யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

பா. சதீஷ் குமார்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  34
 • Joined

 • Last visited

Community Reputation

15 Neutral

About பா. சதீஷ் குமார்

 • Rank
  புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. 14: அவரது அழகில் மயங்கிப் போனேன்! கலைடாஸ் கோப்பில் விரியும் வண்ணச் சித்திரங்களாக பானுமதியின் வாழ்க்கைக் கதையும் சுழன்று விரிந்தது. சென்னைக்கு நடிக்க வந்த கதையைப் பகிரத் தொடங்கினார். “கல்கத்தாவிலும் கோலாபூரிலும் படப்பிடிப்பு முடிந்த பிறகு ‘பக்திமாலா’ படத்தில் நடிக்க சென்னை புறப்பட்டு வந்தோம். சென்ட்ரல் ஸ்டேஷன். தமிழ்க் குரல்களைக் கேட்கவே மனசுக்குச் சந்தோஷமாக இருந்தது. ‘குழந்தை இந்தப் படத்தில் இரண்டு இடங்களில் நாட்டியம் ஆடும்படி இருக்கும்’ என்றார் இயக்குநர். ‘ அடடா... என் மகளுக்கு நாட்டியம் தெரியாதே’ என்றார் அப்பா. படத்தின் நடன இயக்குநர் வேம்பட்டி பெரிய சத்யம் எனக்கு முறையாக நாட்டியம் கற்றுக் கொடுக்க முன்வந்தார். ‘இந்தப் படத்துக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு நாட்டியம் கற்றுக் கொடுத்தால் போதும்’ என்றார் அப்பா பெரிய சத்யத்திடம். அடம் பிடித்த நாட்டியம் ‘சங்கீதம் (இசை) சாகித்யம் (இலக்கியம்) இரண்டு கண்கள் போன்றவை. பானுமதி இந்த இரண்டிலும் சிறந்து விளங்குகிறாள். நாட்டியம் பெரிய விஷயமே இல்லை. பானுமதி சிறப்பாக நாட்டியம் கற்றுக்கொள்ள நானாச்சு’ என்றார் பெரிய சத்யம். ஆனால், அந்தப் படத்தில் சத்யம் சாருக்கு நான் நல்ல பெயர் சம்பாதித்துக் கொடுக்கவில்லை. சரஸ்வதி தேவி எனக்கு சங்கீதமும் சாஹித்யமும் தன் இரு கண்களாலும் பூரணமாகப் பார்த்து அருளியது என்னவோ உண்மைதான். ஆனால், நாட்டிய விஷயத்தில் அவள் பார்வை கோணலாகி விட்டது. சின்ன வயதிலேயே நான் நாட்டியம் கற்றுக்கொண்டிருந்தால் இப்படி நடந்திருக்காது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எனக்குச் சிறு வயதிலிருந்தே நாட்டியத்தில் ஈடுபாடு கிடையாது. சுபாவத்திலேயே எனக்குக் கூச்சம் அதிகம். கண்களை உருட்டுவதும் கைகளால் முத்திரை காட்டுவதும் எனக்குப் பிடிக்காது. இதெல்லாம் செயற்கையாகத் தோன்றும். செயற்கையான எந்த விஷயத்தையும் செய்வதற்கு என் மனசு இடம் கொடுக்காது. கல்கத்தாவில் ‘மாலதி மாதவம்’ படப்பிடிப்பின்போது எனக்குக் குதிரை ஏற்றம், தடை தாண்டுதல், கத்தி வீசுதல் போன்ற வீர விளையாட்டுகளைக் கற்றுக் கொடுத்தார்கள். இதன் விளைவாக நான் அபிநயித்த நாட்டிய முத்திரைகளில் நளினமும் மென்மையும் வெளிப்படுவதற்கு பதிலாக முரட்டுத்தனமும் கடூரமான உணர்ச்சிகளின் சாயலும் வெளிப்பட்டது. ‘அடக்கடவுளே... என்னம்மா இது! நீ ஒரு பையனாகப் பிறந்திருக்க வேண்டும். தவறிப்போய்ப் பெண்ணாகப் பிறந்துவிட்டாய். உனது நடையிலும் அபிநயத்திலும் பெண்மைக்கே உரிய ஒயிலும் கவர்ச்சியும் வெளிப்பட வேண்டாமோ!’ என்றார் பெரிய சத்யம். ‘பக்திமாலா’வில் மீராபாய் கதாபாத்திரத்தில் நான் பாடிய பாட்டுக்கள் எனக்குப் பெயர் வாங்கித் தந்தன. நாட்டியத்தில்தான் சொதப்பிவிட்டேன். ஒரு பத்திரிகை என் நடனப் படத்தைப் போட்டு ‘குழந்தை நட்சத்திரம் பானுமதி - முடக்குவாத போஸில்!’ என்று எழுதிவிட்டார்கள். இனிமேல் ஏதாவது படத்தில் நாட்டியம் ஆடச் சொன்னால் அந்த ரோல் செய்ய மாட்டேன் என்று அப்பாவிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டேன். காஞ்சனமாலா எனும் நட்சத்திரம் ‘பக்திமாலா’ படத்தின் அலுவலகம் அப்போது தியாகராயநகர் வைத்திய ராமன் தெருவில் இருந்தது. (அதே தெருவில் நான் வீடுவாங்கிக் குடியேறுவேன் என்று அப்போது நினைத்துக்கூடப் பார்க்கவில்லை) வாஹினி அலுவலகமும் அருகில்தான் இருந்தது. அப்பாவுடன் வாஹினி அலுவலகம் செல்வது பிடிக்கும். அதற்குக் காரணம் அங்கிருந்த மெஸ். அந்த மெஸ்ஸில் தயாராகும் முறுகல் தோசையும் மல்லிகைப்பூ இட்லியும் இன்று நினைத்தாலும் நாவில் நீரூறும். ‘பக்திமாலா’ படப்பிடிப்பு முடிந்து ஊர் திரும்பிவிட்டோம். பின்னர், ‘கிருஷ்ண பிரேமா’ படப்பிடிப்புக்காக நாங்கள் மீண்டும் சென்னை வந்தோம். அதே சென்ட்ரல். அதே தமிழ்க் குரல்கள். ஸ்டார் கம்பைன்ஸ் நிறுவனத்தார் எங்களுக்காக ராயப்பேட்டை ஸ்ரீபுரம் காலனியில் ஒரு வாடகை வீடு ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கே போனதும் நான் கேள்விப்பட்ட செய்தி என்னை மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க வைத்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகையான காஞ்சனமாலா அதே தெருவில்தான் குடியிருந்தார். நான் அப்பாவிடம் ஓடினேன் ‘அப்பா! எப்படியாவது நாம் காஞ்சனாமாலாவைச் சந்திக்கணும் வாங்க’ என்றேன். ‘நமக்கு முன்பின் பழக்கமில்லாதவங்களை அப்படிப் போய் பார்க்கப்படாது அம்மா. அறிமுகம் ஆகட்டும் அப்புறம் சந்திக்கலாம். நீ உடனே பார்க்கணும்னு ஆசைப்பட்டா பார்க்க ஒரு வழி இருக்கு. காஞ்சனாமாலாவோட கார் இந்த வழியாகத்தான் போகும். அதில் பார்க்கலாம்’ என்றார். எனக்குப் பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. ஆனால், முயற்சியைக் கைவிடவில்லை. நான் தெருவில் ஒவ்வொருமுறை கார் சத்தம் கேட்கும்போதும் ஓடிப்போய் பார்ப்பேன். ஏமாந்துபோவேன். இரண்டு நாள் கழித்து காலை 9 மணி இருக்கும். ஒரு பெரிய கார் அசைந்தபடி வந்தது. குறுகலான தெரு ஆகையால் கார் மிகவும் பெரிதாகத் தெரிந்தது. கார் நெருங்கியதும் தெருக் குழந்தைகளிடையே ஒரே கூச்சல். எனக்குப் புரிந்தது அது காஞ்சனாமாலாவின் கார்தான். எங்கள் வீட்டை காஞ்சனாமாலாவின் கார் கடக்க முற்பட்டபோது எதிரே ஒரு மாட்டு வண்டி வந்தது. கார் மெல்ல நின்று நின்று போயிற்று. கையில்லாத பிளவுஸ், ஜார்ஜெட் புடவை, நல்ல செக்கச் செவேலென்ற நிறம், ஏதோ சொர்க்கத்திலிருந்து இறங்கிவரும் ரம்பையைப் போல ஜொலித்தார். பின் சீட்டில் உட்கார்ந்திருந்த காஞ்சனாமாலாவின் பார்வை என்மீது விழுந்தது. நானும் அவரை உற்றுப் பார்த்தேன். அவர் தன் பெரிய கண்களைத் திறந்து என்னைப் பார்த்தார். ‘யார் இந்தக் குட்டிப்பெண்?’ என்று கேட்பது போல் மெலிதாகப் புன்னகைத்தார். சட்டென்று கார் நகர்ந்து வேகம் எடுத்து சென்றது. கார் நகர்ந்தாலும் என் கால்கள் நகரவில்லை. அவரது பெரிய கவர்ச்சியான கண்கள், மாம்பழக் கதுப்புகள் போன்ற கன்னங்கள், அந்தப் புன்னகை என அவரின் தோற்றப் பொலிவு அப்படியே என் மனசில் அழியாத ஓவியம்போல் ஆகிவிட்டது. நான் அவரது அழகில் மயங்கிப் போனேன். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் காஞ்சனாமாலாவின் கார் எங்கள் வீட்டைக் கடந்து செல்வதைப் பார்க்க காத்திருப்பேன். காரை நிறுத்தி அவரோடு இரண்டு வார்த்தை பேசமாட்டோமா என்று இருக்கும். பேசினால்தான் என்ன; அவருடைய ஆயிரக்கணக்கான விசிறிகளில் நானும் ஒருத்தி அல்லவா? நட்சத்திரங்கள் இரவில்தான் பளீரென்று தெரியும். பகலில் அவை தங்களின் சோபையை இழந்துவிடும். ஒரு வேளை நடிகர், நடிகைகளை இதனால்தான் நட்சத்திரங்கள் என்று அழைக்கிறார்களோ என்னவோ… வெள்ளித்திரையில் இந்த நட்சத்திரங்களைப் பார்க்கும்வரைதான் மனசு மயங்கி மகிழ்ச்சியில் துள்ளும். அந்த இமேஜைத் தக்கவைத்துக் கொள்ளத்தான் நடிக நடிகைகள் படாதபாடு படுகிறார்கள். காஞ்சனாமாலா கவர்ச்சிக்கும் அதுதான் காரணம் எனத் தோன்றியது. சில வருஷங்கள் கழித்து காஞ்சனாமாலா மறைந்த செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். திரைவானில் சுடர்விட்டு ஒளி வீசிய துருவ நட்சத்திரம் விழுந்துவிட்டதை எண்ணி மனசு கனத்தது. என் கதைக்கு வருகிறேன். ‘கிருஷ்ண பிரேமா’ படப்பிடிப்பு தொடங்க தேதி குறிக்கப்பட்டுவிட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது என் வாழ்வை ஒரு தென்றல் தீண்டியது! பின் அதுவே சூறாவளியாகவும் மாறியது” என்று புதிரோடு நிறுத்தினார் பானுமதி. புதிருக்குப் பின்னால் ஆச்சரியம் காத்திருந்தது! https://www.kamadenu.in/news/cinema/31009-14.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search
 2. 3. ஆதித்த கரிகாலன் கொலை வழக்கில் இராஜராஜ சோழனுக்கு பங்கு உண்டா? முறுக்கு சுற்றுவதுபோல் பிழியாமல் நேரடியாகவே விஷயத்துக்கு வந்துவிடலாம்.தன் அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்ததில் இராஜராஜ சோழனுக்கும், அவரது சகோதரி குந்தவைப் பிராட்டியாருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 1. உத்தமசோழன் பதவியேற்கும்போது அவருக்கு ஒரு மகன் இருந்திருக்கிறார். அரச விதிமுறைகளின்படி உத்தம சோழனுக்குப் பின் அவர் மகனுக்குத்தான் இளவரசுப் பட்டம் சூட்டவேண்டும். ஆனால், இதற்கு முரணாக அருண்மொழி என்கிற இராஜராஜ சோழன் சிம்மாசனத்தில் அமர்கிறார். ஏன்? 2. இராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்பேற்றதும் ரவிதாசன் முதலியவர்களின் சொத்தைப் பறித்துக்கொண்டு ஊரைவிட்டுத் துரத்துகிறார். தன் அண்ணனை கொலை செய்தவர்களை சிறையில் அடைத்துத் தண்டிக்காமல் இப்படி ஊரை விட்டுத் துரத்தியதுடன் கொலை வழக்கை ஏன் முடித்தார்? 3. தான், செய்யும் எல்லா செயல்களையும் கல்வெட்டில் வடிப்பது இராஜராஜ சோழனின் வழக்கம். தன் காலத்தில் இருந்த தேவதாசிகளின் பெயர் உட்பட எல்லாவற்றையும் கல்வெட்டில் பொறித்திருக்கிறார்.அப்படிப்பட்டவர் தன் அண்ணன் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை எந்தக் கல்வெட்டிலும் வடிக்கவில்லை! எப்படி கொலைகாரர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்கள் என்ற தகவலையும் குறிப்பாகக் கூடச் சொல்லவில்லை! 4. இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் உத்தம சோழரின் மகன் கோயில்களை நிர்வகிக்கும் பதவியில் இருந்தார். இவர் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். அதாவது தன் மகன் இராஜேந்திர சோழன் பட்டம் ஏற்க போட்டி வரக் கூடாது என்பதற்காகவே உத்தம சோழரின் மகனை இராஜராஜ சோழன் அப்புறப்படுத்தினார் என்கிறார்கள். 5. உத்தம சோழர் பதவிக்கு வந்த மூன்றாண்டுகள் கழித்து ஆதித்த கரிகாலனின் கொலை தொடர்பாக வந்தியத்தேவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இந்த வந்தியத்தேவன், பின்னாளில் இராஜராஜ சோழனாக பட்டம் ஏற்ற அப்போதைய அருண்மொழியின் தமக்கை குந்தவையின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.உத்தம சோழரின் காலத்தில் நடைபெற்ற ஆதித்த கரிகாலனின் கொலை தொடர்பான விசாரணை விவரங்கள் ஏதும் இப்போது கிடைக்கவில்லை. ஒருவேளை அழிக்கப்பட்டிருக்கலாம்! ஆனால், இராஜராஜ சோழன் அரியணையில் அமர்ந்ததுமே 12 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் வந்தியத்தேவனை உடனடியாக விடுவிக்கிறார். ஏன் அவர் விடுதலை செய்யப்பட்டார்... ஆதித்த கரிகாலனை வந்தியத் தேவன் கொலை செய்யவில்லை என்பதற்கு ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்ததா? இந்த விவரங்களும் கவனமாக அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன! 6. உத்தம சோழரின் ஆட்சிக் காலத்தில் அண்டை நாடுகளுடன் பெரியதாக போர் ஏதும் நடக்கவில்லை. இராஜராஜ சோழன் அரியணையில் அமர்ந்ததும் அண்டை நாடுகள் பிரச்னை செய்ய ஆரம்பிக்கின்றன. இவற்றை ஒடுக்க வேண்டியது ஒரு மன்னரின் கடமை. இராஜராஜ சோழரும் படையெடுத்துச் சென்று அண்டை நாடுகளுடன் போர் புரிந்தார்.ஆனால், இவை எல்லாம் பிறகு நடந்தவை.எனில், முதலாவது? காந்தளூரில் இருந்த கடிகை (கல்விக் கூடம்) ஒன்றைத்தான், தான் பதவிக்கு வந்ததுமே இராஜராஜ சோழன் படை திரட்டிச் சென்று அழித்தார். ஏன்? எதிரி நாடுகளை விட ஒரு கடிகையை அழிப்பது ஏன் இராஜராஜ சோழருக்கு முதன்மையாகப் பட்டது?இதற்குக் காரணம் காந்தளூர் கடிகையின் தலைமை ஆசானாக இருந்தவர்தான் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்ததாக தண்டிக்கப்பட்ட ரவிதாசனின் குரு! இவருக்கும் அந்தக் கடிகைக்கும் பல உண்மைகள் தெரியும். பின்னாளில் பிரச்னைகள் ஏதும் வரக்கூடாது என்பதற்காகவே காந்தளூர் கடிகையை இராஜராஜ சோழன் அழித்தார் என்கிறார்கள்.சரி. யார் இந்த ரவிதாசன்?பிற்காலச் சோழப் பேரரசை நிறுவிய விஜயாலய சோழரின் மகன் முதலாம் ஆதித்த கரிகாலனின் இரு புதல்வர்களில் ஒருவரான கன்னரத் தேவனின் வம்சத்தைச் சேர்ந்தவர்! இந்த கன்னரத் தேவனுக்கு பட்டம் மறுக்கப்பட்டு இளையவர் பராந்தகர் அரியணை ஏறினார் என்பது வரலாறு!கன்னரத் தேவனுக்கு ஏன் சோழ அரியணை மறுக்கப்பட்டது என்பதும் இன்று வரை புரியாத புதிர்!இந்த அரச மர்மங்கள் எல்லாம் வெளிப்பட வேண்டாம் என்றுதான் சோழப் பரம்பரையைச் சேர்ந்த ரவிதாசனை நாட்டை விட்டே இராஜராஜ சோழன் துரத்தினார்... தன் அண்ணன் ஆதித்த கரிகாலனின் கொலை வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார்... லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். தன் தம்பி அருண்மொழி பட்டத்துக்கு வர வேண்டும் என்பதற்காக சோழ அரசர் குலத்தில் நிலவி வந்த அரியணைப் போட்டியைத் தனக்கு சாதகமாக குந்தவை பயன்படுத்தி ஸ்கெட்ச் போட்டார்... ஆனால், தன் அண்ணன் ஆதித்த கரிகாலன் பட்டத்துக்கு வருவதை அவர் ஏன் விரும்பவில்லை... தன் தம்பி அருண்மொழி என்கிற இராஜராஜன் பட்டத்துக்கு வர வேண்டும் என்று ஏன் ஆசைப்பட்டார்... என்பதெல்லாம் கேள்விகளாகவே இப்போதும் நிற்கின்றன.இவை எல்லாம் இப்போது கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் சொல்லப்படுபவை. நாளையே வேறு ஆவணங்கள் கிடைக்கும்போது ஆதித்த கரிகாலன் கொலை குறித்த புதிய பூகம்பங்கள் கிளம்பலாம்.மொத்தத்தில் காலம்தோறும் இக்கொலை வழக்கு போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பது மட்டும் உண்மை! போலவே இந்த அரசியல் படுகொலைக்கான காரணங்கள் ஒருபோதும் வெளியே வராது என்பதும்! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15374&id1=6&issue=20190524
 3. ரத்த மகுடம்-54 ‘‘வாருங்கள் அண்ணா!’’ அனந்தவர்மரை வரவேற்ற சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர், வாயில் அருகில் சங்கடத்துடன் நின்றிருந்த வீரனைக் கண்டதும் புன்னகை பூத்தார்.அவனது சங்கடத்துக்கான காரணம் விக்கிரமாதித்தருக்கு புரிந்தது. எல்லோரையும் போல் ‘மன்னரிடம் அனுமதி பெற்று உங்களை உள்ளே அனுப்புகிறேன்...’ என தன் அண்ணனிடம் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறான். மற்றவர்கள் போல் ‘மன்னரிடம் அனுமதி பெற்று வா...’ என அண்ணனும் அவனிடம் சொல்லவில்லை. மாறாக அவன் இருப்பையே அலட்சியம் செய்தபடி தன் அந்தரங்க அறைக்குள் அனந்தவர்மர் நுழைந்திருக்கிறார். இதனால் எங்கே, தான் அவனைத் தண்டிப்போமோ என அஞ்சுகிறான்...புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக வீரனைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தார்.லேசான மனதுடன் அவரை வணங்கிவிட்டு அறையின் கதவை ஓசை எழுப்பாமல் இழுத்து மூடினான்.‘‘அமருங்கள்..!’’ மலர்ச்சியுடன் இருக்கையைக் காட்டினார் விக்கிரமாதித்தர்.‘‘அமர்வதற்காக நான் வரவில்லை விக்கிரமாதித்தா!’’ கர்ஜித்த அனந்தவர்மர், சுவரில் தொங்கிக் கொண்டிருந்த திரைச்சீலையில் தீட்டப்பட்டிருந்த சிவகாமியின் உருவத்தை வெறுப்புடன் பார்த்தார்.அண்ணனின் பார்வை சென்ற திக்கையும் அவரது முகமாறுதலையும் கண்ட சாளுக்கிய மன்னர், தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் படரவிடவில்லை. சாதாரணமாகவே உரையாடலைத் தொடர்ந்தார். ‘‘இன்று விசாரணை மண்டபத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்ததா..?’’‘‘நடக்க வேண்டும் என்று நீ நினைத்தவை அனைத்தும் இம்மி பிசகாமல் அரங்கேறின!’’‘‘நான் நினைத்ததா..?’’‘‘ஆம். சாளுக்கிய மன்னனான நீ நினைத்தபடியே அசம்பாவிதங்கள் நடந்தன!’’ ‘கள்’ விகுதியை அழுத்திச் சொன்ன அனந்தவர்மர், ‘‘உன்னைப் பாராட்டத்தான் வேண்டும் விக்கிரமாதித்தா! எதுவுமே தெரியாதது போல் அப்பாவியாகக் கேள்வி கேட்கிறாய் பார்..!’’ என்றார்.‘‘உண்மையிலேயே எதுவும் எனக்குத் தெரியாது அண்ணா!’’‘‘இதை நான் நம்ப வேண்டுமா..?’’‘‘உங்கள் விருப்பம். ஆனால், அண்ணனிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தபிறகு அதுகுறித்து கவலையில்லாமல் இருப்பதுதான் இந்தத் தம்பியின் வழக்கம்! தாங்களும் அதை அறிவீர்கள் என நம்புகிறேன்!’’‘‘நீ சொல்வதை மட்டுமல்ல... வேறு சில விஷயங்களையும் அறிய நேர்ந்ததாலேயே இங்கு வந்திருக்கிறேன்... அதுவும் உன் மீதுள்ள நம்பிக்கையில்!’’‘‘எந்த நம்பிக்கையைக் குறிப்பிடுகிறீர்கள் அண்ணா? சாளுக்கிய மன்னன் என்ற முறையில் நம் நாட்டின் பெருமையைக் கட்டிக் காக்க நான் முற்படுவதைத்தானே?’’‘‘ஆம். சின்ன திருத்தத்துடன்!’’ அனந்தவர்மரின் உதட்டில் இகழ்ச்சி பூத்தது.‘‘என்ன திருத்தம்?’’‘‘சாளுக்கியர்களின் பெருமையைக் குழி தோண்டிப் புதைக்கும் வேலையில் நீ இறங்கியிருக்கிறாய் என்ற நம்பிக்கையுடன்!’’‘‘உங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரம்..?’’‘‘இன்று விசாரணை மண்டபத்தில் அரங்கேறிய சம்பவங்கள்!’’‘‘என்ன நடந்தது அண்ணா..?’’‘‘நீ திட்டமிட்டவை அனைத்தும்! பல்லவர்களின் உபசேனாதிபதியும் சோழ இளவரசனுமான கரிகாலன் காஞ்சியில் இருந்து தப்பிக்க உதவி புரிந்ததாகக் கைது செய்யப்பட்ட கடிகையைச் சேர்ந்த பாலகன் தப்பித்துவிட்டான்!’’‘‘அடாடா... சூழ்ந்திருந்த நம் வீரர்களை மீறி எப்படி அந்தப் பாலகன் தப்பினான்..?’’கேட்ட விக்கிரமாதித்தரை சுட்டெரிக்கும் விழிகளுடன் அனந்தவர்மர் நோக்கினார். ‘‘ஐந்து புறாக்களால்!’’எதையோ சொல்ல முற்பட்ட சாளுக்கிய மன்னர் சட்டென்று மவுனமானார்.‘‘ஏன் அமைதியாகிவிட்டாய் விக்கிரமாதித்தா..? ‘ஐந்து புறாக்கள்’ என்ற தகவல் உன் வாயைக் கட்டிவிட்டதா..? காஞ்சிக்கும் பல்லவர்களுக்கும் வேண்டுமானால் இதன் அர்த்தம் புரியாமல் இருக்கலாம். ஆனால், சாளுக்கிய தேசத்தைச் சேர்ந்த ஒவ்வொருவனுக்கும் இந்த ‘ஐந்து புறாக்கள்’ என்பது மிகப்பெரிய எழுச்சியைத் தரக் கூடியது. ஏனெனில் அது நம் தந்தை இரண்டாம் புலிகேசி கண்டறிந்த போர் வியூகம். வடக்கிலிருந்து ஹர்ஷவர்த்தனர் படைகளுடன் புறப்பட்டு தெற்கு நோக்கி வந்தபோது அவரைத் தடுத்து நிறுத்திய நம் படை, முதல் முறையாக ‘ஐந்து புறாக்கள்’ தந்திரத்தைப் பயன்படுத்தியது. இதை உருவாக்கியவர் நம் தந்தை இரண்டாம் புலிகேசி. பழக்கப்படுத்தப்படாத புரவிகளை எதிரிகளின் படைக்குள் ஓடவிட்டு அவர்களது அணிவகுப்பைச் சிதைப்பதுதான் இந்த வியூகம்! அதே தந்திரத்தைப் பயன்படுத்தித்தான் இன்று விசாரணை மண்டபத்தில் குற்றம்சாட்டப்பட்டு நின்றுகொண்டிருந்த பாலகனைத் தூக்கிச் சென்றிருக்கிறான்!’’‘‘யார்..?’’‘‘யாருக்கு உதவ நீ முற்பட்டாயோ அவனேதான்! கரிகாலன்! பாரதத்திலேயே தலைசிறந்த அசுவ சாஸ்திரியாக இன்றிருப்பது அவன்தானே!’’‘‘சாளுக்கியர்களுக்கு இழுக்கை ஏற்படுத்தும் எந்த செய்கையையும் நான் செய்யவில்லை... செய்யவும் மாட்டேன்!’’‘‘இதை எந்த சாளுக்கியனும் நம்பத் தயாராக இல்லை!’’‘‘உண்மை வெளிப்படும்போது நிச்சயம் நம்புவான்!’’‘‘எந்த உண்மையை..?’’‘‘ஒரு மன்னனாக நாட்டின் நலத்தில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன் என்ற உண்மையை!’’‘‘இதன் ஒரு பகுதியாகத்தான் கரிகாலனுக்கும் கடிகை பாலகனுக்கும் உதவுகிறாயா..?’’ தன் தம்பியின் அருகில் வந்து நின்று கேட்டார் அனந்தவர்மர்.அண்ணனை நேருக்கு நேர் பார்த்தாரே தவிர விக்கிரமாதித்தர் பதிலேதும் சொல்லவில்லை.