Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிரபா சிதம்பரநாதன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1,055
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by பிரபா சிதம்பரநாதன்

 1. இங்கே பொதுவான சமூகப்பிரச்சனை அதுவும் எங்களது சமூகத்தை பெரிதளவு பாதிக்கும் குடிப்பழக்கம், வறுமை, பிள்ளைகளின் நலன் என்ற விடயத்தைப்பற்றி கருத்தில் கொள்ளாமல், வளமான நாடுகளில் உள்ளவர்களையும் வறுமையில் வாடுபவர்களையும் ஒப்பிட்டும் தவறான எடுத்துக்காட்டுகளையும் கொண்டு எழுதுகிறார்கள்.. இதுவே கணவனின் குடிபோதையும் அடிகளையும் தாங்காத மணைவி கணவனை அடித்திருந்தாலோ இல்லை உயிருக்கு ஆபத்தை விளைவித்திருந்தாலோ இல்லை கணவனின் குடி, வறுமை காரணமாக பிள்ளைகளை வளர்க்கமுடியாமல் பிள்ளைகளை விற்று இருந்தாலோ, தத்து கொடுத்திருந்தாலோ கருத்துக்கள் வித்தியாசமாக அமைந்திருக்கும். அவ்வளவுதான்.. நன்றி.
 2. மிகவும் சரியாக கூறியிருக்கிறீர்கள் சிலர் எங்கள் இனம் அழிகிறது சனத்தொகை குறைகிறது என்பதோடு சரி.. அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பது வேறுவிடயம். இன்னொன்று சுதந்திரம், சுகாதார சமூக பொருளாதார வசதிகள் உள்ள மேற்கத்தைய நாட்டிலேயே எங்களவர்கள் 3 அல்லது 4 பிள்ளைகளுக்கு மேல் பெறுவதில்லை..அரசும் உதவி தொகை(daycare allowances) கொடுத்துமே 4ற்கு மேல் போகாது.. இந்த நால்வரும் கூட 2 அல்லது 3 மேல் பெறமாட்டார்கள்.. இது யதார்த்தம், ஆனால் அதைப்பற்றி கதைக்கமாட்டார்கள்.. ஆனால் ஊரில் வறுமையில் வாடுவதுடன் விரும்பியோ விரும்பாமலோ பிள்ளை பெற்றும், குடிகார கணவனால் பலாத்காரப்படுத்தபட்டும்,கலைக்கவும் முடியாமல் பெற்று வளர்க்கவும் முடியாமல் கஷ்டப்படும் குடும்பங்களின் நிலையை பார்த்து அவர்கள் நடைமுறையில் சாத்தியமானவற்றை சிந்தித்து இருக்கலாம் எனக் கூறினால் மட்டும்தான் எங்கள் சனத்தொகை குறைகிறது.. இனம் அழிகிறது.. ஓரளவிற்கு பொதுவான/ஸ்திரமான நிலையிலிருந்து பார்த்திருந்தால் - ஒழுங்கான வருமானமும் இல்லை, குடிகார கணவனுடன் வாழும் ஒரு பெண் மனநிலையில் இருந்து பார்த்திருந்தால்- நான் கூறுவது விளங்கும். வருமானமும் இல்லை, குடிக்கு அடிமையான கணவன்.. பிள்ளைகளை பெற்றுவிட்டு வளர்ப்பது எப்படி என கட்டாயம் யோசித்திருப்பார்கள். ஆனால் குடிகார கணவனுக்கு இதெல்லாம் தலையில் ஏறியிருந்தால் இந்தளவு நிலையும் வந்திருக்காது.. இப்பொழுது தாயினதும் நீங்கள் கூறுவது போல மூத்த ஆண்பிள்ளையிலும் தான் பொறுப்பு வந்துவிழுந்துள்ளது.. அந்த மூத்த பிள்ளையின் வயதினைப்பொறுத்து அந்தப்பிள்ளை எதிர்நோக்கப்போகும் கஷ்டங்களின் சுமையும் வலியும்.. இதுவே மூத்தபிள்ளை பெண்ணாக பிறந்திருந்தால்? இவர்களைப்போல பல குடும்பங்கள் வாழ்கிறது, இல்லையென்பதை மறுக்கவில்லை.. அதற்காக அவர்களது வாழ்க்கையும் இப்படி வறுமையுடன் போகவேண்டும் என