Jump to content

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1756
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by P.S.பிரபா

  1. அதில் ஓரளவிற்கு உண்மை இருக்கிறது தானே. இதனால் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் அவர்களுக்கு என ஒரு நிரந்தர பிரதிநிதி(Voice) இருக்கப் போகிறது அவ்வளவுதான். மற்றப்படி அரசு எடுக்கும் எந்த திட்டங்கள், கொள்கைகளில் அவர்களது கருத்துகளை கூறமுடியுமே தவிர மாற்றும் அதிகாரமே தடுக்கும் அதிகாரமோ அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை. ஆனால் இந்தளவு நிலைக்கு வந்ததே அவர்களது போராட்டதினால் என்பதால் இதிலிருந்து எதிர்காலத்தில் வேறு வகையில் உதவக்கூடும். அவர்கள் தங்களுக்கு தரப்பட்ட சலுகைகளை வீணாடிப்போராக இருக்கலாம். ஆனால் பாலியல் ரீதியான துஷ்பிரயோகம், குடும்ப வன்முறைகளுக்கு தொடங்கி குறைந்த ஆயுட்காலம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலை இன்னமும் அப்படியேதான் உள்ளது. அவர்களை அரசாங்கம் பெயரளவில்தான் கவனிக்கிறதோ என நினைப்பதுண்டு, ஏனெனில் அவுஸ்திரேலிய பழங்குடிகளுக்கான “ Closing the gap “ என்பது கூட 2007 ஆண்டளவில்தான் அதிகம் பேசப்பட்டது, அப்படியிருக்க அவர்களை சோம்பேறிகள் என்றும் சமூகமாக போதைப் பொருள் பாவிப்போர் என்று தமிழ் அவுஸ்ரேலியன்ஸ் கூறுவது சரியோ தெரியவில்லை. பழங்குடிகளுக்கான உரிய அங்கீகாரமும் அவர்களுடைய நிரந்தர பிரதிநிதித்துவமும் பாராளுமன்றத்தில் இருந்தால் குறைந்தபட்சம் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற ஒழுங்கான/உறுதியான நடவடிக்கைகளை எடுக்க உதவும் என நினைக்கிறேன்.
  2. மென்போக்கு என்று ஆணவக்கொலைகள் எங்கள் சமூகத்தில் முன்பு நடந்திருக்கவில்லை என்றதைதானே மென்போக்காக இருந்தது என்று கூறவருகிறீர்கள். மற்றப்படி எங்களிடமும் இவை நன்றாக உள்ளது. 2009ற்கு முன்பு இதனைப் பற்றி உண்மையான தெளிவு இருந்திருந்தால் இன்று இந்த மாதிரி நிலை வந்திருக்காது. அப்பொழுதும் இல்லை இப்பவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அந்தப் பாடசாலையில் ஒரு தமிழ் கிறிஸ்தவர் எந்தவித எதிர்ப்புமின்றி வந்திருப்பார். இந்த மாதிரி ஒரு அறிவிப்பும் பிரச்சனையாக இருந்திருக்காது. சாதி என்று வரும் பொழுது பலர் உண்மையானதைக் கூறமாட்டார்கள் ஏனெனில் எங்களைப் பற்றிய மற்றவர்களின் எண்ணம் மாறிவிடுமோ என்றளவிற்கு இவை இன்னமும் எங்களில் வேரூன்றித்தான் உள்ளது. இன்று பல வழிகளில் செய்திகள் வெளியே வருகிறது, இப்படியான செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் அதனை வெளியே கொண்டு வரும் பொழுது அதனை தடுப்பதோ அல்லது அதனை உதாசீனம் செய்வதோ சரியான செயல் இல்லை.
