Jump to content

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1743
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Posts posted by P.S.பிரபா

  1. 4 hours ago, Nathamuni said:

    விளங்க எதுவுமில்லை.

    கல்வியின் அருமை புரிந்த பெற்றோரே பிள்ளைகளுக்கு கடத்துவர்.

    இது அருமை புரியாத, பிள்ளையின் எதிர்காலத்தையே நாசமறுக்கும் குடும்பம். 

     

    எங்களது சமூகத்தில் இந்த மாதிரி விடயங்களை முன்பு கேட்டதில்லை. அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கும் ஆசிரியரில் ஒரு வித மரியாதை கலந்த பயம் இருக்கும். 

    ஆனால் இப்பொழுது இந்த மாதிரி சம்பவங்களை அதிகம் கேள்விப்படலாம்.. அதனால்தான் ஏன் இந்தப் பெற்றோர்கள் இப்படி நடக்கிறார்கள் என்பது விளங்கவில்லை.

    தனியே அக்கறையில்லாத பெற்றோர் என கூறிவிடமுடியாது..கல்விக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது என்றால் சமூகமாக இதற்கான காரணங்களை கண்டு சரி செய்தல் அவசியம். 

     

     

     

  2. குல்லி மட்டா அழகாகத்தான் உள்ளது.. ஆனால் யார் இந்த Saad என தேடிப் பார்த்தால்  அவர் மேல் பதியப்பட்ட பலாத்கார வழக்குகள்தான் அவரது பாடலைவிட அதிகம் பேசப்படுகிறது.. 

     

  3. Dr ஜெயமோகன் இயக்கதில்  “பொய்மான்” திரைப்படத்தை அடுத்து 3ம் திகதி கார்த்திகை மாதம் திரைக்கு வருகிறது “ யாதும் யாவரும்” 

    அந்தப் படத்தில் வரப் போகும் ஒரு பாடலையும் இணைத்துள்ளேன்.. இனிமையானதும் அர்த்தமுள்ளதுமான பாடல் படத்தைப் பற்றி ஒரு எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது எனலாம். 

    ef722264-eb2e-426c-bb24-ae38071d2d2f.jpg
     

     

    • Like 1
  4. On 29/9/2023 at 07:45, குமாரசாமி said:

    உப்படியான   சிந்தனைகளை  எமது தாய் தந்தையர் உட்பட முன்னோர்களும்  கடைப்பிடித்திருந்தால் எம் இனம் உறவுகள் எல்லாமே அழிந்திருக்கும்.

    எமது நாட்டில் கலவரங்கள் இல்லாதிருந்து எம் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துகளை அனுபவிக்க நேர்ந்தால் எப்படியிருக்கும்? ஏனைய அமைதியான நாடுகளில் வாழும் பரம்பரை சொத்துக்களை பாட்டன் பூட்டன் பேரன் என அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். கலவரத்திற்கு முன் எம் இனத்திலும் இருந்தது.

    மனிதன் மூன்னோக்கி சிந்தித்த படியால் தான் நாடுகள் முன்னேறியுள்ளன.

     

    எங்களுடைய முன்னோர்கள் வாழ்ந்த விதம் வேறு இப்பொழுது வேறு என்றுதான் நான் நினைக்கிறேன். சொத்து சேர்ப்பது தொடங்கி வாழ்க்கை முறை கூட வித்தியாசம். அவர்கள் வரையில் அது சரியாக இருந்து ஆனால் இப்பொழுது அப்படியில்லை. 

    தாராளமாக ஓடி ஓடி உழைக்கலாம் ஆனால் தனது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் அல்லது பிள்ளைக்கோ,  வாழ்க்கை துணைக்கோ அல்லது உடன்பிறந்தவர்களுக்கோ தேவைப்படும் நேரத்தில் அங்கே இல்லாமல் ஓடி ஓடி உழைத்து சொத்தை சேர்த்தும் ஒரு பயனில்லை. 

    எமது முன்னோர்கள் சேர்த்தை வைத்து நாம் உழைக்காமல் இருக்கவேண்டும் எனக் கூறவில்லை. 

