விகடகவி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,978
 • Joined

 • Last visited

Community Reputation

57 Good

About விகடகவி

 • Rank
  Advanced Member
 • Birthday 12/22/1977

Contact Methods

 • AIM
  N/A
 • MSN
  N/A
 • Website URL
  http://
 • ICQ
  0
 • Yahoo
  N/A

Profile Information

 • Location
  LONDON
 • Interests
  CINEMA

Recent Profile Visitors

5,234 profile views
 1. விகடகவி

  தினசரி தூறல்கள்...

  நீ நடந்து போகின்ற சாலையோரத்தில் மரங்கள் இருக்கின்றன உனை ரசித்து பூக்கள் சொரிகின்றன நீ கடந்து போகிறாய் நீ கடந்து போகின்ற பாதையில் பட்டாம்பூச்சிகள் உன் அழகைப் பார்த்து படபடக்கின்றன நீ கடந்து போகிறாய் உனைப் பார்த்து குயில்கள் கூவி மகிழ்கின்றன நீ கடந்து போகிறாய் அழகியே.. அங்கே ஓர் இளைஞன் தினசரி மரமாய்ப் பூச்சொரிந்தும் குயிலாகி குதூகலித்தும் பட்டாம்பூச்சியாய் படபடத்தும் உனக்காய் காத்திருக்கிறான் பார்த்தாயா.. நீ கவனித்தும் கூட இருக்கலாம்..ஆனால் பாவம் அவன்தான் புரிந்துகொள்ளவில்லை அந்த பட்டாம்பூச்சிகள் போல் அந்தக்குயில்கள் போல் அந்த மரங்கள் போல் அவனும் கடந்து போகின்ற ஒன்றுதான் என்று!
 2. விகடகவி

  தினசரி தூறல்கள்...

  என் கடவுள் வீட்டுமண்ணிஎன் கடவுள் வீட்டு மண்ணில் ஒரு கைப்பிடி எதிரி எடுத்துப்போனான் அவல் ஒரு கைப்பிடிஎதிரி எடுஎன் கடவுள் வீட்டுமண்ணில் ஒரு கைப்பிடிஎதிரி எடுஎன் கடவுள் வீட்டு மண்ணில் ஒரு கைப்பிடி எதிரி எடுத்துப்போனான் அவனுக்கு தெரிகிறது-கரிகாலன் மண் பெருஎன் கடவுள் வீட்டு மண்ணில் ஒரு கைப்பிடி எதிரி எடுத்துப்போனான் அவனுக்கு தெரிகிறது-கரிகாலன் மண் மைத்துப்போனான்அவனுஎன் கடவுள் வீட்டு மண்ணில் ஒரு கைப்பிடி எதிரி எடுத்துப்போனான் அவனுக்கும் தெரிகிறது கரிகாலன் மண் பெருமை க்கு தெரிஎன் கடவுள் வீட்டு மண்ணில் ஒரு கைப்பிடி எதிரி எடுத்துப்போனான் அவனுக்கு தெரிகிறது-கரிகாலன் மண் பெருமைகிறது-கரிகாலன் மண் பெத்துப்போனான்அவனுக்கு தெரிகிறது-கரிகாலன் மண் பெருமை என் கடவுள் வீட்டு மண்ணில் ஒரு கைப்பிடி எதிரி எடுத்துப்போனான் அவனுக்கும் தெரிகிறது கரிகாலன் மண் பெருமை
 3. விகடகவி

  தினசரி தூறல்கள்...

  வண்ணப்பூக்கள் கலந்து வார்த்த என் வாசதேவதை..-நீ வாரந்தோறும் வாசல் வந்தால் வாழ்வே தேன்மழை..உன் வட்டவிழிகள் சுட்டு நெஞ்சு காயமானதே..என் கிட்ட வந்து முத்தமிட்டால்காயமாறுமே.. பூவைப் போல பூவை - நீ யாரோ செய்த பாவை.. பாவை பார்த்த பார்வை இதயம் பள்ளமானதே.. மலரில் நடக்கும் மலரே.. உன்பாதம் கமலச்சுவடே.. அதை ஏந்த ஏங்கி.. ஏங்கி ஏங்கி சாகிறேனே... தென்றல் உரசும் தென்றல் - நீதேவலோக மின்னல் என்னைத் தீண்டிச்சென்றதாலே நானும் ஆனேன் வள்ளல் வார்த்தை வள்ளல்..
 4. விகடகவி