‘‘தம்பி! உன் நோக்கம் உயர்வாக இருக்கலாம். ஆனால், அதற்காக நீ தேர்ந்தெடுத்திருக்கும் பாதை நமக்கே குழி பறிக்கக் கூடியது. நம் தலைநகரான வாதாபியில் நரசிம்மவர்ம பல்லவன் ஆடிய வெறியாட்டத்தை நீ மறந்திருக்க மாட்டாய் என மனதார நம்புகிறேன். வடக்கில் இருக்கும் மன்னர்களை எல்லாம் நடுங்கவைத்த நம் தந்தை, இந்தப் பல்லவர்களிடம் தோற்றதாக காஞ்சிபுரத்தில் பேசிக் கொள்கிறார்கள். பட்டயங்களும் கல்வெட்டுகளும் அத்தோல்வி குறித்துப் பேசுகின்றன! இந்த அவமானத்தைத் துடைக்கத்தானே நாம் படையெடுத்து வந்திருக்கிறோம்! பழிக்குப் பழி வாங்கத்தானே தென்னகத்தையே நம் குடையின் கீழ் கொண்டு வர முயற்சிக்கிறோம்! அப்படியிருக்க, தனிப்பட்ட உன் விருப்பம் காரணமாக ஒட்டுமொத்த தேசத்தையும் படுகுழியில் தள்ளிவிட்டாயே! இதற்காகவா உன்னை சாளுக்கியர்களின் மன்னராக்கினோம்? விக்கிரமாதித்தா... இதற்கெல்லாம் நம் அவையில் நீ பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்! உன் பதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லையென்றால் பதவியை விட்டு உன்னை அகற்றவும் தயங்க மாட்டோம்! நாட்டின் நலனை முன்னிட்டு, விசாரணை முடியும் வரை மன்னருக்குரிய எந்தக் கட்டளையையும் நீ இட முடியாது. உன் மனைவியை மட்டுமல்ல, யாரையுமே தற்சமயம் நீ சந்திக்க முடியாது; கூடாது. அறை வாசலில் காவலைப் பலப்படுத்தி இருக்கிறோம். விரைவில் விசாரணை நடைபெறும். இதைச் சொல்லத்தான் நேரடியாக நானே வந்தேன்!’’சொல்லிவிட்டு வெளியேற முற்பட்ட அனந்தவர்மர், மீண்டும் சிவகாமியின் ஓவியம் வரையப்பட்ட திரைச்சீலையைப் பார்த்தார்.‘‘இந்த ஆயுதமும் இப்பொழுது கரிகாலனின் வசத்தில் சிக்கி இருக்கிறது! சிவகாமி யார் என்ற உண்மை வெளிப்பட்டால் என்ன ஆகும் என கொஞ்சமாவது யோசித்தாயா..? மன்னிக்க முடியாத உன் குறித்த குற்றங்களின் பட்டியல் நீள்கிறது விக்கிரமாதித்தா!’’முகத்தைத் திருப்பிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் அறையை விட்டு வெளியேறிய அனந்தவர்மரை சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்தார் சாளுக்கிய மன்னர்.பிறகு தன் படுக்கையில் அமர்ந்து தலையணைக்குக் கீழ் கையை விட்டு ஒரு மெல்லிய ஆடையை எடுத்து தன் முன் விரித்தார்.தென்னகத்தின் வரைபடம் அதில் தீட்டப்பட்டிருந்தது.அரக்கை எடுத்து அதில் சில இடங்களில் வட்டமிடத் தொடங்கினார்!‘‘தாமதமின்றி அவையைக் கூட்டுங்கள். எல்லோரும் வர வேண்டும் என்பதை அழுத்திச் சொல்லுங்கள்...’’ விடுவிடுவென்று ஸ்ரீராமபுண்ய வல்லபரிடம் கட்டளையிட்டார் அனந்தவர்மர்.‘‘மன்னரை விசாரித்துத்தான் ஆகவேண்டுமா..?’’‘‘நாட்டைவிட மன்னன் உயர்ந்தவனல்ல போர் அமைச்சரே! சொன்னதைச் செய்யுங்கள்!’’‘‘உத்தரவு...’’ வணங்கிய ராமபுண்ய வல்லபர், தன் மடியில் இருந்து ஓலைக்குழல் ஒன்றை எடுத்து அனந்தவர்மரிடம் கொடுத்தார்.‘‘என்ன இது..?’’‘‘கங்க இளவரசரிடம் இருந்து கைப்பற்றியது!’’மேலும் கீழுமாக ஓலைக் குழலை ஆராய்ந்தார் அனந்தவர்மர்.‘‘கங்க இளவரசரை என்ன செய்யலாம்..?’’‘‘அவன் வெறும் அம்புதானே? எப்பொழுதும்போல் அரண்மனையில் நடமாட விடுங்கள். ஆனால், கண்காணிப்பு இருக்கட்டும்!’’‘‘நம் இளவரசர் விநயாதித்தர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை..?’’ ராமபுண்ய வல்லபர் இழுத்தார்.இதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தார் அனந்தவர்மர். ‘‘பல்லவ இளவரசன் ராஜசிம்மன் எங்கு இருக்கிறான் என பல்லவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்! சாளுக்கிய இளவரசர் விநயாதித்தன் எங்கிருக்கிறார் என சாளுக்கியர்கள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இரு நாடுகளும் போருக்குத் தயாராகிறது! வேடிக்கையாக இல்லை..?’’ நகைத்தபடி, அவர் செல்லலாம் என சைகை காட்டினார்.அதை ஏற்று ராமபுண்ய வல்லபர் வெளியேறினார்.சாளுக்கிய போர் அமைச்சர் அகன்றதும் ஓலைக் குழலில் இருந்து ஓலையை எடுத்து அனந்தவர்மர் படிக்கத் தொடங்கினார்.அவர் நெற்றியில் முத்து முத்தாக வியர்க்கத் தொடங்கின!பாய்ந்து அறையைவிட்டு வெளியே வந்தார். சென்றுகொண்டிருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபரை அழைத்தார். ‘‘என்ன செய்வீர்கள் என்று தெரியாது. சிவகாமி இங்கு வந்தாக வேண்டும்! உயிருடனோ சடலமாகவோ!’’‘‘அது... அது...’’‘‘நடந்தாக வேண்டும் சாளுக்கிய போர் அமைச்சரே! சிவகாமியின் உடல் மர்மம் எக்காரணம் கொண்டும் கரிகாலன் அறிய வெளிப்படக் கூடாது!’’சிவகாமியின் உடலில் பொட்டுத் துணியில்லை. அவள் மீது பாய்ந்த அம்புகள் அனைத்தும் அகற்றப்பட்டிருந்தன. காயங்களுக்குக் களிம்பிடாமல் அவள் உடல் முழுக்க பச்சிலையைப் பூசத் தொடங்கினாள் மருத்துவச்சி!http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15376&id1=6&issue=20190524
 4. 12: பொம்மைக் கல்யாணம் “இவ்வளவு நாளாக நான் சொல்லிக்கொண்டு வந்த என் வாழ்க்கைக் சம்பவங்களில் ஒரு பொதுவான அம்சம் இருக்கிறதே கவனித்தீர்களா?” என்று கேட்டார் பானுமதி.நான் விழித்தேன். “நான் சாதாரண விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். இதெல்லாம் எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பதுதானே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், ரொம்பச் சாதாரணச் சம்பவங்கள், சாமானிய மனிதர்களை நாம் கவனிப்பதே கிடையாது. உண்மையில் இவை தருகிற ஆனந்தத்துக்கு ஈடு இணையே கிடையாது. இப்படி ரொம்பச் சாதாரண விஷயங்களை நாம் ரசிக்கக் கற்றுக்கொண்டால் பெரிய விஷயங்களுக்கு ஏங்க வேண்டிய தேவையே இருக்காது! இயற்கை இப்படி நம்மிடம் ஏராளமான விஷயங்களைக் கொட்டி வைத்திருக்கிறது. கடிதத்தில் வந்த அழைப்பு நான் அமெரிக்கா போயிருந்தபோது என் பேரக் குழந்தைகள் பனிக்கட்டிகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஆஹா! அவர்களின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி! பனிக்கட்டிகளுக்கும் பஞ்சமில்லை. அவர்களின் மகிழ்ச்சிக்கும் பஞ்சமில்லை! என்ன எழுத்தாளர் சார் நான் சொல்றது சரிதானே?” பானுமதி அம்மையார் சிரித்தார். “குச்சு வீடுதான். ஆனால், சொந்தமாக நீல வான் உண்டே!” என்ற கவிஞர் திருலோக சீதாராமின் கவிதையை நினைத்துக்கொண்டேன். பானுமதி தொடர்ந்தார். அப்பா உடம்பு தேறிய உடன் பம்பாயிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அவருடைய நண்பர்தான் எழுதியிருந்தார். கடிதம் இப்படிப் போயிற்று. அன்புள்ள வெங்கட சுப்பையா, இங்கே பம்பாயில் பிரபல டைரக்டர் பி. புல்லையா ‘தர்மபத்தினி’ என்ற படம் எடுக்கிறார். அதில் பானுமதி கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். சம்மதமானால் உடனே வரவும். அப்பா யோசனையில் ஆழ்ந்தார். இந்த பி. புல்லையா, சி.புல்லையா போன்று பொறுமைசாலி இல்லை. முன்கோபக்காரர். படப்பிடிப்பின்போது நடிகர்களை மிகவும் மோசமாகத் திட்டுவாராம். அப்பா ஒரு நிபந்தனை விதித்தார். “என் மகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்” என்ற நிபந்தனை ஏற்கப்பட்டது. அப்பா, அம்மாவுடன் பம்பாய் போய்ச் சேர்ந்தோம். புல்லையா சந்தேகம் பம்பாய் ஸ்டேஷனுக்கு கார் வந்தது. கார் புறப்படுகிற நேரம் “டிரைவர் கொஞ்சம் நில்லப்பா” இன்னும் எடுத்து வைக்க வேண்டிய லக்கேஜ் இருக்கு என்றேன். அப்பா டிரைவரை வியப்புடன் பார்த்துவிட்டு, “அம்மா! அவர்தான் டைரக்டர் பி.புல்லையா!” என்றார் என்னிடம். நீங்கள் இவ்வளவு எளிமையாக இருப்பீர்கள் என்று தெரியாமல் போய்விட்டது என்றார் மன்னிப்பு கோரும் பாவனையில். புல்லையா சிரித்துவிட்டு “உங்களுக்கு என்னைப் பற்றிச் சந்தேகம் தீர்ந்துவிட்டது அல்லவா. அது போதும்” என்றார். நாங்கள் தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். அங்கே என் வயதுகொண்ட பெண் என்னிடம் ஓடிவந்து உன் பெயர் பானுமதிதானே? இந்தப் படத்தில் உன் மாமனாராக நடிக்கப் போகிறவர் என் அப்பாதான்! என் பெயர் நாகமணி என்று சொல்லிவிட்டு நான் கேட்காமலேயே பல விஷயங்களையும் என்னிடம் கொட்டித் தீர்த்தாள்!. பிறகு ஓடி விட்டாள். இதற்குள் என் அம்மா குளித்துவிட்டு பூஜைக்குத் தயாராகிவிட்டார். எங்கிருந்தாவது பூக்கள் கொண்டுவருமாறு என்னிடம் சொன்னார். நான் அறையைவிட்டு வெளியே வந்தேன். பக்கத்து அறையிலிருந்து நாகமணி என் பின்னாலேயே ஓடிவந்தாள். “ஏ பொண்ணே! நில்லு எங்கே போறே?” என்றாள். “அம்மா பூஜைக்கு பூ கேட்டாங்க. இங்கே ஏதாவது கிடைக்குமா?” “பூ வேண்டுமானால் டவுனுக்குத்தான் போகணும்!. இதோ பக்கத்தில்தான் அக்கா சாஹிப் பங்களா இருக்கிறது. அங்கே ஒரு பூந்தோட்டம் இருக்கு. அதில் பெருசு பெருசான ரோஜாப்பூக்கள் பூத்திருக்கு. நாம் போய்த் திருட்டுத்தனமாகப் பறித்துக்கொண்டு வரலாம். அக்கா சாஹிப் யார் தெரியுமா? அவர்தான் ‘தர்மபத்தினி’ படம் எடுக்கும் ஸ்டுடியோ சொந்தக்காரர். அவர் பெண் ஷாலினி பெயரைத்தான் ஸ்டுடியோவுக்கு வைத்திருக்கிறார். நீ வந்தால் அந்த பங்களாவைக் காட்டுகிறேன். நாம் ரோஜாப் பூக்களை யாருக்கும் தெரியாமல் பறித்துவரலாம்” என்றாள். இப்படித் திருட்டுதனமாக ரோஜாப்பூக்களைப் பறிக்க எனக்குப் பிடிக்கவில்லை. விளையாட்டுப் பொம்மைகள் “வேண்டாம் நாகமணி. இங்கே இருக்கிற ஏதோ காட்டுப்பூக்கள் கொஞ்சம் பறிச்சுட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டு, அங்கே ஏரிக்கரை ஓரம் பூத்திருக்கும் மஞ்சள் அரளிப் பூக்களைப் பறித்துக் கொண்டுவந்து அம்மாவிடம் கொடுத்தேன். நானும் நாகமணியும் அந்த ஏரிக்கரைக்கு வேடிக்கை பார்க்கப் போனோம். அங்கிருந்து ஷாலினி ஸ்டுடியோ தெரிந்தது. அக்கா சாஹிப் பங்களா, கோலாப்பூர் நகரம் எல்லாம் தெரிந்தன. அந்தக் காட்சி என்னுள் உறங்கிக்கொண்டிருந்த ஓவிய ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. அதை அப்படியே படமாக வரைய கைகள் பரபரத்தன. (பல ஆண்டுகள் கழித்து பேயர்ல் எஸ்.பக் எழுதிய ‘எனது பல்வேறு உலகங்கள்’ என்ற புத்தகத்தைத் தெலுங்கில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தபோது இயற்கையின் அழகை அவர் அவ்வளவு அற்புதமாக விவரித்திருப்பதற்கு அவர் கண்ட காட்சியே காரணம் என்று உணர்ந்தேன்) அப்போது நான் கோலாபூரைத்தான் நினைத்துக் கொண்டேன். எங்கே பார்த்தாலும் மாமரங்கள், ஆலமரங்கள். பெயர் தெரியாத பிரம்மாண்ட விருட்சங்கள். விதவிதமான செடிகொடிகள். நான் கையோடு கொண்டுபோயிருந்த சிறு பெட்டியைத் திறந்து நாகமணிக்குக் காட்டினேன். “ஹையா! பொம்மைக் கல்யாண விளையாட்டுப் பொம்மைகள்” என்று நாகமணி குதித்தாள். (அந்தக் காலத்தில் ஆந்திராவைச் சேர்ந்த சிறுமிகள் பொம்மைக் கல்யாண விளையாட்டில் மிகவும் ஆர்வம் காட்டினார்கள்) விளையாட ஆசை “நான்தான் பெண் வீட்டு பார்ட்டியாம். நீ மாப்பிள்ளை வீட்டாராம். வரதட்சிணை தர முடியாது. நாங்கள் ஏழைகள். பெண்ணுக்கு எங்களால் முடிந்ததைப் போட்டு அனுப்புகிறோம்” என்றாள் நாகமணி, பாட்டி மாதிரி. எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘வரவிக்ரேயம்’ கதைதான் நினைவுக்கு வந்தது. “எனக்கு வரதட்சிணை வேண்டாம்! வரதட்சிணை கொடுப்பவர்களும் வேண்டாம்! என்றேன் நெஞ்சை நிமிர்த்தி. “ஏய்! இது பொம்மைக் கல்யாணம்!” என்று சிரித்தாள் நாகமணி. நாங்கள் புறப்பட்டோம். “மறுபடி எப்போது பொம்மைக் கல்யாணம் விளையாடலாம்?” என்று கேட்டேன். “ஏய், இங்கே பொம்மைக் கல்யாணம் விளையாட வந்தாயா? சினிமாவில் நடிக்க வந்தாயா என்று கேலிசெய்தாள் நாகமணி. “ஆமாம்! நாளைக்கு ஷூட்டிங் இருக்கில்ல.” நாங்கள் அறைக்குத் திரும்பினோம். அப்போது புல்லையா அனுப்பியதாக ஒரு ஆள் வந்தார். நாளைக்கு ஷூட்டிங் வைத்துக்கொள்ளலாமா என்று டைரக்டர் கேட்டதாகச் சொன்னார். “இதுவரை எடுத்த படத்தை” ரஷ் பார்த்துவிட்டு அதில் என் மகளின் கதாபாத்திரம் எப்படிச் செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டி இருக்கு. நாளை மறுநாள் வைத்துக் கொள்ளலாமே” என்றார் அப்பா. நான் நாகமணியின் அறைக்கு ஓடினேன். “நாகமணி! நாளைக்கு ஷூட்டிங் இல்லை!. நாளைக்குப் பொம்மைக் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டேன். பானுமதி அம்மையார் வீட்டு காட்சி அலமாரியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு ராஜாராணி பொம்மைகளும் அம்மா சொல்வதை ஆமோதிப்பது போல் தலையாட்டின. https://tamil.thehindu.com/cinema/cinema-others/article27082413.ece 13: நடிப்புக்குச் சம்பளமாய் நாணயங்கள்... “கல்கத்தாவுக்கு நான் ‘மாலதி மாதவம்’ படத்தில் நடிக்கப்போனபோது நடந்த ஒரு விசித்திரச் சம்பவத்தை உங்களுக்குச் சொல்லாமல் விட்டுவிட்டேன்” என்றார் பானுமதி. ‘அதற்கென்ன இப்போது சொல்லுங்கள்!’ என்று அவரது முகத்தை ஆர்வமாக நோக்கினேன். “கல்கத்தா ரயில் நிலையத்தில் ரயிலில் உட்கார்ந்திருந்த என் தாயார், ‘யாராவது நான் சொன்னால் நம்புவார்களா... பார்க்கவே அதிசயமாக இருக்கிறது!’ என்றார். நான்,” என்னம்மா சொல்லுகிறீர்கள்?’ என்றேன். இதற்கு முன்னால் கல்கத்தா போன்ற பெரிய நகரத்துக்கு என் தாயார் வந்ததே இல்லை. கிராமப்புறங்களிலேயே வசித்தவர் அவர். அவருக்கு கல்கத்தா புறப்படும்முன் ஒரு கனவு வந்ததாம். அவர் கனவில் ஒரு பெரிய ரயில்வே சந்திப்பு. அங்கே ரயில்கள் புறப்படுவதும் வந்து சேர்வதும் தெரிந்ததாம். இப்போது பார்க்கிற கல்கத்தா ரயில்நிலையம் மாதிரி அப்படியே இருந்ததாம். கனவில் கண்ட காட்சிகள் கண்முன்னால் தெரிவதை ஒப்பிட்டுப் பார்த்து அம்மா முணுமுணுப்பதைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. எனக்கும் இதுபோன்ற கனவுகள் வந்திருக்கின்றன. ஆனால், காலை எழுந்து பார்த்தால் மறதி அவற்றை அழித்திருக்கும். அம்மாவுக்கும் அதுவே நேர்ந்திருக்கிறது. நான் மறந்துவிட்டேன். அம்மாவுக்கு நினைவிருக்கிறது. அவ்வளவுதான்” என்று நிறுத்தினார் பானுமதி. வரப்போவதை ‘கனவுகள் முன் அறிவிக்கின்றன என்று நம்புகிறீர்களா?’என்று கேட்டேன். “நிச்சயமாக..! என் தாயார் முன்பின் பார்த்திராத கல்கத்தா ஸ்டேஷன் அவர் கனவில் எப்படி வந்தது? ஏன் வந்தது? நாடி சாஸ்திரத்தில் இது பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஷர்மா என்ற ஒரு பண்டிதர் மூலம் இந்த சாஸ்திரத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஒரு வருட காலம் அவர் அதை எனக்குப் படித்துக் காண்பித்தார். அந்தச் சுவடிகளில்.. ‘பரஷாரா சொப்பனாத்யாயம்’ (கனவு அத்தியாயம்) என்ற பகுதி எனக்குப் பிடிக்கும். அம்மா ஏன் அப்படிக் கனவு கண்டார் என்பதற்கு அதில் விளக்கம் இருந்தது. கனவுகள் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றியவையாகத் தோன்றுவது ஒரு மாயை. உண்மையாய் ஆத்மாவுக்கு எல்லாமே நிகழ்காலம்தான். முக்காலம் என்று ஒன்றுமில்லை..” என்று நீளமாகச் சொல்லி முடித்தார் பானுமதி. நான் என் அப்பாவை நினைத்துக் கொண்டேன். அவருக்குக் கனவுகளை நோட்டுப் புத்தகத்தில் எழுதிவைக்கும் பழக்கம் இருந்தது. நான் படித்திருக்கிறேன். ஏதோ கொலாஜ் ஓவியம்போல் இருக்கும். அவரிடம் ‘கனாநூல்’ என்ற புத்தகம் இருந்தது. அதில் கனவுகளுக்குப் பலன்கள்கூடப் போட்டிருக்கும். ஆனால், என் அறிவு இதை நம்ப மறுத்தது. மனோ தத்துவ அறிவியலாளர் சிக்மண்ட் பிராய்டு, ‘கனவுகள் என்பது மூளை விழித்திருப்பதன் அடையாளம். அங்கு ஏற்கனவே பார்த்த, கேட்ட, உணர்ந்த விஷயங்களின் குழப்பமான பதிவைத் தவிர வேறு ஒன்றுமில்லை’ என்பதாகச் சொல்லியிருக்கிறார். மேலும் இது பற்றி பானுமதி அம்மையாருடன் தொடர்ந்து விவாதிக்காது அவர் சரித்திரத்தைத் தொடர்ந்து சொல்லுமாறு வேண்டிக்கொண்டேன். குறும்புக்கார நாகமணி பானுமதி தன் கதையைச் சொல்லத் தொடங்கினார். “கோலாபூரில் இதுவரை எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளை அப்பாவிடம் போட்டுக் காட்டினார்கள். அன்று பிற்பகல் எங்கள் ‘பொம்மைக் கல்யாண’மும் முடிந்தது. எங்களைச் சுற்றி இருந்தவர்களை அழைத்து வயிறாரச் சாப்பாடு போட்டோம். அட்சதை தூவி பொம்மை மணமக்களை வாழ்த்திவிட்டு அவர்கள் புறப்பட்டார்கள். அந்த நேரம் பார்த்து அப்பாவும் புல்லையாவும் வந்தார்கள். அவர்களை உட்காரச் சொல்லி இனிப்பு கொடுத்தோம். நாகமணியைப் பார்த்ததும் புல்லையா ‘ஓஹோ! இதெல்லாம் இந்தப் பிசாசின் வேலைதானா? இவள் பெரிய ரவுடி அம்மா!’ என்றார் என்னிடம். பிறகு நாகமணியிடம் ‘நீ வீட்டுக்கு மூத்த பெண். அம்மாவுக்கு ஒத்தாசையாய் இருக்காமல் பானுமதியுடன் சேர்ந்துகொண்டு பொம்மைக் கல்யாணம் நடத்துகிறாயே!’ என்றார். அதற்கு அவள் ‘பானுமதிதான் நடத்துகிறாள், நானில்லை’ என்றாள். அப்பா என்னிடம் ‘என்னம்மா...நாளைக்கு ஷூட்டிங் வைத்துக்கொள்ளச் சொல்லலாமா?’ என்று கேட்டார். ‘உங்கள் விருப்பம் அப்பா’ என்று சொன்னேன். மறுநாள் படப்பிடிப்பு. ஷாலினி ஸ்டுடியோஸ் சென்றோம். நாகமணியும் உடன் வந்தாள். அவள்தான் பல தகவல்களை எனக்குச் சொல்லிக்கொண்டு வந்தாள். செட்டுக்குப் போனோம். அன்று எடுக்கப்பட்ட காட்சி எனக்கு நினைவில்லை. ஆனால், படத்தின் கதாநாயகி சாந்தகுமாரி வயிற்றைத் தள்ளிக்கொண்டு நின்றார். என்னிடம் அன்பாகப் பேசினார். நான் அவர் வயிற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன். நாகமணி என் காதில் ‘அவள் கர்ப்பமாய் இருக்கிறாள். எட்டு மாதம்’ என்று கிசு கிசுத்தாள். இப்படியான விஷயங்களை அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்குக் கூச்சமாக இருந்தது. அந்தப் பெண்மணி காதில் இது விழுந்திருக்குமோ... நாகமணி ‘இந்தப் படத்தின் ஹீரோ பொம்பளை மாதிரி நடப்பார் பாரேன். ஆம்பளையே இல்லை அந்த ஆள்’ என்றாள். தன் தந்தை டிராமாக்களில் பெண் வேஷம் போட்டு இப்படித்தான் நடப்பார் என்றாள் நாகமணி. ஹீரோ வந்தார்... நாகமணி சொன்னது ஞாபகம் வந்தது. சிரிப்பாக வந்தது. நல்லவேளை அவர் எங்களைப் பார்க்கவில்லை. ஒரு மூட்டை நாணயங்கள் புல்லையா வந்தார். என்னை பியானோவின் எதிரில் உட்காரச் சொன்னார். நான் என்ன வசனம் பேசினேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் ஷூட்டிங் நேரத்தில் அப்பா குறுக்கிட்டு வசனத்தில் திருத்தம் செய்தது நினைவிருக்கிறது. ‘தர்மபத்தினி’யில் என் ‘ரோல்’ என்னவென்பது ஞாபகமில்லை. ஆனால், அதில் இரண்டு பாட்டுகள் பாடியிருக்கிறேன். ‘அனுராகமு லேகா ஆனந்தமு பிராப்தின்சுனா’, ‘நிலு...நிலுமா...நீலவர்ணா’ இந்த இரண்டு பாட்டுகளும் எனக்கு பெயரும் புகழும் வரக் காரணமாக அமைந்துவிட்டன. நாகமணியின் நட்பால் கோல்ஹாபூரில் நான் செலவழித்த நான்கு மாதங்களும் நான்கு நாட்களாக ஓடிவிட்டன. பத்துப் பன்னிரண்டு தடவைக்குமேல் பொம்மைக் கல்யாணம் நடத்திவிட்டோம். கோலாபூரிலிருந்து கிளம்பினோம். அப்பா என் நடிப்புக்கான சம்பளத்தை வாங்கிவரப் போனார். நான் அவரிடம் ‘அப்பா நீங்க வாங்குகிற பணத்தை அப்படியே ‘காயின்ஸா’ (நாணயங்களா) மாத்தி வாங்கி வரமுடியுமா? எவ்வளவு இருக்கும்? என்று கேட்டேன். எனக்கு நாணயங்களை வைத்து விளையாடுவதில் கொள்ளைப் பிரியம். ‘ஒரு சின்ன கோணிப்பை நிறைய வரும்’ என்று சிரித்தார் அப்பா. ‘அப்படியே வாங்கிட்டு வாங்க’ என்றேன். அப்பா அதேபோல கிடைத்த ரூபாய் முழுவதையும் நாணயங்களாக மாற்றி வாங்கிக் கொண்டார். ஒரு சின்ன கோணிப்பை நிறைய வைத்து கட்டிக் கொடுத்தார்கள். தூக்க முடியாமல் தூக்கி வந்து காரில் வைத்தேன். வீட்டுக்கு வந்ததும் பாயை விரித்து அவ்வளவு நாணயங்களையும் அதில் கொட்டினேன். ஆசை தீரும்வரை பூவா, தலையா விளையாடினேன். பிறகு அப்பாவிடம் கொடுத்துவிட்டேன். இன்றுவரை ரூபாய் நாணயங்களைச் சேகரிப்பதில் எனக்கு உற்சாகமும் ஈடுபாடும் உண்டு” என்று சொல்லிவிட்டு கலகலவென்று சிரித்தார் பானுமதி. தரையில் கொட்டிய நாணயங் களாய் கலீரிட்டது அவர் சிரிப்பு. https://tamil.thehindu.com/cinema/cinema-others/article27149138.ece
