Jump to content

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1756
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Posts posted by P.S.பிரபா

  1. //வேலையில்லாதவர்களின் பட்டியலைப் பார்த்தால் அவர்களில் உயர்கல்வி படித்தவர்கள் அதிகம்; ஆரம்பக்கல்வி பயின்றவர்கள் வீதம் குறைவு//

    2006 ஆண்டில் இந்த கட்டுரை எழுத்தப்பட்டுள்ளது.. இன்றும் இந்த நிலைதான் இலங்கையில் இருக்கும்.  

    எங்களது சமூகம், எந்த நாட்டில் போய் வாழ்ந்தாலும் குறிப்பிட்ட துறைகளைத்தான் இன்னமும் அதிகளவில் தெரிவு செய்கிறார்கள் ஆனால் வேறு சமூகங்கள், அந்தந்த நாட்டில் இருக்கும் பல்வேறு துறைகளில் தமக்கு விருப்பமானதை, அன்றைய நிலையில் தேவை அதிகம் உள்ள துறைகளை தெரிவு செய்கிறார்கள், முன்னேறுகிறார்கள். அரசியல், சிறிய நடுத்தர கைத்தொழில், விவசாயம் தொடங்கி விளையாட்டு வரை ஈடுபடுகிறார்கள். ஆனால் எங்களது சமூகம் மிகமிக குறைவானவர்கள் ஈடுபடுகிறார்கள். அதே போல  இங்கே ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு, உளவியல் ஆலோசகர்களுக்கு தட்டுப்பாடு. எங்களது சமூகத்தைச் சார்ந்தவர்கள் இந்த துறைகளைத் தெரிவு செய்வதில்லை காரணங்கள் இந்த நாட்டு பிள்ளைகளுக்கு படிபிக்க முடியாது, ஆசிரியர்களை மதிக்கமாட்டார்கள் etc etc.. ஆனால் உண்மையான காரணங்கள் வேறு. இங்கேயே இப்படி இருக்கும் பொழுது இலங்கையில் பல்வேறு கற்கை நெறிகளை அறிமுகப்படுத்தினாலும் பாரம்பரிய துறைகளைவிட்டு வேறு படிப்பார்களா? இல்லை என்றுதான் நினைக்கிறேன். அப்படி படித்து அந்தப் பாரம்பரிய துறைகளில் பட்டப்படிப்பை முடித்தாலும் கூட அவர்கள் அனைவருக்கும் வேலை வழங்ககூடிய வாய்ப்புகள் உள்ளதா? இல்லை.. 

     

    • Like 2
  2. இந்த NCERT எத்தனையாம் வகுப்பினைக் குறிக்கிறது? ஆனாலும் டார்வினின் பரிமாணக் கோட்பாட்டை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கியதற்கான உண்மைக் காரணம் பாடச்சுமையென நான் நினைக்கவில்லை

    • Thanks 2
  3. 20 hours ago, ஈழப்பிரியன் said:

    கோப்பாயிலிருந்து உரும்பிராய் மருதனாமடம் ஊடாக பயணிக்கும் போது சாலையின் இருபக்கங்களிலும் தேக்கமரங்கள் வரிசையாக காணப்பட்டன.

    நானும் கண்டிருக்கிறேன்..

    • Like 1
  4. இந்தக் காணெளியில் offshore வாய்ப்புகளைப் பற்றியும் கூறுகிறார்கள். உண்மையில் நாங்கள் வட்டத்தை விட்டு யோசிக்காதமையால் பல offshore வாய்ப்புகளை விட்டுவிட்டோம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில் கடந்த சில மாதங்களாக எனது வேலையில் offshore சென்ற பிரிவில் ஒரு பகுதியினருக்கு பயிற்சி அளித்து வருகிறேன், அவர்களுடன் கதைக்கும் பொழுது எனக்குத் தோன்றுவது எங்களால் ஏன் இந்தமாதிரி offshore வேலை ஒப்பந்தங்களை எடுக்கமுடியாமல் போய்விட்டது என்று.

