Jump to content

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1743
  • Joined

  • Last visited

  • Days Won

    7

P.S.பிரபா last won the day on October 9 2023

P.S.பிரபா had the most liked content!

Profile Information

  • Gender
    Female
  • Location
    Australia

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

P.S.பிரபா's Achievements

Veteran

Veteran (13/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Conversation Starter
  • Posting Machine Rare

Recent Badges

1.4k

Reputation

  1. //அரசியலில் துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் ரிஸ்க் எடுக்கும். ரிஸ்க் எடுக்கும் தரப்புகள்தான் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைக்கும். தலைமை தாங்கும். துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் வரலாற்றை உருவாக்குகின்றன. உட்கட்சிச் சண்டையை நீதிமன்றத்துக்கு கொண்டு போகும் கட்சிகள் வரலாற்றை உருவாக்குவதில்லை. அதுமட்டுமல்ல தேர்தல் வரும்பொழுது தமிழ்த் திரைப்படங்களில் கடைசி நேரத்தில் விசிலடித்துக் கொண்டு வரும் போலீஸ்போல அறிக்கை விடும் சிவில் சமூகங்களும் வரலாற்றைத் தீர்மானிப்பதில்லை.// இந்தப் பகுதியை வாசிக்கையில் எனக்கு 2009 வரை ரிஸ்க் எடுத்து வரலாறு படைத்த சமூகமாகவும் அதற்குப் பின் பிழை பிடிப்பதைத் தவிர வேறு ஒன்றையும் ஒழுங்காக செய்யாத, சுயநலமான ஒற்றுமையில்லாத ஒரு சமூகமாகவும் யாருக்கு என்ன நடந்தா என்ன இந்தியா என்ன செய்தால் என்ன ஆனால் நாங்கள் இந்திய சினிமாவை/ நட்சத்திரங்களை வளர்த்துவிடுவதை மட்டும் மாற்றமாட்டோம் எனக் கூறும் சமூகமாக மாறிவருகிறோமோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
  2. அவர்களை மட்டுமல்ல, அவர்களை நம்பும் வாக்காளர்களையும் தான் கூறுகிறேன். இவர்களை நம்பி ஒருதரம் வாக்குப் போட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள், ஒன்றும் நடக்கவில்லை. இரண்டாம் முறையும் செய்தார்கள் அப்பொழுதும் ஒன்றும் நடக்கவில்லை, ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களாகி தங்களது சந்ததிக்கு செல்வம் சேர்த்ததுதான் நடக்கிறது. இப்படி இவர்கள் தங்களுக்கு நன்மையோ அல்லது எம் இனத்திற்காக நன்மை செய்யவில்லை எனத் தெரிந்தும் வாக்குகளைப் போட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பும் வாக்காளர்களையும் தான் கூறுகிறேன்.
  3. இந்தியாவை நம்பியிருக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர்களை நித்திரையில் இருந்து எழும்பச் சொல்கிறது. ஆனால் அவர்கள் கண்களை திறந்துகொண்டு நித்திரை கொள்பவர்கள்.. அதனால் இந்த செய்தியும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுமில்லை. கடந்த காலத்தில் நடந்தவைகளில் ஏதாவது ஒன்றை மீளாய்வு செய்து குறைபிடிப்பதும், இந்திய சினிமாவின்(திரைப்படம்/ இசைநிகழச்சி) பின் அலைவதுமாக பெரும்பாலானோர் இருக்கையில் இந்த செய்தி என்ன சொல்ல வருகிறது என்பதை ஏன் நினைத்துப் பார்க்கப் போகிறார்கள்.