    வாழ்க்கை, வேலை, இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அவ்வளவுதான். 

    On 29/9/2023 at 08:27, Nathamuni said:

    நிறைவான வாழ்வு வாழ்ந்தவனை சமூகம் காலாகாலத்துக்கும் போற்றும். 

    நிறைவான வாழ்க்கை என்பது ஓவ்வொருவருக்கும் வேறுபடும். உங்களுக்கு ஓடி ஓடி சொத்து சேர்ப்பது நிறைவானது என்றால் மற்றையவர்களுக்கு வேறாக இருக்கலாம். 

    மற்றவர்கள் போற்றவேண்டும் என நினைத்தால் மற்றவர்களுக்காகவே வாழவும் வேண்டிய நிலை வரலாம். 

     

    • Like 2
  5. 8 minutes ago, நிழலி said:

    பலருக்கு ஒன்று புரிவதில்லை.

    இன்று நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து திரட்டும் செல்வத்தை இன்னும் 60 ஆண்டுகளில் அனுபவிக்கின்றவர்களுக்கு எம் பெயர் கூட தெரிந்து இருக்காது என்று.

    நான் இன்று மோர்ட்கேஜ் கட்டி சொந்தமாக்கும் வீட்டில் 60 வருடங்களின் பின் அனுபவிக்கும் தலைமுறைக்கு என்னை யார் என்றே நினைவில் இருக்காது.

    வீட்டின் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு பழைய digital storage media வில் வெறும் binary வடிவில் photo வாகவோ video வாகவோ உறைந்து கிடப்போம்.

    உண்மை

    • Sad 1
  6. 17 hours ago, Maruthankerny said:

    காஜல் அகர்வால் கணவர்போல 
     

    IMG-0823.gif

    On 28/9/2023 at 02:52, விசுகு said:

    அண்மையில் விடுமுறையில் சென்றிருந்தபோது என் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருந்து பேசிக் கொண்டு இருந்தபோது எனது சின்னமகன் ஒரு கேள்வி கேட்டான். 

    ஒரு நாள் இன்னொருவர் போல வாழக்கிடைத்தால் யார் வாழ்வை தெரிவு செய்வீர்கள் என்று. ?

    உங்கள் பதில் என்ன?

    ஒரு திரி இது சம்பந்தமாக பேசுவதால் இதை இங்கே பதிகிறேன்.

    ஒரு நாள் இன்னொருவர் போல வாழக்கிடைத்தாலும் அது பயனில்லாத ஒன்று.. ஏனெனில் அடுத்த நாள் பழைய நிலைக்கு வந்துவிடவேண்டும்.. ஆகவே என்னைப் போல இருக்க நினைப்பேன். 

    • Like 1
    • Thanks 1
  7. On 28/9/2023 at 02:46, விசுகு said:

    படிப்பு மற்றும் பணம் இரண்டுக்கும் எல்லை இல்லை. போதும் என்று ஒரு இடத்தில் நிறுத்த முடிந்தவன் மட்டுமே வாழ்க்கையை வாழ்வான். ஏனையோர் ஓடி ஓடி......?

    மரணிக்கப் போகும் அந்த வினாடியில் ஓடி ஓடி நான் எதை சாதித்தேன்/அனுபவித்தேன் ஒன்றுமே இல்லை என ஏங்கியபடி மரணமடைவார்கள். அவ்வளவுதான். 

     

    • Thanks 1
  8. துவராகா, அவரது வரவைப் பற்றி ஒரு பாடலுடன் அவர் ஊருக்குள் போய் மக்களின் குறைகளை கேட்பதாக காட்டும் வீடியோ ஒன்று உலாவுகிறது. அதைப் பார்த்தவுடன் நினைவிற்கு வந்தது இந்த மாதிரி மக்களை ஏமாற்றவும், கேலிக் கூத்து செய்யும் அளவிற்கு தமிழர்கள் தாழ்ந்துவிட்டனரா? 