  இதழில் கதை

  நன்றி
 5. விகடகவி

  இதழில் கதை

  நன்றி சுவி
 6. விகடகவி

  இதழில் கதை

  இதழில் கதை கணவன் யார் மீதோ பயங்கர கோபமாக சண்டைக்கு புறப்படுகிறான் என்பதை புரிந்துகொள்கிறாள் மனைவி. அவன் சட்டையை மாட்டிக்கொண்டு மேலிருந்து பொத்தான்களை பொருத்த இவள் மேலிருந்து கழற்ற ஆரம்பிக்கிறாள். "என்ன செய்கிறாய்.."கோபமாக "எங்கே புறப்பட்டு விட்டீர்கள் "அவன் கண்களை வாஞ்சையோடு நோக்கியவாறு கேட்கிறாள் "வெளியே ஒரு வேலை இருக்கிறது" "எனக்கு தெரியும் சண்டைக்கு போகிறீர்கள்.." "ம் என்னையே சீண்டி பார்க்கிறார்கள் அவர்களை அடித்தால்தான் மனம் ஆறும்" "நீங்கள் வீர்ர்தான் ஆனால் அடித்தால் பகை வளரும் வஞ்சம் வைத்து காத்திருப்பார்கள் என்னிலோ குழந்தையிலோ கூட பகைமையை காட்ட முனைவார்கள்" "தொட்டுவிடுவார்களா உன்னையோ பிள்ளையையோ" "என் பேச்சை கேளுங்கள்" "சொல்லு" "உங்களின் இந்த அதிரடியால் என்ன கிடைக்கும்" "எனக்கு மன அமைதி கிடைக்கும்" அவனை கட்டிலுக்கு இழுத்து செல்கிறாள் கட்டிலில் அமர்ந்து அவன் தலையை தன் மடியில் தாங்கிகொள்கிறாள் "கண்களை மூடுங்கள் " தலையை கோதி அவன் நெற்றியில் அழுத்தமான நீளமான முத்தத்தை வைக்கிறாள் "என் முத்தம் தராத அமைதியை அவர்கள் இரத்தம் தந்துவிடுமா?.." அவனிடம் பதில் இல்லை "எதிரிகளுக்கு மன்னிப்பை விட பெரிய தண்டனை வழங்கமுடியாது அல்லவா.." "எனக்கு எதிரியாகும் தகுதி கூட அவர்களுக்கு இல்லை" "அப்படியானால் அவர்களுடன் சண்டைக்கு சென்று ஏன் உங்கள் தகுதியை குறைத்து கொள்கிறீர்கள்" கழுத்தை கட்டிக்கொண்டு காதில் சொன்னாள் "குடும்பஸ்தனுக்கு தேவை வரவேண்டியது அன்பும் ஆசையும்தான் கோபமும் வேகமும் அல்ல" அவனிடம் பதிலில்லை பதிலை கேட்க வாய் அருகே காதை கொண்டு செல்லவேண்டும் .அவள் இனி கேட்கமுடியாது அவள் உதடுகள் விடுதலை பெறும்வரை. அண்ணனாலும் அம்பை விடு என்ற கிருஷ்ண உபதேசத்தை போற்றுகின்ற உலகம் அறிவதில்லை எத்தனை வீடுகளில் அன்பால் பெண்பால் நிறுத்தி வைத்துவிடுகிறாள் சண்டையை என்று. 04/10/2017
 7. விகடகவி

  தினசரி தூறல்கள்...

  மதமும் ஜாதியும் சித்தம் சேர்ந்து பிரம்மை ஆனதடா இரத்தம் பார்த்து இரத்தம் பார்த்து மரத்துப்போனதடா இதயம் இல்லா மனிதர்கூட்டம் அதிகம் உள்ளதடா மதவெறுப்புக்காகவா இந்த உலகமும் மௌனம் கொள்ளுதடா மனிதநேய உரிமைகள் பேசும் மேசைகள் மௌனிகளானதடா பூவும் பிஞ்சும் குறுதியில் எரிந்திட என்னுயிர் நோகுதடா இவ்வலிகளை அன்று ஈழத்தில் தந்த வடுக்கள் உள்ளதடா எந்த இனம் அழுதாழும் தானும் அழுவதே-நம் தமிழர் இதயமடா
 8. விகடகவி

  தினசரி தூறல்கள்...