    நாட்டுப் பிரச்சனை ஒரு காரணமாக இருந்திருந்தாலும் கூட நாங்கள் எப்பொழுதும் ஒரு சில தொழில்களைத் தவிர மற்றொன்றையும் யோசிப்பதில்லை என்பதும் பல offshore வாயப்புகளை விட காரணமாக இருந்திருக்கும். 

    இந்த கருத்தரங்கில் கூறியது போல குறுகியநோக்கில் அல்லது குறுகியவட்டத்திற்குள் மட்டுமே யோசிக்காமல் எம்மைச்சுற்றியுள்ள வளங்கள்/தேவைகளுக்கு ஏற்ப எமது முயற்சிகளை தொடங்கவேண்டும். 

    காணெளியில் சில நல்ல முயற்சிகளை தொடங்கியுள்ளவர்களையும் பார்க்க முடிந்துள்ளது. 

    உடனடி இலாபம் என்பது நிலையில்லாத ஒன்று என்பதை விளங்கி, தொடங்கியுள்ள முயற்சிகளில் வளரவேண்டும். 

    • Like 3
  5. நான் படம் பார்க்கிறேனோ இல்லையோ தெரியாது ஆனால் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் என்னைக் கவர்ந்துள்ளன. 

    “காலு மேல காலு போடு இராவணன் குலமே” மற்றும் “ரயிலின் ஒலிகள்” இரு பாடல்களும் கேட்க நன்றாக உள்ளன. 

     

     

     

    • Like 1
  6. On 28/1/2024 at 09:17, ரஞ்சித் said:

     

    முல்லைத்தீவு நோக்கிய பயணத்தில் நான் கண்ட இன்னொரு முக்கியமான இடம் புலிகளால் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்த தேக்கங்காடு. காட்டுவளத்தைக் காக்கவும், எதிர்காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கென்றும் புலிகளால் தாயகத்தின் சிலவிடங்களில் இவ்வாறான காட்டு வளர்ப்பு முன்னெடுக்கப்பட்டு வந்தது. இச்சாலையூடாகப் பயணிக்கும்போது இதனழகைத் தரிசிக்க முடியும்.

     

    உண்மை, நீங்கள் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தையும் கடந்து போயிருப்பீர்கள் என நம்புகிறேன். அந்த இடத்தைத் சுற்றியுள்ள தேக்கு மரங்களைப் பார்த்த பொழுது எனக்குள் ஏற்பட்ட உணர்வு ஒவ்வொரு மரமும் ஒரு மாவீரரது உயிர் என்றே.. 

    எனக்கும் உங்களைப் போல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது, நீங்கள் போன இடங்களுடன் மணலாறு, தென்னமாவரடி வழியாக திருகோணமலைக்குப் போயிருந்தேன், இந்த இடங்களை எல்லாம் பார்த்த பொழுது, காற்றை சுவாசித்த பொழுது ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகளால் என்னால் விபரிக்கமுடியாது..

    அந்த இடங்களில் மனம் பலரைத் தேடியது.. இல்லை என அறிவுக்குத் தெரியும் ஆனாலும் இப்படி நடந்திருக்குமோ அப்படி இருந்திருப்பார்களோ என்ற எண்ணங்கள் ஏற்பட்டதை தடுக்க முடியவில்லை. 

    நீங்கள் உங்களது உணர்வு கலந்து எழுதிய உங்களது பயண அனுபவம், எனது கடந்த அனுபவத்தை மீண்டும் நினைக்கவைத்துள்ளது. 

    உங்களது பயண அனுபவத்தையும், நீங்கள் சென்றிருந்த இடங்களில் நடைபெற்ற வரலாற்று சம்பவங்களையும் தொடர்பையும் பகிர்ந்தமைக்கு நன்றி. 