விரும்பவும் இல்லை.. தந்தை குடிகாரன் பிறகு கொஞ்ச நாட்களில் மகன்/மகள் சிறுவயதில் திருமணம், சிலசமயங்களில் சட்டரீதியான திருமணங்களும் இல்லை. வாழ்வாதாரத்திற்கு தினக்கூலி என்ன வருகிறதோ அது, பின் உடம்பு அலுப்பு தீர குடி, பின் பிள்ளைகள். அவர்களின் வாழ்க்கை படிப்பு? வேலை? திரும்பவும் அதே வாழ்க்கைவட்டம். பின் தங்கிய கிராமங்களில் நிகழும் கதைகள் .. சில வருடங்களுக்கு முன் ஏழாலையில் உள்ள மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள குடும்பங்கள் அவர்களின் வாழ்க்கை, பழக்கவழக்கங்கள்(சிறு வயது திருமணம், கசிப்பு கஞ்சா பாவனை, சுகாதார பழக்கவழக்கங்கள்) அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளைப்பற்றி செய்திகள் வந்ததை கேள்விப்பட்டிருப்பீர்களோ தெரியாது.. எனது நண்பர்கள் சிலர் field officers ஆக இந்த மாதிரியான இடங்களில் பணியாற்றி உள்ளார்கள்.. சில இடங்களில் விதிவிலக்குகள் இருந்தாலும் இந்த வறுமைக்கோட்டுக்கும் சாதியாலும் ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை பாருங்கள்.. எத்தனை வீதம் முன்னேறியுள்ளார்கள்? அவர்களின் வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லை. அதிலும் இந்த COVID பாதிப்பினால் வருமானமும் இன்றி படிப்பையும் கைவிட்ட பிள்ளைகள் எத்தனை! உதவி கோரி வந்திருக்கும் தகவல்களைப்பார்த்தால் தெரியும்.. அவர்களது வாழ்க்கைதரம் இன்னமும் பின்னோக்கி போயுள்ளது.. வருமானமில்லை, கடன் தொல்லை, குடும்ப சுமை அதனால் தற்கொலை. இந்த செய்தியில் உள்ள குடும்பமும் இதற்குள் அடங்கும்.. வருமானத்திற்கு ஏற்பவே பிள்ளைகளை பெறவேண்டும் என்பதில்லை ஆனால் சிந்தித்து நடந்திருக்கலாம்.. அதனால்தான் பிள்ளை மட்டும் பெற்றால் போதாது அவர்களை பாதுகாப்பாகவும் அவர்களுக்கான சாதராண அடிப்படை வசதிகளான (உணவு, உடை உறையுள் மற்றும் கல்வி) கொடுக்கவேண்டும் இல்லாவிடில் உணர்ச்சிக் கொந்தளிப்பிலும் சமூகத்தின் பாராட்டுக்காகவும் பிள்ளைகளை பெற்றுவிட்டு, அவர்களை விற்பதால் அல்லது கொல்வதால், அவரகளது உரிமைகளை மறுப்பதாலும் குற்றமே செய்கிறார்கள்.. நான் அவுஸ்ரேலிய வருமுன் வறுமையாலும் குடிகார கணவனாலும் துன்புறுத்தப்பட்ட பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், குடும்ப தலைவன் காணாமல் ஆக்கபட்ட பெண்கள் வரை, அவர்கள் உடல்உளவள தாக்கங்கள் அவர்களது பிரச்சனைகள் வரை கருத்துகளை கேட்டும் அவர்களுடன் பழகிய அனுபவங்கள் உள்ளது.. இன்னமும் அவர்களது வாழ்க்கையில் அதிகளவு மாற்றங்கள் இல்லை.. சமூகத்தின் எண்ணங்களிலும் மாற்றமில்லை.. உங்களுக்குதான் ஊர் நிலவரம் என்னைப்பற்றி அதிகம் தெரியும் ஆனாலும் எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.. அந்தப்பிள்ளைகளை நினைத்து மட்டும் மனம் வருந்துகிறேன்.. பிள்ளைகளின் உலகம் வண்ணத்துப்பூச்சியை போன்றது.. அவ்வளவுதான்..