 5. 2. ஆதித்த கரிகாலனை கொலை செய்தது குந்தவையா...?! தலைப்புக்கான காரணத்தைப் பார்க்கும் முன் ஓர் எட்டு பிற்காலச் சோழர்களின் Blood line - இரத்த உறவை - பார்த்துவிடலாம். ம்ஹும். டிரவுசர் கிழியும் அளவுக்கு எல்லாம் ஹிஸ்டரியை இங்கே போதிக்கப் போவதில்லை! ஜஸ்ட் நுனிப்புல்தான்!இந்த பிற்காலச் சோழர் பரம்பரை விஜயாலய சோழனிடம் இருந்து தொடங்குகிறது. இந்த விஜயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன். இவருக்கு இளங்கோ பிச்சி, பல்லவ திரிபுவனதேவி என இரு மனைவிகள். இதில் மூத்தவரான இளங்கோ பிச்சிக்கு பிறந்தவர் கன்னரதேவன். ஆனால், இவருக்கு சோழ அரியணை மறுக்கப்பட்டது. பதிலாக இரண்டாவது மனைவியான பல்லவ திரிபுவனதேவியின் மகன் பராந்தக சோழர் அரியணை ஏறினார்!இந்த பராந்தக சோழருக்கு கோக்கிழானடிகள், பழுவூர் அரசி என இரு மனைவிகள்.இதில் முதல் மனைவியான கோக்கிழானடிகளுக்குப் பிறந்தவர்கள் இராஜாதித்யன், கண்டராதித்தன் ஆகிய இருவர். இவர்களில் முதல் மகனான இராஜாதித்யன், தக்கோலம் போரில் இறந்தார் அல்லது கொல்லப்பட்டார்.இரண்டாவது மனைவியான பழுவூர் அரசி வழியே பராந்தக சோழருக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். மூத்தவர் அரிஞ்சய சோழர். இரண்டாவதாகப் பிறந்தவர் உத்தமசீலி. இதில் இரண்டாவது மகனான உத்தமசீலியின் தலையையே போரில் பாண்டிய மன்னரான வீரபாண்டியன் சீவினார். இதற்குப் பழிவாங்கவே அதே வீரபாண்டியனின் தலையைக் கொய்தார் ஆதித்த கரிகாலன். இந்த ஆதித்த கரிகாலன், சுந்தர சோழரின் மகன். சுந்தர சோழர் யார்? பராந்தக சோழருக்கும் அவரது இரண்டாவது மனைவியான பழுவூர் அரசிக்கும் பிறந்த முதல் மகனான அரிஞ்சய சோழரின் புதல்வர். சுந்தர சோழருக்கும் வானவன் மாதேவிக்கும் மூன்று பிள்ளைகள். அதில் மூத்தவரே ஆதித்த கரிகாலன். அடுத்தது குந்தவை. மூன்றாவதாகப் பிறந்தவரே பின்னாளில் ராஜராஜ சோழனாகப் பதவி ஏற்ற அருண்மொழி. இந்த ராஜராஜ சோழனுக்குப் பிறகு சோழ சிம்மாசனத்தில் அமர்ந்தவர் இராஜேந்திர சோழன்.இந்த இரத்த உறவுகள் எல்லாம் பராந்தக சோழனுக்கும் அவரது இரண்டாவது மனைவியான பழுவூர் அரசிக்கும் உரியது.எனில் அதே பராந்தக சோழனுக்கும் அவரது முதல் மனைவியான கோக்கிழானடிகளுக்கும் உரிய Blood line?முன்பே சொன்னபடி இவர்களது முதல் மகனான இராஜாதித்யன் தக்கோலம் போரில் இறந்துவிட்டார். இரண்டாவது மகனான கண்டராதித்தன், செம்பியன் மாதேவியை மணந்து சில ஆண்டுகள் சோழ மன்னராக இருந்தார். இவர்களுக்கு வாரிசு இல்லாததால், தன் தம்பியும் - தனது சிற்றன்னையின் மூத்த மகனுமான அரிஞ்சயருக்கு இளவரசு பட்டம் சூட்டிவிட்டு சிவப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பட்டத்துக்கு வந்த அரிஞ்சயர், தன் மகனான சுந்தர சோழருக்கு இளவரசர் பட்டம் சூட்டினார். ஆக, அரிஞ்சயர் மறைந்ததும் சுந்தர சோழர் பட்டத்துக்கு வந்தார்!ஆனால், அரிஞ்சயர் பட்டத்துக்கு வந்து மறைந்து... பிறகு அவர் மகன் சுந்தர சோழர் அரியணை ஏறியபோது -ஒரு திருப்பம் ஏற்பட்டது! யெஸ். சோழ மன்னர் பதவியே வேண்டாம் என முடிவு செய்து சிவனடியாராக வாழத் தொடங்கிய கண்டராதித்தர் - செம்பியன் மாதேவி தம்பதிகளுக்கு அவர்களது இறுதிக் காலத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்தக் குழந்தையே பின்னாளில் சுந்தர சோழருக்கு பிறகு பட்டம் ஏறிய உத்தம சோழன்!ஆனால், இந்த உத்தம சோழன் அரியணையில் ஏறியது கூட எதிர்பாராத வகையில்தான்! ஏனெனில் சோழ மன்னராக அப்போது இருந்த சுந்தர சோழர், நியாயமாகப் பட்டத்துக்கு வர வேண்டிய கண்டராதித்தரின் மகன் உத்தம சோழனுக்கு இளவரசு பட்டம் சூட்டவில்லை. பதிலாக தன் மகன் ஆதித்த கரிகாலனுக்குத்தான் இளவரசு பட்டத்தை சூட்டினார்!இப்படி பட்டம் சூட்டப்பட்ட ஆதித்த கரிகாலன்தான் படுகொலை செய்யப்பட்டார். இதன்பிறகே நியாயமாக பட்டத்துக்கு வரவேண்டிய உத்தம சோழன் அரியணை ஏறினார்.ஆனால், இந்த உத்தம சோழனுக்குப் பிறகு சோழ மன்னராக முடிசூட வேண்டிய இவரது மகன் புறக்கணிக்கப்பட்டார். பதிலாக சுந்தர சோழரின் இரண்டாவது மகனும் ஆதித்த கரிகாலனின் தம்பியுமான அருண்மொழி என்கிற ராஜராஜசோழன் பட்டத்துக்கு வந்தார்.இந்த ராஜராஜ சோழன் காலத்தில் ஆலய அதிகாரியாக உத்தம சோழனின் மகன் இருந்தார்! ஆலயத் திருப்பணிகளில் இவர் ஊழல் செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு ராஜராஜ சோழனால் இவர் - உத்தம சோழனின் மகன் - தண்டிக்கப்பட்டார்! எனவே ராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன் அரியணை ஏற இருந்த எல்லா தடைகளும் அகற்றப்பட்டன! இதுதான் பிற்காலச் சோழர்களின் பரம்பரை.கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது ஓர் உண்மை பளிச்சிடும். அதாவது விஜயாலய சோழரின் Blood lineல் மூத்த மகன்களுக்கு மகுடம் கிட்டவில்லை! கன்னர தேவன், இராஜாதித்யன், ஆதித்த கரிகாலன் ஆகியோர் இதற்கு உதாரணங்கள். இது ஏன் என்பதற்கான காரணத்தை கதாசிரியர்கள் ஆராய்ந்து தனி நாவல்களாக எழுதட்டும்!இப்போது நம் இலக்கு ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தது யார் என்பதை போஸ்ட் மார்ட்டம் செய்வதுதான்.ரைட். பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளா ஆதித்த கரிகாலனைக் கொன்றது..?இல்லை என்பதே இப்போது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் சொல்பவை. ஒருவேளை உதவி புரிந்திருக்கலாம். ஆனால், கொன்றது இவர்கள் அல்ல.எனில் ஆதித்த கரிகாலனின் இளைய சகோதரியும் ராஜராஜ சோழனின் அக்காவுமான குந்தவையின் கணவர் வந்தியத்தேவன்தான் கொன்றாரா..?சரித்திர ஆதாரங்களே இதற்கு விடையளிக்கின்றன. ஆம் என திட்டவட்டமாகச் சொல்லாமல் உதவினார் என்ற தொனியில்! ஏனெனில், ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டபிறகு பட்டத்துக்கு வந்த கண்டராதித்தரின் மகன் உத்தம சோழரின் காலத்தில் சில ஆண்டுகள் - 12 ஆண்டுகள் என்கிறார்கள் - வந்தியத்தேவன் சிறையில் அடைக்கப்பட்டார். அதே ஆதித்த கரிகாலனின் படுகொலைக்குத் துணை போனதாக!வந்தியத்தேவன் ஏன் இந்தப் படுகொலைக்கு துணை போக வேண்டும்..? பழிக்குப்பழி வாங்கத்தான் என சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.இந்த வந்தியத்தேவன் வாணர் குலத்தைச் சேர்ந்தவர். பாலாற்றுக்கு வடக்கே சித்தூர் வரை அமைந்திருந்த நாட்டை வாணிகம்பாடி, வாணர் நாடு என்றழைத்தனர். இப்போதும் இப்பகுதியில் வாணியம்பாடி என்ற ஊர் உள்ளதை நினைவில் கொள்வது நல்லது. இப்பரப்பை ஆண்டவர்களே வாணர் குலத்தோர். வல்லம், வாணர்புரம் என்ற இரு தலைநகரத்துடன் பல நூற்றாண்டுகள் இப்பகுதியை ஆண்டனர். இவர்கள் தங்களை மாபலி சக்கரவர்த்தியின் வழி வந்தவர்களாக கூறிக் கொண்டனர். முதலாம் பராந்தக மன்னர் ஆட்சிக் காலத்தில் கங்க மன்னன் பிருதிவிபதியோடு சேர்ந்து வல்லத்தில் வாணர் குலத்துடன் சோழநாடு போர் புரிந்தது. இதற்கான ஆதாரங்களை உதயேந்திர செப்பேட்டிலும், சோழசிங்கபுர (இன்றைய சோளிங்கர்) கல்வெட்டிலும் காணலாம்.இப்போரில் பராந்தகனிடம் தோல்வியுற்ற வாணர்குல அரசர்கள் இராஷ்டிரகூட மன்னன் கிருஷ்ணதேவனிடம் அடைக்கலம் புகுந்தனர்.இந்த கிருஷ்ணதேவன்தான் கன்னரதேவனின் தாய் இளங்கோ பிச்சியின் தந்தை (பாட்டன்!). இந்த வல்லத்து யுத்தம் கி.பி.911, 912ல் நடந்ததாகக் கொள்ளலாம்.ஆக, தங்கள் வம்சத்தையே அழித்த சோழர்களைப் பழிவாங்க வந்தியத்தேவன் முடிவு செய்திருக்கலாம்... அதன் ஒருபகுதியாக ஆதித்த கரிகாலனைக் கொன்றிருக்கலாம் என்ற வாதத்தை சரித்திர ஆசிரியர்கள் முன்வைக்கிறார்கள். அடுத்து சந்தேகத்தின் வட்டத்தில் வருபவர்கள் இருவர்.ஒருவர் ஆதித்த கரிகாலனின் இளைய சகோதரியான குந்தவைப் பிராட்டியார். அடுத்தவர் குந்தவைப் பிராட்டியாரின் தம்பியும் பிற்காலத்தில் மன்னராக சோழ அரியணையில் ஏறியவருமான ராஜராஜ சோழன் என்கிற அருண்மொழி!சற்றே அழுத்தமாக இவர்கள் இருவர் மீதே இப்போது எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டிருக்கிறது!காரணம், அடுக்கடுக்கான வினாக்கள்!தளிக்குளத்தார் கோயில் என்ற சிறிய ஆலயம்தான் இடிக்கப்பட்டு அதே இடத்தில் தஞ்சை பெரியகோயில் கட்டப்பட்டது என்கிறார்கள்! சின்ன கோட்டை மறைக்க அதன் மேல் பெரிய கோட்டைக் கிழிப்பது போல் இப்படி ஏன் செய்ய வேண்டும்..? ஒருவேளை அங்குதான் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டாரா..? இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்ததால்தான் இராஜேந்திர சோழன் தஞ்சையை விட்டு நீங்கி தன் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரை உருவாக்கி அங்கு தஞ்சை பெரிய கோயிலைப் போன்றே பிரமாண்டமாக ஆலயம் ஒன்றை எழுப்பினாரா..? யார் இந்த இரவிதாஸன்..? சோழ அரச குடும்பத்தில் இவருக்கு என்ன உறவு..?மன்னராக முடிசூட்டிக் கொண்டதும் எதற்காக பிற நாடுகளின் மீது போர் தொடுக்காமல் முதல் வேலையாக காந்தளூரில் இருந்த ஒரு கடிகையைத் தாக்கி ராஜராஜ சோழன் அழித்தார்..? http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15350&id1=5&issue=20190517
 6. ரத்த மகுடம்-53 சிவகாமி இருந்ததே விசாரணை மண்டபத்தின் உப்பரிகையில் இருந்த தூணின் மறைவில் என்பதாலும், மாடியில் மக்கள் அனுமதிக்கப்படாததாலும், காற்று மட்டுமே அங்கு நீக்கமற நிறைந்திருந்ததாலும் சிவகாமி சரிந்ததையோ அவள் உடலில் அம்புகள் பாய்ந்ததையோ ஒருவரும் கவனிக்கவில்லை.மழையென பொழிந்த அம்புகளால் அலறும் சக்தியை அவளும் இழந்திருந்தாள்.நியாயமாகப் பார்த்தால் சிவகாமியின் உயிர் அந்த இடத்திலேயே பிரிந்திருக்க வேண்டும். இடைவிடாமல் அம்புகளை எய்த சாளுக்கிய வீரர்களின் நோக்கமும் அதுதான். அதனாலேயே அம்புகளைப் பாய்ச்சியதும் தங்கள் கடமை முடிந்தது என விலகவும் செய்தார்கள்.ஆனால், மனிதன் கணக்கிடும் நியாய, அநியாயங்கள் வேறு... இயற்கையின் கணிப்பு வேறு என்பதை ஒருபோதும் எந்த உயிரும் உணர்வதில்லையே! அப்படி உணரும் சக்தி இருந்திருந்தால் மனித குல வரலாறே வேறு விதமாக அல்லவா மாறியிருக்கும்! எதிர்பாராத கணத்தில் உயிரை விட்டவர்களும் உண்டு. எதிர்பார்த்த கணத்தில் பிரிய இருந்த உயிர், பிரியாமல் கெட்டிப்பட்டதும் உண்டு. சரித்திரம் என்பதே இந்த இரண்டு சாத்தியங்களாலும் நிரம்பியதுதான். உயிர் மட்டுமல்ல... வெற்றி தோல்விகள் கூட கணத்தில் தீர்மானிக்கப்படுபவைதான். மனித எத்தனங்கள் எல்லாமே இப்படி கணத்துக்கு முன் மண்டியிட்டு தாழ்பணிந்திருக்கின்றன. இந்தக் கணத்தை கடவுள் என டையாளப்படுத்துபவர்களும் உண்டு; இயற்கையின் விதி என அறிவிப்பவர்களும் உண்டு; இவை இரண்டுமல்ல என மறுத்து மூன்றாவதாக வேறு எதையாவது குறிப்பிடுபவர்களும் உண்டு.எது எப்படியிருந்தாலும் கணங்கள் மட்டும் எல்லா கணங்களிலும் யாருக்காவது கனத்தபடியே இருக்கின்றன; சரித்திரத்தை காலம்தோறும் எழுதியபடி இருக்கின்றன.அப்படியொரு கணம்தான் அந்தக் கணத்தில் சிவகாமிக்கு வாய்த்தது!அலறும் சக்தியற்று சரிந்தவளின் செவியில் மக்கள் கூக்குரலும் அங்கும் இங்கும் ஓடுவதும் துல்லியமாகவும் துல்லியமற்றும் விழுந்தது. ஒலிப்பது கனவிலா நிஜத்திலா என்பதை உணரும் சக்தி அப்போது அவளுக்கு இல்லை. ‘கரிகாலனுக்கு நீ உதவியதாக ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன... இதுகுறித்து என்ன சொல்ல நினைக்கிறாய்..?’ என நீதிபதியின் இருக்கையில் அமர்ந்தபடி அனந்தவர்மன் கேட்ட வினாவுக்கு அந்த கடிகை பாலகன் என்ன பதில் சொன்னான்..? ஒருவேளை அவன் சொன்ன விடையைத் தொடர்ந்துதான் இந்தக் கூச்சலும் குழப்பமும் ஏற்படுகிறதா..? பொய்மையும் வாய்மை இடத்து என்பதை மறுத்து உண்மையையே அந்தப் பாலகன் கூறிவிட்டானா..? அவனுக்கு மரண தண்டனை அறிவித்து விட்டார்களா..? அப்படி மட்டும் நிகழ்ந்துவிட்டால் கரிகாலன் தன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டாரே...மயக்கம் முற்றிலுமாகத் தன்னைத் தழுவும் முன் சிவகாமியின் உள்ளத்தில் படர்ந்த சிந்தனைகள் இவைதான்.அதன்பிறகு எண்ணங்கள் அவளை விட்டு அகன்றன. தன் நினைவை அவள் இழந்தாள்.ஒருவேளை அம்புகள் சிவகாமியின் உடலைத் தைக்காவிட்டாலும் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு தன் நினைவை அவள் இழந்திருப்பாள். ஏனெனில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட காட்சிகள் அடுத்தடுத்து விசாரணை மண்டபத்தில் அரங்கேறின. ‘‘சொல் பாலகனே... ஏன் மவுனமாக இருக்கிறாய்? கரிகாலனுக்கு நீ ஏன் உதவி புரிந்தாய்? இதற்குமுன் உன் வாழ்க்கையில் நீ கரிகாலனைச் சந்தித்ததும் இல்லை... உறவாடியதும் இல்லை. அப்படியிருக்க யார் சொல்லி பல்லவர்களின் உபசேனாதிபதியான அவனுக்கு உதவி செய்தாய்?’’பிரேதக் கண்கள் ஜொலிக்க அனந்தவர்மர் இப்படிக் கேட்டதும் கடிகையைச் சேர்ந்த அந்தப் பாலகன் நிமிர்ந்தான். சுற்றிலும் தன் பார்வையைச் சுழலவிட்டு அங்கிருந்த மக்களைப் பார்த்தான்; அலசினான். பாலகன் சொல்லவிருக்கும் பதிலுக்காக அனந்தவர்மர் காத்திருந்தாரோ இல்லையோ... பார்வையாளர்களாக வந்திருந்த மக்கள் அனைவரும் தங்கள் செவிகளைக் கூர்தீட்டிக் காத்திருந்தார்கள். பால் வடியும் அந்த முகமும் அதில் ஜொலித்த தேஜஸும் அந்தப் பாலகன் மீது அவர்களுக்கு மரியாதையையும் அன்பையும் ஏற்படுத்தி இருந்தன. இதற்குமுன் அந்தப் பாலகனை எங்குமே யாருமே சந்தித்ததில்லை என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை. இனி சந்திக்கவே முடியாதோ என்ற அச்சமே அவர்கள் மனதில் விருட்சமாக வளர்ந்து நின்றது! ஏனெனில் அனந்தவர்மர் நடத்திய விசாரணையின் போக்கு எந்தத் திசையில் செல்கிறது என்பது அங்கிருந்த அனைவருக்குமே புரிந்திருந்தது. துடிக்கும் இதயத்துடன் பாலகனையே இமைக்காமல் பார்த்தார்கள். மக்களின் எண்ண ஓட்டத்தை ஸ்படிகம் போல் பாலகன் படித்தான். படிக்க மட்டுமே செய்தான். மற்றபடி அதில் தன் கவனத்தைக் குவிக்கவில்லை. யாருடைய ஆறுதலும் அன்பும் அவனுக்கு அவசியமாகவும் படவில்லை. நெஞ்சை நிமிர்த்தி அலட்சியத்துடன் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல அனந்தவர்மரை நோக்கி அவன் வாயைத் திறந்தான்.ஆனால், ஒரேயொரு எழுத்து சொல் கூட அவன் உதட்டிலிருந்து பிறக்கவில்லை! பிறக்க அக்கணமும் அனுமதிக்கவில்லை! ஏனெனில் அக்கணத்தையும் அதற்கடுத்து வந்த கணங்களையும் அசுவங்கள் ஆக்கிரமித்தன!ஆம். புரவிகள்! எங்கிருந்து எப்படி வந்தன என்பதை ஒருவராலும் ஆராய முடியவில்லை. கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட அசுவங்கள் விசாரணை மண்டபத்துக்குள் புகுந்தன. அவை அனைத்துமே அப்பொழுதுதான் அரபு நாட்டிலிருந்து மல்லைத் துறைமுகத்தில் வந்து இறங்கியவை. கடற்கரை மணலில் ஓடவிட்டு சரிபார்க்கப்பட்டு காஞ்சி மாநகரத்தை வந்தடைபவை. மற்றபடி இன்னமும் பழக்கப்படாதவை.எனவே மக்கள் கூட்டத்துக்குள் அவை தறிகெட்டுப் பாய்ந்தன. அவற்றை அடக்கும் வல்லமை படைத்த அசுவ சாஸ்திரிகள் அங்கு இல்லாததால் மனம்போன போக்கில் அவை பாய்ந்தன.அவற்றின் குளம்புகளில் மிதிபடாத வண்ணம் தப்பிக்க மக்கள் மட்டுமல்ல... நீதிபதியின் இருக்கையில் அமர்ந்திருந்த அனந்தவர்மரும் அவருக்குக் காவலாக நின்ற சாளுக்கிய வீரர்களும் முயன்றார்கள்.எல்லோரும் எல்லா இடங்களிலும் ஓடி தப்பிக்க முயன்றார்கள். முண்டியடித்தார்கள். ஒருவர் மீது மற்றவர் மோதி விழுந்தார்கள். விழுந்தவர்கள் வெளியில் பாய்ந்தார்கள்.இந்த அமளிகள் எல்லாம் அடங்க ஒரு நாழிகையானது.தகவல் அறிவிக்கப்பட்டு வந்து சேர்ந்த சாளுக்கிய அசுவ சாஸ்திரிகள் ஒருவழியாக புரவிகளை அடக்கினார்கள். அனைத்தையும் கொட்டடிக்கு அழைத்துச் சென்றார்கள்.எல்லாம் முடிந்தபிறகுதான் அந்த உண்மை தெரிந்தது.விசாரணைக் கூண்டில் இருந்த அந்த கடிகை பாலகனைக் காணவில்லை!இது மட்டுமே அங்கிருந்த அனந்தவர்மரும் மற்றவர்களும் அறிந்தது. அவர்கள் அறியாதது, உப்பரிகையில் அம்பு பாய்ந்த நிலையில் மயக்கம் அடைந்திருந்த சிவகாமியும் அங்கு இல்லை என்பது!அனந்தவர்மரின் பிரேதக் கண்கள் மேலும் பிரேதத்தை பிரதிபலித்தன. கண்கள் இடுங்கின. அவரால் நடந்ததை எல்லாம் நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.கடிகை பாலகன் தப்பித்துவிட்டான் என்பதை விட பாய்ந்த புரவிகள் மோதியோ அல்லது அதன் குளம்படிகளில் சிக்கியோ மக்களில் ஒருவரோ அல்லது சாளுக்கிய வீரர்களில் ஒருவரோ காயமும் படவில்லை... உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இல்லை... என்ற உண்மை அவர் முகத்தை அறைந்தது!ஒழுங்குபடுத்தப்படாத புரவிகளை அந்தளவுக்கு ஒழுங்குடன் விசாரணை மண்டபத்துக்குள் ஓட விட்டவன் யார்..? அவன் யாராக இருந்தாலும் கைதேர்ந்த அசுவ சாஸ்திரியாக இருக்க வேண்டும்...அனந்தவர்மரின் புருவங்கள் முடிச்சிட்டன. யார் அவன் என்ற கேள்வி அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது.‘‘சந்தேகமென்ன... கரிகாலன்தான்!’’ வெறுப்புடன் சொன்னார் ராமபுண்ய வல்லபர்.‘‘எப்படி அவ்வளவு உறுதியுடன் சொல்கிறீர்கள்..?’’ அனந்தவர்மரின் பார்வை வேறு எங்கோ இருந்தது.‘‘அவனைத் தவிர வேறு யாராலும் இந்தக் காரியத்தை செய்திருக்க முடியாது! இந்தப் பகுதியில் மட்டுமல்ல... இந்த பரத கண்டத்திலேயே இரண்டே இரண்டு பேர்தான் கைதேர்ந்த அசுவ சாஸ்திரிகள். அதில் கரிகாலனும் ஒருவன்!’’ ‘‘இன்னொருவர் சிவகாமிதானே?’’ சட்டென்று திரும்பிக் கேட்டார் அனந்தவர்மர். அவர் பார்வை சாளுக்கிய போர் அமைச்சரை அம்பென துளைத்தது.எலும்புக்குள் நடுக்கம் ஊடுருவினாலும் ஸ்ரீராமபுண்ய வல்லபர் தன் பார்வையைத் திருப்பவில்லை. அனந்தவர்மரின் நயனங்களை நேருக்கு நேர் சந்தித்தார். ‘‘ஆம்!’’‘‘அவள் எங்கே..?’’‘‘இறந்திருக்க வேண்டும்...’’‘‘அதாவது உறுதியாகத் தெரியாது. அப்படித்தானே?’’‘‘அப்படியில்லை....’’‘‘பின் வேறு எப்படி..?’’‘‘விசாரணை மண்டபத்துக்கு சிவகாமியும் வந்திருந்தாள். நம் வீரர்கள் அவள் மீது அம்புகளைப் பாய்ச்சினார்கள்...’’‘‘எனில் இறந்துவிட்டாள் என உறுதியாகச் சொல்லவேண்டியதுதானே..?’’ராமபுண்ய வல்லபர் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றார். ‘‘அவள் சடலம் கிடைத்ததா..?’’ அனந்தவர்மர் கேட்டார்.‘‘இல்லை!’’‘‘அதாவது நம் அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு பாலகனையும் அவளையும் ஒருசேர கரிகாலன் அழைத்துச் சென்றிருக்கிறான்... அப்படித்தானே..?’’முதல் முறையாக ராமபுண்ய வல்லபர் தலைகுனிந்தார்.‘‘இதனால் என்னென்ன ஆபத்துகள் வரும் என கொஞ்சமாவது யோசித்தீர்களா ராமபுண்ய வல்லபரே! சிவகாமி மீது அம்புகள் பாய்ந்திருக்கின்றன. அவளைக் காப்பாற்ற கரிகாலன் சிகிச்சை அளிக்கப் போகிறான். அப்படி சிகிச்சை அளிக்கப்பட்டால் நம் திட்டம் வெளிப்பட்டு விடாதா..? சிவகாமி யார் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள மாட்டானா..? சாளுக்கிய மன்னனான என் தம்பி விக்கிரமாதித்தனுக்குக் கூடத் தெரியாமல் நாம் அரங்கேற்ற நினைத்த காதை அம்பலத்துக்கு வந்தால் நம் நிலை என்னவாகும் என கொஞ்சமாவது யோசித்தீர்களா..?’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் உதட்டைக் கடித்தார்.‘‘போங்கள்... உடனடியாக வீரர்களையும் ஒற்றர்களையும் அனுப்பி சிவகாமிக்கு எங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என தேடச் சொல்லுங்கள். அநேகமாக குறுவாள் பாய்ந்த சோழ மன்னருக்கு எந்த மருத்துவர் சிகிச்சை அளிக்கிறாரோ அவரிடம்தான் சிவகாமியையும் கரிகாலன் அழைத்துச் சென்றிருப்பான்...’’புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக தலையசைத்த ஸ்ரீராமபுண்ய வல்லபர், அனந்தவர்மருக்கு தலைவணங்கிவிட்டு வெளியே சென்றார்.பற்களைக் கடித்தபடி அந்த அறையின் சாளரத்துக்கு அனந்தவர்மர் வந்தார். காஞ்சி மாநகரம் பரந்து விரிந்திருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தவரின் பார்வை சட்டென கூர்மை அடைந்து ஓர் இடத்தில் நிலைத்தது.அந்த இடத்தில் புறாக்கள் தானியங்களைக் கொத்திக் கொண்டிருந்தன! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15351&id1=6&issue=20190517