    இருக்கிறார்கள் அல்லது இல்லை என்பதை விட  அவர்களுக்கான மரியாதையாவது கொடுக்க வேண்டும் என யோசிக்கும் திறன் அற்றவர்களாக மாறிக்கொண்டு போகிறோமா? 

    • Like 1
    • Thanks 1
  9. உண்மையில் டீச்சர் தான் செய்ததை நினைத்துக் கவலைப்படவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இல்லாவிட்டால் தான் செய்த செயலால் அந்த ஊரில் தனியாக வாழும் மனத் தைரியம் இருந்திருக்காது என்பதையும்தான் இந்தக் கதை கூறுகிறது. 

    பல பொய் சொல்லி நம்பவைப்பதைவிட உண்மையை கூறி (ஊர் ஒதுக்கினாலும்) வாழ்வதும் சிறந்ததுதான். 

     

  10. On 24/9/2023 at 21:40, தமிழ் சிறி said:

    இவ்வாறு ஏற்கனவே நிலம் சிறுத்தை கொண்டுவரும் ஒரு பின்னணியில், சனத்தொகையும் சிறுத்துக்கொண்டே போனால் என்ன நடக்கும்? தமிழ் மக்கள் ஓர் அரசியல் சமூகமாக தங்களுக்குரிய அரசியல் இலக்குகளை முன்வைத்துப் போராடும் வலிமையை இழந்து விடுவார்கள் அல்லவா? இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள அரசியல்வாதிகள்,கட்சிகள், செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் இப்பொழுதே குரல் கொடுக்க தொடங்க வேண்டும்

    நான் வெளிநாட்டில் இருந்துகொண்டு எனது உறவுகளை வெளிநாட்டிற்கு வராதே என என்னால் கூறமுடியாது. ஆனால் முன்பைப் போல சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு வரமுடியாது என்றதை விளங்கப்படுத்துவேன், இங்கே உள்ள பிரச்சனைகளையும் கூறலாம். அதற்கு மேல் என்னால் அவர்களை தடுக்கமுடியாது. 

    அதே போல அங்கே முதலீடு செய்து, தொழில்வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்றால் அங்கே உள்ளவர்களுடன் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அனுசரித்துப் போகவேண்டும். அது எனது கொள்கைகளுக்கு சரிவராது என்பதை கடந்த சில தடவைப் பயணங்களில் நடந்த எனது தனிப்பட்ட அனுபவங்களை வைத்து உணர்ந்து கொண்டேன். ஆகையால் எல்லாவற்றையும் எல்லோரையும் அனுசரித்துப் போகக்கூடியவர்கள் அங்கே முதலிடலாம். அங்கே உள்ளவர்களுக்கு தொழில்வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தாலும் அதனை வழிநடத்தவோ, மேம்படுத்தவோ ஆர்வமில்லை. அதனைப் பற்றி கதைப்பதையும் விரும்புகிறார்கள் இல்லை. 

    இந்தப் புலப்பெயர்ச்சி தடுக்கவேண்டுமானால் அங்கே உள்ளவர்களின் மனநிலை மாறவேண்டும். ஆனால் அதற்கு ஏற்றவாறு சூழலை அமைத்துத் தரக்கூடியவர்கள் அங்கே இல்லை. 

  11. 17 hours ago, ragaa said:

    உண்மையில் இது எதிர்கட்சி செய்த பித்தலாட்டங்களைக்கேட்டு நம்பியவர்களாலான பிரச்சனை. Liberal party யிற்கு பூர்வீக குடிகளை அங்கீகரிப்பது பிரச்சனை, அதனால அந்த referendum ஒரு தார்வையும் தராது எ்னறு பிரச்சாரம் செய்கிறார்கள். 