 3. உண்மை.. எப்படியும் கரையில் நின்று பார்க்காமல் கொஞ்சம் கடலுக்குள்ளும் போகலாம்( எப்படியும் lifeguard காப்பாற்றிவிடுவார்கள்) என்பதுதான் நிலைப்பாடு.. இவ்வளவு விடயங்களையும் நேரமெடுத்து இங்கே இணைத்தமைக்கு.. Rogue Trader தொடங்கி Charles Ponzi scams வரை தகவல்களை அறிய முடிந்தது மிக்க நன்றி..
 4. ஏழைதான் கணக்கு பார்க்காமல் பிள்ளையாவது பெற்றுக்கொள்கிறார்கள் என சந்தோசப்படமுடியாது ஏனெனில் அந்தப்பிள்ளைகளின் வாழ்க்கைதான கஷ்டத்தில் உள்ளது உதாரணத்திற்கு இந்த குடும்பத்தை எடுத்துக்கொண்டால் 10 பிள்ளைகளில் எத்தனை பிள்ளைகள் விருப்பத்துடன் பிறந்திருக்கும்? அது போகட்டும் அது நடந்து முடிந்த விடயம் ஆனால் இவர்கள் பிள்ளைகளை பெற்றுவிட்டு ஒருவர் இறந்துவிட்டார் .. தாயின் நிலை என்னவாகும் என தெரியாது .. பிள்ளைகளின் கதி? இதில் சந்தோசப்பட எதுவும் இல்லை.. பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா?
 5. இங்கே நீங்கள் கூறும் இடைத்தரகர்கள், வங்கிகள் இல்லாமல் செய்யப்படும் பரிவர்த்தனை.. இது எத்தனை வீதம் நடைமுறையில் உள்ளது? இதனால் வரும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? .. எல்லாவற்றையும் பார்த்தால் இன்னமும் நம்பிக்கை வரவில்லை .. ஆனால் மக்களின் வாழ்க்கையை மாற்றும்.. cryptoவையே நாடுகள் நடைமுறைப்படுத்த யோசிக்கும் பொழுது இன்னமும் இந்த Defi பற்றி நம்பிக்கை ஏற்படவில்லை.. on the note இன்றும் கூட Bitcoin 8% dropped.. இன்றுவரை நான் பாதுகாப்பான முதலீடு என நம்புவது அசையா சொத்துகளையே.. அது ஒரு license ஆக அல்லது காணியாக கூட இருக்கலாம்.. ஆனால் என்னளவில் என் முதலுக்கு மோசம் வரமாட்டாது. அதனால்தான் Shaquille O’Nealன் முதலீட்டு முறைகளை நம்புகிறேன் என்றேன். @Elugnajiru எனது nephew இந்த Bitcoin investment ல் உற்சாகமாக ஈடுபடுவதை அறிந்துகொண்டேன்.. அவர் மூலம் முயற்சித்து பார்க்கலாம்.. நன்றி.
 6. உண்மைதான் கடந்த 2 வருடங்களில் பட்டமளிப்பு போன்றவை நடக்கவில்லை.. ஆனால் மாணவர்களை கேட்டுப்பாருங்கள் அவரகளது பதில் வித்தியாசம்.. ஏனெனில் அவர்கள் இழந்தது வாழ்க்கையின் ஒரு நிலையில் வரும் நினைவுகளை.. சில அனுபவங்கள் எத்தனை பணம் இருந்தாலும் ஈடு செய்ய முடியாதவை.. எல்லாவற்றையும் செலவு/பணம் என்பதுடன் ஒப்பிடுவது சரியல்ல என்பது எனது எண்ணம்.. அவர்கள் என்னதான் படித்து முடித்து வேலையில் அமர்ந்தாலும் இந்த மாதிரியான நிகழ்வுகளை இழந்தது அவர்களுக்கு கவலை தரும் விடயம்.. Paperless, உண்மைதான்.. ஆனால் பட்டமளிப்பு என்பது தனியே paper மட்டும் சார்ந்ததில்லை ..