  4. இருக்கிற சட்டங்கள் கடுமையானவை இல்லை என்பதால்தான் பயமின்றி இந்த மாதிரி செயல்களை திரும்பத் திரும்ப செய்கிறார்கள் என நினைக்கிறேன். சிறையில் அடைத்தால், தண்டனை காலம் முடிய வெளியே வந்து விடுவார்கள், பாலியல் கல்வி பற்றி விழிப்புணர்வு இருந்தாலும் இந்த மாதிரி குற்றச் செயல்கள் குறையவேண்டும் என்றால் தண்டனை பற்றிய பயம் ஏற்படவேண்டும்.
  5. ஆண்டவனே கவலை கொள்ளும் செயல்களை செய்துவிட்டு, மனசாட்சி என்றதை மறைத்துவிட்டு ஆண்டவனுக்காகத்தான், ஆண்டவனது இருப்புக்காகத்தான் அதனை செய்தோம் என கொஞ்சமும் தயங்காமல் சொல்கிறோம். ஆண்டவனே மனிதர்களைப் பார்த்து பயம் கொள்ளும் அளவுக்கு எங்களது செயல்கள் உள்ளன.
  6. விழிப்புணர்வு மட்டும் போதாது, இந்த மாதிரி துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனையும் கடுமையாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் இவை குறைவடையும்.
  7. முன்பெல்லாம் நான் நினைப்பதுண்டு, தமிழர்களாகிய எங்களுக்கு, நாங்கள் நிம்மதியாகவும் கெளரவமாகவும், எந்தவித பயமுன்றி, எங்களது நிலத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உள்ளது என்று.. ஆனால் நிலமை/எண்ணம் அப்படி இல்லை என்பதைத்தான் இப்பொழுதுதெல்லாம் உணர்கிறேன். நாங்கள் இலங்கை பெளத்த நாடு என்பதை பிழையென கூறும் நாங்கள் இந்து/கிறிஸ்தவம் என பிரிந்து போகிறோம். ஒரே மதம் என்ற காரணத்திற்காக பிழையானவர்களையும் ஆதரிக்கிறோம். ஊரில் ஏற்கனவே கோயில்கள் இருக்க வீதிக்கொரு கோயிலை கட்டுகிறோம். அதே நேரம் கிளிநொச்சியில் உள்ள பின் தங்கிய கிராமத்தில் உள்ள பாடசாலைக்கு ஒரு கட்டிடத்தைக் கட்ட நிறைய யோசிக்கிறோம். புலம்பெயர்ந்த தேசங்களில் பல்வேறு சங்கங்கள். தென்னிந்திய நடிகர்களின் நிகழ்ச்சிகளையும், அவர்களது படங்களை விநியோகிக்கும் உரிமையை அனேகமாக செய்வது ஈழத்தமிழர், ஆனால் ஊரில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்க quality சரியில்லை, ticket விற்க முடியாது என பல காரணங்களை அடுக்குவோம். ஊரில் சமூக சீர்கேடுகளை(சிறுவர் துஷ்பிரயோகம் தொடக்கம் பல) ஒரு சாதாரன விடயமாக கடந்து போகிறோம். அதற்கு எதிரான நடவடிக்கைகளை கூட சேர்ந்து எடுக்க முடியாத நிலையில் தான் உள்ளோம். நாங்கள் ஊரில் வளர்ந்த காலத்தில் இப்படி நடைபெற்றதா? இல்லை. அந்த காலப்பகுதியில் இளமை வயதில் இருந்தவர்களின்(பெரும்பாலானோர்) பிள்ளைகள்தான் இன்றுள்ள இளைய சமூதாயம் என நினைக்கிறேன். அவர்கள்தான் இன்று சோம்பேறிகளாகவும் போதைக்கும் அடிமையாகி வருகிறார்கள். இன்று தமிழர்களாகிய எங்களது எண்ணங்கள் வேறு என்றே தோன்றுகிறது. எங்களிடம் அரசியல் பலமும் இல்லை ஆயுதபலமும் இல்லை, பொருளாதார பலமும்(?) இல்லை, மக்கள் பலமும் இல்லை. நிலமை இப்படி இருக்கையில் நிலாந்தன் தமிழ் மக்கள் தங்களது பேரம் செய்யும் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பேராசைப்படுகிறார்.
  8. எனக்கு இந்த திரியில் எழுதிய கருத்துக்களையும் வேறு திரிகளில் எமது சமூகம் பற்றிய இன்றைய நிலையைப் பற்றி எழுதப்பட்ட, எழுதும் கருத்துகளைப் பார்க்கையில் ஒரு விஷயம் மட்டுமே தோன்றுகிறது. புலிகள், அவர்களது நடவடிக்கைகள், தோல்விகள் யாவற்றையும் Jail free card போல அவரவர் தங்களது தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான். இது மட்டுமே எனக்கு விளங்குகிறது.