    • Thanks 1
  7. எனக்கும் இதனைப் பார்க்கும் பொழுது ஒரு mixed emotionsதான் வருகிறது. 

    பார்வையாளர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையாக இருந்திருக்கும். இரண்டாவது, இப்படி நிறைய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு அரைகுறையாக நிறுத்தப்பட்டதால் நம்பிக்கையின்மையும் காரணமாக இருக்கலாம். மேலும் இந்த வீடியோ கூட அங்கே நடந்த முழுவிடயத்தையும் கூறவில்லை என்பதால் ஆர்வமின்மை என கூறலாமா தெரியவில்லை. 

    திரு ராஜ் ராஜரட்ணத்திற்கு கூட வடக்கு கிழக்கு தமிழர்கள் எதில் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள், அதற்கு என்ன காரணம் என்பதும் கூட கட்டாயம் விளங்கி இருக்கும் என நம்புகிறேன். ஆனாலும் அவர் ஆரம்பிக்க நினைக்கும் விடயங்கள் பயனளிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

    • Like 4
  8. 21 hours ago, கிருபன் said:

    . ஒருவர் மன்னிப்புக் கேட்டாக வேண்டியதில்லை. ஆனால் எந்த நிபந்தனையுமின்றி, உள்நோக்கமின்றி, விதிவிலக்கின்றி தேவைப்படாத சூழ்நிலைகளிலும் கூட, மனிதர்கள் மன்னிப்புக் கேட்பவர்களாக இந்த உலகில் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.”

    இந்த மாதிரி மன்னிப்புக் கேட்டால் மன்னிப்பு கேட்பவர்களை மற்றவர்கள் முட்டாளாகத்தான் நடத்துவார்கள் ஏனெனில் அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதை மற்றவர்கள் விளங்கிக் கொள்ள விரும்புவதில்லை. ஆகையால் இப்படி மன்னிப்புக் கேட்பவர்கள் மேலும் காயப்படுத்தப்படுவார்கள். 

     

    ஆனாலும் எனக்கு இந்தக் கதை பல்வேறு காரணங்களால் மிகவும் பிடித்திருக்கிறது. 

     

    இணைத்தமைக்கு நன்றி. 

     

    • Like 1
  9. இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டு வரும்பொழுது எனக்கு முதலில் தோன்றியது Interstellar படத்தின் கதை போல இருக்கிறதே என்று. நல்லதொரு படம். விண்வெளி, கருந்துளை பற்றி இங்கே எழுதியதை படத்தில் பார்க்கும் பொழுது உணரமுடியும்

    • Like 1
  10. இன்னொரு விடயத்தையும் அவதானிக்கலாம்: புலமைப் பரீட்சை தொடங்கி உயர்தர பரீட்சையில் உயர்ந்த பெறுபேறு பெற்ற மாணவர்களின் புகைப்படங்களைப் போட்டு பாடசாலைகளும் தனியார் வகுப்புப் நிறுவனங்களும் தமக்கான விளம்பரத்தைத் தேடிக் கொள்கிறார்கள். 

    பரீட்சைப் பெறுபேறு வரும் காலங்களில் ஊரில் நின்றால் பத்திரிகைகளின் பெரும் பகுதியை இந்தப் பாராட்டு விளம்பரங்கள் நிரப்பிவிடும். 

    முன்பை விட இந்த மாதிரியான போக்கு சற்றுக் கூடிவிட்டது எனலாம்.

    பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களின் உளவியலை ஒருவருமே சிந்திப்பதில்லை. இந்த நிலை முன்பும் சரி இப்பொழுதும் சரி மாறவேயில்லை என்பதுதான் உண்மை. 

    • Like 2
  11. On 9/1/2024 at 03:30, Kavi arunasalam said:

    காலியில் இருந்த பராமரிப்பு பருத்தித்துறை (முனை)யில் எங்களிடம் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு பனை, ஒரு வெளிச்ச வீடு,  இவை மட்டுந்தான் எங்களிடம் இருக்கின்றன.