 7. இந்த Bitcoin உள்ள இன்னொரு பிரச்சனை, இதன் விளங்கமுடியாத பெயர்கள்.. முழுமையாக acronymsம் jargonம் கொண்டதால் பெயர்களை இலகுவில் விளங்கிக்கொள்ளவது கடினம்.. .. மிகவும் தளம்பலான சந்தையை கொண்டதால் நம்பி முதலீடு செய்வது இலாபம் என கூறமுடியாது.. ஆகையால் என்னைப்பொறுத்தவரை பாதுகாப்பான முதலீடு என்பதில் Shaquille O’Neal கூறிய கருத்துடன்தான் உடன்படமுடிகிறது.. “O'Neal says his investing style is simple: He invests only in assets that he believes can change people's lives. "I heard Jeff Bezos say one time [that] he makes his investments based on if it's going to change people's lives” https://www.google.com.au/amp/s/www.cnbc.com/amp/2021/09/10/why-nba-legend-shaquille-oneal-hasnt-invested-in-crypto.html NBA legend Shaquille O'Neal explains why he hasn't invested in crypto Published Fri, Sep 10 2021 8:59 AM EDTUpdated Fri, Sep 10 2021 3:36 PM EDT Jade Scipioni @JADESCIPIONI
 8. அரைகுறையான கருத்தை எழுதியதற்கு மன்னிக்கவேண்டும் ஏராளன்..பெரும்பலான சமயங்களில் நான் நினைப்பதை முழுமையாக எழுதுவதில்லை, வீண் விவாதங்கள்-கல்லெறி படக்கூடாது என்பதற்காக.. ஆனாலும் சில சமயங்களில் எழுத நினைப்பதை எழுதாமலும் இருப்பதில்லை.. அப்படியான ஒரு நிலைதான் இந்த கதையில் என் கருத்து.. முதலில் இந்த கதைபற்றிய எனது எண்ணத்தை எழுதிவிட்டு பின்பும் மனத்திருப்தி ஏற்படாதமையாலேயே மீண்டும் எனது கருத்தை பதிந்தேன்.. அப்பா-மகள் பாசம் என்பதை அழகாக எழுதியிருப்பதாக கூறினாலும் எந்த பெற்றோரும் செய்யக்கூடாத விடயத்தை , குழந்தையை தனியே விடுவது - கற்பனை என்றாலும் கூட நல்ல எடுத்துக்காட்டு இல்லை என்பதால் இந்த கதையே நல்லதொரு கதை என கூறமுடியாது..
 9. நல்ல விஷயம் இந்த COVID நேரத்தில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் தேவையில்லை.. ஆனால் முழுமையாக இல்லாமல் செய்வது என்பது கேள்விக்குறியே.. அதேபோல உள்நாடு, வெளிநாடு என்ற பாரபட்சம் இல்லாமல் சகல பல்கலைகழகங்களிலும் இந்த பட்டமளிப்பு வெட்டி நிகழ்வுகளை அடியோடு இல்லாமல் செய்வது நல்லது என்றுதானே கூறுகிறீர்கள், இல்லையா?
 10. இந்த கதை கற்பனை கதையாக இருந்தாலும் கூட எனக்கு இந்த கதையில் வரும் சம்பவம்/செயல் சந்தேகத்தையும் வேதனையையும் தருகிறது.. என்னதான் பணம் உயிர் வாழ தேவை என்றால் கூட இந்த மாதிரி குழந்தையை தனியே விட்டு போவார்களா? கற்பனை என்றாலும் கூட ஏன் இந்த மாதிரி செயல்களை எழுதவேண்டும்? சமூகபொறுப்புணர்வு எழுத்தாளர்களுக்கு வேண்டாமா? இல்லை கற்பனைக்கு பஞ்சம் ஏற்பட்டு எதை எழுதுவது என தெரியாமல் எழுதுவது, நியாயப்படுத்துவது!!!
 11. 200% உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்… குற்றவுணர்வில் அல்லாடுவதாக கூறுவதைக்கூட என்னால் ஏற்கமுடியாது.. அப்படி குற்றவுணர்வில் அல்லாடுவதாக கூறும் ஒருவரால் இன்னொருவருடன் இருப்பதே கடினம்.. இந்த கதை முழுக்க முழுக்க வன்முறையை நியாயப்படுத்துவதாகவே உணரமுடிகிறது..