    அதில் ஓரளவிற்கு உண்மை இருக்கிறது தானே.  இதனால் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் அவர்களுக்கு என ஒரு நிரந்தர பிரதிநிதி(Voice) இருக்கப் போகிறது அவ்வளவுதான். மற்றப்படி அரசு எடுக்கும் எந்த திட்டங்கள், கொள்கைகளில் அவர்களது கருத்துகளை கூறமுடியுமே தவிர மாற்றும் அதிகாரமே தடுக்கும் அதிகாரமோ அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை. ஆனால் இந்தளவு நிலைக்கு வந்ததே அவர்களது போராட்டதினால் என்பதால் இதிலிருந்து எதிர்காலத்தில் வேறு வகையில் உதவக்கூடும்.  

     

    14 hours ago, goshan_che said:

    இவர்களுக்கு ஒரு binding authority இல்லாமல் வெறும் ஆலோசனை நிலையே வழங்கப்படுவதால் - இது வெறும் கண்துடைப்பு என அபொர்ஜினிகள் உட்பட பலர் கூறுவதாயும்.

    இதனால் வரிச்சுமை கூடும் என்றும்.

    அபொர்ஜினிகள் சோம்பேறிகள், சமுகமாக போதை பொருள் பாவிப்போர். அவர்களை முதலில் “திருத்தி”, அவுஸ்ரேலிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும்.

    இவ்வாறும், சில தமிழ் அவுஸ்ரேலியன்ஸ் என்னுடன் பேசும் போது கூறினர்.

    எனக்கு இதில் நிலைப்பாடு எடுக்கும் அளவுக்கு அறிவு, பரிச்சயம் இல்லை.

     

    அவர்கள் தங்களுக்கு தரப்பட்ட சலுகைகளை வீணாடிப்போராக இருக்கலாம். ஆனால் பாலியல் ரீதியான துஷ்பிரயோகம், குடும்ப வன்முறைகளுக்கு  தொடங்கி குறைந்த ஆயுட்காலம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலை இன்னமும் அப்படியேதான் உள்ளது. அவர்களை அரசாங்கம் பெயரளவில்தான் கவனிக்கிறதோ என நினைப்பதுண்டு, ஏனெனில் அவுஸ்திரேலிய பழங்குடிகளுக்கான “ Closing the gap “ என்பது கூட 2007 ஆண்டளவில்தான் அதிகம் பேசப்பட்டது, அப்படியிருக்க அவர்களை சோம்பேறிகள் என்றும் சமூகமாக போதைப் பொருள் பாவிப்போர் என்று தமிழ் அவுஸ்ரேலியன்ஸ் கூறுவது சரியோ தெரியவில்லை. 

    பழங்குடிகளுக்கான உரிய அங்கீகாரமும் அவர்களுடைய நிரந்தர பிரதிநிதித்துவமும் பாராளுமன்றத்தில் இருந்தால் குறைந்தபட்சம் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற ஒழுங்கான/உறுதியான நடவடிக்கைகளை எடுக்க உதவும் என நினைக்கிறேன்.

    • Like 4
  12. 5 hours ago, nedukkalapoovan said:

    சாதி.. மத பிரச்சனைகள் மற்றைய இனங்களில் இருக்கும் உள்ளக பிரிவினைகளோடு ஒப்பிடும் போது தமிழர்கள் மத்தியில் மென்போக்கோடு தான் இருந்தது வந்துள்ளது. சமீப காலமாக (குறிப்பாக 2009 மே க்குப் பின்) அது ஆழப்படுத்தப்படுவதும் ஆக்கிரோசப்படுத்தப்படுவதும்.. வேண்டும் என்றே நிகழ்த்தப்படுகிறது

    மென்போக்கு என்று ஆணவக்கொலைகள் எங்கள் சமூகத்தில் முன்பு நடந்திருக்கவில்லை என்றதைதானே மென்போக்காக இருந்தது என்று கூறவருகிறீர்கள். மற்றப்படி எங்களிடமும் இவை நன்றாக உள்ளது.  