  மழை பெய்ய வீட்டுக்குள் ஒழுக்கு.. பாத்திரங்கள் போதாமல் அம்மா கவிழ்த்துவிட்டார் தலையில் ஆளுக்கு ஒன்றாய்.. ஏழைகள் கண்ணீரும் காயும்போது.. வானமும் கூடியழும்!
 9. விகடகவி

  தினசரி தூறல்கள்...

  காற்றே நீடாவின்சிகை தவழ்ந்ததூரிகையையா..நீல வானம் மேல்வெண்முகிலை கலைந்து-இப்படிவரைந்திருக்கிறாயேஅழகோவியம்!!!
 10. விகடகவி

  தினசரி தூறல்கள்...

  நன்றி
 11. விகடகவி

  தினசரி தூறல்கள்...

  மன்னிக்கவும் நான் கடன் வாங்கமாட்டேன் lol நன்றி சுவி கருத்து பிழையை திருத்தியமைக்கு வழமை போலகாதல் கவியாகி குப்பை செல்லும் கண்கள் வலியாகி தூக்கம் கொல்லும்
 12. விகடகவி

  தினசரி தூறல்கள்...

  வந்தும் வராததுமாக இரவு கூட தூங்க.. என் இதயம் மட்டும் ஏனோ தூங்காமல் கிடைக்காது என்று தெரிந்தும் இருட்டுக்குள் கண்ணை விட்டு தேடிக்கொண்டிருக்கிறது உன்னை.. நீ ..விடியல் கொண்டு வந்து இரவு மூடி வைத்துபோன வெளிச்சம் போல எனக்குள் உட்கார்ந்து பிரகாசிக்கிறாய் உன்னால்தான் உண்ணவோ உறங்கவோ முடியாமல்..சுத்தி சுழல்கிறேன்.. ஊரே பரிகாசித்தும் உன்னன்பை யாசிக்கிறேன்.. .. வாசித்து அறிவாயென கண்ணிமைகள் திறந்து வைத்தும் நேசிக்க மறுத்துவிட்டு நெடுந்தூரம் போனாயே வழி அறிந்தாலும் வரமாட்டாய் வலி அறிந்தாலும் வரமாட்டாய்.. வழமை போல காதல் கவியாகி குப்பை செல்லும் கண்கள் வலியாகி தூங்கச்செல்லும்
 13. விகடகவி

  தினசரி தூறல்கள்...

  வெளிச்ச வீடுகள்பார்த்துஇருண்டுபோகிறது மனதுஒரே ஒரு நாள் உயரம் தொடர்ந்தாளே என்னோடு!
 14. விகடகவி

  தினசரி தூறல்கள்...

  விழிகள் கண்டதும் மாண்டது வல்லினம்.. அவளின் கால்களில் சிணுங்கும்ம் இசையினம்.. வாசக்கூந்தலில் மனசோ பூவினம்.. பேசும் ஓவியம் அவளோ குயிலினம் பேதை அழகியல் தோகை மயிலினம் காதல் பிறந்திட்டால் ஆணும் மெல்லினம் நாணும் சொல்லினம் !
 15. விகடகவி

  தினசரி தூறல்கள்...

  தாண்டிச் செல்லவேண்டிய மேடுபள்ளங்களா வாழ்க்கை?.. பறந்து செல்லவேண்டிய பால்வெளி இல்லையா.. சுகர்ந்து செல்லவேண்டிய சோலைகள் இல்லையா.. நனைந்து செல்லவேண்டிய சாரல்கள் இல்லையா.. மகிழ்ந்தும் இசைந்தும் செல்லவேண்டிய பயணம் இல்லையா... தாய்தந்தை..ஆசான் ஆணைப்படி பாதி பயணமும்... பிள்ளையின் பயண ஆயத்தங்களில் மீதி பயணமும்.. எங்கோ வாழ்க்கை வாழ மறந்து வழக்கமாகி கிடக்கிறது?