  3. இந்த அறிவிப்பு வெளியில் வந்த தன் நோக்கம் என்னவாகவும் இருக்கட்டும். ஆனால் இப்படி இந்த அறிவிப்பும் சரி பாடசாலைகளில் நடைபெறும் சீர்கேடுகளும் சரி வெளியே வரும் பொழுதுதான் தவறிழைத்தவர்கள் பற்றி தெரியவருகிறது. மற்றைய சமூகங்களிலும் எல்லா வித பிரச்சனைகளும் உள்ளது அதற்காக அவர்கள் அதனை தீர்க்காமலா இருக்கப் போகிறார்கள். ஒவ்வொரு சமூகமும் தனக்கேற்ற வழிகளில் பிரச்சனைகளை தீர்க்கவே முயற்சி செய்வார்கள். எங்களது சமூகத்தில் பல பிரச்சனைகளை வைத்துக் கொண்டு மற்றைய சமூகங்களிலும் உள்ளதுதானே என இருக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன். மற்றைய சமூகங்களைவிட நாங்கள் இன்னமும் கவனமாக இருக்கவேண்டும். ஏன் இந்த மாதிரிப் பிரச்சனைகள் ஏற்படுகின்றது, அதுவும் இப்பொழுது ஏன் அதிகளவு ஏற்படுகின்றது என்பதை விளங்கி அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பாடசாலையில் ஏற்கனவே ஒரு பிரச்சனை இருந்தது என்றால் இந்த மாதிரி அறிவிப்புகளை பெற்றோர், மாணவர்கள், பாடசாலை நலன்விரும்பிகளுடன் கலந்தாலோசித்து உரிய முறையில் அறிவித்திருந்தால் இப்படியான முடிவுகள்/செய்திகள் வந்திருக்காது. பிரச்சனைகளை உரிய முறையில் அணுகுவது இல்லை என்றால் பிரச்சனைகளை மூடி மறைப்பதும் நல்லது இல்லை.
  4. பாடசாலைகளில் மாணவர்கள் தங்களுடைய வகுப்பறைகளை turn எடுத்துக் கூட்டுகிறார்கள். நீங்கள் இப்படி கூறுகிறீர்கள். எனது தெரிந்தவர்களின்பிள்ளைகள் போகும் பாடசாலைகளில் இப்படியான நடைமுறை இன்னமும் உள்ளது.
  5. இதுதான் பிரச்சனையே, குடும்பப்பெயர் கெட்டுவிடும் , பாடசாலை பெயர் கெட்டுவிடும், ஊர் பெயர் கெட்டுவிடும், சமூகத்தின் பெயர் கெட்டுவிடும் என்று பல பிரச்சனைகளை மூடி மறைப்பதால்தான், மன உளைச்சல் தொடங்கி தவறான முடிவுகள் எடுக்கப்படுகிறது. சிலர் மனசாட்சியும் இல்லை, பயமும் இல்லை. யார் கேட்ப்பார்கள் என்ற எண்ணத்தில் தாம் நினைத்தபடி இப்படியெல்லாம் நடக்கத்தூண்டுகிறது. மாணவன் தவறு செய்தால் அதனை விசாரிப்பதற்கு ஒரு முறை உள்ளது. இப்படி செய்தமையால் ஆசிரியரின் தரம்தான் தாழ்ந்துவிட்டது.
  6. ஆரம்பத்தில் அசைவம் சாப்பிடலாம் என்று இருந்த பாடசாலை இப்பொழுது பாடசாலைக்குள் அசைவ உணவை தவிர்க்கவும் என்றால் அதுவும் முறையான காரணங்களை கொடுக்காமல் என்றது சரியில்லை என்றுதான் நினைக்கிறேன். இன்றைக்கு எங்கள் இடங்களில் நடந்துவரும் மற்றைய பிரச்சனைகளை உணர்ந்தவர்கள் என்றால் இந்த மாதிரி மதம்/ அசைவம்/சைவம் உணவு போன்ற பிரச்சனைகளை உருவாக்கமாட்டார்கள். ஒற்றுமையாக எப்படி அவற்றை தடுக்கலாம் என்றுதான் நினைப்பார்கள். அவ்வளவுதான். நல்ல விடயம் விசுகு அண்ணா
  7. துப்பறியும் கதை நன்றாகவே உள்ளது. நான் அந்தக் காவல் நிலைய உயரதிகாரி என்றுதான் நினைத்திருந்தேன். தொடர்ந்து எழுதுங்கள். இந்த தொழில் பிரச்சனையான ஒன்றுதான்.
  8. நன்றி Justin அண்ணா, நான் அந்த linkகைப் பார்க்கவில்லை.. பார்த்திருந்தால் அந்தக் கேள்வியை கேட்டிருக்கமாட்டேன். ஆனாலும் அவர்கள் இதனை தெளிவாக ஏன் இப்படி என்ற காரணங்களுடன் போட்டிருந்தால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஆனால் எல்லோருமே சண்டைக்குத் தான் நிற்கிறார்கள் போல உள்ளது. வர வர சகிப்புத்தன்மையின்மை, தொடர்பாடலில் கவனமின்மைதான் கூடுகிறது. உண்மையிலேயே மதம், சாதி என்பதைக் கொண்டு பிரச்சனைகளை உருவாக்க நினைத்தால் அது தவறு.
