யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Lara

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  395
 • Joined

 • Last visited

Community Reputation

67 Good

About Lara

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Female
 • Location
  France
 • Interests
  பாடல்
 1. I let it fall, my heart, And as it fell you rose to claim it It was dark and I was over Until you kissed my lips and you saved me My hands, they were strong But my knees were far too weak To stand in your arms Without falling to your feet But there's a side to you That I never knew, never knew All the things you'd say They were never true, never true And the games you’d play You would always win, always win But I set fire to the rain Watched it pour as I touched your face Well, it burned while I cried 'Cause I heard it screaming Out your name, Your name When I lay with you I could stay there, close my eyes Feel you here forever You and me together nothing is better 'Cause there's a side to you That I never knew, never knew All the things you'd say They were never true, never true And the games you’d play You would always win, always win But I set fire to the rain Watched it pour as I touched your face Well, it burned while I cried 'Cause I heard it screaming out your name, Your name I set fire to the rain And I threw us into the flames When it fell, something died 'Cause I knew that that was the last time, the last time Sometimes I wake up by the door, That heart you caught must be waiting for you Even now when we're already over I can't help myself from looking for you I set fire to the rain Watched it pour as I touched your face Well, it burned while I cried 'Cause I heard it screaming Out your name, Your name I set fire to the rain, And I threw us into the flames When it fell, something died 'Cause I knew that, that was the last time The last time Let it burn Let it burn Let it burn
 2. நான் எழுதிய கருத்துகளுக்கு பதிலளிக்க முடியாமல் நழுவுவதற்கு இப்படியான கேள்விகளை தான் கேட்க வேண்டும்.
 3. உங்களுக்கு தமிழ் விளங்கவில்லை என்றால் மீண்டும் வாசிக்குமாறு கூறினேன். அதுவும் விளங்கவில்லை என்றால் என்ன செய்ய? சில வரலாற்று சம்பவங்களுடன் பொய் புரட்டுகளை இட்டுக்கட்டி சிங்கள பௌத்த தீவிரவாத கருத்துகளுடன் தமிழின எதிர்ப்பு கருத்தையும் உள்ளடக்கி வாசிக்கும் சிங்களவர்களையும் சிங்கள பௌத்த மனப்பான்மையில் இருக்க செய்து தமிழர்களை அழிக்க துணை போக செய்வதற்கான புத்தகம் தான் மகாவம்சம். புத்தர் இயக்கர்களை அகற்றி பௌத்த மதத்தை தோற்றுவிக்க நினைப்பது போல் காட்டுவதும் பௌத்தத்துக்கான போரை நடத்துவது போல் காட்டுவதும் சைவ கோவில்களை, சைவ சின்னங்களை அழித்து பௌத்த தூபிகள் அமைப்பதை நியாயப்படுத்துவதும் இன்னும் பலவும் சிங்கள பௌத்த மக்களையும் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆதரவாளர்களாக்குவதற்காக எழுதப்பட்டது. அதில் கூறப்பட்டவை போல் தான் இன்று இலங்கையில் நடக்கிறது. சிங்களவர்கள் இலங்கையில் உருவாக முன்னர் இயக்கர், நாகர் போன்றோர் பூர்வீக குடிகளாக இருந்தும் இலங்கையை சிங்கள பௌத்த நாடு போல் காட்டி தமிழர்களை அந்நியர்கள் போல் காட்டியதை பற்றி நீங்கள் வாய் திறக்க மாட்டீர்கள். ஏனைய காப்பியங்களை இங்கே ஏன் இழுக்கிறீர்கள். ஏனைய காப்பியங்கள் கற்பனைகளற்ற வரலாறு என நான் எங்கும் கூறவில்லையே.
