Jump to content

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1756
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by P.S.பிரபா

  1. பொருளாதார பலம் எங்களை எப்படி மீட்கும் எனக் கூறமுடியுமா? ஊரி்ல்(வன்னியில்) vanni cashews என்ற ஒன்றை தயாரிக்கிறார்கள்.. மிகவும் சுவையான ஒன்று.. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. புலம்பெயர் தமிழ் செல்வந்தர்கள், அதுவும் அரசியல் செல்வாக்கானவர்கள் ஏன் இப்படியான உள்ளூர் உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய வழிவகுத்து அவர்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும். ஊரில இளையோர் சீரழிந்து போகிறார்கள், இப்பதான் மறுவாழ்வு சிகிச்சை நிலையம் பற்றி யோசிக்கிறார்கள். எங்கட பொருளாதார பலம் இவர்களை மீட்க வழி செய்யுமா? எப்படி? கொஞ்ச காலத்திற்கு முன் நீராஜ் டேவிட் அவர்களின் இஸ்ரேல் பயண அனுபவங்களை தொகுத்து வழங்கிய காணெளியைப் பார்த்தேன், அதில் அவர் புலம்பெயர் தமிழர்களின் பொருளாதார பலம் பற்றி அடிக்கடிக் கூறுவார். இதனைப் பார்த்து உங்களைப் போலவே நானும் கொஞ்ச காலத்திற்கு முன் நம்பியிருந்தேன். ஆனால் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கையில் நாங்கள் எங்களுடைய பொருளாதார பலத்தை ஒற்றுமையாகப் பயன்படுத்தவில்லை உணரவில்லை, உணர்ந்தவர்களும் தவறாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.
  2. ஆனால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஏதோதோ காரணங்களைக் கூறி மேலும் மேலும் பிளவுபடுகிறோம். உண்மை.. உண்மையில் இந்தக் கூட்டத்திற்கு இவர்கள் என்ன சொல்லி அழைத்து வரப்பட்டார்களோ தெரியாது.. எப்படியான குடும்ப பிண்ணனியுடன் வந்தார்களோ தெரியாது. பெரும்பாலான சமயங்களில் உண்மையான காரணத்தைச் சொல்லி கூட்டங்களை கூட்டுவதில்லை ஏனெனில் காரணம் தெரிந்தால் அதிகமானோர் வரமாட்டார்கள் என்பதால்
  3. உங்களிடம் ஒரு கேள்வி நாளை தமிழர்கள் இப்படி தமிழ் பெளத்தர்களாக மாறுவதற்கு சாதிப் பாகுபாடினால் பாதிக்கப்பட்டது என்ற ஒன்று மட்டும்தான் காரணம் என்கிறீர்களா? நான் நினைக்கிறேன், சலுகைக்குள் ஆசைப்பட்டு, அவர்களது சமயக்கொள்கைகளில் கவரப்பட்டு அல்லது தன் இனம் மொழி ஏன் முக்கியமானது, எமது அடையாளம் ஏன் முக்கியம் என பற்றித் தெரியாத எவரும் இதற்குள் உள்வாங்ப்படலாம். சாதி மட்டுமே தனித்த ஒரு காரணமாக அமையாது.
  4. சில நேரங்களில் இந்தத் தம்பதியினரின் வயோதிபத நிலையை இந்த ஊழியர்கள் தமக்குச் சாதகமாக்கியருக்கலாம்.
  5. நான் ஊருக்குப் போகும் பொழுதெல்லாம் சில இடங்களுக்கு தவறாது போவது போல சில உணவுகளை சாப்பிடாமல் வந்தது இல்லை(பெரும்பாலும்).. அதில இந்த கண்டோஸும் அடங்கும்😊..இனி யோசிக்கத்தான் வேண்டும் உண்மைதான்..
  6. ஆனால் நாங்கள் இதனைப் பற்றிக் கவலைப்படாமல், வெறிச்சோடி இருக்கும் தீவுகளில் பிரமாண்டமான கோவில்களைக் கட்டுகிறோம். புதுப்புது கடவுள்களை அறிமுகப்படுத்துகிறோம். மாணவர்களின் உடல்உள ஆரோக்கியம் வேண்டாம் புதுக்கட்டிடங்கள் வேண்டும் எனக் கேட்கிறோம். இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு எத்தனை பேர் உண்மையான நோக்கம் அறிந்து வந்தார்களோ தெரியவில்லை.. ஒரு வகையில் இவர்கள் மேல் அனுதாபமே வருகிறது.