    2009ற்கு முன்பு இதனைப் பற்றி உண்மையான தெளிவு இருந்திருந்தால் இன்று இந்த மாதிரி நிலை வந்திருக்காது. அப்பொழுதும் இல்லை இப்பவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அந்தப் பாடசாலையில் ஒரு தமிழ் கிறிஸ்தவர் எந்தவித எதிர்ப்புமின்றி வந்திருப்பார். இந்த மாதிரி ஒரு அறிவிப்பும் பிரச்சனையாக இருந்திருக்காது. 

    சாதி என்று வரும் பொழுது பலர் உண்மையானதைக் கூறமாட்டார்கள் ஏனெனில் எங்களைப் பற்றிய மற்றவர்களின் எண்ணம் மாறிவிடுமோ என்றளவிற்கு இவை இன்னமும் எங்களில் வேரூன்றித்தான் உள்ளது. இன்று பல வழிகளில் செய்திகள் வெளியே வருகிறது, இப்படியான செயல்களால்  பாதிக்கப்படுபவர்கள் அதனை வெளியே கொண்டு வரும் பொழுது அதனை தடுப்பதோ அல்லது அதனை உதாசீனம் செய்வதோ சரியான செயல் இல்லை. 

     

    • Like 3
  13. 5 hours ago, nedukkalapoovan said:

    இந்த அறிவிப்புக் குறித்து ஆட்சேபனைகள் இருந்தால்.. அப்பாடசாலை பெற்றோரோ பிள்ளைகளோ.. பழைய மாணவர் சங்கங்களோ பாடசாலை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்கள் ஆட்சேபனைகளை வெளிப்படுத்த முடியும். மாற்றங்களை கோர முடியும்.

    இந்த அறிவிப்பு வெளியில் வந்த தன் நோக்கம் என்னவாகவும் இருக்கட்டும். ஆனால் இப்படி இந்த அறிவிப்பும் சரி பாடசாலைகளில் நடைபெறும் சீர்கேடுகளும் சரி வெளியே வரும் பொழுதுதான் தவறிழைத்தவர்கள் பற்றி தெரியவருகிறது. 

    மற்றைய சமூகங்களிலும் எல்லா வித பிரச்சனைகளும் உள்ளது அதற்காக அவர்கள் அதனை தீர்க்காமலா இருக்கப் போகிறார்கள். ஒவ்வொரு சமூகமும் தனக்கேற்ற வழிகளில் பிரச்சனைகளை தீர்க்கவே முயற்சி செய்வார்கள். 

    எங்களது சமூகத்தில் பல பிரச்சனைகளை வைத்துக் கொண்டு மற்றைய சமூகங்களிலும் உள்ளதுதானே என இருக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன். மற்றைய சமூகங்களைவிட நாங்கள் இன்னமும் கவனமாக இருக்கவேண்டும். ஏன் இந்த மாதிரிப் பிரச்சனைகள் ஏற்படுகின்றது, அதுவும் இப்பொழுது ஏன் அதிகளவு ஏற்படுகின்றது என்பதை விளங்கி அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இந்தப் பாடசாலையில் ஏற்கனவே ஒரு பிரச்சனை இருந்தது என்றால் இந்த மாதிரி அறிவிப்புகளை பெற்றோர், மாணவர்கள், பாடசாலை நலன்விரும்பிகளுடன் கலந்தாலோசித்து உரிய முறையில் அறிவித்திருந்தால் இப்படியான முடிவுகள்/செய்திகள் வந்திருக்காது. 

    பிரச்சனைகளை உரிய முறையில் அணுகுவது இல்லை என்றால் பிரச்சனைகளை மூடி மறைப்பதும் நல்லது இல்லை. 

    • Like 4
  14. 6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

    பாடசாலையில் இப்ப வகுப்பறை கூட கூட்ட விடுவதில்லை பெற்றோர் பிள்ளைகளை பிறகு எப்படி பிள்ளை வேலை பழகும்.

    பாடசாலைகளில் மாணவர்கள் தங்களுடைய வகுப்பறைகளை turn எடுத்துக் கூட்டுகிறார்கள். நீங்கள் இப்படி கூறுகிறீர்கள். 

    எனது தெரிந்தவர்களின்பிள்ளைகள் போகும் பாடசாலைகளில் இப்படியான நடைமுறை இன்னமும் உள்ளது. 