 12. “இவை யாவும் கற்பனை” என இறுதியில் எழுதியிருந்தால் மனம் ஆறுதல் அடைந்திருக்கும்.. அவ்வளவுதான்.. எவ்வளவுதான் அருமையாக எழுதியிருந்தாலும் கதையை பாராட்ட முடியவில்லை.. என்னைப்பொறுத்தவரை மிகவும் தவறான உதாரணத்தை இந்த கதை கூறுகிறது..
 13. எத்தனையோ நினைவுகளை மீட்டுள்ளது இந்த பதிவு.. எனது அப்பா மட்டக்களப்பில் இருந்து வரும் நாளை எனது அம்மா மட்டுமல்ல எனது மாமாக்களும் சித்திமாரும் ஆவலோடு எதிர்பார்ப்பதையும் விடுமுறையில் வரும் பொழுது யாழ்ப்பாணத்தில் உள்ள தியோட்டர், ice cream கடை, திருவிழா என்று அம்மாவையும் அவாவின் தம்பிகளையும் கூட்டிக்கொண்டு திரிவதையும் கதையாக எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒன்று.. அம்மாவின் மரணத்திற்கு பின் பழைய கதைகள் கதைப்பது அப்பாவிற்கு ஆறுதலை தருவதால் இதை ஊக்குவிப்பது உண்டு.. இன்று நடந்தது போல தனது அனுபவத்தை கூறி எங்களையும் அந்த சூழலிற்கும் காலத்திற்கும் கூட்டிச்சென்றுள்ளார் dr..
 14. நீங்கள் கூறியது போல இதை அரசியலாக்கிவிட்டார்கள்தான்.. இந்திய பிரதமர் குஜாராத்தில் முதல்வராக இருந்த போது நீட் தேர்வை எதிர்த்துள்ளார் என வாசித்த நினைவு.. இப்பொழுது நிலைமை வேறு.. ஆனால் நான் நினைப்பது இந்த தேர்வினால் அடையும் நன்மைகள் என்ன? நன்மை அடைபவர்கள் யார்? பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த எத்தனை மாணவர்கள் தெரிவாகி உள்ளார்கள்? என்பதில்தான் இந்த நீட் தேவையா சரியா என்பது தங்கியுள்ளது.. மற்றைய மாநிலத்தவர்கள் இதனை வரவேற்கிறார்கள் என்றால் அங்கே யார் அதிகம் நன்மையடைகிறார்கள் என்பதில்தான் உண்மை தெரியவரும்..உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்கள், வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் நன்மை பெறுகிறார்களா தெரியவில்லை.. ஏனெனில் ஏற்கனவே வறிய நிலையில் உள்ளவர்களால் இந்த தேர்வை எழுவதற்கான பயிற்சியையோ, கட்டணத்தையோ அவர்களாலும் கட்ட முடியாது தானே! ஆக மொத்தம் இந்த நீட் தேர்வு இந்தியா மாணவரகளுக்கு அவசியமா? மேலும் சாதி, வர்க்கவேறுபாடு மற்றைய மாநிலங்களில் அதிகம் உள்ளது என்பது சரியாக இருந்தாலும், இந்த நீட் தேர்வால் எப்படி அது குறையும் என்றோ வர்க்க வேறுபாடு குறையும் என்றோ எதிர்வு கூற முடியும்.. சாதி, வர்க்க வேறுபாட்டை இல்லாதெழிக்க சக மனிதனை மனிதனாக பார்க்கும் அறிவு இருக்கவேண்டும்.. மதத்தாலும், சாதியத்தாலும் ஆட்சி செய்யும் அரசிடமிருந்து இதை எப்படி எதிர்பார்க்கலாம்?