  9. சுத்தம் என்பதை மாணவர்களுக்கு மட்டுமல்ல கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடக்கம் பாடசாலை ஊழியர் வரை முறையாகப் பின்பற்றவேண்டியதையும் கூறவேண்டும் அப்பொழுதுதான் சில பிரச்சனைகளை தவிர்க்கலாம். தனி கூறியபடி அங்கே உள்ள பாடசலைகளில் இதுவொரு பிரச்சனை, அதுமட்டுமல்ல கழிப்பறைகளின் சுத்தம் கூட பிரச்சனையாக உள்ளது. இப்படிப் பல பிரச்சனைகளுக்கு இடையில் குழப்பங்களை ஏற்படுத்தவும் சில செய்திகளை மிகைப்படுத்திக் கூறலாம். ஏனெனில் பாடசாலையில் போடப்பட்ட அறிக்கை பற்றிய படம் கூட இணைக்கப்பட்ட செய்தியில் இல்லை(photo கூட எடுக்காமல் விட்டிருப்பார்கள் என்பதை நம்ப இயலவில்லை). தனியே மாமிச உணவுகளை தவிர்க்குமாறு என்ற ரீதியில் போட்டுவிட்டு ஏதும் குழப்பங்களை எதிர்பார்க்கிறார்கள் எனத் தோன்றுகிறது.
  10. சில பழக்கவழக்கங்களை அடியோடு மாற்றுவது மிகவும் கடினமாக உள்ளது. அப்படியானதுதான் இதுவும். இறைத்துவிட்டு தண்ணீர் எடுக்கும் வாளி போகுமளவு இடைவெளி வைத்துவிட்டு மீதி இடத்தை net போட்டு மூடிவிடுங்கள். குறைந்தபட்சம் சில குப்பைகள் போடுவதை தடுக்கலாம்.
  11. 60 ஆண்டுகளுக்குப் பின்.. 88 வயதில் உள்ளவரின் நினைவுகள் எத்தனை தூரம் நம்பதகுந்த ஒன்றாக இருக்கும்?? சில பிரபல்யங்களின் மரணம் மக்களின் மனதை விட்டு இலகுவில் போவதில்லை.
  12. பொதுவாக இங்கேயும் அப்படி நடப்பதுண்டு. பேச்சுப் போட்டிகளுக்கு கொடுக்கப்படும் பகுதிகளைக் கூட பிள்ளைகள் ஆங்கில எழுத்தில் எழுதித்தான் பாடமாக்கி ஒப்புவிக்கிறார்கள். அதிலும் அதிகம் பயன்படுத்தப்படாத தமிழ் எழுத்துகள் வந்தால் சிரமப்படுகிறார்கள். தமிழ் மொழி, தமிழர் என்பது எமது அடையாளமாக இருந்தாலும் கூட புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறு, காலத்திற்கு ஏற்றவாறு அதிகம் பயன்படுத்தப்படாத சொற்களை, எழுத்துகளை, கதைகளை தவிர்த்து படிப்பித்தால் பிள்ளைகளுக்கும் ஓரளவிற்கு சுமை குறைவாக இருக்கும் என நினைக்கிறேன்.
  13. உதயநிதி ஸ்டாலின் சனாதனம் என்பதை டெங்கு, காலரா, கொரோனா கிருமிகளை அழிப்பது போல அழிக்க வேண்டும் என்று கூறியதன் பின் இரண்டு நல்ல கட்டுரைகளைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒன்று சாவித்திரி கண்ணன் எழுதியது இன்னொன்று இந்தக் கட்டுரை.. பகிர்ந்தமைக்கு நன்றி
  14. விசுகு அண்ணா நான் நினைப்பது இதுதான் தமிழக அரசியலில் அவர் தவிர்க்கமுடியாத ஒரு அங்கம், தலைவரைப் பற்றிப் பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச் சென்றார். முன்பை விட எங்களது போராட்ட வரலாற்றை இன்று வரை மேடைகளில் பேசுகிறார். குரல் கொடுகிறார். அதற்காகவே புலம்பெயர்ந்த தமிழர்கள் அவருக்கு உதவுவதும் (உ+ம் அவருடைய தொகுதி ஒன்றிற்கு தேர்தல் சமயம் புலம்பெயர்தமிழர்கள் உதவியிருந்தார்கள் என அறியமுடிந்தது}. என்றெல்லாம் இருந்தாலும் கூட விஜயலட்சுமி விடயத்தில் அவரது நடவடிக்கைகள் அவரைப் பற்றி நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தவில்லை. - சீமான் ஒரு வளர்ந்து