    பருத்தித்துறையில் இருக்கும் வெளிச்சக்கூடைச் சுற்றி இராணுவ முகாம்தானே உள்ளது, பிறகு எப்படி பராமரிக்க முடியும்.

    பயணக்கட்டுரை அருமை.. ஊர்ப் படங்களைப் பார்க்க திரும்பவும் போகத் தூண்டுகிறது. 

    • Like 1
  12. யாதும் யாவரும்.. பல அவுஸ்திரேலிய தமிழர்களை சிந்திக்க வைக்கும் ஒரு திரைப்படம். படத்தைப் பார்க்கும் எம்மவருக்கு சங்கடங்களை தரும் சில விடயங்கள் உள்ளது என்பதால் கட்டாயம் இருக்கையில் இருப்புக் கொள்ளாமல் அசெகளியப்பட்டிருப்பார்கள் என்பது நிச்சயம். 

    என்னைப் பொறுத்த வரை இயக்குனர் தைரியத்துடன் தனது சிந்தனையை தெளிவாக கூறியுள்ளார். இதுதான் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு என்று கூறி பிரசங்கம் செய்யவில்லை, ஆனால் எங்களது சமூகத்தில் மறைக்கப்பட்ட/மறைக்க விரும்பும் சில பிரச்சனைகளுக்கு தனது தீர்வு இது என்பதை மிகவும் அழகாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார். 

    3 முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்களின் வாழ்க்கையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் சிந்தனையையும் இன்றைய அவுஸ்ரேலிய தமிழர்களின் வாழ்வியலையும் அருமையாக கூறியுள்ளார். 

    காதல் என்பது எந்த வயதிலும் வரக்கூடியது. 60 வயதில் ஒருவர் தனது தனிமையை போக்க ஒரு துணையை தேடினால் அது நகைப்புக்குரிய விடயமல்ல.

    அதே போல வீட்டில் மனைவி/தாய் ஹிட்லர் போல இருந்தால் கணவன்/பிள்ளைகள் எத்தனை விடயங்களை மறைத்து இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதையும் கூறுகிறது யாதும் யாவரும்.. 

    இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், அவர்களை அவர்களது தனித்துவ பண்புகளுக்கேற்றவாறு மதிக்கவேண்டும் ஆனால் நீங்கள் ஊருக்காகப் போலியாக வாழத்தொடங்கினால் உங்களது மகிழ்ச்சி, உங்களது தனித்துவம், உங்களது நிம்மதியை எல்லாவற்றையும் இழக்கிறீர்கள். ராம் என்ற கதாபாத்திரம் மனதை வாட்டியது உண்மை. அதே போல விக்ரமின் தாயாக வரும் பெண்மணியைப் போன்றவர்களை அதிகம் பார்த்திருப்போம். எங்களில் பலர் மீனாட்சி கதாபாத்திரத்தை எத்தனை தூரம் ஆதரிப்பார்கள் எனத் தெரியவில்லை. 

    படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை நகர முடியாமல் அப்படியே கட்டிப்போட்ட மாதிரி திரைக்கதை. சில இடங்களில் என்னை மறந்து வாய்விட்டு சிரிக்க வைத்த கதைவசனங்கள்.. படத்தின் பிண்ணனி இசை, காட்சியமைப்புகள், கதாபாத்திரங்களின் தெரிவு, அவர்களின் நடிப்பு என அத்தனையும் மிகவும் கவனமெடுத்து படமாக்கப்பட்டுள்ளது இந்த யாரும் யாவரும். 

    இயக்குனர், இளையோரின் திறமையை உணர்த்த விரும்பியது மட்டுமல்ல, அவர்களுக்கும் எதிர்காலத்தில் இந்த மாதிரி முயற்சிகளில் ஈடுபடவும் முன்மாதிரியாக இருக்கிறார். 

