Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிரபா சிதம்பரநாதன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  970
 • Joined

 • Last visited

Profile Information

 • Gender
  Female
 • Location
  Australia

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

பிரபா சிதம்பரநாதன்'s Achievements

Mentor

Mentor (12/14)

 • Reacting Well Rare
 • Dedicated Rare
 • Very Popular Rare
 • Conversation Starter
 • First Post

Recent Badges

695

Reputation

 1. இதைப்பற்றி போடுவோம் என நினைத்தேன்.. COVIDற்கு முன்பு அலுவலத்திற்கு போன ஒரு காலத்தில், அங்கேயும் இந்த மாதிரி rubber bandல் சிறு கடதாசி துண்டை வைத்து எறியும் நாங்கள், சிறு வயதில் செய்யாமல் விட்டிருப்போமா
 2. மிக்க நன்றி.. உதாரணத்துடன் விளக்க உங்களுக்கு நேரம் இருந்தால் எழுதுங்கள் இல்லாவிடில் இதைப்பற்றி அறிய உதவும் இணைப்பை தந்தாலும் வாசிக்கிறேன்.. இன்று இந்த இரண்டு நாணயங்கள் பற்றி தேடிய பொழுது கியூபாவிலும், CUP(Cuban Peso National) மற்றும் CUC(Cuban Convertible Peso) என்ற இரண்டு நாணயங்களின் புழக்கம் கடந்த ஆண்டுவரை இருந்த ஒன்று என வாசித்தேன்.. ஆனால் இவை இரண்டும் சீனாவினது நாணயங்கள் போல சமமான பெறுமதி (1CNY = 1CNH) வாய்ந்தவை அல்ல..
 3. நீங்கள் கூறிய பதில் சரியானதாக வந்திருக்கும் அதில் dragon வந்திருந்தால்.. ஆனால் வாளும் எல்லோ வந்திருக்கிறது
 4. அனேகமான பாடசாலைகள் பல்கலைகழக தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையை எப்படி அதிகரிக்கலாம் என்றுதான் சிந்திக்கிறார்களே தவிர(அப்பொழுதானே அவற்றை விளம்பரபடுத்தமுடியும்.) 100 பேரில் 10 பேர் தெரிவானால் மிகுதி 90 பேரை எப்படி முன்னேற்றுவது என்பதை மறந்துவிடுகிறார்கள்.. பிரபல்யமான பாடசாலைகளின் நிலை இதுதான்.. அப்படியாயின் பின்தங்கிய இடங்களில் உள்ள மாணவர்களின் நிலை பற்றி நினைவு வருமா? புலம்பெயர் சமூகம் கல்வி சம்பந்தமாக(தனியே பணம் மட்டும் அனுப்பாமல்) வேறு வழிகாட்டல்களையும் வழங்கமுடியும்.. பெரியளவில் நிறுவனங்கள் அமைத்து நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காமல் சில வழிகாட்டல்களை (Mentor /Buddy training etc) குறைந்த செலவில் ஊர் மட்டத்தில் அல்லது பாடசாலை மட்டத்தில் செய்யலாம். சில வாரங்களுக்கு முன்பு இது சம்பந்தமான கூட்டம் ஒன்றில் பங்குபற்றிய வாயப்பு கிடைத்து.. என்னைப்பொறுத்தவரை அது ஒரு பயன் உள்ள ஒன்றாக தெரிந்து.. ஆனால் என்ன நாங்கள் வட்டத்தை விட்டு வெளியே சிந்திப்பதில்லை.. எங்களுக்கென சில துறைகளை வைத்துக்கொண்டு அதை மட்டுமே நிரப்பமுனைகிறோம். அதில் முழுஈடுபாட்டுடன் இல்லாத பிள்ளைகள் ஏதோ தானோ செயற்படுவதுடன், முன்னேறமுடியாமல் இருப்பார்கள்.. பணம் உழைப்பதற்கு மட்டுமல்ல கல்வி என்பது எனது எண்ணம்..
 5. 4. Pinocchio சரியான பதில். பங்குபற்றியமைக்கு நன்றி.. மீதமுள்ளது இலக்கம் 8 மட்டுமே..
 6. பங்குபற்றியமைக்கு நன்றி.. ஆனால் உங்களது 4வது படத்திற்கான பெயர் தவறானது.. முயற்சித்துப்பாருங்கள்..
 7. அறம் என்பதை போதிக்க எனக்கு முதிர்ச்சி இல்லை ஆனால் morale பிழை என என் கண்ணில் படுவதை பற்றி எழுதுகிறேன் .. அவ்வளவுதான்.. நன்றி..
