thulasie

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  342
 • Joined

 • Last visited

Everything posted by thulasie

 1. அந்தப் பதாதைகளை எல்லாம், புலிவால்களால் எழுதிக்கொடுத்து, அந்த அப்பாவிச் சனங்களின் கரங்களில் ஏந்த வைத்திருக்கிறார்கள். அந்த அப்பாவிச் சனங்கள் பாவம்.
 2. தமிழ்க் கோயில்களில் நகை இருக்கும் செய்தி, அல்பானியா நாட்டுக்காரனுக்கு எப்படித் தெரியும்? இது நிச்சயமாக நமது தமிழனின் வேலையாகத்தானிருக்கும். அல்பானிக் காரனை உள்ளே போகச்சொல்லிவிட்டு, தமிழன் வெளியில் காவலாக இருந்திருப்பான் -
 3. உலகில் உள்ள எந்த மனிதனுக்கும், தனக்கு தெரிந்தவையைவிட, தெரியாதவைதான் அதிகம். ******* தேசியத் தலைவர் அறியாததை, கருணா அறிந்து வைத்தபடியினால்தான், கிழக்கில் ஒரு முள்ளிவாய்க்கால் வருவதை விவேகமாக தவிர்த்தார்.
 4. கைது செய்யச் சொல்லி இருக்கும், 67 பேரில், கோத்தபாயாவும் உள்ளடக்கமா? அவரும் உள்ளடக்கம் என்றால், அவரை இப்போது கைது செய்யலாம். இப்போது அமெரிக்கா போயிருக்கிறார்.
 5. சஜித் மட்டுமல்ல, எந்தவொரு சிங்களவரும் சமஷ்டிக்கு ஆதரவில்லை.
 6. Text message is better than e-mail. ஆயுள்காலம் முழுக்க கனவுலகில் சஞ்சரிப்பதைவிட, ஒரு நாளாவது நனவுலகில் வாழ்ந்து பழகுவதுதான், தமிழினத்திற்கு இப்போது தேவை.
 7. சேரன் மலையாளியாமே? இலங்கை இராணுவமே சகிக்காது. இந்திய அரசும் சகிக்காது. இயற்கை அன்னை எங்கே சகிக்கப் போகிறாள்?
 8. மீண்டும் புலிகள் வருவதை விரும்புவதை, இயற்கை அன்னைகூட சகித்துக்கொள்ளாது. தமிழினம் இலங்கையில் பூண்டோடு அழிக்கப்படுவதை பலர் விரும்புவதாகத் தெரிகிறது.
 9. விவேக் ஏதோ, 'ஒற்றுமை' பற்றி ஓதியிருக்கிறார். எந்த மனிதனுக்குத்தான், ஒற்றுமை அவசியமில்லை? இது ஒரு பெரிய தத்துவம்?? நமது தமிழ் அரசியல் வாதிகளும், இதைத்தான் காலம் காலமாக எடுத்துரைக்கின்றனர். இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. சொந்த வீட்டுக்காரன் சொன்னால் எடுத்துக் கொள்ளமாட்டோம். ஒருவன் கடல் கடந்து வந்து உளறிவிட்டால், ஆகா ஓஹோ என்று புகழுகின்றோம். அடுத்தது, நாம் பேசும் செந்தமிழ் 4000 வருடத்திற்கு முற்பட்டது. இதுதான் யதார்த்தம். யதார்த்தத்தைச் சொன்னால், தாய்மொழியை தரம் தாழ்த்தி விட்டேன் என்று அர்த்தமா? கல்லும் மண்ணும் தோன்றா காலத்தில், தமிழ் இருந்தது என்று நாக்கூசாமல் பொய் சொல்ல எனக்கு விருப்பமில்லை.
 10. உங்களின் விமரிசனங்கள், புலிகளுக்கு எதிரானவையல்ல என்று எல்லாருக்கும் தெரிந்ததுதான். புலியெதிர்ப்பு விமரிசனங்களையும் உள்வாங்கி சீரணிக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
 11. அப்படியே இந்திய அமைதிப்படையினரின் நினைவுச் சின்னங்களிலும் போய் ஒரு கும்பிடு போட்டால், சிறப்பாக இருக்கும்.
 12. மாற்று இயக்கங்களின் அட்டூழியங்களை பட்டியலிட்டு, புலிகள் செய்த அட்டூழியங்கள் ஒன்றுமே இல்லையென்று ஆசுவாசப்படுகிறீர்கள். புலிகள் செய்த அராஜகங்களை பட்டியல் போட ஏன் உங்களுக்கு தயக்கம்? ஏன் அவர்கள் செய்தது, பூவுலகத்திற்கு தெரியக்கூடாது என்று உங்கள் ஆழ்மனம் விரும்புகிறது? என்னமோ மாற்று இயக்கங்களின் அட்டூழியங்களை நான் ஏற்றுக்கொண்டது போலவும், இந்தியாவிற்கு நான் ஆதரவு கொடுப்பவனைப் போலவும் கொக்கரிக்கிறீர்கள். புலிகள் எப்படிப்பட்ட மனித விரோதிகளோ, அதுபோலத்தான் மாற்று இயக்கங்களும் இந்திய அரசும். மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட காடைத்தனங்கள் வேண்டுமானால் கூட, குறைவாக இருக்கலாம். பயங்கரவாதத்தில் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.