  7. நாங்கள் சிதறிப் போன மக்கள் கூட்டமாக எப்படி மாறிவருகிறோம் இன்னொரு கட்டுரையில் எழுதியுள்ளார். ஆனால் எத்தனைபேர் இதனை உணர்கிறார்கள்?
  8. @Justinஅண்ணா, யாழிணையத்தில் தலைவரைப் பற்றிய தொடர், நன்னியின் வரலாற்று ஆவணப்படுத்தல் மற்றும் உங்களது இந்த தொடர் எல்லாமே மிகவும் பயனுள்ள தொடர்கள். உண்மையில் இப்படியான தொடர்களை இங்கே அல்லது புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் இலகுவான மொழி நடையில் உயர் வகுப்புகளிற்குப் பயன்படுத்தலாம். ஒரே சிலப்பதிகாரத்தையும் இராமயாணத்தையும் சொல்லிக் கொடுக்காமல்.
  9. நான் நினைக்கிறேன் ஸ்பெயினிற்கு வெற்றி பெறும் சந்தர்ப்பம் அதிகம் என.. நேற்று Matlidas கோல் அடிக்கும் சந்தர்ப்பங்களை கொஞ்சம் தவறவிட்டுவிட்டார்கள். Defending கூட சரியாக இருக்கவில்லை.. இலகுவாக இங்கிலாந்து வெற்றி பெற்றுவிட்டது
  10. அப்பாடா!! ஒரு மாதிரி இதைத் தெளிவுபடுத்தியாச்சு😀.. என்னுடைய சிநேகிதியும் இந்தப் படம் பார்க்க வந்திருந்தா.. பல்வேறு காரணங்களுக்காக தனக்கு எங்கட படங்கள் பிடிப்பதில்லை ஆனால் இந்தப் படத்தை நன்றாக எடுத்துள்ளார்கள் எனக் கூறினார்.. எங்களுடைய கலைஞர்களுக்கு சரியான வாய்ப்பும் ஆதரவும் கிடைத்தால் அவர்களாலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க முடியும் என்பதை பலர் உணர்வதில்லை. மிக்க நன்றி
  11. இப்படி ஒரு நிலையத்தை அமைக்க வேண்டிய சூழ்நிலையை உணர்ந்தது வரவேற்கப்படவேண்டிய விடயம். அத்துடன் போதையில் இருந்து மீண்டு வருவோரை சமூகம் நோக்கும் விதமும் மாற வேண்டும்.
  12. முயற்சி செய்தாலும் விளைவு நாங்கள் எதிர்பார்த்த மாதிரி வருமே தெரியாது. ஏனெனில் இந்த விடயங்களில் நாங்கள் இன்னமும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது. நன்றி
  13. உண்மைதான் எனது தந்தைக்கு இந்த வருடம் 78 தொடங்குகிறது.
  14. எனக்கென்னவோ அவர் எனது தந்தையைவிட 5 அல்லது 6 வயதுதான் குறைவாக இருப்பார் என்றதால்தான் அப்படி கூப்பிடுகிறேன்.. எனது ஊகம் பிழையாக இருந்தால் திருத்தித்கொள்ளலாம்😔
  15. நான் இந்தப் படத்தில் வரும் இன்னொரு விடயத்தையும் கூற வேண்டும். இயக்குனர்/கதாசிரியர் ஏன் அபிமன்யுவின் கதையுடன் படத்தை ஆரம்பிக்கவேண்டும் என்பதுதான். எங்களது கலைகள் கதைகளை கூறவேண்டும் என்றால் எங்களிலுர் பண்டாரவன்னியன் முதல் சூழ்ச்சியால் கொல்லப்பட்டவர்கள் ஏராளம். தென்னிந்திய/ இந்திய கதைகளின் தாக்கமோ தெரியவில்லை. ஆனால் உள்ளூர் வளங்களை/ இளையோரின் திறமையை எப்படி ஊக்குவிக்கலாம் என்பதையும் கூறாமல் விடவில்லை. இல்லை அங்கிள்.. இது முழுவதும் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் இங்கே சிட்னியில் நேற்றுத் திரையிடப்பட்டது. மற்றைய நாடுகளிலும் திரையிடப்பட்டிருக்கலாம்
  16. இன்று தூவானம் திரையிடப்படுகிறது என்பதாலேயோ தெரியவில்லை சிட்னியிலும் மழைபெய்து ஓய்ந்தாலும் மழைத் தூறல் இருந்து கொண்டிருந்தது. திரையரங்கு நிரம்பிருக்க படத்தின் முதல் காட்சி கூத்து நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிறது. அபிமன்யு சூழ்ச்சியால் இறப்பதை கூறியபடி படம் தொடங்குகிறது. காலை வேளையில் முருகண்டிப் பிள்ளையார் கோவிலையும் அதன் சுற்றுப்புறத்தையும்பார்க்கும் பொழுது 30 வருடங்களின் போனவருக்கு இருந்த உணர்வுதான் அடிக்கடி ஊருக்குப் போவோருக்கும் இருக்கும் என நம்புகிறேன். தனது