 15. இவர் ஆங்கிலத்தையும் கற்பித்து தனக்கு வருமானத்தையும் தேடிக்கொள்கிறார் ஆனால் தனியே you tube lesson மட்டும் இருந்தால் போதுமா? Practical lessons இல்லாமல் இப்படி படித்து ஆங்கில அறிவு எவ்வளவு தூரம் வரும்? இந்த முகப்புத்தக இணைப்பில் உள்ள பேட்டியில் லெஸ்லி குணரட்னம் அவர்கள் எவ்வாறு வடக்கில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு mentor/buddy training ஆங்கிலத்தை கற்பிக்கவும் பேசவும் எவ்வாறான நடவடிக்கைகளை செய்கிறார்கள் என்பது விளங்கும்.. https://m.facebook.com/Focusthamil/videos/345094796991120/?extid=NS-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing
 16. நீங்கள் கூறுவது சரியாக இருந்தாலும் பெற்றோர்களுக்கும் இந்த தெளிவு அவசியம் என்பது எனது கருத்து. “மருத்துவராகிய பின் வரும் நன்மைகளில்தான் குடும்பத்தின் பொருளாதாரம் தொடக்கம் அந்தஸ்து வரை உள்ளது” என பிள்ளைகளின் மேல் வெளிப்பார்வைக்கு தெரியாத அழுத்தங்களை பிரயோகிக்கும் பெற்றோர்களும் உள்ளனர் என்பதால் பெற்றோர் தொடங்கி பிள்ளைகள் வரை இந்த மருத்துவம் துறை இல்லாது விடில் இன்னொரு துறையில் முன்னேற முடியும் என்ற தெளிவு வேண்டும்.. அதே போல இந்த நீட் தேர்வைப்பற்றி அறிந்தவகையில் இதனால் அதிகம் பயனடையப்போவது தனியார் கோச்சிங் சென்டர்களும், பணவசதி படைத்தவர்களின் பிள்ளைகளுமே.. வர்க்க ஆதிக்கம் + சாதியம் = நீட்..
 17. நல்லதொரு விடயம்.. இவரைப்போல எங்கள் தமிழ் இளைய சமுதாயமும் புலம்பெயர்ந்த நாடுகளில் அதன் அரசியலில் ஈடுபடுவது வரவேற்க்கப்படவேண்டிய விடயம்.. மேன்மேலும் அவரது துறையில் முன்னேற வாழ்த்துக்கள்..
 18. El-Salvador Bitcoin cryptocurrencyயை தங்களது சட்டபூர்வமாக கொடுக்கல் வாங்களல்களுக்கு பயன்படுத்தும் நாணயமாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் 7/9/2021ல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் அதை எதிர்த்து ஆர்பாட்டங்களும்நடைபெற்றதாக செய்திகள் உள்ளது.. உலகின் பலமிக்க நாடுகள்/வளமிக்க நாடுகள் கூடஇன்னமும் பரீட்சத்த அளவில் உள்ளதும், இலகுவில் கணிக்கமுடியாத தன்மையையும் கொண்டஇந்த Bitcoin சட்டபூர்வமாக கொடுக்கல் வாங்கல்களுக்கு அறிமுகப்படுத்தியது வியப்பாக உள்ளது!! El Salvador becomes first country in the world to accept cryptocurrency bitcoin as legal tender El Salvador has become the first country in the world to adopt bitcoin as legal tender, a real-world experiment proponents say will lower commission costs for billions of dollars sent home from abroad but which critics warn may fuel money laundering. Key points: On Monday the country bought its first 400 bitcoins The government says accepting it as legal tender will save some $538 million annually in fees on remittances Polls show Salvadorans are skeptical and wary of the volatility of the cryptocurrency The plan spearheaded by President Nayib Bukele is aimed at allowing Salvadorans to save on $US400 million ($538 million) spent annually in commissions for remittances, mostly sent from the United States. Last year alone remittances to El Salvador amounted to almost $US6 billion, or 23 per cent of its gross domestic product, one of the highest ratios in the world. What is a cryptocurrency? Can't tell a bitcoin from a blockchain? Read our explainer to see how the cryptocurrency works. Polls suggests Salvadorans are skeptical about using bitcoin and wary of the volatility of the cryptocurrency that critics argue could increase regulatory and financial risks for financial institutions. Still, some residents are optimistic. "It's going to be beneficial … we have family in the United States and they can send money at no cost, whereas banks charge to send money from the United States to El Salvador," said Reina Isabel Aguilar, a store owner in El Zonte Beach, about 49 kilometres south-west of capital San Salvador. El Zonte is part of the so-called Bitcoin Beach geared toward making the town one of the world's first bitcoin economies. In the run-up to the launch, the government has already been installing