 4. நான் வேறு ஏதும் காப்பியத்தை படித்து பார்த்து தான் மகாவம்சத்தை உண்மைக்கு புறம்பானது என சொல்கிறேன் என்று உங்களுக்கு யார் சொன்னது? ஒரு காப்பியத்தையும் வைத்து நான் எனது கருத்தை எழுதவில்லை. மகாவம்சம் உண்மைக்கு புறம்பானது என்றும் நான் கூறவில்லை. பௌத்தம் சார்ந்து, அரசியல் சார்ந்து உண்மைக்கு புறம்பான கற்பனைகளையும் உள்ளடக்கி எழுதியுள்ளார்கள் என்றே எழுதியுள்ளேன். தமிழ் விளங்காவிட்டால் திரும்ப வாசித்துப்பாருங்கள். சிங்கத்துக்கும் ஒரு இளவரசிக்கும் பிறந்தது தான் சிங்கபாகு, என்பது போன்ற கட்டுக்கதைகளை நீங்கள் வேண்டுமானால் நம்புங்கள். எனக்கு அந்த அவசியமில்லை. சிங்கபாகுவின் மகன் தானாம் விஜயன். பௌத்தம் வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை, எனவே இலங்கையின் பூர்வீக குடிகளான இயக்கர்களை அங்கிருந்து அகற்றி, இலங்கையில் பௌத்த மதத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் புத்தருக்கு தோன்றுகிறது என்பதெல்லாம் உண்மையா இட்டுக்கட்டியதா? உண்மையான புத்தரின் போதனைகள் வேறு. விஜயனும் 700 தோழர்களும் இலங்கைக்கு வந்து தான் இலங்கையில் சிங்கள இனம் உருவானது. அதற்கு முன் இயக்கர், நாகர் போன்றோர் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வந்தார்கள். இதற்கான ஆதாரங்களை தருவதும் மகாவம்சம். இந்தியாவில் அசோகர் பௌத்த சமயத்துக்கு மாறி ஆசியா முழுவதும் பௌத்தத்தை பரப்ப முயற்சித்து அதில் ஒரு பகுதியாக இலங்கைக்கும் மகிந்தன், சங்கமித்தையை அனுப்பி பௌத்தத்தை பரப்பினார். இப்படித்தான் சிங்கள பௌத்தம் உருவானது. அப்படியிருக்க இலங்கையை சிங்கள பௌத்த நாடு போலும் தமிழர்களை அந்நியர்கள் போலும் காட்டி தமிழின விரோத கருத்துகளை முன்வைப்பதும் பௌத்த தீவிரவாத கருத்துகளை முன்வைப்பதும் உங்கள் போன்றோருக்கு சில வேளை சரியாக படலாம். சிங்கள ஆய்வாளர்களே மகாவம்சத்தை ஒரு வரலாற்று நூலாக கருத முடியாது என்கிறார்கள், அதே நேரம் அதை முற்று முழுதாக புறக்கணிக்க முடியாது என்றும் கூறுகிறார்கள்.
 5. பௌத்த பிக்குகளால் குறித்து வைக்கப்பட்ட விபரங்களை, செவி வழி கேள்விப்பட்டவைகளை அடிப்படையாக வைத்து பௌத்த பிக்குவால் தொகுக்கப்பட்டதே மகாவம்சம். தொகுக்கும் போது பௌத்தம் சார்ந்து, அரசியல் சார்ந்து உண்மைக்கு புறம்பான கற்பனைகளையும் புகுத்தி தமக்கு சார்பாக எழுதியுள்ளார்கள். பிக்குகள் அதை தமக்கு சார்பாக தமிழர்களுக்கு எதிராக இன்னும் மாற்றியமைப்பார்களே தவிர தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் மாற்றியமைக்க மாட்டார்கள்.
 6. மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தை 4 கட்டங்களாக பிரித்துள்ளனர். 1. கடவத்த - மீரிகம 2. மீரிகம - குருநாகல் 3. பொதுஹெர - கலகெதர 4. குருநாகல் - தம்புள்ளை இதில் முதல் கட்டதிற்கு சீனாவுக்கும் இலங்கைக்குமிடையில் 2015 இலிருந்து பேச்சுவார்த்தை நடந்தும் சீனா கடன் வழங்க தாமதமானதால் தள்ளிச்சென்றது. பின் கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் தெரிவித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்ப முடிவாகி விட்டது போல். இது ஒன்றும் மோடி வந்து போன பின் நடப்பது அல்ல. இரண்டாம் கட்டத்தை உள்நாட்டு வங்கிகளின் உதவிகளுடன் இலங்கை செயற்படுத்துகிறது. மூன்றாம் கட்டத்திற்கு ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடந்து அதில் ஒரு நிலை எட்டப்படாமல் இழுபறியுடன் செல்வதால் அதையும் உள்நாட்டு வங்கிகளின் உதவியுடன் செயற்படுத்தினால் என்ன என்று யோசிக்கினம். ஆனாலும் ஐப்பானுடனான பேச்சுவார்த்தை தொடர்கிறது. நான்காம் கட்டத்திற்கு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தியா விரும்பினால் தட்டிப்பறிக்கலாம்.