 7. அத்தியாயம் 1 ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கொலை வழக்கை இந்த 21ம் நூற்றாண்டில் போஸ்ட் மார்ட்டம் செய்ய காரணமிருக்கிறது.ம்ஹும். அமரர் கல்கி எழுதிய என்றும் பெஸ்ட் செல்லர் பட்டியலில் இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் இப்போது இரு பாகங்கள் கொண்ட திரைப்படமாக எடுக்க முயற்சி செய்கிறார் என்பதால் அல்ல!பிறகு எதற்காக இப்போது..? சுவாரஸ்யத்துக்காகத்தான்! பின்னே... தமிழகத்தின் பெருமை வாய்ந்த வரலாறாகச் சொல்லப்படும் பிற்காலச் சோழ அரசின் காலத்தில், இளவரசராக பட்டம் ஏற்று மன்னராக முடிசூட இருந்த ஆதித்த கரிகாலன் தன் 28வது வயதில் படுகொலை செய்யப்பட்டார் என்பதும், அதற்கான காரணம் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது என்பதும் எப்பேர்ப்பட்ட க்ரைம் ஸ்ேடாரி!முதலில் அமரர் கல்கிக்கு நன்றி. வெறும் வரலாற்றுப் பேராசிரியர்கள் மத்தியில் மட்டுமே பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்த இந்த ஆதித்த கரிகாலன் கொலை வழக்கை தன் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலின் அடிநாதமாக வைத்து பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வந்ததற்காக.பிறகு இந்த நாவலை அடியொற்றி அமரர் விக்கிரமன், ‘நந்திபுரத்து நாயகி’ என்னும் புதினத்தை எழுதினார்.இவ்விரு நாவல்களுமே ஜஸ்ட் ஆதித்த கரிகாலனின் கொலையை ஊறுகாய் ஆக மட்டுமே பயன்படுத்தி இருக்கின்றன. இதற்காக அமரர் கல்கியையோ விக்கிரமனையோ குறை சொல்ல முடியாது. அவர்கள் காலத்தில் இருந்த வரலாற்றுப் பேராசிரியர்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்களை வைத்து எழுதிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு ‘பொன்னியின் செல்வனை’யும், ‘நந்திபுரத்து நாயகி’யையும் எழுதினார்கள்.இன்று வரலாற்றுச் சான்றுகள் ஏராளமாகக் கிடைத்துள்ள நிலையில் இன்னும் நெருக்கமாக இந்தக் கொலை வழக்கை ஆராய வேண்டியிருக்கிறது. ‘காலச்சக்கரம்’ நரசிம்மா இதைத்தான் ‘வானதி’ பதிப்பகம் வெளியிட்டுள்ள தனது ‘சங்கதாரா’ நாவலில் அட்டகாசமாகச் செய்திருக்கிறார்! ரைட். ஆதித்த கரிகாலன் யார்..? அவருக்கும் சோழ அரச குடும்பத்துக்கும் என்ன உறவு..?ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியிருக்கிறார் அல்லவா ராஜ ராஜ சோழன்... அவரது அண்ணன்தான் இந்த ஆதித்தகரிகாலன். நியாயமாகப் பார்த்தால் இந்த ஆதித்த கரிகாலன்தான் சுந்தரசோழருக்குப் பிறகு சோழ மன்னராகி இருக்க வேண்டும்! இதன் ஒருபடியாக இவருக்கு இளவரசர் பட்டமும் சூட்டப்பட்டிருந்தது! இந்தச் சூழலில்தான் ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டார்! இதனையடுத்து யார் சோழ மன்னராவது என கேள்வி எழ... சுந்தர சோழரின் அண்ணன் கண்டராதித்தரின் மகன் உத்தம சோழன் - ராஜராஜ சோழனின் பெரியப்பா மகன் - பட்டத்துக்கு வந்தார்.இந்த உத்தம சோழரின் காலத்துக்குப் பிறகே ராஜராஜ சோழன் மன்னராக அரியணை ஏறினார். இவருக்குப் பின் இவரது மகன் ராஜேந்திர சோழன் பட்டத்துக்கு வந்தார் என்பதெல்லாம் வரலாறு.இந்த ஹிஸ்டரி எல்லாம் இங்கு வேண்டாம். நேரடியாக ஆதித்த கரிகாலனின் கொலை வழக்குக்குச் சென்றுவிடலாம்! முன்பாக Reading Between Lines ஆக வரலாற்றில் இருக்கும் சில கேள்விகளைத் தொகுத்துக் கொள்ளலாம்.‘வானுலகைப் பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்தான். உலகில் கலி என்னும் காரிருள் சூழ்ந்தது...’என்று திருவாலங்காட்டு செப்பேடுகளில் ஆதித்த கரிகாலனின் கொலையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. புருவத்தை உயர்த்துவதும் இதுதான். ஏனெனில் இளவரசர்களுக்கு எல்லாம் சோழ நாட்டின்மீது ஆசை இருக்கும்போது ஆதித்த கரிகாலனுக்கு மட்டும் வானுலகம் மீது எப்படி ஆசை இருந்திருக்க முடியும்?!அடுத்து, இந்த படுகொலை ரவிதாஸன் என்பவரின் தலைமையில் நடைபெற்றது என்கிறது கல்வெட்டு ஆதாரங்கள். நாவலின் சுவைக்காக இந்த ரவிதாஸனை பாண்டிய நாட்டின் ஆபத்துதவிகளில் ஒருவராக அமரர் கல்கி தனது ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வடிவமைத்திருக்கிறார்.உண்மையில் ரவிதாஸன் பாண்டிய நாட்டு ஆபத்துதவி அல்ல! எனில் அவர் யார்?உடையார் கோயில் கல்வெட்டில் (முதல் யாத்திரை) ஆதித்த கரிகாலனைக் கொன்றதைப் பற்றிக் குறிப்பிடுகையில் -‘துரோகிகளான ரவிதாஸனாகிய பஞ்சவன் பிரும்மாதிராயன், அவன் உடன்பிறந்தோன் சோமன் சாம்பவன்...’ என செதுக்கப்பட்டுள்ளது. இதை அடிக்கோடிட்டு வாசிக்க வேண்டும். ஒரு நாட்டுக்கு, அந்த நாட்டைச் சேர்ந்தவன்தான் துரோகம் செய்ய முடியும். அண்டை நாட்டுக்காரன் பகைவன் அல்லது விரோதிதான். இது கல்வெட்டை செதுக்கியிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். அறிந்தே துரோகம் என குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றால்... யெஸ். சோழ அரச குலத்தைச் சேர்ந்தவர்தான் ரவிதாஸன்!காதில் பூ சுற்றவில்லை. சுந்தர சோழர் காலத்தில் சோழ நாட்டின் அமைச்சராக இருந்த அநிருத்தர் பிரும்மராயர் ஓய்வு பெற்றபிறகு இந்த ரவிதாஸனுக்கு - சோழ இளவரசரை படுகொலை செய்த வழக்கின் A1 குற்றவாளியான ரவிதாஸனுக்கு - சோழ அரசில் பெரும் பதவி அளிக்கப்பட்டது! இதன் காரணமாகவே ‘பஞ்சவன் பிரும்மாதி ராயன்’ என்று பெருமையுடன் ரவிதாஸன் அழைக்கப்பட்டார்! ‘பிரும்மாதிராயன்’ என்பது சோழ அரசில் பெரும் பதவியில் உள்ள அந்தணர்களைத்தான் குறிக்கும்! அநிருத்தரும் பிரம்மாதிராயன் என்றே அழைக்கப்பட்டார் என்பதை இங்கு நினைவு கூர்வது நல்லது!இதை அடிப்படையாக வைத்தே சில சரித்திர ஆசிரியர்கள் ரவிதாஸன் அந்தணனாக இருந்ததாலேயே சோழ நாட்டின் நீதிப்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்கிறார்கள்.எனில், சோழர்கள் படையெடுத்துச் சென்றபோதெல்லாம் அண்டை நாட்டில் இருந்த அந்தணர்களையும், பெண்களையும் கொன்று குவித்தனரே... இதெல்லாம் எதில் சேரும்? சொந்த நாட்டு அந்தணர்களைத்தான் கொல்லக் கூடாது... எதிரி நாட்டு அந்தணர்களைக் கொல்லலாம் என இதை எடுத்துக் கொள்ளலாமா?! அந்தணர்களைக் கொன்றதால் ஏற்பட்ட ‘சோழ பிரும்ம ஹத்தி’ என்கிற பாபத்தைக்கழிக்கவே அரச குடும்பத்தினர் பல விண்ணகரங்களையும் சிவாலயங்களையும் எழுப்பினார்கள் எனக் கருதலாமா?! போலவே ஆதித்த கரிகாலனின் தந்தையார் சுந்தர சோழருக்குப் பிறகு பதவிக்கு வந்த கண்டராதித்த தேவரின் மகன் உத்தம சோழன்தான் ஆள் வைத்து ஆதித்த கரிகாலனைக் கொலை செய்ததாக வேறு சிலர் சொல்கிறார்கள்.ஒரு வாதத்துக்காக அப்படி என்றே வைத்துக் கொள்வோம். ரவிதாஸனைக் கொண்டு ஆதித்த கரிகாலனை உத்தம சோழர் கொலை செய்தார் என்றால், தான் பதவிக்கு வந்ததும் அவருக்கு அரச பதவி கொடுத்து ஏன் உத்தமசோழர் மரியாதை செய்தார்..? மக்கள் மனதில் இது சந்தேகத்தை எழுப்பியிருக்காதா?இந்த உத்தம சோழருக்குப் பிறகு பதவிக்கு வந்த அருண்மொழி என்கிற ராஜராஜ சோழன், தன் அண்ணனான ஆதித்த கரிகாலனைக் கொன்ற ரவிதாஸனுக்கும் மற்றவர்களுக்கும் மரண தண்டனை விதிக்காததன் காரணம் அவர் அந்தணராக இருந்ததுதான்... இதனாலேயே ரவிதாஸனின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து, உடுத்திய ஆடையுடன் அவரது மொத்தக் குடும்பத்தையும் நாடு கடத்தினார் என்கிறார்கள். இதை ஏற்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது! ஏனெனில் சோழ அரச குடும்பத்தின் அடைமொழிச் சொல்லான ‘பஞ்சவன்’ என்ற விருதுப் பெயருடனேயே ரவிதாஸன் அழைக்கப்பட்டிருக்கிறார்! அந்தணர்களுக்கு இப்பட்டத்தை வழங்கும் வழக்கமில்லை! இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், ரவிதாஸன் அந்தணராக இருக்க வாய்ப்பில்லை என்று தெரியும்! எனில், ராஜராஜ சோழன் ஏன் ரவிதாஸன் உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவில்லை?!Cut to - ரவி என்கிற வடமொழிச் சொல்லுக்கு ஆதித்தன், கதிரவன், பிங்களன்... என பல அர்த்தங்கள் உண்டு என்பதை கவனத்தில் கொள்வது நல்லது!ரைட். ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்..? ஏன் இந்தக் கொலை நடந்தது..? எந்த இடத்தில் நடைபெற்றது..? http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15309&id1=6&issue=20190510
 8. அத்தியாயம் 52 மற்றவர்களை விடுவிடுவென்று விசாரித்துக் கொண்டு போன அனந்தவர்மர், கடிகையைச் சேர்ந்த பாலகனை விசாரிக்கும் நேரம் வந்ததும் நிதானித்தார்.ஒருமுறை பாலகனைக் கூர்ந்து நோக்கினார். அதைத் தொடர்ந்து அந்தப் பிரேதக் கண்களில் சில கணங்கள் சிந்தனைகள் படர்ந்தன. கடைசியாக ஏதோ முடிவுக்கு வந்ததற்கு அறிகுறியாக தன் தலையை ஒருமுறை அசைத்துவிட்டு பாலகனை எழுந்து நிற்கும்படி கேட்டுக் கொண்டார். விசாரணையின் விளைவைப் பற்றி ஓரளவு கணித்துவிட்ட பாலகன், கம்பீரமாக எழுந்து நின்றான். ஐந்தடிகள் முன்னால் நகர்ந்தான். கூர்மையான தன் விழிகளால் அந்த நீதி மண்டபத்தை அலசினான். முகத்தில் படர்ந்திருந்த சாந்தம் அப்படியே இருந்தது.எல்லோரையும் ஒரு பார்வை பார்ப்பதுபோது தன் கருவிழிகளைச் சுழலவிட்டுவிட்டு நீதிபதியின் ஆசனத்தில் அமர்ந்திருந்த அனந்தவர்மரின் மேல் தன் பார்வையைப் பதித்தான்.இரண்டு ஜோடிக் கண்களும் மீண்டும் ஒருமுறை கலந்தன. மனதுக்குள் என்னவிதமான உணர்வுகள் பொங்கி எழுந்ததோ... எதையும் வெளிப்படுத்தாமல் தன் நிதானத்தையும் கைவிடாமல் விசாரணையைத் தொடர்ந்தார் அனந்தவர்மர்.‘‘பாலகனே! நாம் இருவரும் ஒருவரையொருவர் முன்பே அறிவோம்..!’’ என்றார்.‘‘ஆம்... நன்றாக அறிவோம்...’’ அதே நிதானத்துடன் பாலகன் பதில் அளித்தான்.உடனே சலசலப்புக் குறைந்தது. கயிற்றால் கட்டிப் போட்டதுபோல் நீதி மண்டபத்தில் இருந்த மக்கள் அமைதியாக விசாரணையை கவனிக்கத் தொடங்கினார்கள். ‘‘நீதி அதிகாரி, குற்றவாளி என்ற இவ்வித உறவில் நாம் முன்பு சந்திக்கவில்லை...’’ அனந்தவர்மர் சுட்டிக் காட்டினார்.‘‘ஏற்கிறேன்...’’ கணீரென்ற குரலில் பிசிறு தட்டாமல் பாலகன் சொன்னான். ‘‘அப்பொழுது தூதுவனாக வந்தேன்...’’‘‘யாருடைய தூதுவனாக என்பதை இந்த அவைக்கு நீயே தெரிவிக்கிறாயா அல்லது...’’ அனந்தவர்மர் இழுத்தார்.‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் தூதுவனாக! இதைச் சொல்வதில் எனக்கென்ன அச்சம்..?’’ ‘‘கேட்பதில் எனக்கும் அச்சமில்லை!’’ பிரேதக் கண்களில் அலட்சியம் வழிந்தது. சற்றே கிண்டலும். ‘‘அப்படி சாளுக்கிய மன்னரின் சார்பாக என்னிடம் தூது வந்தவன் இப்பொழுது சாளுக்கியர்களின் எதிரியாக, பல்லவர்களுக்குத் துணை போனதாக, விசாரணை மண்டபத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறாய் என்பதை காஞ்சி மக்கள் அறிய வேண்டுமல்லவா..?’’‘‘கண்டிப்பாக அறிய வேண்டும்!’’ பட்டென்று பாலகன் இடைமறித்தான்.‘‘எதைக் குறிப்பால் உணர்த்த வருகிறாய்..?’’ அனந்தவர்மரின் கண்கள் இடுங்கின.‘‘உங்கள் முன்னேற்றத்தை!’’‘‘விளக்க முடியுமா..?’’‘‘தாராளமாக. பல்லவ நாட்டை... இந்த காஞ்சி மாநகரத்தை இப்பொழுது யார் ஆட்சி செய்கிறார்கள்..?’’ கேட்ட பாலகன், நிதானத்தைக் கைவிடாமல் தொடர்ந்தான். ‘‘இதை நீங்களே இந்த அவைக்கு சொல்கிறீர்களா அல்லது...’’ நிறுத்திய பாலகனின் உதட்டில் புன்னகை பூத்தது.அனந்தவர்மரின் பிரேதக் கண்கள் ஒரு கணம் ஒளிர்ந்தன. தான், தொடுத்த அதே வினா! கடிகையைச் சேர்ந்த பாலகன் லேசுப்பட்டவனல்ல. ‘‘அதற்கென்ன... எல்லோருக்கும் தெரிந்ததுதானே..?’’‘‘தெரிந்ததை மறுமுறை உரைப்பதில் என்ன தயக்கம்..?’’‘‘தயக்கம் என யார் சொன்னது..?’’‘‘எனில் வினாவுக்கு விடையளிக்கலாமே! பல்லவ நாட்டை... இந்த காஞ்சி மாநகரத்தை இப்பொழுது யார் ஆட்சி செய்கிறார்கள்..?’’ இம்முறை பாலகன் அதே கேள்விக்கு அழுத்தம் கொடுத்தான்.‘‘சாளுக்கியர்கள்தான்! அதில் உனக்கேதும் சந்தேகம் இருக்கிறதா..?’’‘‘இருக்கிறது!’’ சொன்ன பாலகன் தன் நெஞ்சை நிமிர்த்தினான்.‘‘இப்பொழுதே அம்பை எய்து விடலாமா..?’’ சுற்றிலும் மறைந்திருந்த வீரர்களில் ஒருவன் கேட்டான்.‘‘கூடாது!’’ தலைவன் போல் காணப்பட்டவன் குரலை உயர்த்தாமல் சீறினான். ‘‘பின் எப்பொழுது அம்புகளைத் தொடுக்க வேண்டும்..?’’‘‘அந்தப் பெண் தன் வில்லின் நாணை இழுத்ததும்!’’ என்றபடி நீதி மண்டபத்தின் மாடித் தூணோரம் மறைந்திருந்த சிவகாமியை சுட்டிக் காட்டினான் வீரர்களின் தலைவன். ‘‘அப்படித்தான் நமக்கு உத்தரவு. அதை மீறக் கூடாது. இமைக்காமல் அவளை விட்டு பார்வையை அகற்றாமல் இருங்கள்...’’‘‘அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும்..? இப்பொழுதே நம் அனைவரின் அம்புகளாலும் அவளை வீழ்த்தி விடலாமே..?’’‘‘கூடாது. நமக்கு இடப்பட்ட கட்டளை வேறு...’’‘‘சரி... அவளைச் சுற்றி வளைத்து சிறைப்பிடித்து விடலாம் அல்லவா..?’’‘‘ஒருபோதும் அப்படிச் செய்யக் கூடாது என உத்தரவு!’’வீரன் ஒரு கணம் யோசித்தான். ‘‘ஒருவேளை அவள் நாணை இழுக்கவில்லை என்றால்..?’’ கேட்டவனைக் கூர்ந்து பார்த்தான் தலைவன். ‘‘நீங்களும் அவள் மீது அம்புகளைப் பொழிய வேண்டாம்!’’‘‘எதுவும் செய்யாமல் விசாரணை முடிந்து கூட்டத்தோடு கூட்டமாக அவளும் கலைந்து சென்றால்..?’’‘‘தடுக்க வேண்டாம்!’’ பட்டென்று சொன்னான் தலைவன். ‘‘அவளைப் பின்தொடரவும் வேண்டாம்! சொன்னது நினைவிருக்கட்டும்...’’ சிவகாமியை ஒரு கணம் பார்த்துவிட்டு தன் மறைவிடத்திலிருந்து அகன்றான் அந்தத் தலைவன்.வீரர்களுக்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும் தலைவனின் கட்டளைக்கு அடிபணிந்து தங்கள் வில்லில் நாண் ஏற்றினார்கள். சிவகாமியையே, அவளது அசைவையே உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினார்கள். ‘‘என்ன சந்தேகமோ..?’’ குரலில் எந்த வேறுபாட்டையும் காண்பிக்காமல் நிதானமாகவே அனந்தவர்மர் கேட்டார்.‘‘சாளுக்கியர்கள்தான் இந்தப் பல்லவ நாட்டை ஆள்கிறார்களா என்று!’’ பாலகன் சொன்னான்.நீதிமன்றம் ஒரு கணம் குலுங்கியது. எதற்காக அந்தப் பாலகன் சுற்றிச் சுற்றி இந்த சந்தேகத்தைக் கிளப்புகிறான் என யாருக்கும் புரியவில்லை. அவன் மீது மக்களுக்கு பரிதாபம் அதிகரித்தது. ‘ஐயோ பாவம்...’ என தங்கள் கவலையைப் பகிர்ந்துகொண்டார்கள்.‘‘எதனால் இந்த ஐயம்..?’’ அனந்தவர்மரின் உதட்டில் புன்னகை பூத்தது.‘‘நீதிபதியின் இருக்கையில் நீங்கள் அமர்ந்திருப்பதால்!’’‘‘ஏன், நான் அமரக் கூடாதா..?’’‘‘சாஸ்திரத்தில் அதற்கு இடமில்லை!’’‘‘எந்த சாஸ்திரத்தில்..?’’‘‘நீதி சாஸ்திரத்தில்!’’ உரக்கச் சொன்னான் பாலகன். ‘‘நாட்டின் மன்னர் மட்டுமே நீதிபதியின் ஆசனத்தில் அமரலாம்!’’‘‘வேறு யாருக்கும் அந்த வாய்ப்பு இல்லையா..?’’அனந்தவர்மரின் இந்த வினா ஒரு கணம் பாலகனை நிறுத்தியது. எதையோ சொல்ல வந்தவன் தன் உதடுகளை மூடிக் கொண்டான்.‘‘சொல் பாலகனே! மன்னரைத் தவிர வேறு யார் இந்த இருக்கையில் அமரலாம்..? கடிகையில் நீ பயின்ற நீதி சாஸ்திரத்தில் அதற்கு விடை இருக்குமே..?’’‘‘பதில் இருக்கிறது! ஆனால், அது முறையான விடையா என்பதில் ஐயமும் இருக்கிறது!’’ ‘‘மீண்டும் ஐயமா..?’’ அனந்தவர்மர் வாய்விட்டு நகைத்தார். ‘‘தெளிவாகச் சொல்... காஞ்சி மக்களுக்கும் புரிய வேண்டுமல்லவா..?’’ ‘‘மன்னரைத் தவிர அந்த நாட்டில் நீதி பரிபாலனம் செய்பவர் நீதிபதியின் ஆசனத்தில் அமரலாம். அப்படி அமரும் தகுதி படைத்தவர் காஞ்சிக் கடிகையைத் தலைமையேற்று நிர்வகிப்பவராக இருக்க வேண்டும் என்பது பல்லவர்களின் வழக்கம். அதே பழக்கத்தை சாளுக்கிய மன்னரும் காஞ்சியில் கடைப்பிடிக்கிறார். எனவே, என்னை ஒன்று சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் விசாரிக்கலாம் அல்லது கடிகையின் தலைவர் விசாரிக்கலாம். இந்த இரண்டையும் சேராத நீங்கள்... சாளுக்கிய மன்னரின் அண்ணனாகவே இருந்தாலும்... நீதிமன்றத்தில் விசாரிக்க உரிமை இல்லை!’’ குரலை உயர்த்தாமல் அதேநேரம் அச்சம் என்பதே இல்லாமலும் பாலகன் அறிவித்தான்.குழுமி இருந்த மக்களால் தங்கள் செவிகளையே நம்ப முடியவில்லை. தன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையிலும் எவ்வளவு தைரியமாகப் பேசுகிறான்... மக்களின் எண்ண ஓட்டம் அனந்தவர்மருக்கும் புரிந்தது. என்றாலும் அதை வெளிப்படுத்தாமல் தன் விசாரணையைத் தொடர்ந்தார்.‘‘நீ குறிப்பிட்ட இரண்டு இடங்களிலும் நான் இல்லாததால் உன்னை விசாரிக்கும் உரிமை எனக்கு இல்லை என்கிறாய்... அப்படித்தானே..?’’‘‘ஆம்!’’‘‘அதுவே நீ குறிப்பிட்ட இரண்டு ஸ்தானங்களில் ஒன்றில் நான் அமர்ந்தால் இந்த விசாரணையை... உன்மீது சுமத்தப்பட்டுள்ள, பல்லவர்களுக்கு உதவி செய்த குற்றச்சாட்டை நான் விசாரிக்கலாம் அல்லவா..?’’கடிகை பாலகன் அவரை வியப்புடன் பார்த்தான். அனந்தவர்மர் என்ன சொல்ல வருகிறார்..?புரவிக் கொட்டடியில் இருந்த காவலாளிக்குக் கையும் ஓடவில்லை காலும் நகரவில்லை. ஏந்திய ஓலைக்குழலையே வெறித்தான். ஐந்து புறாக்கள்... இது மட்டும்தான் குழலுக்குள் இருந்த அந்த ஓலையில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், அந்த இரு சொற்களும் உணர்த்திய பொருள்...தலையை உலுக்கிக் கொண்ட புரவிக் கொட்டடியின் காவலாளி வந்த கட்டளைக்கு அடிபணிந்து செயலில் இறங்கினான்.‘‘நீங்கள் சாளுக்கிய மன்னராக முடிசூட்டிக் கொண்டீர்களா..?’’ பாலகன் வியப்புடன் கேட்டான்.‘‘இல்லை...’’ அனந்தவர்மரின் பிரேதக் கண்கள் நகைத்தன. ‘‘கடிகையின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறேன்!’’‘‘எப்போது..?’’‘‘இன்று காலையில்!’’‘‘விழா எதுவும் நடத்தப்படவில்லையே..?’’‘‘தவிர்த்துவிட்டேன்! ஆடம்பரங்களில் விருப்பமில்லை. இந்த விசாரணை மண்டபத்தில் அறிவிப்பதே போதும் எனக் கருதுகிறேன்...’’ அலட்சியமாகச் சொன்ன அனந்தவர்மர், சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பாலகனை ஏறிட்டார். ‘‘இனி முறைப்படி விசாரணையைத் தொடங்கலாமா..?’’காஞ்சி மாநகரைக் கடந்து தோப்பினுள் கங்க இளவரசன் நுழைந்ததுமே சாளுக்கிய வீரர்கள் அவனைச் சூழ்ந்தார்கள்.‘‘என்ன..?’’ கோபத்துடன் கேட்டான் கங்க இளவரசன்.‘‘உங்களை மீண்டும் காஞ்சிக்கு வரும்படி உத்தரவு...’’ வீரர்களில் தலைவன் போல் காணப்பட்டவன் பணிவுடன் பதில் அளித்தான்.‘‘யார் உத்தரவு..?’’கேட்ட கங்க இளவரசனிடம் பணிவுடன் முத்திரை மோதிரம் ஒன்றை எடுத்து தலைவன் கொடுத்தான். ‘‘இதைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்...’’பார்த்த கங்க இளவரசன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. உரையாடும் துணிவும் அவனுக்கு இல்லை. சாளுக்கிய மன்னராலேயே மீற முடியாத இடத்தில் இருந்து அல்லவா உத்தரவு வந்திருக்கிறது... பெருமூச்சுடன் தன் இடுப்பில் சாளுக்கிய மன்னர் செருகிய குழலைப் பார்த்தான்.எதுவும் சொல்லாமல் தன் புரவியைத் திருப்பி காஞ்சியை நோக்கிச் செலுத்தினான்.வீரர்கள் தலைவணங்கி அவனுக்கு வழிவிட்டார்கள்!‘‘சாளுக்கியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட காஞ்சி மாநகரத்துக்குள் பல்லவர்களின் உபசேனாதிபதியும் சோழர்களின் இளவரசனுமான கரிகாலன் யாரும் அறியாமல் வந்து சென்றிருக்கிறான். அவனுக்கு நீ உதவி புரிந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இதைப்பற்றி நீ என்ன சொல்ல நினைக்கிறாய்..?’’அனந்தவர்மர் இப்படிக் கேட்டு முடித்ததும் தன் தரப்பைச் சொல்ல பாலகன் வாயைத் திறந்தான்.இதற்காகவே காத்திருந்ததுபோல் தூணோரம் மறைந்திருந்த சிவகாமி தன் கையில் இருந்த வில்லின் நாணை இழுத்தாள்.இமைக்காமல் அவளையே கவனித்துக் கொண்டிருந்த சாளுக்கிய வீரர்கள் பதிலுக்கு தங்கள் வில்லின் நாணை இழுத்தார்கள்.சிவகாமி குறிபார்த்தாள்.சாளுக்கிய வீரர்கள் குறிபார்த்தார்கள்.பிடித்த நாணை சிவகாமி செலுத்த முற்பட்டபோது -மழையென அவள் மீது அம்புகள் பெய்தன. எல்லாமே சாளுக்கிய வீரர்கள் செலுத்தியவை.கத்தவும் மறந்து, உடலில் பாய்ந்த அம்புகளுடன் தரையில் சரிந்தாள் சிவகாமி! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15311&id1=6&issue=20190510