ATMs of its Chivo digital wallet that will allow the cryptocurrency to be converted into dollars and withdrawn without commission, but Mr Bukele sought on Monday to temper expectations for quick results and asked for patience. "Like all innovations, El Salvador's bitcoin process has a learning curve. Every road to the future is like this and not everything will be achieved in a day, or in a month," Mr Bukele posted on Twitter, a platform he often uses to spruik his achievements or excoriate opponents. On Monday, El Salvador bought its first 400 of the cyrptocurrency, temporarily pushing prices for bitcoin 1.49 per cent higher to more than $US52,680. The cryptocurrency has been notoriously volatile. Earlier this year, it rose over $US64,000 in April and fell almost as low as $US30,000 in May. Some analysts fear the move to make bitcoin legal tender alongside the US dollar could muddy the outlook for El Salvador's quest to seek a more than $US1 billion financing agreement with the International Monetary Fund (IMF). After Mr Bukele's bitcoin law was approved, rating agency Moody's downgraded El Salvador's creditworthiness, while the country's dollar-denominated bonds have also come under pressure. But Mr Bukele, who does not shy away from controversy, retweeted on Monday a video that showed his face superimposed on actor Jaime Foxx in a scene from Django Unchained, Quentin Tarantino's film about American slavery. The video portrayed Mr Bukele whipping a slave trader who had the IMF emblem emblazoned on his face. Mr Bukele later deleted the retweet. His own tweet said: "we must break the paradigms of the past. El Salvador has the right to advance towards the first world." Reuters https://www.google.com.au/amp/s/amp.abc.net.au/article/100441472 https://www.google.com.au/amp/s/www.bbc.co.uk/news/business-58459098.amp
 19. இறைச்சியை மட்டும் தனியாக அவித்தாலும் அதன் மணம் போகாது இல்லையா?.. ஒரு கறுவாப்பட்டையை போட்டு செய்து பார்ப்போம் ஆனால் நல்ல சலாட்டாகவே உள்ளது.. தேன் விடுவதைப்பற்றியும் யோசிக்கவேண்டும் நீங்கள் இதை இங்கே இணைத்தமைக்கு மிக்க நன்றி
 20. தோலகட்டி நெல்லிரசம் கேள்விப்பட்டிருக்கிறேன்.. வைனும் தயாரித்தார்களா? மேலே உள்ள கட்டுரையில் எத்தனை தொழிற்சாலைகள் யாழ்ப்பாணத்தில் இரு்ந்தன அவை ஏன் கைவிடப்பட்ட காரணங்களை கூறியிருந்தாலும் ஒன்றைக்கூடவா மீள கட்டியெழுப்ப முடியாது போய்விட்டது..
 21. எதிர்கால தேவை கருதி விஸ்தீரணம் செய்ய வேண்டுமாயின் மேலே கடஞ்சா கூறியபடி ஒன்றோடு ஒன்று இணைந்த சேவைகள்(அத்தியாவசிய) அனைத்தும் இடம் மாறவேண்டும்.. அப்படியாயின் அதற்கு தகுந்த இடம் எது? எல்லா வசதிகளையும் மாற்ற முடியுமா? அதைவிட மானிப்பாயில் உள்ள வைத்தியசாலை, மூளாய் வைத்தியசாலை, மந்திகை, இணுவில் மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளின் தரத்தை உயர்த்தினால் யாழ்ப்பாண போதனாவைத்தியசாலை நெருக்கடியை குறைக்கலாம்..இடத்தை மாற்றவேண்டிய தேவை இருப்பதாக தெரியவில்லை.. பணமும் நேரமும் மனித உழைப்புமே வீண்விரயமாகும்.. அத்துடன் இந்த போதனா வைத்தியசாலையும் எங்களுடைய வரலாற்றில் சம்பவங்களை கொண்டது.. எதிர்கால சந்ததிக்கு வரலாற்றை தெரியப்படுத்தவேண்டும் என விரும்பும் நாங்கள் ஏன் அதை மாற்றவேண்டும்? இதில்(சுற்றுலாத்துறையில்) முதலீடு செய்தால் லாபம் வராதாமே??? இரண்டாவது தீவுபகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுடன் இது சம்பந்தமாக நாடவேண்டும்.. இதை எத்தனை பேர் விரும்புவார்கள்.. இவ்வளவு காலமும் அங்குள்ள மக்களின் வாழ்க்கையை வளம்படுத்த எடுத்த முயற்சிகள் ஏன் பலனளிக்கவில்லை? இப்பொழுது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை பற்றி கதைத்து பயனில்லை என்பது எனது எண்ணம். எனக்கு யாழ்ப்பாணத்தில் பிடித்த கடற்கரை மணற்காடு, அதே போல கெருடாவிலில் எனது அப்புவின் வீடு கடற்கரையோடு அமைந்த ஒன்று.. எனக்கு நினைவுள்ளது பாறைகற்களால் சிறிய கடற்பரப்பை நீச்சல் குளம் மாதிரி செய்து வைத்திருந்தார்கள்.. beach house மாதிரி செய்யலாம் ஆனால் முடியாது. அவ்வளவுதான்..