 13. தமிழரசுக் கட்சி, விடுதலைக் கூட்டணி, காங்கிரஸ் புலிகள் இல்லாத காலத்தில், புலிகள் போல தம்மை எதிர்த்தவன் எல்லாரையும் சுட்டுப் பொசுக்கவில்லை. மேற்படியான கட்சிகள் எல்லாம் ஜனநாயக ரீதியிலானவை. ஒவ்வொரு கட்சிக்கும் வேறுபட்ட கொள்கைகள். வேற்றுமையில் ஒற்றுமையாகத்தான் இருந்தன.
 14. புலிகள் மாற்று இயக்கங்களுக்கு எதிராக திரண்டால், அவர்களும் என்ன செய்வார்கள்? அராஜகம்தான் தலைவிரித்தாடும். ஒற்றுமை குழையும். சும்மா இருந்த தமிழ் அரசியல்வாதிகளின் படுகொலைகள். இன்னொரு தமிழ் சமூகமான இசுலாமியர்களின் இனச் சுத்திகரிப்பு. ஆக, ஒட்டு மொத்த தமிழ் இனத்தினதும் ஒற்றுமைக்கு களங்கம் விளைத்தவர்கள்தான் புலிகள். இப்போது தமிழின ஒற்றுமைக்கு பாடம் எடுக்க வந்த தென்னிந்திய ----- ------உரைக்கு, எல்லாரும் அரோகரா பாடுகிறீர்கள். இவரை விட, பாராளுமன்றத்தில் அமைச்சராக இருக்கும் (?) ரஞ்சன் ராமநாயக்க என்ற ------- கூப்பிட்டிருந்தால், அவர் விவேக்கை விட - விவேகமாக சொற்பொழிவை (?) நிகழ்த்தி இருப்பார். இந்திய, இலங்கை அரசுகளை குறை சொல்வதில் எந்தப் புண்ணியமும் இல்லை. தமிழன் ஒழுங்காக, ஒற்றுமையாக இருந்திருந்தால் - பிறர் வாலாட்டி இருக்க மாட்டார்கள்.
 15. ஒரு திரி ஒன்றைப்பற்றிச் சொல்ல, அதற்கு சம்பந்தமில்லாதவைகளைத்தான் பலர் எழுதுகிறார்கள். அப்படி சம்பந்தமில்லாதவைகளை எழுதும்போது, உங்களுக்கு சீரணிக்க முடிகிறது. அப்படி சம்பந்தமில்லவைகள் ஒரு போதும் புலியெதிர்ப்பாக இருக்கக் கூடாது என்பதில் ஏன் கரிசனையாக இருக்கிறீர்கள்? திரிக்கு சம்பந்தமில்லாதவைகள், புலிக்கு எதிர்ப்பாக இருந்தாலென்ன, சார்பாக இருந்தாலென்ன - அவைகளையும் சீரணிக்கப் பழகிக்கொள்வதில் உங்களுக்கு யார் முட்டுக்கட்டை போடுகிறார்கள்? புலிகள் செய்த படுகொலைகள் ஏன் உங்களின் கண்களுக்கு தெரிவதில்லை. ஒட்டுமொத்த தமிழின ஒற்றுமைக்கும் பங்கம் விளைத்தவர்கள் அவர்கள்.
 16. ஜீவனின் கருத்துக்கு பதில் எழுத ஆரம்பித்தால், அவர் என்ன சொன்னாரோ அதைப்பற்றித்தான் தங்களது கருத்தும் இருக்க வேண்டும். அவர் விவேக்கைபற்றி எழுதவில்லை. புலிகளின் அராஜகங்களை எழுதியிருக்கிறார். புலிகளின் பயங்கரவாதம்தான் இங்கு பேசுபொருள். அதைச் சுற்றி எழுதுவதை விட்டுவிட்டு, புலிகளின் பயங்கரவாதத்திற்கு முன்னும் பின்னும் கதைப்பது, பேசுபொருளுக்கு முரண் அல்லவா?
 17. புலிக்கூட்டம் செய்த கொலைகள் அப்படியே இருக்கட்டுமா? அவைகளைக் கண்ணாடி போட்டு பார்க்க மாட்டீர்களா? ஜீவன் சொல்வது, புலிகளின் காலத்தில் புலிகளால் நிகழ்த்தப்பட்ட காட்டு தர்பாரை. புலிகளின் முன் அல்லது பின்னால் நடத்தப்பட்ட/நடத்தப்படும் நிகழ்வுகள் அல்ல இங்கு பேசுபொருள்.
 18. ஸ்ரீ லங்கா இப்போது, ஆயுதம் இறக்குமதி செய்வதில்லை. Multi-barrel எல்லாம் இப்போது, சுயமாக தயாரிக்கிறது.
 19. உங்களுக்குத் தென்படும் ஜோக்குகள், நிதர்சனமாக தென்பட 500 முதல் 1000 வருடங்கள்வரை செல்லும். அந்தக் காட்சியைக் காண்பதற்கு, நீங்கள் உயிருடன் இருக்கமாட்டீர்கள்.
 20. CIA ஓரிடத்தில் இருந்தால், அதை ஆதாரபூர்வமாக யாரும் வெளியிடமாட்டார்கள்.
 21. மன்னிப்போம் மறப்போம் நம் ஸ்ரீ லங்கா நமோ நமோ மாதா