  15. 8 hours ago, பிழம்பு said:

    குறித்த பாடசாலையில் ஒருசில மாதங்களுக்கு முன் பிறிதொரு ஆசிரயரால் வேறு ஒரு மாணவனின் செவியில் தாக்கி  அவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார் என்பதுடன் பாடசாலையின் நற்பெயர் குறித்து பெற்றோர் குறித்த விடயத்தை பெரிது படுத்தாமல் விட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. R

    இதுதான் பிரச்சனையே, குடும்பப்பெயர் கெட்டுவிடும் , பாடசாலை பெயர் கெட்டுவிடும், ஊர் பெயர் கெட்டுவிடும், சமூகத்தின் பெயர் கெட்டுவிடும் என்று பல பிரச்சனைகளை மூடி மறைப்பதால்தான், மன உளைச்சல் தொடங்கி தவறான முடிவுகள் எடுக்கப்படுகிறது. 

    சிலர் மனசாட்சியும் இல்லை, பயமும் இல்லை. யார் கேட்ப்பார்கள் என்ற எண்ணத்தில் தாம் நினைத்தபடி இப்படியெல்லாம் நடக்கத்தூண்டுகிறது. 

    மாணவன் தவறு செய்தால் அதனை விசாரிப்பதற்கு ஒரு முறை உள்ளது. இப்படி செய்தமையால் ஆசிரியரின் தரம்தான் தாழ்ந்துவிட்டது.

  16. 12 minutes ago, Nathamuni said:

    பாடசாலை சைவம் மட்டுமே சாப்பிடலாம்

    ஆரம்பத்தில் அசைவம் சாப்பிடலாம் என்று இருந்த பாடசாலை இப்பொழுது பாடசாலைக்குள் அசைவ உணவை தவிர்க்கவும் என்றால் அதுவும் முறையான காரணங்களை கொடுக்காமல் என்றது சரியில்லை என்றுதான் நினைக்கிறேன். 

    இன்றைக்கு எங்கள் இடங்களில் நடந்துவரும் மற்றைய பிரச்சனைகளை உணர்ந்தவர்கள் என்றால் இந்த மாதிரி மதம்/ அசைவம்/சைவம் உணவு போன்ற பிரச்சனைகளை உருவாக்கமாட்டார்கள். ஒற்றுமையாக எப்படி அவற்றை தடுக்கலாம் என்றுதான் நினைப்பார்கள். 

    அவ்வளவுதான். 

     

    1 hour ago, விசுகு said:

     

    புங்குடுதீவு மக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு ஓர் அறிவிப்பு

    புங்குடுதீவில் உள்ள குடிநீருக்கு உகந்த பொதுக் கிணறுகளை சுத்தம் செய்து பொது மக்களின்  குடிநீர் பாவனைக்கு விடும் செயற்பாடுகளை பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் முதலில் அங்கு வாழும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 15 நன்னீர்க்கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளன.
    (இதற்காக உதவி (வாட்டர்பம்)செய்த அமரர் திரு நா.இராசலிங்கம் அவர்களின் மகனுக்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின்  
    சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்)
     ஊரில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு அவசர நடவடிக்கையாக இது தற்போது நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் மக்கள் தமக்கருகில் தமது நன்னீர் தேவைக்கு பாவிக்க முடியாது கிடக்கும் கிணறுகளை எமக்கு அறியத்தந்தால் அவற்றையும் உடனடியாக எம்மால் முடிந்தளவு சிறப்பாக சுத்தம் செய்து உங்கள் பாவனைக்கு விட முடியும். இதற்கான முழுச் செலவையும் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பொறுப்பேற்கும். உங்களுக்கு தெரிந்த பொது கிணறு குடிநீர் அல்லது குளிக்கிற கிணறு தூர் வாரும் பணியை செய்து கொள்ள நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் 0772669902  MR தம்பா. 
     நன்றி
    நிர்வாகம்
    பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்.