 22. எனகென்னவோ, அவர் அப்படி நினைப்பதில் பிழை இருப்பதாக தெரியவில்லை.. ஏனெனில் இந்த தொற்று இப்படியே எங்களுடன் இருந்தாலும், வாழ்க்கை அதனோடு சேர்ந்து போகத்தானே போகிறது..ஏதோவிதமாக நாங்கள் சமாளித்துக்கொண்டு தானே போகவேண்டும்.. பெருந்தொற்றில் இருந்து ஓரளவிற்கு இயல்புநிலைக்கு வரும் பொழுது தொழில்துறைகள் மீளவும் தொடங்கும்.. சுற்றுலாதுறையும் மீளவும் கட்டியெழுப்படவேண்டும் தானே.. பொருளாதார தடைகள் இருந்த காலத்திலேயே மக்களால் தங்களது வாழ்க்கையை உள்ளூர் உற்பத்திகளுடன் கொண்டு நடத்த முடிந்தது.. இந்த பெருந்தொற்றும் கடந்து போகும் பொழுது மீளவும் வாழ்க்கை வாழ தொழில் முயற்சிகள் அவசியம்.. அத்துடன் அவர் கிளிநொச்சியையும் அதன் வளங்களையும் கருத்தில் கொண்டுதான் திட்டங்களை நிறைவேற்ற நினைக்கிறார்..
 23. நல்ல விடயம் நாதமுனி அண்ணா!! ஆனால் எனக்குள் இருக்கும் கேள்வி இதுதான் .. வேரூன்றி வளர்ந்த ஒன்றை பிடுங்கி இன்னொரு இடத்தில் வைப்பதற்கும் …அதை பிடுங்காமல் மேலும் உரமூட்டி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? செலவழிக்கும் நேரத்தையும் பணத்தையும் வேறு துறைகளில் முதலீடு செய்யலாமே? யாழ்ப்பாண நகர் மத்தியில் இடவசதி குறைவு என்றால் வைத்திய சாலையை ஏன் மாற்றவேண்டும்.. மண்டைதீவில் புதிதாக ஒரு வணிக கட்டிட தொகுதியை கட்டி.. அதிகஅத்தியாவசியமில்லாத கடைகளை அங்கே அப்புறப்படுத்தினால் நகரில் இடநெருக்கடியோ போக்குவரத்து நெருக்கடியோ ஏற்படாது.. தண்ணீரையும் நன்னீரக்கிவிடலாமே ஏனெனில் வைத்தியசாலையை மாற்றி இலாபம் உழைக்கமுடியாது.. வியாபாரம் என்றால் முதலாளிகள் எப்படியும் தண்ணிக்கணக்கையும் விலைப்பட்டியலில் சேர்த்துவிடுவார்கள்
 24. இலங்கையில் மட்டுமல்ல Justin அண்ணா இங்கேயும் சில மருத்துவமனைகள் நகரின் மத்தியில்தான் உள்ளது ஏனெனில் போக்குவரத்து வசதிக்காக..
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.