பழைய நினைவுகளை பிள்ளைகளுடன் மீண்டுக்கொண்டு வருபவரை, தங்கையின்தொலைபேசி குழப்புகிறது.. காலை சாப்பாட்டிற்கு என்ன செய்யிறது என படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் தங்கை கேட்கும் பொழுது எனது சகோதரி நான் கிளிநொச்சிக்குக் கிட்ட வரும் பொழுது தொலைபேசி எடுத்து உமக்கு வழமையான புட்டும் முட்டைப்பொரியலும் செய்து வைத்திருக்கிறேன் எனக் கூறுவதே உடன் நினைவிற்குவந்தது. இப்படிப் பல நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்தது தூவானம். தனது மகன் வெளிநாடு போய்விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கும் typical தமிழ் அம்மா.. கள்ளடிக்கும் அப்பா.. தனது விருப்பங்களை வெளியே கூறினாலும் அது நிறைவேறாது என நினைத்து அதிகம்பேசாமல் ஒதுங்கும் மகன்.. கண்டிப்பு காட்டினாலும் அக்கறையுள்ள ஆசிரியர்.. பக்கத்து வீட்டு ஆச்சி.. ஒன்றாகப் படித்த நண்பர்கள் என சாதாரனமாக நாங்கள் ஊரில் சந்திக்கும் மனிதர்களை வைத்து அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் அன்றாட நிகழ்ச்சிகளை, எமது கலைகளில் சிலவற்றை, யாழ்ப்பாணத்தின் அழகை உணவை, பேச்சுவழக்கை அழகாக ஓளிப்பதிவு செய்துள்ளது. தனது சிறுவயதில் பாடசாலை அனுபவங்கள், ஊரை விட்டு போகும் பொழுதுள்ள மனநிலை, தற்போதுள்ள ஊரின் நிலை என பல்வேறு கோணங்களில் கதை நகர்கிறது. படத்தில் 3 பாடல்கள் வருகிறது மூன்றுமே அர்த்தம் நிறைந்த பாடல்கள். போரினால் பாதிக்கப்பட்டாலும் தனது வாழ்க்கையில் முன்னேறியுள்ள நண்பர்புலம்பெயர்ந்த தமிழர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைத்தான் படத்தின் கதைகூறவருகிறது. அதனை இறுதியில் மிக அழகாக குறியீட்டு வடிவில் கூறியிருப்பார்இயக்குனர். ஆனால் அது எந்தளவிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களால் அதுவும் 3ம் தலைமுறையினரிடம்எந்தளவுக்கு எடுபடும் எனத் தெரியவில்லை. ஏனெனில் அதனைப் பற்றி கூறும் இடங்களில்அவை சரியாக அழமாக கூறப்படவில்லை என்றே தோன்றுகிறது. குறியீட்டைவிளங்கினாலும் ஏன் என்ற காரணம், ஏன் அவசியம், எங்களது அடையாளம் எது எனத்தெரியாமல் 3ந் தலைமுறை ஒன்றினையுமா தெரியவில்லை. படத்திற்கு கூட வந்திருந்த இளையோர்கள் மிகவும் குறைவு. ஆனால் சில குறிப்புகளின் மூலம் போரின் காயங்களை உணர்த்தவே முற்படுகிறார். உதராணத்திற்கு போரில் காணாமலாக்கப்பட்ட தம்பியின் படத்திற்கு மாலை போடவில்லை .. ஏன் என சகோதரியிடம் கேட்கும் பொழுது அவர் மெளனமாக இருப்பார். இந்த விளக்கம் ஊரிலிருந்து வந்த என்னைப்போன்றவர்களுக்கு விளங்கும் 3ந் தலைமுறையினருக்கு விளங்குமா? அதே போல படத்தின் காட்சிகளை ஒழுங்கமைத்தல், வசனங்களும் படத்தின் கதாபாத்திரங்களின் வாயசைப்புக்களுடன் ஒத்து வரவில்லை. சில காட்சிகள் நீளமாக இருந்தது போன்ற சில குறைபாடுகள் இருந்தாலும் இயக்குனரின் முதல் படம் என்றரீதியில் இந்தப் படம் பாராட்டுக்குரிய ஒன்று. இப்படியான படைப்புகள் தொடர்ந்து வரவேண்டும் ஏனெனில் எங்களிலும் திறமையான நடிகர்கள் கதாசிரியர்கள் இசையமைப்பாளர்கள் உள்ளனர். அதே போல இளையோர் திசைமாறிப் போகாமல் இருக்க இப்படியான படைப்புகளும் உதவக்கூடும். இந்த காரணம் ஒன்றிற்காகவே இந்தப் படத்தைப் பற்றி இங்கே பதிவிடுகிறேன். படத்திற்கான கருத்தும் எனது தனிப்பட்ட கருத்து. இந்தக் கருத்து எல்லோருக்கும் இருக்கும் என்றும் இல்லை. நன்றி.