 9. அத்தியாயம் 51 மன்னருக்கு உரிய எந்த ராஜரீக ஆடையும் இன்றி வீரனுக்குரிய உடையுடன் வந்த சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரைக் கண்டதும் சக்கரவர்த்தினியின் புருவம் உயர்ந்தது. வைத்த விழியை அகற்றாமல் தன் கணவரை ஏறிட்டாள். ‘‘என்ன... புதிதாகப் பார்ப்பது போல் பார்க்கிறாய்..?’’ புன்னகையுடன் மன்னர் கேட்டார்.‘‘புதிதாகத் தெரிவதால்...’’ சாளுக்கிய பட்டத்தரசி மெல்ல பதில் சொன்னாள்.‘‘புதிதா..? என்ன மாற்றம் கண்டாய் என் உடலில்..?’’ கேட்டபடி உச்சி முதல் உள்ளங்கால் வரை தன்னைத்தானே விக்கிரமாதித்தர் பார்த்துக் கொண்டார். ‘‘உடையில் என அதையே திருத்திச் சொல்லலாம்...’’ புன்னகைத்த சக்கரவர்த்தினியின் முகத்தில் வினாக்கள் பல பூத்தன. ஆனால், எதையும் அவள் வாயை விட்டுக் கேட்கவில்லை. ராஜாங்க விஷயம் என்பதால் தன் கணவராக எதுவும் சொல்லாத வரை எதையுமே அவள் என்றுமே கேட்டதில்லை. அன்றும் அதே வழக்கத்தைப் பின்பற்றினாள். ‘‘சரி கிளம்புகிறேன்...’’ சாளுக்கிய மன்னர் தன் ஆடைகளை சரிப்படுத்திக் கொண்டார். ‘‘போஜனத்துக்கு வந்துவிடுவேன்...’’ ‘‘விசாரணை நடக்கும் இடத்துக்குத்தானே..?’’ பட்டத்தரசியின் குரல் மன்னரைத் தேக்கி நிறுத்தியது. நின்று திரும்பினார். ‘‘காலை முதல் அரண்மனை முழுக்க அதுதான் பேச்சாக இருக்கிறது... கடிகையைச் சேர்ந்த ஒரு வித்யார்த்தி... பார்ப்பதற்கு பாலகன் போல் இருப்பானாம்... பல்லவர்களுக்கு உதவி புரிந்ததற்காக நேற்றிரவு கைது செய்யப்பட்டதாகவும், நீதிமன்றத்துக்கு இன்று காலையிலேயே அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள்... அதுதான் கேட்டேன்...’’ கேள்வியும் கேட்டு தானாகவே பதிலையும் சொன்ன சக்கரவர்த்தினி இறுதியாக ஒன்றை மட்டும் வினவினாள். ‘‘நம் மகன் விநயாதித்தன் விரைவில் வந்துவிடுவான் இல்லையா..?’’‘‘கூடிய விரைவில்!’’ கண்கள் மலர விடையளித்து தன் மனைவியை நெருங்கிய விக்கிரமாதித்தர் மெல்ல அவள் சிகையைக் கோதினார். கணவரின் மார்பில் ஒன்றவேண்டும் என்று எழுந்த உணர்வை அடக்கி கலங்கிய கண்களுடன் மன்னரை ஏறிட்டாள். பேச்சு வரவில்லை. சரி என தலையசைத்தாள்.நிதானமாக தன் அந்தரங்க அறையை விட்டு வெளியே வந்த சாளுக்கிய மன்னர், உரிய ஆடைகளுடன் காத்திருந்த கங்க இளவரசனை தன் அருகில் அழைத்தார்.மரியாதையுடன் அருகே வந்து நின்றான் கங்க இளவரசன். வீரர்கள் அனைவரும் தொலைவில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கங்க இளவரசனைத் தட்டிக் கொடுப்பதுபோல் அவன் இடையில் ஓலைக் குழல் ஒன்றை செருகினார்.பாசத்துடன் அவனை அணைப்பதுபோல் அவன் செவியில் சொல்ல வேண்டியதைச் சொன்னார். புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக மன்னரை ஏறிட்ட கங்க இளவரசன் தன் கண்களால் அவரிடம் விடைபெற்று புறப்பட்டான். விக்கிரமாதித்தரின் முகத்தில் புன்னகை பூத்தது! ‘‘தங்களை சாளுக்கிய போர் அமைச்சர் அழைக்கிறார்..!’’ கதவைத் தட்டிவிட்டு, ‘வரலாம்...’ என அனுமதி கிடைத்ததும் உள்ளே நுழைந்த சாளுக்கிய வீரன் தன் முன் கம்பீரமாக அமர்ந்திருந்த கரிகாலனின் பெரிய தாயாரை வணங்கிவிட்டு விஷயத்தைச் சொன்னான். பதிலேதும் சொல்லாமல் இருக்கையை விட்டு எழுந்தவர் அந்த வீரனைத் தொடர்ந்தார். அவரது நடவடிக்கைகள் அனைத்தும் இதற்காகவே அவர் காத்திருப்பதை உணர்த்தியது.மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்கள். புறப்படுவதற்குத் தயாராக இருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர், காலடி ஓசை கேட்டுத் திரும்பினார். திடுக்கிட்டார். ‘‘நீங்கள் இன்னும் கிளம்பவில்லையா..?’’ ‘‘எங்கு..?’’ தன் அக உணர்ச்சிகள் எதையும் வெளிக்காட்டாமல் நிதானமாகவே பதிலுக்கு வினவினார் கரிகாலனின் பெரிய தாயார். ‘‘நீதிமன்றத்துக்கு...’’‘‘எதற்கு..?’’ஸ்ரீராமபுண்ய வல்லபரின் புருவங்கள் சுருங்கின. ‘‘விசாரணையை நீங்கள் காண வேண்டாமா..?’’ ‘‘எந்த விசாரணை..?’’‘‘பல்லவர்களுக்கு, குறிப்பாக கரிகாலனுக்கு உதவி செய்ததாக கடிகையில் படிக்கும் வித்யார்த்தி ஒருவனை நேற்றிரவு கைது செய்திருக்கிறார்கள்... அதுகுறித்த விசாரணை இன்று நடைபெறுகிறது...’’ சொல்லிவிட்டு கரிகாலனின் பெரிய தாயாரை ஊன்றிக் கவனித்தார் சாளுக்கிய போர் அமைச்சர்.அந்த அம்மையாரின் முகத்தில் சலனம் ஏதுமில்லை. ‘‘நான் வரவில்லை... நீங்கள் சென்றுவிட்டு வாருங்கள்...’’பதிலை எதிர்பார்க்காமல் கரிகாலனின் பெரிய தாயார் தன் அறையை நோக்கி நடந்தார். அவர் மனதில் நேற்றிரவு பறந்த ஐந்து புறாக்கள் வட்டமிட்டன! நீதிமண்டபம் முழுக்க மக்கள் கூட்டம் மண்டிக் கிடந்தது. அவர்களை இருபுறமும் ஈட்டிகளைக் கொண்டு அடக்கி வைத்த வீரர்களைத் தவிர யாரும் தப்ப முடியாதபடி அளவுக்குச் சற்று அதிகமாகவே காவல் இருந்தது.மண்டபத்தைச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு நீதிபதி ஸ்தானத்துக்கு அருகே வந்ததும் அந்த இருக்கையின் மீது கண்களை உயர்த்திய கடிகையைச் சேர்ந்த பாலகன் சில கணங்கள் அதிர்ந்து நின்றான். அந்த இருக்கையில் அமர்ந்திருந்தது சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் அல்ல! அவரது மூத்த சகோதரரான ஆதித்யவர்மர்! நீதிபதி இருக்கையில் கொடூரத்துக்கும் வஞ்சகத்துக்கும் பெயர் பெற்ற ஆதித்யவர்மர் அமர்ந்திருப்பதைக் கண்டு பாலகனின் நெஞ்சில் கூடச் சிறிது அச்சம் உண்டாயிற்று. பிரேதத்தின் கண்களைப் போல் ஒளியிழந்து கிடந்தாலும், ஒளியிழந்த காரணத்தினாலேயே பயங்கரமாகத் தெரிந்த நீதிபதியின் கண்கள் தன்னை ஊடுருவிப் பார்ப்பதையும், அந்தப் பார்வையைத் தொடர்ந்து நீதிபதியுடைய வெளுத்த இதழிலே ஒரு புன்னகை விரிந்ததையும் கண்ட பாலகனுக்கு பல விஷயங்கள் குழப்பத்தை அளித்தாலும், தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் எழவில்லை. சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரோ அல்லது சாளுக்கிய நீதிபதிகளோ அமரவேண்டிய இடத்தில் எந்தப் பதவியிலும் இல்லாத ஆதித்யவர்மர் எதற்காக அமர்ந்திருக்கிறார் என்ற விவரங்கள் புரியவில்லையே தவிர, விசாரணை ஒரு கேலிக்கூத்தாகவே இருக்கும் என்பதிலோ, தன் தலையைச் சீவும்படி தீர்ப்பு கூறப்படும் என்பதிலோ எந்த ஐயமும் பாலகனுக்கு ஏற்படவில்லை. அப்படி மரணத்தை எதிர்நோக்கி நிற்கும் தருவாயில் அச்சம் காட்டுவதோ, எதிரிக்கு, தான் தாழ்ந்தவன் என்று பொருள்பட இடங்கொடுப்பதோ தகுதியற்றது என்ற காரணத்தால் தானும் ஒரு பதில் புன்முறுவலைக் கொட்டினான் பாலகன்.பல்லவர்கள் மீது அளவுக்கு அதிகமான வன்மத்தைக் கொண்டிருப்பவர் எனப் பெயர் எடுத்திருந்த ஆதித்யவர்மர், தன் உள்ளத்தில் படர்ந்திருந்த வன்மத்தை துளிக்கூட காட்டாமல் நீதியை மட்டுமே கவனிப்பவர் போல் விசாரணையை நடத்தினார்! சிறைப்பட்ட கடிகை பாலகனிடம் அனுதாபம் கொண்டவர் போல் நடித்தார்! எத்தனை கண்ணியமாக விசாரணை நடத்த முடியுமோ அத்தனை கண்ணியமாக நடத்தினார்! நீதிக்கும் நேர்மைக்கும் புறம்பாக அன்று விதித்த தண்டனைகள் அனைத்தையும் நீதியின் பெயராலும் நேர்மையின் பெயராலும் விதித்தார். அர்த்த சாஸ்திரம் முதல் சுக்கிர நீதி, விதுர நீதி வரை அனைத்தையும் கசடறக் கற்றிருந்த பாலகன், அவர் நடத்திய விசாரணையையும் விதித்த தண்டனைகளையும் கவனித்தான். அந்த நீதி மண்டபத்தின் உயர்ந்த தூண்களையும் ஆதித்ய வர்மரையும் மாறி மாறிப் பார்த்து, ‘இங்கு தூண்கள்தான் உயர்ந்திருக்கின்றனவே தவிர நீதி தாழ்ந்துதான் கிடக்கிறது...’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அன்று நீதிமண்டபத்தில் ஏராளமான தமிழர்கள் சிறைப்பட்டு நின்றிருந்ததால் கடிகை பாலகன் கடைசியிலேயே விசாரிக்கப்பட்டான். நடுப்பகல் வந்த பிறகே அவன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இத்தனை நேரம் கழித்து விசாரிக்க எதற்காக ஊருக்கு முன்பு தன்னை அழைத்து வந்தார்கள் என்று எண்ணிப் பார்த்த பாலகன், சாளுக்கிய விரோதிகள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதைத் தனக்கு உணர்த்தவே ஆதித்யவர்மர் தன் விசாரணையைத் தாமதிக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டான். சிறிது நேரத்தில் உயிரிழக்கப் போகிறவனையும் இறுதி வரை துன்புறுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதை உணர பாலகனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.இத்தகைய பல படிப்பினைகள் கடிகை பாலகனுக்கு ஏற்படுவதற்கு முன்பாக, அவனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதைகள் எதிலும் குறை வைக்கவில்லை! தன் எதிரில் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட கடிகை பாலகனை நோக்கி இளநகை புரிந்த ஆதித்யவர்மர் தன் கண்களை அவன் மீது நிலைக்கவிட்டார். அந்த பிரேதக் கண்களின் பார்வை அளித்த சங்கடத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள அப்புறமும் இப்புறமும் பார்த்த பாலகன் மீது மீண்டும் ஒருமுறை புன்னகையை வீசிய ஆதித்யவர்மர் எதிரேயிருந்த காவலர்களைப் பார்த்து, ‘‘இந்த பாலகனுக்கு ஆசனம் போடுங்கள். கடிகையில் கற்கும் வித்யார்த்திகள் மரியாதைக்கு உரியவர்கள்...’’ என்றார். இப்படிக் கூறியவரின் குரலில் நிதானம் இருந்ததையும், குரலும் பலவீனமாகவே வெளிவந்ததையும், அப்படி பலவீனமாக வந்த குரலிலும் ஒரு கடூரமும் கம்பீரமும் விரவி இருந்ததையும் பாலகன் கவனித்தான்.தனக்குச் செய்யப்படும் அத்தனை மரியாதையும் காவுக்கு அனுப்பப்படும் ஆட்டுக்குப் பூசாரி செய்யும் மரியாதையைப் போன்றது என்பதை சந்தேகமற உணர்ந்த பாலகன், அடுத்து நடப்பதை கவனிக்கத் தொடங்கினான். ஆதித்யவர்மர் உத்தரவுப்படி பெரிய ஆசனம் ஒன்று பாலகனுக்கு அளிக்கப்பட்டதும் விசாரணையைத் தொடங்கியவர் வேவு பார்க்கும் குற்றங்கள் சாட்டப்பட்ட பலரை முதலில் தன் முன்பு கொண்டு வர உத்தரவிட்டார்.நீதி நிர்வாக ஸ்தானிகன் குற்றச்சாட்டுகளைப் படிக்க, ஆதித்யவர்மர் கேள்விகளைக் கேட்டு தண்டனைகளை விதித்துக்கொண்டே போனார். குற்றச்சாட்டுகள் எல்லாமே வேவு பார்ப்பது சம்பந்தமாக ஒரே மாதிரியாக இருந்ததையும், முக்கியமானவர்களுக்கு எல்லாம் மரண தண்டனையும் மற்றவர்களுக்கு நீண்ட கால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டதையும் கண்ட பாலகனுக்கு தன் நிலை தெளிவாகவே புரிந்தது. குழுமி இருந்த பல்லவ மக்களுக்கு எந்த சந்தேகமும் எழாதபடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல்லவ மன்னர்களைவிட தாங்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது அதிக அனுதாபமும் அன்பும் கொண்டிருப்பதாக ஆதித்யவர்மர் காட்டிக் கொண்டார். வேறு வழியில்லாமல் குற்றம் நிரூபிக்கப்பட்டதாலேயே இந்தத் தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்ற புரிதல் அனைவருக்கும் ஏற்படும்படி அங்கு காட்சிகள் அரங்கேறின. மற்றவர்களை எல்லாம் விடுவிடு என்று விசாரித்து தீர்ப்பு வழங்கிக்கொண்டே வந்த ஆதித்யவர்மர் பாலகனின் முறை வந்ததும் சற்று நிதானித்தார். சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனை எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொண்டார்! ஆம். கட்டளையிடவில்லை! ஆசனத்தை விட்டு எழுந்து ஐந்தடி நடந்து ஆத்யவர்மரின் முன்னால் நின்றான் அந்தப் பாலகன்.நீதி மண்டபத்தின் மாடியில் தூணோடு தூணாக மறைந்தபடி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண், வில்லில் நாணைப் பூட்டி அம்பை எடுத்தாள். சரியாக பாலகனைக் குறிபார்த்தாள்.அவள், சிவகாமி! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15283&id1=6&issue=20190503
 10. அத்தியாயம் 50 இரவின் ஒளியை ரசித்தபடியே அந்தப் பாலகன் நடந்தான். ஒருபோதும் சாலையின் நடுவில் அவன் செல்லவில்லை. சாலையோரங்களையே தேர்வு செய்தான். குறிப்பாக இருளடர்ந்த பகுதிகளை. மாளிகைகளில் ஏற்றப்பட்டிருந்த தீபங்களின் ஒளியை விட அந்த ஒளியின் நிழல் அவனுக்கு அதிக பாதுகாப்பை அளித்தது. கடிகையில் இந்நேரம் வித்யார்த்திகள் உறங்கிக் கொண்டிருப்பார்கள். பல்லவர்கள் போலவே சாளுக்கியர்களும் கடிகையில் காவலுக்கு எந்த வீரர்களையும் நிறுத்தவில்லை. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு வாயில்களில் மட்டும் பெயருக்கு இரண்டிரண்டு வீரர்கள் நிற்பார்கள்; பகலிலும் இரவிலும். என்ன... நேற்று பல்லவ வீரர்கள் ஈட்டியுடன் நின்றார்கள். இன்று சாளுக்கியர்கள். மற்றபடி கடிகைக்குள் நுழையும் தகுதி எப்போதும் போல் இப்போதும் வித்யார்த்திகளுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. காஞ்சியைக் கைப்பற்றி பல்லவ நாட்டை சாளுக்கியர்கள் ஆளத் தொடங்கியபோதும் பழைய வழக்கத்தை சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் மாற்றவில்லை. எல்லாவற்றிலும் குறுக்குக் கேள்வி கேட்கும் போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் கூட இந்த விஷயத்தில் மன்னருக்கு ஆதரவாகவே நின்றார். எனவேதான் தன்னால் நாசுக்காக அவ்வப்போது வெளியேற முடிகிறது. மன்னர் விக்கிரமாதித்தர் அந்தரங்கமாகக் கட்டளையிடும் பணிகளை நிறைவேற்ற முடிகிறது. அந்த வகையில் இன்றும் எவ்வித சங்கடத்தையும் யாருக்கும் ஏற்படுத்தாமல் கடிகைக்குள் சென்று தன் அறையில் உறங்கிவிட வேண்டும்.முடிவுடன் நடந்தான் அந்தப் பாலகன். இரவின் மூன்றாம் ஜாமத்திலும் வீரர்கள் நடமாட்டமும் வணிகர்களின் நடமாட்டமும் காஞ்சி முழுக்கவே இருந்தது. கருக்கல் நேரத்தில் தொடங்க வேண்டிய வணிகத்துக்காக இப்பொழுதிலிருந்தே வேலையைத் தொடங்கியிருந்தார்கள். பொருட்களை இறக்குவதும் ஏற்றுவதுமாக வணிக ஆட்கள் இருந்தார்கள். அதிக ஒலியை எழுப்பாமல் அதேநேரம் சைகையிலும் உரையாடாமல் தேவைக்குப் பேசியபடி தங்கள் பணிகளில் அவர்கள் ஈடுபட்ட பாங்கு அந்தப் பாலகனைக் கவர்ந்தது. மெல்ல சில கணங்களுக்குமுன் நடந்ததை அசைபோட்டான். மன்னருக்கும் ராமபுண்ய வல்லபருக்கும் இடையில் நடந்த உரையாடல் அவனை நிரம்ப யோசிக்க வைத்தது. இருவருமே அவரவர் நிலையில் தெளிவாக இருந்தார்கள். குறிப்பாக, மன்னரை விட நாடு முக்கியம் என சாளுக்கிய போர் அமைச்சர் அழுத்தம்திருத்தமாகச் சொன்னது அவன் செவியில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதற்கு மறுப்பு சொல்லாமல் சாளுக்கிய மன்னர் அமைதியாக இருந்தது அவனை நெகிழ வைத்தது. அவனையும் அறியாமல் பெருமூச்சு விட்டான். பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் விரைவில் போர் மூளப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்குள் மன்னர் விக்கிரமாதித்தர் தன்னிடம் ஒப்படைத்த பணியை முடித்துவிட வேண்டும்.நிதானமாக நடந்த அந்தப் பாலகன், மகேந்திரவர்ம பல்லவ சாலையைக் கடந்து நரசிம்மவர்ம பல்லவ சாலைக்குள் நுழைந்து நேராகச் செல்லாமல் பரஞ்சோதி சந்துக்குள் நுழைந்து தோப்பை அடைந்தான். இந்த மாந்தோப்பைக் கடந்துவிட்டால் கடிகையில் வடக்குப் பக்கம் வரும். வடமேற்குத் திசையில் வளர்ந்திருக்கும் புளியமரத்தின் மீது ஏறி மெல்ல கடிகைக்குள் குதித்தால் வாள்பயிற்சிக் கூடத்தை அடையலாம். அங்கிருந்து தன் அறைக்குச் செல்வது எளிது. காவலுக்கு நிற்கும் வீரர்களின் பார்வையில் படாமல் கடிகைக்குள் செல்லும் வழி அது மட்டும்தான். மெல்ல தோப்புக்குள் நுழைந்தான். பாலகனுக்கு எந்த சந்தேகமும் ஏற்படாதபடி அவ்விரு உருவங்களும் பின்தொடர்ந்தார்கள். காஞ்சிக்குள் அந்தப் பாலகனைச் சிறைப்பிடிக்கக் கூடாது என அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. பலநாள் அந்தப் பாலகனைக் கண்காணித்து அதன் பிறகே தோப்புக்குள் அவனைச் சிறைப்பிடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தார்கள். ம்ஹும். திட்டமிட்டது அவர்கள் இருவரும் அல்ல. அவர்களின் தலைவர். எனவே, தங்கள் கண் பார்வையிலேயே பாலகனை அவர்கள் இருவரும் வைத்திருக்கவில்லை. எப்படியும் தோப்புக்குள்தான் நுழைவான் என்பதால், ‘‘வருபவன் அந்தப் பாலகன்தானே?’’ என ஒருவருக்கொருவர் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு மகேந்திரவர்ம சாலையின் இறுதிவரை அவனைப் பின்தொடர்ந்துவிட்டு அதன்பிறகு நரசிம்மவர்ம பல்லவ சாலைக்குள் நுழையாமல் குறுக்கு வழியாக அந்தப் பாலகனுக்கு முன்பாகவே தோப்பை அடைந்தவர்கள் நிதானித்தார்கள். கண்களாலேயே இருவரும் ஒருவருக்கொருவர் உரையாடிவிட்டு ஆளுக்கொரு திசையில் பிரிந்தார்கள். தோப்புக்குள் நுழையாமல் தோப்பின் ஓரமாகவே நடந்து புதருக்குள் மறைந்தார்கள். எதிர்பார்த்ததுபோலவே அந்தப் பாலகன் வந்து சேர்ந்தான். தோப்புக்குள் நுழைந்தான். முழுவதுமாக அவன் மறையும் வரை காத்திருந்துவிட்டு அதன்பிறகு சத்தம் எழுப்பாமல் சருகின் ஒலி அமைதியைக் கிழிக்காதபடி தங்கள் கால் கட்டைவிரலால் ஓடி அந்தப் பாலகனை முன்னும் பின்னுமாகச் சுற்றி வளைத்தார்கள். என்ன ஏது என அந்தப் பாலகன் சுதாரிப்பதற்குள் ஓர் உருவம் அவன் நாசியை பருத்தித் துணியால் மூடியாது. சில கணங்களில் பாலகன் உணர்விழந்து மயக்கமானான். உடனே அவனைத் தூக்கிக் கொண்டு அவ்விருவரும் நடந்தார்கள்.உறக்கம் வராததால் பஞ்சணையில் இருந்து எழுந்த கரிகாலனின் பெரிய தாயார் தன் அறையில் இருந்து சாளரத்தின் அருகில் வந்து நின்றார். அதிக வெக்கையோ அதிக குளுமையோ இல்லாத காற்று அவர் உடலைத் தழுவியது. கண்கள் முழுக்க நிரம்பி வழிந்த சிந்தனைகளுடன் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றார். கண்கள் பார்த்த திசையில் காஞ்சி மாநகரின் நடமாட்டம் அந்த இரவிலும் தெரிந்தது. ஆனால், அவர் கவனம் எதிலும் இல்லை. கரிகாலனையும் சிவகாமியையும், காஞ்சி சிறையிலிருந்து குறுவாள் பாய்ந்த நிலையில் தப்பித்துச் சென்ற தன் மைத்துனரின் நிலை குறித்தும் யோசித்துக் கொண்டிருந்தார். எத்தனை கணங்கள் அல்லது நாழிகைகள் கடந்ததோ... சரசரவென்று பறந்து வந்த புறா ஒன்று அவர் முகத்துக்கு நேராக தன் சிறகை அடித்துவிட்டு வந்த வழியே பறந்தது.சட்டென சுயநினைவுக்கு வந்த கரிகாலனின் பெரிய தாயார் தன் கண்களைக் கூர்மையாக்கினார். கவனத்தைக் குலைத்த முதல் புறா சென்றதுமே அடுத்த புறா வந்தது. பிறகு இன்னொன்று. பின்னர் அடுத்தது. கடைசியாக வேறொன்று. மொத்தம் ஐந்து புறாக்கள், குறிப்பிட்ட இடைவெளியில் அவர் நின்ற சாளரத்தின் அருகில் வந்து படபடவென தங்கள் சிறகுகளை அடித்தன. வந்த வழியே திரும்பிச் சென்றன.