வரும் அரசியல்வாதி/தலைவர் என்றால் அவர் தன்மீது இந்த மாதிரி ஏற்படும் அவதூறுகளை சரியான முறையில் கையாளவேண்டும். அதுவே ஒரு நல்ல தலைவனுக்கான அம்சம். அதை விட்டுவிட்டு தூதுவர்களை அனுப்புவதும், டீல் போடுவதும் சரியான செயலா? - ஒரு வளர்ந்துவரும் அரசியல்வாதியான அவருக்கெதிராக இந்த மாதிரி அவதூறு பரப்புவதை அவர் ஏன் முறையாக கையாளவில்லை?. - மற்றப்படி இந்த அரசியல்வாதிகள் இன்று அடிபடுவார்கள் நாளை காலைத்தொட்டு கும்பிடுவார்கள். இவர்களுடைய அரசியலுக்காக எங்களது வரலாற்றை கொச்சைப்படுத்த விடமுடியாது இல்லையா? - ஆகவே தமிழ் நாட்டு அரசியலில் நாங்கள் எட்டவே நிற்கவேண்டும். ஆனால் தமிழ்நாட்டு மக்களுடன் அல்ல. அவ்வளவுதான். இன்னொன்றையும் சொல்ல நினைக்கிறேன், யாழ்களத்தில் சீமான் சம்பந்தப்பட்ட திரிகளில் அவதானித்தது, வளர்ந்து வரும் தமிழ்நாட்டு அரசியல்வாதி சீமானை குற்றம் நிரூபிக்கப்படாமல் பாலியல் குற்றவாளி எனக் கூறியது தவறு என கள உறவு யாரோ எழுதியிருந்தார், ஆனால் அவருக்கு விளங்கவில்லையா அதே போல விஜயலட்சுமியை மனநோயாளி என கூறுவது தவறு என்று?? நன்றி.
  15. இந்த வாக்கெடுப்பில் அவுஸ்ரேலிய பூர்வீககுடியின மக்களின் சில பிரிவுகளுக்கிடையிலும் ஒரு தெளிவின்மை உள்ளதைக் காணலாம். இதைப் பற்றி யாழ்கள அவுஸ் உறவுகள் என்ன நினைக்கிறார்கள்?? 🤔
  16. நீங்கள் உரையாடல் வரும் பகுதிகளை அதற்கேற்றவாறு எழுதினால வாசிக்க இலகுவாக இருக்கும். சிந்திக்க வைக்கும் கதை. நன்றி. நாங்கள் எங்களுக்காக வாழ்வதில்லை, சமூகம் என்ன நினைக்குமோ என்ற பயத்தில் சமூகத்திற்காகத்தான் வாழ்கிறோமோ என நான் நினைப்பதுண்டு. உற்றார் உறவினர என்ன சொல்வார்களோ என்று தொடங்கி அடுக்கடுக்காக அதற்கு ஏற்ற வகையில் காரணங்களைக் கூறி தங்களை நியாயப்படுத்திக் கொள்வார்கள். அதனைக் கேட்டு எனக்குள் சிரித்துக்கொள்வதுண்டு.
  17. நீங்கள் இந்த பதிவை எழுதியது ஒரு வகையில் நல்ல விடயம். என்னுள் இருந்த கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது ஒன்று. அதே நேரம் இங்கே எழுதுவோரின் நோக்கங்களையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. இங்கே இவ்வளவு பக்கம் பக்கமாக ஒரு சிலர் எழுதுவது நேரத்தைப் போக்க யாழை ஒரு பொழுது போக்கும் இடமாகப் பயன்படுத்துகிறார்கள். சிலர் சரியான விதத்தில் விளங்கப்படுத்த முயற்சி செய்கிறார்கள். சிலர் உணர்ச்சி வேகத்தில் முதல் பக்கத்தில் எழுதியவற்றை மறந்து போய் வேறு விதமாகஎழுதுகிறார்கள். ஆகையால் இப்படியான பதிவுகளை வாசிக்கும் என் போன்றவர்களுக்கும் எதனைக் கருத்தில் எடுக்கவேண்டும் என்பதும் புரியும். மனிதர்கள் பலவிதம்.. உங்களுடைய பதிவிற்கு நன்றி.
  18. அப்பாவி மக்கள்தான் 14 வருடங்களுக்கு முன்பும் சிந்திய குருதிக்கும் கண்ணீருக்கும் இன்னமும் விடிவு கிடைக்கவில்லை…கடவுள்மாரும் பாராபட்சம் பார்க்கிறார்களோ? தங்களுக்கு தேவையான பொழுது இந்த மாதிரி காணெளிகளை வெளியே விடுவது.. பின் ஒன்றுமே நடவாதது போல அவர்களுக்கே அதிகாரங்களைக் கொடுப்பது. இப்படியான விடயங்கள் எத்தனை நடந்துள்ளது. அவ்வளவுதான்.