 8. இந்த கலப்பு திருமணங்கள் அதிலும் இலங்கையில் சிங்களவர்களை(ஆண் அல்லது) திருமணம் செய்வது முன்பே இருந்திருந்தாலும், இப்பொழது இதற்கு பின்னால் உள்ள அரசியலை கவனித்தால் அது ஆபத்து உள்ளது என்றால், எங்களது சமூகத்தில் சில வேரூடிய பிரச்சனைகளை தீர்க்காதுவிடில் இவற்றை தடுக்க முடியாது என்பது எனது கருத்து. - தமிழர் சனத்தொகையில் ஆண் பெண் விகிதசாரம்.. பெண்களின் விகிதசராம் அதிகம் எனலாமா? - கல்வி தகமை/வேலை வாய்ப்பு - என்னதான் கூறினாலும் ஆண் கல்வியற்றவராகவும் அல்லது வேலை இல்லாதவராக இருந்தால் திருமணங்கள் சாத்தியமா? இல்லை அது எத்தனை காலம் நிலைத்திருக்கும்? யாழ்ப்பாணத்தில் எந்த அலுவலகம் போனாலும், அலுவலகர்களாக இருப்பது பெண்களே.. “ திருமணம்” என்ற ஒன்றிற்காக வேலையில்லாத ஒரு ஆணை செய்ய இயலுமா? - சீதனம்.. சீதனம் கொடுக்க முடியாமல் எத்தனை தமிழ் முதிர்கன்னிகள் இன்னமும் இலங்கையில் இருக்கிறார்கள்.. சீதனம் வாங்காத ஆண்களை ஏளனமாக பாரக்கும் மனிதர்களும் எங்களிடையே இருக்கிறார்கள் தானே! - புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பெண்பிள்ளைகள்/ ஆண்பிள்ளைகள். திருமணமாகாமல் இருக்கிறார் அவர்கள் இலங்கையில் உள்ள ஆண்/பெண் ஒருவரை திருமணம் செய்ய இயலுமா? வேறு பல பிரச்சனைகள் இருப்பதால், அதற்கான சாத்தியங்கள் குறைவு.. - சாதி மற்றும் சமூக அந்தஸ்து.. இதைப்பற்றி புதிதாக கதைக்க ஒன்றுமில்லை.. இந்த மாதிரி விடயங்களை சிங்களவர்கள் தமக்கு ஆதாயமாக காட்டுவார்கள், எங்களாலும் ஒன்றும் செய்ய முடியாதுவிட்டால் இந்த செய்தி கொஞ்ச நாளில் அடங்கிவிடும் மீண்டும் இதே போல இன்னொரு செய்திவரும் வரையில்..அவ்வளவுதான்
 9. நீங்கள் கூட இங்கே “ வேலையிடத்தில் , வேலைக்காக” என பொதுவாகத்தானே எழுதினீர்கள்? அதற்குத்தான் என் பதில் கருத்து.. “இந்த கோயில் வழக்கில், இந்த வேலைக்காக” என்று கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கலாம்.. மேலும் உங்களுடைய உதாரணத்தில் வருபவர் விவேகமானவராக இருந்திருந்தாலும் அந்த விவேகம் அவருக்கு நீண்ட நாட்களுக்கு உதவவில்லை.. அவ்வளவுதான்
 10. CNY, CNH என இரண்டு நாணயங்களும் ஒரே பெறுமதியாயின் இப்படி இரண்டு வெவ்வேறு பெயர்களில் வைத்திருப்பதன் நோக்கம் என்ன? எந்தவிதத்தில் இது சீனாவிற்கு நன்மை தருகிறது?
 11. இந்த கருத்துடன் உடன்படுகிறேன்.. பொதுவாக வேலைக்கு ஊழியர்களை அமர்த்தும்பொழுது அவர்களைப்பற்றி ஆராய்ந்து வேலைக்கு எடுப்பார்கள். இங்கே கோயில் நிர்வாகம் அதை சரிவர செய்யவில்லை. அதேபோல ஒருவர் வேலைக்காக பெயர் மாற்றும் பொழுது பெயர் மாற்றிய ஆவணம் தொடங்கி அடையாள அட்டை வரை மாற்றப்பட்டிருக்கும்.. இது பொதுவான ஒன்று.. ஆனால் வேலைக்காக பெயர் மாற்றுவதை ஒரு பிரகிரசியர் தவறில்லை என கூறுவார் என்பது மீண்டும் ஒரு தவறான விளக்கம்..
 12. சிலரது வாழ்க்கை, அன்பற்றது/ஆதரவற்றது/உறுதியற்றது என தெரிந்தும் “சமூகத்தின் வாய்கள்” என்பதிலிருந்து ஒரு பாதுகாப்பு(?) என நினைத்து துணிந்து முடிவுகளை எடுக்காது இருக்கும் அங்கே நீங்கள் மெல்ல மெல்ல சாகத்தொடங்குகிறீர்கள்.. என்றுதான் நான் பார்க்கிறேன்..
 13. வடக்கிலிருந்து தெற்கே பறந்த ஒரு பறவையின் கதைதான் இது.. ஆனால் சுப்ரமணிய பிரபா போன்று எழுதுபவர்கள் பறவை ஏன் அப்படி பறந்து போகிறது என்பதையும் குறிப்பிட்டு இருந்தால் நடுநிலைமையானதாக இருந்திருக்கும்.. அதைவிடுத்து இந்த மாதிரி எழுதுவதால் எதிர்மறையான எண்ணங்கள்தான் ஏற்படும் தெரியவில்லையா!
 14. எனது பதின்ம வயதுகளில் திருகோணமலையில் இருந்த பொழுது என்னை யாழ்ப்பாணிகள், கர்வம் பிடித்தவர்கள் எனக்கூறிய பொழுதுகளில் கோபம் வந்தது, ஆனால் பின்நாளில் வெளியுலகத்தை பார்க்க தொடங்கிய பின்பும், தனிப்பட்ட அனுபவங்களின் பின்பும் எண்ணங்கள் மாறத்தொடங்கின.. இப்பொழுது இந்த கட்டுரையை வாசிக்கும் பொழுது, அவர் கூறியதில் பிழையில்லை என்றே நினைக்க தோன்றுகிறது..
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.