் தங்கத்தில் பீபா உலகக் கிண்ணம் வடிவமைக்கப்பட்டது. அந்தக் கிண்ணம் 36 சென்றி மீற்றர் உயரமானது. புதிய உலகக் கிண்ணத்தை வடிவமைத்தவர் இத்தாலியைச் சேர்ந்த சில்வியோ கஸாநிகா ஆவார்.இந்த கிண்ணம் எந்த அணிக்கும் வழங்கப்படமாட்டாது. சம்பியனாகும் அணிக்கு வழங்கப்படும் இந்தக் கிண்ணம் சில தினங்களில் மீளப்பெறப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்ட நகல் கிண்ணம் சம்பியன் அணியின் பெயரும் வருடமும் பொறிக்கப்பட்டு வழங்கப்படும். (இன்னும் வரும்) https://www.virakesari.lk/article/140491
 22. ஆண்களைவிட பெண்களை துரத்தும் எலும்பியல் நோய் பற்றி தெரியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இளவயதில் மாதவிடாய் நின்றுபோவதால், இந்தியாவில் இளம்பெண்கள் பலர் எலும்பு மெலிதல் என்று சொல்லப்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்படுவதாகவும், மாறிவரும் வாழ்க்கை சூழல் காரணமாக ஐந்தில் ஒரு பெண், இந்த நோய் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாகவும் சென்னையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அஸ்வின் விஜய் கூறுகிறார். மாறிவரும் உணவுப் பழக்கம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து குறைபாடு, உடலுழைப்பு இல்லாததால் ஏற்படும் அதிக உடல்எடை உள்ளிட்ட பலவிதமான காரணங்களால் எலும்பு மெலிதல் நோய்க்கு ஆளாகும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை தருவதாக மருத்துவர் அஸ்வின் விஜய் கூறுகிறார். ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் இந்த நோயால் அதிகம் அவதிப்படுவதாகவும், பெரும்பாலான சமயங்களில் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாமல் போவதால், இதற்கான கவனமும் குறைவாக இருப்பதாக அவர் கூறுகிறார். எலும்பு மெலிதல் நோய் ஏன் அதிகளவில் பெண்களை பாதிக்கிறது என்று கேட்டபோது, ''ஆண்களுக்கு உடலில் டெஸ்ட்ரோஸ்டோன் என்ற ஹார்மோன் சுரக்கிறது. அதேபோல பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் சுரக்கிறது. மாதவிடாய் நின்றுபோனால், இந்த ஹார்மோன் சுரப்பது மிகவும் குறைந்துவிடுகிறது. அதனால், சராசரியாக 48 முதல் 52 வயதில் பெண்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பது பெரும்பாலும் குறைந்துபோகிறது. எலும்புகள் வலுவாக இருப்பதற்கு ஈஸ்ட்ரோஜென் முக்கியம். அதன் சுரப்பு குறைந்துவிடுவதால், ஆண்களை விட, பெண்களுக்கு எலும்பு மெலிதல் அதிகமாக தாக்குகிறது,''என்கிறார் மருத்துவர் விஜய். அதேநேரம், உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமும் எலும்பு உறுதியை குலைக்கிறது என்கிறார் அவர். ''பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டால், ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரிக்கும். தொடர்ந்து ஏசி பொருத்திய வளாகத்தில் வேலைபார்ப்பது, சூரிய வெளிச்சத்தைப் பார்க்காமல் இருப்பது போன்றவற்றால், உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைவாகும். இந்த இரண்டும் குறைவாக இருக்கும் நபர்களுக்கு விரைவில் எலும்பு மெலிதல் நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். சூரிய வெளிச்சத்தில் கிடைக்கும் வைட்டமின் டி சத்து குறைவாக இருந்தால், கால்சியம் சத்தை உறிஞ்சும் தன்மை உடலில் குறைவாக இருக்கும். வைட்டமின் டி மற்றும் கால்சியம் குறைவாக இருந்தால், எலும்பு பலவீனமாகும்,''என்கிறார் மருத்துவர் அஸ்வின் விஜய். முதுகெலும்பு சார்ந்த நோய்கள் வருவது ஏன்? தவிர்க்க என்ன வழி?17 அக்டோபர் 2022 உங்கள் மூளையை இளமையாக வைத்துக் கொள்ள உதவும் சிறந்த உணவு எது?6 மணி நேரங்களுக்கு முன்னர் வலி என்பது என்ன? இரவில் அதிகமாக வலி எடுப்பது ஏன்?17 நவம்பர் 2022 கால்சியம் மாத்திரைகள் மற்றும் வைட்டமின் டி சிரப் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்வதால் எலும்பு மெலிதலை கட்டுப்படுத்த முடியுமா என்று கேட்டபோது, '' இந்த நோயை முற்றிலுமாகத் தீர்க்க எந்த மருந்தும் கிடையாது. உணவுப் பழக்கத்தை மாற்றவேண்டும், உடல் உழைப்பு அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை தினமும் செய்யவேண்டும், எளிய பயிற்சியாக இருந்தாலும், தினமும் பின்பற்றி மூட்டுகளை வலுவாக்க வேண்டும். ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டாலும், அவை உணவுக்கு ஈடாகாது. சூரிய வெளிச்சத்தில் நிற்பது, வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு, கொய்யா உள்ளிட்ட பழங்கள், பச்சை காய்கறிகளை தினமும் ஒரு வேளையாவது எடுத்துக்கொள்வது, இரவு உறக்கம் , உடற்பயிற்சி மட்டுமே தீர்வாகும்,''என்கிறார் அவர். பெண்கள் பலரிடம் எலும்பு மெலிதல் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், அந்த நோய் ஏற்பட்டபோதும் அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது என்கிறார். உடல்வலி, மூட்டுவலி உள்ளிட்டவை பொதுவான வலிதான் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதும், வீட்டுவேலைகளில் மூழ்கும் பெண்கள் பலர் தங்களுடைய வலிகளுக்கு அவ்வப்போது வலி தீருவதில்தான் கவனம் செலுத்துகிறார்கள் என்கிறார். ''இளம் பெண்களுக்கு கூட எலும்பு மெலிதல் ஏற்படும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதால் , பெண்கள் தங்களுக்கு அதிகமான வலிகளை உணரும்போது, அதைப் பற்றி கவனம் கொண்டு எலும்புக்கு உறுதி சேர்ப்பது அவசியம். கவனக்குறைபாட்டால் இளம்வயதில் முதியவர்களைப் போல வாழ நேரிடும்,''என்கிறார். https://www.bbc.com/tamil/articles/c2x1nn1z23go
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.