ஐந்து... ஆம். ஐந்து... கணக்கிட்ட கரிகாலனின் பெரிய தாயார் முகத்தில் இனம்புரியாத அமைதி பூத்தது. புன்னகையுடன் பஞ்சணைக்கு வந்தவர் நிம்மதியாக உறங்கினார். எதிர்பார்த்த செய்தி கிடைத்துவிட்டது!‘‘அம்மா... வயதில் நான் இளையவன்தான். ஆனாலும் நான் சொல்வதைக் கேட்பீர்கள் அல்லவா..?’’ பாசத்துடன் சாளுக்கிய சக்கரவர்த்தினியின் முன் மண்டியிட்டபடி கங்க இளவரசன் கேட்டான்.‘‘எதற்கு குழந்தாய் இவ்வளவு பூடகம்..? கங்க நாட்டில் நீ வளர்ந்ததைவிட வாதாபியில் ஓடியாடி விளையாடியதுதான் அதிகம். விநயாதித்தன் போலவே நீயும் எனக்கு மைந்தன்தான். தயங்காமல் சொல்...’’ என்றபடி அவன் தலையைக் கோதினாள். ‘‘அம்மா! சிவகாமி ஆபத்தானவள்தான். ஆனால், நமக்கல்ல. பல்லவர்களுக்கு! ஏனெனில் அவள் நம்மால் தயாரான ஆயுதம். நம் சுழற்சிக்கு ஏற்ப சுழலும் பொறி. எனவே அவளால் விநயாதித்தனுக்கு சிக்கல் வந்துவிடுமோ என நீங்கள் அஞ்சவேண்டாம். சாளுக்கிய மன்னர் வந்ததும் அவரிடமே கேட்டு நீங்கள் அறியலாம். எனவே மனதைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள்...’’ மெல்ல சக்கரவர்த்தினியின் கரங்களை கங்க இளவரசன் பற்றினான். ‘‘என் ஊகம் சரியாக இருந்தால் விக்கிரமாதித்த மாமன்னர்தான் தன் மகன் விநயாதித்தனை ஏதோ ஒரு காரணத்துக்காக அஞ்ஞானவாசத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும்!’’ ‘‘எதற்காக மன்னர் அப்படிச் செய்ய வேண்டும்..?’’ சாளுக்கிய அரசியின் முகத்தில் கேள்வி பூத்தது. குரல் மெல்ல தழுதழுப்புக்கு மாறியது. ‘‘நாளை நாட்டை ஆளப்போகிறவர் விநயாதித்தன்தானே..? அதற்கான பயிற்சியின் ஒரு கட்டமாக இது இருக்கலாம்...’’ ‘‘லாம்தானே குழந்தாய்... உறுதியில்லையே..?’’ ‘‘அந்த உறுதியை கண்டிப்பாக மன்னர் அளிப்பார்...’’ கங்க இளவரசன் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் மேல்மாடத்துக்கு வந்து சேர்ந்தார்.மரியாதை நிமித்தமாக சக்கரவர்த்தினியும் கங்க இளவரசனும் எழுந்து நின்றார்கள்.‘‘உங்கள் உரையாடலைத் தடை செய்துவிட்டேனா..?’’ விக்கிரமாதித்தர் புன்னகைத்தார்.‘‘உரையாடலே உங்களைக் குறித்துதானே மன்னா...’’ கங்க இளவரசன் மரியாதை கலந்த பக்தியோடு சொன்னான். ‘‘விநயாதித்தன் எங்கே என்று கேட்டேன்... தனக்குத் தெரியாது என அம்மா சொன்னார்...’’ மன்னர் எதுவும் சொல்லாமல் மேல்மாடத்தின் விளிம்புக்கு வந்தார். காஞ்சி மாநகரத்தின் இரவு அழகை ரசித்தார். சட்டென அவர் பார்வை கூர்மை அடைந்தது.புறா! இல்லை புறாக்கள்! மொத்தம் ஐந்து! ராமபுண்ய வல்லபரால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கரிகாலனின் பெரிய தாயார் தங்கியிருக்கும் அறையின் சாளரத்தில் படபடத்துவிட்டு அவை பறந்ததை கவனித்தார். மலர்ச்சியுடன் திரும்பி தன் பட்டத்து அரசியையும் கங்க இளவரசனையும் ஏறிட்டார். ‘‘விரைவில் விநயாதித்தன் வந்துவிடுவான்! அதற்கான வேளை நெருங்கிவிட்டது!’’பொழுது புலர்வதற்காகவே காத்திருந்ததுபோல் காஞ்சி மாநகரம் பரபரப்பானது. வழக்கத்துக்கு நேர்மாறான பரபரப்பு. ‘‘என்ன... காஞ்சி கடிகைக்குள் ஒற்றனா..?’’‘‘காஞ்சிக்குள் நுழைந்த கரிகாலனை சாளுக்கியர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பிக்க வைத்தது ஒரு கடிகை மாணவனா..?’’‘‘அப்படியானால் இனி கடிகையும் சாளுக்கியர்களின் கண்காணிப்புக்குள் வருமா..?’’‘‘யாரை நம்புவது என்றே தெரியவில்லையே..?’’ ‘‘உண்மையில் அவன் கடிகையில் கல்வி பயில வந்தவன் இல்லையாம்...’’‘‘இரவோடு இரவாக அவனைக் கைது செய்துவிட்டார்கள். அவனிடம் மூட்டை நிறைய பொற்காசுகள் இருந்ததாம்!’’‘‘காலையிலேயே விசாரணை நடக்கும் என்கிறார்கள்...’’மக்கள் பலவாறாகக் கூடிக் கூடிப் பேசினார்கள். கேள்விப்பட்டதை, கேள்விப்படாததை, அறிந்ததை, அறியாததை... எல்லாம் ஒன்று கலந்து நேரில் பார்த்ததுபோல் எல்லோருமே ஒவ்வொரு கதையைச் சொன்னார்கள். எல்லா கதையின் மையமாகவும் கடிகையைச் சேர்ந்த அந்தப் பாலகனே இருந்தான். வெயில் ஏற ஏற மக்கள் நடமாட்டமும் அவர்கள் கூடிக் கூடிப் பேசுவதும் அதிகரித்தது.அதற்கு ஏற்பவே சூரியோதயம் முடிந்த நான்காம் நாழிகையில் மேற்கூரை இல்லாமல் தேர் ஒன்று பவனி வந்தது. அதன் நடுவில் இருந்த தேக்கு மரத்தில் அதுவரை பேசுபொருளாக இருந்த பாலகன் கட்டப்பட்டிருந்தான்!வீரர்கள் இருபுறமும் வர அந்தத் தேர் நிதானமாக விசாரணை மண்டபத்தை நோக்கிச் சென்றது.மக்கள் வியப்பும் பரிதாபமும் கலந்த நிலையில் அத்தேருடன் நடந்து வந்தார்கள். http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15253&id1=6&issue=20190426
 11. 10: சின்ன ஹலோ சொன்ன சேதி! தியாகராய நகர் ‘வைத்தியராம் தெரு’வில் பானுமதி வீட்டைக் கண்டுபிடிப்பது (அந்தக் காலத்தில்) சுலபம். வீட்டுக்கு முன்னால் இரண்டு மூன்று டூரிஸ்ட் வண்டிகள் நிற்கும். மொட்டைத் தலைகளுடன் ஆந்திர ரசிகர்கள் காணப்படுவார்கள். திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்குப் பிறகு நேராக பானுமதி தரிசனம். அம்மையாரின் வீட்டு காம்பவுண்டின் உள்ளே ஒரே நேரத்தில் இரண்டு மூன்று அல்சேஷன் நாய்கள் உறுமும். “கட்டிப் போட்டிருக்கு தைரியமா உள்ளே போங்க” என்பார் காவலாளி. எங்கே பார்த்தாலும் பூந்தொட்டிகள், மரங்கள், நிழல் தரும் குளிர், ஊஞ்சல், ராதையின் ஆளுயரச் சிலை. அந்த இடமே படப்பிடிப்புக்குத் தயாராக இருப்பதுபோல இருந்தது. குளிர்ந்த மொஸைக் படிகள். ஒவ்வொரு படி ஓரமும் வண்ண வண்ணப் பூந்தொட்டிகள். மாடி வராந்தாவின் இடது பக்கம் ஒரு அறை. அதில் டைப்ரைட்டர் சப்தம் கேட்கும். மனிதர்கள் இருப்பதற்கான சுவடே தென்படாது. அப்படி ஒரு அமைதி. எப்போது போனாலும் ஒரு பெரிய கோப்பையில் பணிப்பெண் காப்பி கொண்டு தருவார். ஒவ்வொரு சொட்டாக ருசித்துப் பருகி முடிப்பதற்கும் பானுமதி அம்மையார் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருக்கும். போட்டிபோடும் நினைவுகள் அழகான திருத்தமான நெற்றி, நெருப்புக் கோடாக ஸ்ரீசூர்ணம். கத்தரித்த புருவங்கள். அழகான நாசி. அளவான முகப்பூச்சு. பட்டுப்புடவை. கம்பீரமான, கெளரவமான தோற்றம். என்ன ஒரு தனித்துவம். பர்சனாலிட்டி! வயது எழுபது என்றால் நம்ப முடியவில்லை! நேரத்தை மிச்சப்படுத்த சில நேரம் காரில் சென்றபடி தன் வாழ்க்கைச் சம்பவங்களை விவரிப்பது அவர் வழக்கம். தன் பால்யகாலம், காதல் திருமணம், தெலுங்குப் படங்கள், எம்.ஜி.ஆர். சிவாஜி, மாடர்ன் தியேட்டர்ஸ் என்று காரின் வேகத்துக்கு இணையாக அவரது பழைய நினைவுகளும் போட்டியிடும். அவர் சொன்னதில் காதில் விழுந்தது கொஞ்சம். மனதில் விழுந்தது கொஞ்சம். நினைவில் பட்டுத் தெறித்தது கொஞ்சம். பாண்டி பஜார் பக்கம் கார் திரும்பியதும் “எனக்கு பீடா வேணுமே” என்றார். கோவிந்து ஓடிப்போய் வாங்கிவந்தார். ஒன்று இரண்டல்ல, ஒரு அட்டைப் பெட்டி நிறையச் சீராக அடுக்கிய இனிப்பு பீடாக்கள். ஒன்றை எடுத்துக் கடைவாய்க்குள் விரல்கள் படாதவண்ணம் பதவிசாகக் கொடுத்து மென்மையாக மெல்லத் தொடங்கினார். காருக்குள் மெல்லிய சங்கீதம் இழைய “இது என்ன ராகம் தெரியுமா?” என்று கேட்டார் பானுமதி. பட்டென்று அந்த ராகத்தின் பெயரைச் சொன்னார் கோவிந்து. திறந்த கார் கண்ணாடி வழியே பார்த்துவிட்டு, ஒரு பழக் கடைக்காரர் ‘டேய் பானுமதிடா’ என்று கத்திக்கொண்டே பானுமதிக்கு உற்சாகத்துடன் கையசைத்தார். அவரது அன்பை ஏற்று பானுமதியும் பதிலுக்கு கையசைக்க கார் அங்கிருந்து வீடு நோக்கி நகர்ந்தது. காலம் உறைந்த ஒளிப்படங்கள் கூர்க்கா ஓடிவந்து கேட்டைத் திறந்தார். கார் உள்ளே நுழைந்தது. பானுமதியின் பங்களா பழைய மோஸ்தரில் கட்டப்பட்டது. வெயில் நேரத்திலும் குளிர்ச்சியாக இருக்கும். சந்தன கலரில் டிஸ்டெம்பர் அடித்த வீடு. அரக்கு கலரில் கதவு, ஜன்னல்கள். பானுமதி இந்த வீட்டை அங்குலம் அங்குலமாக ரசித்துக் கட்டியிருக்க வேண்டும். அப்படி ஒரு நேர்த்தி. பெரிய கூடம். ஒரு கல்யாணமே நடத்தலாம். கூடத்தை அலங்கரிக்கும் அழகிய சிற்பங்கள். சுவரில் பானுமதியின் புகழ்பெற்ற பழைய கறுப்பு வெள்ளைக் காவியங்களின் ஸ்டில்கள். கூடத்துக்குள் அல்ல ஒரு காலத்துக்குள் அடியெடுத்து வைப்பதான உணர்வு நம்மை ஆட்கொள்ளும். அந்த ஒளிப்படங்களில் ஏதோ ஒன்றிலிருந்து இறங்கி வந்தாற்போல் பானுமதி தோன்றுவார். பேசிவிட்டு மறுபடியும் ஒளிப்படத்தில் போய் உட்கார்ந்துகொள்வார். திரைப்பட ஸ்டில்கள் மட்டுமின்றி அபூர்வமான அவருடைய தனிப்பட்ட குடும்ப ஒளிப்படங்களும் அங்கிருந்தன. நீங்கள் பார்த்தே இராத பானுமதி வீட்டு விசேஷத்தில் பெண்கள் கூட்டத்தில் பளிச்சென்று நான் தனிப்பிறவி தெரியுமா என்பது போல் பார்க்கும் பானுமதி. கணவருடன் பானுமதி. ஜனாதிபதியிடம் பரிசு வாங்கும் பானுமதி எனப் பல தோற்றங்கள். கூடத்தில் மாட்டப்பட்ட கடிகாரம் என்னவோ ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அந்தப் படங்களில் காலம் நின்றுவிட்டது! குறிப்பாக, ஒருபடம் நெஞ்சைக் கொள்ளைகொள்கிறது. தோள் தெரியும்படி ஒரு கறுப்பு உடை. ஆனால், விரசமில்லை. தேவதை மாதிரி நிற்கிறார். பேசும் கண்கள். அலட்சியச் சிரிப்பு. அழகு முகம். அந்தப் படத்தைப் பார்க்கிறவர்கள் சில நேரம் அதிலேயே லயித்துப் போய்விடுவதைக் கவனித்திருக்கிறேன். ‘இந்தப் படத்தில் அம்மா அப்சரஸ் மாதிரி இருக்காங்க இல்ல?’ என்பார் அண்ணாசாமி. அவர் பானுமதி வீட்டின் அலுவலக நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ளும் இளைஞர். பரம சாது, பேசவே மாட்டார். பக்கத்தில் இடியே விழுந்தாலும் அவர்பாட்டுக்குத் தட்டச்சு செய்து கொண்டிருப்பார். ‘சினிமாவில் பார்க்கிற அம்மா வேறே… நிஜத்தில் பார்க்கும் அம்மா வேறே. எங்களிடம் கோபமாகத்தான் பேசுவாங்க. உள்ளுக்குள் எங்கள் மீது அன்பு உண்டு. அந்த அன்பைப் பண்டிகை நேரத்தில்தான் காட்டுவாங்க!’ என்றார் அண்ணாசாமி. நான் ‘எப்படி?’ என்றேன். ‘எங்கள் வீட்டு, மனைவி குழந்தைகளுக்கு எல்லாம் துணிமணிகள், பட்சணங்கள் எல்லாம் கொடுத்து ஆசீர்வாதம் பண்ணுவாங்க! சமையல்காரப் பெண்கள் மட்டும் மாறிக்கொண்டே இருப்பாங்க... சாப்பாடு விஷயத்தில் அம்மாகிட்ட நல்லபேர் வாங்குவது கஷ்டம்’ என்றார். பானுமதியின் பொது நிகழ்ச்சிகளைக் கவனித்துக்கொள்ள பி.ஏ. அந்தஸ்தில் ஒரு பெண். ரொம்பச் சூட்டிகை. திரைப்படத் தயாரிப்பு, டப்பிங் வேலை, சினிமா சம்மந்தப்பட்ட விஷயங்களுக்காகத் தனியாக ஒருவர் இருந்தார். இதைத் தவிர ஒரு பெண்மணி. அவர் உடல்நலம் பேண. பெரும்பாலும் நகங்களை வெட்டி விடுவார். கால்பிடித்து விடுவார். தோட்டக்காரனுடைய இளம் மனைவி அவர். மதிய வேளைகளில் அம்மாவுடன் சாப்பிட அவருடைய மகன் டாக்டர் பரணி வருவார். நெடுநெடுவென்று சிவப்பாக அழகாக இருப்பார். ஷேவ் செய்த மோவாய் பச்சை சாயம் பூசியதுபோல் இருக்கும். கூடத்தில் எங்களைக் கடந்து அவர் செல்லும்போது அவரிடம் என்னைக் காண்பித்து “இவர் தமிழ்ல பெரிய எழுத்தாளர். என்னோட பயாக்ரபர்!” என்றார் பானுமதி. சின்னதாகப் புன்னகைத்து புருவம் உயர்த்தி ‘ஹலோ’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார் பரணி. ‘படங்களில் நடித்துப் பேர் வாங்கியாச்சு. இன்னும் அண்ணாசாமி, பர்சனல் பி.ஏ., பி. ஆர். ஓ., பயாக்ரபர் இவ்வளவு பேரையும் வைத்துக்கொண்டு எதற்கு இத்தனை சிரமம்? செலவு?’- எல்லாம் பரணியின் அந்த சின்ன ஹலோவில் அடக்கம். https://tamil.thehindu.com/cinema/cinema-others/article26943811.ece 11: அச்சுப்பிச்சுகளின் காதல் பானுமதி மாறி வரும் வானகத்து மீனே பார்க்க உன்னைத் தேடுதடி கன்னி இளம் மானே படம்: அம்பிகாபதி “கல்கத்தாவுக்குப் போய் உங்கள் முதல் படத்தில் நடித்த அனுபவத்தைச் சொல்லவே இல்லையே?” - என்று கேட்டேன். பானுமதி சிரித்தார். அந்தக் கூத்தை ஏன் கேட்கிறீர்கள்?. ‘வரவிக்ரேயம்’ படத்தில் நான் நடித்த காளிந்தியின் பாத்திரம் ஒரு வகையில் என் சொந்த வாழ்க்கையையே பிரதிபலிப்பதுபோல அமைந்துவிட்டதை என்னவென்று சொல்ல? நான் முதன்முதலாக செட்டுக்குப் போனேன். யாராரோ வந்தார்கள். எனக்குக் கூச்சமாக இருந்தது. ‘லைட்ஸ் ஆன்’ என்று யாரோ கத்தினார்கள். மங்கலாக இருந்த செட்டில் பளீரென்று பரவிய வெளிச்சத்தைப் பார்த்துப் பயந்துவிட்டேன். ஓடிப்போய் ஒரு தூணுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டேன். அடடா! உம்ம பெண் எங்க காளிந்தியவிட ரொம்பக் கட்டுப் பெட்டியாய் இருப்பாள் போலிருக்கே என்றார் புல்லையா. “கொஞ்சம் இருங்கள், இந்தப் பெண்ணின் அம்மா வந்துவிடட்டும்” என்றார். “அம்மா எப்படி இங்கே?” என்று குழம்பிப்போன எனக்கு அப்புறம்தான் தெரிந்தது. அவர் சொன்னது என் அம்மாவாக சினிமாவில் நடிக்கும் சிவரஞ்சனியை என்று! இயல்பான கண்ணீர் சிவரஞ்சனி வந்தார். என்னை அன்புடன் தொட்டார். “என்ன மேக்கப்பெல்லாம் முடிஞ்சுதா?” என்று கேட்டார். எடுக்கப்போகிற காட்சியை புல்லையா விவரித்தார். மகளுக்கு வரன் தேடிவிட்டு அப்பா களைத்துப்போய் நுழைகிறார். சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டுகிறார். வரன் முடிவாயிட்டுதா? என்று அம்மா கேட்கிறார். எங்கே போனாலும் பத்தாயிரம் ரூபாய் கேட்கிறார்கள். நம்ம பெண் காளிந்திக்கு எப்படிக் கல்யாணம் நடக்கும் என்கிறார் அப்பா சோர்வுடன். எங்கள் வீட்டிலும் அப்பாவும் அம்மாவும் இப்படிப் பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது. என் கண்ணில் நீர் தளும்பியது. புல்லையா ‘கட்’ என்றார். அவ்வளவுதான் ‘ஷாட்’ ஓகே ஆகிவிட்டது. “ரொம்ப இயற்கையாய் இருந்தது அம்மடு. அதுவும் நீ நின்றவிதம் பிரமாதம்” என்றார் புல்லையா. அடுத்தநாள் ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் பாடல் பதிவு. மைக் என்று சொல்லி என் முன்னால் வைக்கப்பட்டது, தேன்கூடுபோல் இருந்தது. பின்னணிப் பாடல் பதிவு என்பதே சினிமாவுக்கு அப்போதுதான் அறிமுகம். புஷ்பவல்லி சொன்னார்: “நீ அதிர்ஷ்டக்காரிதான் நாங்கள் எல்லாம் பாடிக்கொண்டே நடிக்க பட்ட கஷ்டம் உனக்கில்லை. வாயசைப்பு சரியாகவே வராது.” ஒரு முறை சோகமான காட்சி ஒன்றை புல்லையா நடித்துக் காட்டிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்துச் சிரிப்பு வந்தது. சிரித்துவிட்டேன். புல்லையா என்னைப் பார்த்துக் கோபமாக இரைந்தார். இதை நான் கொஞ்சம்கூட அவரிடம் எதிர்பார்க்கவில்லை. அழுதுவிட்டேன். அழுகையை நிறுத்தவே இல்லை. புடவை நுனியால் வாயை மூடிக்கொண்டு அழுதேன். கேமரா ஓடிக்கொண்டிருந்தது. டைரக்டர் ‘கட்’ என்றார். நானோ என் விசும்பலை நிறுத்தவே இல்லை. புல்லையா சிரித்துக்கொண்டே, “உன்னை அழவைக்க வேறு வழி தெரியவில்லை அம்மா. ஷாட் எவ்வளவு நன்றாக வந்திருக்கிறது தெரியுமா?” கோபிப்பதுபோல் நடித்து என்னை அழ வைத்துப் படம் எடுத்திருக்கிறார் என்று அப்புறம்தான் புரிந்தது. ‘மாலதி மாதவம்’, ‘தர்மபத்தினி’, ‘பக்திமாலா’, ‘கிருஷ்ண பிரேமா’ போன்ற படங்களில் நான் இயக்குநர் சொன்னபடிதான் நடித்தேன். ஆனால், இதில் எனக்கு உடன்பாடில்லை. டைரக்டரின் கார்பன் காப்பிபோல் நடிப்பதால் அந்தப் பாத்திரத்துக்கு எப்படி உயிர்வரும்?. சுயமான நடிப்பு ‘சொர்க்க சீமா’வில் நடிக்கும்போதுதான் சுயமாக நடிப்பதைப் பற்றி நான் சிந்திக்க ஆரம்பித்தேன். படத்தில் எனது ரோல் என்ன, அதைச் சரியாய்ப் புரிந்துகொள்வதன் மூலம் நாம் ஏற்று நடிக்கும் பாத்திரத்துக்கு உயிர் கொடுக்க முடியும். நடிப்பு அனுபவம் இல்லாத டைரக்டர்கள் தாங்கள் சொல்கிறபடிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது சரியல்ல. ஆனால், இதை எத்தனை இயக்குநர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவரவருக்கு என்று ஒரு பாணி இருக்கும் அல்லவா? ‘வரவிக்ரேயம்’ வெளிவந்தது. புதுமுகம் பானுமதி அருமையாக நடித்திருக்கிறார். காளிந்தி கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். ‘சபாஷ்’ என்று பத்திரிகைகள் எழுதின. அவ்வளவுதான் வேலை முடிந்தது. வீடு திரும்பி பள்ளிக்கூடம் போக வேண்டியதுதான் என்று நினைத்தேன். அப்பாவிடம் கேட்டேன். “இனி, பள்ளிக்கூடம் போகலாமா அப்பா?” அப்பா சிரித்தார். “புல்லையா ‘மாலதி மாதவம்’ என்று ஒரு படம் இப்ப உடனே எடுக்கப் போகிறாராம். பவபூபதி எழுதிய அருமையான காவியத்தைத்தான் படம் எடுக்கப் போகிறார். நீதான் கதாநாயகியாம். ஆனால், யோசிக்கணும் என்று சொல்லியிருக்கிறேன். உலகம் தெரியாத பெண்ணாகிய உனக்கு இந்த வேடம் சரிப்பட்டு வருமா? வேறு வேடம் ஒண்ணு இருக்கு. அதுதான் சரிப்பட்டுவரும்” அப்பாவின் மனசு புரிந்தது. அவர் நான் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். எனக்குத் தலையில் இடிவிழுந்த மாதிரி இருந்தது! “அப்பா! வீட்டுக்குப் புறப்படுங்கள் புல்லையாவிடம் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிடுங்கள்!” இப்படிச் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்து தலையணையில் முகம் புதைத்தேன். எனக்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது! கவிராஜூவிடம் கற்ற பாடம் “அப்புறம் என்ன ஆச்சு?” “மறுநாள் கவிராஜூ என்ற கதாசிரியர் என்னைக் காண வந்தார். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். ரொம்ப நாளைக்கு அப்புறம் இவர் பேச்சைக் கேட்டு வயிறு குலுங்கச் சிரித்தேன். அவர் அப்பாவிடம் அம்முடுவுக்கு மாலதி வேடம்தான் சரியாக இருக்கும். அழகும் பாடும் திறமையும் மிக்க சின்னஞ்சிறு பெண் ருத்ராட்ச மாலை போட்டுக்கொண்டு சந்நியாசியாக வருவதை ஆடியன்ஸே விரும்ப மாட்டார்கள்!” என்றார். நான் பள்ளி செல்ல முடியாத குறையை கவிராஜூதான் தீர்த்துவைத்தார். அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். எப்படியோ ‘மாலதி மாதவம்’ படத்தில் நடிக்க கவிராஜூ என்னைச் சம்மதிக்க வைத்துவிட்டார். ‘மாலதி மாதவம்’ படத்தில் நான் என்ன செய்தேன், என்ன பாடினேன் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அந்தப் படத்தில் மாதவனாக நடித்தவர் புல்லையாவின் உறவினர். அவர் என்னைவிட அதிகக் கூச்சம் உடையவர் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் இரண்டுபேரும் சேர்ந்துகொண்டு அந்த இரண்டு கதாபாத்திரங்களையும் பவபூபதியையும் கொலைசெய்வதில் வெற்றிபெற்றோம். காதல் காட்சிகளில் நாங்கள் நளினமான உணர்வுகளையும் காதலையும் வெளிப்படுத்தவில்லை. அவர் என்னைக் கண்டு பயந்து நடுங்கினார். நானோ குனிந்த தலை நிமிரவில்லை. நான் பயந்துபோய் அவரைப் பார்ப்பேன். அவர் சட்டென்று தலைகுனிவார். இரண்டு அச்சுப்பிச்சுகள் சேர்ந்துகொண்டு காதல் பண்ணினால் எப்படி இருக்கும்? எங்கள் இரண்டு பேரையும் பார்த்துவிட்டு புல்லையா தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார். “புல்லையா. நான் சொன்னேனா இல்லையா?” என்றார் அப்பா. புல்லையா அழாத குறைதான். படத் தயாரிப்பாளரிடமிருந்து பண உதவி கிடைக்காதது படம் வெற்றி பெறாததற்கு மற்றொரு காரணம். கதை வசனகர்த்தா குழுவை விட்டு விலகிவிட்டார். அவருக்குப் படம் ஓடாது என்று தெரிந்துவிட்டது. கவிராஜூ விஜயநகரம் சென்றுவிட்டார். மேலும் சிலர் தங்கள் சொந்த ஊர் திரும்பிவிட்டனர். சிலர் அங்கேயே தயாரிப்பாளர் தர வேண்டிய பாக்கிக்காகச் சுற்றித் திரிந்தனர். நானும் அப்பாவும் கல்கத்தாவிலிருந்து ஊர் திரும்பிவிட்டோம். “இதுதான் நான் கல்கத்தாவுக்கு நடிக்கப்போன கதை” என்று புன்னகைத்தார் பானுமதி. https://tamil.thehindu.com/cinema/cinema-others/article27012799.ece