  17. Rugbyயும் Cricketம் தானே இங்கே முன்னனி விளையாட்டுகள் என்று உங்களுக்குத் தெரியும். அந்த நிலையில் இருந்து கொஞ்சம் விலகி உதைபந்தாட்டத்தில் கவனம் செலுத்துகிறார்கள்.. ஆகையால் இங்கிலாந்திடம் தேற்று Matlidas வெளியே போனாலும் பரவாயில்லை இதுவே ஒரு பெரிய முன்னேற்றம்.. நேற்று நடந்த matchல் பிரான்ஸிற்கு கோல் அடிக்கும் வந்த வாய்ப்புகளை விட Matlidas ற்கு வந்த வாயப்புகள் அதிகம் ஆனாலும் தவறவிட்டார்கள். அதே போல பந்து பரிமாற்றம் கூட மாறி அடித்ததும் எதிர்அணிக்கு இலகுவாக பந்தை கொடுத்த நிலையும் இருந்தது.. Matlidas முன்னேற இடமுண்டு ஆனாலும் இந்த அரையிறுதிக்கு போவது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் எதிர்காலத்தில் உலக கோப்பையை தூக்கவும் கூடும்.
  18. அண்ணா, பெற்றோர்களுக்கு சமூகத்தில் அச்சம் வேண்டும் என்பதற்காக ஆணவக்கொலையோ, பிள்ளையை தற்கொலைக்கு தூண்டவேண்டுமா? பெற்றோர்கள் தமது பிள்ளைகளைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒரு பிள்ளை திசை மாறுகிறது அல்லது சமூகத்தில் இருந்து ஒதுங்குகிறது என்றால் அதனை ஆராயவேண்டும். அதனை விடுத்து ஜயோ மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என்ற பயத்தில் பிள்ளையின் வாழ்வையும் பாழாக்கி தங்களது நிம்மதியையும் இழக்கவேண்டிய அவசியமில்லை. அதே போல உண்மையும் வெளியே வரப்போவதில்லை. ஒருவர் இறந்துவிட்டார். இன்னொருவரை இனி கதைக்கவிடமாட்டார்கள். எனக்கும் அது விளங்குவதில்லை.. மாமா மகன் அத்தை பெண்.. நாங்களாகவே சில கட்டுப்பாடுகள் கொள்கைகளை உருவாக்கிவிட்டு அதில் பெருமிதம் வேறு கொள்கிறோம்..