  9. இந்த தமிழரசுக் கட்சி எத்தனை பாரம்பரியமிக்க கட்சி என்றாலும் கூட எனக்கு இந்தக் கட்சியைப் பிடிப்பதில்லை. பொதுவாக ஒரு புள்ளிவிபரமோ அல்லது ஒரு புதிய செய்திட்டத்தையோ அல்லது அரசியல் சம்பந்தமான முடிவுகளோ எதுவானாலும் ஒன்றில் அதனை ஆதரிக்கவேண்டும் இல்லை நிராகரிக்கவேண்டும், ஆனால் நடுநிலையாக இருக்ககூடாது, ஏனெனில் இந்த நடுநிலைவாதிகள் அனேகமாக அதிகாரம் உள்ளவர் பக்கமே சாய்வார்கள் என நம்புகிறேன். அவர்களை நம்புவதும் எவ்வளவு தூரம் சரியென தெரியவில்லை. அப்படித்தான் இந்த தமிழரசுக் கட்சியை நான் பார்க்கிறேன். ஆரம்பத்தில் அவர்கள் எப்படியிருந்தாலும் அது இப்பொழுது உதவவில்லை அதுபோல இன்றுவரை இவர்கள் சந்தர்ப்பங்களை நழுவவிட்டவர்களாகவே நான் பார்க்கிறேன். இன்று மாவையின் சுயநலம் பற்றி மட்டுமே கதைக்கிறார்கள் ஆனால் இந்தக் கட்சியில் சுயநலமற்ற ஒருவர் என யாராவது இருக்கிறாரா?
  10. இவர் இந்திய கலைஞர்களை/விருப்பமில்லாதவர்களை மிகவும் கஷ்டப்பட்டு கூட்டி வந்தேன் etc etc என்றுவிட்டு இன்று அதற்கு வேறு விளக்கம் கொடுக்கிறார். முதலில் இவர் பொதுநிகழ்ச்சிகளில், மேடைகளில், மக்களுடன் எப்படி கதைக்கவேண்டும் என்பதை படிக்கவேண்டும்.. இல்லாவிட்டால் மேலும் மேலும் சிக்கலில்தான் மாட்டுவார். மேலும் எனது சகோதரியுடன் நான் நேற்று கதைத்த பொழுது அவர் கூறியது யாழ்ப்பாணத்தில் எத்தனை நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன.. ஏதாவதில் இப்படியொரு பிரச்சனை வந்ததா? இல்லை.. அப்படியிருக்க இவர்களுக்கு நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்த தெரியவில்லை. அதனால்தான் இந்தளவு பிரச்சனைகளும், இவர்கள் ஒன்றில் முற்றிலும் இலவசமாக அறிவித்திருக்கவேண்டும் இல்லை நிகழ்ச்சியை முழுவதும் கட்டணம் செலுத்தி பார்ப்பது போல செய்திருக்கவேண்டும். தரம் பிரித்து கட்டணம் பிரித்து திறந்த வெளியில் வைப்பதாக இருந்தால் அதற்கேற்ப மேடை தொடங்கி சகலதும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கவேண்டும். அப்படி ஒன்றுமே செய்யாமல், சரியாக திட்டமிடாமல் திறந்த வெளியில் வைத்து நிகழ்ச்சியை செதப்பி, பிழையை யாழ்ப்பாண சமூகத்தின் மேல் போடப்பட்டுள்ளது. இப்படியானவர்களினால்தான் பிரச்சனையே அதிகம் என்றார். மேலும் யாழ்ப்பாணத்தின் இன்றைய இளைஞர்களின் நிலை தெரியாமலா இன்றுவரை இருக்கிறார் எனவும் கேட்டார். அவர் கூறுவதும் சரியென்றே எனக்குத் தோன்றியது. இப்பொழுது சில காலமாக இந்த நடிகநடிகைகளைக் கொண்டாடுவது ஈழத்தமிழர் மத்தியில்( ஊரிலும் வெளிநாடுகளிலும்) அதிகரித்து வருகிறது. பொழுதுபோக்குகள் தேவைதான் ஆனால் இந்த மாதிரி இந்திய நடிகநடிகைகளைக் கொண்டாடுவது, பின் அதனை social mediaகளில் பகிர்வது எல்லாம் ஒரு சாதாரன நடவடிக்கையாக மாறிவருகிறது. இது எத்தனை தூரம் எமது சமூகத்திற்கு நல்லது? இது மாதிரியான நிகழ்வுகள் மாதத்திற்கு ஒன்று அவசியமா? ஈழத்து கலைஞர்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக இந்தமாதிரி நடிகநடிகைகளின் பின் அலைந்து திரிவது சரியா? இந்த புலம்பெயர்ந்த தமிழ் தொழிலதிபர்கள்/மாணவ சங்கங்கள் கொஞ்சம் சிந்திக்கவேண்டும்..