 12. 09: எம்.ஜி. ஆரின் கைரேகை! உன்னைவிட மாட்டேன் உண்மையில் நானே கபடமெல்லாம் கண்டுகொண்டேனே முன்பேதானே பெண்ணை லேசாய் எண்ணிக்கொண்டு பேதை என்று இகழ்ந்திடாது அன்புசெய்தால் அமுதம் அவளே வம்பு செய்தால் விஷமும் அவளே! படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஒருநாள் பானுமதியிடம் கேட்டேன். ‘பேசும்போது அடிக்கடி பிராப்தம், விதி என்றெல்லாம் சொல்கிறீர்கள். உங்களுக்குக் கைரேகை, ஜோதிடம் இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறதா?” பதிலேதும் சொல்லாமல் என்னை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கிருந்த பீரோவைத் திறந்து “பாருங்கள்” என்றார். அந்த பீரோ முழுவதும் அவர் சேகரித்து வைத்திருந்த ஜோதிடம் தொடர்பான கிரந்தங்கள், புத்தகங்கள்! கைரேகை ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட நூல்களையும் காண்பித்தார். பழஞ்சுவடிகள் சிலவும் அங்கே இருந்தன. “ஜாதகம்கறது ஏதோ பொய் புனைசுருட்டு கிடையாது. அது கணிதம். சின்ன வயசிலிருந்தே எனக்கு இதிலெல்லாம் ஈடுபாடு உண்டு. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வீட்டிலிருக்கும் நாடி கிரந்தங்களில் மூழ்கிவிடுவேன்” என்றவர், அதை முறைப்படி கற்றுக்கொண்டதையும் தெரிவித்தார். “சிவலிங்க வீரேசலிங்கம் என்று ஒரு சித்தர புருஷர் இருந்தார். அவரிடம்தான் கைரேகை, ஜோதிடக் கலையைக் கற்றுக்கொண்டேன். எம்.ஜி.ஆரின் கைரேகையைப் பார்த்து அந்தக் காலத்திலேயே அவருக்கு ஆரூடம் சொல்லி இருக்கிறேன் தெரியுமோ?” என்றவரைப் பார்த்து ஆச்சரியம் விலகமால் ‘அப்படியா?’ என்றேன். “ஆமாம் சார்.. அப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல படங்களில் நடித்துப் பிரபலமாகி இருந்தேன். ‘மலைக்கள்ளன்’ படப்பிடிப்பில் ‘புதுமுகம்’ என்று சொல்லி எனக்கு எம்.ஜி.ராமச்சந்திரனை அறிமுகப்படுத்திவைத்தார்கள். கையை காட்டிய எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் முகத்தில் ஒரு காந்தசக்தி இருந்ததைக் கவனித்தேன். நடை உடை பாவனைகளில் ஒரு பெரும்போக்கும் நாகரிகமும் தெரிந்தது. மரியாதையாக என்னை ‘அம்மா’ என்றுதான் கூப்பிடுவார். பானுமதி என்று சொல்லவே மாட்டார். ஸ்டுடியோவில் பணியாற்றும் லைட் பாயைக்கூட ‘சாப்பிட்டாச்சா?’ என்று கேட்டுவிட்டுத்தான் சாப்பிட உட்காருவார். சினிமாவில் மட்டுமல்ல; நிஜவாழ்க்கையிலும் அவர் ஒரு ஏழைப்பங்காளர்தான். ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளையின்போது கிரீடத்துடன் மன்னர்வேடம் அணிந்து அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரையே கவனித்தபடி இருந்தேன். நிச்சயமாக இவர் போன ஜென்மத்தில் ஏதோ ஒரு தேசத்தின் மன்னராகவோ இளவரசராகவோதான் இருந்திருக்க வேண்டும் என்று என் மனசுக்குப் பட்டது. அப்படி ஒரு கம்பீரம். அது நடிப்பால் வருவதல்ல. நானே எம்.ஜி.ஆர் அருகில் சென்று ‘மிஸ்டர் ராமச்சந்திரன் உங்கள் கையைக் காட்டுங்கள். எனக்குக் கொஞ்சம் கைரேகை ஜோதிடம் தெரியும் என்றேன். அவர் கூச்சத்துடன் ‘வேண்டாம் அம்மா எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது’ என்றார். சுற்றி இருந்தவர்கள் வற்புறுத்தலால் கையைக் காண்பித்தார். பார்த்த உடனே சொல்லிவிட்டேன். “மிஸ்டர் ராமச்சந்திரன் நீங்கள் பிற்காலத்தில் பேரும் புகழும் பெறப் போகிறீர்கள்! இந்த உலகமே கொண்டாடும் உன்னத ஸ்தானத்தை அடைவீர்கள்! ஆனால் சினிமாவால் அல்ல” என்று நான் கூறியதும் எல்லோரும் கை தட்டினார்கள். அவர் கைகூப்பி வணங்கி ‘நன்றி அம்மா’ என்றார் புன்னகையுடன். பின்னர் அந்தச் சம்பவத்தை மறந்துவிட்டேன். பல வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர். என்ற மந்திரச் சொல்லுக்குக் கட்டுண்டு தமிழக மக்கள் அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியபோது கலைத் துறையினர் சார்பாக சென்னையில் பிரம்மாண்டமான பாராட்டுக் கூட்டம் நடந்தது. நான் மேடைக்குக் கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்தேன். உரையாற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அங்கிருந்து என்னைப் பார்த்துவிட்டு ‘இந்த நிலைக்கு நான் வருவேன் என்று நானே எதிர்பார்க்காத காலத்தில் அன்றே என் கைரேகையைப் பார்த்து பானுமதி அம்மையார் கணித்துச் சொன்னார். அவரது ஆரூடம் பலித்துவிட்டது’ என்றார். அரங்கத்தில் கை தட்டல் அடங்க வெகுநேரமாயிற்று” என்றவர் என்னைக் கூர்ந்து பார்த்து, “உங்கள் ஜாதகத்தை நாளைக்குக் கொண்டுவாருங்கள் பார்க்கலாம்” என்றார் பானுமதி. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அடுத்தமுறை சென்றபோது, என் ஜாதகம் எழுதிய பழைய செல்லரித்த நோட்டுப் புத்தகத்தைக் கொடுத்தேன். புரட்டிப் பார்த்துவிட்டு “சரிதான்..! நான் நினைச்சபடிதான் இருக்கு” என்றார். நான் சற்று ஆவல் அதிகமாகி ‘என்னம்மா சொல்றீங்க’ என்றேன். “களத்திரபாவம் சரியில்லை” என்றவர் தொடர்ந்தார். “மனைவியால் பெரிய சந்தோஷம் கிடைக்காது. சஞ்சலம்தான்” என்றவரைப் பார்த்து ‘உண்மைதான்’ என்று சொன்னேன். பானுமதி, “உங்க மேல உங்க மனைவிக்கு ரொம்ப ஆசை உண்டு. ஆனால் காரணமில்லாமல் ஒரு ஊடல் இருந்துகிட்டே இருக்கும்.” என்றார். அட! ‘இன்னிக்குக் காலையில் கூட ஊடல்தான் அம்மா’ என்றேன். “நான் கொடுக்கிற செக் உங்க ஊடலைச் சரிபண்ணிடும்னு நினைக்கிறேன்” என்று ஏதோ ஞானதிருஷ்டியால் பார்த்த மாதிரிப் பேசிய பானுமதியை வியப்போடு ஏறிட்டுப் பார்த்தேன். “அது அப்படித்தான் சார். பெண்கள் பெரும்பாலும் லெளகீகமாகத்தான் இருப்பார்கள். அப்படி இருப்பதுதான் நல்லதும்கூட. லோகம் இயங்குறதுக்கு இந்த லெளகீகம் தேவை. அதனால்தான் மூன்று பிடிகளுக்கு மேல் குசேலன் கொடுத்த அவலைச் சாப்பிட வேண்டாம்னு துவாரகை கிருஷ்ணனின் கையைப் பிடித்துக் கொண்டாள் அவள் மனைவி” என்றவர் அன்று பேட்டி முடிந்து கிளம்பும்போது மறக்காமல் எனக்குக் காசோலை கொண்டுவந்துகொடுத்தார். கைரேகை பார்ப்பதைக் கைவிட்டார் அடுத்த சந்திப்பிலும் ஜோதிடம், கைரேகை பற்றிக் கொஞ்சம் பேச்சு தொடர்ந்தது. “கைரேகை பார்ப்பதையே கைவிடும்படியான சம்பவம் ஒன்று என் வாழ்க்கையில் நடந்தது” என்று தொடங்கினார் பானுமதி. “எங்கள் படக்குழுவின் புகைப்படப் பிரிவில் ராஜூ என்ற இளைஞன் இருந்தான். நானும் குருஜியும் (அந்த சித்த புருஷர்) படப்பிடிப்பு இடைவேளையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ராஜூ வந்தான். அவரை வணங்கிவிட்டு, தன் கையை நீட்டி ‘சுவாமி என் கைரேகையைப் பார்க்கணும்’ என்று பவ்யமாகக் கேட்டுக் கொண்டான். குருஜி சிரித்துக்கொண்டே ‘நீ பாரேன்’ என்று என்னிடம் தள்ளிவிட்டார். ராஜூவின் கைரேகையைப் பார்த்தேன். திரும்பத் திரும்பப் பார்த்தேன். எனக்குள் கலவரம் மூண்டது. ‘எப்படி இருக்கு?’ என்று கேட்டார் குருஜி. நீங்களே பாருங்கள் என்று நான் கூறியதும் குருஜி முகத்தில் சிந்தனைக்கோடுகள். ‘நீ நினைத்தது சரிதான். நான் கிளம்புகிறேன்’ என்று சொல்லிவிட்டு குருஜி போய்விட்டார். ராஜூவைப் பார்த்து, உன் வயது என்ன என்றேன். ‘இருபத்தாறு’ என்றான். கடவுளே இந்த வயதுக்கு மேல் அவன் வாழ்க்கை தொடர முடியாதே... என் மனதை அவனது ஆயுள் ரேகை பிசைந்தது. அவனிடம் பேச்சை மாற்றிப் பார்த்தேன். ஆனால், அவன் குறியாக இருந்தான். அவனிடம் உடம்புக்கு ஏதாவது? என்று நான் இழுப்பதற்குள் ‘நான் நல்லாத்தான் இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். இது நடந்து கொஞ்ச காலம் கழிந்தது. என் கணவர் என்னிடம் ‘அவனைக் கைரேகை பார்த்துப் பயமுறுத்திவிட்டீர்களாமே? ஆள் ஜோரா இருக்கான்!’ என்று கிண்டல் செய்தார். சில மாதங்கள் சென்றன. படப்பிடிப்பில் அவசர அவசரமாக என்னை நோக்கி வந்த புரடெக்ஷன் பாய் ஒருவர், ‘அம்மா நம்ம ராஜூ செத்துப்போய்விட்டான். சைனஸுக்காக ஆப்ரேஷன் செய்திருக்கான். அதில் என்னமோ சிக்கல். ரெண்டே நாள்தான் ஆஸ்பத்திரியில் இருந்தான். இன்று காலையில் போய்விட்டான்” என்றார். கண்முன்னால் துருதுருவென ஓடிக்கொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு ஏற்பட்ட திடீர் நிலையைக் கேட்டு துக்கம் தொண்டையை அடைத்தது. கண்கள் கலங்கிச் சடாரென்று துளிகள் வெளியே தெறித்தன. அந்தத் துளிகளில் துக்கத்துடன் எனது குற்ற உணர்ச்சியும் கலந்திருந்தது. எதிர் காலத்துக்குள் என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்ப்பதைப் போல முட்டாள்தனம் என்ன இருக்க முடியும் என்று தோன்றிவிட்டது. அதற்குப் பிறகு கைரேகை பார்ப்பதையே விட்டுவிட்டேன்” பானுமதி பேசுவதை நிறுத்திவிட்டுப் பெருமூச்செறிந்தார். அவரது கண்கள் இப்போது கலங்கியிருந்தன. ஜன்னலுக்கு வெளியே ஒருபெரிய மாமரத்தின் கிளையிலிருந்து எதிர்காலம் பற்றிய கவலையே இல்லாமல் அக்காக் குருவி ஒன்று கத்தியது. https://tamil.thehindu.com/cinema/cinema-others/article26884791.ece
 13. அத்தியாயம் 49 கெடில நதிக்கரை ஓரத்தில் ஆற்றோடு ஆறாக... மீனோடு மீனாக சிவகாமி கிடந்தாள்.இருள் பெரிதும் சூழ்ந்துவிட்ட இரவின் அந்த நேரத்தில் அளித்த பிரமை தட்டும் காட்சியைக் கண்ட கரிகாலனின் உள்ள உணர்ச்சிகள் ஒரு நிலையில் நில்லாமல் பெரிதும் கலங்கிவிட்டன.அடுத்தபடி என்ன செய்வது என்பதை அறியாமல் ஏதோ மந்திரத்தால் கட்டுண்டவன் போல் நின்ற இடத்திலேயே கற்சிலை என நின்றான். கரையோரத்தில் ஒதுக்கப்பட்டாலும் பாதி தரையிலும் பாதி நீரிலுமாகக் கிடந்த அந்தப் பாவையின் அழகிய உடலின் ஒரு பாதியை திரைகள் அவ்வப்பொழுது வந்து வந்து தழுவிப் பின்வாங்கியதாலும், நிலவின் ஒளி அந்தத் திரைகளின் மீது விழுந்து வெள்ளிப் பாளங்களாக திரை நீரை அடித்ததாலும், சிவகாமியின் உருவத்தை மறைக்க முயன்ற கெடில நதி அரசன் தன் திரைகளைக் கொண்டு வெள்ளிப் போர்வையை அவள் மீது போர்த்திப் போர்த்தி எடுப்பதுபோல் தோன்றிய அந்த மோகனக் காட்சியைக் கண்ட கரிகாலன் உள்ளத்தைப் பெரும் மாயை மூடிக் கொண்டது. அதுவரை அவன் உள்ளத்தை ஆட்கொண்டிருந்த பல்லவ மன்னரும், காஞ்சியும், ஆதுரச் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தன் தந்தையின் நிலையும், சிவகாமி குறித்த மர்மமும் கரிகாலனின் சிந்தையில் இருந்து அகன்றன. எதற்கும் அசையாத கரிகாலனின் இரும்பு நெஞ்சம் கீழே கிடந்த மோகனாஸ்திரத்தின் வசியப் பிணைப்பில் இறுகிவிட்டதையும், அப்படி இறுகிவிட்ட நெஞ்சம் எந்தப் பக்கமும் திரும்ப வழியில்லாமல் தவிப்பதையும் கண்ட விண்மீன்கள், கண்களைச் சிமிட்டி அவனை நோக்கி நகைத்தன. அந்த சமயத்தில் அவன் காலில் வந்து மோதிச் சென்ற கெடில நதி அலைகள் கூட சளக் சளக் என்று சத்தம் போட்டு தங்கள் திரை நுரைகளைக் காட்டி அவனை நோக்கிச் சிரித்தாலும், அந்தத் திரைகளின் சிரிப்பொலியைக் கூடக் காதில் வாங்கிக் கொள்ளாமல் நிலைகுலைந்து நீண்ட நேரம் நின்றுகொண்டே இருந்தான்.அதுவரையில் அவன் காதில் லேசாக விழுந்து கொண்டிருந்த கெடில நதியின் பேரிரைச்சலும், வனங்களில் ஒலித்த வண்டுகளின் ரீங்காரமும் கூட சிவகாமி கிடந்த கோலத்தைக் கண்டது முதல் அடியோடு அகன்று, உலகமே ஒலியிலிருந்து விடுபட்ட சூனியம் போலும், விழுந்து கிடந்த அந்த அழகிய உடல் பிரதிபலித்த ஒளி மட்டுமே உலகத்தில் நிலைத்த உயிர் நிலை போலும் தோன்றக் கூடிய நிலைக்கு அவனைக் கொண்டுவந்து விட்டது. அப்புறமோ இப்புறமோ நகரக் கூடிய உணர்வை கரிகாலன் இழந்தான்.உணர்விழந்து கிடந்தது, தரையில் புரண்டிருந்த மங்கையா அல்லது அவளைப் பார்த்து பிரமை பிடித்து நின்றுவிட்ட அந்த வாலிப வீரனா என்பதை ஊகிக்க முடியாத நண்டுகள் சில சிவகாமியின் மீதும் இன்னும் சில கரிகாலனின் கால்கள் மீதும் ஏறி ஏறிச் சென்று பார்த்து உண்மையை ஊகிக்க முயன்று தோற்று அப்புறம் நகர்ந்தன. மந்திரத்தை மந்திரத்தால்தான் எடுக்க முடியும். அதை எடுக்கும் நேரமும் வந்துவிட்டது என்பதை நிரூபிக்க இஷ்டப்பட்ட வானவெளி, நாண்மீன் எனப்பட்ட அசுவினி நட்சத்திரக் கூட்டத்தையும், கோண்மீன் எனப்பட்ட செவ்வாய் - புதன் முதலிய கிரகங்களையும் மெல்ல மெல்ல ஒன்று திரட்டி கரிகாலன் மனோநிலையை அந்த அழகியின் மாயா சக்தியில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தது.விண்ணின் இஷ்டப்படி விதி வகுக்கப்படுகிறது; நட்சத்திரங்களின் அசைவுக்குத் தகுந்தபடி மனித வாழ்க்கை இயங்குகிறது என்று கூறும் சோதிட சாத்திரத்தை மெய்ப்பிக்கவே நதிக்கரையோரம் ஒதுங்கினவளைப் போல் அதுவரை தரையில் அடியோடு உணர்வற்றுக் கிடந்த சிவகாமியும் அசுவினியும் செவ்வாயும் புதனும் ஒளிவிடத் தொடங்கிய அந்த நேரத்தில் கரிகாலன் மனத்தைக் கட்டுப் படுத்தி இருந்த மந்திரக் கணையை மெல்ல அவிழ்க்கவும் அவன் உணர்ச்சிகளை மெல்ல மெல்ல அவனுக்குத் திரும்ப அளிக்கவும் தன் பூவுடலை லேசாக ஒருமுறை அசைத்தாள்.அந்த ஓர் அசைவு கரிகாலன் இதயக் கட்டை அவிழ்த்து அவனை இந்த உலகத்துக்குள் கொண்டுவந்துவிட்டதால், சிவகாமிக்கு உதவாமல் அவளை உற்றுப் பார்த்துக் கொண்டு நேரத்தை அனாவசியமாக வீணாக்கிக் கொண்டிருந்த தன் மதியீனத்தை நினைத்துப் பெரிதும் வருந்தியவன் சட்டென்று அமர்ந்து அவள் நாசியில் விரலை வைத்துப் பார்த்தான்.சுவாசம் நிதானமாகவும் ஒரே சீராகவும் வந்து கொண்டிருந்ததால் நீரை அதிகமாக அவள் குடிக்கவில்லை என்பதைத் தீர்மானித்துக் கொண்ட கரிகாலன், அவளைத் தரையிலிருந்து தூக்கினான்.சிவகாமியின் தேகம் அவன் அறிந்ததுதான். பலமுறை புரண்ட உடல்தான். அங்கங்களின் அளவும் செழுமையும் தெரிந்ததுதான். என்றாலும் ஒவ்வொரு முறையும் நினைப்பதுபோலவே அப்போதும் எண்ணினான். அழகிய தோற்றமும் கட்டான சரீரமும் படைத்த சிவகாமி தூக்குவதற்கு எத்தனை லேசாக இருக்கிறாள்! இத்தகைய ஒரு சொர்ணச் சிலை எப்படிப் பஞ்சுபோல் இருக்க முடியும்..?வியந்தபடியே அவளைச் சுமந்தபடி வனத்துக்குள் புகுந்தான். மழை பெய்து மண்ணைக் குளிரவைக்க வேண்டிய ஆவணி மாதத்தில் மழையோ குளிரோ இல்லை என்றாலும், கைகளிலே தூக்கிச் சென்ற சிவகாமியின் நனைந்த உடையில் இருந்த தண்ணீர் அவன் இதயத்துக்கு அருகே வழிந்து ஓடியதாலும், அவன் கால்கள் நடந்த அதிர்ச்சியால் அவன் மார்பிலே புதைந்த அவள் அங்கலாவண்யங்களின் அசைவால் ஏற்பட்ட உணர்ச்சிகளின் வேகத்தாலும், சிவகாமியின் சரீரத்தின் மென்மை உள்ளத்தே கிளப்பிவிட்ட எத்தனை எத்தனையோ தடுமாற்றங்களாலும் கரிகாலனின் உறுதியான கால்கள் கூடச் சற்று தடுமாற்றத்துடனேயே நடந்து சென்றன. விசாலமான புல்தரையில் அதுகாறும் தாங்கி வந்த சிவகாமியை மெல்லக் கிடத்தினான்.மூர்ச்சை முழுதும் தெளியாமல் இருந்தாலும் கெடில நதிக்கரையில் இருந்து கரிகாலன் அவளைத் தூக்கி வந்தபோது ஏற்பட்ட அசக்கலில் சிவகாமி குடித்திருந்த கொஞ்ச நீரும் வாய் வழியாக வெளிவந்துவிட்டதால் அவள் ஓரளவு சுரணை வரப்பெற்று அப்புறமும் இப்புறமும் அசைந்தாள்.புஷ்பக் கொத்துகளுடன் காற்றிலாடும் பூஞ்செடியைப் போல் அவள் மெல்ல அசைந்தபோது ஈர உடை சற்றே நெகிழ்ந்ததால் லேசாக வெளிப்பட்ட அவள் தேக லாவண்யங்களின் நிறம் புது செம்பையும் பழிக்கும் தன்மையைப் பெற்றிருந்ததைக் கண்ட கரிகாலன், இப்படியும் ஒரு செம்பு நிறம் படைப்பில் இருக்க முடியுமா என எப்போதும் போல் அப்போதும் நினைத்து பிரமித்துப் போனான். உருக்கிய செம்பில் புஷ்பத்தையும் செவ்வரி ஓடாத அல்லி மலரின் உள்ளிதழ்களையும் கூட உவமை சொல்ல முடியாத அத்தனை நிறம் வாய்ந்த சிவகாமியின் அழகிய வதனத்தைச் சூழ்ந்த ஈரத்தால் கன்னத்தில் ஒட்டிக் கொண்டிருந்த கூந்தல் முழு நிலவின் பிம்பத்தை எதிரொலித்தது. புல் தரையில் கிடந்த சிவகாமியின் உடல் சிறுக்க வேண்டிய இடங்களில் சிறுத்து எழுச்சி பெற வேண்டிய இடங்களில் நன்றாக எழுச்சி பெற்றிருந்ததால் யவனத்துக்கு இலக்கணம் வகுக்கவே இயற்கை அவளை உருவாக்கியது போல் கரிகாலனுக்குத் தோன்றியது.தன் ஆட்சிக்குட்பட்ட காலத்தில் கெடில நதி அரசன் தன் கரங்களால் அவள் ஆடையில் விளைவித்த அலங்கோலத்தினால் மறைவு குறைந்து அழகு எழுந்து நின்றதன் விளைவாகப் பார்த்த இடங்களில் எல்லாம் தாக்கப்பட்டு புயலில் அகப்பட்ட மரக்கலம் போல அல்லாடும் மனநிலைக்கு வந்துவிட்ட கரிகாலன், அவள் வதனம் அசையத் தொடங்கியதும் முழந்தாளிட்டு சிவகாமியை நோக்கிக் குனிந்தான்.மெல்ல இமைகளைப் பிரித்தவள் தன்னருகில் தெரிந்த கரிகாலனின் முகத்தைக் கண்டதும் நிம்மதியடைந்து ‘‘இங்குதான்... இருக்கிறீர்களா..?’’ என மெல்ல உச்சரித்தாள்.‘‘இங்குதான் இருக்கிறேன்...’’ என்றபடி அவள் கொங்கையின் பிளவுக்குள் தன் முகத்தைப் பதித்தான் கரிகாலன்!‘‘ம்... எங்கு தேடியும் கரிகாலனும் சிவகாமியும் சென்ற இடம் உங்களுக்குத் தெரியவில்லை...’’ சர்ப்பமென ராமபுண்ய வல்லபர் சீறினார்.பதில் பேச முடியாமல் சாளுக்கிய வீரர்கள் தலைகுனிந்தார்கள். ‘‘போகட்டும்... சோழ மன்னரை யார் எடுத்துச் சென்றார்கள்..? எந்த ஆதுரச்சாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது..?’’முன்னிலும் அதிகமாக வீரர்கள் தரையை ஆராய்ந்தார்கள்.‘‘உங்களைச் சொல்லி குற்றமில்லை... உங்களை வைத்துக் கொண்டு பாண்டியர்களையும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறாரே நம் மன்னர்... அவரைச் சொல்ல வேண்டும்! போங்கள். எல்லாத் திசைகளிலும் அலசுங்கள்! செய்தியோடுதான் இனி என்னைச் சந்திக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் மரணமடைந்த செய்தி வாதாபியில் இருக்கும் உங்கள் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படும்!’’ அழுத்தமாகச் சொல்லிவிட்டு தனக்கென ஒதுக்கப்பட்ட மாளிகைக்குள் சாளுக்கியர்களின் போர் அமைச்சர் நுழைந்தார். வாயிலில் நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கரிகாலனின் பெரிய தாயார் எதுவும் சொல்லாமல் ராமபுண்ய வல்லபரை ஒரேயொரு பார்வை பார்த்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தார்.செல்வதற்கு முன் தன்னைப் பார்த்து அந்த அம்மையார் நகைத்ததாகவே ராமபுண்ய வல்லபருக்குத் தோன்றியது!‘‘வா ...’’ கணங்கள் யுகங்களாகக் கரைந்தபிறகு சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் குரல் கொடுத்தார்.மறைவிடத்தை விட்டு வெளியே வந்த பாலகன் மரியாதையுடன் அவர் அருகில் சென்று கைகட்டி நின்றான்.‘‘செய்தியைச் சொல்...’’ மன்னரின் குரலில் கட்டளைக்குப் பதில் அன்பே நிரம்பி வழிந்தது.‘‘கெடில நதிப்பக்கம் கரிகாலனும் சிவகாமியும் சென்றிருக்கிறார்கள்...’’ பாலகன் பவ்யமாகச் சொன்னான்.‘‘ம்...’’‘‘அதன் பிறகு எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை...’’‘‘ம்...’’‘‘குறுவாள் பாய்ந்த சோழ மன்னரைக் காப்பாற்றும் பொறுப்பை காபாலிகனிடம் ஒப்படைத்திருக்கிறார் கரிகாலர்...’’‘‘ம்...’’‘‘ஆனால்...’’ பாலகன் தயங்கினான்.‘‘எந்த ஆதுரச் சாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரியவில்லை... அப்படித்தானே..?’’ பாலகன் தலையசைத்தான்.‘‘அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை... கவலைப்படாதே...’’ ஆறுதல் சொன்ன விக்கிரமாதித்தர், பாலகனை நெருங்கி அவன் தோளில் கைவைத்தார். ‘‘நம் பணி முடியும் வரை கடிகையில் எச்சரிக்கையாக இரு. புலவர் தண்டி மீது ஒரு கண் இருக்கட்டும்...’’தலையசைத்த பாலகன் குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு வந்த வழியே வெளியேறினான்.‘‘வருபவன் அந்த பாலகன்தானே..?’’ மகேந்திரவர்ம சாலையில் இருளடர்ந்த பகுதியில் இருந்த உருவம் மெல்லக் கேட்டது.‘‘ஆம்... கடிகையைச் சேர்ந்தவனேதான்!’’ மற்றொரு உருவம் பதில் சொன்னது.சந்தேகம் வராதபடி பாலகனை அவர்கள் இருவரும் பின்தொடர்ந்தார்கள். http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15220&id1=6&issue=20190419