  19. எப்படியான பயம் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் அண்ணா? 30, 40 வருடங்களுக்கு முன்பிருந்த மாதிரி கட்டுப்பாடுகள் இப்பொழுது சாத்தியமா? சமூகத்தின் மீதான பயம் கூட முன்பு மாதிரி இப்பொழுது இருக்க முடியுமா? தற்போதைய உலகப்போக்கின் படி பயம், கட்டுப்பாடுகள் எந்த வகையில் ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்கும்? கட்டுபாடுகளை அதிகரிக்க அதிகரிக்கத்தான் அதனை மீறவேண்டும் என்ற நிலையும் உருவாவதையும் பார்த்திருக்கிறோம். எங்களது சமூகம் பல வழிகளில் இறுக்கமான ஒன்று என எனக்கு தோன்றுவதுண்டு ஏனெனில் பெற்றோரின் மீதான பயத்தில்/மரியாதையில்/அவர்களை மனம் நோகடிக்க விரும்பாமல் விருப்பமில்லாத பந்தத்தில் இணைந்தவர்கள் இருக்கிறார்கள்.. சமூகத்தின் மீதான பயம் காரணமாக மனம் ஒன்றாத மனைவியை/கணவனை விவாகரத்து செய்ய முடியாமல் வேறு வகையான உறவை நாடியவர்களும் எங்கள் சமூகத்தில் உள்ளனர்.. விருப்பமில்லாத துறையில் பெற்றோருக்காக படித்து வாழ்க்கையை ஏனோதானோ என்று வாழ்பவர்களும் எங்கள் சமூகத்தி்ல் உள்ளனர்.. சமூகத்தைக் காட்டி பயப்படுத்தி கட்டுப்பாடுகளை போடும் பட்சத்தில் தற்கொலைகளும் ஆணவக்கொலைகளும்தான் அதிகரிக்கும். இப்பொழுது நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் கூட வெளிச்சத்திற்கு வராமல் போகும் நிலையும் உள்ளது ஏனென்றால் சமூகத்தின் மீதான பயத்தில் வெளியே கூறாமல் குற்றவாளிகளைக் காட்டிக்கொடுக்காமல் நடமாடும் நிலையும் உள்ளது. இன்று எங்களது நிலை இப்படிப் போக நாங்களேதான் காரணம். போதைவஸ்திற்கு அடிமையாகும் இளைய சமுகத்தை மாற்ற முடியாமல் அரசியல் தொடங்கி சமூக நிலைவேறுபாடுகள், வெளிநாட்டுப் பணத்தினால் ஒரு பகுதி தாங்கள் நினைத்ததை செய்ய இன்னொரு பகுதி அந்த நிலையை அடைய குறுக்கு வழிகளை நாடுகிறது. பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளி கூடுகிறது. கல்வியில் நாட்டமின்மை, போசாக்கின்மையால் பாடசாலைக்கு போகமல் இருப்போர் வீதம் அதிகரிக்கிறது.. மாணவர்களின் எண்ணங்கள் திசை திரும்பிப்போகாமல் இருக்க தேவையான வளங்கள் இல்லை வழிகாட்டிகளும் இல்லை. உண்மையில் இந்த சம்பவம் எங்களது குடும்பங்களில் நடந்திருந்தால் ஒவ்வொருவரும் வேறுவிதமாக நடந்திருப்பார்கள்.. ஆனால் யாருக்கோ நடந்தமையால் நிறைய கூறுகிறோம்.
  20. அப்படித்தான் நடந்துள்ளது..amazing Matlidas அரையிறுதிக்குத் தெரிவு.. மிகவும் விறுவிறுப்பாக நடந்த match..அரையிறுதிக்கு நுழைவதை உறுதி செய்த கோல்😊 அவுஸ்திரேலிய கண்டம் மிகவும் பெரியது, இலகுவில் கலங்காது.. ஜேர்மனி, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் போன்ற பல நாடுகள் சேர்ந்த ஜரேப்பா கண்டம்.. அடிக்கடி கலங்க வாய்ப்பு இருக்கிறது😵‍💫
  21. உண்மையில் இறந்தவர் தனது மனைவியை பிரிந்தபின்பு தான் இந்த பெண்ணை விரும்பினாரா.. இல்லையா தெரியாது.. பெண்ணைப் பற்றிக் கூட உண்மை நிலவரங்கள் யாருக்குமே தெரியப் போவதில்லை. நடந்த சம்பவமும் நடப்பு நிலவரங்களும் எங்களது சமூகம் ஒரு கேடு கெட்ட சமூகமாக சுயநலம் பிடித்த சமூகமாக மாறி வருகிறது என்பதைத்தான் காட்டுகிறது. 12 வயது 18 வயது வித்தியாசத்தில் பேசி திருமணம் செய்து வைப்பார்கள் ஆனால் இந்தளவு வயது வித்தியாசத்தில் காதலித்தப்பதையோ திருமணம் செய்வதையோ எங்கள் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு என்னதான் காரணங்களைக் கூறினாலும் ஆழ்மனதில் கல்யாணம் என்பது வம்ச விருத்தி, அந்தஸ்து என்பதுதான் பிரதானமே தவிர வேறு எதுவும் இல்லை என்ற எண்ணமே. அதே நேரம் 18 வயதிற்கு மேல் adult என்றாலும் கூட எங்களது சமூகத்தில் இந்த வரையறை எல்லா இடங்களிலும் பொருந்தவில்லை என்றுதான் நான் நம்புகிறேன். அதிலும் திருமணம்/காதல் போன்ற விடயங்களில் ஏமாறும் இளவயது பெண்களே அதிகம். இலகுவில் ஏமாறுகிறார்கள். சில இடங்களில் சட்டத்திற்குப் புறம்பான உறவுகளை ஏற்படுத்தி குழந்தைகளைப் பெற்று கைவிடப்படுகிறார்கள். அதனால்தான் சட்டவயது 18 வயது என்றாலும் கூட துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது ஒரு முதிர்ச்சி வேண்டும் என்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. எங்களது சமூகம் மிகவும் பின்னோக்கிப் போகிறது. உண்மையில் இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. அந்த பெண்ணின் நிலையை பார்த்து கவலைப்படுவோரை விட பரிகாசிப்போரே அதிகம்.