    படத்தில் நிறைய இளையோர் நடித்திருக்கிறார்கள்.  அதே போ யதுஷன் என்ற இளைஞர் அருமையான இரு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.. அந்த இசையில் உங்களை மறந்துவிடுவீர்கள் என்பது நிச்சயம். 

    அதுமட்டுமல்ல பருத்தித்துறையை சேர்ந்த நிதர்ஷன் என்பவருக்கும் visual effects சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறார். 

    இப்படி ஊரில் உள்ள இளையோரையும் இங்கே உள்ளோரையும் சேர்த்து ஒரு அழகான படைப்பை தந்திருக்கிறார் இயக்குனர். 

    என்னைப் பொறுத்தவரை ஊரிலும் புலம் பெயர்ந்த தேசங்களிலும் பல திறமையான தமிழ்க் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒழுங்கான தளத்தை உருவாக்க வேண்டுமானால் எங்களது மக்களின் தமிழ்ப் படங்களை வெற்றிப் பெறச்செய்நவேண்டும். அப்பொழுதான் தயாரிப்பாளர்களும் விநியோஸ்தர்களையும் கவரமுடியும். அப்படி செய்தால்தான் எங்களது கலைத்துறையும் வளரும். 

    படத்தில் மைனஸ் இல்லாமலும் இல்லை. இருக்கிறது ஆனால் அதனை நாங்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு அனுகுகிறோம் என்பதில் வேறுபடும். 

     

     

    • Like 4
  13. Toxic mediaவினால் அதிகம் பாதிக்கப்படப் போவது சிவகார்த்திகேயன்தான். 

    சிவகார்த்திகேயன் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் இந்தத் துறையில் முன்னேறிய ஒருவர். இவரது வருகை பல வாரிசு நட்சத்திரங்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்திருக்காது. அதன் விளைவாகவே இதனை நான் பார்க்கிறேன். 

    கொஞ்ச காலத்திற்கு முன் இந்திசினிமாவைச் சேர்ந்த சுஷாந் சிங் ராஜ்புத் கூட தற்கொலை செய்து கொண்டார், அதற்கான காரணம் கூட இந்தி சினிமாவை ஒரு பிரிவினரே ஆதிக்கம் செலுத்துவதும் அந்த பிரிவினருக்குப் பிடிக்காத கலைஞர்களுக்கு வரும் தடங்களல்கள், தோல்விகளால் பலர் கஷ்டப்படுவதும் பேசுபொருளாக இருந்தது. அதனைப் போலவே இதுவும் இருக்க வாய்ப்புண்டு. 

    இமான் கூட உண்மைதான் கூறுகிறார் என எப்படி நம்ப முடியும்?.

    • Like 1
  14. On 17/10/2023 at 05:02, Kavi arunasalam said:

    அதேதான். அவரேதான் வைரவர். படத்தை இணைத்திருக்கிறேன். பாருங்கள். காவல் தெய்வத்தையே வெளியே வரவிடமால் உள்ளே எப்படிப் பூட்டி வைத்திருக்கிறார்கள் என்று. e60cab42-b267-4a03-80d8-f5adfa8a21ba.jpg

    தகவலுக்கு நன்றி. 

    கடவுள்களுக்கும் சுதந்திரம் இல்லைத்தான்.

  15. 2 hours ago, Kavi arunasalam said:

    எங்கள் கிராமத்தில் வைரவர் கோவில் உருவாக வள்ளிப்பிள்ளை என்பவரின் கனவில் வைரவர் வந்து சொன்னதே காரணமாக இருந்தது. வெள்ளைக்காரனிடம் இருந்து இலங்கை சுதந்திரத்தை பெறுவதற்கு முன்னர் நடந்த சம்பவம் அது.