 14. ரத்த மகுடம்-48 ‘‘உங்கள் கோபம் புரிகிறது...’’ நிதானமாகவே சொன்னார் சாளுக்கிய மன்னர். ‘‘முதலில் அமருங்கள்... பிறகு வந்த விஷயத்தைச் சொல்லுங்கள்...’’ ‘‘பரவாயில்லை மன்னா...’’ சொல்லும்போதே ராமபுண்ய வல்லபருக்கு உதடு துடித்தது. ‘‘அமர்வதற்காக வரவில்லை...’’ மீண்டும் அழுத்திச் சொன்னார்.‘‘எனில் நிற்பதற்காகத்தான் வந்திருக்கிறீர்கள்... அப்படித்தானே..?’’‘‘ஆம்!’’‘‘வேண்டுதலா..?’’ சாதாரணமாகவே கேட்டார் விக்கிரமாதித்தர்.ஆனால், கொந்தளித்துக் கொண்டிருந்த சாளுக்கிய போர் அமைச்சரின் உள்ளத்தில் இக்கேள்வியே எண்ணெயைக் கொட்டியது போல் ஆனது. ‘‘வேண்டுதல்தான் மன்னா!’’ நெஞ்சை நிமிர்த்தினார். ‘‘சாளுக்கியர்களின் வெற்றிக்கான வேண்டுதல் இது!’’‘‘இப்போது நாம் எங்கிருக்கிறோம் ஸ்ரீராமபுண்ய வல்லபரே..?’’ எந்த மாற்றமும் இன்றி இயல்பான குரலில் சாளுக்கிய மன்னர் கேட்டார். ‘‘காஞ்சியில் மன்னா..!’’‘‘இந்த மாளிகை..?’’‘‘பல்லவ பெரு வணிகருக்குச் சொந்தமானது..!’’‘‘பல்லவர்கள் யார்..?’’‘‘நம் பரம வைரிகள்!’’‘‘அப்படிப்பட்டவர்களின் இருப்பிடத்தில் நாம் இருக்கிறோம் என்றால்...’’ கேட்டபடியே ராமபுண்ய வல்லபரின் அருகில் வந்தார் விக்கிரமாதித்தர். ‘‘இது சாளுக்கியர்களின் வெற்றியைக் குறிக்காதா..?’’‘‘பதில் உங்களுக்கே தெரியும்!’’ மன்னரை நேருக்கு நேர் பார்த்தபடியே சாளுக்கிய போர் அமைச்சர் பதிலளித்தார்.‘‘எனக்குத் தெரியுமா அல்லவா என்பதல்ல பிரச்னை... உங்களுக்கு அதில் சந்தேகமா என்பதே என் வினா...’’‘‘உண்மையைச் சொல்ல வேண்டுமா பொய் சொல்ல வேண்டுமா..?’’‘‘எப்போதும் எதைச் சொல்வீர்களோ அதைச் சொல்லுங்கள்...’’‘‘சமயத்துக்குத் தகுந்தபடி வெளிப்படுத்துவேன் மன்னா...’’‘‘அதாவது..?’’‘‘பொய்மையும் வாய்மை இடத்து!’’‘‘தமிழர்களின் மூதுரை!’’‘‘தமிழகத்தை ஆள நினைப்பவர்கள் வள்ளுவனின் வாக்கைப் பின்பற்றுவதில் தவறேதும் இல்லையே மன்னா..!’’‘‘சரி...’’ விக்கிரமாதித்தர் புன்னகைத்தார். ‘‘இந்த சமயத்துக்கு எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லுங்கள்!’’‘‘எந்த சமயத்துக்கும் நீங்கள் கேட்ட வினாவுக்கு விடை ஒன்றுதான் மன்னா..! இது... இந்த காஞ்சி மாநகரத்தில் நாம் இருப்பதும் வசிப்பதும் சாளுக்கியர்களுக்கு வெற்றி ஆகாது!’’‘‘அப்படியானால் எப்போது வெற்றி என்பதை ஒப்புக் கொள்வீர்கள்..?’’‘‘பாண்டியர்களையும் வெற்றி பெற்று எப்போது மொத்த தமிழகத்திலும் வராகக் கொடியைப் பறக்கவிடுகிறோமோ அப்போது ஒப்புக்கொள்வேன்!’’சாளுக்கிய மன்னரின் முகம் மலர்ந்தது. ‘‘அதற்கான முதல் படியாக இப்போது நாம் பல்லவ நாட்டில் இருப்பதைக் குறிப்பிடலாம் அல்லவா..?’’‘‘வாய்ப்பில்லை மன்னா!’’ ராமபுண்ய வல்லபரின் முகம் இறுகியது.‘‘ஏனோ..?’’‘‘முதல் படியே ஆட்டம் காணும்போது அடுத்தடுத்த படிகளைக் குறித்து எப்படி திட்டமிட..?’’ கசப்புடன் சொன்ன சாளுக்கிய போர் அமைச்சர் சில கணங்கள் அமைதியாக இருந்தார். ‘‘ஆட்டம் காண்கிறோமா..?’’‘‘ஆம்! பாதாளத்தில் விழும் தருவாயில் இருக்கிறோம்!’’‘‘அதை நிறுத்த உங்களிடம் வழி இருக்கிறதா..?’’‘‘இருக்கிறது!’’‘‘சொல்லுங்கள்...’’‘‘சொல்லி என்ன ஆகப் போகிறது மன்னா..?’’ கேட்ட ராமபுண்ய வல்லபரின் கண்களில் துக்கத்தின் சாயை படர்ந்தது.‘‘சொன்னால்தானே சரி செய்ய முடியும்...’’‘‘முடியும் என்று தோன்றவில்லை...’’‘‘ஏனோ..?’’‘‘காரணமே நீங்களாக இருக்கும்போது யாரிடம் சென்று நிறுத்துவதற்கான வழியைச் சொல்ல முடியும்..?’’ ‘‘நானா..?’’ விக்கிரமாதித்தர் ஆச்சர்யப்பட்டார். ‘‘நம் பரம வைரியான பல்லவர்களை வேரடி மண்ணோடு வீழ்த்தும் விஷயத்தில் நான் தடையாக இருக்கிறேனா..?’’‘‘இல்லை என்கிறீர்களா மன்னா..?’’ சீறினார் சாளுக்கிய போர் அமைச்சர். ‘‘எதற்காக கரிகாலனைத் தப்ப விடுகிறீர்கள்..?’’சாளுக்கிய மன்னர் அமைதியாக ராமபுண்ய வல்லபரை ஏறிட்டார்.மறைந்திருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த பாலகனும் தன் செவிகளைக் கூர் தீட்டினான்.‘‘சொல்லுங்கள் மன்னா... ஏன் அமைதியாக நிற்கிறீர்கள்..?’’ முடிந்தவரை நிதானத்தை வரவழைத்துக்கொண்டு சாளுக்கிய போர் அமைச்சர் கேட்டார்.விக்கிரமாதித்தரின் உதட்டில் புன்னகை மலர்ந்தது.சட்டென தன் முகத்தை ராமபுண்ய வல்லபர் திருப்பிக் கொண்டார்.‘‘ஏன் அமைச்சரே... நான் சிரிப்பது அழகாக இல்லையா..?’’ விஷமம் தொனிக்க சாளுக்கிய மன்னர் கேட்டார்.‘‘அழகுக்கு என்ன குறைச்சல் மன்னா...’’ தன் கீழ் உதட்டைக் கடித்தார் சாளுக்கிய போர் அமைச்சர். ‘‘என்றுமே நீங்கள் அழகுதான்...’’‘‘பிறகு ஏன் முகத்தைத் திருப்பிக் கொள்கிறீர்கள்..?’’‘‘சிவகாமியை ஆராய!’’ திரைச்சீலையில் இருந்த சித்திரத்தைச்சுட்டிக் காட்டினார்.‘‘நன்றாக வரையப்பட்டிருக்கிறதா..?’’‘‘கச்சிதமாக! எதன் பொருட்டு இந்த ஓவியம் வரையப்பட்டதோ... எதற்காக சிவகாமியைத் திரைச்சீலையில் தீட்டினோமோ அதற்கு பலன் இல்லாதபோது நாம் தீட்டிய திட்டமெல்லாம் வீணாகிறதே என வெறுப்புடன் ஆராய்கிறேன்...’’ என்றபடி மன்னரை ஏறிட்டார். ‘‘சொல்லுங்கள் மன்னா... கரிகாலனை ஏன் தப்ப விடுகிறீர்கள்..? குறிப்பாக சிவகாமியை! அவள் நமக்குக் கிடைத்திருக்கும் ஆயுதமல்லவா..?’’‘‘என்ன குழந்தாய் சொல்கிறாய்!’’ சாளுக்கிய சக்கரவர்த்தினி உண்மையிலேயே திகைத்தாள். ‘‘சிவகாமி நம் ஆயுதமா..?’’‘‘ஆம் அம்மா!’’ நிதானமாகச் சொன்னான் கங்க இளவரசன். ‘‘அவளை வைத்து மன்னர் பெரும் விளையாட்டையே நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்...’’‘‘புரியவில்லையே..?’’‘‘எனக்கும் முழுமையாகத் தெரியவில்லை அம்மா... சக்கரவர்த்தி மேல்மாடத்துக்கு வந்ததும் அவரிடம் இதுகுறித்து கேட்பதாக இருக்கிறேன்... தவிர...’’‘‘சொல் குழந்தாய்... ஏன் நிறுத்திவிட்டாய்..?’’‘‘நிறுத்தவில்லை அம்மா! ஒரு சந்தேகம் இருக்கிறது...’’‘‘என்ன சந்தேகம்..?’’ பட்டத்து அரசி படபடத்தாள்.‘‘வந்து... நம் இளவரசர்...’’‘‘விநயாதித்தனா..?’’‘‘ம்... காஞ்சிக்கு வந்தவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என்றீர்கள் அல்லவா..?’’‘‘ஆமாம்...’’‘‘அவர் மறைந்திருப்பதற்கும் சிவகாமிக்கும் கூட தொடர்பு இருக்குமோ என நினைக்கிறேன்...’’சாளுக்கிய சக்கரவர்த்தினி திக்பிரமை பிடித்து அப்படியே அமர்ந்தாள். ‘‘என்னப்பா சொல்கிறாய்..?’’‘‘ஐயம்தான் அம்மா... உறுதியில்லை...’’‘‘பகவானே!’’ தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள் பட்டத்து அரசி. ‘‘சிவகாமி ஆபத்தானவள் என்கிறார்களே... அவளால் விநயாதித்தனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டால்...’’ தழுதழுத்தபடி முணுமுணுத்தாள்.‘‘அச்சம் தவிர்க்க அமைச்சரே! என் மகன் விநயாதித்தனுக்கு எந்த ஆபத்தும் இல்லை!’’ விக்கிரமாதித்தர் உறுதியுடன் சொன்னார்.‘‘அப்படியானால் இளவரசர் எங்கே..?’’ ராமபுண்ய வல்லபர் உஷ்ணத்துடன் கேட்டார். ‘‘இந்தக் கேள்வியை நான் கேட்கவில்லை மன்னா... நம் சாளுக்கியப் படை வீரர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொள்கிறார்கள். வீரர்களுடனேயே உணவு உண்டு, உறங்கி, அவர்களது சுக துக்கங்களில் பங்கேற்று, அவர்களுள் ஒருவராகக் கலந்துவிட்ட நம் இளவரசர் காஞ்சிக்கு வந்ததும் எங்கு சென்றார் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருக்கிறது. எப்போது வெளிப்படையாக இதே வினாவைத் தொடுப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால், தொடுக்கும்போது பிரளயம் ஏற்படுவது உறுதி...’’சாளுக்கிய மன்னர் அசையாமல் நின்றார்.மறைந்திருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பாலகன் இருந்த இடத்தில் நின்றபடியே அசைந்தான்.‘‘ஒருபோதும் நீங்கள் இப்போது சொன்னீர்களே... அதை நம் வீரர்கள் ஏற்க மாட்டார்கள்!’’ திட்டவட்டமாகச் சொன்னார் சாளுக்கிய போர் அமைச்சர்.‘‘என்ன... மன்னரின் பேச்சை படைகள் கேட்காதா..?’’ விக்கிரமாதித்தரின் புருவங்கள் உயர்ந்தன.‘‘உரிய பதில் கிடைக்கவில்லை என்றால் கேட்க மாட்டார்கள் மன்னா... கலகம் செய்வார்கள்! வரலாறு நெடுக இதற்கு உதாரணங்கள் இருக்கின்றன!’’இதைக் கேட்டதும் சாளுக்கிய மன்னர் தன் கண்களைச் சுருக்கினார். ‘‘என் பதில் திருப்தியாக இல்லையா..?’’‘‘இல்லை மன்னா! பல்லவ சைன்யத்துடன் எந்தெந்த குறுநில மன்னர்கள் எல்லாம் வந்தார்களோ... நம் வாதாபியைத் தீக்கிரை ஆக்கினார்களோ... அவர்களை எல்லாம் போர் முனையில் மட்டுமே வீழ்த்தி பழிக்குப் பழிவாங்கவேண்டும் என்கிறீர்கள்... அப்போதுதான் தங்கள் தந்தையும், நம் அனைவருக்கும் சக்கரவர்த்தியுமான இரண்டாம் புலிகேசியின் ஆன்மா சாந்தியடையும் என்கிறீர்கள்...’’‘‘ஆம்...’’‘‘இதன் காரணமாகவே கரிகாலன் தப்பித்துச் செல்ல உதவினீர்கள்...’’ ‘‘ஆம்...’’‘‘அப்படி உங்கள் உதவியால் வெளியேறியவன் தன் தந்தையான சோழ மன்னரையும் அல்லவா உடன் அழைத்துச் சென்றிருக்கிறான்..?’’‘‘அவரை மீண்டும் சிறைப்பிடிக்கத்தான் வீரர்களை அனுப்பியிருக்கிறீர்களே...’’‘‘அனைவரையும் வீழ்த்தி தன் தந்தையுடன் தப்பித்துவிட்டானே...’’ ராமபுண்ய வல்லபரின் குரலில் ஆற்றாமை வழிந்தது.‘‘அதனால் என்ன... குறுவாள் பாய்ந்த தன் தந்தைக்கு எப்படியும் சிகிச்சை அளிக்க ஆதுரச்சாலைக்குத்தானே சென்றிருப்பான்..? சுற்றி வளைக்கலாமே..?’’கேட்ட மன்னரை உற்றுப் பார்த்தார் ராமபுண்ய வல்லபர். ‘‘சுற்றி வளைக்கத்தான் கேட்கிறேன் மன்னா... எந்த ஆதுரச்சாலைக்கு அவர்களை அனுப்பியிருக்கிறீர்கள்..?’’‘‘நானா அனுப்பியிருக்கிறேன் என்கிறீர்கள்..?’’ விக்கிரமாதித்தர் ஆச்சர்யத்துடன் கேட்டார்.‘‘இல்லை என்கிறீர்களா..?’’‘‘ஆம்... நிச்சயமாக நான் அவர்களை மறைத்து வைக்கவில்லை. கரிகாலன் புத்திசாலி... காஞ்சியில் இல்லையென்றால் வேறு எங்காவது அழைத்துச் சென்றிருப்பான்...’’‘‘அந்த இடம் பல்லவ இளவரசன் ராஜசிம்மன் மறைந்திருக்கும் பிரதேசமாக இருந்தால்..?’’சாளுக்கிய மன்னர் அமைதியாக நின்றார்.‘‘நீங்களே சொல்கிறீர்கள் கரிகாலன் புத்திசாலி என்று...’’ புத்திசாலிக்கு அழுத்தம் கொடுத்தார் ராமபுண்ய வல்லபர். ‘‘அப்படிப்பட்ட புத்திசாலி சிக்கியபோது அவனை நம் பக்கம் இழுப்பதுதானே ராஜ தந்திரம்? அதைத்தானே நான் செய்ய முற்பட்டேன்... அதற்காகத்தானே அவன் தந்தையைச் சிறையில் அடைத்து... அவன் பெரியம்மாவை மாளிகைக் காவலில் வைத்து... எல்லா திட்டங்களையும் உங்கள் பெருந்தன்மையால் குலைத்து விட்டீர்களே மன்னா!’’ சொல்லும்போதே அவர் குரல் தழுதழுத்தது.சில கணங்கள் அமைதியாக இருந்தவர் தன்னைச் சமாளித்துக் கொண்டு தொடர்ந்தார்: ‘‘உங்கள் நோக்கம் உயர்ந்தது மன்னா... ஆனால், அதே நோக்கமே சாளுக்கியர்களுக்கு எதிராக மாறும்போது போர் அமைச்சர் என்ற முறையில் என்னால் அமைதியாக இருக்க முடியாது! தங்கள் தந்தை இரண்டாம் புலிகேசி மாமன்னரின் உப்பைத் தின்று வளர்ந்தவன் நான். அவரது கனவு, வராகக் கொடி பாரதம் முழுக்க பறக்க வேண்டும் என்பது. அதற்காக என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பேன்... இதற்காக உங்களையே எதிர்க்க வேண்டிய சூழல் வந்தாலும்...’’ மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் சாளுக்கிய மன்னருக்கு தலை வணங்கினார். ‘‘அந்த நிலைக்கு என்னை ஆளாக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் மன்னா! நீங்கள்தான் தப்பிக்க வைத்தீர்களோ அல்லது கரிகாலனே தப்பித்தானோ... எதுவாக இருந்தாலும் அவனையும் அவன் தந்தையையும் நிச்சயம் சிறைப்பிடிப்பேன்... அதற்கு...’’நிமிர்ந்து விக்கிரமாதித்தரின் பின்னால் இருந்த திரைச்சீலையைச் சுட்டிக் காட்டினார். ‘‘சிவகாமி எனக்கு உதவி புரிவாள்!’’கம்பீரமாக அறிவித்துவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் ராமபுண்ய வல்லபர் வெளியேறினார்.அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சாளுக்கிய மன்னரின் உதட்டில் குறுநகை பூத்தது.மறைந்திருந்து இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பாலகனின் கண்களில் ஒளி வீசியது. ஆமாம்... கரிகாலரும் சிவகாமியும் இப்போது எங்கிருக்கிறார்கள்..?‘‘இங்குதான் இருக்கிறேன்...’’ என்றபடி சிவகாமியின் கொங்கை பிளவுக்குள் தன் முகத்தைப் பதித்தான் கரிகாலன்! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15192&id1=6&issue=20190412
 15. 08: நம்பியாரை நானே பார்த்துக்கிறேன்! தெனாலி ராமகிருஷ்ணா தெலுங்குப் படத்தில் பானுமதி சலாம் பாபு… சலாம் பாபு... என்னைப் பாருங்க! தங்க கையில் நாலுகாசை அள்ளி வீசுங்க! ஏ சலாம் பாபு... சலாம் பாபு கனவு இல்லீங்க நினைவு தானுங்க கணமேனும் வீண்காலம் கழிக்காதீங்க... படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும் பானுமதியிடம் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உண்டு. அவருடைய பேச்சிலும் எழுத்திலும் அது வெளிப்படும். மெல்லிய நகைச்சுவை இழையோட அவர் தெலுங்கில் எழுதிய ‘அத்தகாரு கதலு’ என்ற கதைகள் அவருக்கு ஆந்திரப்பிரதேசத்தின் தலைசிறந்த நகைச்சுவை எழுத்தாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தந்தன. இக்கதைகள் தமிழில் பிரபல வார இதழில் ‘மாமியார் கதைகள்’ என்ற பெயரில் வெளிவந்து, அவருக்கு ஒரு வாசகர் கூட்டத்தைத் தமிழிலும் உருவாக்கித் தந்தது. மாமியார்-மருமகள் சண்டையில் வருகிற நகைச்சுவைச் சம்பவங்கள் உண்மையில் பானுமதியின் வாழ்க்கையில் நிகழ்ந்தவைதாம். மறுபடி மாமியார் கதைகள் எழுதும் உத்தேசம் உண்டா? என்று அவரிடம் கேட்டேன். “எழுதினால் போச்சு. ஒரு சம்பவம் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு அவர் விவரித்தபோது, ஒரு மாமியார் கதை கிடைத்துவிட்டது. அது பத்திரிகையில் பிரசுரம் கண்டது. அதைத் தவிர தமாஷாக அவர் விவரித்த சம்பவங்கள் அவ்வப்போது எழுத்துவடிவம் எடுத்து பிரசுரம் ஆனதும் உண்டு. அப்போதெல்லாம் அவர் ஒரு குழந்தைபோல் குதூகலிப்பார்.” என்றார். ‘சகலகலாவல்லி’ என்ற பெயருக்கு ஏற்ப அவர் பல துறைகளில் தனது முத்திரையைப் பதித்தாலும் எழுதுவதுதான் அவருக்குப் பிடித்தமானது. சிறந்த எழுத்தாளருக்கான ஆந்திரப் பிரதேசத்தின் சாகித்திய அகாடமி விருதும் அவருக்குக் கிடைத்தது. ‘மலைக்கள்ளன்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் பானுமதி சிறப்பான நடிப்புக்கு உதவி “அப்பாவுக்கு என் எழுத்துத் திறமைமீது அபார நம்பிக்கை. நான் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்ததும் செட்டில் இடைவேளைகளில் என் மனத்தில் தோன்றுவதையெல்லாம் எழுதுவேன். ஸ்டுடியோக்களில் நான் சந்திக்கும் வேடிக்கையான மனிதர்கள்பற்றி பேனா சித்திரங்கள் பலவற்றைத் தீட்டியிருக்கிறேன். இதை கவிராஜூ என்ற எழுத்தாளர் பார்த்துவிட்டுப் பாராட்டினார். நான் உனக்குக் கதையெல்லாம் எழுதச் சொல்லித்தருகிறேன். உனக்கு காமெடிக் கதை பிடிக்குமா? சோகக்கதை பிடிக்குமா? என்று கேட்டார். ‘காமெடிதான் பாப்பாவுக்கு இஷ்டம்’ என்றார் அப்பா சிரித்தபடி. கவிராஜூதான் எனக்குக் கதை எழுதக் கற்றுக்கொடுத்தார். தன் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவைச் சம்பவங்களை விவரிப்பார். நான் விழுந்து விழுந்து சிரிப்பேன். கவிராஜூ தந்த உற்சாகத்தில் நான் எழுதிய முதல்கதை ‘மரச்சொம்பு’. அவர் அதைத் திருத்திக் கொடுத்தார். என் கற்பனைத்திறனையும் பாராட்டினார். எனக்குத் தரப்படும் ஸ்கிரிப்ட் சப்பென்று இருந்தால் எனக்குப் பிடிக்காது. அதில் ஏதாவது நகைச்சுவையாக வரும்படி செய்து பேசிவிடுவேன். நான் பேசும் வசனங்களை இப்படி நானே செய்துகொள்ளும் வார்த்தை அலங்காரங்களைப் பல இயக்குநர்கள் பாராட்டியிருக்கிறார்கள். வாழ்க்கையில் நான் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் ஏனோ தெரியவில்லை சீரியஸாகத்தான் இருக்கிறார்கள். எப்பவும் முகத்தையும் சீரியஸாக வைத்துக்கொள்வார்கள். எப்போது பார்த்தாலும் என்னமோ கப்பல் கவிழ்ந்து விட்டதுபோல் படுமோசமாகக் காட்சியளிப்பவர்களும் உண்டு. என் பேச்சாலும் எழுத்தாலும் இது போன்றவர்களைச் சீண்டி சிரிக்கவைப்பது எனக்குப் பிடிக்கும். ஒருநாள் எனது கார் ஓட்டுநர் கோவிந்து தலையைச் சொறிந்துகொண்டு வந்து நின்றான். “சொல்லப்பா என்ன விஷயம்” என்று கேட்டேன். ‘உங்களை நன்றாகத் தெரியும்னு சொல்லிகிட்டு காலைலேர்ந்து ஒருவர் வந்து வெயிட் பண்றார். ஏதோ வேணுமாம்’ என்றார். வந்தவர் என்னைப் பார்த்ததும் கண்கலங்கி தனது கஷ்டங்களை விவரித்து பணஉதவி கேட்டார். நான் மறுத்துவிட்டேன். வந்தவர் விடாப்பிடியாக ‘அம்மா நீங்க நினைச்சா உதவி செய்யலாமே. நான் ரொம்ப ஏழை. உங்களைப் போன்றவர்கள் உதவினால்தான் உண்டு’ என்றார். எனக்கு முகம் சிவந்துவிட்டது. அதாவது கார், பங்களாவோடு இருப்பதால் எனக்குக் கஷ்டமில்லை என்று நினைச்சிட்டீங்க. இதப் பாருங்க நான் பெரிய மரம். பெரிய காத்து. நீங்க சின்ன மரம். சின்ன காத்து புரியுதா? என்றேன். நான் கூறியதைக் கேட்டு வந்தவரால் ஏதும் பேசமுடியவில்லை. ஒருவர் கஷ்டப்படுகிறார் என்பதை அவரது கண்கள் காட்டிக்கொடுத்துவிடும். வந்தவர் நானே வியக்கும் அளவுக்கு நடிகர் என்பதைக் கண்டுபிடித்தேன். இவ்வளவு நேரம் சிறப்பாக நடித்தவரை வெறுங்கையுடன் அனுப்ப வேண்டாமே என்று அவர் கையில் கொஞ்சம் பணம் தந்து அனுப்பிவைத்தேன்” என்று பானுமதி கூறியபோது பல்லியைக் கண்டு தாம் பயந்து நடுங்குவதை ஒரு வேடிக்கைக் கதையாக அவர் எழுதியிருந்தது என் நினைவுக்கு வந்தது. எம்.ஜி.ஆருடன் கத்திச் சண்டை நான் ஆர்வத்துடன் ‘நீங்கள் முழுக்க முழுக்க நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறீர்களா? ’ என்று உரையாடலைத் தொடர்ந்தேன். “அதற்குத் தேவையே இல்லை. எவ்வளவு சீரியஸான கதாபாத்திரம் ஆனாலும் என்னால் லைட்டாக நடிக்க முடியும். அதை அப்படியே நகைச்சுவையாகச் செய்துவிட முடியும். என் சுபாவமே அதுதான் சார்” என்றார். ஒருமுறை எம்.ஜி. ஆரிடம் ‘நான் வேண்டுமானால் கத்திச் சண்டை போடட்டுமா? ’ என்று கேட்டீர்களாமே என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். “ஆமாம் எம்.ஜி.ஆர். போடும் கத்திச்சண்டையை எவ்வளவு நேரமானாலும் அலுப்பில்லாமல் பார்க்கலாம். அவ்வளவு சுறுசுறுப்பு. வீரம் அவர் முகத்தில் தாண்டவமாடும். அன்றைக்கும் அப்படித்தான் சண்டை நீண்டுகொண்டே போனது... எனக்கு அவசரமான வேலை இருந்தது... மிஸ்டர் எம்.ஜி.ஆர். நீங்கள் நம்பியாரோடு சண்டை போட்டு என்னைக் காப்பாத்தறதுக்கு ரொம்ப நேரம் ஆகும்போல் தோணுகிறது... என்கிட்டே கத்தியைக் கொடுங்கள். எனக்குக் கத்திச் சண்டை தெரியும். கொஞ்ச நேரத்தில் வில்லனைத் தோற்கடித்துவிடுகிறேன் என்றேன். செட்டில் எல்லோரும் சிரித்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர். உட்பட” என்று நினைவுகூர்ந்த பானுமதி குழந்தையைப் போலச் சிரித்தார். ஒருமுறை பிரபலமான சோப்பு கம்பெனிக்காரர்கள் அவரை அணுகித் தங்கள் சோப்புக்கட்டியின் பிரதாபங்களை எடுத்துக்கூறி, அதன் விளம்பரத்தில் நடித்துக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களாம். அவர்கள் கூறி முடிக்கும்வரை பொறுமையாக இருந்த பானுமதி அவர்களைப் பார்த்து, “இதோ பாருங்கள். என் ரசிகர்களை நான் ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன். நான் உங்கள் சோப்பை வாங்குவதில்லை! நான் உங்கள் சோப்பைப் பயன்படுத்துவதில்லை! உங்கள் சோப்பு எனக்குப் பிடிக்காது! போய்வாருங்கள்” என்று ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளிவிட்டாராம். பானுமதிக்குப் சோப்புப் போட்டு விளம்பரத்தில் நடிக்க வைத்துவிடலாம் என்று நினைத்த கம்பெனிக்காரன் விட்டால்போதும் என்று ஓடியிருக்கிறான். பானுமதிக்கு கோபத்திலும் எத்தனை நகைச்சுவை!