    நல்ல விடயம் விசுகு அண்ணா

    • Thanks 1
  17. 23 minutes ago, Justin said:

    இங்கே இருக்கும் பெரும்பாலானோர் இலங்கையின் பள்ளிக் கூடங்களில் படித்து அங்கேயே வாழ்ந்த மக்கள் தான். பாடசாலைக்குள் வருகின்றன என இவர்கள் நம்பும் கட்டாக்காலி நாய்கள் ஒரு சோற்றுப் பருக்கை ஒட்டிய பேப்பர் இருந்தால் கூட வரும் என்பது இலங்கையில் பிறந்து வளர்ந்த ஒருவருக்குத் தெரியாதா? தெருவில் நிற்கும் மாடே  ஷொப்பிங் பையும் சுவரொட்டியும் சாப்பிட்டு வளரும் ஊர்கள் எங்கள் ஊர்கள்😂

    உண்மைதான். 

  18. On 9/9/2023 at 03:08, தனிக்காட்டு ராஜா said:

     காரணம் தொழில் பிரச்சினைதான் 

    துப்பறியும் கதை நன்றாகவே உள்ளது. நான் அந்தக் காவல் நிலைய உயரதிகாரி என்றுதான் நினைத்திருந்தேன். 

    தொடர்ந்து எழுதுங்கள். 

    இந்த தொழில் பிரச்சனையான ஒன்றுதான். 

    • Like 1
  19. 9 minutes ago, Justin said:

    மூலச் செய்தியில் இந்தப் படம்👆 இருக்கிறது. அப்ப இனி என்ன காரணங்களைச் சொல்லலாம் என "அமசடக்கி"கள் (நீங்கள் அல்ல!) பிளான் போடலாம்

    நன்றி Justin அண்ணா, நான் அந்த linkகைப் பார்க்கவில்லை.. பார்த்திருந்தால் அந்தக் கேள்வியை கேட்டிருக்கமாட்டேன். 

    ஆனாலும் அவர்கள் இதனை தெளிவாக ஏன் இப்படி என்ற காரணங்களுடன் போட்டிருந்தால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.  ஆனால் எல்லோருமே சண்டைக்குத் தான் நிற்கிறார்கள் போல உள்ளது. வர வர சகிப்புத்தன்மையின்மை, தொடர்பாடலில் கவனமின்மைதான் கூடுகிறது. 

    உண்மையிலேயே மதம், சாதி என்பதைக் கொண்டு பிரச்சனைகளை உருவாக்க நினைத்தால் அது தவறு. 

    • Like 1
  20. 2 hours ago, இணையவன் said:

    சுத்தம்தான் பிரச்சனை என்றால் மாணவர்களுக்குப் பாடசாலையிலேயே அதற்குரிய அறிவூட்டல் செய்யப்பட வேண்டும். குப்பையைக் கண்டபடி வீசுதல் கூடாது என்பது கலாச்சாரத்துடன் இணைக்கப்பட வேண்டிய வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கம். நல்ல பழக்கவழக்கத்தினைப் படிப்பிற்பதற்குப் பதிலாக மச்சம் சாப்பிட்டால் சுத்தமில்லை என்று கூறுவது முக்கிய பிரச்சனையை மூடிமறைப்பதற்கு ஒப்பான செயல். 

    மச்சம் உண்பது மனித இனத்தின் இயற்கையான வழக்கம் மட்டுமல்ல ஆதித் தமிழரின் வழக்கமும் கூட.

    சுத்தம் என்பதை மாணவர்களுக்கு மட்டுமல்ல கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடக்கம் பாடசாலை ஊழியர் வரை முறையாகப் பின்பற்றவேண்டியதையும் கூறவேண்டும் அப்பொழுதுதான் சில பிரச்சனைகளை தவிர்க்கலாம். 