    இந்த முதலியாரின் வாசிகசாலைக்கு அருகில் ஒரு கோயிலையும் கண்டதாக நினைவு.. ஆனால் எந்தக்கடவுளின் கோயில் என பார்க்கவில்லை.. 😄

  16. 22 hours ago, ragaa said:

    இது வருத்ததிற்குரிய நிகழ்வு. ஆஸ்திரேலியாவின் பூர்வீக குடிகளின் உரிமையை இப்பவந்த குடியேறிகள் தீர்மானிப்பதென்பது அபத்தமானது. அதை வெள்ளகளை விட்டு மற்றவர்கள் செய்து காட்டியிருக்கலாம், ஆனால் அவர்களும் NO வை தெரிவு செய்திருக்கிறார்கள். எனது vote எப்போதுமே YES தான். 

    பூர்வீக குடியை சேர்ந்த பலர் Reconciliation is dead என்றே கருதுகிறார்கள். எனக்கு சில  பூர்வீக்குடிகளின் பிரதிநிதிகள் கூட இதற்கு எதிர் என்பது கவலையளித்தது.

    அதே போல இப்பவந்த குடியேறிகளும் No என வாக்குப்போட்டதையும் சில தேர்தல் தொகுதிகளின் விரிவான முடிவுகளை பார்க்கும் பொழுது விளங்கியது. 

    13 hours ago, goshan_che said:

    உண்மையில் இது வெறும் ஒரு ஆலோசனை சபையை அமைக்கும் முயற்சி மட்டுமே. அதை கூட ஏற்க மனம் இல்லை.

    ஆனால் ஒண்டுங்கும் உதவாத பிரிடிஷ் அரச குடும்பம் அவுசுக்கு வேணுமா எண்டு கேட்டால் யெஸ் வெல்லும்.

    பூர்வீக குடிகளின் உரிமைகளை, அவர்களது வாழ்க்கையை பாதிக்கும் விடயங்களை கேட்பதற்கோ குறைந்தபட்சம் ஒரு ஆலோசனை சபையைக்  கூட முன்மொழிய அவுஸ்ரேலியர்கள் தயாரில்லை என்பது கசப்பான உண்மை. 

    • Like 1
  17. நேற்று இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா, இமாமிற்கு பந்தை வீச முதல் பந்துக்கு எதோ சொல்வது போல இருந்தது.. மந்திரம் ஏதாவது சொல்வது போல காட்டுகிறாரோ (ரசிகர்களை ஏத்திவிட) என நினைத்தேன்.. இப்பொழுதுதான் விளங்கிறது ஏன் என்று..இமாமிற்கு போதாத காலம், ஹர்திக் பாண்டியாவின் அந்த பந்தில்தான் அவுட்டாக வேண்டும் என்பதும்.. 

    விளையாட்டில் மதமும் அரசியலும் இல்லாது இருக்கவேண்டும்.. இதில் இலங்கை, பாகிஸ்தான் இந்தியா போன்றவை விதிவிலக்கு. 

     

  18. மனிதநேயம் என்பது சுயநலமாக பயன்படுத்தப்படவேண்டும் என்பது அவர்களது மரபணுவில் உள்ளது என்பதால்தான் இன்று காஸாவில் பாலஸ்தீனியர்களைக்கும் நடக்கும் செயலை ஒரே இனத்தைத்/மதத்தை சேர்ந்தவரகள் கண்டும் காணாதது போல இருக்கிறார்கள். 

    கடவுள் என இவர்கள் வழிபடுபவர் கூட பக்கச்சார்பாகத்தான் ஜசாக்கையும் இஸ்மாயிலையும் நடத்தியுள்ளார். இன்னமும் எத்தனை காலத்திற்கு இதன் பலனை அனுபவிக்கப்போகிறோமோ தெரியாது😔

     

    • Like 2
  19. IMG-1021.jpg
    The Whispers!!! -

    பெயருக்கேற்றவாறு அவர்களின் குரல் இன்னமும் மெதுவாகத்தான் உள்ளது. சிட்னி Obera House இருக்கும் இடத்தில் அவுஸ்ரேலிய பூர்வீக குடிகளின் இந்த Whispers உள்ளது. இந்த இடத்தில் முன்பு வாழ்ந்த அவர்களுடைய உணர்வை, நம்பிக்கையை இந்த Whispers குறிக்கிறது.. 