  22. இந்த நிலை இலங்கை, இந்தியாவில் மட்டுமல்ல அவுஸ்ரேலியாவிலும் தான். இங்கே அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை இல்லை. அத்துடன் இன்றைய சமூக ஊடகங்களின் வளர்ச்சியினால் மாணவர்களின் பழக்க வழக்கங்கள் விரும்பத்தக்கவையாக இல்லை. வகுப்பில் படிக்கிற பிள்ளை அக்கறையாக படித்துவிட்டுப் போக, ஆசிரியரை கடுப்பேத்தவே வருகின்றவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். வகுப்பிற்கு வெளியேயும் அனுப்ப முடியாது..வகுப்பிலும் வைத்திருக்க முடியாது.. பல்வேறு விதமான குடும்பப் பிண்ணனிகளுடன் வருவதால் ஓரளவிற்கு மேல் திருத்த முடியாது. இதனால் ஆசிரியராக வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு இன்னுமொரு காரணம் இன்றைய விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கான சம்பளம் இல்லை என்பதும் தான். அதே நேரம் நான் பார்த்த அளவில் ஊரில் ஆசிரியர்களின் மனப்பாங்கும் மாற வேண்டும். இங்கே நாங்கள் மாணவர்களுடன் கதைக்கும் அதிலும் பொதுவாக ஆரம்பப்பாடசாலைகளில் உள்ள மாணவர்களுடன் கதைக்கும் பொழுது கடுமையான தொனியில் கதைப்பதில்லை அதனால் மாணவர்கள் எந்தவிதப் பயமும் இன்றி தங்களது சந்தேகங்களை அனுபவங்களை பிரச்சனைகளை பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் ஊரில் உள்ள ஆசிரியர்களுடன் இன்னமும் இந்த மாதிரி பழகு முடிவதில்லை. மாணவர்களை தண்டிப்பது என்பதும் இன்னமும் மாறவில்லை. இதனால் இப்பொழுது வேறு வகையான பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆக மொத்தத்தில் கற்பித்தல் என்பது இன்றைய காலத்தில் கொஞ்சம் சவாலானது என்றுதான் கூறவேண்டும்.
  23. யாழ்ப்பாணப் பொது நூலகமும் முதலியார் வாசிகசாலையும் நான் இந்த வருட ஆரம்பத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன். ஒரு நாள் யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்குச் சென்றிருந்த வேளை ஒரு சிறிய நாகபாம்புக்குட்டி ஒன்றை நூலகத்தின் வரையறுக்கப்பட்ட அனுமதி பகுதிக்குள் இருந்து பிடித்துக் கொண்டுவந்தார்கள். நான் நினைத்தேன் முதலியாரின் இந்த வாசிகசாலைக்குள் சுதந்திரமாகத் திரியாமல் அநியாயமாக அங்கே போய் மாட்டிக்கொண்டதே என்று. இன்றுடன் இந்தப் பயண அனுபவம் நிறைவடைகிறது. இவ்வளவு நாட்களும் கருத்துகள் எழுதி என்னை ஊக்குவித்த அனைத்து கள உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நன்றி வணக்கம். - பிரபா.
  24. //சுஜ நிர்ணயத்துக்கான தேர்தல்..// தொல்லியல் தினைக்களம் ஒரு பக்கத்தால் இடத்தைப் பிடிக்க.. நாங்கள் தமிழ் மொழியை அதன் தொன்மையை முறையாக எழுதாமல் தொலைக்கிறோம். இப்பொழுது வரும் பத்திரிகை செய்திகளாகட்டும், கருத்துகளை எழுதுபவர்களாகட்டும் சரியான சொற்களைப் பயன்படுத்தினால் மொழியும் வளரும். சுஜ என்ற ஒரு சொல் உள்ளதா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.