 7. தமிழ் வர்த்தகர்களும் சிங்கள வர்த்தகர்களும் இணைந்து தனியாக வர்த்தக சங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியிருக்கின்றார். திருகோணமலை-குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ், சிங்கள வியாபார சங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எதிராக இருக்கின்ற, நாட்டை நேசிக்கின்ற, நாட்டின் முன்னேற்றத்தை விரும்புகின்ற முஸ்லிம் மக்களையும் நாம் எம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். தெற்காசியாவில் மிக முக்கியமான இடமாக கிழக்கு மாகாணமும் அதிலும் மிக முக்கியமாக திருகோணமலையும் காணப்படுகிறது. திருகோணமலையில் காணப்படுகின்ற இயற்கை துறைமுகத்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இது தொடர்பான கலந்துரையாடல் நாளை 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது மதத்தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இதிலே இது தொடர்பான விடயங்கள் பேசப்பட உள்ளது. இதேவேளை சீனாவிலுள்ள கூட்டுறவு வங்கி முறைமையை இலங்கையிலும் உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கப்பட்டால் வியாபாரிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வியாபாரிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து மூன்று தசாப்தங்களாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தங்களுடைய வியாபாரத்தை உயர்த்துவதற்காக எவ்வாறான வழிகளை செய்ய வேண்டும் எனவும் கலந்தாலோசிக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவான வியாபாரங்கள் செய்யக்கூடியவர்கள் முஸ்லிம்களாக காணப்படுகின்றார்கள். எங்களுக்கு வியாபாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. அவர்கள் நாங்கள் விற்கும் விலையை விட குறைவான விலைக்கு விற்கிறார்கள் எனவும் அதனால் அவர்களையே தேடி செல்வதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பியந்த பத்திரன, மற்றும் மொட்டு சின்னத்தின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தயானந்த ஜெயவீர மற்றும் திருகோணமலை நகர சபையின் பொதுஜன பெரமுன மொட்டு அணியைச் சேர்ந்த சுசந்த ஜெயலத், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். https://www.jvpnews.com/srilanka/04/224435
 8. திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு 1 பில்லியன் யென் கொடை வழங்குகிறது ஜப்பான் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, ஜப்பான் 1 பில்லியன் யென், நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது. ஜப்பானிய தூதுவர் ஷின்சோ அபேசியின் சிறப்பு பிரதிநிதியாக, சிறிலங்கா வந்துள்ள, ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகர், கலாநிதி ஹிரோரோ இசுமி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அலரி மாளிகையில் நடத்திய பேச்சுக்களின் போதே, இந்த நிதியுதவி பற்றி அறிவித்தார். சிறிலங்காவை நல்லதொரு நண்பனாக பார்க்கும் ஜப்பான், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பொருளாதார, கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் உறுதி பூண்டிருப்பதாக, கலாநிதி ஹிரோரோ இசுமி, இந்தச் சந்திப்பின் போது கூறினார். திருகோணமலை துறைமுகத்தை முன்னேற்றுவதற்கு 1 பில்லியன் யென், கொடையை ஜப்பான் வழங்கும் என்றும், ஜப்பானின் கியோடோ நகரைப் போன்று கண்டி நகரத்தை அபிவிருத்தி செய்ய ஜப்பான் உதவும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, கொழும்பு இலகு தொடருந்து திட்டம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம், கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலைய அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. http://www.puthinappalakai.net/2019/06/22/news/38657