     

    • Like 3
  20. மிகவும் ஏமாற்றத்தை அளித்த முடிவு இது. பூர்வீகக்குடிகளின் குரல்களை பாராளுமன்றத்தில் நிரந்தரமாக ஒலிக்கவிட்டால் தமக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயத்தை தூண்டும் விதமாக பிரச்சாரம் செய்ததும், சில அபரிஜீன மக்கள் பிரிவுகள் இதனை ஆதரிக்காததும் சேர்ந்து இதனை தோல்வியடையச் செய்துவிட்டது. 

    நாளை பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற இருக்கும் பேரணியில் இவர்களும் அதிகமாக சேர்ந்து கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில் இதனை இப்பொழுதுள்ள பூர்வீக்குடிகளின்  சமூகம் இலகுவில் ஏற்காது என்பதால் closing the gap என்ற நிலையிலும் மாற்றம் வரலாம். 

    ஆனாலும் மிகவும் ஏமாற்றம் அளித்த முடிவு. 

    • Like 1
    • Sad 1
  21. On 6/10/2023 at 01:29, ஈழப்பிரியன் said:

     

    பாடல் இனிமையாக உள்ளது.

     

     

    On 6/10/2023 at 14:17, Kavi arunasalam said:

    பாடலாசிரியர், பாடியவர், கலை வடிவமைப்பு என்று மூன்று பெண்கள் இணைந்அது ழகான பாடலைத் தந்நிருக்கிறார்கள்.பாடலுக்கு  நடிப்புக் கூட பெண்கள்தான். பாராட்டி வரவேற்கவேண்டிய படைப்பு. இணைப்புக்கு நன்றி P.S.பிரபா

     

    On 6/10/2023 at 16:05, தனிக்காட்டு ராஜா said:

    பாடல் நன்றாக இசையுடன் கோர்த்து எம்மையும் இழுத்து செல்கிறது 

    கருத்துக்களுக்கு நன்றி. 

    உண்மைதான் பாடல் இனிமையாகவே உள்ளது.. பாடலை எழுதியவர் தாய் அன்பை உணர்ந்துதான் எழுதியிருக்கிறார் என்பதும் உண்மை.. 

    படமும் ஒரு எதிர்பார்ப்பை எங்களவர்களிடையே தந்துதான் உள்ளது.. பார்ப்போம்😊

  22. யாழ்ப்பாணத்தில் மறக்க முடியாத ஒரு இடம்.. ஆனால் பழைய பூபாலசிங்கம் புத்தகசாலை நினைவில் இன்று அங்கே போனால் ஏமாற்றமே கிடைக்கும்.. 

    யாழ்ப்பாண bus standற்குப் பக்கத்தில் இருப்பதும் சரி.. நல்லூர் கோயிலுக்கு அருகில் இருப்பதும் சரி.. புத்தகங்களை அவற்றின் சரியான பிரிவுகளுக்குள் இருக்காது. கொழும்பில் வெள்ளவத்தையில் ஒன்று இருந்தது.. ஆனாலும் எதிர்பார்த்தளவிற்கு புத்தகங்களின் வகைகள் இல்லை. 

    யாழ்ப்பாணத்தில் ஆசீர்வாதம் புத்தகசாலை கூட அப்படித்தான்.. பெரிய கடை ஆனால் புத்தகங்களைப் அதற்கேற் வகையில் அடுக்கி பாதுகாக்கத் தெரியவில்லை. அங்கே வேலைபார்ப்பவர்களுக்கும் தேடித் தரவோ, இல்லை பகுதிகளை காட்டவோ மனமில்லை(இதற்கு காரணங்கள் இருக்கலாம் - சம்பளம்/வேலையிடத்தின் விதிகள் etc) 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.