  11. நான் இந்த நிகழ்ச்சியின் சில குறுகிய காணெளிகளை எனது நட்புவட்டத்தில் பகிரப்படும் பொழுது பார்த்திருக்கிறேனே தவிர முழுமையாக பார்த்தது இல்லை. ஆனாலும் பேசப்படும் தலைப்புகள் சமூகத்தில் பேச தயங்கும் தலைப்புகளும், விழிப்புணர்வுகளுமாகவே உள்ளதை அவதானித்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் வந்த சில தலைப்புகளில் பேசும் இன்றைய இளையதலைமுறையின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை பார்க்கும் பொழுது வியப்பாகவும் சிலருடைய கருத்துகளை கேட்கும் பொழுது சலிப்பு ஏற்படுகிறது.. ஆனாலும் அதனைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு இது சரியா பிழையா என தன்னைத் தானே கேட்கமுடியும் என நம்புகிறேன். இப்பொழுதெல்லாம் தொடர் தொலைகாட்சி நாடகங்களைவிட இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பரவாயில்லை என நினைப்பதுண்டு. அது மட்டுமல்ல சில நேரங்களில் சில பிரச்சனைகளை வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் பல நன்மைகள் உள்ளது என நம்புகிறேன்.
  12. //வேலையில்லாதவர்களின் பட்டியலைப் பார்த்தால் அவர்களில் உயர்கல்வி படித்தவர்கள் அதிகம்; ஆரம்பக்கல்வி பயின்றவர்கள் வீதம் குறைவு// 2006 ஆண்டில் இந்த கட்டுரை எழுத்தப்பட்டுள்ளது.. இன்றும் இந்த நிலைதான் இலங்கையில் இருக்கும். எங்களது சமூகம், எந்த நாட்டில் போய் வாழ்ந்தாலும் குறிப்பிட்ட துறைகளைத்தான் இன்னமும் அதிகளவில் தெரிவு செய்கிறார்கள் ஆனால் வேறு சமூகங்கள், அந்தந்த நாட்டில் இருக்கும் பல்வேறு துறைகளில் தமக்கு விருப்பமானதை, அன்றைய நிலையில் தேவை அதிகம் உள்ள துறைகளை தெரிவு செய்கிறார்கள், முன்னேறுகிறார்கள். அரசியல், சிறிய நடுத்தர கைத்தொழில், விவசாயம் தொடங்கி விளையாட்டு வரை ஈடுபடுகிறார்கள். ஆனால் எங்களது சமூகம் மிகமிக குறைவானவர்கள் ஈடுபடுகிறார்கள். அதே போல இங்கே ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு, உளவியல் ஆலோசகர்களுக்கு தட்டுப்பாடு. எங்களது சமூகத்தைச் சார்ந்தவர்கள் இந்த துறைகளைத் தெரிவு செய்வதில்லை காரணங்கள் இந்த நாட்டு பிள்ளைகளுக்கு படிபிக்க முடியாது, ஆசிரியர்களை மதிக்கமாட்டார்கள் etc etc.. ஆனால் உண்மையான காரணங்கள் வேறு. இங்கேயே இப்படி இருக்கும் பொழுது இலங்கையில் பல்வேறு கற்கை நெறிகளை அறிமுகப்படுத்தினாலும் பாரம்பரிய துறைகளைவிட்டு வேறு படிப்பார்களா? இல்லை என்றுதான் நினைக்கிறேன். அப்படி படித்து அந்தப் பாரம்பரிய துறைகளில் பட்டப்படிப்பை முடித்தாலும் கூட அவர்கள் அனைவருக்கும் வேலை வழங்ககூடிய வாய்ப்புகள் உள்ளதா? இல்லை..
  13. இந்த NCERT எத்தனையாம் வகுப்பினைக் குறிக்கிறது? ஆனாலும் டார்வினின் பரிமாணக் கோட்பாட்டை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கியதற்கான உண்மைக் காரணம் பாடச்சுமையென நான் நினைக்கவில்லை
  14. நானும் கண்டிருக்கிறேன்..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.