 9. பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் சமல் ராஜபக்ஷவானால் எமது முழுமையான ஆதரவை வழங்குவோம். அதேபோல் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதென்றால் எம்மிடம் வெளிப்படையாக அதனை தெரிவிக்க வேண்டும். கோத்தாபய ராஜபக்ஷவுடன் பேசிப்பார்த்து எமது நிலைப்பாட்டுக்கு ஏற்றால்போல் இருந்தால் அவரை ஆதரிப்போம் என பிரதான எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறு இருப்பினும் இன்றுள்ள அரசியல் நெருக்கடிகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பற்ற சூழலில் உடனடியாக தேர்தல் ஒன்றுக்கு சென்று மாற்று அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். ஜனாதிபதி - பிரதமர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் குற்றங்கூறிக்கொண்டு தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டு வருவதால் இறுதியாக நாட்டுக்கே பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த ஆட்சியாளர்களை நீக்கி மீண்டும் எமது அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ஷவா அல்லது சமல் ராஜபக்ஷவா என்ற தெரிவுகள் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட்டது வருகின்ற நிலையில் அவ்வணியின் சிரேஷ்ட உறுப்பினர்களான வாசுதேவ நாணயகார, தினேஷ் குணவர்தன, குமார் வெல்கம ஆகியோரிடம் வினவிய போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். https://www.virakesari.lk/article/58916
 10. ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என நீதி மற்றும் சறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக எமது கட்சியில் இருக்கும் சிறந்த ஆளுமைகொண்ட சஜித் பிரேமதாச தெரிவுசெய்யப்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாகக் வேண்டும் என்று நாங்கள் இன்று நேற்று அல்ல, பல வருடங்களுக்கு முன்பிருந்தே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். வறிய மக்களின் கவலையை உணர்ந்து, மக்களுக்கு சேவை செய்ய முடியுமான தலைவராகவே நாங்கள் அவரை பார்க்கின்றோம் என்றார். இரத்தினபுரி கஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/58901
 11. நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அரசமைப்பின் 18, 19 ஆவது திருத்தங்களை முற்றாக நீக்குவது சிறந்ததென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 40ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டம், கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/18-19ஆவது-திருத்தங்களை-நீக்குவது-நல்லது/175-234492
 12. மைத்திரி தான் அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என கூறியதாக முன்னர் ஒரு செய்தி வந்தது. இப்ப அவர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகக்கூடும் என செய்தி. இரண்டு செய்திகளுக்குமிடையில் அவர் போட்டியாளராக இருந்தார் என்றால் இனியும் இருக்கமாட்டார் என்று என்ன நிச்சயம்? இறுதி முடிவு வந்தால் தான் தெரியும்.
 13. சந்தர்ப்பவாதம் காரணமாக இவ் உதவிகளை பெறவில்லை. இந்து குருக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டதால் பின்னணியில் இந்துத்துவா உள்ளது. இந்துத்துவா இலங்கை இந்துக்கள், பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தம், ஏனையோர் வெளியேறுங்கள் என முன்னர் கூறியிருந்தது. அது கிறிஸ்தவர்களையும் சேர்த்து தான். இந்துத்துவா ஆரியர்களை மட்டுமே இந்துக்களாக கருதுபவர்கள். சிங்களவர்களும் ஆரியர்கள். எனவே அவர்கள் ஆரியர்களாக இணைவார்கள். தமிழர்கள் இந்துக்களாக இருந்தாலும் அவர்களை அழிக்க தான் துணைபோவார்கள். இந்தியாவில் சிவசேனா உருவானதும் Bombay இல் தமிழர்களை தாக்கியது போல். இந்த பிக்குகள் தம்மை கதாநாயகர்களாக காட்டிக்கொண்டு ஒரு பக்கம் தமிழ் முஸ்லிம் பிரச்சினையை தூண்டிக்கொண்டு இன்னொரு பக்கம் வரும் தேர்தலில் தாம் ஆதரிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவார்கள். எனவே அவர்கள் தமிழர்களுக்கு உதவுவதற்கு இங்கு வரவில்லை.
 14. ஐதேக வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படலாம் என்ற ரீதியில் முன்பே கதை வந்தது. இப்ப கரு ஜயசூரியவும் தான் ஐதேக வேட்பாளராக முயல்கிறார். ரணில், சஜித், கரு.....
 15. சமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்கிற மாதிரியும் ஒரு கதை போகுது. ராஜபக்ச குடும்பத்தில் யார் வேட்பாளர் என்றே குழப்பமா இருக்கு. ஆனால் வரும் தேர்தலில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைத்து சிங்கள பௌத்த பெரும்பான்மையுடன் ஆட்சியை ஏற்படுத்த முயல்கிறார்கள். இது ராஜபக்ச குடும்பத்துக்கு வாய்ப்பாக அமையவும் கூடும்.