  19. அதற்கிடையில் இலங்கையை ஆளும் அரசு எங்கட வளங்களை வைத்தே எங்களை இன்னமும் கீழே தள்ளிவிடுவார்கள். எத்தனை அறிவாற்றல் இருந்தாலும் பணபலம் இருந்தாலும் எங்களுக்கு இன்னமும்(2009ற்குப் பின்) ஒரு ஒழுங்கான கூடையை பின்னமுடியவில்லை. ஆனால் நிறைய கதைக்கிறோம். அவ்வளவுதான்
  20. சமூகத்தில் இப்படி 4 வகையான மனிதர்களைப் பார்க்கலாம். எனக்கு இந்தத் திரியை வாசித்த பொழுது இதனைப் இங்கே பதிவது சரியென தோன்றியது என்பதால் இணைத்துவிடுகிறேன்.
  21. இதே திரியில்தான் நீங்கள் எழுதியிருந்தீர்கள் அரசியல் ஸ்திரதன்மை இல்லாதமையால் கேரளாவிலிருந்து இலங்கை ரொட்டியை இறக்குமதி செய்வதாக.. அவருக்கு விளங்கியது ஏன் இந்த அல்லிராஜாவுக்கு விளங்கவில்லை? அவரைப் போன்ற நீங்கள் கூறும் மற்றைய முதலாளிகளுக்கு விளங்கவில்லை? பொன்னியின் செல்வனில் முதலிடமுதலே வேறு படங்களில் தயாரிப்பில் ஈடுபட்டு அவர் அங்கே பிரபல்யமான தயாரிப்பாளராகத்தான் இருந்திருக்கிறார் ஆனால் பொன்னியின் செல்வனின் இலங்கை காட்சிகள் இலங்கையில்தான் எடுக்கப்பட்டதா? இல்லை பின் எவ்வாறு தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வரும்? நாங்கள் தமிழர் இடங்களில் முதலிடமுடியாமைக்குப் பல காரணங்களைக் கூறுகிறோம், அங்கே உள்ள இளையோரையும் குறை கூறுகிறோம் ஆனால் அதில் ஒன்றைத்தன்னும் இந்த புலம்பெயர் முதலீட்டாளர்களால் மாற்றமுடியவில்லை. ஏனெனில் அவர்களுக்கான எல்லை மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று. இப்படிப் பல கூறிக்கொண்டே போகலாம். ஆனால் அது தேவையற்றது. ஏனெனில் இங்கே பலர் அதனை தெளிவாக விரிவாக விளங்கப்படுத்தியுள்ளர்கள். ஆனாலும் எனக்கு வர்த்தகத்தின்/வியாபாரத்தின் விதிமுறைகளை விளங்கப்படுத்தியதற்கு நன்றி.
  22. இந்தளவு முதலீட்டார்களின் முதலீடுகளால் யார் அதிகம் நன்மையடைந்தார்கள் என்பதை ஊர் நிலவரம் தெரிந்தவர்கள் ஓரளவிற்கு புரிந்துகொள்வார்கள் மற்றப்படி நாங்கள் எங்களது பொருளாதார பலம் என சொல்லப்படும் விடயத்தில் அதீத பெருமை கொள்கிறோம் என்று மட்டும்தான் தெரிகிறது. Justin அண்ணா கூறியது போல கூடை ஒன்றில் எல்லா முட்டைகளை சேர்த்து வைத்து கூடை உடைந்த பொழுது எல்லாவற்றையும் இழந்தவர்கள் நாங்கள் என்றால் என்னைப் பொறுத்தவரை இதனை இன்னொரு விதமாகப் பார்த்தால் அந்த கூடையில் ஏன் எல்லா முட்டைகளையும் சேர்த்து வைக்கவேண்டிய நிலை வந்தது என்பதை நாங்கள் இன்னும் உணரவில்லையோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. இதற்குமேல் சொல்ல ஒன்றும் இல்லை. உங்களது முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துக்கள்
  23. அவருக்கும் இரு முகம் இருக்கும் என்று நம்புவோமாக.. வெளியே எட்டாக வளைந்தும் உள்ளே வெறுப்பை கொண்டும் ஏனெனில் காரியம் நடக்கவேண்டும் என்றால் சில விரும்பத்தகாத செயல்களை செய்யவேண்டும் தானே… வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம்தானே
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.