    தனி கூறியபடி அங்கே உள்ள பாடசலைகளில் இதுவொரு பிரச்சனை, அதுமட்டுமல்ல கழிப்பறைகளின் சுத்தம் கூட பிரச்சனையாக உள்ளது. இப்படிப் பல பிரச்சனைகளுக்கு இடையில் குழப்பங்களை ஏற்படுத்தவும் சில செய்திகளை மிகைப்படுத்திக் கூறலாம். ஏனெனில் பாடசாலையில் போடப்பட்ட அறிக்கை பற்றிய படம் கூட இணைக்கப்பட்ட செய்தியில் இல்லை(photo கூட எடுக்காமல் விட்டிருப்பார்கள் என்பதை நம்ப இயலவில்லை). தனியே மாமிச உணவுகளை தவிர்க்குமாறு என்ற ரீதியில் போட்டுவிட்டு ஏதும் குழப்பங்களை எதிர்பார்க்கிறார்கள் எனத் தோன்றுகிறது. 

     

  21. 9 minutes ago, விசுகு said:

    ஒரு சிறிய உதாரணம்

    அண்மையில் ஊரில் உள்ள பொதுத்கிணறுகளை சுத்தம் செய்து தருமாறு ஒரு கோரிக்கை ஊரில் உள்ளவர்களால் எமது ஒன்றியத்திடம் கேட்கப்பட்டது. கிணறுகளை போய் பார்த்தால் கல்லும் முள்ளும் கழிவுப் பொருட்கள் என்று அத்தனையும் போட்டு அந்த மக்களே மூடுவிழா நடாத்தி இருக்கிறார்கள்.

    இப்ப இறைப்பமா அப்படியே விடுவமா??😭

    சில பழக்கவழக்கங்களை அடியோடு மாற்றுவது மிகவும் கடினமாக உள்ளது. அப்படியானதுதான் இதுவும். 

    இறைத்துவிட்டு தண்ணீர் எடுக்கும் வாளி போகுமளவு இடைவெளி வைத்துவிட்டு மீதி இடத்தை net போட்டு மூடிவிடுங்கள். குறைந்தபட்சம் சில குப்பைகள் போடுவதை தடுக்கலாம். 

  22. 60 ஆண்டுகளுக்குப் பின்.. 88 வயதில் உள்ளவரின் நினைவுகள் எத்தனை தூரம் நம்பதகுந்த ஒன்றாக இருக்கும்??

    சில பிரபல்யங்களின் மரணம் மக்களின் மனதை விட்டு இலகுவில் போவதில்லை. 

  23. On 8/9/2023 at 05:26, Justin said:

    . நாம் நடத்தும் தமிழ் பாடசாலையில் கலை நிகழ்ச்சிகள் செய்யும் குழந்தைகள் ஆங்கில எழுத்தில் எழுதித் தான் தமிழை வாசிக்கிறார்கள். சில பெற்றோருக்கு இது மிகவும் கடுப்பேற்றும் விடயமாக இருக்கிறது. ஆனால், பாடசாலைக் கல்வியை ஆங்கிலத்தில் படித்துக் கொண்டு, தமிழ் எழுத்துருவைக் கற்பது குழந்தைகளுக்குக் கடினமாக இருக்கிறது.

    பொதுவாக இங்கேயும் அப்படி நடப்பதுண்டு. பேச்சுப் போட்டிகளுக்கு கொடுக்கப்படும் பகுதிகளைக் கூட பிள்ளைகள் ஆங்கில எழுத்தில் எழுதித்தான் பாடமாக்கி ஒப்புவிக்கிறார்கள். அதிலும் அதிகம் பயன்படுத்தப்படாத தமிழ் எழுத்துகள் வந்தால் சிரமப்படுகிறார்கள். 

    தமிழ் மொழி, தமிழர் என்பது எமது அடையாளமாக இருந்தாலும் கூட புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறு, காலத்திற்கு ஏற்றவாறு அதிகம் பயன்படுத்தப்படாத  சொற்களை, எழுத்துகளை, கதைகளை தவிர்த்து  படிப்பித்தால் பிள்ளைகளுக்கும் ஓரளவிற்கு சுமை குறைவாக இருக்கும் என நினைக்கிறேன். 

     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.